Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதிகள் ராம் மற்றும் நகுலன் தொடர்பில் வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணி என்ன?: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்கம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் பற்றி அண்மைக் காலமாக வெளிவரும் கதைகளின் பின்னணியில் - அவர்களது முக்கியத்துவத்திற்கு அப்பால் அந்தக் கதைகளை வைத்து சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடாத்த முயலும் உளவியல் போரே முக்கியமானதாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பாக - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினது வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று விடுத்துள்ள அந்த அறிக்கை கீழே முழுமையாகத் தரப்படுகின்றது.

அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!

எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே,

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவிவருவதானால் - காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை உங்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.

இந்த விடயத்தில் - ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு - அப்பால் அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.

அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்துக்கு பின்னர் - தன்னுடனிருந்த சில போராளிகளுடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதி மறைவிடங்களில் மாறி மாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார்.

ஆனால், காலப்போக்கில் - வீரச்சாவுகள், காணாமல் போதல், சிங்களப் படையினரிடம் போய்விடுதல், உள் முரண்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில் - தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் - மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு - அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் - மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார்.

இந்த நேரத்தில் - மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் தறை செய்திகளை வெளியிட்டது.

இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளம், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.

இத்தகைய சூழ்நிலையில் - இன்னொரு திருப்பமாக - இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத் தறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

இவருக்கு - ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது.

அதன் காரணமாக - அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார். மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா - அற்குரிய உதவியைப் பெறுவதற்காக - அப்போது திருகோணமலையில் இருந்ததாக நம்பப்படும் தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார்.

இவற்றுக்கு அமைய - தவேந்தினின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.

இந்தத் தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து ஏனைய நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர்.

சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன.

இருந்த போதும் - அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில் - தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொளவதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் - இந்தத் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம். இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள்.

தவேந்திரன் கூட மிகச் சரளமாக - சிங்களவர் போன்றே - சிங்கள மொழியைப் பேசக் கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமா - திருகோணமலையின் சிங்கள கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்த சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே - அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் - தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார்.

செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக - திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொது மக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன் - குறித்த நேரத்தில், குறித்த ஒரு இடத்தில் வைத்து - பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார்.

வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோருமே சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் என்பது பிரபாவுக்குத் தெரியவந்தது.

மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இது.

இதன் பின்னர் - பிரபாவை வைத்து மட்டக்களப்பில் புலனாய்வுத் தறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர்.

ஆனால் - ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த புலனாய்வுத் துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை.

ராம் மற்றும் நகுலனை வேறு ஒரு மிகப் பாதுகாப்பான இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா - குறித்த ஒரு இடத்தில் வேறு சில ஆட்களுடன் "ஹயஸ்" வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார்.

பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத் தறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.

இதன் பின்னர் - எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்த தமிழ் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனை அவரது ஒரு வீரசெயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விகுட்படுத்தாத வகையில் நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் தறையினர் செயற்படுத்தினர்.

இந்த நேரத்தில் - திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்த போது - சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நொக்கியது.

கே. பி அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்கு படுத்திவிடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துரும்புச் சீட்டாகப் பாவித்து கே.பி அவர்களை இலக்கு வைத்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில் - கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார்.

அதே நேரத்தில் -அவர் கே. பி. அவர்களுடன் முரண்பட்டு இருந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இவ்வாறாக - விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள்,மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் - ராம் அவர்களுக்கும் கே. பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி - நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.

இங்கு - ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை.

ஆனால் - இந்த இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய முழத் தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.

இந்த நிலையில் - கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின.

அதனால் - அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலஙங்கா புலனாய்வாளர்கள் விழி்படைந்தனர். இந்த நிலையில் - கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின.

அந்த நேரத்தில் - தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை.

உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக் கட்டம் தான் - வரும் மாவீரர் நாள் அன்று ராம் நிகழ்த்தப் போகும் கொள்கை விளக்க உரை.

இதில் - சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய தலைப்பு - தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.

தேசியத் தலைவர் அவர்களது வீரமரணத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமனையில் - தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான்.

தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டும் தான். நோக்கம் - வெளிநாட்டுத் தமிழ் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.

இவ்வாறாக - சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்ளுகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்

பொறுப்பாளர்

வெளியகப் பணிப் பிரிவு

புலனாய்வுத் துறை

Puthinapalakai

  • கருத்துக்கள உறவுகள்

i1.jpg

i2.jpg

i3.jpg

இதுவும் இதே புலனாய்வு அறிவழகன் என்கிற அம்புறுஸ் வெளிவிட்ட அறிக்கைதான் படியுங்கள்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

குட்டையை குழப்புகின்ற கூட்டம் கூட்டமாக நிற்பதில் அளவிலா மகிழ்ச்சி. :(

நாளைக்கு இன்னொருத்தனை வைத்து அறிக்கை விட்டு நல்லா கடைப்பார்க்கிறான் சிங்களவன்.

தலைவரை அறிந்தவர்கள் குழம்பமாட்டார்கள்... விடுதலை அமைப்பும் குழம்பாது

மக்கள் குழம்பாமல் இருந்தால் சரிதான்.

i1.jpg

i2.jpg

i3.jpg

இதுவும் இதே புலனாய்வு அறிவழகன் என்கிற அம்புறுஸ் வெளிவிட்ட அறிக்கைதான் படியுங்கள்

புலனாய்வுத்துறையை நம்ப மாட்டம், தலைமைச் செயலகத்தை நம்ப மாட்டம். ஆனால் தளபதி ராமின் பெயரில் வரும் அறிக்கைகளை மட்டும் நம்புவோம். அப்பிடியோ அண்ணை??

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ் இன மக்களின் விடுதலை அமைப்பான பிகேகே யின் தலைவர் ஒச்சலான் இத்தாலியில் வைத்து கைதுசெய்யபட்டு துருக்கியிடம் கையளிக்கபட்டபோது. எத்தனையோ குழப்பங்களை அவர்களுக்குள் உருவாக்கி பல பெரிய தளபதிகளையும் தனது வலையில் வீழ்த்தி போராட்டத்தை நாசம் பண்ணியது அமெரிக்க சிஐஏ. காலம் போக போக துருக்கியின் அடாவடித்தனத்தால் மீண்டும் கிளாந்தெழுந்த உணர்வுமிக்க போராளிகளால் அந்த இயக்கம் மீண்டும் புதிய புத்துணர்வுடன் வளாந்து ஈராக்கிய எல்லைகளில் செயற்பட தொடங்கியது. சாதம் உசைனை வீழ்த்தி ஈரானுடன் உரசுவதற்கு அதே அமெரிக்க சிஐஏவிற்கு இந்த பிகேகே இப்போது தேவைபட்டுள்ளது. அவர்களை வைத்து ஈரானிய எல்லைகளில் பல தாக்குதல்களை சிஐஏ செய்துவருகின்றது. அவர்களின் இலட்சியத்தை வெல்வதற்கு சிஐஏ உதவுமா? உலமாறுதல்களுடன் நாமும் மாறியாக வேண்டும் என எண்ணி மீண்டும் ஒரு பெரிய துரோத்திற்குள் வீழ்ந்து மடியபோகிறார்களா என்பது? எங்களை போன்ற சாதரணமானவர்களுக்கு நடந்து முடிந்த பின்தான் n தரியும்.

எமது போராட்டம் என்பது இன்னும் குறைந்தது ஐந்துவருடங்கள் கடந்தே உண்மைகளை உணர்ந்து புதிய வடிவில் புது தோற்றம் பெறும். அதுவரை மகிந்தவின் மலம் தின்னும் பிராணிகளின் காட்டில் அடித்து மழைபெய்யும் (அது யாழ்களத்தை பாhத்தாலே தெயுதுதானே). எமக்கு குழப்பங்கள் மட்டுமே எஞ்சும்.

எமது இலட்சியத்தில் நாம் உறுதியாக இருத்தலே பயன் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத்துறையை நம்ப மாட்டம், தலைமைச் செயலகத்தை நம்ப மாட்டம். ஆனால் [b]தளபதி ராமின் பெயரில் வரும் அறிக்கைகளை மட்டும் நம்புவோம். அப்பிடியோ அண்ணை??

தமக்குள் சில முடிவுகளை எடுத்துவிட்டு......

அதை எம்மீது திணிக்க பலபேர் வெளிக்கிட்டுள்ளனர்

ஆனால் இதுதான் நிஐம்

எமது இலட்சியத்தில் நாம் உறுதியாக இருத்தலே பயன் தரும்

தளபதி ராமுக்கு தலைவணங்கமுன்

இயக்க இரகசியம் காப்பதற்காய் தம்மை தாமே அழித்த ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினைக்காமல் இருக்கமுடியவில்லை

  • தொடங்கியவர்

நாங்க குழப்பமில்லமால் இருந்தால் சரி

நாங்க குழப்பமில்லமால் இருந்தால் சரி

நீங்கள் சும்மா குழப்பினால் நாங்கள் குழம்பிடுவமல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.