Jump to content

ஆழ்ந்த இரங்கல்கள்


Recommended Posts

வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

+++

main_2597.jpg

நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார்.

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கதாபாத்திரம் பிரபலமானது. இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார். 1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மகாநதி படம் இவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு புகழ் பெற்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்த திறமைசாலி நடிகர் இவர். இருப்பினும் மிகப் பெரிய நகைச்சுவையாளனாகவே இவர் புகழ் பெற்றார்.

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹனீபா.

தகவல் மூலம்: http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=2597

Link to comment
Share on other sites

இவரின் நடிப்பு எனக்கும் பிடிக்கும். மகாநதி என்ற அருமையான படத்தில் இவரின் வில்லத்தனம் மிக இயல்பானதாகவும், அந்த பாத்திரத்திற்கேற்றவாறும் கச்சிதமாக இருந்தது. இயல்பான நகைச்சுவையான நடிப்பும் இவருக்கு இருந்தது

அன்னாரிற்கு என் இரங்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வி.எம்.சி ஹனீபா ஒரு நல்ல குணச்சித்ர நடிகர்...

அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறென்.....

Link to comment
Share on other sites

இப்ப 10 நிமிசத்திற்கு முதல் தான் "டிடெக்டிவ்" படம் பார்த்தேன்.சுரேஸ் கோபியின் டப்பிங் படம்.இவரும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.வேட்டைகாரனிலும் "அந்த பெட்டி எனக்கு வேண்டாம்" நல்ல பகிடி.எனக்கு இவரை பிடித்தது லேசா லேசா,மகா நதி

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுபவங்கள்..

மகாநதி படத்தில் வந்து செய்த வில்லத்தனத்தால் அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கமுடியாமல் செய்துவிட்டார்.

Link to comment
Share on other sites

பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் ஏற்கும் பாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடிய ஓர் திறமையான நடிகர். எனக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நடிகர் கமல் எப்படி தன் பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஸை பயன்படுத்த தவறியதில்லையோ அதைப் போல் இவரையும் கமல் பயன்படுத்த தவறியதில்லை....

மாகநதி படம் பார்த்ததும் இவரை அடிக்துக் கொல்லவேண்டும் போல இருக்கும் அந்தளவு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்..

இவரின் மறைவுக்கு எனது இரங்கல்கலையும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='கறுப்பி' date='07 February 2010 - 10:20 AM' timestamp='1265556013' post='565985']

ஆழ்ந்த அனுபவங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்யா – உக்ரேன் போரில்  17 இலங்கையர்கள் பலி! adminMay 12, 2024 ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சனிக்கிழமை (11.05.24) ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பதவிய பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன, ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக பெப்ரவரி 12 அன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டார். மார்ச் 29 அன்று அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாக தொடர்பு கொண்டார், அதன்பிறகு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறே, ஓய்வுபெற்ற அதிகாரியான மதவாச்சியை சேர்ந்த பிரதீப் சந்தனவும் பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மார்ச் 29ஆம் திகதி அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டார் எனவும் அதன்பிறகு எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.   https://globaltamilnews.net/2024/202751/
    • நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஒத்திவைப்பு adminMay 12, 2024   நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி முதலே சேவைகள் ஆரம்பமாகும். நாளைய தினம் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் விரும்பிய திகதிக்கு மாற்றம் செய்து பயணிக்க முடியும். அல்லது கப்பல் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தை மீள பெறமுடியும். என கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.   https://globaltamilnews.net/2024/202734/
    • லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது! adminMay 12, 2024 லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று,   லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.   https://globaltamilnews.net/2024/202745/  
    • கனக்க தேவை இல்லை அண்ணா  கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....
    • இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன்.  எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும்.   அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.