Jump to content

ஆழ்ந்த இரங்கல்கள்


Recommended Posts

வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

+++

main_2597.jpg

நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார்.

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கதாபாத்திரம் பிரபலமானது. இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார். 1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மகாநதி படம் இவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு புகழ் பெற்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்த திறமைசாலி நடிகர் இவர். இருப்பினும் மிகப் பெரிய நகைச்சுவையாளனாகவே இவர் புகழ் பெற்றார்.

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹனீபா.

தகவல் மூலம்: http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=2597

Link to comment
Share on other sites

இவரின் நடிப்பு எனக்கும் பிடிக்கும். மகாநதி என்ற அருமையான படத்தில் இவரின் வில்லத்தனம் மிக இயல்பானதாகவும், அந்த பாத்திரத்திற்கேற்றவாறும் கச்சிதமாக இருந்தது. இயல்பான நகைச்சுவையான நடிப்பும் இவருக்கு இருந்தது

அன்னாரிற்கு என் இரங்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வி.எம்.சி ஹனீபா ஒரு நல்ல குணச்சித்ர நடிகர்...

அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறென்.....

Link to comment
Share on other sites

இப்ப 10 நிமிசத்திற்கு முதல் தான் "டிடெக்டிவ்" படம் பார்த்தேன்.சுரேஸ் கோபியின் டப்பிங் படம்.இவரும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.வேட்டைகாரனிலும் "அந்த பெட்டி எனக்கு வேண்டாம்" நல்ல பகிடி.எனக்கு இவரை பிடித்தது லேசா லேசா,மகா நதி

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுபவங்கள்..

மகாநதி படத்தில் வந்து செய்த வில்லத்தனத்தால் அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கமுடியாமல் செய்துவிட்டார்.

Link to comment
Share on other sites

பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் ஏற்கும் பாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடிய ஓர் திறமையான நடிகர். எனக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நடிகர் கமல் எப்படி தன் பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஸை பயன்படுத்த தவறியதில்லையோ அதைப் போல் இவரையும் கமல் பயன்படுத்த தவறியதில்லை....

மாகநதி படம் பார்த்ததும் இவரை அடிக்துக் கொல்லவேண்டும் போல இருக்கும் அந்தளவு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்..

இவரின் மறைவுக்கு எனது இரங்கல்கலையும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='கறுப்பி' date='07 February 2010 - 10:20 AM' timestamp='1265556013' post='565985']

ஆழ்ந்த அனுபவங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.