Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா?

Featured Replies

சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா?

பல புத்தி ஜீவிகள், அரசியல் நுண்ணாய்வாளர்கள், வெளி நாட்டில் காகித வடிவில் தீர்வு காண முயற்சிப்போர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றம் என்ற பசப்பு வார்த்தையினை தமிழ் மக்களிடையே கூறி சரத் பொன்சேகாவை வெல்லப்பண்ண வேண்டும் என்பதில் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

இவர்களின் இந்த திட்டத்தின் மூலம் அதாவது சரத் பொன்சேகாவை வெற்றி பெற செய்வதன் மூலம் கணிசமான தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்படும் என மக்களை ஏமாற்றுகின்றனர்.

உண்மையில் இது நடக்க போவதில்லை என்பது வரலாறு ஏனெனில் பிரச்சினை சரத்பொன்சேகாவோ அல்லது மஹிந்தவோ அல்ல பிரச்சினை வரலாற்று ரீதியான தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சினை. எந்த சிங்கள தலைவர்கள் வந்தாலும் தமிழர்கள் அவர்களின் பெரும்பான்மை ஆட்சியின் கீழ்தான் வாழவேண்டும் என்பதும் அதனை ஏற்று கொள்ளவோ சகிக்கவோ முடியாது என்பதே ஏக்கம். ஆகவே இது சரத் பொன்சேகா வந்தால் தணிக்கப்படும் என்பது எவ்வளவு ஏமாற்று வித்தை.

உண்மையில் சர்வதேசம் தான் ( இந்தியா, மேற்குலகம்) இலங்கையில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முயல்கின்றது. இந்த பெரும் திட்டத்தில் கூட்டமைப்பு ஒரு பக்கம் அதற்கு ஆதரவு வழங்குவோர் ஒருபக்கம் தமக்கு ஏற்றால் போல் நியாயங்களை கற்பிக்க முயல்கின்றனர். அதாவது கூட்டமைப்பு என்ற பேரில் சம்பந்தன், மாவை, பிரேமசந்திரன் ஆகியோரின் கருத்துப்படி சர்வதேசத்தின் திட்டத்திற்கு அமைய நாம் சேர்ந்து போகவேண்டும் எனவும் அதனால் தான் தமிழர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் எனவும் வாதிடுகின்றனர். கூடவே அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புத்திஜீவிகளும் தான்.

உண்மையில் இவர்கள் என்ன செய்ய போகின்றார்கள் என்றால் சர்வதேசத்தின் திட்டத்தினை அவர்கள் இலகுவாக அடைய உதவி செய்யப்போகின்றார்கள் என்பதே ஆகும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை இதனூடாக எமது பிரச்சினை தீர்க்கப்படுமா என்பதே கேள்விக்குறியே. சர்வதேசம் தமது திட்டத்தினை இலகுவாக அதாவது தென் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஊடாக கொண்டுவருமாயின் எமது பிரச்சினை தூக்கி எறியப்படும், புறக்கணிக்கப்படும். கடமைக்காக ஏதாவது செய்ய முற்படுவார்கள் அதனை கைகட்டி ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டும். இதற்கு கூட்டமைப்பும் அல்லது புத்தி ஜீவிகளும் தயாரா? தயாராக இருக்கலாம் ஏனெனில் அதுதான் இவர்களது குணாம்சம்.

போரினால் எதனையும் அடைய முடியாது இந்தா பாருங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என கூறுபவர்கள் 30 வருடமாக போர் மூலம் எதை கிழித்தீர்கள் என கூறும் புத்திஜீவிகள், சம்பந்தன் போன்ற அரசியல் ஞானிகள், அதற்கு ஆதரவு வழங்கும் ஊடகங்கள் அனைவரும் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

1811 ஆம் ஆண்டு வன்னியில் இல் பண்டார வன்னியனின் தனித்துவமான ஆட்சி அவரது பின்வாங்கலுடன் ஆங்கிலேயரால் ஒட்டுசுட்டானில் வைத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மன்னார் , திருகோணமலை, முல்லைத்தீவு என பிராந்தியங்களில் தளம் அமைத்து 29 வருடங்கள் ஆங்கிலேயருடன் கடும் போர் நடத்தியதால் தான் இன்னமும் எமது சுயத்தை பற்றி நாம் பேசுகின்றோம். ஏன் சுய நிர்ணய உரிமைக்கான தகுதிகள் பற்றியும் இறுதியான ஓர் பதிவாக பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் இப்போ ஆட்சி மாற்றம் ஊடாக பிரச்சினையினை தீர்க்க முற்படும், ஜன நாயக முறையில், புத்திசாதூரியமாக பிரச்சினையினை தீர்க்க முடியும் என கூறுபவர்களும் சிந்தியுங்கள்.

பண்டார வன்னியன் என்ற மா மன்னனின் 29 வருட போரின் பின்னர் உங்களுக்கு (ஆட்சி மாற்றத்தினை வற்புறுத்தும் புத்தி ஜீவிகள், இராச தந்திரிகள்) 150 வருடங்கள் தரப்பட்டன. அதாவது 1811 இல் இருந்து பிரபாகரன் போர் தொடங்கும் வரைக்கான காலப்பகுதி. ஆகவே இந்த 150 வருடங்களாக நீங்கள் செய்தது என்ன? சேர் பட்டங்கள், ஆங்கில கல்வி, அரச தொழில், உயர் அந்தஸ்து, கெளரவங்கள் என்பதனை பெற்றுக்கொண்டு உரிமைகளையும், நிலங்களையும் தாரைவார்த்து கொடுத்தது தவிர வேறு என்ன செய்தீர்கள்?.

150 வருடகாலமாக செய்யாது போனதால், நிலமை கட்டுக்கடங்காது போனதால், மக்களால் எழுந்த கொந்தழிப்பினை ஆவேசத்தினை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்புடன் மீண்டும் உரிமையினை நிலை நிறுத்தவே போர் நடந்தது. ஆனால் அந்த போர், 150 வருடத்திற்கு முன்னர் நடந்த அதே போர், அதே கால அளவு. அதே பிரதேசத்தில் முடிந்தவுடன் இப்போ மீண்டும் போரினை குற்றம் சாட்டி, போர் செய்தவர்களையும் குற்றம் சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்த கூட்டங்கள் எழுந்துவிட்டன.

இதற்காக நாம் போரினை நியாயப்படுத்தவில்லை, மக்கள் துன்ப துயரங்களை தூக்கி எறியவில்லை. ஆனால் மக்கள் துன்பங்களை, துயரங்களை நீக்கப்போவதாக கூறி மக்களை ஏமாற்றி ஒட்டு மொத்த உரிமைகளையும், தியாகங்களையும், குழு தோண்டி புதைக்க முற்படுவதே வேதனை. ஏதோ எல்லாம் முடிந்து விட்டது போல ஆழுக்கொரு இயக்கங்கள், அதிரடி அறிக்கைகள் என்பன அரங்கேறுகின்றன.

கூட்டமைப்பின் சம்பந்தன் சொல்கின்றார் மக்கள் துன்பபடுவதனை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று. என்னையா கதை இது போர் நடக்கும் போது எத்தனை அகதி முகாம்களுக்கு கூட்டமைப்பு சென்றது. அல்லது சுனாமி ஏற்பட்டபோது 200 இற்கு மேற்பட்ட முகாம்களில் மக்கள் செத்து பிழைத்துக்கொண்டிருக்கும் போது எத்தனை முகாம்களை போய் சம்பந்தன் ஐய்யவும் அவரது சகாக்களும் பார்வையிட்டனர்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் சில எம்.பி க்களின் வெற்று காணிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர்களுக்கு கொட்டகை போடகூட அனுமதிக்காதவர்கள் மக்கள் துன்பம் பற்றி பேசுகின்றனர்.

அடுத்ததாக சம்பந்தன் ஐயாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளி நாட்டு பிரமுகர்கள் சிலர் 2002 இல் பேச்சுவார்த்தையின் போது தாம் என்ன செய்தவர்கள் என்பதனை மறந்துவிட்டனர். சமஸ்டி பற்றி 2002 இல் பேச்சுக்கள் எழுந்தபோது, ஒஸ்லோவுக்கு குழுவாக வந்து அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களிடம் பேசும்போது என்ன கூறினார்கள் தெரியுமா?

சமஸ்டி பற்றி பாலா அண்ணர் கதைக்கின்றார் போல கிடக்கு இது ஆபத்து, இவ்வளவு காலமும் நாம் செய்த தியாகத்திற்கு அர்த்தமே இல்லை.மாவீரர் கனவு என்ன ஆகும் என கேள்வி கேட்டனர். இதன் மூலம் பாராட்டையும் பெற்றனர். தாம்தான் தலைவரை விட உறுதியானவர்கள் என கூறியதுடன் ; சு. ப. விடம் பாலா அண்ணையினையும் போட்டு குடுத்து போதாமைக்கு தேசிய தலைவருக்கும் பாலா அண்ணை பற்றி கடிதம் எழுதினார்கள்.

ஆனால் இப்போ சம்பந்தன் ஐயா சொல்வதுதான் சரி என ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்து விட்டது இனி எங்களைப்பற்றி யாருக்கும் தெரியாது என்றா இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். ஐயா, ஐயா என்று எவ்வளவு மதிப்பு வைத்து போராளிகள் இவர்களுக்கு பணிவிடை செய்தார்கள் காரணம் இவர்களின் கொள்கை பற்றிய பேச்சு அப்படி இருந்தது.

உண்மையில் இவர்கள் யார்? யாருக்கு பின்னால் நிற்கின்றனர் என்பதனை திரும்ப திரும்ப சிந்திக்கின்றேன். சர்வதேசமும் இந்தியாவும் தமது நலன்களை பேண தீட்டிய திட்டத்தினை புலிகள் 2005 இல் புறம் தள்ளினர் காரணம் அவ்வாறு அதனை இலகுவாக சர்வதேசம் எட்டினால் எமது பிரச்சினைகள் அப்படியே கழுவப்பட்டிருக்கும். சர்வதேசம் சிங்கள ஆட்சியாளர் மீது ஆத்திரம் கொண்டு மிக கடினமான ஓர் தீர்மானம் எடுக்கும் போது அதில் தமிழீழ மக்களுக்கு சில சாதகமான தன்மைகள் வந்து சேரும் என்பது சாத்தியமான ஊகம்.

அதனால் தான் சர்வதேசத்திற்கு மேலும் ஆத்திரமூட்டும் கடினபோக்காளர்களை கொண்டுவந்து, நீறு பூர்த்த நெருப்பாக இருக்கும் தென் ஆசிய பூகோள அரசியல் சிக்கலை வெளிக்கொண்டுவந்து அதன் மூலம் எமது போராட்டத்திற்கு சாதகமான நிலையினை ஏற்படுத்தலாம் என புலிகள் எண்ணி இருக்கலாம். ஆனால் அது தமிழ் மக்களை இந்தளவு பாதிக்கும் என அவர்கள் அளவிடாமை தவறாக கூட இருக்கலாம்.

2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் வன்னிக்கு வரமுன்பாகவே சீன அதிகாரிகள் புலிகளுக்கு தூது விட்டனர் அதாவது 20 வருட வட்டியில்லா கடனில் தாம் முழு அபிவிருத்தியினையும் அதாவது வீதி, துறைமுகம், மீன்பிடி ஆகியவற்றை செய்து தருவதாக கூறினர். வன்னியில் முக்கிய அரசசார்பற்ற நிறுவனத்துடன் இந்த தூது விடப்பட்டது. ஆனால் அடுத்த வாரமே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் புலிகளில் முக்கிய உறுப்பினர்களுக்கு முதல் தர விமான சீட்டு கொடுத்து பிறசல்ஸ் இற்கு அழைத்து தாம் எல்லாவற்றையும் செய்து தருவதாக கூறினர்.

புலிகள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர் காரணம் இரண்டு; முதலாவது புலம்பெயர்மக்களின் செயற்பாட்டிற்கு மேற்குலகத்தை அனுசரித்து போகவேண்டும். இரண்டாவது இலங்கையின் உற்ற நண்பனுடன் புலிகளும் சேர்ந்து போனால் மேற்கை பகைக்கவேண்டும். இதனால் புலம்பெயர் செயற்பாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதுடன் சீனாவுடன் சேர்வது ஒப்பீட்டு ரீதியாக சாதகமாக இருக்காது என்பதே ஆகும். ஆனால் மேற்குலகம் நன்றி கடன் மறந்து நயவஞ்சகமாய் செய்ற்பட்டது வேறு கதை.

ஆகவே மேற்குலகு, சீன ஆதிக்கம் போன்ற சிக்கல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் வேளையில் இலங்கை இந்த சிக்கலுக்கு மைய புள்ளியாக இருக்கின்றது. இந்த சிக்கலை மேற்குலகம் தீர்க்கும் போது அது எமக்கும் கொஞ்சம் உதவுவதாக இருக்கும் என்பதே புலிகளின் அரசியலில் வெளி சார்பு காரணியாக இருந்தது. ஆனால் மேற்குலகின் பூகோள அரசியல் சிக்கலை தீர்ப்பதற்கான தீர்வு ஒரு சிங்கள ஆட்சியாளரை மாற்றுவதூடாகவோ அல்லது சிங்கள அரசாங்கத்தினை தமக்கு ஏற்றால் போல் மாற்றுவதன் ஊடாகவோ அமைய கூடாது என்பதே விடுதலைப்புலிகளின் விருப்பமாக இருந்தது. காரணம் இந்த அணுகுமுறை எமக்கு எதையும் தராது என்பதே.

ஆனால் சம்பந்தன் ஐயா உட்பட சரத்பொன்சேகாவை கொண்டுவந்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவர ஒற்றைக்காலில் நிற்பவர்கள் அவசரப்பட்டு சர்வதேசத்தின் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என நினைக்கின்றனர்.அதனூடாக பிரச்சினை தீர்க்கமுடியும் என நினைக்கின்றனர். இது நீண்டகாலத்தில் இல்லை குறுங்காலத்திலேயே தமிழர்களது அனைத்து போராட்டங்களையும் தியாகங்களையும் குழி தோண்டி புதைக்கும் செயலாகும் என்பது அவர்களுக்கே தெரியும்.

ஆனால் மக்களுக்கு இந்த விடயங்களை கூறி விழிப்பாக இருங்கள் என்று கூறுவதற்கு கூட அருவருக்கும் கூட்டமைப்பு தலைவர்கள் மாறாக மக்களுக்கு ஏதோ பெற்று கொடுக்க போவதாக கூறுகின்றனர். நடைமுறை பிரச்சினைகளை சரத்பொன்சேகா மட்டும் அல்ல மஹிந்தவும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கத்தான் வேண்டும் ஏனெனில் சர்வதேசம் மஹிந்த வெற்றி பெற்றாலும் சும்மா விடப்போவதில்லை. நெருக்கடிகள் கொடுத்துக்கொண்டே இருக்க மஹிந்தவும் கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது செய்யத்தான் வேண்டும். அதே போல சரத்பொன்சேகாவும் உடனடியாக எதனையும் செய்ய முடியாது இழுத்தடிப்புக்கள் நடக்கும். ஆகவே ஆட்சிமாற்றம் மூலம் , சர்வதேசத்தின் திட்டத்தின் மூலம் தான் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன, சரத் பொன்சேகா மூலம்தான் தீர்க்கப்பட்டன என்ற பெயரை கூட்டமைப்பு எடுத்து கொடுப்பதன் ஊடாக எதனை சாதிக்கப்போகின்றார்கள்?

இலகுவான விடை என்னவெனில் அவர்கள் மீட்பர்களாகி தலைமைதாங்க முற்படுகின்றார்கள். கூட்டமைப்பும் சரி, அல்லது இப்போ புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ----- கடந்த அரசாங்கம், ------ கடவாத அரசாங்கம், ஒன்றியம் எல்லோரும் அதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். அவர்களது அறிக்கைகளை அண்மையில் பார்த்தேன் அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதாவது ” இந்தியாவில் உள்ளது போன்று முன் நாள் போராளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்” என எழுதப்பட்டு இருக்கின்றது.

ஆகவே போராளிகளை ஓய்வூதியம் வழங்கி வீட்டிற்கு அனுப்பி விட்டு இனி இந்தப்பக்கமும் வரக்கூடாது, இனி எங்களின் காலம் என்று சொல்கின்றார்களா? மறுபுறமாக தமிழ் மக்களிடம் நிதி சேகரிப்பதற்கான நியாயப்படுத்தலாக இது இருக்குமோ எனவும் சிந்திக்கவேண்டி இருக்கின்றது.

ஒன்று மட்டும் உண்மை; அதாவது காலத்திற்கு காலம் செயல் திறன் உள்ளவர்களை, மக்களால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுவோர்களை வைத்து மறைமுகமாக தமது எண்ணங்களை நிறைவேற்றி கொள்ளும் மதில் மேல் பூனைகள் தான் எமது போராட்டத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள், நீடூழி வாழ்கின்றார்கள். தமிழ் மக்கள் பெரும் துன்பத்தை சுமந்தவர்கள் ஆனால் இவர்கள் துன்பத்தையும், வெற்றியினையும், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் மூலதனமாக கொண்டு வாழ நினைப்பவர்கள்.

நிச்சயமாக சர்வதேசத்தின் திட்டமான இலங்கையில் ஆட்சி மாற்றம் என்ற திட்டத்தினை வெற்றிபெற தமிழ் மக்கள் உதவினார்கள் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு நிச்சயமாக உதவபோவதில்லை. மாறாக கூட்டமைப்பின் சிலருக்கும், வெளி நாட்டில் அரசியல் செய்யும் சிலருக்கும் சர்வதேசத்தின் செங்கம்பள வரவேற்பும், மதிப்பும் கூடி இருந்து தே நீர் குடிக்கவும் உதவும் என்பதில் ஐய்யம் இல்லை. கூடவே சில பட்டங்களும் வழங்கப்படலாம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE

எனது கருத்தும் அச்சொட்டாக இதுவே...

சர்வதேசத்தின் திட்டத்தின் திட்டம் - ஒரு புதிர் ?

இத் தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றத்தால் தமிழர் பிரச்சனைகள் தீரும் என்று கூட்டமைப்பினர் நினைப்பதாக கட்டுரையாளர் நினைப்பது சுத்த அபத்தம். அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள். உலக அரசியலும் தெரிந்தவர்கள். இன்று இலங்கைத்தமிழர் இருக்கின்ற நிலையைச் சீர்படுத்த அவர்களால்தான் ஓரளவிற்கு முடியும். உலகம் இப்படித்தான் செய்யப் போகிறதென்று முன்னமும் கற்பனை செய்தோம் இப்போதும் அதையே செய்கின்றோம். உலகம் இப்படியும் செய்யலாம் என்று நாம் நினைக்கலாம்.

இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்குகளால் சரத் வெல்வாரானால், ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர் பன்மடங்கு அழிவு வரக்கூடிய இன்னொரு ஆயுதப்போரை எம் எதிர்காலச் சந்ததிக்கு எம் அரசியல் முதிர்ச்சியின்மையால் கையளித்ததாகவே கொள்ளப்படும்

மீண்டும் (சரத் தமிழர்களால் வெல்லப்பட்டால்),

2009: தமிழர்களின் இராணுவ ரீதியான தோல்வி. 2010: தமிழர்களின் பிரச்சனைகளின் அடிப்படையான அரசியல் கோரிக்கையினது,படு தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கட்டுரையாளரும், ஈ.பி.டி.பி. LTTE பெயரில் இராணுவ பாதுகாப்புடன் வினியோகிக்கும் துண்டுபிரசுரமும் கேட்டுக்கொள்ளும் படி தேர்தலில் வாக்குபோடாமல் விடுவதன் மூலம் மகிந்த சகோதரர்களை வெற்றிபெற செய்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

மகிந்த சகோதரர்களை வெற்றிபெற செய்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

சரத்தை வெற்றி பெறச்செய்வதன் மூலம் தமிழர் பிரச்சனை தீர்ந்துடுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சகோதரர்களை வெற்றிபெற செய்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

சரத்தை வெற்றி பெறச்செய்வதன் மூலம் தமிழர் பிரச்சனை தீர்ந்துடுமா?

அன்று தொடக்கம் ஒரு சிங்களவனை வெற்றிபெறச்செய்து அழகுபார்த்து-

-அவனிடம் தர்ம அடி வாங்குவதில் தமிழர்களுக்கு ஒரு அலாதிப்பிரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

இப்போது தமிழரின் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக கூட்டமைப்பினரே உள்ளார்கள். வேறு தெரிவு இல்லை என்பதே உண்மை.

.

தமிழர் தரப்பு சர்வதேச அரசியல் செய்யவில்லை.

புதிய உலக ஒழுங்கிற்கேற்ப எமது தலைமை முடிவுகளை எடுக்கவில்லை.

இலங்கையில் இருக்கும் அனைத்துத் தமிழ் அரசியற் சக்திகளுடனும் இனி நாம் சேர்ந்து செயற்படவேண்டும் என்ற அறிக்கைகள். மே 19 இற்குப் பின் தொடர்ச்சியாக வெளிவந்த நாட்களில் இது போன்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கவேண்டும்.

இத் தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றத்தால் தமிழர் பிரச்சனைகள் தீரும் என்று கூட்டமைப்பினர் நினைப்பதாக கட்டுரையாளர் நினைப்பது சுத்த அபத்தம். அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள். உலக அரசியலும் தெரிந்தவர்கள். இன்று இலங்கைத்தமிழர் இருக்கின்ற நிலையைச் சீர்படுத்த அவர்களால்தான் ஓரளவிற்கு முடியும். உலகம் இப்படித்தான் செய்யப் போகிறதென்று முன்னமும் கற்பனை செய்தோம் இப்போதும் அதையே செய்கின்றோம். உலகம் இப்படியும் செய்யலாம் என்று நாம் நினைக்கலாம்.

2001 வரைக்கும் சிங்கள அரசாங்கங்களை ஆதரித்து பணிந்து தமிழர்களுக்கு எதுவும் செய்யாது இருந்த கூட்டமைப்ப கட்ச்சிகள் இப்ப செய்து போடும் எண்டு நினைக்கிறதும் அபத்தம் தான்...

இந்த தேர்தலில் கட்டுரையாளரும், ஈ.பி.டி.பி. LTTE பெயரில் இராணுவ பாதுகாப்புடன் வினியோகிக்கும் துண்டுபிரசுரமும் கேட்டுக்கொள்ளும் படி தேர்தலில் வாக்குபோடாமல் விடுவதன் மூலம் மகிந்த சகோதரர்களை வெற்றிபெற செய்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடுவதின் மூலம் இலங்கையில் முதல் முதலில் தமிழர் ஏகோப்பித்த ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக ஒருவரை தெரிவு செய்வது மட்டும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா...???

.இப்போது தமிழரின் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக கூட்டமைப்பினரே உள்ளார்கள். வேறு தெரிவு இல்லை என்பதே உண்மை

எப்போதில் இருந்து கூட்டமைப்பினர் தமிழர் பிரதிநிதிகளானவர்கள்....??? 2001 ல் இருந்து...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதில் இருந்து கூட்டமைப்பினர் தமிழர் பிரதிநிதிகளானவர்கள்....??? 2001 ல் இருந்து...???

கூட்டமைப்பு உருவாக்க பட்டதில் இருந்து :wub:

கூட்டமைப்பு உருவாக்க பட்டதில் இருந்து :wub:

ஒருவேளை ஜோசப் பரராஜசிங்கம் ஐயா மட்டும் தான் கூட்டமைப்போ...??

இந்திய இராணுவ காலங்களிலை இருந்து 2001 வரை தமிழர்களை படுகொல செய்தும் எதிரி இராணுவத்துக்கு ஆதரவாக இருந்த மக்களை கடத்தி கப்பம் வாங்கின TELO , EPRLF, போண்றவர்களும் இதை எல்லாம் செய்த போது குரல் கொடுக்காது ஆதரித்து கருத்து சொல்லி கொண்டு இருந்த கூட்டணியும் தானே கூட்டமைப்பு...???

முதலிலை புலிகள் ஏன் தங்களுக்கு சமாந்தரமாக இன்னும் ஒரு தமிழர் அமைப்பை தோற்றுவித்தலை ஆதரித்தனர் எண்டாவது தெரியுமோ.... ??? அவர்கள் நல்லவர்கள் என்பதுக்காக அல்ல எண்டதாவது...???

Edited by தயா

தாங்கள் இல்லாத போதும் தமிழர் தனித்து விடப்பட கூடாது என்ற ஒரு தூர நோக்கில்தான். சண்டை தொடங்கபடும் முன்னரே உலகம் சேர்து அடிக்க்போகிறது என்ற விடயம் அவர்களுக்கு சொல்லபட்டு இருகிறது.

தாங்கள் இல்லாத போதும் தமிழர் தனித்து விடப்பட கூடாது என்ற ஒரு தூர நோக்கில்தான். சண்டை தொடங்கபடும் முன்னரே உலகம் சேர்து அடிக்க்போகிறது என்ற விடயம் அவர்களுக்கு சொல்லபட்டு இருகிறது.

அதாவது புலிகள் தாங்கள் அழிந்து போவோம் எண்டு தெரிந்து கூட்டமைப்பை தோற்றுவித்தனர் எண்டுறீர்...?? இப்ப புலிகளின் பினாமிகள் கூட்டமைப்பு அப்படியோ..???

இதை யார் கூட்டமைப்பினர் சொல்லி தந்தவையோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது புலிகள் தாங்கள் அழிந்து போவோம் எண்டு தெரிந்து கூட்டமைப்பை தோற்றுவித்தனர் எண்டுறீர்...?? இப்ப புலிகளின் பினாமிகள் கூட்டமைப்பு அப்படியோ..???

இதை யார் கூட்டமைப்பினர் சொல்லி தந்தவையோ...??

அழிந்து போவோம் என்று இல்லை, அழிந்து போனால் எல்லாம் ஒரு தூர நோக்குதான் :wub:

அழிந்து போவோம் என்று இல்லை, அழிந்து போனால் எல்லாம் ஒரு தூர நோக்குதான் :wub:

புலிகள் சம்பந்தனை உமக்கு தூரநோக்கோடை தலைவனாக்கி போட்டு போட்டினம் எண்டிறீர்.... அதுக்கும் முன்னம் கூட்டமைப்புக்கு தலைவராக ஆனந்தசங்கரி வந்த போது புலிகள் அதை எதிர்க்க வில்லை ... அப்ப ஆனந்தசங்கரியும் தமிழர் பிரதிநிதியோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் சம்பந்தனை உமக்கு தூரநோக்கோடை தலைவனாக்கி போட்டு போட்டினம் எண்டிறீர்.... அதுக்கும் முன்னம் கூட்டமைப்புக்கு தலைவராக ஆனந்தசங்கரி வந்த போது புலிகள் அதை எதிர்க்க வில்லை ... அப்ப ஆனந்தசங்கரியும் தமிழர் பிரதிநிதியோ...??

ஆனந்த சங்கரி ரெண்டு கி்ழவியை கிளிநொச்சியில் வச்ச இருந்தவன் அதுதான் பிரச்சினை :wub::lol::lol::o:o மற்றரது அவனுக்கு உடும்பு கறி நல்ல பிடிக்குமாம் :lol: அவன் ஒரு நவீன மைக்கல் ஜக்சனாம். :lol::lol:

ஆனந்த சங்கரி ரெண்டு கி்ழவியை கிளிநொச்சியில் வச்ச இருந்தவன் அதுதான் பிரச்சினை :wub::lol::lol::o:o மற்றரது அவனுக்கு உடும்பு கறி நல்ல பிடிக்குமாம் :lol: அவன் ஒரு நவீன மைக்கல் ஜக்சனாம். :lol::lol:

உதை சொன்னது பாலா அண்ணை...

அதே மேடையிலை கூட்டமைப்பினர் குழப்பினால் மாலை போடுறது பற்றி பாலா அண்ணை சொன்னதும் , அவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எண்டு காட்டி கொண்டதும் மறந்து பொய் இருக்குமே....??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதை சொன்னது பாலா அண்ணை...

அதே மேடையிலை கூட்டமைப்பினர் குழப்பினால் மாலை போடுறது பற்றி பாலா அண்ணை சொன்னதும் , அவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எண்டு காட்டி கொண்டதும் மறந்து பொய் இருக்குமே....??

குழப்பினால் மாலைதானே போட வேணும், அவயள் என்ன இப்ப குழப்பியா போட்டினம், குழப்பினால் பெடியள் மா்லை போடுவினம் என்டது நல்லாவே தெரியும்.

குழப்பமுதலே ஏன் நீங்கள் அடி எடுத்து கொடுக்கிறியள் குழப்ப சொல்லி டக்கி சொல்லி விட்டவனா?

என்னத்தை குழப்ப இல்லை...??? தங்களின் பதவிக்காக இண்டு சரத்துக்கு பின்னாலை தொங்கும் கூட்டம்...! மகிந்தவுக்கு மாலை போட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி மாலை போட்ட கூட்டம் இன்னும் இருக்குதுதானே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை குழப்ப இல்லை...??? தங்களின் பதவிக்காக இண்டு சரத்துக்கு பின்னாலை தொங்கும் கூட்டம்...! மகிந்தவுக்கு மாலை போட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி மாலை போட்ட கூட்டம் இன்னும் இருக்குதுதானே...??

பதவி தேவை என்றால் மகிந்தனிடமே வாங்கி இருக்கலாம், எட்டு வாக்கு வாங்கிய டக்கிக்கே இந்துகலாசார அமைச்சு, தமிழரின் பெரும்பாண்மை வாக்கு வாங்கியவர்கழுக்கு கேட்ட அமைச்சு பதவி கிடைத்து இருக்கும், பிடிக்கவில்லை என்பதால் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். :wub:

மகிந்தவிட்ட பதவியை வாங்கினால் பிறகு யார் வோட்டு போடுவார்கள்...??? தமிழர்களை முட்டாள் ஆக்கும் முறையும் இதுதான்... இதைத்தான் நீண்ட நெடுங்காலமாக கூட்டணி செய்தும் வருகிறது... சலுகைகளுக்காக தமிழரை வித்த கூட்டம் தான் அது... அதை சொல்ல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இத் தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றத்தால் தமிழர் பிரச்சனைகள் தீரும் என்று கூட்டமைப்பினர் நினைப்பதாக கட்டுரையாளர் நினைப்பது சுத்த அபத்தம். அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள். உலக அரசியலும் தெரிந்தவர்கள். இன்று இலங்கைத்தமிழர் இருக்கின்ற நிலையைச் சீர்படுத்த அவர்களால்தான் ஓரளவிற்கு முடியும். உலகம் இப்படித்தான் செய்யப் போகிறதென்று முன்னமும் கற்பனை செய்தோம் இப்போதும் அதையே செய்கின்றோம். உலகம் இப்படியும் செய்யலாம் என்று நாம் நினைக்கலாம்.

இந்த தேர்தலில் கட்டுரையாளரும், ஈ.பி.டி.பி. LTTE பெயரில் இராணுவ பாதுகாப்புடன் வினியோகிக்கும் துண்டுபிரசுரமும் கேட்டுக்கொள்ளும் படி தேர்தலில் வாக்குபோடாமல் விடுவதன் மூலம் மகிந்த சகோதரர்களை வெற்றிபெற செய்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

.

இப்போது தமிழரின் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக கூட்டமைப்பினரே உள்ளார்கள். வேறு தெரிவு இல்லை என்பதே உண்மை.

.

கூட்டமைப்பு உருவாக்க பட்டதில் இருந்து :wub:

எனது கருத்தும்

ஆதங்கமும் இவைதான்

வெளியில கொஞ்சம் போய்வாறது நல்லது

வீட்டுக்குள்ள கிடந்து சிந்தித்து எழுதினால் இப்படித்தான் வரும்

திரும்ப திரும்ப நான் பிடித்த முயலுக்கு ..............???

தொடருங்கள்

நான் வேலைக்கு போகவேணும்

நன்றி..

நீங்கள் அடிபட்டு இப்ப என்ன செய்யபோறிங்கள்?

இந்த தேர்தலை நடத்தி தமிழர்களை கூறுபோட நினைத்தார்கள் நடந்தது... அதுக்கு ஆதாரம் இதுதானா?

கொஞ்சம் பொறுங்கோ... நீங்கள் இருவரும் சனங்களின்ர கிடக்கையை பிரதிபலிக்க முடியாது... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவு வரும்வரை அமைதி காக்கவும்....

முடிவு வந்த பிறகு தனித்திரி வைத்து கொளுத்தலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.