Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீருடை கழற்றிய கையோடு அரசியல் அறிவிப்பு - சரத்

Featured Replies

ஓய்வு பெறுவதற்கான தனது இராஜனமா கடிதத்தை ஒப்படைத்த சரத் பொன்சேகா தான் இன்னும் இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்ப தாகவும் கூறியுள்ளார். கடிதத்தினை ஒப்படைத்த பின்னர் களனி விஹாரைக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு வழிபாடு செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன்.

நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எதுவும் சொல்ல முடியாது. இந்த மாத இறுதியுடன் நான் ஓய்வுபெறவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். அதன் பின்னரேயே எனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும் எனக் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா என்றழைக்கப்படும் கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா இலங்கை பாதுகாப்புத் துறையில் முப்படைகளின் தலைமை அதிகாரி எனும் அதிகாரிகள் தரத்திலான உயர் பதவிக்கு ஜனாதிபதியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் வெற்றித் தளபதி என சிங்களவர்களால் வர்ணிக்கப்படுகின்றார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பல நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.

அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்ற பொன்சேகா நீச்சல், வோட்டர் போலோ ஆகியவற்றில் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி 2 ம் லெப்ரினன்ட் தரத்தில் இணைந்த சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 18ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார். மனைவியின் பெயர் அனோமா இந்துமதி முனசிங்க, இரு பெண் பிள்ளைகள் அபர்ணா, அப்சரா இருவரும் அமெரிக்காவில் வதிகின்றனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார். பலவேகய நடவடிக்கை, ஜயசிக்குறு நடவடிக்கை, மிட்னைற் எக்ஸ்பிறஸ் , யாழ்தேவி போன்ற இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாக முக்கிய பொறுப்புக்களில் செயற்பட்ட இவர் 1993 யாழ்தேவி நடவடிக்கையில் காயப்பட்டவர். 1999 ,2000 ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆனையிறவை காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப்போனவர். அப்போது 6வது பட்டாலியன்படையணியான சிங்க ரெஜிமெண்ட் படையணியே மாங்குளத்திலும், ஆனையிறவிலும் நிலை கொண்டிருந்தது. மாங்குளம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தபோது அங்கிருந்து கனகராயன்குளம் வழியாக தப்பியோடியவர்.

2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வடபகுதி கட்டளை தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகா குடா நாட்டில் பொது கட்டடங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களையும் சில காவலரண்களையும் அகற்றும்படி கோரியும் அதனை அகற்றாது அடம்பிடித்தார் மட்டுமன்றி குடா நாட்டிற்கு அரசியல் போராளிகள் செல்வதனையும் கடுமையாக எதிர்த்தார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்கதலுக்கு உள்ளாகி பின்னர் ஜூலை மாதம் தமது கடமைக்குத் திரும்பினார். கடமைக்கு திரும்பியதில் இருந்து தமிழ் மக்கள் மீதான கொடும்போரினை அனைத்துலக சட்டங்களையும் மதிக்காது கண்மூடித்தனமாக மேற்கொண்டார். இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கள தலைவர்களிடையே இனவாதத்தை மூலதனமாக வைத்து செல்வாக்கு பெறும் பட்டியலில் அரசியல்வாதிகளுக்கு இணையாக பெளத்த பேரின வாத சிந்தனையினை வரித்துகொண்டவர். http://www.eelanatham.net/news/important

Sarath%20with%20pikku.jpg

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தான் மகிந்த விருந்து கொடுத்தார். இன்று ராஜனாமாச் செய்கிறார்.

இது சிங்களப் பேரினவாதிகள் தங்கள் இரத்தம் படிந்த கரங்களை ஒருவர் மீது ஒருவர் துடைத்துக் கொண்டு தேர்தலில் இழிச்சவாய் தமிழர்களின் முன் வாக்குக் கேட்டு வருவதற்காக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடகம்.

இந்த நாடகத்திற்கு புலம்பெயர் மற்றும் தமிழ் ஊடகங்கள் இத்தனை முக்கியத்துவம் அளிப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

ஜே. ஆர் பதவிக்கு வரும் போது பூமாலை போட்டு வரவேற்றார்கள் தமிழர்கள்.

ராஜீவ் காந்திக்கு பூமாலை போட்டு வரவேற்றார்கள்.

பிரேமதாச வரும் போது விருந்திட்டு மகிழ்ந்து கொண்டார்கள்.

சந்திரிக்கா வரும் போது யாழ்ப்பாணத்தில் கூட பொங்கல் பொங்கி அவரை சிங்கள சமாதானத் தேவதையாகக் காட்டினார்கள் தமிழர்கள்.

மகிந்த வரும் போது மப்பில் மயங்கிக் கிடந்தார்கள்.

இப்போ.. சொந்த உறவுகளைக் கொண்டவனிற்கே இலவச விளம்பரமும் செய்கிறார்கள்.

இதற்குள் இவர்கள் தம்மைத் தாமே கோரிக்கொள்வது ஈழத்தமிழர்கள் என்று.

ஒரு கொடிய போர்க்குற்றவாளி ஜனநாயகத்தின் பெயரால் பாதுகாக்கப்படுவதை கரம் கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறார்கள் தமிழர்கள் எனும் போது...

தமிழர்களைப் போல முட்டாள்கள் இந்த உலகில் எவரும் இல்லை. இவர்களின் அரசியல் அடிமைத்தனத்தை.. அறியாமையை அகற்றாமல் இவர்களுக்கு விடிவைப் பெற்றுக்கொள்வது என்பது கல்லில் நாருரிப்பது போன்றது.. என்ற முடிவுக்கே வரலாம்.

சிங்களம் மிக இலாவகமாக தன்னைச் சுற்றி இருந்த போர்க்குற்றச் சாட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருப்பதோடு முழு இலங்கையும் சிங்கள பெளத்த தேசம் என்பவர்களின் கையில் ஆட்சியையும் ஒப்படைக்கப் போகிறது..! இதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அகதி அந்தஸ்துக்கு கருமம் செய்வதிலையே குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு நாடு. நாயிலும் கேடுகள்..! :):lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைப் போல முட்டாள்கள் இந்த உலகில் எவரும் இல்லை. இவர்களின் அரசியல் அடிமைத்தனத்தை.. அறியாமையை அகற்றாமல் இவர்களுக்கு விடிவைப் பெற்றுக்கொள்வது என்பது கல்லில் நாருரிப்பது போன்றது.. என்ற முடிவுக்கே வரலாம்.

சிங்களம் மிக இலாவகமாக தன்னைச் சுற்றி இருந்த போர்க்குற்றச் சாட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருப்பதோடு முழு இலங்கையும் சிங்கள பெளத்த தேசம் என்பவர்களின் கையில் ஆட்சியையும் ஒப்படைக்கப் போகிறது..! இதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அகதி அந்தஸ்துக்கு கருமம் செய்வதிலையே குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு நாடு. நாயிலும் கேடுகள்..!

சரியாகச்சொன்னீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சும்மா எழுதிறார், சிங்களவனுக்கு மேல்மாடி இல்லயெண்டு பாலாமாமா சொன்னவர். இருந்திருந்தா இப்பிடி பொன்சேகாவ வெளியில விட்டிருப்பாங்களே! எங்களுக்கு குரு சந்திர யோகம். யாராவது தமிழன உந்த தேர்தலில நிறுத்தி அறுதிப்பெரும்பான்மைய பெற்று ஆட்சிக்கு வரவேணும். உந்த சிங்களவங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணும். அரசியல் தெரியாத கோமாளி மகிந்தவும் அவற்ற அரசியலும், புடுங்கிப்பாக்கட்டும் இனிமேல்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் குருதியில் தனது பதவியை உயர்த்தியும் நீட்டித்தும் வந்த ஒரு காட்டேறி இப்போது அரசியலுக்கு வரப்போகிறது. இதன் அரசியல் எப்படியிருக்கும் என்று சொல்லித் தெரியத் தேவையில்லை.

இவனை முதலாம் முறையிலேயே கொன்றிருக்க வேண்டும். தப்பி விட்டான்.

ஆனால், இப்போது தமிழ்க் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடனோ அல்லது ரணிலுடனோ சமரசம் செய்துகொண்டு தேர்தலைச் சந்திக்கப் போகிறார்களாம். அப்படியானால் இதுவரை நடந்த இனக்கொலைக்கும் சமரசம் செய்யப்படும்.

நெடுக்குச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். எம்மைப்போன்ற இனத்துக்கு சுதந்திரமும், தனி நாடும் தேவையில்லாதவைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பர்களானால் அவர்களுக்கு விடிவே கிடையாது.போர்க் குற்றங்களுக்காக சர்வ தேச நீதி மன்றத்தில் நிறுத்தப் பட வேண்டியவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக போட்டி போட்டால்; கூடிய அளவில் தமிழர்களைக் கொலை செய்தது தாமே என்று போட்டி போட்டு சிங்களவரிடையே பிரச்சாரம் செய்வார்கள்.ஒட்டு மொத்தமாக தேர்தலைப் புறக்கணித்து எங்களுக்கு சிறிலங்கா தேசத்தின் தேர்தல்களில் அக்கறை இi;லை என்பதைக் காட்டுவோம்.

நடிகர் சரத்குமாருக்கு இது போதாத காலம் போல. :)

அமெரிக்காவுக்கு போய் வந்த அடுத்த வாரம் பதவி விலகல், அரசியல் ஈடுபாடு, ஐதேக வுடன் கூட்டு... ஆக இணைத்தலைமை நாடுகளுக்கு வேலை வந்தாச்சு...

புலிகளை ஒடுக்கியதாக சொல்லப்பட்ட இலங்கையின் முக்கிய தளபதி மனித உரிமை குற்றச்சாட்டுக்காக அவரை அமெரிக்காவில் விசாரிக்க படலாம் என்பதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லாமலா போய் இருந்து இருப்பார்... ஆனால் இப்ப உறுதியாக தெரிகிறது அமெரிக்காவினால் அழைக்கப்பட்டு அனுசரனையை கொடுக்கப்பட்டு இருக்கிறார் என்பது... மனித உரிமை விசாரனை எண்று சொல்லப்பட்டது எல்லாம் பூச்சுத்தல்... அதை தவிர்த்து நாட்டுக்கு வந்ததால் சரத் சிங்களவரின் ஹீரோ...

இனி மனித உரிமையாவது மண்ணாவது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றுத்தான் மகிந்த விருந்து கொடுத்தார். இன்று ராஜனாமாச் செய்கிறார்.

இது சிங்களப் பேரினவாதிகள் தங்கள் இரத்தம் படிந்த கரங்களை ஒருவர் மீது ஒருவர் துடைத்துக் கொண்டு தேர்தலில் இழிச்சவாய் தமிழர்களின் முன் வாக்குக் கேட்டு வருவதற்காக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடகம்.

இந்த நாடகத்திற்கு புலம்பெயர் மற்றும் தமிழ் ஊடகங்கள் இத்தனை முக்கியத்துவம் அளிப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

ஜே. ஆர் பதவிக்கு வரும் போது பூமாலை போட்டு வரவேற்றார்கள் தமிழர்கள்.

ராஜீவ் காந்திக்கு பூமாலை போட்டு வரவேற்றார்கள்.

பிரேமதாச வரும் போது விருந்திட்டு மகிழ்ந்து கொண்டார்கள்.

சந்திரிக்கா வரும் போது யாழ்ப்பாணத்தில் கூட பொங்கல் பொங்கி அவரை சிங்கள சமாதானத் தேவதையாகக் காட்டினார்கள் தமிழர்கள்.

மகிந்த வரும் போது மப்பில் மயங்கிக் கிடந்தார்கள்.

இப்போ.. சொந்த உறவுகளைக் கொண்டவனிற்கே இலவச விளம்பரமும் செய்கிறார்கள்.

இதற்குள் இவர்கள் தம்மைத் தாமே கோரிக்கொள்வது ஈழத்தமிழர்கள் என்று.

ஒரு கொடிய போர்க்குற்றவாளி ஜனநாயகத்தின் பெயரால் பாதுகாக்கப்படுவதை கரம் கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறார்கள் தமிழர்கள் எனும் போது...

தமிழர்களைப் போல முட்டாள்கள் இந்த உலகில் எவரும் இல்லை. இவர்களின் அரசியல் அடிமைத்தனத்தை.. அறியாமையை அகற்றாமல் இவர்களுக்கு விடிவைப் பெற்றுக்கொள்வது என்பது கல்லில் நாருரிப்பது போன்றது.. என்ற முடிவுக்கே வரலாம்.

சிங்களம் மிக இலாவகமாக தன்னைச் சுற்றி இருந்த போர்க்குற்றச் சாட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருப்பதோடு முழு இலங்கையும் சிங்கள பெளத்த தேசம் என்பவர்களின் கையில் ஆட்சியையும் ஒப்படைக்கப் போகிறது..! இதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அகதி அந்தஸ்துக்கு கருமம் செய்வதிலையே குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு நாடு. நாயிலும் கேடுகள்..! :):lol::D

வடக்குக்கு மகாவலியை திருப்புறன் எண்டு சொன்ன

காமினி பொன்சேகாவுக்கு பனையோலையிலை மாலை போட்டு அழகுபாத்த எங்கடை சனத்தின்ரை நோடாளத்தை ஆரிட்டை சொல்லி அழ :D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் கூட்டணிகாரர் சேராத கூட்டங்களோடு சேர்ந்து "பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி தின்னும்" என்ற நிலைமைக்கு எமது அரசியல் நிலைமை உள்ளது.எமது மக்கள் வாக்களிகாமல் தமது எதிர்ப்பை காட்டலாம். ஆனால் மக்கள் பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் பயத்தால் அரசுக்கு வாக்களிக்க கூடிய நிலைமை உண்டு. கொழும்பில் வாழும் பல லட்சம் தமிழர்கள் வாக்களிக்காமல் விடுவார்களா என்றால் இல்லை. ஏற்கனவே மாநகரசபையில் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களே அரசுடன் சேர்ந்து விட்டார்கள்.நாம் வாக்களிகா விட்டாலும் முஸ்லிமோ, சிங்களவரோ அரசு சார்பில் தமிழர்களுக்கு தலைவர்கள் ஆகி தமிழர் தலையில் சம்பல் அரைக்க தயங்க மாட்டார்கள். மொத்தத்தில் தமிழரின் நிலை திரிசங்கு நிலை தான்.

எங்கள் பத்திரிகைகளும் அமெரிக்காவில் சரத் கடுமையாக விசாரிக்கப்பட்டார் என எம்மை குளிர்வித்தனர் .ஆனால் நடந்தததோ அமெரிக்காவின் ஆசீர்வாதத்தை சரத் பெற்றுக்கொண்டார் என்பதே.பத்திரிகைகளே யதார்த்தத்தை எழுத முன் வராத போது சாமானிய மக்கள் என்ன தான் செய்ய முடியும்?

எமக்கு எந்த வித நன்மைகள் சிங்கள தலைமையால் கிடைக்காவிட்டாலும் இம்முறை சரத் கூட்டணியால் மகிந்த தோற்கடிக்கபடுவார் என்பது மட்டும் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.