Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் துரோகி.?

Featured Replies

sweetdreams.jpg

மே17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...

பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.

ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''

பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.

நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.

ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.

மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம்.

உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.

எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.

காக்க ஒரு கனக (AK) 47

நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்

தோற்கவும் அதே கண நேரம்தான்

ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த

காயம் தொட்டுக் கையை நனைத்து

விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்

முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.

மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட

பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.

விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்

சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்

அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே

உதிரம் வடியும் கவிதை படித்து...

சத்குரு ஜக்கி வாசுதேவ்-

""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்

இனி வாழ இருப்பவர்களுக்காகவும்

அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''

-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார்.

...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.

புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14 சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20593

Edited by தயா

ஈழஇனப்படுகொலையின் காரணங்களை வரிசைப்படுத்தும் அருட்தந்தை ஏன்தான் இந்தியாவை நான்காவது காரணம் என்று ஆகப்பின்தள்ளுகிறார்.இவர்கூறும் முதலாவது காரணத்திலேயே சிறீலங்காவைவிட முன்னுக்கு நின்றது இந்தியாதான்.

நேற்றுநடந்த இனப்படுகொலைக்கும் இன்றுநடப்பவைகளுக்கும் காரணம்

1) இந்தியா

2)இந்தியா

3) இந்தியாவே

இவர் திருமா ராமதாஸ் எல்லாம் ஒரே குட்ஸ் மட்டைகள்தான்

காஸ்பர் அடிகள், சீமான் வைகோ நெடுமாறன் அய்யா என்னும் எத்தனையோ தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் அத்தனை பேரும் முதலில் இந்தியர்கள். இது மறுக்கப்பட முடியாதது.

இந்தியா ஈழத்தமிழனை இந்தக் கட்டுரைவரை தனது சுயநலத்திற்காக பந்தாடுகின்றது. எமது அத்தனை அழிவுகளிலும் இந்தியாவின் சூழ்ச்சியும் நேரடித்தலையீடும் இருக்கின்றது. விடுதலைக்காக போராட முற்பட்ட வேளையில் இருந்து இன்றுவரை இது தொடர்கின்றது. நக்கீரனும் கஸ்பரும் இந்தக் கட்டுரையும் இந்தியம் என்பதில் இருந்து வெளியில் இல்லை. நாங்கள் தமிழனாக அழிந்து போனோம் நீங்கள் இந்தியனாக எம்மை அழித்தீர்கள்;. எங்கள் குழந்தைகளின் இரத்தமும் கண்ணீரும் இந்தியப்பாதிரி உங்கள் சட்டையிலும் பிரண்டுதான் உள்ளது. அதிலிருந்து நீங்கள் எந்த வகையிலும் விலகி இல்லை. யார் துரோகி என்று தலைப்பிட்டு சுட்டுவிரல் எங்கே காட்டுகின்றதோ மற்ற நான்கு விரலும் இந்தியனான உங்கள் நெஞ்சத்தை சுட்டுகின்றது.

முதுகில் குத்துவதையே மரபாகக் கொண்ட இந்தியம் குறித்தும் அதன் துரோகம் குறித்தும் நாங்கள் தெளிவுடன் இருக்கின்றோம். எமது விடுதலை மூச்சை சிதைத்தது முதல் எமக்குள் பிரிவினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்தியது முதல் ஆயுதங்களை வாங்கிய பின் முதுகில் குத்தியது தியாகி திலீபன் பூபதித்தாய் குமராப்பா புலேந்தின் கிட்டு என ஆயிரக்கணக்காக பட்டியல் நீளும் இந்தியத் துரோகத்துக்கு சாட்சியாக. ஆனால் அதைவிடக் கேவலம் துரோகத்தை மட்டுமே செய்யும் இந்தியாவை இன்னும் நம்பிய எமது மக்கள். எமது வாழ்வு முற்றாக சிதைந்த பின்னரும் இந்தியாவை நம்பும் எமது மக்கள். நீங்கள் ஒரு இந்தியன் என்பதை உணராமல் இன்னும் உங்களை தமிழன் என்று நம்பும் எமது மக்கள். இதுவே மிகப்பெரிய கேவலம். உங்களது அத்தனை துரோகத்தையும் சந்தித்து அழிந்ததற்கும் இதுவே பிரதான காரணம். தொப்புள் கொடி உறவென்ற பிதற்றலை அறுத்தெறிய முடியாத கேவலம். இந்தியனுக்கும் ஈழத் தமிழனுக்கும் என்ன தொப்புள்கொடி உறவு?

நீங்கள் அனைவரும் கன்னடனிடம் அடிவாங்கி மராட்டியனிடம் அடிவாங்கி இருந்தும் அத்தனை வேற்றினங்களுடனும் சேர்ந்து இந்தியனாக வாழ்வது போல் எஞ்சிய ஈழத்துமக்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். இலங்கையாராக வாழ்வார்கள். முடியாவிட்டால் எதாவது செய்வார்கள். நீங்கள்ய ஈழமக்கள் விடுதலைக்கு தமிழனாக உதவுவது போல் இந்தியனாக எம்மீது மூத்திரம் பெய்வதை நிறுத்துங்கள். அது உங்களால் முடியாது. ஆனால் இனியும் நீண்டகாலத்துக்கு எமது மக்களின் குருதியிலும் கண்ணீரிலும் பிழைப்பு நடத்துவதற்கு உங்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்….. 2002 க்குப்பிறகு எங்கட தொலைக்காட்சிப்பெட்டியளில வானொலியளில அடிக்கடி கேட்ட குரல்கள், மாவீரர் பொழிப்புரைக்கும் கூப்பிட்டநாங்கள். தாய்நாடு தந்தைநாடு தொப்பூள்கொடி உறவெண்டு கொண்டாடினநாங்கள் மே 18 க்குப்பிறகு ஒண்டொண்டா கழட்டி மூத்திரதாரி பட்டமும் குடுத்திட்டம். மதிப்புக்குடுத்து மதிப்பு எடுக்கவேணும், நாங்கள் எப்பவும் தேவையானபோது காலில விழுறதும் பிறகு எட்டி உதைக்கிறதுமா...........

இவளவுகாலமும் வைகோ நெடுமாறன் திருமாவளவன் கஸ்பர் இந்தியரில்லாமல் தமிழராவோ குரல் குடுத்தவை? எப்பவும் அவை இந்தியர் பிறகுதான் தமிழர். எங்களுக்கு எல்லாம் நடந்து முடிஞ்சாப்பிறகுதானே தெரிய வாறது. உதாரணத்துக்கு ஆரம்பத்திலயிருந்து இந்தியாவோட சேர்ந்ததா துரோகிப்பட்டம் குடுத்த அத்தனைபேரயும் வரிசைப்படுத்தலாம், கடைசியில இவையளயும் சேர்க்கலாம்.

என்னை ஸ்ரீலங்காவோட சேர்த்தபடியா இந்த பட்டியலிலயிருந்து நானாகவே விலத்திக்கொள்ளுறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் அவர்களின் மேற் கூறப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலான தமிழரின் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றது. அடிகளார் சுபவீ போன்றவர்கள் தமிழீழப் போராட்டத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தாலும் கலைஞருக்கு வக்காலத்து வாங்குவதிலும் அவரைக் காப்பாற்றுவதிலுமே குறியாய் இருப்பது எமக்கு நெருடலாக இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு எல்லாம் ஒரே காரணம் இந்தியாவே.இந்தியா எதுவுமே செய்யாமல் மௌனமாக இருந்தாலே போதும் உலக நாடுகள் அனைத்;தும் இந்த விடயத்தில் கண்டும் காணாமல் இருந்திருக்கும் ஈழமும் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன் இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் சிறிலங்கா செய்த போர்க் குற்றங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றும் விடயத்தில் முனைப்பாக இருக்கும் இந்தியாவைக் கடைசிக் காரணமாக வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.தமிழகத்தில் 5 முறைகள் முதமைச்சராக இருந்த கருணாநிதி தமிழரைக் காப்பாற்ற தன் சக்திக்கு உட்பட்ட அளவில் கூட உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது உண்மையிலும் உண்மை.அதை விடுத்து உலகத் தமிழர்கள் ஒனறும் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழகமே உலகத் தமிழர்கள் என்ற சொல்லுக்கு பொருந்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் அவர்களின் எழுச்சியை அடக்குவதிலேயே குறியாய் இருக்கும் கருணாநிதியைக் காப்பாற்றக் கூடிய விதத்தில் வாதங்களை வைப்பதை எங்கள் பெருமதிப்புக்குரிய அடிகளாரே சொன்னாலும் ஈழத்தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

------

என்னை ஸ்ரீலங்காவோட சேர்த்தபடியா இந்த பட்டியலிலயிருந்து நானாகவே விலத்திக்கொள்ளுறன். :lol:

:D:)smiley-devil12.gif

  • தொடங்கியவர்

ம்….. 2002 க்குப்பிறகு எங்கட தொலைக்காட்சிப்பெட்டியளில வானொலியளில அடிக்கடி கேட்ட குரல்கள், மாவீரர் பொழிப்புரைக்கும் கூப்பிட்டநாங்கள். தாய்நாடு தந்தைநாடு தொப்பூள்கொடி உறவெண்டு கொண்டாடினநாங்கள் மே 18 க்குப்பிறகு ஒண்டொண்டா கழட்டி மூத்திரதாரி பட்டமும் குடுத்திட்டம். மதிப்புக்குடுத்து மதிப்பு எடுக்கவேணும், நாங்கள் எப்பவும் தேவையானபோது காலில விழுறதும் பிறகு எட்டி உதைக்கிறதுமா...........

இவளவுகாலமும் வைகோ நெடுமாறன் திருமாவளவன் கஸ்பர் இந்தியரில்லாமல் தமிழராவோ குரல் குடுத்தவை? எப்பவும் அவை இந்தியர் பிறகுதான் தமிழர். எங்களுக்கு எல்லாம் நடந்து முடிஞ்சாப்பிறகுதானே தெரிய வாறது. உதாரணத்துக்கு ஆரம்பத்திலயிருந்து இந்தியாவோட சேர்ந்ததா துரோகிப்பட்டம் குடுத்த அத்தனைபேரயும் வரிசைப்படுத்தலாம், கடைசியில இவையளயும் சேர்க்கலாம்.

நல்லாத்தானப்பா இருக்கிறீயள்... அமாவாசை பறுவம் மட்டும் வராட்டால் நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

முதல் முறையா சொல்லுறது சரியானது எண்டு ஒத்து கொள்கிறன்...

நாங்கள் முழுசா எல்லாரையும் நம்புறதும் அவர்கள் எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் செயற்படவில்லை உதவவில்லை எண்ட உடனை மனம் உடைஞ்சு ஏசுகிறதும் ஒண்டும் புதுசு இல்லை தானே...

என்னை ஸ்ரீலங்காவோட சேர்த்தபடியா இந்த பட்டியலிலயிருந்து நானாகவே விலத்திக்கொள்ளுறன். :lol:

நீங்கள் இப்பிடி சொன்ன உடனை விட்டு விடுவம் நீங்கள் தமிழர் ஆதரவாலர் எண்டு ஒத்து கொள்ளுவம் எண்ட நினைப்போ... :)

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தானப்பா இருக்கிறீயள்... அமாவாசை பறுவம் மட்டும் வராட்டால் நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

முதல் முறையா சொல்லுறது சரியானது எண்டு ஒத்து கொள்கிறன்...

நாங்கள் முழுசா எல்லாரையும் நம்புறதும் அவர்கள் எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் செயற்படவில்லை உதவவில்லை எண்ட உடனை மனம் உடைஞ்சு ஏசுகிறதும் ஒண்டும் புதுசு இல்லை தானே...

அமாவாசை பறுவம் பற்றி நல்லாதான் தெரிஞ்சுவச்சிருக்கிறீங்கள், இங்க கனபேருக்கு......

வந்தவன் போனவன் ஆதரிச்சவன் அறிவரை சென்னவன் எண்டு பாரபட்சமில்லாமல் துரோகியாக்கி கொண்டாடினதால துரோகி இல்லாதவங்கள் விரலை மடிச்சு எண்ணக்கூடியதா வந்திட்டிது. ஒரு நாடு ஒரு அமைப்பாவது ஆதரவா இருக்கோவெண்டு பாத்தால் அதுவும் இல்ல, கனவில செய்தி எழுதிப்போட்டு சரியான அறிக்கை வர பேந்தப்பேந்த முழிக்கிறதுதான் நடக்கிது. அண்ணன் அடகுவச்சதை மீட்ட கதை திரும்பக்குடுத்தகதைதான் எல்லாஇடமும் பேசப்படுகிது. பாப்பம் எங்க போய் முடியுதெண்டு. :D

நீங்கள் இப்பிடி சொன்ன உடனை விட்டு விடுவம் நீங்கள் தமிழர் ஆதரவாலர் எண்டு ஒத்து கொள்ளுவம் எண்ட நினைப்போ... :)

நீங்கள் ஒத்துக்கொண்டு சேட்டுபிக்கேட் குடுத்தஉடன எல்லாம் பிறீயா கிடைக்கப்போகுதோ? நீங்களும் உங்கட சேட்டுபிக்கேட்டும். :lol:

Edited by Mathivathanang

துரோகிகளின் துணையுடன், இந்தியாவால் எமது விடுதலைப் போராட்டம் தேக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை அருட்தந்தை மறுதலிப்பதாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகிகளின் துணையுடன், இந்தியாவால் எமது விடுதலைப் போராட்டம் தேக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை அருட்தந்தை மறுதலிப்பதாகவே இருக்கின்றது.

தமிழ் இலக்கணம் படிச்சவையாரும் இதில என்ன சொல்லியிருக்கொண்டு விளங்கப்படுத்துங்கோ! :o

ஒருவரும் காரணம் இல்லை கருநாநிதிதான் காரணம் *** போன மானத்தை தமிழகதமிழன் மீண்டும் காப்பாற்ற வேண்டும்.

நாங்கள் நயவஞ்சகத்தால் கருநாநிதியின் கூட்டு சதியால் தோற்கடிக்கப் பட்டோம்....

அவன் தான் எங்கள் மக்களை சாகவிட்டு இரக்கம் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தவன்.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரும் காரணம் இல்லை கருநாநிதிதான் காரணம் *** போன மானத்தை தமிழகதமிழன் மீண்டும் காப்பாற்ற வேண்டும்.

நாங்கள் நயவஞ்சகத்தால் கருநாநிதியின் கூட்டு சதியால் தோற்கடிக்கப் பட்டோம்....

அவன் தான் எங்கள் மக்களை சாகவிட்டு இரக்கம் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தவன்.

அமெரிக்கன் கப்பல அனுப்புவானெண்டு கனவுலகத்தில இருந்துகொண்டு ஏன் கருணாநிதிய திட்டுறீங்கள். ஒபாமாவோட சொல்கேமோட மிலிபாண்டோட குஸனனோட டீல் போட்டது யார்? இந்தியா காப்பாத்துமெண்டு இருந்திருந்தா ஏன் அமெரிக்க கப்பலை எதிர்பாத்தீங்கள்? :o

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஜெகத் கஸ்பாரை தமிழர்களின் காவலனாக யாழ் நிர்வாகம் பரிந்துரை செய்கின்றதா ?

ஜெகத் கஸ்பாரை விமர்சிக்கக் கூடாது என்று எழுதாத விதியோ ?

அவர் செய்மதியிலிருந்து பார்த்தது போல் எழுதுவதை யாழ் நிர்வாகம் உறுதி செய்கின்றதா ?

ஜெகத் கஸ்பாரின் தொடர் சாத்தான் வேதத்தை எம்மையும் ஓதச் சொல்கின்றதா ??

புலிகளை விமர்சிக்க தடையில்லாத போது இவருக்கு மட்டும் யாழும் சிலரும் பக்கச்சார்பாகவும், வக்காளத்தும் வாங்குவது ஏன் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெகத்

இவர்கள் எப்போதும் ஊடகங்களில் பிரபல்யமாக இருக்க விரும்புபவர்கள்.

அதற்காக அடிக்கடி அறிக்கை வெளியிடுபவர்கள்.

80களில்,90களில் இவர்களைப்போன்றவர்களின் அறிக்கைகளை மீட்டிப்பாருங்கள்?

அப்போது தெரியும்????????????

கேடுகெட்டவர்களை நம்பி மோசம் போகும் தமிழினம்?


  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் எப்போதும் ஊடகங்களில் பிரபல்யமாக இருக்க விரும்புபவர்கள்.

அதற்காக அடிக்கடி அறிக்கை வெளியிடுபவர்கள்.

80களில்,90களில் இவர்களைப்போன்றவர்களின் அறிக்கைகளை மீட்டிப்பாருங்கள்?

அப்போது தெரியும்????????????

கேடுகெட்டவர்களை நம்பி மோசம் போகும் தமிழினம்?


குமாரசாமி அண்ணா சொன்னது தான் எனது கருத்தும் இனி இவர்கள் தான் ஏதோ எமது ரட்சகர்கள் போல அறிக்கை விடுகிறார்கள்.

யார் துரோகி.?

இன்றைய தேசபக்தன் நாளைய தேசத்துரோகி...மகிந்தா சிந்தனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.