Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு சின்ன silly question?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெல்லாம் பெரிசா ஒன்றுமில்ல. நான் ரெஸ்ட் ரியுப்புக்கு குறியிடுவது போல.. Baby xx1, baby xy1 இப்படிப் பெயரிடுவேன் அல்லது டி என் ஏ பிக்கர் பிரிட்டை பார்கோட் போல பிள்ளையின் உடலில் பதித்துவிட வேண்டியதுதான். ஒரு பிரச்சனையும் இல்லை.

பழைய கால மனிதன் தான் தனக்கென்று இயற்றிய விதிமுறைகளால் தான் நவீன உலகில் எங்கும் பிரச்சனை. அதுகளைக் கடந்து போக வேண்டிய இடங்களில் போய் புதியதை நிர்மாணிக்க வேண்டியதும் அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. ஒரே லெனினிசும்.. லிங்கனிசுமும் கதைச்சுக் கொண்டு அரசியல் செய்வது சாத்தியப்படாது. ஜனநாயகமும் ஒரு நாள் சலித்துப் போகும். மாற்றங்கள் இன்றிய உலக ஓட்டம் சாத்தியமில்லை..!

கலியாணமும் கூட இந்த உலகில் ஒருத்தியை கட்டிக்கிட்டு.. அல்லல்படுவதாகி விட்டது. அது செம போர் அடிக்கிற விடயம். அதையும் தாண்டி.. மனிதன் சிந்திக்க வேண்டியவனாகி விட்டான். ஒரே மனிசியையும் தான் எத்தனை நாளைக்கு பார்த்துக்கிட்டு காலந்தள்ளுறாய்ங்களோ...! செம போரா இல்ல. மைதானத்தில் ஒரு விளையாட்டையே திருப்பி திருப்பி விளையாட சலித்துவிடுகிறது. ஆனால்.. இந்த இந்திய உபகண்டத் தம்பதிகள் எப்படித்தான்...???! :):D

உதுக்குத்தான் நாங்கள் இயன்றளவு மைதானத்தை மாற்றாமல் விளையாட்டை மாத்தி மாத்தி

விளையாடுறனாங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை ஒரு ஆணோ,பெண்ணோ தனது பெயரைத் தானே முதல் பெயராகவும்,[first name]ஆணாயின் அவர்களது தந்தை பெயரையோ அல்லது பெண்ணாயின் அவர்களது தந்தை பெயரயோ அல்லது கணவர் பெயரைத் தானே குடும்ப பெயராய்[family name] போட வேண்டும்.

உதாரணத்திற்கு பரிமளம் கந்தையா[தகப்பன் பெயர்] என்றால் திருமணத்திற்கு பிறகு பரிமளம் குப்புசாமி எனத் தானே எழுத வேண்டும் அதை விடுத்து பரிமளம் கந்தையா குப்புசாமி என்பது சரியா? பரிமளத்தின் மகனது பெயர் பொன்னையா என்றால் பொன்னையா எப்படி தனது பெயரை பதிவார் பொன்னையா கந்தையா குப்புசாமி என்றா...பொன்னையாவுக்கு ஆண்மகன் என்றால் அவர் தன் பெயரை எப்படி பதிவார்...

கிரிஸ்தவர்கள் தானே ஓரே பெயரை வைத்து இருப்பார்கள்[ஜேம்ஸ் வசந்தன்,ஜேம்ஸ் பீட்டர்] நாங்கள் ஒரே பெயரை பரம்பரை பரம்பரையாய் வைக்கிறது இல்லை தானே...

இங்கு லண்ட‌னிலே சில பேர் மனைவியின் தந்தையின் பேரிலே குழந்தையை பதிந்து இருப்பார்கள் கார‌ண‌ம் தானும் த‌ன் குழ்ந்தைகளூம் த‌னியே எனச் சொல்லி அர‌சு உதவிப் பண‌ம் எடுப்பதற்காகும்.இதைத் தவிர‌ வேறு கார‌ண‌ம் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Pழளவநன வுழனயலஇ 07:32 Pஆ

நெனரமமயடயிழழஎயnஇ ழn 27 னுநஉநஅடிநச 2009 - 01:33 Pஆஇ ளயனை:

அப்படியெல்லாம் பெரிசா ஒன்றுமில்ல. நான் ரெஸ்ட் ரியுப்புக்கு குறியிடுவது போல.. டீயடில ஒஒ1இ டியடில ஒல1 இப்படிப் பெயரிடுவேன் அல்லது டி என் ஏ பிக்கர் பிரிட்டை பார்கோட் போல பிள்ளையின் உடலில் பதித்துவிட வேண்டியதுதான். ஒரு பிரச்சனையும் இல்லை.

பழைய கால மனிதன் தான் தனக்கென்று இயற்றிய விதிமுறைகளால் தான் நவீன உலகில் எங்கும் பிரச்சனை. அதுகளைக் கடந்து போக வேண்டிய இடங்களில் போய் புதியதை நிர்மாணிக்க வேண்டியதும் அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. ஒரே லெனினிசும்.. லிங்கனிசுமும் கதைச்சுக் கொண்டு அரசியல் செய்வது சாத்தியப்படாது. ஜனநாயகமும் ஒரு நாள் சலித்துப் போகும். மாற்றங்கள் இன்றிய உலக ஓட்டம் சாத்தியமில்லை..!

கலியாணமும் கூட இந்த உலகில் ஒருத்தியை கட்டிக்கிட்டு.. அல்லல்படுவதாகி விட்டது. அது செம போர் அடிக்கிற விடயம். அதையும் தாண்டி.. மனிதன் சிந்திக்க வேண்டியவனாகி விட்டான். ஒரே மனிசியையும் தான் எத்தனை நாளைக்கு பார்த்துக்கிட்டு காலந்தள்ளுறாய்ங்களோ...! செம போரா இல்ல. மைதானத்தில் ஒரு விளையாட்டையே திருப்பி திருப்பி விளையாட சலித்துவிடுகிறது. ஆனால்.. இந்த இந்திய உபகண்டத் தம்பதிகள் எப்படித்தான்...???!

எல்லா ஆசையையும் வைச்சுக் கொண்டு ஒண்டிலும் விருப்ப மில்லை என்று சொல்லிறவர் பிடிபட்டுப் போயிட்டார்.பிள்ளைக்கு என்ன பேர் வைக்கிறதெண்டு இப்பவே பிளான் பண்ணிற ஆள் இதுவரை கதைச்சதெல்லாம் என்ன பொய்யா?ரெஸ்ரிய+ப் பேபியைப் பற்றி இப்பவே சிந்திக்கிறது கொஞ்சம் ஓவர் .கொஞ்சமாவது முயற்சி பண்ணிற யோசனை இல்லையா?சரியான சேhம்பேறி போல

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் மலர் என்ற பெயரை , உதாரணமாக எடுத்தனீர்கள்.

நெடுக்ஸ்,மச்சான், கு.சா. போன்றவர்களை உசுப்பேத்தவா ? :D:)

ஆகா.. கோர்த்து விடுறதிலேயே குறியா இருக்கிறாங்களேய்யா..! :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது நீங்கள் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாறக்கூடியது

FRANCEஇல்

NOM.......

PRENOM......

என்று தான் பதிவார்கள்

PRENOM......மாறக்கூடியது

NOM.......மாறாதது

நான் இந்த நாட்டு சட்டப்படிதான் வாழ்கிறேன்

பதிந்துள்ளேன்

ஆரம்ப காலத்தில்

பிரான்சிலிருந்து ஒலிபரப்பும் ரேடியோவில் ஒருவரைக்கூப்பிட்டு விளக்கம் தந்தார்கள்

அவரும் தங்களைப்போல் தான் தனது பெயரையே மாறாத பெயராக பதிந்துவிட்டிருந்தார்

அப்படியே மற்றவர்களும் செய்யவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்

தான் வந்தபோது இதை உத்தேசித்தே பெயர் வைத்ததாகவும் சொன்னார்

அதற்கு அவர் வைத்த உதாரணம்

தனது மனைவி

எப்படி தனது தந்தையின் பெயரில் அழைக்கப்படலாம் என்பது...

நான் அவருடன் ஒத்துவரவில்லை

நான் அவருக்கு சொன்னது

நீங்கள் பிளான் பண்ணி இங்கு வந்தவர்

நாங்கள் அகதியாக ஓடிவந்தவர்கள் எமக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கவில்லை

எங்காவது உட்கார இடம் கிடைத்தால் சரி என்று உட்காந்துவிட்டோம்

இது இங்க உள்ள முறை

அதை உங்களது மனைவி புரிந்து கொள்வார்

அதைவிட உமது அப்பா இங்கு இல்லை

அதனால் வெட்கப்பட இடமில்லை

ஆனால் எனது மகனின் மனைவி எனது பெயரால் என் முன்னாலேயே அழைக்கப்படப்போகின்றாள்

அதைவிட இது கனகாலத்திற்கு நடக்கப்போகின்றது என்று தொடங்க அவர்கள் எனது பேச்சை துண்டித்துவிட்டனர்

நான் தங்களுக்கும் சொல்வது இதைத்தான்

எங்கே வாழப்போகின்றீர்கள் என்று முடிவு எடுத்துவிட்டால் அந்த நாட்டு சட்டத்துக்கும்

அந்த நாட்டில் கடைப்பிடிக்கப்படும் முறைக்கும் ஏற்ப பதியுங்கள்

ஊர் முறை என்று வெளிக்கிட்டால் பல சிக்கல்கள் வரும்

நான் இங்கு பலகாலமாக வாழ்கிறேன்

எனது பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கின்றார்கள்

அவர்களுக்கும் இங்குள்ள முறையை நான் பின்பற்றுவதால் பாடசாலையிலோ வெளியிலோ எந்த பிர்சினையுமில்லை

சங்கடங்களுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது நீங்கள் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாறக்கூடியது

FRANCEஇல்

NOM.......

PRENOM......

என்று தான் பதிவார்கள்

PRENOM......மாறக்கூடியது

NOM.......மாறாதது

நான் இந்த நாட்டு சட்டப்படிதான் வாழ்கிறேன்

பதிந்துள்ளேன்

ஆரம்ப காலத்தில்

பிரான்சிலிருந்து ஒலிபரப்பும் ரேடியோவில் ஒருவரைக்கூப்பிட்டு விளக்கம் தந்தார்கள்

அவரும் தங்களைப்போல் தான் தனது பெயரையே மாறாத பெயராக பதிந்துவிட்டிருந்தார்

அப்படியே மற்றவர்களும் செய்யவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்

தான் வந்தபோது இதை உத்தேசித்தே பெயர் வைத்ததாகவும் சொன்னார்

அதற்கு அவர் வைத்த உதாரணம்

தனது மனைவி

எப்படி தனது தந்தையின் பெயரில் அழைக்கப்படலாம் என்பது...

நான் அவருடன் ஒத்துவரவில்லை

நான் அவருக்கு சொன்னது

நீங்கள் பிளான் பண்ணி இங்கு வந்தவர்

நாங்கள் அகதியாக ஓடிவந்தவர்கள் எமக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கவில்லை

எங்காவது உட்கார இடம் கிடைத்தால் சரி என்று உட்காந்துவிட்டோம்

இது இங்க உள்ள முறை

அதை உங்களது மனைவி புரிந்து கொள்வார்

அதைவிட உமது அப்பா இங்கு இல்லை

அதனால் வெட்கப்பட இடமில்லை

ஆனால் எனது மகனின் மனைவி எனது பெயரால் என் முன்னாலேயே அழைக்கப்படப்போகின்றாள்

அதைவிட இது கனகாலத்திற்கு நடக்கப்போகின்றது என்று தொடங்க அவர்கள் எனது பேச்சை துண்டித்துவிட்டனர்

நான் தங்களுக்கும் சொல்வது இதைத்தான்

எங்கே வாழப்போகின்றீர்கள் என்று முடிவு எடுத்துவிட்டால் அந்த நாட்டு சட்டத்துக்கும்

அந்த நாட்டில் கடைப்பிடிக்கப்படும் முறைக்கும் ஏற்ப பதியுங்கள்

ஊர் முறை என்று வெளிக்கிட்டால் பல சிக்கல்கள் வரும்

நான் இங்கு பலகாலமாக வாழ்கிறேன்

எனது பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கின்றார்கள்

அவர்களுக்கும் இங்குள்ள முறையை நான் பின்பற்றுவதால் பாடசாலையிலோ வெளியிலோ எந்த பிர்சினையுமில்லை

சங்கடங்களுமில்லை

பெயர்தொடர்பான சிக்கல் யேர்மனியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போதும், குழந்தையொன்று பிறக்கும் போதும்.

இதனை நாம் இலகுவாக எதிர்கொள்வது மிகச் சுலபாமனது. அதாவது:

ஒருவரின் தந்தையின்பெயர்: அரியகுட்டி

விண்ணப்பதாரியின் பெயர்: அரியநாயகம் என்று வைத்துக் கொள்வோம்.

அரியநாயகத்தை Name (Surname/Nom)வாகவும், அரியகுட்டியை Vornamen(Given Names/ Prenom) ஆகவும் பதிந்துகொண்டால் தொடர்ந்து துணைவியினதோ, பிள்ளைகளதோ பெயர்களின் பதிவில் சிக்கலில்லை. மாறிப்பதிந்தவர் சில நேரங்களில், குடிவரவு திணைக்களம், குழந்தை பிறப்பு, வேறுநாடுகளில்(குறிப்பாக லண்டன்) குடியேறி விசா மாற்றுதல், போன்ற விடயங்களுக்குச் செல்லும்போதே சிக்கல்கள் தோற்றம் பெறுகிறது. அண்மையில் எனது உறவினர் ஒருவர் லண்டனில் இருந்து இங்கு வந்து இந்த மாற்றத்தை செய்தவர். எனவே இது போன்ற வீணான அலைச்சலையும் பணவிரயத்தையும் தவிர்க்க முன் கூட்டியே உரிய துறைசார் திணைக்களங்களோடு கலந்துரையாடி " அரியநாயகம்" என்ற பெயரை பதிந்தால், அந்தப் பெயரே தொடர்ந்து வரும். இல்லையேல் குழப்பமாகவே எல்லாப் பதிவுகளிலும் வரும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பிரச்சனையில்லை . எனது அப்பாவின் பெயரைத்தான் முதற்பெயராகவும்( First Name), எனது பெயரை இரண்டாவது பெயராகவும்(Surname) ஊரில இருந்தபோது உபயோகித்ததைப்போல எழுதுகிறேன். இங்கு திருமணம் முடித்தபின்பு பெண்கள் பலர் பெயர்களை மாற்றுவதில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களது தகப்பனாரின் பெயரை (Surname) வைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் பிறந்தபின்பு பிள்ளைக்கு விருப்பமான இரண்டாவது பெயரையும் (Surname) இங்கே அவுஸ்திரெலியாவில் இடலாம். அவுஸ்திரெலியாவைப் பொறுத்த மட்டில் First Name,Surname என்பது பிரச்சனையில்லை.

உ+ம் மயூரன் என்பவரின் தகப்பனாரின் பெயர் திருநாவூக்கரசர், மயூரனின் மகளின் பெயர் தமிழினி.

மயூரன் திருநாவூக்கரசர் அல்லது திருநாவூக்கரசர் மயூரன் என இங்கு அவுஸ்திரெலியாவில் தமிழர்கள் எழுதுகிறார்கள். அவரது மகளின் பெயரை, தமிழினி திருநாவூக்கரசர் அல்லது தமிழினி மயூரன் என்று எழுதுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தொடர்பான சிக்கல் யேர்மனியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போதும், குழந்தையொன்று பிறக்கும் போதும்.

இதனை நாம் இலகுவாக எதிர்கொள்வது மிகச் சுலபாமனது. அதாவது:

ஒருவரின் தந்தையின்பெயர்: அரியகுட்டி

விண்ணப்பதாரியின் பெயர்: அரியநாயகம் என்று வைத்துக் கொள்வோம்.

அரியநாயகத்தை Name (Surname/Nom)வாகவும், அரியகுட்டியை Vornamen(Given Names/ Prenom) ஆகவும் பதிந்துகொண்டால் தொடர்ந்து துணைவியினதோ, பிள்ளைகளதோ பெயர்களின் பதிவில் சிக்கலில்லை. துறைசார் திணைக்களங்களோடு கலந்துரையாடி " அரியநாயகம்" என்ற பெயரை பதிந்தால், அந்தப் பெயரே தொடர்ந்து வரும். இல்லையேல் குழப்பமாகவே எல்லாப் பதிவுகளிலும் வரும்.

குழப்பமாக இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இது ஒரு பிரச்சினையாக இருந்து இப்போது நிம்மதியாக உள்ளேன். எனக்கு ஐரோப்பிய கடவுச்சீட்டு தரும்போது முதற்பெயருக்கு பக்கத்தில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு. குடும்பப்பெயரில் என்னுடையதும் அப்பாவுடையதும் பெயர்களை எழுதியிருந்தார்கள். இதனால் ஒரு முறை விமான நிலையத்தில் பெரிய தர்க்கம் ஏற்பட்டது. முதற்பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என அவர்கள் கூற உங்கள் திணைக்களம் செய்த வேலைதான் இது என்று நான் வாதாட வேண்டி ஏற்பட்டது. நான் கனடாவால் வந்திறங்கியதும் செய்த முதல் வேலை எனது அப்பாவின் பெயரை முதற்பெயராகவும் எமது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் குடும்பப்பெயர் ஒரே மாதிரியாகவும் மாற்றிக் கொண்டேன். இப்போது நிம்மதியாக உள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையுடன் வாழ்பவர்கள் இப் பெயர்ப் பிரச்சினைக்கு கட்டாயம் ஒரு தீர்வைக் காண வேண்டும். இலங்கை குடியுரிமையுள்ளவர்கள் தொடர்ந்தும் முன்புபோல் இருந்து கொள்ளலாம் என்பதே எனது கருத்து.-

சுவிசில நமக்கு உந்த பிரச்சனை இல்லை அரசாங்கமே எல்லா இடத்திலையும் அறிவித்தல் விட்டிருக்கு உதாரணத்துக்கு கீழ உள்தை வாசியங்கோ ஓய் இது டொச்சில இருக்கு யாராவது மொழிபெயர்பாளரை வச்சு வாசியங்கோ ஆளை விடங்கோ

Das Hindu-Recht kennt für den tamilischen Bevölkerungsteil weder Vor- noch Familiennamen. Der Vorname des Vaters wird

automatisch zum Familiennamen des Kindes. Die Ehefrau nimmt bei der Heirat den Vornamen des Ehemannes als neuen Familiennamen

an (Optionserklärung nötig).

Sind zwei Namen vorhanden, dann gibt der erste gemäss Geburtsurkunde den ganz persönlichen Eigennamen, der zweite den

Namen des Vaters des Betroffenen an. In solchen Fällen wird grundsätzlich der Eigenname des Vaters zum Familiennamen.

Probleme entstehen bei der Umsetzung von tamilischen oder singhalesischen Schriftzeichen in die lateinische Schrift. Einzelne

Buchstaben können auf verschiedene Weise geschrieben werden (z.B. der männliche Vorname: Raja oder Rasa). Der Buchstabe

G kann auch mit K, der Buchstabe B mit P und der Buchstabe D mit TH geschrieben werden. Der Einfachheit halber empfehlen

wir die Schreibweise, welche im Pass verwendet wurde (Englisch). Die Schreibweise hängt im Prinzip vom Übersetzer ab.

Je nach den konkreten Umständen bleibt die Einforderung weiterer Dokumente vorbehalten.

Gemeindeamt des kantons Zurch

முடிஞ்சலவு ஆங்கிலத்தில போட்டிருக்கிறன் பிறகு என்னை சிப்பிலி ஆட்டுறேல்லை சரியோ

The Hindu right knows first or last name for the Tamil population part. Is the first name of the father

automatically to the child's family name. The wife takes the first name of her husband as new surname of marriage

to (option statement necessary).

Two names exist, then the first according to birth certificate are personal proper names, the second

Name of the father of the person concerned. In such cases, the capitalization of the father is basically to the family name.

Problems in the implementation of Tamil or singhalesischen characters in the Latin font. Individual

Letters can be written in different ways (e.g. male first name: Raja or Rasa). The letter

G can be written with the letter K P B and the TH D. For simplicity, recommend

We the spelling used in the pass (English). The spelling varies in principle by the translator.

Depending on the circumstances, claim further documents is reserved.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றி.. விசேடமாக இரண்டு ஒருநாள் தலைப்பு செய்தியாக போட்ட நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன் :unsure:

பிறகும் பலருடன் கதைத்ததில் பலர் தெளிவாக இருக்கிறார்கள் Firstname எங்கட சொந்தப்பெயர் .... Familyname / Surname அப்பாவின் பெயர்...:lol:

நான் இலங்கையில் இருந்து வரும்போது பாஸ்போர்ட் க்கு apply பண்ணேக்க , ஒரு (மோட்டு) சிங்களவனிடம் கேட்டேன் Surname என்றால் என்ன என்று , அவன் சொன்னான் மற்றாக்கள் என்னை கூப்பிடுகிற பெயர் என்று, (அவர்களுக்கு surname பாவனையில் உள்ளதால் தெளிவாக உள்ளார்கள்,...) ஆனால் அதையே எனக்கும் பாவிக்க வெளிக்கிட்டு இங்கே சின்னன் பெரிசு எல்லாம் நக்கல் அடிக்குதுகள்.. ஒரே ஒரு சந்தோசம் என்னைமாதிரி இன்னும் ஆட்கள் உள்ளார்கள்.ஆனால் அதில் ஒரு குறையும் இல்லை அத்துடன் எனது அலுவலக தொடர்பாடல்களில் எதுவித குழப்பமும் இல்லாமல் உள்ளது.

சபேஷ் அல்லது தெரிந்த யாரவது, இன்னுமொரு உதவி இலங்கையில் திருமணபதிவு செய்தவர்கள் இங்கே (கனடாவில்) அதை எங்கேனும் பதியவேண்டுமா? எனக்கு ஒரு அலுவலக நிமித்தம் எங்களது திருமண பதிவு தேவைப்படலாம் (USA working விசா எடுப்பதற்கு) அதற்கு எங்களது இலங்கை திருமண பதிவை ஏற்றுக்கொள்வார்களா அல்லது இங்கு எங்காவது பதிய வேண்டுமா?

நிர்வாகத்திக்கு ஒரு வேண்டுகோள், இந்த தலையங்கத்தை மாற்ற முடியுமோ? "silly" ஐ எடுத்து விடுங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.