Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2009 அறிக்கை - ராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

page1.jpg

page2.jpg

page3.jpg

page4.jpg

http://www.yarl.com//forum3/uploads/monthly_12_2009/Maaveerar_Speech_2009_Voice.mp3

மின்னஞ்சலில் கிடைத்தது

இன்னொரு அறிக்கை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66369

எது எம்மைநோக்கிய உண்மையான அறிக்கை :rolleyes:

Edited by விதுரன்

30 வருடங்களாக இரத்தம் சிந்தி தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை போராட்டத்தில் கழித்த மக்களுக்கு இப்படியான போலிகளை இனங்காணுவது ஒரு கடினமான காரியம் அல்ல.

சிங்களவரின் இப்படியான செயல்களால் தமிழர்கள் தங்களுடைய கட்டமைப்புக்களை உறுதிப்படுத்த வேண்டிய தேவையை மீண்டும் ஒரு முறை ஏற்படுத்தி இருக்கின்றது.

விதுரன் நன்றிகள் இனைப்பிற்கு, புலத்தில் உள்ல போலிகளை விடுத்து, களத்தில் உள்ள போராளிகளின் கரங்களை பலப்படுத்துவோம்(வந்த செய்திகள் பொய்ச்செய்திகளாகட்டும், புனைகதைகளாகட்டும் ...... )!

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.

ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.

(1) முதலாவதாக அவர் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரையில் பின் புலத்தில் குயில் கூவுவதுபோல ஒரு ஒலி எழுப்பப்பட்டு அவர் காட்டில் இருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்றுள்ளனர் சிலர். அவர் ஆற்றிய உரையின் 30 நிமிடமும், அந்தக் குயில் பின் புலத்தில் தொடர்ந்து ஒரே சீராகக் கூவிக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் குயில் கூவுவதை பதிவுசெய்து அதனை மீண்டும் மிண்டும் பின் புலத்தில் ஒலிபெருக்கியுள்ளனர் சிலர்.

(2) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒப்புக்கொள்ளும் அவர், இலங்கை இராணுவத்தின் இக் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய தோற்றப்பாட்டை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

(3) இனியும் எமது இலக்கான தமிழீழத்தை அடைய தொடர்ந்தும் போராடுவோம் என ஒரு இடத்தில் கூட அவர் கூறவில்லை. முடிவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறி முடித்துள்ளார்.

(4) உரையில் மே 17 ம் திகதி தன்னைத் தொடர்புகொண்ட தேசிய தலைவர் தன்னையே பொறுப்பை ஏற்று வழி நடத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படியாயின் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்களும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்மையே தலைவராக இருக்கும்படி தேசிய தலைவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனை நோக்கும் போது தேசிய தலைவர் அவர்கள் 2 பேரை விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கும் படி கூறியிருக்க மாட்டார். இரண்டில் ஒருவர் பொய்யுரைப்பது, புலனாகின்றது. கே.பி அவர்கள் தம்மை தலைவர் என பிரகடனப்படுத்தும் போது ராம் ஏன் எதிர்க்கவில்லை?

(5) தாமும் சில தளபதிகளும் காட்டில் காலூன்றி இருப்பதாகக் கூறும் ராம் அவர்கள் போராட்டத்தைப் பற்றியோ அல்லது வருங்கால நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் கூறாமல், புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் நிதியளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். காட்டில் காலூன்ற இவருக்கு நிதி அவசியமாக உள்ளதா? அதாவது பெரும் தொகையான நிதி?

(6) உரையில் தேசிய தலைவர் உறுதியாக இறுதிவரை போராடியதால் தான் மக்கள் தற்போது முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் என்பதுபோன்ற சாயலில் தனது உரையை நிகழ்த்தியது மட்டுமல்லாது, வெளி நாடுகள் வேகமாக வந்து உதவவேண்டும் என்றும் கோரியுள்ளார். அதாவது போராட்டம் ஏதும் இன்றி வெளிநாடு ஒன்று தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமாம்.

ராம் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இல்லை என்று ஒரு கணம் நாம் வைத்துக்கொண்டால் கூட, ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்படியான ஒருவரிடம் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு கையளிப்பது?. தேசிய தலைவர் ஒருபோதும் புலம்பெயர் மக்களிடம் நிதி உதவி கேட்டது இல்லை. மாறாக மக்களே மனமுவந்து நிதி அளித்தனர். காரணம் அங்கு நடைபெற்ற தாக்குதல்கள். இலங்கை இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம்.

தளபதிகளுடன் தாம் காட்டில் கால் பதித்துள்ளோம் என, ஏதோ இமயமலையில் கால் பதித்தது போல இவர் கூறுவதை எவரும் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருடன் இவர் சேர்ந்து இயங்குகிறார் அல்லது இயங்கவில்லை என்பதை விட இவர் போராட்டத்தை கொண்டு நடத்தக்கூடிய திறன் அற்றவர் என்பதே இன்றைய தினம் தெளிவாகியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அறிக்கை பிரான்சு நாட்டில் உள்ள சிலரால் எழுதி வெளியிடப்பட்டது.

இதற்கு மேலும் விபரங்கள் சொல்ல முடியும் ஆனால் சிலபேர் இதில் விசயம்

தெரியாது சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விபரங்களை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சொல்வது மிகவும் சரி. தலைவரால் அல்லது பொட்டம்மானால் விடப்படும் அறிக்கைகளை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை பொறுமை காப்பதே சிறந்தது. வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்கள் அவசரப்படுவதால், எமக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. இலங்கையிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குத்தான் முழுப் பாதிப்பும் வரப்போகிறது. அதுவும், வெளிநாடுகளில் உறவினர்கள் இல்லாத மக்கள்தான் மிகவும் பாதிப்படைவார்கள். ஆகவே, யோசித்து நடப்பதுதான் சிறந்தது.

ஆனால் சிலபேர் இதில் விசயம்

தெரியாது சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விபரங்களை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.

:blink::unsure::rolleyes::o

Edited by Sniper

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை ராமிடம் இருந்து வராமல் வரவேண்டியவர்களிடம் இருந்து வந்திருந்தால் கண்ணை மூடி ஏற்றுக்கொண்டிருப்போம்.

அறிக்கைகள் ஆயுதப் போராட்டம் அஸ்தமித்துப் போய் விட்டதென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஜனநாயக முறையில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர்கள் முனையவேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசுகளின் விருப்பப்படி இலங்கைத்தீவில் தமிழருக்குத் தாயகம் என்பதே இல்லாமல் போகும் நிலைதான் வரும்.

என்ன வர வர புலிகளின் கடிதவடிவம் தினமும் மாறுது. ஓ...இதுதான் மாற்றுத்தலைமை மாதிரி. மாற்று இலட்சினையோ.

இன்டைக்கு எல்லா நாடுகளிலும் மாவீரர்நாளுக்கு வந்த மக்கள் கூட்டம் சிங்களத்துக்கு மட்டுமல்லாமல் ராம்,கே.பி போன்ற நியமன தலைவர்களுக்கும்

சில செய்திகளை சொல்லியிருக்கு. சும்மா ..அறிக்கைமூலம் எவனும் தலைமைக்கு வரமூடியாது.

இந்த அறிக்கையை எழுதின உளவியல்ஆய்வு மனநோயாளிகள் கொஞ்சகாலமாக மக்களை குழப்பி அதில் மீன்பிடிக்க முயல்கின்றனர்.

புலுடாவுக்கும் வரவர ஒரு அளவில்லாமல் போச்சுது.

இந்த அறிக்கை ராமிடம் இருந்து வராமல் வரவேண்டியவர்களிடம் இருந்து வந்திருந்தால் கண்ணை மூடி ஏற்றுக்கொண்டிருப்போம்.

அறிக்கைகள் ஆயுதப் போராட்டம் அஸ்தமித்துப் போய் விட்டதென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஜனநாயக முறையில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர்கள் முனையவேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசுகளின் விருப்பப்படி இலங்கைத்தீவில் தமிழருக்குத் தாயகம் என்பதே இல்லாமல் போகும் நிலைதான் வரும்.

ஆயுதப் போராட்டம் வளியில் அல்லது ஜனநாயக வளியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதாயின் நாம் எமக்குள்ளான நாய்கடி பூனைகடி சண்டைகளை நிறுத்தி ஒற்றுமையாகவேண்டும். அது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட மாவீரர் தின அறிக்கை வந்துவிட்டது. அடுத்தவருடம் ஐம்பதாகலாம். போராளி ராம் கைதானது ஒரு வதந்தி என்றும் சொல்லப்படுகின்றது புலநாய்வுப்பிரிவு என்ற ஒன்று அவர் இலங்கைப்படைகள் வசம் என்றும் செல்லப்படுகின்றது. பொட்டம்மான் செத்துவிட்டார் என்றும் கைதாகிவிட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. பணம் அனுப்புவது காரணமாக காஸ்ரோ தரப்பைச் சார்ந்தவர்கள் ராமை கருணாவுடன் சேர்ந்து விட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. என்னும் ஏராளமான குளப்பங்கள். சிதைந்து சின்னாபின்னமான நிலை ஒன்றே தற்போது நிலவுகின்றது. புலிகளுக்குப் பின்னரான அரசியல் என்று ஒன்றும் இல்லை என்ற கூற்றே உண்மையானது. எவரையும் யாரும் இனி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே உண்மை. அது புறநிலை அரசானாலும் சரி என்னவானாலும் சரி இதுவே யதார்த்தம். இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான ஒழுங்குகளே மேற்கொள்ளப்படுகின்றது. ஆங்காங்கே கவிதை வெளியீடு புத்தக வெளியீடு கருத்து ஒன்று கூடல் என்ற சுய இன்ப நிகழ்வுகள் நடக்கின்றது. யாழ் வன்னிப் பாதைகள் திறந்து சனப்போக்குவரத்து சகஜமாகி புலம்பெயர் சனம் இலங்கைக்கு சாதராணமாக சென்றுவரும் நிலை வரும்வரை இவ்வாறான கூச்சல்கள் அதிகமாக இருக்கும். நாம் எமது தலைவிதியை தீர்மானிப்பவர்களாக வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. பிரபாகரன் காலம் அது குறித்த ஒரு நம்பிக்கையாக இருந்தது ஆனால் அந்தக் காலத்தை கடந்து வரலாறு தனது பயணத்தைத் தொடர்கின்றது.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.

(1) முதலாவதாக அவர் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரையில் பின் புலத்தில் குயில் கூவுவதுபோல ஒரு ஒலி எழுப்பப்பட்டு அவர் காட்டில் இருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்றுள்ளனர் சிலர். அவர் ஆற்றிய உரையின் 30 நிமிடமும், அந்தக் குயில் பின் புலத்தில் தொடர்ந்து ஒரே சீராகக் கூவிக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் குயில் கூவுவதை பதிவுசெய்து அதனை மீண்டும் மிண்டும் பின் புலத்தில் ஒலிபெருக்கியுள்ளனர் சிலர்.

(2) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒப்புக்கொள்ளும் அவர், இலங்கை இராணுவத்தின் இக் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய தோற்றப்பாட்டை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

(3) இனியும் எமது இலக்கான தமிழீழத்தை அடைய தொடர்ந்தும் போராடுவோம் என ஒரு இடத்தில் கூட அவர் கூறவில்லை. முடிவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறி முடித்துள்ளார்.

(4) உரையில் மே 17 ம் திகதி தன்னைத் தொடர்புகொண்ட தேசிய தலைவர் தன்னையே பொறுப்பை ஏற்று வழி நடத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படியாயின் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்களும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்மையே தலைவராக இருக்கும்படி தேசிய தலைவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனை நோக்கும் போது தேசிய தலைவர் அவர்கள் 2 பேரை விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கும் படி கூறியிருக்க மாட்டார். இரண்டில் ஒருவர் பொய்யுரைப்பது, புலனாகின்றது. கே.பி அவர்கள் தம்மை தலைவர் என பிரகடனப்படுத்தும் போது ராம் ஏன் எதிர்க்கவில்லை?

(5) தாமும் சில தளபதிகளும் காட்டில் காலூன்றி இருப்பதாகக் கூறும் ராம் அவர்கள் போராட்டத்தைப் பற்றியோ அல்லது வருங்கால நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் கூறாமல், புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் நிதியளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். காட்டில் காலூன்ற இவருக்கு நிதி அவசியமாக உள்ளதா? அதாவது பெரும் தொகையான நிதி?

(6) உரையில் தேசிய தலைவர் உறுதியாக இறுதிவரை போராடியதால் தான் மக்கள் தற்போது முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் என்பதுபோன்ற சாயலில் தனது உரையை நிகழ்த்தியது மட்டுமல்லாது, வெளி நாடுகள் வேகமாக வந்து உதவவேண்டும் என்றும் கோரியுள்ளார். அதாவது போராட்டம் ஏதும் இன்றி வெளிநாடு ஒன்று தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமாம்.

ராம் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இல்லை என்று ஒரு கணம் நாம் வைத்துக்கொண்டால் கூட, ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்படியான ஒருவரிடம் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு கையளிப்பது?. தேசிய தலைவர் ஒருபோதும் புலம்பெயர் மக்களிடம் நிதி உதவி கேட்டது இல்லை. மாறாக மக்களே மனமுவந்து நிதி அளித்தனர். காரணம் அங்கு நடைபெற்ற தாக்குதல்கள். இலங்கை இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம்.

தளபதிகளுடன் தாம் காட்டில் கால் பதித்துள்ளோம் என, ஏதோ இமயமலையில் கால் பதித்தது போல இவர் கூறுவதை எவரும் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருடன் இவர் சேர்ந்து இயங்குகிறார் அல்லது இயங்கவில்லை என்பதை விட இவர் போராட்டத்தை கொண்டு நடத்தக்கூடிய திறன் அற்றவர் என்பதே இன்றைய தினம் தெளிவாகியுள்ளது.

வாவ்வ்வ்வ்வ்வ்வ்....... சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி தராக்கியின் எழ்ய்த்துகளுக்கு!!

ஆயுதப் போராட்டம் வளியில் அல்லது ஜனநாயக வளியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதாயின் நாம் எமக்குள்ளான நாய்கடி பூனைகடி சண்டைகளை நிறுத்தி ஒற்றுமையாகவேண்டும். அது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட மாவீரர் தின அறிக்கை வந்துவிட்டது. அடுத்தவருடம் ஐம்பதாகலாம். போராளி ராம் கைதானது ஒரு வதந்தி என்றும் சொல்லப்படுகின்றது புலநாய்வுப்பிரிவு என்ற ஒன்று அவர் இலங்கைப்படைகள் வசம் என்றும் செல்லப்படுகின்றது. பொட்டம்மான் செத்துவிட்டார் என்றும் கைதாகிவிட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. பணம் அனுப்புவது காரணமாக காஸ்ரோ தரப்பைச் சார்ந்தவர்கள் ராமை கருணாவுடன் சேர்ந்து விட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. என்னும் ஏராளமான குளப்பங்கள். சிதைந்து சின்னாபின்னமான நிலை ஒன்றே தற்போது நிலவுகின்றது. புலிகளுக்குப் பின்னரான அரசியல் என்று ஒன்றும் இல்லை என்ற கூற்றே உண்மையானது. எவரையும் யாரும் இனி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே உண்மை. அது புறநிலை அரசானாலும் சரி என்னவானாலும் சரி இதுவே யதார்த்தம். இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான ஒழுங்குகளே மேற்கொள்ளப்படுகின்றது. ஆங்காங்கே கவிதை வெளியீடு புத்தக வெளியீடு கருத்து ஒன்று கூடல் என்ற சுய இன்ப நிகழ்வுகள் நடக்கின்றது. யாழ் வன்னிப் பாதைகள் திறந்து சனப்போக்குவரத்து சகஜமாகி புலம்பெயர் சனம் இலங்கைக்கு சாதராணமாக சென்றுவரும் நிலை வரும்வரை இவ்வாறான கூச்சல்கள் அதிகமாக இருக்கும். நாம் எமது தலைவிதியை தீர்மானிப்பவர்களாக வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. பிரபாகரன் காலம் அது குறித்த ஒரு நம்பிக்கையாக இருந்தது ஆனால் அந்தக் காலத்தை கடந்து வரலாறு தனது பயணத்தைத் தொடர்கின்றது.

இதை ஏற்க கடினமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்....

கடந்த இருமாதங்களாக நானும் அங்கிருந்து இதுகளை யஎயவாயயniவாவாநn.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், எனது கருத்து சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by தமிழ் சிறி

மே மாதம் 17க்குப்பிறகு கே பி விட்ட அறிக்கையின் போது அவ்வறிக்கையை நம்ப மாட்டோம், கார்த்திகை 27 ம் திகதி வார தலைவரின் அறிக்கையைத்தான் நம்புவோம் என்று எழுதினீர்கள். இப்ப தலைவர் 4,5 வருடங்களின் பின்பு வருவார். அப்ப தான் நம்புவோம் எண்கிறீர்கள். சரி 10 வருடம் சென்ற பின்பு தலவரின் அறிக்கை வராவிட்டால் என்ன சொல்லுவீர்கள்?. மே 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்து வந்தவ்ர்களின் தகவல்களின் படி தலைவர் அங்கு முள்ளிவாய்க்காலில் இருந்திருக்கிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது என்று சொல்கிறார்க்ள். ஆனால் சிறிலங்கா அரசின் நச்சுவீச்சினால் அதன் பிற்கு அங்கிருந்தவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் தப்பி இருக்கிறார்கள். தப்பியவர்களில் தலைவரும் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையேன்ரால் யார் மாவீரர் உரையை தருவது?. அப்படி ஒருவர் தந்தால் ஏற்றுக்கொள்ளுவோமா? வேண்டாமா?.

மேலே உள்ள அறிக்கை ராமினால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். இல்லை வேறு ஒருவரினால் தயாரிக்கப்பட்ட பொய்யான அறிக்கையாக இருக்கலாம்.இங்கு சிலர் சொல்கிறார்கள் ராம் சிங்களவனுடன் சேர்ந்து விட்டார் என்று. அவ்ர்களுக்கு எப்படித் தெரியும். சிங்களவனுடன் ஆர் இருக்கிறார்கள் என்று எப்படி தெரியும். போய்ப் பார்த்தீர்களா?. அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் சிங்களவனுடன் இருக்கிறார்கள.தெரியாமல் தளபதி ஒருவரைத் துரோகி என்று சொல்ல வேண்டாம். சிங்களவனின் விருப்பத்துக்கு துணை போக வேண்டாம்.

தன்னையும் குழப்பி பிறரையும் குழப்பி குழப்பத்திற்கே குழப்பம் வரவைக்கும் தமிழர்களை குழப்பத்திலிருந்து விடுவிக்கவே முடியாது.

தலைவருடைய மாவீரர் உரை வராதென்று அனுமானிப்பதுக்கு ஒன்றும் ரோக்கர் சயன்ஸ் தேவையில்லை.

எந்த ஒரு காரணத்தினால் தலைவர் முல்லியவாலமயயடடை இருந்து சென்றாரோ அதே சூழலில் இருக்கும்

இன்றைய நிலையில் அவர் வருவார் என்று நீங்கள் எப்படி எதிபார்க்கலாம்?

இது தொரோகிகளின் காலம்..... காலம் மாறும்

தலைவன் வருவான்.

ராம் ஏன் மாவீரர் தின உரையில் நான், நான் என்று ஒருமையில் கூறுகிரார். பன்மையில் நாங்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த முறை மாவீரர் தின உரையை நாங்கள் என்று எழுதி வாசித்தால் "புலி"களுடைய உரை போன்று இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் வளியில் அல்லது ஜனநாயக வளியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதாயின் நாம் எமக்குள்ளான நாய்கடி பூனைகடி சண்டைகளை நிறுத்தி ஒற்றுமையாகவேண்டும். அது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட மாவீரர் தின அறிக்கை வந்துவிட்டது. அடுத்தவருடம் ஐம்பதாகலாம். போராளி ராம் கைதானது ஒரு வதந்தி என்றும் சொல்லப்படுகின்றது புலநாய்வுப்பிரிவு என்ற ஒன்று அவர் இலங்கைப்படைகள் வசம் என்றும் செல்லப்படுகின்றது. பொட்டம்மான் செத்துவிட்டார் என்றும் கைதாகிவிட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. பணம் அனுப்புவது காரணமாக காஸ்ரோ தரப்பைச் சார்ந்தவர்கள் ராமை கருணாவுடன் சேர்ந்து விட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. என்னும் ஏராளமான குளப்பங்கள். சிதைந்து சின்னாபின்னமான நிலை ஒன்றே தற்போது நிலவுகின்றது. புலிகளுக்குப் பின்னரான அரசியல் என்று ஒன்றும் இல்லை என்ற கூற்றே உண்மையானது. எவரையும் யாரும் இனி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே உண்மை. அது புறநிலை அரசானாலும் சரி என்னவானாலும் சரி இதுவே யதார்த்தம். இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான ஒழுங்குகளே மேற்கொள்ளப்படுகின்றது. ஆங்காங்கே கவிதை வெளியீடு புத்தக வெளியீடு கருத்து ஒன்று கூடல் என்ற சுய இன்ப நிகழ்வுகள் நடக்கின்றது. யாழ் வன்னிப் பாதைகள் திறந்து சனப்போக்குவரத்து சகஜமாகி புலம்பெயர் சனம் இலங்கைக்கு சாதராணமாக சென்றுவரும் நிலை வரும்வரை இவ்வாறான கூச்சல்கள் அதிகமாக இருக்கும். நாம் எமது தலைவிதியை தீர்மானிப்பவர்களாக வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. பிரபாகரன் காலம் அது குறித்த ஒரு நம்பிக்கையாக இருந்தது ஆனால் அந்தக் காலத்தை கடந்து வரலாறு தனது பயணத்தைத் தொடர்கின்றது.

உண்மைதான். குழப்பங்களைத் தெளிவுபடுத்த எவரும் முன்வரப்போவதில்லை. எனினும் மக்கள் தற்போதும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகத்தான் உள்ளனர் என்பதை நேற்றைய சனத்திரள் காட்டியது. ஆனாலும் மக்களின் ஆதரவுடன் அரசியல் உரிமையை வென்றெடுக்க சரியான தலைமைகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ராமின் அறிக்கையில் மகிந்த குடும்பம் / சரத் பொன்சேகா பற்றி ஒரு வார்த்தையில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் மே 19க்குபிறகு குழப்பமான அறிக்கைகளைவிட்டு குழம்பிப்போய் இருக்கிறார்.

ராஜதந்திரப்போர் என்று வெளிக்கிட்டபிறகு ராம் விடும் அறிக்கைகளையும் ஒருவிதமான ராஜதந்திரம் என்றே எடுக்கவேண்டும்.

இந்தியாவுடன் இணைந்து தமிழீழம் என்று கே.பி அறிக்கைவிட்டால் அது ராஜதந்திரம்!

இந்தியஉளவுப்பிரிவுடன் நாம் தொடர்பில் இருக்கிறோம் என்று கே.பி சொன்னால் அதுவும் ராஜதந்திரம்!!

வருகின்ற சிங்கள சனாதிபதி தேர்தலில் மகிந்தவை ஆதரிக்கவேண்டும் என்று பிரித்தானிய தமிழர்பேரவை சொன்னால் அட அதுவும் ராஜதந்திரமே!!!

திருச்சியிலும் சென்னை வளசரவாக்கத்திலும் ரோ அதிகாரி தயவில் வீட்டுஉறுதி வாங்கிய பொறுப்பாளர்களின் செயலும் ராஜதந்திரம்தான்!!!

நடந்தால் ராஜதந்திரம். இருந்தால் ராஜதந்திரம்..

களவெடுத்தால் ராஜதந்திரம்!

அப்ப ராம் அவர்களின் அறிக்கையும் ஒருபுதுவிதமான ராஜதந்திரமே!

நேற்றைய ஜீரிவி யின் செய்தியில். மாவீரர் நாளில் வெளியாகிய அறிக்கைகள் தொடர்பான செய்தியில், விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தால் இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும், நாடு கடந்த அரசு அமைக்கவிருக்கும் ருத்திரகுமார் மாவீரர் கனவுகளை நிறைவேற்றுவோம் என்று அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் செய்தி வாசித்தார்கள்.

தமிழ் மக்களிடையே தமிழ்த்தேசிய அறிவையும், உணர்வையும் ஊட்டுவதற்குத் தவறி, ஊது குழல்கலாக செயற்பட்ட ஊடகங்கள். மாவீரர்களின் உயிர்க்கொடையால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்த்தேசிய உணர்வையும், எழுச்சியையும் சிதைப்பதற்கு, தமிழ்த்தேசிய விடுதலை அமைப்புக்குள் பதுங்கியிருந்த குழு நிலைவாதிகளின் ஆளுகைக்குள் சிக்குப்பட்டு, தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுப்பதாக வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு மறைமுகமாக தமிழ்த்தேசிய எழுச்சியின் சிதைவிற்குத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் விட்ட அறிக்கையெண்டுகூட சொல்லமுடியாதவர்களுக்கு.................. :(:unsure:

Edited by Mathivathanang

புதினப்பலகை இணையத்தளத்தில், (புதினம்) மாவீரர் நாள் தொடர்பாக வந்த கட்டுறையில்....

தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன. முன் எப்போதையும் விட இந்த ஆண்டின் மாவீரர் நாள் வெளிப்படையான பல காரணங்களுக்காக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. ஆனாலும் - உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த ஆண்டின் மாவீரர் நாள் தனது மகிமையையும் புனிதத்தன்மையையும் இழக்காதிருக்குமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுகின்றது.

தமிழ் பேசும் மக்களினது அரசியற் சுதந்திரத்திற்காகவும்இ தமிழர் தாயகத்தினது விடுதலைக்காகவும் கடந்த 35 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடி - தலைவர் வே. பிரபாகரன் உட்பட 35இ000-ற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.

பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆதாரங்கள் சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்படவில்லை: இந்திய ஊடகம்

போர் நிறைவுபெற்று ஆறுமாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை சிறீலங்கா அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தவில்லை என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1991 ஆம் ஆண்டு மே மாதம் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த மே மாதம் மரணமடைந்ததாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் இன்று வரை உத்தியோகபூர்வமாக அதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.eelamenews.com/

Edited by kalaivani

உண்மைதான். குழப்பங்களைத் தெளிவுபடுத்த எவரும் முன்வரப்போவதில்லை. எனினும் மக்கள் தற்போதும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகத்தான் உள்ளனர் என்பதை நேற்றைய சனத்திரள் காட்டியது. ஆனாலும் மக்களின் ஆதரவுடன் அரசியல் உரிமையை வென்றெடுக்க சரியான தலைமைகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ராமின் அறிக்கையில் மகிந்த குடும்பம் / சரத் பொன்சேகா பற்றி ஒரு வார்த்தையில்லை!

சிங்களவன் தமிழன் மாதிரி எங்கப்பன் குதிருக்கு உள்ளே என்று கூறமாட்டான்...

சிங்கள ஊதுகுழல்கள் தமிழ் கற்றும், தமிழ் பிறப்பை கேவலப்படுத்தியும் இப்படி எழுதுகின்றன.

இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.

இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.

இந்த அறிக்கையில் சிங்கள படையினரின் நிர்பந்தத்தில் அவர் இருக்கிறார் அல்லது படையினருடன் சேர்ந்து இயங்குகிறார் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர். எந்த வசனம் உமக்கு அப்படியொரு விளக்கததைத் தருகிறது?

ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உன்ர கருத்தை உண்மையென்று நிறுவ பொய்களை அவிடடு விடவேண்டாம். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று முடிந்த பின்னர், செல்வராசா பத்மநாதன் அவர்களின் வழிகாட்டலில் போராட்டம் தொடரும் எண்டும், புலம்பெயர்ந்த மக்களின் ஒத்துழைப்பைக் கேட்டும் ஒற்றுமையை வலியுறுத்தியும் கேணல் ராம் அவர்கள் தனது கையால் எழுதிய அறிக்கை யாழ். உட்பட பல ஊடகங்களில் வந்தன. செல்வராசா பத்மநாதன் அவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறைவேற்றுச் செயலராக நியமித்து கேணல் ராம் மற்றும் கேணல் சுரேஸ் ஆகியொரினால் அறிக்கை வெளியிடப்பட்டது. கேபி அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் கூட கேணல் ராமின் பெயரிலேயே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முழுப்புசணிக்காயை சோற்றுக்கை புதைக்ககிற வேலை வேண்டாம்.

சிங்கள அரசு நடத்துற உளவியல் போரில் தளபதி ராம் ஓர் ஆயுதமாகப்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக உமக்குத் தெரியுறதை எமக்கும் கொஞ்சம் காட்டும் பார்ப்பம்.

ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

இந்த அறிக்கை புலம்பெயர்ந்தவர்களின் எழுச்சியை அடக்க அல்லது ராஜபக்ச மற்றும் அவரின் கூட்டாளிகளை போர் குற்றவளிகாக அறவிக்க வேண்டுமென்ற குரலை திசை திருப்ப என்ன சொல்லப்பட்டிருக்கு? நீயேன் இல்லாத பொய்களையெல்லாம் அவிட்டு விடுகிறாய்??

புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

அப்படிச் சொல்லுற அதிகாரத்தை உனக்கு யார் தந்தது?? 25 ஆண்டுகளாய் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்திருக்கும் தளபதிக்கோ அல்லது அமைப்பிற்கா உழைத்துக் கொண்டிருப்பவர்களிற்கோ அதிகாரம் கிடையாதெனச் சொல்லுற உரிமை எந்த ஒட்டுண்ணிக்கும் வழங்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒப்புக்கொள்ளும் அவர், இலங்கை இராணுவத்தின் இக் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய தோற்றப்பாட்டை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதும் சிங்கள படையினரின் கூற்று அந்தக் கூற்றை தலைமைச் செயலகத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனரே! அவர்களும் சிங்கள புலனாய்வுத்துறையினருக்காக உழைக்கிறார்களா?

தன்னை வழிநடத்திய தலைவனுக்கு, மாவீரர்களுக்குரிய மதிப்பை அவர்களிற்கு வழங்க வேண்டுமென்று கற்றுத்தந்த தலைவனுக்கு தலைவரின் வீரச்சாவை உண்மையாக எண்ணி அல்லது உறுதிப்படுத்தி அந்தத் தளபதி மதிப்பளிக்க முற்படுகிறார். ஆனால் தலைவரிற்கு எந்த மதிப்பும் வணக்கவும் வழங்கக்கூடாது என்பதில் சிங்களத் தரப்பு எப்படிச் செயற்படுகிறதோ அதைவிட மேலாக எம்மவர்கள் செயற்படுகிறார்கள். (எடுத்துக்காட்டாக நீரே இங்கே எமது இனத்தின் தலைவரை, எமது நாட்டின் தலைவரை, எமது மக்களின் விடியலுக்காக எவ்வளவோ தியாகங்களை புரிந்து போராடிய தலைவரை தேசியத் தலைவர் என்று குறிப்பிடமாமல் பிரபாகரன் என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் என்றும் குறிப்பிட்டு சிறுமைப்படுத்துகிறீரே)

இனியும் எமது இலக்கான தமிழீழத்தை அடைய தொடர்ந்தும் போராடுவோம் என ஒரு இடத்தில் கூட அவர் கூறவில்லை. முடிவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறி முடித்துள்ளார்.

தேசியத் தலைவரின் எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுப்போம் என்றும் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம் என்றும் சொல்லியிருக்கிறாரே! தேசியத் தலைவரின் எண்ணம் தமிழீழ விடிவு என்று உமக்குத் தெரியாதோ? மாவீரர்கள் கனவு தமிழீழத் தாயகம் என்று என்று உமக்குத் தெரியாதோ? ஒரு புலி 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று சொல்லியிருக்கிறார். அதற்குரிய பொருள் என்னவென்று உன்ர மரமண்டைக்கு எறவில்லையா?

உரையில் மே 17 ம் திகதி தன்னைத் தொடர்புகொண்ட தேசிய தலைவர் தன்னையே பொறுப்பை ஏற்று வழி நடத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படியாயின் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்களும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்மையே தலைவராக இருக்கும்படி தேசிய தலைவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனை நோக்கும் போது தேசிய தலைவர் அவர்கள் 2 பேரை விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கும் படி கூறியிருக்க மாட்டார். இரண்டில் ஒருவர் பொய்யுரைப்பது, புலனாகின்றது. கே.பி அவர்கள் தம்மை தலைவர் என பிரகடனப்படுத்தும் போது ராம் ஏன் எதிர்க்கவில்லை?

வடிவா அறிக்கையை வாசித்துப் பார். வழிநடத்தச் சொன்னதாக அறிக்கையில் சொல்லப்படவில்லை. எமது போராட்டத்தின் தொடர்ச்சியையும் மாவீரர்கள் விட்டுச் சென்ற பணியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றே தலைவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பியை தலைவராக அல்ல விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயலராகத்தான் அறிவித்தார்கள். அறவித்தவர்களில் ஒருவர் தளபதி சுரேஸ் மற்றையவர் இதே கேணல் ராம் தான்.

தாமும் சில தளபதிகளும் காட்டில் காலூன்றி இருப்பதாகக் கூறும் ராம் அவர்கள் போராட்டத்தைப் பற்றியோ அல்லது வருங்கால நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் கூறாமல், புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் நிதியளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். காட்டில் காலூன்ற இவருக்கு நிதி அவசியமாக உள்ளதா? அதாவது பெரும் தொகையான நிதி?

தலைவரின் எண்ணங்களிற்குச் செயல்வடிவம் கொடுப்போம், மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என்று தெரிவித்துள்ளாரே!

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளில் வருங்கால நடவடிக்கைகள் எதுவும் பட்டியலிடப்படுவதில்லை. ராம் அவர்கள் என்னென்ன செய்யப்போகிறார்கள் என்பதை சிங்களத் தரப்பால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆதங்கத்தில்தானே நீர் இதை எழுதியுள்ளீரோ?.

நல்ல காலம் காட்டில் காலுன்ற கால் காணுமே எதற்கு இவர்களிற்குச் சாப்பாடு என்று கேட்காமல் விட்டுவிட்டீரே! அவர் தனக்கு காட்டுக்கை காசு அனுப்புங்கோ எண்டு கேட்கவில்லை. முன்னர் வழங்கிய பங்களிப்புக்கள் போல தொடர்ந்து வழங்குங்கோ எண்டு சொல்லியிருக்கிறார். அதாவது புலம்பெயர்ந்தவர்கள் முன்னர் அனைத்துலக ரீதியில் செயற்பட்ட செயற்பாட்டார்களிற்கு நிதி உள்ளிட்ட பங்களிப்புக்களை வழங்கியது போன்று இனியும் வழங்குங்கள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

அதாவது போராட்டம் ஏதும் இன்றி வெளிநாடு ஒன்று தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமாம்.

போராடி உயிர்களை இழந்து, உடல் உறுப்புக்களை இழந்து, சொத்தழிவுகளை எதிர்கொண்டு நாம் வென்றெடுக்கும் அந்தத் தீர்வு இந்த அழிவுகள் இல்லாமல் கிடைக்க, உலக நாடுகள் உதவவேண்டும் என்று தளபதி ராம் கோரிக்கை விடுக்கிறார். தமிழரின் உடல்கள் வெடிகணைகளால் சிதைந்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறதும், கண்ணுக்கு முன்னாலையே தமது உறவுகளை இழந்து எமது மக்கள் அலறு காட்சிகள் கொஞ்சக் காலமாக உங்களைப் போன்றவர்களால் பார்க்க முடியாமல் நல்ல அவஸ்த்தைப் படுகிறீர்கள் எண்டு விளங்குது. போராட்டமில்லாமல் தீர்வா! வேண்டவே வேண்டாம். எங்கட சனம் செத்துப்போறதை நாங்கள் வெளிநாட்டிலை பாதுகாப்பாக இருந்துபார்த்து ரசிக்க வேணும். அதுதான உங்களிற்கு வேணும்.!

ராம் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இல்லை என்று ஒரு கணம் நாம் வைத்துக்கொண்டால் கூட, ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்படியான ஒருவரிடம் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு கையளிப்பது?.

இதன்மூலம் நீர் உமது நோக்கத்தை தெளிவாக்கிவிட்டீர். இராணுவத்துடன் இருந்தாலும் ராம் அவர்கள் புறக்கணிக்கபட வேண்டியவர். அப்படி இல்லாது சுயமாக நின்றாலும் அவர் புறக்கணிக்கப்படவேண்டியவர். இதைத்தானே சொல்லுறீர்? தமிழீழ தாயகத்தில் இருக்கும் விடுதலைப் புலிகளின் மிஞ்சிய உறுப்பினர்களால் போராட்டம் இனி முன்னெடுக்கப்படக் கூடாது. இனித்தமிழர்கள் தலையெடுக்கவே கூடாது. இதுதான் சிங்களப் பேரினவாத்தின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டிற்கு நன்றாக ஒத்துழைப்புக் கொடுக்கிறீர். தேசியத் தலைவர் அவர்களின் வீட்டில் முன் சென்று எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள் எண்டு எமது மக்கள் கோரிக்கை வைக்கவில்லை. மாறாக தலைவர் அவர்களே போராட்டத்தை கையில் எடுத்தார். வெற்றிகரமாக முன்னெடுத்தார். தமிழர்கள் அவருக்கு ஒத்துழைப்பை மாத்திரம் கொடுத்தார்கள். இப்படித்தான் உலகில்; போராட்டங்கள், போராடும் தலைவர்களால், அமைப்புக்களால் தலைமையேற்று செய்யப்பட்டன.

ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

இதையெல்லாம் எங்கையையா கண்டு பிடிச்சீர். ஆரேனும் உமக்கு உளவு பார்க்கிற ஆரையும் தளபதி ராமோடை வைச்சிருக்கிறீரோ.

தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோர் படையினரின் படையினரின் பிடியில் இல்லையென்றால் அவர்களே தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வல்லமை படைத்தவர்கள்.

தேசிய தலைவர் ஒருபோதும் புலம்பெயர் மக்களிடம் நிதி உதவி கேட்டது இல்லை. மாறாக மக்களே மனமுவந்து நிதி அளித்தனர். காரணம் அங்கு நடைபெற்ற தாக்குதல்கள். இலங்கை இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம்.

தேசியத் தலைவர் புலம்பெயர் மக்களிடம் கடந்த ஆண்டு ஏதோ கேட்டுள்ளார். என்னெண்டு ஒருக்கா வாசித்துப்பாரும்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

தளபதிகளுடன் தாம் காட்டில் கால் பதித்துள்ளோம் என, ஏதோ இமயமலையில் கால் பதித்தது போல இவர் கூறுவதை எவரும் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருடன் இவர் சேர்ந்து இயங்குகிறார் அல்லது இயங்கவில்லை என்பதை விட இவர் போராட்டத்தை கொண்டு நடத்தக்கூடிய திறன் அற்றவர் என்பதே இன்றைய தினம் தெளிவாகியுள்ளது.

தளபதி ராம் அவர்களின் செயற்பாடுகளை முடக்க வேணும். இனிப்போராட்டம் தலையெடுக்கக்கூடாது. அதுக்கு அவருக்குக்கிடைக்கிற உதவிகள் தடுக்கப்படவேணும். அதற்காக அவரிற்கு துரோகிப்பட்டம். அது சரிப்பட்டுவரவில்லை என்றால் (தேசியத் தலைவர் அவர்களால் கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட) மூத்த தளபதி ஒருவருக்கும் போராட்டத்தை வழிநடத்துறதுக்கு லாய்க்கில்லை அவரை ஒதுக்குவோம். சிங்களப் புலனாய்வாளர்களின் வேலைகளை நன்றாகத் திறம்படச் செய்கிறார்கள். யாழ். களம் இவர்களிற்கு நன்றாக ஒத்துழைக்கிறதா? அல்லது மட்டுறுத்துனர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து நித்திரை கொள்கிறார்களா?

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.