Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மச்சாங் மகிந்த வெண்டது சோரு சாப்புங்கலாம்..வாங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

soru.jpg

தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை

தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர்களே போங்கடா நீங்களும் உங்கடை ஒட்டும் நீங்கள் ஓட்டு போட்டாலென்ன போடாட்டிலென்ன இலங்கையின் சனாதிபதி சனநாயக முறையிலை தேர்தெடுக்கப்படுவார் எண்டு பெரிய அபாயகரமான உண்மையையும் இந்தத் தேர்தல் தமிழருக்கு பாடம் புகட்டியிருக்கு..

இது இப்பிடியிருக்க தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்திருக்கினம்..தமிழர்களின்ரை ஓட்டு பெரும்பாலானது பொன்ணண்ணைக்கே விழுந்திருக்கு..ஆனாலும் என்ன பொன்னண்ணை விழுந்து போனார்..முக்கியமாய் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா.பிள்ளையான் இனியபாரதி எண்டிற மூன்று ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலையும்..அவங்களையும் மகிந்தாவைவும் சேர்த்து தூக்கி எறிஞ்சது மட்டுமில்லை கருணாவின்ரை பிரிவுக்கு பிறகு மட்டக்கிளப்பான் எண்டாலே எல்லாரும் துரோகியள் எண்டு நினைத்த யாழ்ப்பாணியளிற்கும்..குறிப்பாக புறணி சொன்ன புலம்பெயர் யாழ்ப்பாணியளிற்கும் மட்டக்கிளப்பு மக்கள் தங்கடை வாக்குச் சீட்டாலை ஓங்கி உச்சி மண்டையிலை அடிச்சு நாங்கள் சோரம் போகிற துரோகியள் இல்லை எப்பவும் தன்மான தமிழராய்தான் இருப்பம் எண்டு உரத்து சொல்லியிருக்கினம்..இனியாவது உறைக்குதா பாப்பம்..அடுத்ததாய் மன்னார்.. வவுனியா.திருகோணமலை ..மலையகம் எண்டு எல்லா இடத்திலையுமே 50 வீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிச்சிருக்கினம்..தேர்தல் நிலவரம் இங்கு அழுத்தவும்

யர்ப்பாணத்திலை மட்டும் காலங்காத்தாலை நடந்த குண்டு வெடிப்பு ..போக்குவரத்து தடங்கல்..எண்டது மட்டுமில்லாமல்.. புலம்பெயர் தேசத்து போலி புலிகளின்ரை புறக்கணிப்பு அறிக்கைகளும்..யாப்பாணத்திலை புலிகளின்ரை பெயரிலை ஒட்டின போலி நோட்டிசுகள்களாலையும் சனம் குழம்பி..பயந்து..அக்கறையில்லாமல்..20 வீத வாக்களிப்பு மட்டுமே நடந்தது..அது மட்டுமில்லால் யாழ்ப்பாணத்திலை வாக்காளர் எண்ணிக்கைப்படி 721,359 வாக்காளர்..அதிலை 300.000 வாக்காளர் அட்டைகளே வழங்கப்பட்டிருந்தது..இதுபற்றி கூட்டமைப்பும் தேர்தல் ஆணையத்திட்டை புகார் குடுத்திருந்தவை.அதிலையும் 168,583

வாக்குகள் விழுந்திருக்கு..மிச்ச வாக்காளர்கள் பலர் வேறை இடங்களிலையோ வெளிநாடுகளிலையோ வாழலாம்.அப்பிடிப் பாத்தாலும் 50 வீதம் வாக்குகள் யர்ப்பாணத்திலை விழுந்திருக்கு..இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்

இந்த யாப்பாண மாவட்ட வாக்களிப்பு விபரத்தை மட்டுமே வைச்சு புலம்பெயர் தேசத்திலை தமிழ்தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிக்கிறதாய் நினைக்கிற இணைய ஊடகங்களிலை இங்கு அழுத்தவும்யாரோ சேரமான் எண்டிற ஒரு டுபுக்கு கட்டுரை ஒண்டை எழுதியிருக்கிறார்..இவரின்ரை பார்வையிலையும் யாழ்ப்பாணம் மட்டுமதான் தமிழீழம்..அங்கை வாழுற மக்கள் மட்டும்தான் தமிழர்..எண்டிற நினைப்பிலை மற்றைய தமிழர் வாழுற மாவட்டங்களின்ரை வாக்கெடுப்பு வீதத்தை பாக்காமல் எழுதியிருக்கிறார்..அங்கை மக்கள் தேர்தலை புறக்கணிச்சதாலை இஞ்சை இவரின்ரைஇதயத்திலை பட்டாம்பூச்சி வேறை பறக்குதாம்..மானாட மயிலாவிலை நமீதாவை பாத்திட்டு கட்டுரையை எழுதியிருப்பார் போலை..அதுதான் பட்டாம் பூச்சி பறந்திருக்கு... அதை பிடிச்சு நச்செண்டு நசிக்க...அதென்னமே தெரியேல்லை வெளிநாடுகளிலை வட்டுக்கோட்டைக்கு 20 வீதம் மக்கள் வாக்களிச்சால் மட்டும்.99.9 வீதம் வெற்றி எண்டு எழுதுவாங்கள்..அதே 20 வீதம் மக்கள் யர்ப்பாணத்திலை வாக்களிச்சால்..மக்கள் புறக்கணிச்சிட்டினம்..வாக்கெடுப்பு தோல்வி ..பட்டாம் பூச்சி பறக்குதெண்டு எழுத எப்பிடித்தான் இவங்களுக்கு மனசு வருகுதோ.. தமிழனுக்கு அரசியல்தான் சுத்த சூனியம் எண்டால் இவங்கள் கணக்கிலையுமல்லோ சுத்தசூனியமாய் இருக்கிறாங்கள் எண்டு இதுகளை பாத்து வெளிநாட்டுக்காரன் நினைக்கப் போறான்.....சாமி நீதான் இவங்களுக்கு நல்ல புத்தியை ..குடுக்கவேணும்..

eelam.jpg

தேர்தல் முடிவுகள் நீலம்.மகிந்தா...பச்சை.பொன்சேகா

இந்தமுறை தேர்தல் நடந்த முடிஞ்ச இடங்களின்லை விபரங்களை இலைங்கை வரைபடத்திலை பாத்தவுடைனை எனக்கு இரண்டு விசயம் சட்டெண்டு நினைவுக்கு வந்திச்சிது..

1)கொஞ்சக் காலத்துக்கு முதல் மஞ்சள் சிவப்பிலை இருந்த இடங்கள் எல்லாம் பச்சையாய் மாறிப்போயிருக்கு..ஒவ்வொரு தமிழ் இளையவர்களும் ஆயுதத்தை கையிலை தூக்கேக்குள்ளை கனவிலையும் நினைச்சு பாத்திருக்க முடியாத மாற்றம்..இது அடுத்த தேர்தலிலை நீலமும் பச்சையுமாய் மாறிப்போகலாம்..இல்லாட்டி முழுக்க நீலமாகவே மாறியும் போகலாம்.. எனவே இனிமேலாவது இப்படி வெறும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகளை எழுதாமல் உண்மையை எழுதுங்கோ..இதை எழுதினதுக்காக என்னைப் போட்டு திட்டாமல் இதக்கான காரணம் என்ன??ஏன் இப்படியெல்லாம்.நடந்தது..இனி என்ன செய்யலாம் எண்டதை தயவு செய்து யோசியுங்கோ..இல்லாட்டி அங்கை மிச்சமிருக்கிற சோரு சாப்புங்குற தமிழர்களும் றபான் அடித்து கிரிபத் கிண்டி சாப்புடுகின்ற நிலைமைக்கு தள்ளப் படுவினம்..

2) ஆயுதப் போராட்டம் தொடங்கின எழுபதுகளிலை ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைச்சு இதுதான் தமிழீழம் எண்டு கீறிக்காட்டின படம்..அந்த நேரம் நான் சின்னப்பெடியன் நானும் நினைச்சன் ஆகா மலையகமும் எங்களுக்குத்தானாம்..தமிழீம் கிடைச்சால் அங்கை போய் தேயிலைத் தோட்டத்துக்குள்ளை ஒழிச்சுப் பிடிச்சு விழையாடலாமெண்டெல்லாம் நினைச்சன் (எனது நண்பர்களான ஈரோஸ் தோழர்கள் மன்னிக்கவும்) கன காலத்துக்குப் பிறகு அதே மலையகத்திலை நான் ஒழிச்சிருந்த நேரம் பொலி்ஸ் வந்து என்னைப் பிடிச்சுக்கொண்டு போன கதையும் நடந்தது.

Prem_elephantpass.jpg

ஆனையிறவில் பிரமாண்டமான படையினரின்வெற்றிச் சின்னம்

தேர்தல் முடிவுகள் வந்தால் பிறகு த.தே.கூட்டமைப்பு தனிய நிண்டிருக்கலாம் விசர் வேலை பாத்திட்டினம் எண்டு எல்லாரும் திட்டித்தீர்க்கினம்..வெண்டிருந்தால் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளியிருப்பினம்..கூட்டமைப்பு காரர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்த நேரம் அவையள் சில பேரோடை நான் கதைச்சு தனிய நிக்கேலாதோ எண்டு கேட்டிருந்தனான்..அதுக்கு அவை சொன்ன பதில்.. புலியளின்ரை பின் பலம் இல்லாமல் போனால் பிறகு எங்களாலை இரண்டு பெரிய எதிரிகளையும் ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்திலை எதிர்க ஏலாது அப்பிடி எதிர்த்தால்..எங்கடை படங்களுக்கு நீங்கள் மாலை போடவேண்டியிருக்கும்..ஆழையாள் மாறி மாறி போட்டிட்டு தங்களுக்குத் தெரியாண்டிட்டு போய் கொண்டிருப்பாகங்கள் .இல்லாட்டி நாங்களும் மொத்தமாய் வெளிநாடுகளிலை வந்து அசேலம்..அடிக்கவேண்டியதுதான்..எனவே எங்களிட்டை வேறை தெரிவு இருக்கவில்லை என்று தெளிவாய் சொல்லியிருந்தவை..

வெற்றி பெற்றால் வரலாறு தோற்றால் வெறும் சம்பவம்..எண்டு தேசியத்தலைவர் சொன்தாய் தமிழ்தாய் நாள் காட்டியிலை படிச்சிருக்கிறன்..நாங்கள் தொடந்து சம்பவங்களையே சந்திச்சு வாறதாலை..இனிமேலாவது சிந்திச்சு..வீராவேச அரசியலை விட்டிட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளிடையே விலாங்கு அரசியல் செய்தால் மட்டும்தான் தமிழனின் இருப்பு இலங்கையிலை காப்பாத்தப்படும்..இல்லாட்டி விலங்குகளை விட மேசமாகவே வாழவேண்டிவரும்.. நன்றி

Prem_Puliyankulam_IDP.jpg

மீள் குடியேற்றப் பட்ட மக்கள் (புளியங்குளம்)

Edited by sathiri

உந்தக் கட்டுரை கொஞ்சம் விளக்கமான ஆட்களுக்கு போலிருக்கு.மாறி பதிஞ்சிட்டீங்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை போலத்தான் நானும் ஒரு பதிவு போட்டனான் என்ன எங்கட வாசகர் கூட்டங்களிடம் எடுபடவில்லை...எல்லாரும் சுகன்/ வல்வை சஹாரா மாதிரி கார்பட் ரோட்டில கார் போறமாதிரி எழுதேலுமே...நான் அப்படித்தான் எழுதுவேன்..ஆனாலும் என்ன கொஞ்ச்சகாலத்தில் நானும் ஒரு நல்ல பதிவாளனாய் வருவேன்

சாத்திரி உந்த படம் நீங்கள் போட்டிருக்கிற பச்சை நீலம்...கோடியில ஒன்று...இதுக்காக சம்பந்தரை நீதான் தலைவா என்று சொல்ல நான் தயங்கமாட்டேன்...நான் பெரிதாக தலைவர், தலைவா என்று சொல்லுகிற பேர்வழி இல்லை...ஆனாலும் உதை உப்படி செய்து முடித்த சம்பந்தன்...நாங்கள் துணையாய் இருந்தால் ஒரு நல்ல தீர்வு கொண்டுவார்...

ஆளையால் குத்துபடாமல் சம்பந்தனுடன் சேர்ந்து செயற்பட்டால் நல்லம்...

நாங்கள் சோச்சி சாப்பிடிறது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

eelam.jpg

வாழும்-(நாடு கடக்காத) தமிழீழம் (பச்சை நிறம் தீட்டப்படுள்ளது)

ஆதாரம் : தேர்தல் திணைக்களம் ஸ்ரீ லங்கா. 26 /01 /2010

Edited by Volcano

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில இன்னுமொரு ஜோக் விட்டிருக்கிறார் எங்கட கஜேந்திரன் அண்ணே..சங்கதியில போட்டிருக்கு 75 % மேற்பட்ட தமிழீழ மக்கள் தேர்தலை புறக்கணித்து இரு தலைவர்களும் வேண்டாம் எண்டு சொன்னவை எண்டு... அவருக்கு கீழே உள்ள சர்ட்ய் படிக்க நேரம் வருமோ தெரியாது...சும்மா அவருக்காண்டி குரல் கொடுக்கிற ஆக்களுக்கு விடுகிறேன்...

District ↓ Province ↓ Rajapaksa ↓ percentage ↓ Fonseka ↓ percentage ↓ Others ↓ percentage ↓ Turnout ↓

Colombo Western 614,740 52.93% 533,022 45.90% 13,620 1.17% 77.06%

Gampaha Western 718,716 61.66% 434,506 37.28% 12,426 1.07% 79.66%

Kalutara Western 412,562 63.06% 231,807 35.43% 9,880 1.51% 81.01%

Mahanuwara Central 406,636 54.16% 329,492 43.89% 14,658 1.95% 78.26%

Matale Central 157,953 59.74% 100,513 38.01% 5,953 2.25% 77.94%

Nuwara Eliya Central 151,604 43.77% 180,604 52.14% 14,174 4.09% 77.19%

Galle Southern 386,971 63.69% 211,633 34.83% 9,017 1.48% 80.25%

Matara Southern 296,155 65.53% 148,510 32.86% 7,264 1.61% 78.60%

Hambantota Southern 226,887 67.21% 105,336 31.20% 5,341 1.58% 80.67%

Jaffna Northern 44,154 24.75% 113,877 63.84% 20,338 11.40% 25.66%

Vanni Northern 28,740 27.31% 70,367 66.86% 6,145 5.84% 40.33%

Batticaloa Eastern 55,663 26.27% 146,057 68.93% 10,171 4.80% 64.83%

Digamadulla Eastern 146,912 47.92% 153,105 49.94% 10,171 4.80% 73.54%

Trincomalee Eastern 69,752 43.04% 87,661 54.09% 4,659 2.87% 68.22%

Kurunegala North Western 582,784 63.08% 327,594 35.46% 13,515 1.46% 78.62%

Puttalam North Western 201,981 58.70% 136,233 39.59% 5,899 1.71% 70.02%

Anuradhapura North Central 298,448 66.32% 143,761 31.94% 7,829 1.74% 78.35%

Polonnauwa North Central 144,889 64.92% 75,026 33.62% 3,260 1.46% 80.13%

Badulla Uva 237,579 53.23% 198,835 44.55% 9,880 2.21% 78.70%

Monaragala Uva 158,435 69.01% 66,803 29.10% 4,346 1.89% 77.12%

Ratnapura Sabaragamuwa 377,734 63.76% 203,566 34.36% 11,126 1.88% 81.24%

Kegalle Sabaragamuwa 296,639 61.80% 174,877 36.44% 8,448 1.76% 78.76%

National results

நான் இதை இணைத்தனான் என்றால் இன்னுமொரு செய்தியிருக்குது...இதையும் பாருங்கோ...

Number of Votes

Electoral

District ↓ Province ↓ UPFA ↓ UNP

(UNF) ↓ ITAK

(TNA) ↓ JHU ↓ SLMC ↓ UCPF ↓ EPDP ↓ JSP ↓ USP ↓ Others ↓ Valid

Votes ↓ Rejected

Votes ↓ Total

Polled ↓ Registered

Electors ↓ Turnout

% ↓

Anuradapura North-Central 212,943 148,612 0 8,034 0 0 0 432 1,439 665 372,125 21,281 393,406 514,149 76.52%

Badulla Uva 178,634 181,705 0 6,932 0 0 0 610 588 1,709 370,178 30,159 400,337 511,115 78.33%

Batticaloa Eastern 26,268 6,151 161,011 17 43,131 0 2,556 32 71 2,138 241,375 12,648 254,023 303,928 83.58%

Colombo Western 414,688 441,841 0 190,618 0 0 539 2,420 894 6,966 1,057,966 38,605 1,096,571 1,467,751 74.71%

Digamadulla Eastern 111,747 42,121 55,533 1,130 76,563 0 1,611 66 104 1,486 290,361 18,264 308,625 379,044 81.42%

Galle Southern 306,385 209,399 0 22,826 0 0 0 626 456 1,819 541,511 30,380 571,891 716,709 79.79%

Gampha Western 509,963 367,572 0 102,516 0 0 0 4,622 2,852 2,477 990,002 40,862 1,030,864 1,327,145 77.68%

Hambantota Southern 178,895 98,877 0 0 0 0 0 328 239 971 279,310 17,724 297,034 384,361 77.28%

Jaffna Northern 0 0 257,320 95 1,995 0 18,612 0 291 5,713 284,026 21,233 305,259 644,279 47.38%

Kalutara Western 291,208 212,721 0 56,615 0 0 0 0 432 2,043 563,019 30,741 593,760 746,138 79.58%

Kandy Central 268,131 313,859 0 42,192 0 0 0 1,109 324 2,251 627,866 45,484 673,350 880,634 76.46%

Kegalle Sabaragamuwa 214,267 186,641 0 18,034 0 0 0 488 487 1,214 421,131 25,685 446,816 570,299 78.35%

Kurunegala North-Western 412,157 340,768 0 37,459 0 0 0 1,058 265 1,940 793,647 40,396 834,043 1,089,482 76.55%

Matale Central 108,259 100,642 0 8,819 0 0 0 271 1,135 936 220,062 19,549 239,611 312,556 76.66%

Matara Southern 241,235 139,633 0 16,229 0 0 0 718 1,526 892 400,233 22,769 423,002 550,506 76.84%

Monaragala Uva 117,456 71,067 0 2,675 0 0 0 158 135 622 192,113 12,816 204,929 262,742 78.00%

Nuwara Eliya Central 82,945 176,971 0 4,454 0 49,728 0 532 1,426 11,553 327,609 24,413 352,022 436,236 80.70%

Polonnaruwa North-Central 106,243 75,664 0 2,413 0 0 0 116 627 198 185,261 12,673 197,934 254,062 77.91%

Puttalam North-Western 142,784 135,152 0 10,000 0 0 0 785 132 910 289,763 21,431 311,194 450,057 69.15%

Ratnapura Sabaragamuwa 261,450 205,490 0 20,801 0 0 0 585 649 3,028 492,003 28,346 520,349 647,035 80.42%

Trincomalee Eastern 31,053 15,693 68,955 791 65,187 0 540 0 0 575 182,794 8,863 191,657 224,307 85.44%

Vanni Northern 7,259 33,621 90,835 74 0 0 1,097 0 588 6,903 140,377 10,626 151,003 226,604 66.64%

Total 4,223,970 3,504,200 633,654 552,724 186,876 49,728 24,955 14,956 14,660 57,009 9,262,732 534,948 9,797,680 12,899,139 75.96%

[1][2]

அவர் 2004 பாராளுமன்றம் போகும்போதும் 52 . 62 % புறக்கணித்திருக்கிறார்கள் என்ற உண்மையை யாரது சொன்னவையே...சீச்சி என்ன வெக்கம்..நான் ஏன்டா இப்பவே றிசைன் பண்ணிப்போட்டுத்தான் மிச்ச அலுவல் பார்ப்பன்...

தேர்தலை புறக்கணிச்சவை என்று சொல்லுறவை கொஞ்சம் பழைய ரிப்போர்ட் களையும் தட்டிப் பார்த்தால் நல்லம்...

தகவல்களுக்கான ஆதாரம் :http://en.wikipedia.org/wiki/Results_of_the_2004_Sri_Lankan_general_election_by_electoral_district ...

சும்மா எங்கட விக்கிபீடியா தான் ..

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

இதை போலத்தான் நானும் ஒரு பதிவு போட்டனான் என்ன எங்கட வாசகர் கூட்டங்களிடம் எடுபடவில்லை...எல்லாரும் சுகன்/ வல்வை சஹாரா மாதிரி கார்பட் ரோட்டில கார் போறமாதிரி எழுதேலுமே...நான் அப்படித்தான் எழுதுவேன்..ஆனாலும் என்ன கொஞ்ச்சகாலத்தில் நானும் ஒரு நல்ல பதிவாளனாய் வருவேன்

உங்கள் பதிவு எது வொல்கானோ ? இணைப்பை தாங்கோ படிக்க.

மற்றும் நல்ல பதிவாளனாகிறதுக்கான தகுதி யாவும் உங்களுக்கு இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உந்த படம் நீங்கள் போட்டிருக்கிற பச்சை நீலம்...கோடியில ஒன்று...இதுக்காக சம்பந்தரை நீதான் தலைவா என்று சொல்ல நான் தயங்கமாட்டேன்...நான் பெரிதாக தலைவர், தலைவா என்று சொல்லுகிற பேர்வழி இல்லை...ஆனாலும் உதை உப்படி செய்து முடித்த சம்பந்தன்...நாங்கள் துணையாய் இருந்தால் ஒரு நல்ல தீர்வு கொண்டுவார்...

ஆளையால் குத்துபடாமல் சம்பந்தனுடன் சேர்ந்து செயற்பட்டால் நல்லம்...

கூட்டமைப்பின் இருப்பை அடுத்த பொதுத்தேர்தல் முடிவுகள் மாற்றிவிடும் போலுள்ளது நிலமை.

மக்கள் முன்னணி தூசுதட்டுப்பட்டு மகிந்தவின் மந்திரத்தில் எதுவும் மாறலாம்.

வட்டக்கோட்டை சதுரக்கோட்டையால் தான் அங்கையுள்ள சனத்துக்கு வாழ்வென்ற சுயமரியாதையும் மானமும் மிக்க புலத்தமிழர் புறப்பட்டிருக்க சம்பந்தர் ஐயா என்னத்தைத் செய்யிறது ?

இதில இன்னுமொரு ஜோக் விட்டிருக்கிறார் எங்கட கஜேந்திரன் அண்ணே..சங்கதியில போட்டிருக்கு 75 % மேற்பட்ட தமிழீழ மக்கள் தேர்தலை புறக்கணித்து இரு தலைவர்களும் வேண்டாம் எண்டு சொன்னவை எண்டு... அவருக்கு கீழே உள்ள சர்ட்ய் படிக்க நேரம் வருமோ தெரியாது...சும்மா அவருக்காண்டி குரல் கொடுக்கிற ஆக்களுக்கு விடுகிறேன்...

நாற்பதினாயிரம் சவப்பெட்டிகள் தயார் செய்து நோர்வேக்குள் ஒளிச்சிருந்து தேர்தல் பூசைகளுக்குள் இலங்கை போனார்....ஐயா சிவாஜியை உருவேத்தின குழுவில் முக்கிய பங்கு வகித்தார்....பசிலுடன் கோத்தபாயவுடன் இரகசிய ஆலோசனைகளும் செய்வார் ஆனால் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்று நடிப்பார் அதையும் தமிழினம் நம்பவும் வேணும்....அடுத்து ஐரோப்பா வர ரிக்கட்டும் குடுக்க வேணும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

ஏனோ விலகி இருப்பம் என்று பார்க்கிறேன். இதுகூட நீங்கள் அந்த இணைப்பை கேட்டதற்காகவே வந்தேன். இன்றும் நேற்றும் ஒரு திரியில் எழுத வெளிக்கிட்டு நான் ஒருவிதண்டாவாதகாரன் என பார்கிறார்கள். நான், எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல விருப்பமில்லை, அது/அவை என்னை சிக்கலுக்கு இட்டுச்செல்வதை தவிர களத்திலும் ஒரு "இப்படியான ஆள்" / குழப்பங்காசி என்ற பெயர்தான் மிஞ்சும். அதால சிவனே எண்டு இருப்பம் என்று பார்க்கிறேன்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68535

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கட்டுரை கொஞ்சம் விளக்கமான ஆட்களுக்கு போலிருக்கு.மாறி பதிஞ்சிட்டீங்களோ தெரியவில்லை

யாழ் இணையத்திலையும் புத்திசீவியள் அதிபுத்தி சீவியள் இருக்கினம்..உண்மை நிலையை படித்து புரிந் கொள்வினம் என்று நினைத்துத்தான் இங்கு போட்டனான்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த இலங்கைத் தேர்தல் பற்றிய பத்திரிகையாளர் நிராச் டேவிட் அவர்களின் பார்வை ஜி.ரி.வி யில் உண்மையின் தரிசனமாக வெளிவந்திருந்தது அதன் ஒலி வடிவம் இங்கு இணைத்துள்ளேன்..நன்றி..

Unmayin-31.wav - 4.34MB

http://www.zshare.net/audio/719835098efe1023/

http://www.zshare.net/delete.html?71983509-98aabf345c30c1aa8137cae7ced9ce7a

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

ஏனோ விலகி இருப்பம் என்று பார்க்கிறேன். இதுகூட நீங்கள் அந்த இணைப்பை கேட்டதற்காகவே வந்தேன். இன்றும் நேற்றும் ஒரு திரியில் எழுத வெளிக்கிட்டு நான் ஒருவிதண்டாவாதகாரன் என பார்கிறார்கள். நான், எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல விருப்பமில்லை, அது/அவை என்னை சிக்கலுக்கு இட்டுச்செல்வதை தவிர களத்திலும் ஒரு "இப்படியான ஆள்" / குழப்பங்காசி என்ற பெயர்தான் மிஞ்சும். அதால சிவனே எண்டு இருப்பம் என்று பார்க்கிறேன்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68535

உங்கள் இணைப்பின் பதிவு வாசித்தேன். யாவற்றையும் ஒன்றாக்கிப் போடுங்கோ வாசகர்களைச் செல்ல இலகுவானது.

மற்றும் நீங்கள் எழுதிய விடயங்கள் யாவும் அதிபுத்திசீவிகளால் நிச்சயமாக உள்வாங்குப்படும் சாத்தியங்கள் இல்லை. யதார்த்தத்துக்கு அப்பால் நின்று விசிலடித்தலையே அதிகம் விரும்பும் அதிபுத்திசீவிகள் காதில் இந்த யதார்த்தப் பார்வைகள் எடுபடுவது இலகுவல்ல.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பின்னராவது கூட்டமைப்பு மற்றும் அதன் இருப்பு தமிழரின் வாழ்வு அந்தரத்தில் தொங்குவதைப் புலத்துப்புண்ணியங்கள் புரியாதவரை தாயகத்து மக்களுக்கும் புலத்துத் தேசியத்தூண்களுக்கும் இடையிலான தூரம் நீண்டுதானிருக்கப் போகிறது.

எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த பொதுத்தேர்தல் வரையும் வட்டச் சதுரக்கோட்டைக் கனவுகளில் திழைத்து அடுத்து அவரவர் தம் வேலையில் மூழ்கிவிடப் போகிறார்கள்.

உண்மை சொன்னால் குழப்பங்காசி ஓம் போட்டால் நல்லவர் இதுதான் புலத்து அதிபுத்திசீவிகளின் வேதம். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். யாருக்கும் அச்சமுறத்தேவையில்லை. கருத்தால் கருத்தை வெல்லும் தைரியத்தையாவது பெற்றுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் நிறையவே எழுதியுள்ளீர்கள் உதெல்லாம் எனக்கெங்கே புரியப்போகுது, நான் தான் முட்டாள் ஆச்சே.

இருந்தாலும் இணைப்புக்கு நன்றியெங்க!

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.