Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடலுறவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.

செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.

தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ...

செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.

ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.

அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.

அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.

விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம். தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.

இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.

எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.

இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

thanks thedipaar.com

படங்களுடனான செய்திக்கு http://www.thedipaar.com/news/news.php?id=10825&cat=articles

:(:lol: ஓய் எங்கையப்பா எல்லாரும் அருமையான கருத்து அட சீ செய்தி போட்டிருக்கு ஓய் கு சா .ஆதீ-தானா சீ -வசி- சாத்து-டங்- நெடுக்-வம்பர்-மதங் -குதங் எங்கை ராசாமார் போய்டீங்கள் வாங்கோ வாங்கோ பாருங்கோ உங்கட பொன்னான பதிலுவளை அள்ளி கடாசங்கோ.....
  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol: ஓய் எங்கையப்பா எல்லாரும் அருமையான கருத்து அட சீ செய்தி போட்டிருக்கு ஓய் கு சா .ஆதீ-தானா சீ -வசி- சாத்து-டங்- நெடுக்-வம்பர்-மதங் -குதங் எங்கை ராசாமார் போய்டீங்கள் வாங்கோ வாங்கோ பாருங்கோ உங்கட பொன்னான பதிலுவளை அள்ளி கடாசங்கோ.....

இப்படியான இடங்களுக்கு,விளங்காத ஆட்களுக்கு

படம் போட்டு.....

காட்டட்டுமா..... சின்னப்பு. :D:lol::(

மறுதலையாக, ஆனாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே தினம் செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலன்டு கையும் சேர்ந்தால்தானே ஓசை பிறக்கும் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு இன்னும் கலியாணம் நடக்கேல மாப்பு அப்ப என்ன செய்யுறது மாமு அதுதான் செய்யுறதோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் தினசரி அன்னியோன்னியமாய் இருக்கிறதை டாக்குத்தர்மார் பாடமாய் படிப்பிக்கிறாங்கள் :):huh:

ஒருநாளைக்கு ஒருக்கா செய்தா ஆரோக்கியம் சரி...

ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல செய்தா? .... :):huh:

ஒருநாளைக்கு ஒருக்கா செய்தா ஆரோக்கியம் சரி...

ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல செய்தா? .... :):huh:

அது யாருடன் செய்வது என்பதில் தங்கி இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.

உதுக்கு குறைஞ்சது மூண்டு மெனு அயிட்டங்களாவது இருக்கோணுமே?? :huh::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநாளைக்கு ஒருக்கா செய்தா ஆரோக்கியம் சரி...

ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல செய்தா? .... :wub::(

பற்ரரி இறங்கப்போது கவனம் ராசா :D

பற்ரரி இறங்கப்போது கவனம் ராசா :wub:

பற்றரி இறங்கினாலும் தள்ளினா இஸ்டாத் பண்ணும்.. கு சா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆய்வை மட்டும் வைச்சுக்கொண்டு தீர்க்கமான முடிவுகளுக்குப் போக முடியாது. அதுமட்டுமில்லாமல்.. இந்த ஆய்வு தொடர்பான மூலப்பதிவுகளை இவ்வாறான பதிவுகளோடு இணைப்பது நன்று. உண்மையில் இந்த ஆய்வுகள் விஞ்ஞானிகளால் தான் நடத்தப்பட்டுள்ளனவா அல்லது விளம்பர நோக்கம் கொண்டவையா என்பதற்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. விஞ்ஞானிகள் கூட விளம்பரங்களுக்காக பொய்யான ஆய்வு விபரங்களை வெளியிடுவதும் உண்டு. பின்னர் அவை பிற ஆய்வாளர்களால் மறுதலிக்கப்படுவதும் உண்டு.

உடற்தொழிற்பாட்டுக் கல்வியின் படி ஒரு ஆண் 72 மணித்தியாலங்கள் எடுக்கிறான் முழுமையான வளர்ச்சி கண்ட விந்தணுக்களை உருவாக்க. ஒரு பெண் மாதவிடாய் கடந்து கிட்டத்தட்ட 14 நாட்கள் எடுக்கிறாள் முதிர்வு கண்ட முட்டையை வெளியிட. இதற்கிடையில் மாதவிடாய் காலம் அது இதென்று வந்து போகிறது. அப்போதெல்லாம் ஓமோன் சமநிலைகள் குருதியில் மாறி எகிறி.. இறங்கி குழப்பங்களை உண்டு பண்ணுகின்றன. இந்த நிலையில்.. தினசரி உடலுறவு என்பது எந்த வகைக்கு சாத்தியம்.. என்பது எனக்குப் புரியவில்லை.

ஒரு ஆண் விந்தை வெளியேற்றா விட்டால் அது தங்கி பெரும் பிரச்சனை ஆகிடும் என்பதில் இருக்கும் உண்மை குறித்து இன்னும் ஆராய வேண்டியுள்ளது. விந்தணுக்கள் வெளியேற்றப்படாவிட்டால் அவை இறந்த பின்னர் அவற்றில் உள்ள இரசாயனக் கூறுகள் உடலால் மீளப்பயன்படும் நிலைக்குப் போகின்றன. அதுமட்டும் அன்றி இயற்கையான வீச்சல்கள் ஏற்பட்டு கழிக்கப்பட்டும் விடுகின்றன.

இப்படி இருக்க.. இந்த ஆய்வு அடிப்படை உடற்தொழிற்பாட்டு கற்கை முறைகளுக்கு மாறாக முன் வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருக்கிறது. முன்னைய ஆய்வுகளை நிராகரிக்கும் அளவிற்கு இது எத்துணை சதவீதம் உண்மையானது ஆதாரத்தரவுகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது அந்த ஆதாரத்தரவுகளின் reliability என்ன என்று எல்லாம் பல கோணங்களில் கேள்வி எழுகிறது.

மக்கள் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வரும் science claims ஐ அப்படியே நம்பக்கூடாது. இவை பருமட்டான ஆய்வுகளாகக் கூட இருக்க்கலாம். தகுதியான ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. ஆக்கபூர்வமான ஆராய்ச்சி தரவுகளுடன் கூடிய தகுதியான ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்டு அறிவியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் ஏடுகளில் Science journals இல் வெளியிடப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் மீளாய்வுத்திறன் இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டவற்றையே நம்ப வேண்டும்.

பத்திரிகைகள்.. சஞ்சிகைகள் மக்களை உசுப்பேத்த வைக்கும் அறிவியல் போன்ற தோற்றப்பாடு கொண்டு எழுதப்படும் ஆதாரமற்ற கட்டுரைகளை நம்பக் கூடாது. இதை ஒரு டாக்டர் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சிக் குழு மட்டும் ஆராய்ந்து எழுதி இருந்தால் கூட நம்ப முடியாது. அவர் அல்லது அந்தக் குழுக் கூட தவறிழைத்திருக்கலாம். எனவா ஆராய்ச்சியின் உண்மை வடிவத்தை வெளியிடும் journals தரவுகளின் அடிப்படையில் கொண்டு வரும் செய்திகளை நம்பலாம்.

அவ்வாறு செய்தி வெளியிடும் தமிழ் மொழி மூல சஞ்சிகைகள் இல்லை. ஆங்கிலத்தில் Nature, New Scientist, Science today, Biologist, bbc science, discovery இப்படிப் பல துறைசார்ந்தும் சாராமலும் வெளி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் கூடிய அளவு நம்பக்கூடியன. மக்கள் பின்பற்றக் கூடியனவாக அமையலாம். மற்றைய கிலுகிலுப்பூட்டும் செய்திகள் எல்லாம் அறிவியற் பூர்வமானவை என்பதை ஆராயாமல் சொல்லி விட முடியாது.

தினசரி உடலுறவு என்பது மனிதரில் அத்துணை சாத்தியமில்லை. குறிப்பாக பெண்கள் அதற்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஏன் ஆண்களில் கூட ஆண் ஓமோனின் அளவில் தான் அவர்களின் பாலியல் நாட்டமும் அமைகிறது. உடலுறவின் பின் ஆண் ஓமோனின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குருதியில் வீழ்ச்சியடைகிறது. பின்னர் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப போதிய கால அவகாசம் தேவை. தினசரி உடலுறவிற்கு தேவையான சக்தி உடலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமில்லை.

அதுமட்டுமன்றி.. உடலுறவு கொண்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றால் வயதானவர்களும்.. சிறுவர்களும் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்கின்றனர். திருமணம் ஆகாதவர்கள்.. உடலுறவு கொள்ளக் கூடிய வாய்ப்பை உருவாக்காதவர்கள் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இந்தக் கட்டுரை என்னைப் பொறுத்தவரை ஒரு bias நிலையில் இருப்பதாகவே உணர முடிகிறது. அறிவியல் ஆய்வு என்று தோற்றம் காட்டப்படுபவற்றில் இவை சாதாரணமாக நிகழ்பவை தான்..!

இதனை மக்கள் நம்பி.. தமது வாழ்க்கை நடத்தைக் கோலத்தை மாற்றுவது ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணலாம். எனவே எச்சரிக்கை அவசியம்..! இந்தக் கட்டுரை வெளிவந்த Science journals பற்றிய தரவுகள் தரப்படின் மேலும் இதனுள் அடங்கி இருக்கும் உண்மைத் தன்மை பற்றி ஆரய்ந்து சொல்ல வசதியாக இருக்கும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கிடக்கட்டும் நெடுக்குசாமி?

இப்ப...

என்ன சொல்ல வாறியள்?

போர்த்திட்டு படுக்கவோ?

இல்லாட்டி

படுத்துட்டு போர்க்கவோ?

எல்லாம் கிடக்கட்டும் நெடுக்குசாமி?

இப்ப...

என்ன சொல்ல வாறியள்?

போர்த்திட்டு படுக்கவோ?

இல்லாட்டி

படுத்துட்டு போர்க்கவோ?

:D:lol::lol:

அவர் சொல்லுறார் இனி உங்களுக்கு குளையடிச்சுத்தான் திருவிழாவாம்.

எப்பிடியடிச்சாலும் வருசத்துக்கு ஒருக்காத்தான் திருவிழாவும் வருமாம்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.