Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு

Featured Replies

கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு

கொழும்பு நிருபர்

திங்கட்கிழமை, பெப்ரவரி 15, 2010

TNA- Election camp

இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வ ராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சம்பந்தன் கோடிட்டு காட் டியுள்ளார்.

இந்தியாவின் ஆலோசனையின் படி கூட்டமைப்பின் புதிய வேட்பாளராக ஈ.பி.டி.பி விக்னேஸ்வரன், ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், சி.வி.கே சிவஞானம்,சாந்தி சச்சிதானந்தம் உட்பட பலர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

கூட்டமைப்பு வேட்பாளர் நியமனங்களிற்கான கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது இந்த கூட்டத்தில் யாரை அடுத்த தடவைகள் வேட்பாளர்களாக நியமனம் செய்யவேண்டும் என்பதற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றனவாம்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந் திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ்பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐவரும் கூடி தற் போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அடுத்துவரும் தினங்களில் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பொறிமுறை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இரா.சம்பந்தன் அங்கு கருத்துத் தெரிவித்தர் என அறிய வருகிறது.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக் கப்பட்டுவிட்டதால் இனிமேல் நடைபெற வுள்ள புதிய வேட்பாளர் தெரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இதுவரை எம்பிக்களாக இருந்த 22 பேரையும் அழைக்கும் நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது என்று கூட்டமைப்பின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வ ராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சம்பந்தன் கோடிட்டு காட் டினார்.

கூட்டமைப்பின் புதிய வேட்பாளராக ஈ.பி.டி.பி விக்னேஸ்வரன், ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், சி.வி.கே சிவஞானம்,சாந்தி சச்சிதானந்தம் உட்பட பலர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-12-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • Replies 76
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சுதந்திர நாட்டை ஆழ நமக்கு அடிவருடிகளா கிடைத்தார்கள்? எத்தனை ஆயிரம் இளைய தலைமுறையினர் சிறப்பாக நாட்டை நிர்வகிக்கும் திறமை உள்ளவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளார்கள். .

இந்த ஆயுதக்குழு, சிங்கள/ ஸ்ரீ பார்சி அடி வருடிகளுக்கு விடை கொடுக்கவேண்டும். இவர்களால் நமக்கு இனி ஒரு பயனும் இல்லை. 30 வருடமாக இரண்டு இலட்சம் கொலைகளை தூண்டி விட்டு பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவை இழுத்து விட்டு நம்மை குழப்புவார்கள்.

ஆனால், ஈழத்தமிழர் விழித்து விட்டார்கள் அவர்கள் அதனால் தான் நமக்கு வாழ்வு தரும் மேற்கிடம் சென்று வழக்கு போட்டு நீதி கேட்கிறார்கள். இந்தியாவோ அல்லது வேறொரு லஞ்ச ஆசிய நாடுகளை பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவரக்கூடாது.

துரோகிகளையும் உற்சாகமாக வேலை செய்ய தெரியாதவையையும் சம்பந்தன் வெளியேற்றுகிறார்...

இந்தியாவின் ஆலோசனையா, யாருக்கு தமிழனுக்கா?அல்வா சாப்பிட்டது போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12 பேர் வெளியிலை எண்டால் புதுசா ஒரு கட்ச்சி உதயமாகும் எண்டு கொள்ள முடியுமா. ??

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமாக இது நடக்கும்.

சிவாஜிலிங்கம் தலைமையில் சிறீகாந்தா ஆலோசனைப்படி.

இது நடந்தால்

ஈபிடிபி க்கும் டிஎம்விபிக்கும் தான் கொண்டாட்டம்.

12 பேர் வெளியிலை எண்டால் புதுசா ஒரு கட்ச்சி உதயமாகும் எண்டு கொள்ள முடியுமா. ??

நாங்கள்தான் எதையும் இரண்டாக்குவதில் விண்ணர்களாச்சே..... :)

ஆமை புகுந்த வீடும் இந்தியா புந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

  • தொடங்கியவர்

நாங்கள்தான் எதையும் இரண்டாக்குவதில் விண்ணர்களாச்சே..... :)

கூட்டமைப்பில் இருப்பவர்களிகேயே அதுகமான விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் செல்லத்துரை கஜேந்திரன். மாணவர் பேரவையின் தலைவராக இருந்த போதுதான் போர் நடந்த காலங்களில் பொங்கு தமிழை லட்ச்சக்கணக்கில் ஒண்று திரட்டி தமிழர்களின் அண்றைய எழுச்சிக்கு அடி போட்டவர்.

அவர் வெளியேற்றப்படும் போது உண்மையில் கூட்டமைப்பு என்ன நோக்கத்தில் இருக்கிறது என்பது தெளிவுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியவை தெரியாமல் தான் கேட்கிறன்!

இப்ப அங்கே என்னதான் நடக்குதெங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிட்சயமாக இது நடக்கும்.

சிவாஜிலிங்கம் தலைமையில் சிறீகாந்தா ஆலோசனைப்படி.

இது நடந்தால்

ஈபிடிபி க்கும் டிஎம்விபிக்கும் தான் கொண்டாட்டம்.

அவயளுக்கு கொண்டாம்தான் ஆனால் சனம் கூட்டமைப்புக்குதானே வோட்டு போடும், அதன் பிறகு என்ன திண்டாடமா? :o:D

தம்பியவை தெரியாமல் தான் கேட்கிறன்!

இப்ப அங்கே என்னதான் நடக்குதெங்கோ?

எல்லாம் இந்தியாவின் திருவருள்... புலிகளின் மீது ஆதரவு கொண்டவர்கள் கூட்டமைப்பின் உள் அனைவரும் ஒதுக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்....

ஆயுதங்களை கீழே போடுகிறோம் எண்று தலைவரால் அறிவிக்க பட்டு எந்தக்காரனத்துக்காக அரசியல் போராளிகள் வெள்ளை கொடிகளோடு வெளியில் வந்தார்களோ அதை செய்ய விடாது தடுக்கும் இந்தியாவின் திட்டம் அரங்கேறுகிறது...

வெளி வந்த போராளிகளில் பலர் கொல்லப்பட்டாலும் தப்பி கைது செய்யப்பட்டு இருக்கும் போராளிகள் யாரும் வெளியில் வந்துவிடக்கூடாது வந்து அரசியல் ரீதியில் எதுவும் செய்ய விடக்கூடாது எனும் திட்டம் நன்கு தீட்டப்பட்டு நகர்த்தப்படுகிறது...

இதுக்கு மேலை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு மாழைபோட்ட கிசோர் இனி என்ன செய்யப்போகிறார்?. ஒருவேளை மகிந்தாவின் கட்சியில் தான் சேரப்போகிறாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவுக்கு மாழைபோட்ட கிசோர் இனி என்ன செய்யப்போகிறார்?. ஒருவேளை மகிந்தாவின் கட்சியில் தான் சேரப்போகிறாரோ?

மாலை விக்கிற கடை வச்சு பிழச்சுக்க முடியாதா? :o:D:lol:

மகிந்தாவுக்கு மாழைபோட்ட கிசோர் இனி என்ன செய்யப்போகிறார்?. ஒருவேளை மகிந்தாவின் கட்சியில் தான் சேரப்போகிறாரோ?

மாலை மட்டுமா.. இருக்கி அணைச்சு உம்மாவும் அல்லோ குடுத்தவர்..

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்தியாவின் திருவருள்... புலிகளின் மீது ஆதரவு கொண்டவர்கள் கூட்டமைப்பின் உள் அனைவரும் ஒதுக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்....

ஆயுதங்களை கீழே போடுகிறோம் எண்று தலைவரால் அறிவிக்க பட்டு எந்தக்காரனத்துக்காக அரசியல் போராளிகள் வெள்ளை கொடிகளோடு வெளியில் வந்தார்களோ அதை செய்ய விடாது தடுக்கும் இந்தியாவின் திட்டம் அரங்கேறுகிறது...

வெளி வந்த போராளிகளில் பலர் கொல்லப்பட்டாலும் தப்பி கைது செய்யப்பட்டு இருக்கும் போராளிகள் யாரும் வெளியில் வந்துவிடக்கூடாது வந்து அரசியல் ரீதியில் எதுவும் செய்ய விடக்கூடாது எனும் திட்டம் நன்கு தீட்டப்பட்டு நகர்த்தப்படுகிறது...

இதுக்கு மேலை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள்...

அப்படியென்றால் தம்பி இப்ப நாங்கள் என்ன செய்யலாம் என்று சொல்ல வாறீங்க? அதாவது கூட்டணியின் செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்க வேண்டுமா? அல்லது தேர்தலை புறக்கணிக்க வேண்டுமா? நாங்கள் நிராகரித்தால் எல்லாம் சரிவந்திடுமா?

தம்பி ஒன்று மட்டும் புரியுது அதாவது தாயகத்தில் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலையோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் குழம்பி போயுள்ளார்கள், அல்லது குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளடைவிலை எல்லாம் சரிவரும் என்று பார்த்தால் வர வர நிலமை மோசமடைந்து கொண்டுதான் வருது பாருங்கோ.

இது வந்து பாருங்கோ எதிரியினாலை திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டுக்கொண்டு வருகுதோ அல்லது நாங்களாகவே இழுபடுகிறோமோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்.

எங்களுக்கை பாருங்கோ எத்தனை பிரிவுகள், எத்தனை இழுபறிகள், ஒரு வட்டுக்கோட்டை தீர்மானமோ அல்லது நாடுகடந்த அரசு சம்பந்த மாகவோ எந்த முயற்சியை எடுத்தாலும் நம்ம ஊடகங்களோ அல்லது அமைப்புக்களோ ஆதரவு தர முன்வாறார்களோ இல்லையோ குழப்பிறதிற்கு மட்டும் முண்டியடிக்கிறாங்கள் பாருங்கோ.

புலம்பெயர்ந்த நாடுகளிலை பெரியளவிலை அழுத்தங்கள் இல்லாமலே நிலமை இப்படியென்றால் தாயக நிலமை எப்படியிருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியல்லை தம்பி.

தங்களை பழுத்த அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்கூட்டணியினர் என்னத்திற்காக, யாருக்காக எந்தவிதமான தூரநோக்கமின்றி செயல்படுகின்றார்கள் அதாவது மக்களை பலிக்கடாக்கள் ஆக்குகின்றார்கள் என்று புரியல்லை தம்பி.

எனது கருத்து என்னவென்றால் அதாவது தமிழ்மக்கள் மீண்டும் ஓரணியில் இணையவேண்டுமாயின்(ஓரளவாவது) ஒரேயொரு வழிதான் உண்டு.

அதை நான் சொல்லவா? உங்களுக்கு புரிந்திருக்கும் தானே?

மறுமலர்ச்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

இதெப்பிடி?

ஒன்றை இரண்டாகவும்

இரண்டை நாலாகவும்

நான்கை எட்டாகவும்

எட்டை பதினாராகவும்

பதினாறை முப்பதிரண்டாகவும்

முத்திரண்டை அருபத்தினாலாகவும்

.................................. ...................................

................................. .....................................

.................................. ...................................

பிக்கும் இந்த சூட்சுமத்தை தமிழன் எங்கே கண்டு பிடிச்சானோ தெரியாது...

நாங்களும் எங்கள் பங்களிப்பாக முடிஞ்சவரை தூபமிட்டு மேருகேத்துவோம்.

அங்கதான் அப்பிடிஎன்றால் இஞ்ச்செயும் நாடுகடந்த அரசுக்குள் நல்ல ஒற்றுமையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்தபின் வேட்பாளர்களின் பட்டியல் வரும் போது கருத்துக்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். முன்பும் இப்படி பல சந்தேகங்கள் வந்தன. பிறகு பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை . யாழ் மாவட்டத்தில் 10 அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் ஒரு கட்சி சார்பாக 10க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவார்கள்.10க்கு மேற்பட்ட பெயர்கள் பட்டியலில் இருக்கும். விகிதசார அடிப்படையில் நடைபெறும் இத்தேர்தலில், சென்ற தேர்தலின் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 9 இடங்களையும், ஈபிடிபி 1 இடத்தையும் பெற்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய விருப்பு வாக்குகளில் அதிகம் பெற்ற 9 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். 10க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் யாழில் தேவை. இதனால் விக்கினேஸ்வரன் போன்றவர்களையும் தெரிவு செய்திருக்கலாம்.

  • தொடங்கியவர்

அப்படியென்றால் தம்பி இப்ப நாங்கள் என்ன செய்யலாம் என்று சொல்ல வாறீங்க? அதாவது கூட்டணியின் செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்க வேண்டுமா? அல்லது தேர்தலை புறக்கணிக்க வேண்டுமா? நாங்கள் நிராகரித்தால் எல்லாம் சரிவந்திடுமா?

தம்பி ஒன்று மட்டும் புரியுது அதாவது தாயகத்தில் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலையோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் குழம்பி போயுள்ளார்கள், அல்லது குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளடைவிலை எல்லாம் சரிவரும் என்று பார்த்தால் வர வர நிலமை மோசமடைந்து கொண்டுதான் வருது பாருங்கோ.

இது வந்து பாருங்கோ எதிரியினாலை திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டுக்கொண்டு வருகுதோ அல்லது நாங்களாகவே இழுபடுகிறோமோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்.

எங்களுக்கை பாருங்கோ எத்தனை பிரிவுகள், எத்தனை இழுபறிகள், ஒரு வட்டுக்கோட்டை தீர்மானமோ அல்லது நாடுகடந்த அரசு சம்பந்த மாகவோ எந்த முயற்சியை எடுத்தாலும் நம்ம ஊடகங்களோ அல்லது அமைப்புக்களோ ஆதரவு தர முன்வாறார்களோ இல்லையோ குழப்பிறதிற்கு மட்டும் முண்டியடிக்கிறாங்கள் பாருங்கோ.

புலம்பெயர்ந்த நாடுகளிலை பெரியளவிலை அழுத்தங்கள் இல்லாமலே நிலமை இப்படியென்றால் தாயக நிலமை எப்படியிருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியல்லை தம்பி.

தங்களை பழுத்த அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்கூட்டணியினர் என்னத்திற்காக, யாருக்காக எந்தவிதமான தூரநோக்கமின்றி செயல்படுகின்றார்கள் அதாவது மக்களை பலிக்கடாக்கள் ஆக்குகின்றார்கள் என்று புரியல்லை தம்பி.

எனது கருத்து என்னவென்றால் அதாவது தமிழ்மக்கள் மீண்டும் ஓரணியில் இணையவேண்டுமாயின்(ஓரளவாவது) ஒரேயொரு வழிதான் உண்டு.

அதை நான் சொல்லவா? உங்களுக்கு புரிந்திருக்கும் தானே?

அண்ணை நான் உங்களுக்கு இதுக்கு பதில் சொல்லலாமோ.?

தமிழ் மக்களுக்கு எண்று பார்த்தீர்கள் எண்றால் இண்று வரைக்கும் புலிகளை தாண்டி அர்ப்பணிப்போடு நீண்டகாலம் இருந்த ஒரு தலைமையும் அமைந்து விடவில்லை. புலிகளை தாண்டி மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியும் ஒருவரிடமும் கிடையாது.

இருப்பவர்களில் பறவாய் இல்லை எண்று கூட்டமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கூட்டமைப்பு தமிழர்களின் அபிலாசைகலை பூர்த்தி செய்யும் வகையில் இண்று வரைக்கும் ஏதும் செய்து இருக்கிறதா எண்று பார்த்தான் எனக்கு ஒண்றுமே கண்ணுக்கு தட்டுப்படவில்லை.

அதைவிட கூட்டமைப்பில் புலிகளால் இணைக்கப்பட்டு இண்று வெளியேற்ற படும் உறுப்பினர்களை விட்டு பாருங்கள் இருக்கும் மற்றவர்களின் வரலாறு எப்படி இருந்தது எண்று.? எப்படி இவர்கள் நல்லவர்கள் எண்று ஏற்று கொள்ள சொல்கிறீர்கள்.?

அதை ஒரு ஓரமாக இப்போதைக்கு போட்டு விடுங்கள். தாயகத்தில் இருக்கும் மக்களின் இண்றைய தேவைதான் என்ன என்கிறீர்கள்.? அரசியல் உரிமையா.? இல்லை சிங்கள குடியேற்றங்களா.?

இவை எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் தேவையானது இயல்பு நிலை வாழ்க்கை. அது இல்லாமல் எதையும் தமிழர்களால் மீட்டு எடுத்து விட முடியாது. இந்த இயல்பு நிலையை தோற்றுவிக்க கூட்டமைப்பு எடுக்கும் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன.? திருப்தியாக இருக்கின்றனவா.? அப்படி எண்றால் செய்ய வேண்டியதுதான் என்ன.?

அது உங்களுக்கு கூட தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பொய்கை!

உங்க ஆதங்கமும், எதிர்பார்ப்பும் புரியுது இருந்தாலும் எல்லோருடைய கருத்துக்களையும் பார்க்கும்போது எல்லாமே முடிந்து விட்ட மாதிரி அதாவது கையாலாகாத மாதிரித்தான் உள்ளது.

தம்பி! உந்த தமிழர் கூட்டணியின் அவசிய தேவை என்னவென்றால் பொதுத்தேர்தலிலை எவ்வளவு அதிக தொகுதிகளை கைப்பற்றுவது மட்டும் தான். அதற்கப்புறம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளை விமர்சிப்பதிலும், குற்றம் சுமத்துவதிலும் தான் நேரத்தை போக்குவினம் பாருங்கோ.

தம்பி! இன்றைய எங்களது தேவை, அவசியம் என்னவென்றால் ஒரு உருப்டியான, உறுதியான தலைமை தான், அதற்குரிய முயற்சியிலை தான் நாங்க அதிக சிரத்தை எடுக்கவேண்டும் பாருங்கோ.

அதற்காக உங்களால் குறிப்பிட்ட மக்களின் இன்றைய அவசிய தேவை அல்லது இயல்பு நிலையை நான் புறக்கணிக்கல்லை பாருங்கோ. எங்களால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அல்லது கருத்துக்கள் ஒவ்வொரு தமிழனையும் விழிப்படைய வைக்கக்கூடியதாக இருக்கவேண்டும் பாருங்கோ.

முயற்சி செய்தால் முடியாததென்று ஒன்றுமில்லை பாருங்கோ, முதலிலை தமிழராய் இணைவோம்.

Edited by Valvai Mainthan

அண்ணை நான் உங்களுக்கு இதுக்கு பதில் சொல்லலாமோ.?

தமிழ் மக்களுக்கு எண்று பார்த்தீர்கள் எண்றால் இண்று வரைக்கும் புலிகளை தாண்டி அர்ப்பணிப்போடு நீண்டகாலம் இருந்த ஒரு தலைமையும் அமைந்து விடவில்லை. புலிகளை தாண்டி மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியும் ஒருவரிடமும் கிடையாது.

இருப்பவர்களில் பறவாய் இல்லை எண்று கூட்டமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கூட்டமைப்பு தமிழர்களின் அபிலாசைகலை பூர்த்தி செய்யும் வகையில் இண்று வரைக்கும் ஏதும் செய்து இருக்கிறதா எண்று பார்த்தான் எனக்கு ஒண்றுமே கண்ணுக்கு தட்டுப்படவில்லை.

அதைவிட கூட்டமைப்பில் புலிகளால் இணைக்கப்பட்டு இண்று வெளியேற்ற படும் உறுப்பினர்களை விட்டு பாருங்கள் இருக்கும் மற்றவர்களின் வரலாறு எப்படி இருந்தது எண்று.? எப்படி இவர்கள் நல்லவர்கள் எண்று ஏற்று கொள்ள சொல்கிறீர்கள்.?

அதை ஒரு ஓரமாக இப்போதைக்கு போட்டு விடுங்கள். தாயகத்தில் இருக்கும் மக்களின் இண்றைய தேவைதான் என்ன என்கிறீர்கள்.? அரசியல் உரிமையா.? இல்லை சிங்கள குடியேற்றங்களா.?

இவை எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் தேவையானது இயல்பு நிலை வாழ்க்கை. அது இல்லாமல் எதையும் தமிழர்களால் மீட்டு எடுத்து விட முடியாது. இந்த இயல்பு நிலையை தோற்றுவிக்க கூட்டமைப்பு எடுக்கும் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன.? திருப்தியாக இருக்கின்றனவா.? அப்படி எண்றால் செய்ய வேண்டியதுதான் என்ன.?

அது உங்களுக்கு கூட தெரியும்.

வல்வை அண்ணா கிட்டத்தட்ட இதுதான் எனது கருத்தும்...

மக்களின் அடிப்படை பிரச்சினைகளையே தீர்த்து வைத்து விட முடியாதவர்கள் அரசியல் பிரச்சினையை தீர்த்து விடுவார்கள் எண்று நம்ப முடியவில்லை... வறுமையாலும் இடம்பெயர்வாலும் பீடிக்கப்பட்டு இருக்கும் அந்த மக்களை உருப்படுத்த முதலில் உந்த அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்கட்டும்... பிறகு தலைமை கதிரைக்கு போட்டி போடட்டும்...

தம்பி! இன்றைய எங்களது தேவை, அவசியம் என்னவென்றால் ஒரு உருப்டியான, உறுதியான தலைமை தான், அதற்குரிய முயற்சியிலை தான் நாங்க அதிக சிரத்தை எடுக்கவேண்டும் பாருங்கோ.

அதற்காக உங்களால் குறிப்பிட்ட மக்களின் இன்றைய அவசிய தேவை அல்லது இயல்பு நிலையை நான் புறக்கணிக்கல்லை பாருங்கோ. எங்களால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அல்லது கருத்துக்கள் ஒவ்வொரு தமிழனையும் விழிப்படைய வைக்கக்கூடியதாக இருக்கவேண்டும் பாருங்கோ.

முயற்சி செய்தால் முடியாததென்று ஒன்றுமில்லை பாருங்கோ, முதலிலை தமிழராய் இணைவோம்.

தலைவரின் சொல் கேட்டு சரண் அடைந்து சிறையிலை வாடும் எனது சகோதரர்களை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பவர்களின் காலில் விழுந்து கும்பிடக்கூட தயாராக இருக்கிறேன்... அது மகிந்தவாக இருந்தாலும் கூட...

அதை விடுத்து விடுதலை புலிகளுக்கு சமாந்தரமாக இந்தியாவால் கொண்டு வரப்படும் இன்னும் ஒரு சக்தி தமிழ் மக்களை விடுத்து இந்தியாவின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கும்...

இன்னும் இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்தபின் வேட்பாளர்களின் பட்டியல் வரும் போது கருத்துக்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். முன்பும் இப்படி பல சந்தேகங்கள் வந்தன. பிறகு பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை . யாழ் மாவட்டத்தில் 10 அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் ஒரு கட்சி சார்பாக 10க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவார்கள்.10க்கு மேற்பட்ட பெயர்கள் பட்டியலில் இருக்கும். விகிதசார அடிப்படையில் நடைபெறும் இத்தேர்தலில், சென்ற தேர்தலின் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 9 இடங்களையும், ஈபிடிபி 1 இடத்தையும் பெற்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய விருப்பு வாக்குகளில் அதிகம் பெற்ற 9 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். 10க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் யாழில் தேவை. இதனால் விக்கினேஸ்வரன் போன்றவர்களையும் தெரிவு செய்திருக்கலாம்.

இப்பெல்லாம் தெரிவு செய்யப்படும்போதே அமைச்சர்களாக தெரியு செய்யப்படுகிறார்களா?

என்னதான் இருந்தாலும் மகிந்த எல்லாருக்கும் அமைச்சர் பதவிகொடுக்கிறார் என்பதற்காக அமைச்சராகவே தெரிவு செய்யிறது கொஞ்சம் ஓவர் தான்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று வரவேண்டும்.

மன்னிக்கவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று வரவேண்டும்.

மன்னிப்பா?

இதுக்கேன் அண்ணை பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கொண்டு... நாங்களும் பிழை விடுறதுதான்.

நானும் பகிடியா இருக்கடும் எண்டுதான்.... :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.