Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவர்களுக்குக் கருணா நமக்கு சரத் !

Featured Replies

இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா!

தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை.

இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெற்றி பெற-விருக்கும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு வாக்-களிப்பது என்பதை மிகவும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது.

இக்கேள்வியை, சிங்கப்பூர் தொலைக்காட்சியினர் அங்கே தங்கி இருந்த என்னிடம் ஒரு பேட்டியின்மூலம் சென்ற ஒரு மாதத்திற்குமுன் எடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பினார்கள்.

அப்போது கேட்கப்பட்ட சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குச் சோதனையான இந்த காலகட்டத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது.

உணர்ச்சி வாய்ந்த இந்தப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் தீர்வு காணுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இந்த இனம் சந்தித்துள்ள, சந்தித்துவரும் இழப்புகளும், அனுபவித்துவரும் கொடுமைகளும் சொல்லொணாதவை ஆகும்!

இதற்கு எப்படி எப்போது விடிவு ஏற்படுமோ என்று மனிதநேயம் உள்ள அனைவரும் கவலையோடு சிந்திக்கின்றனர்.

உணர்ச்சி அடிப்படையில் அல்ல

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இருவர் இத்தேர்தலில் வேட்பாளர்-களாகப் போட்டியிடும் நிலை-யில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு வெறும் உணர்ச்சி அடிப்படையில் பதில் அளிக்க முன்வந்தால், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று கருதுவது? எனவே, இத்தேர்தலில் இந்த இருவருக்குமே வாக்களிக்காமல் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதே சரியானது என்று கூறக்கூடும்.

ஆனால், அதைவிட, நமது ஈழத் தமிழர்கள் வெறும் உணர்ச்சிபூர்வமாக இப்பிரச்சினையை அணுகாது, அறிவுபூர்வமாக அணுகவேண்டும் என்று நாம் சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில் கூறினோம். அதனை முன்வைப்பது இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது; தேவையானதும்கூட.

தமிழர்கள் தேர்தலை, சென்ற தேர்தலில் புறக்கணித்த காரணத்தால்தான் அதிபராக இராஜபக்சே வரும் வாய்ப்பே ஏற்பட்டது.

அவ்வாட்சி செய்த அக்கிரமங்களுக்கு இனப் படுகொலைகளுக்கு இட்லரின் செயல்களால் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்டதைவிட மிகவும் கொடுமையானது என்பது உலக நாடுகள் பலவற்றிற்கும் கூடத் தெரியும்.

சென்றமுறை, தேர்தலைப் புறக்கணிக்காமல், இந்த இராஜபக்சேவை பதவிக்கு வரவிடாமல் தடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு வந்திருக்காது.

தவறான முடிவு, மிகப்பெரும் இழப்புகளுக்கும், சோகத்திற்கும் அவர்களை ஆளாக்கக் காரணமாக அமைந்தது.

அதே தவறை மீண்டும் ஈழத் தமிழர்கள் செய்துவிடக் கூடாது.

நேற்று விழுந்த அதே இடத்தில் இன்றும் விழுந்துவிடக் கூடாது ஈழத் தமிழர்கள்.

யார் வரக்கூடாது என்பதே முக்கியம்

இத்தேர்தலில் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்றால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது - யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாக இருக்கவேண்டும்.

அதற்குரிய முக்கிய காரணங்கள்:

1. இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றால் அவரது ஆட்சி செய்த அத்தனை இனப்படுகொலைகள், உரிமை மறுப்புகள், முள்வேலி சோகங்கள் உலகத்தார் கண்முன் ஜனநாயக முத்திரையுடன் நியாயப்படுத்-தப்படும். வரலாற்றின் இரத்தக் கறை மீண்டும் முக்கியமானதொரு இடத்தில் இருக்கவே செய்யும்.

2. தமிழர்களின் வாக்குரிமை, தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது அது சிறுபான்மையாக இருந்த-போதிலும்கூட.

இலங்கையைப் பொறுத்தவரை, தமிழர்கள் யாரும் அதிபராக வரும் வாய்ப்பு வாக்கு பலம் அடிப்படையில் கிடையாது. இப்போது அவர்கள் இரண்டு தீமைகளில், எது தவிர்க்க முடியாத குறைந்த தீமை ((to Choose the lesser evil) என்பதைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது! இருவரில், யாரையுமே ஆதரிக்க-மாட்டோம் என்றால், அது அங்குள்ள ஈழத் தமிழர்-களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து உண்டு.

(3) பொன்சேகாவும் தளபதியாக இருந்து தமிழர்களுக்குக் கொடுமை செய்தவர்தானே இவரை எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வியில் நியாயம் உண்டு என்றாலும், அவர் ஒரு வேலைக்காரர் அதிபர் இராஜபக்சேவுக்கு. முடிவு எடுத்த இடத்தில் இருந்தவர் அல்லர்; அவர் தன் செயலை நியாயப்படுத்தாது, ஓரளவு மனந்திறந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலை ஒரு திருப்பமாகும். அதை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்; அவர் தமிழர்களின் வாக்குகளைக் கேட்க, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ளார் என்பது நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் பேசி அதில் பல அம்சங்கள் ஏற்க இசைவு தெரிவித்துள்ளார்! அந்த நிபந்தனைகளோடு அவ-ருக்கு ஆதரவு தரும் முடிவுதான் சரியானது, வரவேற்கவேண்டிய முடிவாகும்.

பொன்சேகாவை ஆதரிப்பதே புத்திசாலித்தனம்

பொன்சேகா ஒரு இராணுவப் பணியாளராகத்தான் செயல்பட்டார்; அவர் கீழ்ப்படிய மறுத்திருந்தால்முடிவில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும்? அவர் சிறையில் இருந்திருப்பார், அல்லது காணாது போயிருப்பார்; நிலைமை மாறியிருக்காது. எனவே, அதற்குக் காரணம் இராஜபக்சே தோற்கடிக்கப்படுவதே, சரியான மக்கள் தீர்ப்பாக அமையவேண்-டும். இதற்கு தமிழர்களின் பங்களிப்பு இருப்பதே முக்கியம்; காலத்தின் கட்டாயம். சில நேரங்களில் கசப்பான முடிவுகள் தவிர்க்கப்பட முடியாதவைகள்தாம் என்றாலும், வேறு வழியில்லை என்னும்போது, அதனை மேற்கொள்வதே, தமிழர்களின் வருங்காலத்திற்கு நல்லது ஆகும்.

எந்தத் தடியை எடுத்து அடித்து பாம்பை வீழ்த்தினோம் என்பது முக்கியமல்ல; சீறிய பாம்பை அது மீண்டும் படம் எடுத்துக் கடிக்காமல், அதனை வீழ்த்தினோம் என்பதே அறிவுப்பூர்வச் சிந்தனை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவு மனித உரிமை பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

7.1.2010

http://viduthalai.periyar.org.in/20100107/Page01.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பெரும் இனக்கொலையை தடுக்க வக்கில்லை. அதற்குள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மட்டும் அறிவுரை கூற பலர். வெட்கமாக இல்லை. 6 கோடி தமிழர் தமிழ் நாட்டில் இருப்பது ஏன்? தமது சகாக்கள் சாகும் போது பார்த்து கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள். இன்று கருத்து மட்டும் சொல்ல ஆலாய் பறப்பது ஏனோ?

தமிழ் நாட்டு சகோதரர்களை தாக்குவது எனது குறிக்கோள் இல்லை.

கருத்திற்கும் உபதேசத்திற்கும் ஒன்றும் குறைவில்லை அய்யாக்களே...வீரமணி,வை.கோ,திருமா,சீமான்,இன்னும் எத்தனையோ பேர்...ஆளாளுக்கு எதேதோ செய்தீர்கள்தான்.ஆனால் உங்கள் நெஞ்சத்தை தொட்டு சொல்லுங்கள்...நீங்கள் செய்தவை போதுமா என்று?அதற்காக எல்லோரும் முத்துக்குமாராக வேண்டாம்.விடாமுயற்சியுடன் ,இன்று ஆந்திராவில் நடப்பது போன்று,உங்கள் ஊரை ஸ்தம்பிக்க செய்திருந்தாலே போதுமானதாயிருந்திருக்கும்.இனியாவது உங்கள் அரசியலை பாவப்பட்ட ஈழ மக்களிடம் நடத்தாதீர்கள்.அவர்களால் தற்போதைக்கு முடியாது!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரமணி அவர்கள் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கே ஆதரவு தந்தார். அதிமுகவைக் குறை சொல்லும் இவர் கலைஞருக்கு ஆதரவு. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று சொன்னவர் சென்ற தேர்தலில் தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு ஆதரவளித்தவர்.

Edited by கந்தப்பு

காங்கிரஸ் காலை நக்கும் வீரமணி கும்பலுக்கு ஈழத்தமிழனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி துளியும் இல்லை.....

இது போன்ற அறிக்கைகள் மகிந்தனின் தேர்தல் ஆதாயத்திற்கு தான் பயன்படும்!

அப்பாடா என்னமா ஒப்பிடுறாங்க. அவங்களுக்கு கருணா, எங்களுக்கு சரத்தா? பரவாயில்லை. எது குறைந்த தீமை? எல்லாமே தீமைதான். குறைந்த தீமை எது? எல்லாவற்றிலும் பெரிய தீமை நம்ம சிவாஜிலிங்க ஐயாதான்.

வீரமணி யாருடன் இப்ப இருக்கிறார் கருணாநிதியுடனா, ஜெயலலிதாவுடனா...?? வீரமணியின் குரல் அவர் யாரின் காலுக்குள் இருக்கிறாரோ அவரின் குரல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது அறிவுரை கூறும் இந்த தலைவர்கள் எல்லாம் போர் நடந்த காலத்தில் எங்கு இருந்தனர்?

அப்பொழுதும் தமிழ் நாட்டில் தானே காங்கிரஸ் கட்சிக்கு கால் பிடித்துக்கொண்டு இருந்தார்கள்...

இவர்கள் எல்லாம் எப்படி தான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறிவுரை கூற வருகிறார்கள்?

இவரும் ஈழப்பிரச்சினையில் அக்கரை கொன்டவர் என்பதை காட்டிக்கொள்ளவா இந்த சுய அறிக்கை??????

  • கருத்துக்கள உறவுகள்

வேலை தெரியாத வேசி இடம் பத்தவில்லை என்றாளாம்... இவர்களை செருப்பால் அடித்து துரத்துவதே தமிழக தமிழ்தேசியர்களின் கடமை.. பெரியாரின் பெருமை பேசி கொண்டே இவர்கள் வண்டி இன்னும் தமிழ்நாட்டில் ஓடுகிறது.. மற்றும் ஓர் அடிவருடியின் பேச்சை கவனியுங்கள்.. எப்படி நாசூக்காக இனத்தையும் பண்பாட்டையும் வைத்து புனைகிறார்கள்.. இவர்கள் தலைவர்(கருநாகம்) தோழர் முத்து குமார் மரணத்தின் போதும் போராட கூடாது அது நம் பண்பாட்டிற்கு(?) எதிரானது என்று புளுகினார்... அடிமைக்கு அடிமைபுத்தி தானே வரும் திருடனை ராஜ முழி முழிக்க சொன்னால் எப்படி.. ஊத்த வாயாரின் கட்டுரையை கவனியுங்கள்

1. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றில், தடி, கம்புகளோடு உள்ளே புகுந்த தெலங்கானா ஆதரவாளர்கள், அங்கிருந்த நடிகர் மோகன்பாபுவின் மகளையும், மகளையும் அடித்து விரட்டிவிட்டு, புகைப்படக் கருவிகள், அரங்கத்தில் இருந்த பொருள்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்துத் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதித் தலைவர் சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, அவர், “எங்கள் கட்சிக்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் பொருள்களை உடைத்ததோடு நிறுத்திவிட்டனர். என்னைக் கேட்டால், மோகன்பாபுவின் மகன், மகளையே அடித்து உதைத்திருக்க வேண்டும் என்பேன். ஹைதராபாத் எங்களுக்குச் சொந்தம் என்று யாராவது சொன்னால், அவர்களின் நாக்கை ஒட்ட நறுக்கிவிடுவோம்” என்றார்.

2. மும்பையில், தாதர் அருகில் உள்ள பிரபாதேவி என்னுமிடத்தில், ஒரு கோயில் வாசலில் படுத்திருந்த பத்து, இருபது பிச்சைக்காரச் சாமியார்கள், ராஜ்தாக்கரேயின் ஆட்களால், உருட்டுத் தடி கொண்டு தாக்கப்பட்டனர். “இந்தி பேசுற பிச்சைக்காரப் பயலுவளே, ஒங்க ஊருல போய்ப் பிச்சை எடுங்கடா. இங்க ஏன் வரீங்க?” என்று கேட்டபடி அவர்கள் அந்தச் சாமியார்களைத் தாக்கினர்.

3. நக்சலைட் இயக்கத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “தெலங்கானா மக்களே, கரையோர ஆந்திர முதலாளிகளின் வசம் உள்ள நிறுவனங்கள், சொத்துகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, அவர்களை விரட்டி அடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று செய்திகளும் இன்றைய அதிர்ச்சிகளாக மட்டுமின்றி, நாளைய உலகைப் பற்றிய கேள்விக்குறிகளாகவும் உள்ளன.

ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று நடிகர் மோகன்பாபு சொன்னதற்காக, அவருடைய பிள்ளைகள் விரட்டப்பட்டுள்ளனர், பொருள்கள் நொறுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா பிரிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறமிருக்க, ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தவே கூடாது என்பதும், மீறி வெளிப்படுத்தினால் அடித்து நொறுக்குவோம், நாக்கை அறுப்போம் என்பதும், எதிர்காலத்தை எங்கு கொண்டு சேர்க்கும்?

நாமெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள்தாம், சாமியார்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டத் துடிப்பவர்கள்தாம். ஆனாலும், கோயில் வாசலில் படுத்துறங்கும் பிச்சைக்காரச் சாமியார்களை உருட்டுக் கட்டைகளால் அடிப்பது எந்த வகையில் சரியானது?

சுரண்டிப் பிழைப்பவர்களின் சொத்துக்கைளைப் பறிமுதல் செய்வது குற்றமில்லைதான். ஆனாலும் கரையோர ஆந்திராக்காரர்கள் மட்டும்தான் சுரண்டல்வாதிகளா? குஜராத் சேட்டுகளும், ராஜஸ்தான் மார்வாரிகளும் இந்தியாவெங்கும் சுரண்டிக் கொழுக்கவில்லையா? ஏன், தெலங்கானா மக்களிடமும் சுரண்டல் பேர்வழிகள் இருக்கமாட்டார்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், எந்த விடையும் கூறாமல், ஆள் ஆளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது நியாயம் ஆகாது.

இவைகளையயல்லாம் விடக் கொடுமை என்னவென்றால், இவை போன்ற மனிதநேயமும், ஜனநாயகமும் அற்ற செயல்களை எல்லாம், “அடடா பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு போர்க்குணம் உள்ளது” என்று பாராட்டுவதுதான். அப்படிப் பாராட்டி, இளைஞர்களைத் தூண்டிவிட்டு, திரும்பும் இடமெல்லாம் ரத்தக் களறியாக மாற வழி செய்வது, நேர்மையான எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இன, மொழி உணர்வோ, மண்ணின் மைந்தர்கள் கோட்பாடோ பிழையானவை அல்ல. “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க, மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள் எல்லா வகையிலும் பொருத்தமானவை. இந்திய ஒருமைப்பாடு, ஒரே நாடு, ஒரே பண்பாடு போன்ற போலி முழக்கங்கள் இனி இந்தியாவின் எந்த மூலையிலும் எடுப்படப் போவதில்லை. காஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தை (பிரிவு 370) ஒழிக்க வேண்டும் என்னும் பா.ஜ.க.வின் முழக்கம் எள்ளி நகையாடப்பட்டு, அதனை எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்து என்னும் முழக்கமே இனி ஒலிக்கப்போகிறது. 90 சதவீத நிலங்களை அவரவர் மண்ணில் அவரவர்தான் வாங்கும் உரிமை உடையவர் என்னும் சட்டம் இயற்றப்பட்டே ஆக வேண்டும்.

இவை அனைத்தும் நியாயமான கோரிக்கைகள். இவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றும், இந்தக் கருத்தில் உடன்பாடு உடையவர்கள் அனைவரையும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்தும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் ஏராளமாக உள்ளன. இந்த முயற்சிகள் உடனே வெற்றி பெறக் கூடியவை அல்ல. இதில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது கருத்து மோதல்கள் தவிர்க்க இயலாதவை.

‘முடியாது, மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைத் தடி கொண்டு தாக்குவோம்’ என்பது பாசிசம். இத்தாலிச் சொல்லான பாசிசம் என்பதன் மூலச்சொல் ‘தடி’ என்று கூறுவர். அந்தத் தடியைக் கையில் எடுத்து இன்று நாம் வெற்றி பெறலாம். ஆனால் அதைவிட வலிமையான தடி, நாளை நம் எதிரியின் கைகளுக்குக் கிடைக்கக்கூடும்.

நியாயங்களைத் தடிகளின் வலிமை முடிவு செய்யும் நாட்டில் அழிவுகளே மிஞ்சும். வன்முறையின் மூலமும், கொடூரத்தாக்குதல்களின் மூலமும் பெறும் வெற்றிகளை நாம் கொண்டாடினால், பிறகு நமக்கும், ராஜபக்சேவுக்கும் வேறு என்ன வேறுபாடு?

ராஜபக்சேயாக இருப்பதைக் காட்டிலும், அநாகரிகம், அசிங்கம், அருவருப்பு வேறு ஏதேனும் உண்டா?

- சுப.வீரபாண்டியன்

சு.பா அவர்கள் போற்றி வரும் கருணாநிதி எப்படிப்பட்டவராம்? கருத்துக்கணிப்பிற்காக தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்கு தீவைத்து 3 ஊடகவியலாளர்களை படுகொலை செய்த அவரது அரசின் செயல் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதில்லையா?

கருணாநிதி ஆதரவாளர்களெல்லாம், ராஜபக்சேயினை கெட்டவர் என்று சொல்லி கருணாநிதியின் கேவல அரசியலை மறைக்கவே முயல்கின்றனர்....

  • தொடங்கியவர்

தமி​ழ​கம் வந்த தமி​ழர்​கள் விரட்​டப்​பட்​டது ஏன்? பழ. நெடுமாறன்

உ​ல​கம் முழு​வ​தி​லும் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் பரவி வாழ்​கி​றார்​கள்.​ இன்று நேற்​றல்ல,​​ பல நூறாண்​டு​க​ளா​கத் தமி​ழர்​கள் பல நாடு​க​ளில் குடி​யேறி அந்​நா​டு​க​ளையே தங்​கள் சொந்த நாடு​க​ளாக ஏற்​றுக் கொண்டு வாழ்​கி​றார்​கள்.​ அதி​லும் ஏழா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்பு இலங்​கை​யும் இந்​தி​யா​வும் கட​லால் பிரிக்​கப்​ப​டு​வ​தற்கு முற்​பட்ட காலத்​திற்கு முன்பே இரு​பு​றத்​தி​லும் வாழ்ந்த தமி​ழர்​கள் மொழி​யா​லும் பண்​பாட்​டா​லும் மிக நெருங்​கி​ய​வர்​க​ளாக இருந்​தார்​கள்.​

சங்க காலப் புல​வ​ரான ஈழத்து பூதந்​தே​வ​னார் காலத்தி​லி​ருந்து சென்ற நூற்​றாண்​டில் ஆறு​முக நாவ​லர் காலம் வரை​யி​லும்,​​ அதற்​குப் பிறகு இன்​று​வ​ரை​யி​லும் மட்​டு​மல்ல,​​ இனி எதிர்​கா​லத்​தி​லும் ஈழத் தமி​ழர்​க​ளுக்​கும் தமி​ழ​கத் தமி​ழர்​க​ளுக்​கும் உள்ள உறவு என்​பது தொப்​புள் கொடி உற​வா​கும்.​

ஈ​ழத் தமி​ழர்​கள் மட்​டு​மல்ல பிற​நா​டு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளும் தங்​க​ளது பண்​பாட்​டுத் தாய​க​மா​கக் கரு​து​வது தமிழ்​நாட்​டையே ஆகும்.​ தமிழ்​நாட்​டுக்​கும் பிற நாடு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளுக்​கும் இடையே உள்ள உறவு என்​பது தாய்-​சேய் உறவு ஆகும்.​

மொழி,​​ பண்​பாடு,​​ கலை ஆகி​ய​வற்​றின் அடிப்​ப​டை​யில் உல​கம் எங்​கும் நடை​பெ​றும் தமிழ் ஆய்​வு​களை ஒருங்​கி​ணைக்​க​வும் உல​கத் தமி​ழர்​களை ஒன்​று​ப​டுத்​த​வும் உல​கத் தமிழ் ஆராய்ச்சி மன்​றம் ஈழத் தமி​ழ​றி​ஞர் தனி​நா​ய​கம் அடி​கள்,​​ தமி​ழ​கத்து அறி​ஞர்​கள் வ.அய்.​ சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ சாலை இளந்​தி​ரை​யன் போன்ற பல​ரின் கூட்டு முயற்​சி​யால் உரு​வாக்​கப்​பட்​டது.​

மு​தல் உல​கத் தமி​ழ​ராய்ச்சி மாநாடு மலே​சி​யா​வில் 1966-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்​சி​றப்​பாக நடை​பெற்​றது.​ உல​கெங்​கும் உள்ள பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​கள் இம்​மா​நாட்​டில் பங்கு பெற்​ற​னர்.​ அப்​போது தமி​ழ​கத்​தின் முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.​ பக்​த​வத்​ச​லம் தலை​மை​யில் இரா.​ நெடுஞ்​செ​ழி​யன்,​​ பி.டி.ராஜன் உள்​பட பல​கட்​சித் தலை​வர்​கள் தமி​ழ​கக் குழு​வா​கச் சென்று கலந்து கொண்​ட​னர்.​

1968-ம் ஆண்டு ஜன​வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்​னை​யில் 2-வது உல​கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை​பெற்​ற​போ​தும் அனைத்து நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​க​ளும் வேறு​பாடு இன்றி கலந்து கொண்​ட​னர்.​ ராஜாஜி,​​ பெரி​யார்,​​ காம​ரா​சர்,​​ ஜீவா,​​ ம.பொ.சி.​ போன்ற பல​வேறு கட்​சித் தலை​வர்​க​ளை​யும் முத​ல​மைச்​ச​ராக இருந்த அண்ணா,​நேரில் சென்று அழைத்து இம்​மா​நாட்​டில் சிறப்​பு​ரை​யாற்ற வைத்​தார்.​ அவர்​க​ளும் அவ​ரு​டன் ஒத்​து​ழைத்​த​னர்.​ அனை​வ​ரும் தமி​ழர்​கள் என்ற உணர்​வு​டன் அர​சி​யல் வேறு​பா​டு​களை மறந்து ஒன்​றி​ணைந்து உல​கத் தமி​ழர்​க​ளின் ஒற்​று​மைக்கு வலிமை சேர்த்​த​னர்.​

1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரி​சி​லும் 1974-ம் ஆண்டு நான்​கா​வது மாநாடு யாழ்ப்​பா​ணத்​தி​லும் ஒற்​றுமை குலை​யாத வகை​யில் நடை​பெற்​றது.​ யாழ்ப்​பாண மாநாட்​டில் சிங்​கள ராணு​வம் புகுந்து சுட்டு 9 தமி​ழர்​கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது.​

1981-ம் ஆண்டு ஜன​வரி 4 முதல் ​ 10-ம் தேதி வரை மது​ரை​யில் நடை​பெற்ற ஐந்​தா​வது உல​கத் தமிழ் மாநாட்​டின் போது முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.ஜி.ஆர்.​ விடுத்த அழைப்பை அனைத்​துக்​கட்​சித் தலை​வர்​க​ளும் ஏற்று மாநாட்​டில் பங்கு கொண்​ட​னர்.​ ஆனால் தி.மு.க.​ தலை​வ​ரான கரு​ணா​நிதி மாநாட்​டில் கலந்து கொள்​வ​தைத் தவிர்த்​தார்.​ அன்றி​லி​ருந்து இந்த ஒற்​று​மை​யைச் சீர்​கு​லைக்​கும் நட​வ​டிக்​கை​கள் தொடங்​கின.​

1995-ம் ஆண்டு ஜன​வரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற 8-வது மாநாட்​டின் போது முத​ல​மைச்​சர் ஜெயல​லி​தா​வின் அழைப்பை ஏற்று பல கட்​சித் தலை​வர்​க​ளும் கலந்து கொண்​ட​னர்.​ அதி​லும் கரு​ணா​நிதி கலந்து கொள்​ள​வில்லை.​ இம்​மா​நாட்​டின் போது​தான் தமி​ழர்​களை அவ​ம​திக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.​

சு​வீ​டன் நாட்​டுத் தமி​ழ​றி​ஞர் பீட்​டர் சால்க்,​​ ஈழத் தமி​ழ​றி​ஞர் சிவத்​தம்பி ஆகி​யோர் மாநாட்​டில் உரை​யாற்ற அழைக்​கப்​பட்டு,​​ இங்கு வந்த பிறகு அவர்​க​ளைக் கட்​டா​யப்​ப​டுத்தி வெளி​யேற்​றிய வெட்​க​க​ர​மான நிகழ்ச்சி நடை​பெற்​றது.​ உல​கத் தமி​ழர்​கள் அனை​வ​ரும் இதை வன்​மை​யா​கக் கண்​டித்​த​னர்.​

1998-ம் ஆண்டு தஞ்​சை​யில் நடை​பெற்ற ​ 6-வது உலக சைவ மாநாட்​டில் கலந்து கொள்ள வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்த தமி​ழர்​கள் பலர் வந்​தி​ருந்​த​னர்.​ ஆனால் தென்​னாப்​பி​ரிக்​கா​வில் இருந்து வந்​தி​ருந்த வீர​பத்​தி​ரன்,​​ இலங்​கை​யைச் சேர்ந்த மனோன்​மணி சண்​மு​க​தாஸ்,​​ பிரிட்​ட​னைச் சேர்ந்த டாக்​டர் சிவ​தா​சன் தம்​ப​தி​யி​னர் ஆகிய நால்​வர் வெளி​யேற்​றப்​பட்​ட​னர்.​ இதற்கு எதி​ராக மாநாட்​டுப் பிர​தி​நி​தி​கள் அற​வ​ழி​யில் போரா​டி​னர்.​ ஆனா​லும் எது​வும் நடக்​க​வில்லை.​ அப்​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி இதைத் தடுக்க எது​வும் செய்​ய​வில்லை.​

அ​தற்​குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20,​ 21 ஆகிய நாட்​க​ளில் சென்​னை​யில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் தொடக்க விழா மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த ஜெயல​லிதா அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ அர​சி​ய​லுக்கு அப்​பாற்​பட்ட மாநாடு என்று தெரிந்​தும் இந்​தத் தடை விதிக்​கப்​பட்​டது.​ உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு அந்​தத் தடையை நீக்கி மாநாட்​டுக்கு அனு​மதி வழங்​கி​யது.​

÷2004-ம் ஆண்டு பெங்​க​ளூ​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் மூன்​றாம் ஆண்டு நிறைவு மாநாட்​டின் போது மாநாட்​டைத் தொடங்​கி​வைப்​ப​தற்​காக அழைக்​கப்​பட்​டி​ருந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் ஈழ​வேந்​தன்,​​ சென்னை விமான நிலை​யத்​தி​லேயே திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ அதற்​கு​ரிய கார​ணம் எது​வும் அவ​ருக்கு அதி​கா​ரி​க​ளால் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ தெற்​கா​சிய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான சார்க் நாடு​க​ளைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் யாராக இருந்​தா​லும் இந்த நாடு​க​ளுக்​குள் சுற்​றுப்​ப​ய​ணம் செய்து வரு​வ​தற்கு விசா எது​வும் தேவை​யில்லை.​ இந்த விதி​யும் மீறப்​பட்​டது.​ இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரான ஈழ​வேந்​த​னுக்கு உரிய விசா இருந்​தும் அவர் திருப்பி அனுப்​பப்​பட்ட அவ​லம் நேர்ந்​தது.​ அப்​போ​தும் முத​ல​மைச்​ச​ராக ஜெயல​லிதா இருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12,​ 13-ம் தேதி​க​ளில் சேலம் நக​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் நான்​காம் ஆண்டு நிறைவு மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி,​​ அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ இந்​தத் தடை​யும் உயர் நீதி​மன்​றத்​தால் நீக்​கப்​பட்டு மாநாடு வெற்​றி​க​ர​மாக நடை​பெற்​றது.​

2009-ம் ஆண்டு டிசம்​பர் 26,​ 27-ம் தேதி​க​ளில் தஞ்சை நக​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் ​ ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக வந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் சிவாஜி​லிங்​கம் சென்னை விமான நிலை​யத்தி​லி​ருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ இது​வும் முத​ல​மைச்​சர் கரு​ணா​நி​தி​யின் ஆட்​சி​யின்​போ​து​தான் நடை​பெற்​றது.​

உ​ல​கத் தமி​ழர்​கள் ஒன்​று​கூடி தமது பிரச்​னை​கள் குறித்து கருத்​துப் பரி​மாற்​றம் செய்து கொள்​ளும் சுதந்​தி​ரம் தமிழ்​நாட்​டில் இல்லை என்​பதை இந்த வெளி​யேற்ற நிகழ்ச்​சி​கள் நமக்கு எடுத்​துக்​காட்​டு​கின்​றன.​ தமிழ்​நாட்​டைத் தங்​கள் தாய​க​மா​கக் கரு​து​கின்ற வெளி​நாட்​டுத் தமி​ழர்​கள்,​​ தமி​ழ​கம் வரும்​போ​தெல்​லாம் இப்​படி விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது ஒட்​டு​மொத்த தமி​ழி​னத்​திற்கே அவ​மா​ன​மா​கும்.​

ஜெ​யல​லிதா அல்​லது கரு​ணா​நி​தி​யின் ஆட்​சிக் காலங்​க​ளில் தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் மாநா​டு​க​ளில் பங்​கேற்க வந்​த​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்​தால் பிர​ள​யம் எது​வும் நேர்ந்​தி​ருக்​காது.​ தமி​ழ​றி​ஞர்​களை அவ​ம​தித்த குற்​ற​மும் முத​ல​மைச்​சர்​கள் மீது படிந்​தி​ருக்​காது.​ வெளி​யேற்​றப்​பட்ட தமி​ழ​றி​ஞர்​கள் ஆனா​லும்,​​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் ஆனா​லும் அவர்​கள் அனை​வ​ரும் தமி​ழ​கத்​திற்​குப் புதி​ய​வர்​கள் அல்​லர்.​ எத்​த​னையோ முறை வந்து சென்​ற​வர்​கள்.​ ஜெயல​லிதா வேண்​டு​மா​னால் அவர்​க​ளைப் பற்றி அறி​யா​மல் இருக்​க​லாம்.​ ஆனால் கரு​ணா​நிதி அவர்​கள் குறித்து நன்கு அறிந்​த​வர்.​ என்​றா​லும் தில்​லி​யின் தமி​ழர் அவ​ம​திப்பு போக்​கி​னைத் தடுத்து நிறுத்தி தமி​ழர்​க​ளின் உரி​மையை நிலை​நாட்ட இரு​வ​ருமே தவ​றி​விட்​ட​னர்.​

இந்​தி​யா​வில் பிற மொழி பேசு​கி​ற​வர்​கள் நடத்​தும் உலக மாநா​டு​க​ளுக்கு வரு​கி​ற​வர்​கள் தாரா​ள​மாக வந்து சுதந்​தி​ர​மா​கப் பேசி​விட்​டுப் போகி​றார்​கள்.​ உல​கத் தெலுங்​கர் மாநாடு சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் ஹைத​ரா​பாத் நக​ரில் நடை​பெற்​ற​போது பிற​நா​டு​க​ளில் வாழும் தெலுங்​கர்​கள் அந்த மாநாட்​டில் கலந்​து​கொள்ள வந்​த​போது எவ்​வி​தத் தடை​யும் விதிக்​கப்​ப​ட​வில்லை.​ அவ்​வாறே பெங்​க​ளூ​ரில் நடந்த உலக கன்​னட மாநாட்​டி​லும் பிற நாடு​க​ளைச் சேர்ந்த கன்​ன​டர்​கள் தாரா​ள​மா​கக் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​

உ​ல​ கப் பஞ்​சாபி மாநாடு சண்​டீ​க​ரில் நடை​பெற்​ற​போது கன​டா​வில் வாழ்ந்து கொண்​டி​ருந்த காலிஸ்​தான் இயக்க ஆத​ர​வா​ளர்​கள் இந்​தியா வர இந்​தி​யத் தூத​ர​கம் விசா தர மறுத்​து​விட்​ட​போது,​​ பஞ்​சாப் முத​ல​மைச்​சர் பிர​த​ம​ரி​டம் போராடி விசா வழங்​கச் செய்​தார்.​ இந்​திய அர​சால் தடை​செய்​யப்​பட்ட காலிஸ்​தான் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் இந்​தி​யா​வுக்​குள் தாரா​ள​மாக வந்து தங்​கள் மொழி மாநாட்​டில் சுதந்​தி​ர​மா​கப் பேச​மு​டி​கி​றது.​ இதற்கு பஞ்​சாப் முத​ல​மைச்​ச​ரின் மொழி உணர்​வும் மத்​திய அர​சு​டன் போரா​டும் மன உறு​தி​யுமே கார​ண​மா​கும்.​

த​மிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமிழ் மாநாட்​டுக்கு வந்த பிற​நாட்​டுத் தமி​ழர்​கள் வெளி​யேற்​றப்​பட்​ட​தற்கு தான் பொறுப்​பல்ல மத்​திய அரசே பொறுப்பு என்று சொல்லி முத​ல​மைச்​சர் தப்​பித்​துக்​கொள்ள முடி​யாது.​ மத்​திய ஆட்​சி​யி​லும் இவ​ரது கட்சி ஓர் அங்​கம்.​ பிர​த​ம​ரி​டம் இவ​ருக்கு மதிப்பு நிறைந்த செல்​வாக்கு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் தமி​ழர்​க​ளுக்கு எதி​ரான மத்​திய அர​சின் நட​வ​டிக்​கை​களை இவர் தடுத்து நிறுத்த முன்​வ​ர​வில்லை என்று சொன்​னால் அது இவ​ரது சம்​ம​தத்​தோடு நடை​பெ​று​கி​றது என்​ப​து​தான் பொருள்.​

மு​த​ல​மைச்​சர் கரு​ணா​நிதி முன்​னின்று நடத்த இருக்​கும் உல​கத்​த​மிழ் செம்​மொழி மாநாட்​டில் பங்​கு​பெற உலக நாடு​களி​லி​ருந்து இத்​தனை இத்​தனை பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்ள இருக்​கி​றார்​கள் என்ற பட்​டி​யலை முத​ல​மைச்​சர் மிக்க பெரு​மி​தத்​து​டன் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ மற்​ற​வர்​கள் நடத்​தும் உல​கத்​த​மிழ் மாநா​டு​க​ளுக்கு வந்த பலரை வெளி​யேற்​றி​ய​வர் இப்​போது இவர் நடத்​தும் மாநாட்​டுக்​கா​வது உல​கத் தமி​ழர்​களை அனு​ம​திக்க முன்​வந்​தி​ருப்​பது மகிழ்ச்​சிக்​கு​ரி​யது.​ இவர்​க​ளில் யாரை​யே​னும் வெளி​யேற்​றா​மல் இருப்​பார் என நம்​பு​வோ​மாக.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.