Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து சமயம் எங்கே போகிறது?

Featured Replies

... நான் கூறியது E = m x c x c எனும் விதி (சார்பியல்) என்றும் மாறுபடாது என்று; அதன் அர்த்தம் அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது என்று. உங்களுக்கு ஏற்ற மாதிரி என் புரிதலை புரிந்து கொண்டு விட்டு அதில் பிழை சொல்கின்றீர்கள். E = m x c x c எனபது மாமேதை அயின்ஸ்ரின் இன் கருத்தான E = m x c x c என்பது இன்று வரைக்கும் நிரந்தரமானது; பர பிரம்மம் என்றதைக் காட்டிலும் நிரூபணமானது.

நிழலி! நீங்கள் E = suqare root of {(mcc)(mcc) + (pc)(pc)} எனும் சமன்பாடு "பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி ... மாறுபடாது" என்று கூறிநீர்களானால் அதை சரியாக கொள்ளலாம்.

பின்வரும் கூற்றுக்களை (ஆங்கிலம்) படித்துப் பாருங்கள். E = mcc என்பது சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே சரி. நீங்கள் கூறியபடி "அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது" என்பது தவறு.

Applicability of the strict mass–energy equivalence formula, E = mc²

.... two different definitions of mass have been used in special relativity, and also two different definitions of energy. The simple equation E = mc² is NOT generally applicable to all these types of mass and energy, except in the special case that the momentum is zero for the system under consideration. In such a case, which is always guaranteed when observing the system from the center of mass frame, E = mc² is true for any type of mass and energy that are chosen. Thus, for example, in the center of mass frame the total energy of an object or system is equal to its rest mass times c², a useful equality. This is the relationship used for the container of gas in the previous example. It is not true in other reference frames in which a system or object's total energy will depend on both its rest (or invariant) mass, and also its total momentum.

மாமேதை அயின்ஸ்ரின் இன் கருத்து:

"It is not good to introduce the concept of the mass of a moving body for which no clear definition can be given. It is better to introduce no other mass concept than the ’rest mass’ m. Instead of introducing M it is better to mention the expression for the momentum and energy of a body in motion".

– Albert Einstein in letter to Lincoln Barnett, 19 June 1948 (quote from L. B. Okun, “The Concept of Mass,” Phys. Today 42, 31, June 1989.)

Source: http://en.wikipedia.org/wiki/Mass%E2%80%93energy_equivalence

If you want to get it from standard text books, read:

(1) The special theory of relativity by Bohm, David (Publishers: Routledge, London, year: 1996; ISBN 0415148081)

(2) A primer of special relativity by Sardesai, P.L. (Publishers: New Age Int., New Delhi, Year 2005; ISBN 8122415202)

... ஒளியின் வேகம்: இந்த நிமிடம் வரை அது மாறியதாக விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை.

பின்வரும் கூற்றுக்களை (ஆங்கிலம்) படித்துப் பாருங்கள்.

Variable speed of light

The actual speed at which light propagates through transparent materials, such as glass or air, is less than c. The ratio between c and the speed v at which light travels in a material is called the refractive index n of the material (n = c / v). For example, for visible light the refractive index of glass is typically around 1.5, meaning that light in glass travels at c / 1.5 ≈ 200,000 km/s; the refractive index of air for visible light is about 1.0003, so the speed of light in air is very close to c.

http://en.wikipedia.org/wiki/Speed_of_light#Propagation_of_light

http://en.wikipedia.org/wiki/Variable_speed_of_light

  • Replies 56
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Culturenews News ID 16

Posted date 2/6/2010

மஹாசிவராத்திரி பெப்ரவரியிலா மார்ச்சிலா? மார்ச் 13 திகதியன்றே மஹா சிவராத்திரியாகும்

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த ஆண்டில்(2010) எப்போது அனுஷ்டிப்பது என்பதில் விரத நிர்ணயகாரர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றமையினால் சைவசமய அனுஷ்டானிகளிடம் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளமையை தீர்த்துவைத்து தீர்மானமாக ஒரு சரியான தினத்தை நிர்ணயம் செய்வதற்கு சைவ சமயஸ்தாபனங்கள் எவையும் இதுவரை முன் வராதநிலையில் அனைவரது கவனத்தையும் இவ்விஷயத்தில் ஈர்த்து பொருத்தமானதொரு தினத்தினை தேர்வுசெய்வார்கள் எனும் நோக்கில் இங்கு சில கருத்துக்களை முன்வைக்க முனைகின்றேன். மகா சிவராத்திரி விரதம் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா அல்லது ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதினால்தான் சில பஞ்சாங்கங்கள் 2010 பெப்ரவரியிலும் சிலபஞ்சாங்கங்களில் 2010 மார்ச்சிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்றதொரு சிக்கல் தோன்றியிருந்திருந்த 1964ஆம் வருஷத்தில் அக்குழப்ப நிலையை தீர்க்கும் முகமாக இலங்கை அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,“ கண்டனுõர் சிவஸ்ரீ அரு. இராமநாதக் குருக்கள் மற்றும் திருவாவடுதுறை சிவஸ்ரீ க. சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய சிவாசாரியப் பெரியோர்கள் " சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் சிறு நுõலை பல்வேறு ஆகமநுõல்களையும் மற்றும் பல ஸ்மிருதி“ புராண வாக்கியங்களையும் மேற்கோள் காட்டி மகாசிவராத்திரி விரதம் ஸெளரமான மாசத்திலேயே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு திருக்கேதீஸ்வரம்(இலங்கை) சிவானந்த குருகுல வெளியீடாக சோபகிருது வருஷம் கார்த்திகை கஅ என தேதியிட்டு வெளியிட்டுள்ளனர்.

அவ்வெளியீட்டில் அந்த சோபகிருது வருஷத்திற்கு முந்தைய பராபவருஷத்தில் சிலர் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்ததாகவும் இதுவிஷயமாகப் பரிபூரணமான திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் சாஸ்திரமறிந்த வித்துவான்களையும் பல ஆகமவிற்பன்னர்களையும் அழைத்துப் பரிசீலனை செய்து சௌரமானப்படி மாசி 29ஆம் திகதிதான் நடத்தவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது என மேற்கோள் காட்டியுள்ளனர். "சிவராத்திரியைச் சௌரமாசத்தில் அனுஷ்டிக்கவேண்டும், சாந்திரமாஸத்திற் செய்யக் கூடாது' உத்தர காராணாகமம் : சிவராத்ரி விரதம் சரோத்' சௌரபக்ஷமாக மாகமாசத்தில் கிருஷணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் பிம்பாகமம் "கும்பமாசத்தில் மாக நட்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுதலால் அது மாக மாசமென்று சொல்லப்படுகிறது காரணாகமம் "எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கிறானோ அந்த மாசம் மாகமாசமென்று நினைக்கத்தக்கது' புரொத்கீதாகமம் "சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கிறானோ, அதுதானே மாகமாசமாகும், அம்மாசத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசி என்று சொல்லப்படும் அதில் சிவனைப்பூசிக்க' சூக்ஷ்மாகமம்

"கும்பமாசத்து கிருஷ்ண சதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்' கிரணாகமம் "கும்பமாசத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன்கூடிய திரயோதஸியும் அதற்குமேல் சதுர்த்தஸியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும்' வீராகமம்

"சூரியன் கும்பராசியிற் செல்கின்ற மாசிமாதத்தில்வரும் கிருஷ்ணசதுர்த்தசி சிவராத்திரியாகும், அது கோடிபாவங்களை நாசஞ்செய்யும்' பராசரம் "இராத்ரிமுழுவதும் தைமாதத்தையடைந்த சிவராத்திரியானது பாவத்தைக் கொடுக்கக்கூடியது விதிக்கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது. கேவலம் தைமாதத்தையடைந்த சதுர்த்தசியானது விதிக்கப்படாமலிருப்பதனாலே சந்ரகிரஹணத்தைத்தவிர வேறான ராத்திரியில் பிதிர்தர்ப்பணம் எப்படியோ அப்படி பாபத்தைக் கொடுக்கிறதாய் தள்ளத்தக்கது' விந்தியாவர்த்திகம் "மாசபூஜை முதலியவைகளைச் சௌரமாசத்தில் செய்

க, கும்பமாசத்துக் கிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவும்' பீமசங்கிதை என்று மேற்கண்டவாறு பல நுõல்களையும் மேற்கோள்காட்டி சௌரமான மாசத்திலேயே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று "சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் அந்நுõலில் தெரிவித்துள்ளனர்.

சைவசமயிகளுக்கு ஆகமங்கள் சிறப்பு நுõல்களாகச் சொல்லப்பட்டிருப்பதுடன், அவை முழுமுதற் கடவுளான சிவபெருமானாலும் உபதேசிக்கப் பட்டதாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சிறப்புப்பெற்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட விரதஅனுஷ்டான விதிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதாகுமா? விரதநுõல்கள் ஆகமங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விரதவிதிகளை தொகுத்துத் தருபவையாகும் அல்லவா? இந்த முரண்பாடுகள் எல்லாம் சைவஉலகினரால் ஆராயப்படவேண்டியவைகளாகும். வளர்ந்துவரும் இன்றைய உலகில் சைவஉலகம் இவ்வாறு பின்தங்கியிருக்க வேண்டுமா? இந்த ஆண்டில் வந்திருக்கும் இம்முரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி முரண்பாடு வரக்கூடிய விரதநாட்களுக்கு எல்லோருக்கும் இசைவாய் விதிமுறைகளை அறிஞர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்தமுடியுமல்லவா?

சிவராத்திரி பூஜாவிதி படலத்தில் மிகவும் விரிவாக இவ்விடயங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது.

1) மஹாசிவராத்திரி ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

2) மஹாசிவராத்திரியை சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்தல் கூடாது.

3) சூரியன் கும்பத்தில் உள்ள மாதத்தின் பௌர்ணமியுடன் மாகநட்ஷத்திரம் சேரும் மாதமே மாகமாசமாகும்

காரணத்தில்: சைத்ரநட்ஷத்திரம் சேர்வதால் சைத்ர(மேஷ)மாதம் விசாகநக்ஷத்திரம்சேர்வதால் வைசாக(ரிஷப)மாதம்

இதேபோல் மாக நட்ஷத்திரம் சேர்வதால் மாக(கும்ப)மாதம் 4) மாகமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவராத்திரி அஷ்டிக்கத்தக்கது தவிர,

விரதசூடாமணியில் (1935ஆம் ஆண்டுப்பதிப்பு) சிவராத்திரிவிரதம் பகுதியில் :"சதுர்த்தஸ்யாந்து கிருஷ்ணாயாம் பால்குனே சிவபூஜனம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸெளரமான மாஸத்தை குறிப்பதாக கருதவேண்டும். நிர்ணயஸிந்து எனும் நுõலில் :

"பால்குணகிருஷ்ணசதுர்த்தஸீ சிவராத்திரி' எனவும், அதே நுõலில் லிங்கபுராணத்தில் இருந்து. "பால்குணஸ்ய சதுர்த்தஸ்யாம் கிருஸ்ணபக்ஷே ஸமாஹிதா, கிருத்திவாஸேஸ்வரம் லிங்கமர்ஜயந்தி சிவம் ஸுபே' எனும் வசனமும் சிவராத்ரி நிர்ணய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச் சிவராத்திரி நிர்ணயப்பகுதி "பால்குணகிருஷ்ண சதுர்த்தசி நிர்ணய:' எனும் தலைப்பின் கீழேயே தரப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் கும்பமாஸத்தையே அவைகொள்வதாக கருத இடமுண்டல்லவா? இலங்கையில் இருந்துவெளிவரும் பிரபலமான பஞ்சாங்ககணிதர் பெப்ரவரியில் விரதநிர்ணயம் செய்துவிட்டு அதற்கு ஆதாரமாக காமிகமத்தில் இருந்து ". மாகமாஸ்யஸிதேபக்ஷே வித்யதேயா சதுர்த்தஸீ தத்ராத்ரி சிவராத்ரி ஸ்யாத்.' (சிவராத்திரிபூஜா படலம் 4,5ம் சுலோகங்கள்) எனவும் ஸ்காந்தத்தில் இருந்து " மாககிருஷ்ணசதுர்த்தஸ்யாம்' எனும் பகுதியையம் பிரசுரமொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரியென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஸெளரமான மாசமா? அல்லது சாந்ரமானமாசமா என்பது பற்றியோ அல்லது மாகமாசமென்பது எதுவென்பது பற்றியோ எவ்விதகுறிப்பும் தற்போது கிடைக்கும் காமிகாகமத்திலும், ஸ்காந்தத்திலும் காணப்படவில்லை. தவிர மேற்படி பஞ்சாங்க கணிதரின் பிரசுரத்தில் குமாரதந்திரத்தில் இருந்து, " மாகபூஜாவிதி: ப்ரோக்தம் சிவராத்ரிவிதிம் ச்ருணு, தந்மாஸே க்ருஷ்ணபக்ஷேது வித்யதேயா சதுர்த்தஸீ, தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாத்'எனமேற்கோள்காட்டியிருந்தார். குமாரதந்திரத்தில் மாசபூஜாவிதியின்கீழ் எல்லாமாஸங்களுக்கும் விரதவிபரங்கள் தரப்பட்டுள்ளதுடன், அவை நட்ஷத்திரங்களை முதன்மைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன. அதாவது, சைத்ரமாத பூஜாவிதியில் "சைத்ரேஷு.' என்றும் குமாரதந்திரம் காரணாகமத்தின் சுருக்கமென அந்நுõற்பதிப்பில் கூறப்படுவதில் இருந்தும், நக்ஷத்திரங்களை பிரதானமாகக் கொண்டு மாதபூஜைவிதிகள் அதில் சொல்லப்படுவதைக்கொண்டும் (காரணாகமம் மாதங்களின் பெயர்கள் அவ்வவ்மாசத்தின் பௌர்ணமியுடன் நட்ஷத்திரங்கள் சேர்ந்துவருவதனால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை கவனிக்கவேண்டும்) குமாரதந்திரம் ஸெளரமானமாஸத்தை அடிப்படையாகக் கொண்டு மாதபூஜாவிதிகளைத் தந்திருப்பது தெளிவாகும்.

ஆகவே குமாரதந்திரத்தில்இருந்து மேற்கோள்காட்டி பெப்ரவரி 12ஆம் திகதியை சிவராத்திரி தினமாக அப்பஞ்சாங்க கணிதர் நியாயப்படுத்த முயல்வது பொருத்தமற்றதுடன் மாறாக அதற்கெதிராக ஸெளரமான மாசத்தையே அது அனுசரிப்பதையும் கவனிக்கத் தவறியும் விட்டார். தவிர மேற்படி பஞ்சாங்ககணிதர் உத்தரகாரணாகமம் மற்றும் ஆகமங்களில் கூறப்பட்ட இவ்விஷேடவிதிகளை புறந்தள்ளியதுடன் அவைபற்றி தமது பிரசுரத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டுள்ளமைக்கான காரணம் யாதோ?

எல்லாவற்றையும் சீர்துõக்கிப் பார்க்கையில் பெப்ரவரி 12ஆம் திகதி சிவராத்திரி தினமாக கொள்வது ஆகமாதி நுõல்களுக்கு அமைவாக இல்லை என்பதுடன் மார்ச் 13ஆம் திகதியே பொருத்தமானதென்பதும் தெளிவாகும்.

வீரகேசரி வாரவெளியீடு

பதிலுக்கு நன்றி ஆசான்.... இது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்க விரும்புகின்றேன். இன்று காலையில் திடீர் நெஞ்சு வலி வந்து கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. சின்ன ஓய்வின் பின் நாளை அல்லது மறுதினம் மீண்டும் என் பதிலை எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நீங்கள் இந்து சமயமா? சைவ சமயமா?

பதிலுக்கு நன்றி ஆசான்.... இது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்க விரும்புகின்றேன். இன்று காலையில் திடீர் நெஞ்சு வலி வந்து கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. சின்ன ஓய்வின் பின் நாளை அல்லது மறுதினம் மீண்டும் என் பதிலை எழுதுகின்றேன்

நிழலி! உங்கள் நெஞ்சுவலி பாரதூரமானது இல்லை என்று நினைக்கிறேன். எதற்கும் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றாக ஓய்வெடுங்கள்! உங்கள் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலையில் திடீர் நெஞ்சு வலி வந்து கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது.

நிழலி நீங்கள் நலமாய் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

வாசா நல்ல விழக்கம் தந்ததற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் திடீர் நெஞ்சு வலி வந்து கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. சின்ன ஓய்வின் பின் நாளை அல்லது மறுதினம் மீண்டும் என் பதிலை எழுதுகின்றேன்

சிறு வலி, பெரு வலி என்று பார்க்கமால் உடனடியாக மருத்துவரின் உதவியைப் பெறவும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் 35 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்தல் அவசியம்.

காலையில் சும்மா இருக்காமல், இரண்டு நாட்களாகிய பழைய கோழிக்கறியுடன் புட்டைச் சாப்பிடும்போதே மனிசி ஒரு பார்வை பார்த்தா. அதற்கு பிறகு சரியாக அரை மணித்தியாலத்தில் நெஞ்சு வலிக்கத் தொடங்க, உடனே மருத்துவரிடம் போய் காட்டி விட்டேன். gastritis தான் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் சந்தேகித்தாலும் பல checkups களுக்கு எழுதித் தந்துள்ளார். இன்றிலிருந்துதான் செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா....எந்தப் பரிசோதனையாக இருந்தாலும் மதியத்துக்கு முன்னர் செய்யப் பாருங்கள் அதுவும் தேனீர்,காலைச் சாப்பாடு எடுக்காமல் வெறும் வயிற்றோடு செய்தால் மிகவும் நன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயத்தில் ஆரம்பித்து இயற்பியலில் போய் முடிந்து இருக்கிறது இந்த பதிவு.....

எங்க ஊரில் 12.02.2010 அன்று மகாசிவராத்திரி என்று சொன்னார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் நிழலி அவர்கட்கு தங்கள் நலத்திற்கு வேண்டதல்கள். சிலவேளை தங்கள் நெஞசுவலி, வாயுத்தொல்லை காரணமாக வந்திருந்தால் பின்வரும் விடையத்தை முயற்சித்துப் பார்க்கவும். சுக்கு, மிழகு, திப்பிலி இவை மூன்றையும் சரிசமமாக எடுத்து சேர்த்து மிருதுவாக அரைத்து அதில் சிறிதளவை, அதாவது புளியங்கொட்டையை விட சிறிது அதிகமாக எடுத்து, சிறிதளவு தேனுடன் கலந்து சாப்பிட்டுவரில்

அஜீரணம் வாயுக்கோளாறு உடல் அசதி ஆகியவை நீங்கும் இது உங்களுக்கு மட்டுமல்ல அனைவர்க்குமே சாதாரணமாகச் சிறந்த மருந்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் சும்மா இருக்காமல், இரண்டு நாட்களாகிய பழைய கோழிக்கறியுடன் புட்டைச் சாப்பிடும்போதே மனிசி ஒரு பார்வை பார்த்தா. அதற்கு பிறகு சரியாக அரை மணித்தியாலத்தில் நெஞ்சு வலிக்கத் தொடங்க, உடனே மருத்துவரிடம் போய் காட்டி விட்டேன். gastritis தான் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் சந்தேகித்தாலும் பல checkups களுக்கு எழுதித் தந்துள்ளார். இன்றிலிருந்துதான் செய்ய வேண்டும்

புட்டோட கோழி இறைச்சி சாப்பிடுவது நல்ல சுவையாக இருக்கும்.

ஆனால் அதிக நாட்களில் குளிருட்டியில் இருக்கும் மாமிச உணவுகளைத் தவிர்த்தால் நல்லது. கிழமைக்கு ஆட்டிறைச்சி அடிக்கடி சாப்பிடுவதைக் குறைத்தல் நல்லது.

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

எங்கள் கோயிலில் சொன்னார்கள் பங்குனி மாதம்[மார்ச்] வருகின்ற சிவராத்திரி தான் உண்மையாக விரதம் அனுட்டிக்க வேண்டுமாம் ஏனென்றால் பெப்ரவரி மாதம் அனுட்டித்தால் அது தமிழுக்கு தைக்கு வருமாம் அப்படி தையில் வரக் கூடாதாம்...அதனால் பங்குனியில் அனுட்டித்தால் அது தமிழுக்கு மாசி மாதத்திற்கு வருவதால் அதை தான் அனுட்டிக்க வேண்டும் எனவும் மேலும் சிவராத்திரிக்கு பேர் போன திருக்கேதீஸ்வரத்திலும் பங்குனி மாதம் தான் அனுட்டிக்கிறார்களாம்.

ஜான்சி அவர்களே! ரதி சொன்னது மிகவும் சரியானது 13-3-2010 தான் சிவராத்திரி ஆகும்

மகாசிவராத்திரி விரதம் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் அனுஷ்டிக்க வேண்டும் என்பது சிவ ஆகம விதி. ஆனால் சதுர்த்தசியானது ஒரு சில நாட்களில் நாள் முழுவதும் இருக்கும். சில நாட்களில் பகலில் மட்டும், சில நாட்களில் இரவில் மட்டும் இருக்கும்.

இவற்றுள் திரியோதசி உடன் கூடிய சதுர்த்தசி உத்தமம் என்றும், சதுர்த்தசி மட்டும் உள்ளது மத்திமம் என்றும், அமாவாசையுடன் கூடியது அதமம் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. மேற்கூறியபடி மகாநிசி (லிங்கோத்பவர்) காலத்தில் சதுர்த்தசியுடன் அமாவாசை சேருமானால் அந்த நாளை விடுத்து முதல் நாளே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மகாநிசி (லிங்கோத்பவர்) காலம் என்பது இரவு இரண்டாம் யாமத்தில் கடைசி ஒரு நாழிகையும், மூன்றாம் யாமத்தில் முதல் ஒரு நாழிகையும் சேர்ந்த இரண்டு நாழிகை நேரம். அதாவது 48 நிமிடங்களைக் குறிக்கும். இந்த காலமானது சூரிய உதய அஸ்தமனத்தின் அடிப்படையில் வேறுபடும்.

அதுபற்றி 1914 ஆம் ஆண்டு வெளிப்பட்ட "வைதீக சைவ மஹா சிவராத்திரி நிருணயம்" என்ற நூலில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்நூலின் ஆசிரியர்கள் திருநெல்வேலி ஆகமவித்வான் சின்னாண்டி தீட்சிதரும் மேற்படியூர் தில்லை நாயக தேசிகரும் ஆவார்கள்.

(1). திரயோதசி சம்பந்தமன்னியில் கேவலம் அமாவாஸ்யையுடன் கூடின சதர்த்தசியானது பாபத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது. வாதுளாகமத்தில் அமா சம்பந்தத்தோடு கூடிய சதுர்த்தசியில் சிவார்ச்சனைச் செய்யக்கூடாது. கவனியாமல் செய்தால் கர்மநாசத்திற்கு ஏதுவாகும்.

(2). காமிகாமத்தில் திரயோதசியோடு கூடிய சதுர்த்தசியைத் தள்ளி அமாவாஸ்யையோடு கூடிய சதுர்த்தசியைப் பூஜா விஷயத்தில் உபயோகப் படுத்துவார்களாகில் அந்த ராத்திரியானது ஜனங்களுக்குப் பயத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் ராஜனுக்கு ஸ்தான சலனத்தை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்கின்றது.

(3) மகா நிசையிலிருக்கிற திரயோதசியோடு கூடின சதுர்த்தசியானது உத்தம சிவராத்திரி அமையோடு கூடின சதுர்த்தசி சிவராத்திரிக்கு யோக்கிய முள்ளதல்ல. அதில் சிவனைப் பூஜித்தால் பிராணஹானியைச் செய்யும். ராத்திரி நாலாவது யாமத்தில் சதுர்த்தசியானது மத்தியம் சிவராத்திரி பூஜைக்கு யோக்கியமானது. சிவசாயுஜ்யத்தைக் கொடுக்கத் தக்கது. அதை விட்டு அமையோடு கூடின சதுர்த்தசியில் பூஜித்தால் ரெளரவ நரகத்தை அடைகிறான்.

(4). யோகஜாகமத்தில் அமாவாஸ்யையோடு கூடின சதுர்த்தசியானது பிரேதத்திற்குச் சமானம். சதுர்த்தசி சம்பூர்ணமாயும் சுவல்ப அமாவாசையோடும் கூடினதாயும் இருக்கிறதோ அந்த ராத்திரியில் நித்திரை விழித்தால் பிரம்மஹத்திக்குச் சமம்.

(5), லளிதாகமத்தில் திரயோதசியானது அம்பிகை வடிவமாகவும் சதுர்த்தசியானது சிவரூபமாகவும் இருக்கின்றது. அந்தத் திரயோதசி சதுர்த்திசிகளுடைய சேர்கையானது புண்ணியமான சிவயோகமென்று சொல்லப்பட்டிருக்கிறது.

(6). வாதுளாகமத்தில் ஏகுமாரா சூரியோதயம் முதல் ராத்திரி இருபத்தொன்பது நாழிகைப் பரியந்தம் திர்யோதசியும் அப்பால் ஒரு நாழிகை சதுர்த்தசியும் எந்த தினத்தில் ஏற்படுகின்றதோ அந்த ராத்திரிதான் சிவ ராத்திரியாகும். அந்த தினத்திலேயே சிவனை அர்ச்சிக்க வேண்டும்.

(7). அந்த ஏழுவித சிவராத்திரிகளுக்குள்ளே முதலாவதான மகா நிசையில் வியாபித்த திரயோதசியோடு கூடின சதுர்த்தசியானது உத்தமோத்தமையான உமாசிவராத்திரி, அதில் பூஜிக்கத்தக்கது.

(8). சுயாம்புவாகமத்தில் மகா நிசையின் விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது. ராத்திரி பதினைந்து நாழிகைக்கு மேல் பதினேழரை நாழிகை வரையில் மகா நிசை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

(9). மகுடாகமத்தில் எக்காலத்தில் ஜோதிஷத்திற்கும் ஆகமத்திற்கும் விரோதம் ஏற்படுகிறதோ அந்தக் காலத்தில் ஜோதிஷத்தையே தள்ளி ஆகமத்தையே அனுஷ்டிக்க வேண்டும். பூஜைக்கு எந்த சாஸ்திரம் உபயோகமாயிருக்கிறதோ அந்த சாஸதிரமே எல்லா விஷயத்திலும் பிரதானமாயிருக்கிறது.

(10). சிந்திய விசுவஸாதாக்கியத்தில் பிரதிஷ்டை, சம்புரோஷணம், தீக்கை, சிவராத்திரி, சிவோத்ஸவம் இவைகளெல்லாம் ஸெளரமானத்தில் செய்ய வேண்டும் சாந்திரமானத்தில் கூடாது.

எனவே மேற்கண்ட வற்றால் 13-3-2010 எல்லாக் கோவில்களிலும் தனிப்பட்ட முறைகளிலும் சிவராத்திரி கொண்டாடுவதே சிவபெருமானின் திருவருளைப் பெற உகந்ததால் அன்றே கொண்டாடும்படி வேண்டுகிறேன்

Culturenews News ID 16

Posted date 2/6/2010

மஹாசிவராத்திரி பெப்ரவரியிலா மார்ச்சிலா? மார்ச் 13 திகதியன்றே மஹா சிவராத்திரியாகும்

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த ஆண்டில்(2010) எப்போது அனுஷ்டிப்பது என்பதில் விரத நிர்ணயகாரர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றமையினால் சைவசமய அனுஷ்டானிகளிடம் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளமையை தீர்த்துவைத்து தீர்மானமாக ஒரு சரியான தினத்தை நிர்ணயம் செய்வதற்கு சைவ சமயஸ்தாபனங்கள் எவையும் இதுவரை முன் வராதநிலையில் அனைவரது கவனத்தையும் இவ்விஷயத்தில் ஈர்த்து பொருத்தமானதொரு தினத்தினை தேர்வுசெய்வார்கள் எனும் நோக்கில் இங்கு சில கருத்துக்களை முன்வைக்க முனைகின்றேன். மகா சிவராத்திரி விரதம் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா அல்லது ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதினால்தான் சில பஞ்சாங்கங்கள் 2010 பெப்ரவரியிலும் சிலபஞ்சாங்கங்களில் 2010 மார்ச்சிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்றதொரு சிக்கல் தோன்றியிருந்திருந்த 1964ஆம் வருஷத்தில் அக்குழப்ப நிலையை தீர்க்கும் முகமாக இலங்கை அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,“ கண்டனுõர் சிவஸ்ரீ அரு. இராமநாதக் குருக்கள் மற்றும் திருவாவடுதுறை சிவஸ்ரீ க. சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய சிவாசாரியப் பெரியோர்கள் " சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் சிறு நுõலை பல்வேறு ஆகமநுõல்களையும் மற்றும் பல ஸ்மிருதி“ புராண வாக்கியங்களையும் மேற்கோள் காட்டி மகாசிவராத்திரி விரதம் ஸெளரமான மாசத்திலேயே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு திருக்கேதீஸ்வரம்(இலங்கை) சிவானந்த குருகுல வெளியீடாக சோபகிருது வருஷம் கார்த்திகை கஅ என தேதியிட்டு வெளியிட்டுள்ளனர்.

அவ்வெளியீட்டில் அந்த சோபகிருது வருஷத்திற்கு முந்தைய பராபவருஷத்தில் சிலர் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்ததாகவும் இதுவிஷயமாகப் பரிபூரணமான திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் சாஸ்திரமறிந்த வித்துவான்களையும் பல ஆகமவிற்பன்னர்களையும் அழைத்துப் பரிசீலனை செய்து சௌரமானப்படி மாசி 29ஆம் திகதிதான் நடத்தவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது என மேற்கோள் காட்டியுள்ளனர். "சிவராத்திரியைச் சௌரமாசத்தில் அனுஷ்டிக்கவேண்டும், சாந்திரமாஸத்திற் செய்யக் கூடாது' உத்தர காராணாகமம் : சிவராத்ரி விரதம் சரோத்' சௌரபக்ஷமாக மாகமாசத்தில் கிருஷணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் பிம்பாகமம் "கும்பமாசத்தில் மாக நட்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுதலால் அது மாக மாசமென்று சொல்லப்படுகிறது காரணாகமம் "எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கிறானோ அந்த மாசம் மாகமாசமென்று நினைக்கத்தக்கது' புரொத்கீதாகமம் "சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கிறானோ, அதுதானே மாகமாசமாகும், அம்மாசத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசி என்று சொல்லப்படும் அதில் சிவனைப்பூசிக்க' சூக்ஷ்மாகமம்

"கும்பமாசத்து கிருஷ்ண சதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்' கிரணாகமம் "கும்பமாசத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன்கூடிய திரயோதஸியும் அதற்குமேல் சதுர்த்தஸியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும்' வீராகமம்

"சூரியன் கும்பராசியிற் செல்கின்ற மாசிமாதத்தில்வரும் கிருஷ்ணசதுர்த்தசி சிவராத்திரியாகும், அது கோடிபாவங்களை நாசஞ்செய்யும்' பராசரம் "இராத்ரிமுழுவதும் தைமாதத்தையடைந்த சிவராத்திரியானது பாவத்தைக் கொடுக்கக்கூடியது விதிக்கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது. கேவலம் தைமாதத்தையடைந்த சதுர்த்தசியானது விதிக்கப்படாமலிருப்பதனாலே சந்ரகிரஹணத்தைத்தவிர வேறான ராத்திரியில் பிதிர்தர்ப்பணம் எப்படியோ அப்படி பாபத்தைக் கொடுக்கிறதாய் தள்ளத்தக்கது' விந்தியாவர்த்திகம் "மாசபூஜை முதலியவைகளைச் சௌரமாசத்தில் செய்

க, கும்பமாசத்துக் கிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவும்' பீமசங்கிதை என்று மேற்கண்டவாறு பல நுõல்களையும் மேற்கோள்காட்டி சௌரமான மாசத்திலேயே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று "சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் அந்நுõலில் தெரிவித்துள்ளனர்.

சைவசமயிகளுக்கு ஆகமங்கள் சிறப்பு நுõல்களாகச் சொல்லப்பட்டிருப்பதுடன், அவை முழுமுதற் கடவுளான சிவபெருமானாலும் உபதேசிக்கப் பட்டதாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சிறப்புப்பெற்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட விரதஅனுஷ்டான விதிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதாகுமா? விரதநுõல்கள் ஆகமங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விரதவிதிகளை தொகுத்துத் தருபவையாகும் அல்லவா? இந்த முரண்பாடுகள் எல்லாம் சைவஉலகினரால் ஆராயப்படவேண்டியவைகளாகும். வளர்ந்துவரும் இன்றைய உலகில் சைவஉலகம் இவ்வாறு பின்தங்கியிருக்க வேண்டுமா? இந்த ஆண்டில் வந்திருக்கும் இம்முரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி முரண்பாடு வரக்கூடிய விரதநாட்களுக்கு எல்லோருக்கும் இசைவாய் விதிமுறைகளை அறிஞர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்தமுடியுமல்லவா?

சிவராத்திரி பூஜாவிதி படலத்தில் மிகவும் விரிவாக இவ்விடயங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது.

1) மஹாசிவராத்திரி ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

2) மஹாசிவராத்திரியை சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்தல் கூடாது.

3) சூரியன் கும்பத்தில் உள்ள மாதத்தின் பௌர்ணமியுடன் மாகநட்ஷத்திரம் சேரும் மாதமே மாகமாசமாகும்

காரணத்தில்: சைத்ரநட்ஷத்திரம் சேர்வதால் சைத்ர(மேஷ)மாதம் விசாகநக்ஷத்திரம்சேர்வதால் வைசாக(ரிஷப)மாதம்

இதேபோல் மாக நட்ஷத்திரம் சேர்வதால் மாக(கும்ப)மாதம் 4) மாகமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவராத்திரி அஷ்டிக்கத்தக்கது தவிர,

விரதசூடாமணியில் (1935ஆம் ஆண்டுப்பதிப்பு) சிவராத்திரிவிரதம் பகுதியில் :"சதுர்த்தஸ்யாந்து கிருஷ்ணாயாம் பால்குனே சிவபூஜனம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸெளரமான மாஸத்தை குறிப்பதாக கருதவேண்டும். நிர்ணயஸிந்து எனும் நுõலில் :

"பால்குணகிருஷ்ணசதுர்த்தஸீ சிவராத்திரி' எனவும், அதே நுõலில் லிங்கபுராணத்தில் இருந்து. "பால்குணஸ்ய சதுர்த்தஸ்யாம் கிருஸ்ணபக்ஷே ஸமாஹிதா, கிருத்திவாஸேஸ்வரம் லிங்கமர்ஜயந்தி சிவம் ஸுபே' எனும் வசனமும் சிவராத்ரி நிர்ணய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச் சிவராத்திரி நிர்ணயப்பகுதி "பால்குணகிருஷ்ண சதுர்த்தசி நிர்ணய:' எனும் தலைப்பின் கீழேயே தரப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் கும்பமாஸத்தையே அவைகொள்வதாக கருத இடமுண்டல்லவா? இலங்கையில் இருந்துவெளிவரும் பிரபலமான பஞ்சாங்ககணிதர் பெப்ரவரியில் விரதநிர்ணயம் செய்துவிட்டு அதற்கு ஆதாரமாக காமிகமத்தில் இருந்து ". மாகமாஸ்யஸிதேபக்ஷே வித்யதேயா சதுர்த்தஸீ தத்ராத்ரி சிவராத்ரி ஸ்யாத்.' (சிவராத்திரிபூஜா படலம் 4,5ம் சுலோகங்கள்) எனவும் ஸ்காந்தத்தில் இருந்து " மாககிருஷ்ணசதுர்த்தஸ்யாம்' எனும் பகுதியையம் பிரசுரமொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரியென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஸெளரமான மாசமா? அல்லது சாந்ரமானமாசமா என்பது பற்றியோ அல்லது மாகமாசமென்பது எதுவென்பது பற்றியோ எவ்விதகுறிப்பும் தற்போது கிடைக்கும் காமிகாகமத்திலும், ஸ்காந்தத்திலும் காணப்படவில்லை. தவிர மேற்படி பஞ்சாங்க கணிதரின் பிரசுரத்தில் குமாரதந்திரத்தில் இருந்து, " மாகபூஜாவிதி: ப்ரோக்தம் சிவராத்ரிவிதிம் ச்ருணு, தந்மாஸே க்ருஷ்ணபக்ஷேது வித்யதேயா சதுர்த்தஸீ, தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாத்'எனமேற்கோள்காட்டியிருந்தார். குமாரதந்திரத்தில் மாசபூஜாவிதியின்கீழ் எல்லாமாஸங்களுக்கும் விரதவிபரங்கள் தரப்பட்டுள்ளதுடன், அவை நட்ஷத்திரங்களை முதன்மைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன. அதாவது, சைத்ரமாத பூஜாவிதியில் "சைத்ரேஷு.' என்றும் குமாரதந்திரம் காரணாகமத்தின் சுருக்கமென அந்நுõற்பதிப்பில் கூறப்படுவதில் இருந்தும், நக்ஷத்திரங்களை பிரதானமாகக் கொண்டு மாதபூஜைவிதிகள் அதில் சொல்லப்படுவதைக்கொண்டும் (காரணாகமம் மாதங்களின் பெயர்கள் அவ்வவ்மாசத்தின் பௌர்ணமியுடன் நட்ஷத்திரங்கள் சேர்ந்துவருவதனால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை கவனிக்கவேண்டும்) குமாரதந்திரம் ஸெளரமானமாஸத்தை அடிப்படையாகக் கொண்டு மாதபூஜாவிதிகளைத் தந்திருப்பது தெளிவாகும்.

ஆகவே குமாரதந்திரத்தில்இருந்து மேற்கோள்காட்டி பெப்ரவரி 12ஆம் திகதியை சிவராத்திரி தினமாக அப்பஞ்சாங்க கணிதர் நியாயப்படுத்த முயல்வது பொருத்தமற்றதுடன் மாறாக அதற்கெதிராக ஸெளரமான மாசத்தையே அது அனுசரிப்பதையும் கவனிக்கத் தவறியும் விட்டார். தவிர மேற்படி பஞ்சாங்ககணிதர் உத்தரகாரணாகமம் மற்றும் ஆகமங்களில் கூறப்பட்ட இவ்விஷேடவிதிகளை புறந்தள்ளியதுடன் அவைபற்றி தமது பிரசுரத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டுள்ளமைக்கான காரணம் யாதோ?

எல்லாவற்றையும் சீர்துõக்கிப் பார்க்கையில் பெப்ரவரி 12ஆம் திகதி சிவராத்திரி தினமாக கொள்வது ஆகமாதி நுõல்களுக்கு அமைவாக இல்லை என்பதுடன் மார்ச் 13ஆம் திகதியே பொருத்தமானதென்பதும் தெளிவாகும்.

வீரகேசரி வாரவெளியீடு

அருமையான விளக்கம் வர்ஷா

  • கருத்துக்கள உறவுகள்

திரு,ஆறுமுகநாவலர் அவர்கட்கு,

மகாபாரதப் போரில் சகுனி எனும் கதாபாத்திரம் வருகிறது. அச்சகுனி கதாபாத்திரம், கௌரவர்களைப் பழிவாங்குவதற்காகவே அவர்களுடன் ஒன்றிவிடுவதான பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கின்றது என்ன காரணத்திற்காக சகுனியையும் அவருடன் உடன்பிறந்ந அறுவரையம் கௌரவர்களது முன்ணோர் சிறையிலடைத்தார்கள் என்பதைப்பற்றிய விபரம் எனக்குத்தேவைப்படுகின்றது ஆகவே தங்களால் இந்தவிடையத்தை யாழில் குறிப்பிடுவீர்களா?

ஆறுமுகநாவலர் அவர்களே!

ஹர ஹர நம: பார்வதி பதயே

ஹர ஹர மஹா தேவா

என்றால் என்ன? அல்லது என்பதால் உணர்த்தப்படுவது என்ன?

உண்மையில் சிவராத்திரி என்பதற்கு கீழ் உள்ள கதையை விட வேறு ஏதாவது விளக்கம் இருக்கின்றதா? அதன் முக்கியத்துவம் என்ன?

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!

ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடம் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியாதிருந்தாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறு:கக வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

http://paraneetharan-myweb.blogspot.com/2010/02/blog-post_10.html

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!

.....

***

உந்த கதையை சிவராத்திரியுடன் தொடர்புபடுத்தி விபரிக்கப்பட்ட விதம் சரியோ? பிழையோ? எனக்கு தெரியாது. அதை புராணம் அறிந்த இந்துக்கள் சொல்வார்கள் என நினைக்கிறேன்.

(1) உவர்களின், பெரியாரின் வால்கள் என்று சொபவர்கள், அனைவரும் சைவரா? மாமிசம் புசிப்பவரா?

(2) உந்த கதையில் வரும் வேடனின் ஒழுக்கத்தில் என்ன குறைகண்டார்கள்? வேடனை, அயோக்கியனாக காணுபவர்களை என்னவென்று சொல்வது?

(3) இந்து சமயத்தை, சிவவழிபாட்டை முதன்மையாக பேணும் சைவர்களை - ஆரியமதம் என திரிபுபடுத்தும் கீழ்தர புத்தியை என்னவென்று சொல்வது? இத்தகையவர்களின் கீழ்தர உள்நோக்கம் என்ன?

(4) மதபிரச்சாரம் செய்யும் ஈன மதவியாபரத்தொழிலை இந்த உலகில் செய்யாதவர்கள் இருவர் மட்டும் தான்: (1) இந்துக்கள் (சைவர்கள்) (2) யூதர்கள். ஆனால் இந்துக்களுடன் தொடர்புடைய, இக்கதையை மதபிரச்சாரமாக அடையாளம் காணும் ஈன புத்தியுள்ளவர்களை என்னவென்று சொல்வது? உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள் உண்மையில் மதபிரச்சாரம் செய்து வருபவர்களை பற்றி வாய் திறக்கார்கள் - ஏனெனில் அவர்களின் காசில் தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

(5) வேட்டையாடும் வேடர்களை அயோக்கியனாக கண்ட பெரியார்-போலித்-திராவிட வால்கள், ஈராக்... போன்ற நாடுகளில் மக்களை கொன்று அழிக்கும் கிறிஸ்தவர்கள் கூட்டத்தை, ஏனைய மதத்தவர்களை அன்று முதல் இன்றுவரை கொன்று அழிக்கும் இசுலாமியர் கூட்டத்தை என்னவென்று சொல்வார்கள்? உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள் உவர்களை பற்றி வாய் திறக்கார்கள் - ஏனெனில் அவர்களின் காசில் தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

ஆரியர்களின் பூர்வீக மதம் இயற்கை வழிபாடு எனவும், அவர்கள் மதிய கிழக்கில், ஆப்கனிஸ்தானில் வாழ்ந்தபோது, கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களுக்கு இடையில் நடந்த சண்டையில் இடம்பெயர்ந்து, இந்தியாவில் வந்து குடியேறி, நாளடைவில் இந்துக்களாக மாறியதாகத்தான் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கற்காலத்தில் திராவிடர்கள் சிந்துவெளி வரை பரந்து வாழ்ந்ததும், அவர்களின் மொழி தமிழாகவும், சமயம் சைவமாகவும் இருந்தது வரலாறு. திராவிடர்கள் பண்பில், நாகரீகத்தில், கலை, கலாசாரத்தில் மிக உயர்ந்தவர்களாக ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர், பழைய காப்பியங்கள் விபரிக்கின்றன.

பின்னர் கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களால் ஆரியரின் இடப்பெயர்வு, பின்னர் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகம், போன்ற காரணத்தால் திராவிடர்கள் தென்னிந்தியக் கண்டம், குமரிக்கண்டம் ஆகிய பகுதிகளில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டார்கள்.

திராவிடர்கள் பண்பில், நாகரீகத்தில், கலை, கலாசாரத்தில் மிக உயர்ந்தவர்களாக ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர், பழைய காப்பியங்கள் விபரிக்கின்றன. ஆனால் நீண்டகாலம் தொடர்ந்த கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களின் ஆக்கிரமிப்பால், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், திராவிடர் சமூகம் மத்தியில் ஏற்பட்ட ஏற்றதாழ்வுகள் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. இது தான் உண்மை வரலாறு.

அந்த கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களால் திராவிடர் சமயத்தையும் சமூகத்தையும் சீரழிக்க உருவாக்கப்பட்ட இரு சமூகங்கள் தான், முறையே பெரியார்-போலித்-திராவிடர்களும், பார்பனர்களும்.

சிலை வழிபாட்டை மூர்க்கமாக தாக்கிய பெரியாருக்கு சிலைவைத்து வழிபடுபவர்கள் தான் உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள்.

சுகன்! கீழ்தர உள்நோக்கம், கீழ்தர புத்தி , .... உடையவர்கள் - உண்மை தெரிந்தாலும், தெரியாது போல் தொடர்ந்து நடிப்பார்கள்.

கருணாநிதியும் உந்த பெரியார்-போலித்-திராவிட பரம்பரையில், ஆழமாக செதுக்கி வளர்க்கப்பட்டவர் தான். பெரியார்-போலித்-திராவிட பரம்பரையின் போலிகளை உணர்ந்து வெளியில் வந்தவர்கள் தான் M.G.R. உம் கண்ணதாசனும்.

Edited by இணையவன்
உறுப்பினர் தொடர்பான விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

அந்த கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களால் திராவிடர் சமயத்தையும் சமூகத்தையும் சீரழிக்க உருவாக்கப்பட்ட இரு சமூகங்கள் தான், முறையே திராவிடர்களும், பார்பனர்களும்.

சிலை வழிபாட்டை மூர்க்கமாக தாக்கிய பெரியாருக்கு சிலைவைத்து வழிபடுபவர்கள் தான் உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள்.

சுகன்! கீழ்தர உள்நோக்கம், கீழ்தர புத்தி , .... உடையவர்கள் - உண்மை தெரிந்தாலும், தெரியாது போல் தொடர்ந்து நடிப்பார்கள்.

கருணாநிதியும் உந்த பெரியார்-போலித்-திராவிட பரம்பரையில், ஆழமாக செதுக்கி வளர்க்கப்பட்டவர் தான். பெரியார்-போலித்-திராவிட பரம்பரையின் போலிகளை உணர்ந்து வெளியில் வந்தவர்கள் தான் M.G.R. உம் கண்ணதாசனும்.

எனது கேள்விக்கான விடை இதுவல்ல. வில்வமிலை ஒடிச்சுப்போட்ட கதையை சிறுவயதில் கேட்டிருக்கின்றேன். அதையே இந்தப்பதிவிலும் பார்த்தேன். இங்கே மூன்று பக்கமாக சிவராத்திரிக்காக சரியான நேரத்தை அலசிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன ? இந்தப் புராணக்கதைதான் சிவராத்திரிக்கு காரணமா இல்லை அதைவிட வேறு ஏதாவது இருக்கின்றதா? இதையே அறிய விரும்பினேன்.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் ஓய்வெடுத்துட்டு வந்தால், இந்த திரி இப்ப இப்படி மாறிக்கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு நாள் ஓய்வெடுத்துட்டு வந்தால், இந்த திரி இப்ப இப்படி மாறிக்கிடக்கு :huh:

அதுதானே...

நானும் நினைச்சன் மறந்ததுகளை கொஞ்சம் ஞாபகப்படுத்தலாம் என்று.

புது திரி ஆரம்பிப்பமோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன்

எனது கேள்விக்கான விடை இதுவல்ல. வில்வமிலை ஒடிச்சுப்போட்ட கதையை சிறுவயதில் கேட்டிருக்கின்றேன். அதையே இந்தப்பதிவிலும் பார்த்தேன். இங்கே மூன்று பக்கமாக சிவராத்திரிக்காக சரியான நேரத்தை அலசிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன ? இந்தப் புராணக்கதைதான் சிவராத்திரிக்கு காரணமா இல்லை அதைவிட வேறு ஏதாவது இருக்கின்றதா? இதையே அறிய விரும்பினேன்.

Shiva ratri vratam

Shiva rathri is one of the most auspicious vratas for the devotees of Lord shiva. The purANas explain the grand significance of this vrata.

History of shivaratri

Once when everything in all the worlds got reduced into Lord shiva, in that darkness of nothing present, the mother pArvati worshipped Lord shiva in the Agamic way with great devotion. The parameshwar pleased by Her prayer blessed Her. She asked for the benefit of all the creatures that in future whoever worships the Lord on the shiva rAtri day with devotion, they should be blessed and should be given the ultimate liberation. The pashupati granted that showing way for all of us to get blessed easily.

When Brahma and Vishnu fought between themselves as "who is the greatest", Lord Shiva appeared before them as a pillar of fire. They were not able to find the starting and end of that pillar. This day is Thirukkaarthikai.(1)

Then Brahma and Mahavishnu repented for their mistake and prayed to Lord Shiva for forgiving their sin worshiping the shiva li.ngam which is the form of the flame. In the night of Shiva rathri Lord Shiva appeared before them and blessed them. Devotees pray the God throughout the night of Shiva rathri by performing Abisheka, chanting and other holy deeds.

Every month in Krishna paksha chathurdhasi (fourteenth moonday) is called masa Shiva rathri. The one that comes in the month of "Masi" (mid February to mid March) is called Maha Shiva rathri. This is considered as the most important vrata by the devotees.

There are many incidents told about the greatness of this day. Once a hunter in a jungle after searching throughout the jungle, was quite tired and could not get any animal. In the nightfall a tiger started chasing him. to escape from that he climbed a tree. That was a Bilva tree. The tiger sat under the tree waiting for him to come down. The hunter who sat on a branch of the tree was quite tense and didn't want to sleep. He was plucking the leaves and putting down as he was not able to be idle. Below the tree there was a Shiva lingam. The whole night went on like this. God was pleased with the Upavasa (hunger) and the Pooja the hunter and the tiger did even without knowledge. He is the peak of the grace. He gave the hunter and the tiger "Moksha".

In a Shiva temple on a Maha Shiva rathri day the lamp kept in the altar was very dim. That time a mouse which came take its prey touched the flame. Due to the heat it moved its head immediately. In the process it kindled the lamp and the altar was illuminated well. Lord Shiva, pleased by this deed made the mouse Mahabali, the renowned asura king.

There are many incidents like this told in our Puraanas. If we do the vrata with pure devotion and love there can be no doubt about getting the Grace of the Almighty.

When is shivaratri observed

ska.ndha purANam describes about four shiva rAtris. The first one is nitya shivarAtri (daily shivarAtri - every night). The second one is the mAsa shivarAtri which is observed on the kR^iShNa paxa chaturdasi (fourteenth moonday on the moons diminishing phase). The third one is the mAga prathamAdi shivarAtri which is observed for the thirteen days starting from prathama titi in the month mAga (mAsi) and on the chaturdasi night the Lord is worshiped throughout the night.

The fourth one is observed on the mAsi (mAga) month kR^iShNa paxa chaturdasi. This is the one observed in a widespread manner. It is also called mahA shivarAtri.

Way of observing shivaratri

Getting up early in the morning one meditates on the Infinitely Auspicious, ornated with thousands of splendid garlands, Who is in the form of the holy symbol of shiva(mahA li.ngam). Bathing and staying clean the worship of Lord shiva in the form of shiva li.ngam is done in the four jamas of the night (four equal time intervals of the night). (Note that the li.nga worship is explicitly mentioned for this vratam as this is the time the God out of Its grace for the benefit of pashus appeared in a formless-form that is a symbol (li.ngam) from Its true nature of formlessness.)

See Also:

1. Shiva rAtri pUja - in Tamil; in Bengali ; in Hindi ; in Gujarati ; in Kannada ; in Malayalam; in Marathi ; in Telugu ; in Roman script

2. shivarAtri dates for this year

3. thiruk kArthikai

Back to festival information

Back to Shaivism Home Page

Back to shaiva sidhdhantha Home Page

Edited by jhansirany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.muthukamalam.com/muthukamalam-anmeegam24.htm

Edited by jhansirany

நன்றி ஜான்சிராணி. வேடன் இலை புடுங்கி போட்டதை தவிர வேறு காரணத்தையும் அறிய முடிந்தது.

Then Brahma and Mahavishnu repented for their mistake and prayed to Lord Shiva for forgiving their sin worshiping the shiva li.ngam which is the form of the flame. In the night of Shiva rathri Lord Shiva appeared before them and blessed them. Devotees pray the God throughout the night of Shiva rathri by performing Abisheka, chanting and other holy deeds
.

வேடனுக்கு மட்டும் தான் மோட்சம் கொடுத்ததாக நான் முதல் இணைத்த இணைப்பில் இருந்தது ஆனால் புலிக்கும் சிவன் மோட்சம் கொடுத்திருப்பது உங்கள் இணைப்பினூடாக அறிந்து கொண்டேன்

He gave the hunter and the tiger "Moksha".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.