Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முகத்தார் வீடு - அங்கம் - 5

காலை : 7 மணி

பொண்ணம்மா : என்னப்பா மணி 7 ஆகுது எழும்புங்கோவன்

முகத்தார் : என்ன இண்டைக்கு ஒருநாள் வேளைக்கு எழும்பிப்போட்டு என்னையும் எழுப்பிறீர் என்ன விசயம்?

பொண்ணம்மா : ஜயோ இந்த மனுசனுக்கு ஒண்டும் ஞாபகமிராது உந்த கணேசன்ஸ் டெக்ஸ்ரைலிலை தீபாவளி சேல் போட்டிருக்கிறாங்கள் வேளைக்குப் போனால்தான் முன்னுக்கு நிக்கலாம் எண்டு நேற்றுச் சொன்னனான் எல்லோ மறந்திட்டியளே. .

முகத்தார் : உவங்களும் பழைய சாமான்களை விக்கிறதுக்கு புது விளையாட்டைக்; கண்டுபிடிச்சு சேல் எண்டு போடுறாங்கள் அதுசரி போணமுறை வாங்கின சீலையள் இருக்குத்தானே பிறகும் என்னத்துக்கப்பா

பொண்ணம்மா : அது போணவருஷம் இது இந்த வருஷம் அதோடையப்பா 4மணித்தியாலத்துக்கு மேலை கடைக்குள்ளை இருந்து புடவை எடுத்தா மத்தியாண சாப்பாடும் குடுக்கிறாங்கலாம்

முகத்தார் : அப்ப நானும் வாறன் இண்டைய பொழுதை கழிச்சிடலாம்

பொண்ணம்மா : எங்கை பெம்பிளையள் கூட்டம் நிப்பினம் நுழைவம் எண்டு பாக்கிறீயள் என்ன நீங்க ஓண்டும் உள்ளுக்கை வரவேண்டாம் கடையடி மட்டும் வந்தாக் காணும்

முகத்தார் : அப்ப நீர்; மட்டும் போட்டு வாருமன் நான் என்னத்துக்;கு வீணா

பொண்ணம்மா : உங்களுக்கு விளங்காது இப்ப நான் தனியப் போனால் பாக்கிற சனங்கள் என்ன சொல்லும் பொண்ணம்மா ஆட்டத்திலை வெளிக்கிட்டுட்டாள் எண்டு உங்களோடை போனால் புருஷனோடை அடக்கமா போறாள் என்பினம்தானே.

முகத்தார் : கேட்கவே சந்தோஷமா கிடக்கு அப்பிடியே அதை வீட்டிலையும் போலோ பண்ணினீர் எண்டா எவ்வளவு நல்லம்

பொண்ணம்மா : அப்பதான் இன்னும் நீங்கள் கூத்தடிக்க வசதியா இருக்கும் என்ன

முகத்தார் : சரி விடும் இப்ப உமக்கு கடையிலை சாப்பாடு எண்டா என்ரை பாடு என்ன தனியச் சமைக்கட்டோ?

பொண்ணம்மா : உங்களுக்கென்ன விசரேயப்பா வீணா அரிசியை அநியாயம் ஆக்காமல் உந்த அம்மன் கோயிலிலை அன்னதானமாம் என்னை விட்டுட்டு வந்து வாங்கிச் சாப்பிடுங்கோ

முகத்தார் : இதிலும் பாக்க ஒரு கிண்ணத்தை எடுத்துத் தாருமன் 4 வீட்டைப் போய் வாங்கிச் சாப்பிடுறன்

பொண்ணம்மா : சும்மா அலம்பிக் கொண்டிருக்காமல் எழும்பி வெளிக்கிடுங்கோ பாப்பம்

(முகத்தார் வெளிக்கிட்டு மனுசியை சைக்கிளிலை ஏத்திக் கொண்டு சுன்னாக சந்திக்குப் போறார் சைக்கிலை நிப்பாட்டியிட்டு திரும்பிப் பாத்தா சாத்திரியார் சுழண்டு கொண்டு நிக்கிறார்)

முகத்தார் : இஞ்சரும் உந்தா சாத்திரி நிக்கிறான் என்ன எண்டு கேட்டுட்டு வாறன் நிண்டு கொள்ளும்

முகத்தார் : என்ன சாத்திரி இஞ்சை சுத்திக் கொண்டு நிக்கிறாய்

சாத்திரி : இந்த கோதாரி விழுந்தவன் சேல் எண்டு போட்டு மனுசருக்:கு வீட்டிலை நிம்மதியில்லை உதுக்கைதான் முனியம்மாவும் நிக்கிறாள்

முகத்தார் : கொஞ்சம் பொறு நம்மடையும் வந்திருக்கு முனியம்மாவோடை கோத்து விட்டுட்டு வாறன்

(கூட்டத்துக்கை ஒரு மாதிரி முனியம்மாவை கண்டு பிடிச்;சு பொண்ணம்மா சேத்து விட்டுட்டு திரும்பி வந்தார் முகத்தார்)

முகத்தார் : சாத்திரி உவளவை எடுத்து முடிய 3 .4 மணித்தியாலம் செல்லும் வா இந்த தேத்தண்ணிக் கடையுக்கை இருப்பம்

சாத்திரி : நீயும் காசில்லை காசில்லை எண்டு போட்டு மனுசிக்கு எடுத்துக் குடுக்கிறாய் என்ன

முகத்தார் : பிள்ளையள் அனுப்பிற காசை எங்கை என்ரை கண்ணிலை காட்டுறாள் எல்லாம் அவனின்ரை கொண்ரோல் தானடா

சாத்திரி : ஒரு பிளேன் hP அடிச்சா நல்லா இருக்கும் சொல்லட்டே?

முகத்தார் : ஓம். . .ஓம். . பிறகு பேப்பருகள் பாத்தியோ சிறீலங்கா விமானப்படை பிளேன் ஒண்டு வன்னி பகுதிக்கை விழுந்திட்டுதாம் கேள்விப்பட்டியோ?

சாத்திரி : எப்ப நடந்தது பெரிசா வெளியிலை வரேலை கனபேர் காலியோ

முகத்தார் : நீ பேப்பர் பாக்கேலை எண்டு சொல்லு அது ஆட்களோடை விழேலை ஆளில்லாமல் பறக்கிற விமானம் யுத்த காலத்திலை எதிரிகளின்ரை நிலையை அறியிறத்துக்குப் பயன்படுத்திறவை

சாத்திரி : இப்ப எங்கடை இடத்திலைதான் யுத்தமில்லையே பிறகெதுக்கு உது பறந்ததாம்

முகத்தார் : ஆர் கேக்கிறது இது எங்கடை பெடியளின்ரை நிலைகளை படமெடுத்து தகவல் அறியத்தான் வந்திருக்கும்

சாத்திரி : முகத்தான் அப்ப இதை பெடியள்தான் அடிச்சு விழுத்தினாங்களோ தெரியாது என்ன

முகத்தார் : அதைப்பற்றி செய்தி ஒண்டும் வரேலை ஆனா இராணுவத்தாலை சொல்லியிருக்கினம் விமானம் விபத்துக்குள்ளானது எண்டு அதோடை வான் பரப்பு தங்களுக்குத்தான் சொத்தம் எண்டும் ஆனபடியால் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லையாம்

சாத்திரி : அப்ப எல்லாம் ரெடிப்பண்ணினம் எண்டு சொல்லுறாய் முகத்தான் இவர் டக்ளஸ் பிள்ளையும் மகிந்தாவுக்கு ஆதரிப்பது எண்டு நோட்டீஸ் அடிச்சு ரவுனிலையும் றிங்கோவிலையும் ஒட்டியிருக்கினமாம்

முகத்தார் : இது தெரிஞ்ச விசயம்தானே எதோ தமிழ் மக்களுக் கெண்டு 10 கோரிக்கைகளை எழுதி மகிந்தாட்டைக் குடுத்தாராம் அவரும் ஓகோ சொல்லிப்போட்டாராம்

சாத்திரி : பாரன் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை எழுதிக் கேட்டுட்டு தமிழ் மக்கள் எண்டு விடுகிற வடிவை.

முகத்தார் : இவர் திடீரென மகிந்தாட்டைப் போய் கதைச்சதாலை அம்மாக்கும் லேசான மனக்கசப்பாம் பிறகு இவர் அம்மாவை சந்திக்க கேக்க மறுத்திட்டாவாம்

சாத்திரி : பின்னை மனுசிக்கு கோவம் வரும்தானே உவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது ஆர் மனுசிதானே மகிந்தாட்டை கதைக்கமுன்னம் மனுசிட்டை ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம்

முகத்தார் : அவரும் பாத்தார் மனுசின்ரை ஆட்டம் இன்னும் கொஞ்ச நாளிலை சரி அப்ப இனி மகிந்தாவை பிடிப்பம் எண்டு

சாத்திரி : அப்ப சொல்லுறாய் எலும்புத்துண்டை ஆர் போட்டாலும் கவ்வுறத்துக்கு ரெடி எண்டு நல்ல விசயம்

முகத்தார் : சாத்திரி மெல்லக் கதை ரோட்டிலை மோட்டாசைக்கிள் சத்தம் கேக்குது

சாத்திரி : அப்ப வாவன் அப்பிடியே போய் புடவைக்கடைக்குப் பக்கத்திலை நிப்பம்

(இருவரும் புடவைக்கடையடிக்கு வரவும் பொண்ணம்மாக்காவும் முனியம்மாவும் பைகளுடன் வெளியிலை வருகிறார்கள்)

முகத்தார் : சாத்திரி அதிசயத்தைப்பாரன் பெண்டுகள் சொப்பிங் முடிச்சிட்டினம் போல கிடக்கு

பொண்ணம்மா : என்னப்பா இன்னும் போகலையே நல்லதாப் போச்சு கடைக்கிலை நிலமையைப் பாத்தா சாப்பாடு போடுற மாதிரி தெரியேலை அதுதான் மினைக்கிடாமல் எடுத்தவுடனை வந்திட்டம்

முகத்தார் : அது சரி என்ன எடுத்தனீர்? எனக்கு 2 ஜட்டி எடுக்கச் சொன்னன் எடுத்தனீரோ?

பொண்ணம்மா: என்ன விவஸ்த்தை கெட்ட மனுசனாக்கிடக்கு உங்களுக்கு இப்ப என்னத்துக்கு ஜட்டி வீட்டை வாங்கோ பழைய சீலை கிடக்கு கிழிச்சுத்தாறன் ரோட்டிலை என்ரை மானத்தை வாங்காம நடவுங்கோ பாப்பம்

முகத்தார் : (மனசுக்குள்) சா. . . .கொஞ்சமாவது முன்னேறுவம் எண்டு பாத்தா விடமாட்டாளவை. . . . . :lol::lol::lol:

(யாவும் கற்பனை)

ம்ம்ம்..... நல்லாயிருக்கு தாத்தா :wink: :lol: :P :lol::lol:

கணேசன்ஸ் டெக்ஸ்ரைலிலை தீபாவளி சேல் இப்பவும் இருக்கா முகம்ஸ்?? ;)

அசத்துறிங்க :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :lol:

:lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் வீடு - பகுதி 1

ஒரு பேப்பரில் பிரசுரமாகி உள்ளது. வாசித்தீர்களா முகம்ஸ். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் தாத்தா :P

சூப்பர் முகத்தார் :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

கணேசன்ஸ் டெக்ஸ்ரைலிலை தீபாவளி சேல் இப்பவும் இருக்கா முகம்ஸ்?? ;)

அசத்துறிங்க :lol:

ஏன் போற plana? அது பொண்ணுங்களுக்கு தானாம் பையன்களுக்கு இல்லையாம்.. :):lol:

ஆனால் பையங்க பொண்ணுங்களுக்கு எடுத்துகுடுக்கலாம் [அம்மா, அக்காவை சொன்னேன்....தப்பாவே நினைப்பிங்களே]

பொண்ணம்மாக்கா: வாங்கோ சாத்திரி உங்களை நினைக்க நீங்கள் வாறியள் உள்ளையிருங்கோ அவர் குளிக்கிறார் உங்களிட்டை ஒரு விசயம் கேக்க வேணும் நாங்கள் 60ம் கலியாணம் செய்யலாமெண்டு இருக்கிறன் அவரிட்டை இன்னும் கேக்கேல்லை ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்கோ

அய்யோ எண்டு அலறியபடி சாத்திரி வீதியில் இறங்கி ஓடுகிறார்

:P :P :P :P

:):lol::lol:

முகத்தார் : அது சரி என்ன எடுத்தனீர்? எனக்கு 2 ஜட்டி எடுக்கச் சொன்னன் எடுத்தனீரோ?

பொண்ணம்மா: என்ன விவஸ்த்தை கெட்ட மனுசனாக்கிடக்கு உங்களுக்கு இப்ப என்னத்துக்கு ஜட்டி வீட்டை வாங்கோ பழைய சீலை கிடக்கு கிழிச்சுத்தாறன் ரோட்டிலை என்ரை மானத்தை வாங்காம நடவுங்கோ பாப்பம்

:):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் தாத்தா :lol::lol: :P :P

முகத்தார் வீடு - பகுதி 1

ஒரு பேப்பரில் பிரசுரமாகி உள்ளது. வாசித்தீர்களா முகம்ஸ். :P

அப்ப முகத்தார் ஐயா பேமஸ் ஆயிட்டார்..

ஒரு ஆட்டோகிராப் போடுங்க தலைவா :lol:

:lol::lol::lol:

ஒ முகத்தார் அப்படியும் ஒரு வழி இருக்க? எனக்கு தெரியமல் போச்சு அநியாயமா காசை வீண் அக்கிட்டேனே :P :P

  • தொடங்கியவர்

முகத்தார் வீடு - அங்கம் 6

(முகத்தார் வெளிவிறாந்தையில் பக்கத்தி வீட்டுப் பிள்ளைக்ளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் )

பொண்ணம்மா: இங்சருங்கோ எங்கையப்பா இருக்கிறீயள்?

முகத்தார் : ஏனடியப்பா 4 வீட்டுக்கு கேக்கிற மாதிரி கத்திறீர் இஞ்சைதான் இருக்கிறன்

பொண்ணம்மா: உங்களுக்கு தலை கிலை ஏதன் கழண்டு போச்சோ சின்னப் பிள்ளைகளை வைச்சுக் கொண்டு பெம்பிளைக்கதை சொல்லிக் கொண்டிருக்கிறீயள்

முகத்தார் : அவங்கள்தான் கேட்டாங்கள் குட்டிக் கதை சொல்லச் சொல்லி அதுதான்.

பொண்ணம்மா: முந்தி வாங்கினதுகள் காணாதுபோல திரும்பவும் தொடங்கிட்டீயள் பெடியளை கலைச்சுப் போட்டு போங்கோ பாப்பம் குசினிக்கு

(முகத்தார் பிள்ளைகளை அனுப்பி விட்டு குசினிக்கு வருகிறார்)

பொண்ணம்மா: உன்னாலையப்பா கேக்கிறன் இரவு கனவிலை ஆரைக் கண்டனீயள்?

முகத்தார் : (பயந்தபடி) எல்லாம் நீதான்டியம்மா

பொண்ணம்மா: எனக்கப்பிடி தெரியலையே கனவிலை சிரிச்ச மாதிரி கிடந்திச்சு

முகத்தார் : (சமாளித்தபடி) அதுவந்து உம்மை பழைய கோலத்திலை பாத்தன் சிரிப்பு வந்திட்டுது இப்ப எப்பிடி இருக்கிறீர்

பொண்ணம்மா: (வாய்க்குள் சிரிப்புடன்) உண்மையா. . .

முகத்தார் : (நல்ல காலம் கனவிலை ஜோதிகா எண்டு பேரைச் சொல்லிச் சிரிச்சிருந்தா இண்டைக்குச் சங்குதான்)

(இந்த நேரம் வீட்டு அழைப்பு மணியடிக்குது )

முகத்தார் : மணியடிக்குது யாரோ வந்திருக்கினம் போல

பொண்ணம்மா: பின்ன தன்ரைபாட்டிலை அது அடிக்குதே போய் பாருங்கோ பாப்பம்

(முகத்தார் எழுந்து போகிறார் பொண்ணம்மாவும் பின்னால் போறா கதவைத் திறந்ததும்)

வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்

பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ

வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்

பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்

முகத்தார் : என்னடியப்பா மாடு மாதிரி வேலை செய்யிறன் என்னையே தாரை வாக்க நிக்கிறீரே உந்தா வந்தவங்கள் படலையை திறந்திட்டுப் போட்டாங்கள் சாத்திப் போட்டு வாறன்

(படலையை சாத்திய முகத்தார் றோட்டிலை இருந்த மதகில் சிறுது நேரம் இளைப்பாறுவம் எண்டு இருக்கிறார் இந்த நேரம் சின்னப்புவும் சாத்திரியும் போவது தெரிய கை தட்டி கூப்பிடுகிறார்)

முகத்தார் : என்னடாப்பா வீட்டுப்பக்கம் திரும்பிப் பாக்காமலே போறீயள்?

சின்னப்பு : இந்த நேரம் உங்கை வந்து உன்னைக் குழப்பி பொண்ணம்மாட்டை வேண்டிக் கட்ட எங்களாலை ஏலாது

சாத்திரி : இல்லை முகத்தான் ஒரு பிரச்சனை வேவின்ரை பெடிச்சுக்கு பேய் பிடிச்சிட்டுதாம் என்னை வந்து பாக்கச் சொன்னவை தனியப் போகப் பயத்திலை சின்னப்புவையும் கூட்டிட்டு போறன்

முகத்தார் : நீங்க தானே கலைக்கிற ஆட்கள் பிறகு பயப்பிட்டால் காசு கறக்கிறதுக்கு நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதை

சாத்திரி : சும்மா ஏத்தி விடாதை எதோ நாலு ரேகையைப் பாத்து ஆக்களிண்டை வசதியையும் வைச்சு ஒரு கணக்கிலை அள்ளிவிடுறன் அதுவும் சரியா வருகுது என்னை போய் பேய் கலையெண்டால் இரவானால் முனியம்மா இல்லாமல் வீட்டாலை இறங்க மாட்டன்

சின்னப்பு : அதுசரிதான் முனியம்மா வந்தா எந்த முனியும் கிட்ட வராதுதானே

சாத்திரி : பேய்களின்ரை வகைகளைத் தெரியாமல் சும்மா பகிடி விடுறீயள் சிலநாட்களிலை படுத்தா மூச்செடுக்க முடியாம யாரோ அமத்திற மாதிரி உங்களுக்கு நடக்கேலையோ

முகத்தார் : சாத்திரி இரவிலை சாப்பிடேக்கை ஓசிலை கிடைக்குதெண்டுட்டு கழுத்து மட்டும் தின்னப்;பிடாது அப்பிடி சாப்பிட்டா செமிக்கிறதுக்கு எங்கை இடமிருக்கு இனி சாப்பிட்டவுடனை படுக்காமல் கொஞ்சம் நடந்து திரிஞ்சுட்டுப் படுத்தா உந்த வியாதிப் பேய் எங்கை வரப் போகுது

சின்னப்பு : இன்னொண்டு மோகினிப் பேய் எண்டு சொல்லுறாங்கள் நானும் ம. .பிலை எத்தினை நாள் இரவிலை திரிஞ்சிருப்பன் கண்ணிலையே காணேலையே

சாத்திரி : உன்னைக் கண்டவுடனை மோகினிப் பேயே ஓடி ஒளிச்சிருக்கும் எங்கை

கடன் எதன் கேக்கப் போறீயோ எண்டு

முகத்தார் : இதெல்லாம் மனப் பயம் கண்டியோ தனியப் போற ஆட்களுக்குத் தானே இப்பிடியெல்லாம் நடக்குது எண்டு கேள்விப் படுறம்

சின்னப்பு : எனக்கெண்டா உந்தப் பேய்ளுக்கு பயமேயில்லை சாமத்திலும் சுடலைக்கு போட்டு வரச் சொல்லுங்கோ போட்டு வாறன்

சாத்திரி : நீ சுடலைக்கு போவாய் ஆனா உன்னைக் கண்டு மற்ற சனங்கள் பேய் எண்டு ஓடாட்டிச் சரி

முகத்தார் : சாத்திரி இந்த கதையைக் கேள் முன்னமொருக்கா மருதடிதிருவிழா மூட்டம் இரவு சோடனை வேலேலை இருக்கேக்கை ரைக்கருக்கு சொல்லச் சொல்லி என்னை நவாலிக்கு போட்டு வரச் சொல்லிச்சினம் தனியபோக விசர் எண்டுட்டு கூட்டாளி ஒருவரையும் சேர்த்துக் கொண்டு பிபிலிச் சுடலையடியாலை போனன் இரவு 1மணியிருக்கும் உனக்குத் தெரியும்தானே பிபிலிசுடலை ஒருபக்கம் எங்கடைசுடலை மற்றப் பக்கம் வேதக்காரற்றை எங்கடை சுடலைக்கை சவம் ஒண்டு எரிஞ்சு தணல் மட்டும் இருக்குது சைக்கிலை கதைச்சுக் கொண்டு போகேக்கை என்னோடை வந்தவன் இழுக்குதடா. . .இழுக்குதடா. . எண்டு கத்தத் தொடங்கினான் எழும்பி நிண்டு உழக்கினன் பார் சைக்கிலை மேடு பள்ளம் எங்கை போனதெண்டு தெரியாது தூரப் போய் ஒரு றோட் லைட்டுக்கு கீழை நிண்டு என்னோடை வந்தவனை பாத்தன் வேர்வையாலை நனைஞ்சுபோய் வாறான் எங்கை இழுத்தது எண்டு கேட்டன் கால்சட.;டையைக் காட்டினான் அதில் நாயுருவி கொளுக்கிகள் இருந்திச்சு றோட்டுக்கரையிலை இருக்கிற இந்த புல்தான் கால்சட்டேலை கொளுவி இழுத்திருக்கு இதைத்தான் பேய் இழுத்தது எண்டு பிடரிலை கால்பட நாங்கள் ஓடினது. . .

சாத்திரி : முந்தி சங்கானேலையிருந்து இரவிலை குழைக்கட்டு ஏத்திக் கொண்டு வாற வண்டில் மாடுகள் சில இடத்திலை அசையமுடியாமல் கஸ்டப்படுமாம் பேய்கள்தான் வழி மறிக்கிறதெண்டு அப்பு சொல்லுறவர்

முகத்தார் : அளவுக்கதிகமா லோட்டை வண்டிலிலை ஏத்தினா மாடுதான் என்ன செய்யும்

சின்னப்பு : சாத்திரி சங்குவேலிக்கை ஒரு பெம்பிளை பேயாட்டுறாவாம் அவவிட்டை அந்த பிள்ளையை அனுப்பி விடன்

சாத்திரி : எதுக்கும் ஒருக்கா நான் போய் பாத்திட்டு சொல்லுவம்

முகத்தார் : சின்னப்பு நானும் சில நாளிலை இரவுநேரம் சங்குவேலிக்கிலாலை போகேக்கை உடுக்குச் சத்தங்கள் கே;கிறதுதான் அது உந்த கூத்தோ. . .?

சின்னப்பு : அது பெரிய ஆட்டம் மச்சான் வேப்பமிலையடிச்சு ஆட பெடிச்சிகளும் எழும்பி ஆட சிலுக்கு டான்ஸ் தோத்துப் போகும்

சாத்திரி : சின்னப்பு என்ன போய் பாத்திருக்கிறாய் போலக்கிடக்கு

சின்னப்பு : ஓம். . .ஓம் . . ஒருக்கா என்ன நடக்குதெண்டு பாக்கிறதுக்கு போனனான் போகேக்கை கொஞ்சம் போட்டுட்டு போனதாலை பம்பலாக்கிடந்திச்சு மனுசி வந்து பலகேலை இருந்திட்டு நிமிந்து பாத்தா நான் நேரை நிக்கிறன் உள்ளுக்கை போனதும் வேலை செய்ய சிரிச்சபடிதான் நிண்டன் மனிசி இதைக்கண்டுட்டு கண்ணை மூடி ஏதோ எல்லாம் சொல்லிச்சு கண்ணை திறந்து பாத்தா நான் பழைய மாதிரித்தான் உடனை உடுக்கடிக்கிறவனைக் கூப்பிட்டு சொல்லிச்சு இந்த கூட்டத்திலை கெட்ட நோக்கத்தோடை ஒருதன் வந்திருக்கிறான் அவனைப் போகச் சொல்லு எண்டு அவனும் நீ தான் தாயே அவனை அடையாளம் காட்ட வேணும் எண்டான் மனுசி மெல்ல எழும்பி கையிலை வேப்பமிலையுடன் ஆடி ஆடி எனக்குக் கிட்ட வந்திச்சு இவன்தான் எண்டு கொஞ்ச விபுதியை எறிஞ்சிட்டு வேப்பமிலையாலை சாத்திச்சு பார் சாத்து அடிச்சதெல்லாம் குப் பெண்டு இறங்கிட்டுது எப்பிடி தப்பி வந்ததே பெரிய காரியம்

முகத்தார் : என்ன சின்னப்பு வீட்டிலைதான் அப்பிடி எண்டா வெளியிலுமா. . .?

சாத்திரி : பின்னை என்ன பல்லைக் காட்டிக் கொண்டு மனுசிக்கு முன்னாலை நிண்டா ஆருக்குத்தான் கோவம் வராது

முகத்தார் : இனி இதோடை சின்னப்புவோடை பழைய கறளுகளோ தெரியலை என்ன

சின்னப்பு : ஆனா இந்த உடுக்கடிக்கு குமர்ப்பிள்ளையள் எழும்பி ஆடுதுகள் எண்டாப் பாரன்

முகத்தார் : இது நரம்புதளர்ச்சி சிலபேருக்கு இந்த உடுக்குச் சத்தம் வேப்பமிலை மணம் இதெல்லாம் கேட்டவுடனை தங்களையே மறந்து விடுவினம்

சாத்திரி : இப்ப கோயில்களிலை உரு ஆடுறதும் இது மாதிரி ஒண்டுதான் என்ன.

சின்னப்பு : கோயிலிலை சில பேருக்கு பெட்டையளைக் கண்டவுடனை எல்லோ உரு வரும் ஆடிக் கொண்டு கிட்டப் போய் பாக்கலாமே

முகத்தார் : கிட்டப் போய் பாக்கலாம்தான் ஆனா சாமி வருகுது எண்டுட்டு தேங்காயை தலையிலை உடைச்சாளவை எண்டா கபாளம் பிளந்திடுமே. . . .

சாத்திரி : உங்களேடை கதைச்சு நேரம் போட்டுது வா சின்னப்பு வேவி வீட்டைப் போட்டு வருவம்

முகத்தார் : சாத்திரி உந்த பேய் பிடிச்ச பெடிச்சிக்கு என்ன வயசிருக்கும்

சாத்திரி : ஒரு 25க்கும் 30க்கும் இடையிலைதான் எண்டு நினைக்கிறன்

முகத்தார் : இதுக்கொரு வைத்தியம் சொல்லட்டே ஒரு இளம்தாரி பெடியனைக் கூட்டிட்டு போ மெல்ல அந்த பெடிச்சின்ரை காதுக்கை ஜ லவ் யு எண்டு பெடியனை சொல்ல சொல்லு பிறகு பாரன்

சாத்திரி : சின்னப்பு உவன் முகத்தான் வேப்பமரத்திலை கட்டி வைச்சு அடி வாங்கிறத்துக்கு வழி சொல்லறான் கேளன். . .

(கற்பனை)

அங்கிள் மீண்டும் அசத்திட்டீங்கள்

உந்த Nஐhதிகாவின் கதையை கொஞ்சம் கூட போட்டு நீங்கள் முழுசுறதை ஒருக்கால் வேடிக்கை பார்க்க வி;ட்டீருக்கலாம் :lol::lol: ..... களத்து பேய் கதைகளை உங்கள் பாணியில் தந்திருக்கிறீர்கள் அங்கிள்...

சிரிக்க வைத்தற்கு நன்றி அங்கிள்

தீபாவளி ரீலிசா ஒரு ஸ்பெசல் தரலாமே?

  • தொடங்கியவர்

பிள்ளை தீபாவளி ரிலீஸ்தான் இது. கனபேர் நாளைக்கு புதுசா போடுவினம் அதுதான் இண்டைக்கே இதை போட்டாச்சு...தீபாவளி நல்ல நாளில் உறவுகளை சிரிக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

(சாத்திரி டண் எதாவது பெரிசா போடுவினம்)

  • கருத்துக்கள உறவுகள்

superb அசத்துறீங்க.......... :lol::lol:

kurukaalapoovan சொன்ன நகைச்சுவை புரியவில்லை :roll: :roll: :roll:

முகத்தார் எழுதியது:

(சாத்திரி டண் எதாவது பெரிசா போடுவினம்)

அட முகத்தார் டண்ணும் சாத்திரியும் அவையின்ரை அப்பாக்களின் உடுப்புக்களை போடுற விசயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா????? :roll: :roll:

முகத்தார் வீடு - அங்கம் 6

வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்

பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ

வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்

பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்

:lol::lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.