Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்துக்கு ஒரு ஆறு

Featured Replies

இந்தத் திட்டத்தைப் பற்றி தமிழில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ...

உங்களுக்கு இதைப் பற்றி எதும் தெரிந்தால் சொல்லுங்கோ ...

A River for Jaffna

Daily news Monday, 1 February 2010

In October 2007 at the Annual Sessions of the Institution of Engineers, Sri Lanka, a resolution was passed unanimously urging the Government to complete the River for Jaffna Project. A presentation was also made by Engineer Thiru Arumugam, in November 2007 at the Nobel Peace Prize winning Pugwash Conferences on Science and World Affairs, Workshop on Learning from Ancient Hydraulic Civilizations to combat Climate Change, on A River for Jaffna. A resolution was passed at this workshop, proposed by Ambassador Jayantha Dhanapala, President of Pugwash and seconded by Engineer D.L.O. Mendis as follows: This workshop resolves to recommend to the Government of Sri Lanka that the River for Jaffna project started some fifty years ago, and almost completed, but is now in a state of abandonment, should be restored, as an important step towards including Sri Lankans of Jaffna peninsula in the development and enjoyment of natural resources of the country, towards the early achievement of a durable peace.

President Mahinda Rajapaksa immediately ordered that the River for Jaffna project should be taken up for early implementation. At the present time the following work has already been completed by the State Engineering Corporation and the Government factory:

Step 1- Reconditioning Thondamanaru Barrage: replacing and repairing perished wooden gates and lifting devices etc. This will make Vadamarachchi lagoon a fresh water lagoon fed with rainwater from its 300 sq km catchment area.

Step 2 - Reconditioning Ariyalai Barrage: repairing and replacing perished planked bays and replacing with screw operated gates; repairing breaches in separation bund between Upparu lagoon and Ariyalai saltern; repairing separation bund between Vadamarachchi and Upparu lagoons as required. This will make Upparu lagoon a fresh water lagoon fed with rainwater from its 220 sq km catchment area.

The following work remains to be completed:

King Parakrama Bahu

Step 3 - Completing Mulliyan Link Channel, to join Elephant Pass lagoon to Vadamarachchi lagoon; forming bund and roadway, and causeway, and providing control regulator and link channel between Vadamarachchi and Upparu lagoons. When this work is completed water in the Elephant Pass lagoon during the North East monsoon may be sufficiently low in saline content, for diversion to Vadamarachchi and Upparu lagoons as required.

Step 4 - Completing Spill cum Causeway at Chundikulam at the Eastern end of Elephant Pass lagoon and building zoned and flanked embankment with gravel road.

The spill cum causeway will be 2,100 metres long and the bund 1,400 metres long. When this work is completed Elephant Pass lagoon will become a fresh water lagoon as spill water from Iranamadu reservoir across the Kanagarayan aru, and other fresh water flows from small arus in the mainland flow into Elephant Pass lagoon. Finally, repairing and improving 8 km long access road from Paranthan-Mullaitivu Road to Chundikulam causeway.

Project benefits

About 13,000 hectares of land can be cultivated with paddy in the Jaffna peninsula.

The area presently cultivated is about 8,000 hectares due to soil salinity and other reasons. This cultivation is entirely rain fed unlike paddy cultivation on the mainland which is under irrigation. As it is rain fed, the yield per acre in Jaffna is very poor and is only about one-third of the average yield per acre on the mainland.

"...

Eng. S Arumugam published A River for Jaffna in 1954 which became known as the Arumugam plan. His son Eng. Thiru Arumugam provided a synopsis of the plan for a Pugwash workshop on “Learning from ancient hydraulic civilizations to combat climate change”, Colombo, Nov. 2007, as follows: Jaffna Peninsula with an area of about 400 sq. miles, is relatively flat and has no rivers...

..."

Edited by ஜெகுமார்

... அருமையான திட்டம்!! ... "பெருக்கெடுத்தும் அழிந்து விட்டது" என்றும் சொல்லலாம்!!! .... உதென்ன சில காலத்துக்கு முன்னரே வடக்கின் உதயம் என்று ஒரு இணைப்பு பார்த்தேன், மேற்குலகும் வருங்கால யாழுக்கு நிகராக இருக்காது, அதன்படி!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... அருமையான திட்டம்!! ... பெருக்கெடுத்தும் அழிந்து விட்டதும் என்றும் சொல்லலாம்!!! ./

... ? :rolleyes: பெருக்கெடுத்து அழித்து விட்டதா ... ?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பானத்துக்கு ஒரு ஆறு – தொலை நோக்கு பார்வை

- வ.ஐ.ச.ஜெயபாலன்

என்னுடைய தாய் மண்ணில் பணிபுரிகிற பொருளியல் நிபுணர்களுக்கும் பொறியியலாளருக்கும் ஒரு வேண்டுகோள். எங்கள் தாய்மண் தொண்டமனாறு போல கரையோரம் முழுவதுமே கடல் ஏரிகளை (Lagoons) கொண்டிருக்கிறது. கடலேரிகள் இயற்க்கை எமக்குத் தந்த வரப்பிரசாதங்கள் என்றே நான் நம்புகிறேன். கடலேரியை நன்னீர் ஏரி ஆக்குவதா அல்லது கடலேரியின் உச்ச பயன்பாடுகளை பெறுவதா என்கிற விவாதம் ஈழத் தமிழரைப் பொறுத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவாதமாகும். இது அரசியல் பொருளாதார முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தொலை நோக்கோடும் ஆராயப் படவேண்டும். நாங்கள் எங்களுக்கு இயற்கையின் அன்பளிப்பான கடலேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றுவதற்க்குப் பதில் அதனை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்து பயன்பெற்று வாழப பளகவேண்டும் என்பதுதான் எனது முதல் தெரிவாகும். நன்னீர் திட்டம் உவர் நீர் உயிரின அமைப்பையும் பறவைகள் வரவையும் பாதிக்கும் என்பது எனது ஒரு கவலை. நன்னீர் ஆக்கும் திட்டத்தைவிட குறைந்த மூலதனம் காலம் உழைப்பின்மூலம் சூழலை பாதிக்காத வகையில் கடலேரிகளை வருமானம் ஈட்டித்தரத்தக்கவையாக மாற்ற முடியும். மேலும் புனர் நிர்மாணம் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்குமுன் வேலை ஆட்க்கள் பற்றிய பிரச்சினையை நாம் விவாதிக்க வேண்டும். மொத்த ஈழப் பிரதேசமும் குறிப்பாக வடபகுதி வேலையாட்கள் பற்றாக் குறை உள்ள பகுதிகளாக உள்ளது. வடபபகுதியில் இருந்து உழைக்கும் வல்லமையும் கருவளமும் உள்ள இளைய தலைமுறை பெருமளவில் வெளியேறிவிட்டது. இந்த ஆபத்தை சமாதான கால அபிவிருத்திப் பணிகளின்போதுதான் முதன்முதலாக உணரக் கூடியதாக இருந்தது. போராளிகளின் விடுதலைப் பிரதேசத்துக்குள் வீதி அமைப்பதில் இருந்து பல்வேறு கட்டுமான தொழில் நுட்ப்ப அபிவிருத்திப் பணிகளுக்காக பல்லாயிரம் சிங்கள தொழிலாளர்கள் அனுமதிக்கப் பட்டனர். போராளிகள் தங்கள் முகாம் வேலைகளுக்குக்கூட சிங்கள பணியாளர்களை ஈடுபடுத்தியமை அதிற்ச்சி தந்தது. ஒரு இரவில் செல்வினை சந்திக்க வட்டக்கச்சிக்கு அருகில் இருந்த பொருண்மிய முகாமுக்கு போய் இருளில் வழிதவறி வெளிச்சம் தெரிந்த ஒரு கொட்டகைக்குப் போனபோது உண்மையிலேயே துணுக்குற்றுப்போனேன். அந்தக் கொட்டகையில் தனிய சிங்கள தொழிலாளர்கள் மட்டும் தச்சு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் ஊக்குவிப்பு (incentive) அடிப்படையில் மலையகத்திலும் கிழக்கிலும் உள்ல உபரி தொழிலாளர்களை வடக்குக்கு கொண்டுவரும்படி போராளிகளிடம் கோரினேன். தமிழகத்தில் இருந்தும்கூட தொழில் நுட்ப்பப் பணியாளர்கள் அழைத்துவரப்படலாம். என்பதை வற்புறுத்தினேன். மேலுக் சில வீதிகள் இராணுவ படையெடுப்புக்கு அவசியமானவை என்பதால் அதனை மீழக் தாமதிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றும் கோரினேன். ஆனால் அவர்களது திட்டமிடல் நிர்மாணப் பணிகளின் வருமானத்தின்மூலம் போருக்கு வேண்டிய பணத்தை திரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை.

ஆனால் போராளிகளின் காலத்தில் அன்று சிங்கள தொழிலாளர்கள் வடக்கிற்க்கு வருபோது இராணுவ ஒற்றர்களும் பின்னர் ஆழ ஊடுருவித்தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப் படக்கூடியவர்களும் வருவது தொடர்பான ஆபத்திருந்தபோதும் தொழிலாளர்கள் குடியேறிவிடக்கூடிய ஆபத்து இருக்கவில்லை. இன்று அந்த ஆபத்து உள்ளது.

போராளிகளின் நாட்க்கள்ப்ப்லல்ல இன்று சிங்களதொழிலாளர்களும் சீனத் தொழிளாலர்களும் பெருமளவில் உள்நுளையும் போது அவர்களை வெளியேற்ற எங்களுக்கு எந்த வல்லமையும் இல்லை. வடகிழக்கில் எங்கள் ஒட்டு மொத்த குடித்தொகை நம்பவியலாத அளவுக்குச் சுருங்கிப்போனது. அதிகம் வயோதிபர்களையும் உடல் பாதிக்கப் பட்டவர்களையும் சிறுவர்களையும் கொண்ட உழைக்கும் கருவளம் கொண்ட பராயத்தினர் அருகிய சமூகமாக சிதைந்துபோனது. இந்தியா- தமிழகத்தின் உதவி கிடைத்தாலன்றி புனர் நிர்மாணப் பணிகளோடு தொழில்வாரி சிங்கள குடியேற்றங்கள் தவிர்க்க முடியாது போய்விடும்.

யாழ்ப்பாணத்துக்கு ஆறு போன்ற பாரிய திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழ் நாட்டின் உதவி கிடைக்காவிட்டால் இன அடையாளத்தை பாதுகாப்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். இந்த நிலமையில் நன்னீர் ஆற்றைவிட கடலேரியை அபிவிருத்தி செய்வது உகந்ததாக அமையலாம்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களது கருத்து நூற்றுக்குநூறு சரியானதே யார் இதுபற்றிக்கவலைப்படப் போகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள்தான் இத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆனால் தற்போதைய, சிறிலங்காவின் தேர்த்தலின் பின்பு புலம்பெயர்

தமிழ் சமூகத்தின்மீது நடைமுறை அரசும் தமிழ் ஒட்டுக்குழுக்களும் "காண்டையாக" இருக்கின்றார்கள். அங்கு பசுமைப் புரட்சி என்று கூறி இராசாயன உரங்களை விளை நிலங்களில் இட்டு எமது மண்ணை மலடாக்கப்போகிறார்கள் அதையும் தடுக்கவேண்டும், உயிர்கொல்லி மரபணு சிறுதானிய விதைகள் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக மேற்கத்தைய நாடுகளில் காணப்படும் உணவுத்தட்டுப்பாட்டினை சரிக்கட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்கத்தேவையான விளை பொருட்களை விளைவிப்பதற்காக எமது விளை நிலங்களை ஆக்கிரமிப்பதன்மூலம், எமது மண்ணின் பாரம்பரிய விளைபொருட்களின் உற்பத்தி இல்லாதொழிந்திடும் அபாயம் ஏற்படப்போகின்றது, இதற்கு உதாரணமாக பூநகரிப் பிரதேசத்தின் மொட்டைக்கருப்பன் நெல்லைக் கூறலாம், ( இதில் வேடிக்கையான விடையம் புலம்பெயர்தேசத்து தமிழ்க் கடைகளில் அரைவேக்கட்டுடன்கூடிய ஒரு திணுசான அரிசியை தமிழநாட்டிலிருந்து இறக்குமதி செய்து பூநகரி மொட்டைக்கருப்பன் எனக்கூறி விக்கிறார்கள்) இவற்றினை நாம் முதலில் நிறுத்த வேண்டும். அதற்கான வழி புலம்பெயர் தேசத்தவர்களிடமே உள்ளது. எமது மண்ணிற்க்குத்தேவை இயற்கையோடு இணைந்த விவசாய முறைகளே, அதனை நிவர்த்தி செய்வது இயற்கை விவசாயமே (விகடன் நிறுவனத்தின் பசுமை விகடனில் வரும் அனேகமான விடையங்கள் நாம் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்துவரும் விடையங்களே. ஆக சமூக விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்படுத்தவேண்டும். ஒரு சோகமான விடையம் தாயகத்தில் அல்ஸைமர் நோய் மற்றும் பார்கிஸன் நோய் பாதிப்பக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது, அதைப்பற்றிய விடையங்களைக் கவனிக்க யாரும் அங்கு இல்லை நான் அறிய ஒரு குடும்பமே இந்நோயின்காரணமாக அன்றேல் இதணோடு ஒத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இதைப்பற்றிய அறிவு அவர்களது உறவுகட்கு இல்லாததன் காரணமாக அக்குடும்பம் இதுவரை இருவரை இந்நோய்க்குக் காவு கொடுத்துவிட்டது, தற்போது மூன்றாவதும் தனது இறுதிநாட்களுக்கு ஆயத்தமாகி வருகின்றது. யாழில் இதுபற்றி அறிந்தவர்கள் அன்றேல் ஆர்வமுள்ளோர் யாராவது இருந்தால,; விபரங்களைப் பிறிதொரு தருணத்தில் கூறுகின்றேன் தமிழர்கள் மெத்தப் படித்தவர்கள் என நாம் இறுமாப்படைகிறோமே! இந்நோயாளர்கள் வைத்தியசாலைக்கப் போனார்கள் அங்கு வைத்தியர்கள் சொன்ன பதில் இரத்த அழுத்தம் நன்றாக இருக்கின்றது அனைத்தும் நன்றாக இருக்கின்றது இதுக்குமேல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என. ஆக இப்படியான குறைகளை நாம் எமது சமூகத்திலிருந்து முதலில் களைய வேண்டும். பூநகரி மொட்டைக் கருப்பன் அரிசி, விளைகின்ற பூநகரிப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களினது அன்றாடத் தேவைக்கே போதாது எனும்போது ஐரோப்பியத் தெருக்களின் தமிழ்க்கடைகளில் அம்மொட்டைக்கருப்பன் அரிசி கிடைக்குமா என ஆராயதவர்கள் இவற்றையெல்லாம் ஆராயவா போகிறார்கள்? ஆனால் என்னென்னமோ எல்லாம் சொல்லிற்ரன் இதையும் சொல்லிவைப்போமே என்பதற்காகச் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெய்யும் மழை நீரைத் தேக்கினாலே போதுமே?அதற்கான திட்டங்களே தேவை.அதை விடுத்து மகாவலி ஆற்றை வடக்கே தீரப்புகிறோம் என்;ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதும் அதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் தங்கள் சொத்துக்களைப் பெருக்குவதுமே நடைபெறும்.தமிழ்பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் வெளிநாட்டு உதவிகளை தாராளமாகப் பெறுவதற்கே இந்தத் திட்டங்கள் உதவும்.முதலில் தீர்க்க வேண்டியது தமிழ்மக்கள் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

பெய்யும் மழை நீரைத் தேக்கினாலே போதுமே?அதற்கான திட்டங்களே தேவை.அதை விடுத்து மகாவலி ஆற்றை வடக்கே தீரப்புகிறோம் என்;ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதும் அதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் தங்கள் சொத்துக்களைப் பெருக்குவதுமே நடைபெறும்.தமிழ்பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் வெளிநாட்டு உதவிகளை தாராளமாகப் பெறுவதற்கே இந்தத் திட்டங்கள் உதவும்.முதலில் தீர்க்க வேண்டியது தமிழ்மக்கள் பிரச்சனை.

மாரி காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெய்யும் மழையில் 90 வீதமான நீர் பண்ணை கடலில் தான் கலக்கின்றது.

மிச்ச 10 வீதமும் கிணற்றில் தேங்கி நிற்கும். அதுகும் ஒரு கிழமையில் காணாமல் போய் விடும்.

இருக்கின்ற குளங்களை ஆழப்படுத்தி நீரை சேமிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

மாரி காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெய்யும் மழையில் 90 வீதமான நீர் பண்ணை கடலில் தான் கலக்கின்றது.

மிச்ச 10 வீதமும் கிணற்றில் தேங்கி நிற்கும். அதுகும் ஒரு கிழமையில் காணாமல் போய் விடும்.

இருக்கின்ற குளங்களை ஆழப்படுத்தி நீரை சேமிக்க வேண்டும்.

காங்கேசன் துறை போண்ற பகுதிகளில் நிலத்தடி சுண்ண பாறைகளை தோண்டி எடுத்து சீமந்து தயாரிச்சால் நிலத்தடியில் எதையும் சேமிக்க முடியாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.