Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து சுதந்திரம் என்பது ஊருக்கு நமக்கல்ல :D

அடுத்த நமது படைப்பு காதலிக்கும் பெண்ணின் கண்கள் ஒரு விஞ்ஞான புனை கதை ஆர்தர் c கிளார்க்,ஐசாக் அசிமோவ் மற்றும் நம்மவர் சுஜாதா போன்றவர்களின் ஒரு கலவையாக வரும் அற்புத கதையை ஆவலுடன் எதிர் பாருங்கள்:D

ஏனென்றால் அதை தூக்க முடியாதே!

கருத்து கூறுபவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அவர்களது கருத்து மட்டும்தானே களத்தில் இருக்கும், மற்றவர்களின் கருத்தை தூக்குவதுக்கு கூட காரணம் சொல்ல வேண்டாம். ஏன் எனில் அதிகாரம் கையில் இருக்கே. :lol::lol::lol:

நீங்க ரெம்ப லக்கி தூக்குதல் மட்டும்தான் நடந்திருக்கு எச்சரிக்கை விடப்டவில்லை :D:D

Edited by சித்தன்

  • Replies 92
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாறா அக்கா, எனது கருத்துக்களை வட்டம் போட்டு காட்டி இருக்கும் அதேநேரம் இந்த திரியில எல்லா கருத்துக்களையும் ஒருக்கால் முழுமையாக பாருங்கோ. அப்போது எனது கருத்தின் அர்த்தம் புரியும்.

மேல சித்தன், மற்றும் அர்ஜுன் ஆகியோர் இரண்டு கேள்விகளை கேட்டு இருக்கிறீனம். அதற்கு எவராவது பதில் சொல்லி இருக்கிறீனமா?

இந்த உதயன் பத்திரிகைக்கு எப்படி மக்கள் ஆதரவு கிடைக்கின்றது? உதயன் பத்திரிகை விளம்பரத்தின் அடிப்படையில் இயங்குகின்றது என்றால் அந்த விளம்பரங்களை உதயன் பத்திரிகைக்கு கொடுப்பதை நிறுத்துவதற்கு மக்கள் ஏன் முன்வரவில்லை? உதயன் பத்திரிகையை தங்கள் வியாபார நிலையங்களில் விநியோகம் செய்வதற்கு தமிழர் வியாபார நிறுவனங்கள் ஏன் ஆதரவை தொடர்ந்து கொடுக்கின்றார்கள்? அப்படியாயின் உண்மையில் மக்கள் ஆதரவு உதயனுக்கு இருக்கின்றது என்பதுதானே அர்த்தம்?

இங்கையும் பல மாற்றுகருத்து வானொலிகளும், இணையங்களும் இயங்குகின்றன அவை எல்லாம் மக்களின் அதரவினுடனா இயங்குது, காசு இருந்தால் எதுவும் செய்யலாம், வருமானம் இல்லாமல் யாரும் தொடர்ந்து பணத்தை இறைப்பார்களா, அவர்களுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது, அவர்கள் வியர்வை சிந்தாத பணம் அதனால் தொடர்ந்து இறைக்க முடிகிறது. அது எதற்காக வருகிரது என தெரிந்தும் இதை இவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் வருமாணம் மட்டுமே.

இப்பத்திரிகை தாக்கப்பட்டது தொடர்பாக .... கடந்த கால நேரடி அனுபவங்கள்/சம்பவங்களிலிருந்து பலவற்றை வெளிக்கொணர விருப்பம். ஆனால் சில சட்டச்சிக்கல்களை தவிர்க்கும் .....

.... ஆனால் அண்மைய சம்பவம் ஒன்றை நினைவூட்டுகிறேன் ..... தொடர்புபடுத்தலாம்!!

.... வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற வாக்கெடுப்பு காலங்களில் GTV சில செய்திகளை வெளியிடவில்லை என கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து சில பூசாரிகளின் அழுத்தங்களில் இங்கிருந்து எம் சில விசிலடித்தானுகள் GTVயின் நேரடி நிகழ்ச்சியில் கூக்குரலிட ..... பின் காத்திருந்தவர்கள் இன்றுவரை தூசனம் முதல் கேட்ககூடாதனவைகளை அனைத்தையும் அள்ளி எறிகிறார்கள். யார் தொடங்கியது???? இன்று யாருக்கு நன்மை பயிக்கிறது?????

GTV தொடர்பாக எனக்கு ஒரு மெயில் .... GTV, தமிழ்தேசியத்துக்கு துரோகம் செய்கிறது. என்ற தொனியில் தொடங்கி உணர்ச்சிகரமான வசங்களுக்கு பின் GTVயின் தொலைபேசி இலக்கமும் தரப்பட்டு, பேசட்டாம் ..... யார் அனுப்பியது?????? தேடினேன் .... முன்னால் போராளியும், பின்னால் புலிகளின் புலனாய்வுத்துறை புலத்து முக்கியஸ்தகரும், கேபியின் தூணும், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்நாள் சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுப்பினர்(தற்போது ஆதாரங்களுடன் அகப்பட்டார்) அனுப்பியிருந்தார். எனக்கு மட்டுமல்ல பலருக்கு!!!! என்னத்தை எதிர் பார்த்தார்????? இவரின் வலையில் ஒருவராவது உணர்ச்சிவசப்பட்டு வீழ்ந்திருக்க மாட்டார்களா??????

பத்திரிகை தாக்கப்பட்டது கண்டிக்கபட வேண்டியது. யார் செய்தார்கள் என்பதுதான் கேள்வி? அல்லது யார் தூண்டி விட்டார்கள்?? .... எம் உணர்ச்சிகர செயற்பாடுகள், எமக்கே உலையை வைத்துக்கொண்டு இருக்கின்றது.

. உண்மை/பொய்மை தெரிவதற்கு முன் ... இப்படி சங்கதி போன்ற தமிழ்தேசிய ஊடகங்கள் என்று கூறுபவை .... தமிழ்த்தேசியத்துக்கு தொண்டாற்றும் விதம் புல்லரிக்க வைக்கிறது!!! .... இனியாவது நாலு படித்தவர்களை விடுங்கள்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா பொலிசே சொல்லிபோட்டு இது சிறுபி்ள்ளைதனமான தாக்குதல் யாரோ போபங்கொண்ட இரு சிறுவர்கள் சிறு கல்லை விட்டு எறிந்து இருகிறார்கள் என்று, நாங்கள்தான் நாடுகடந்த தமிழீழம்,வட்டுகோட்டைதீர்மான் போண்றவற்றை பாதிக்குமா என்று ஊதி பெருப்பித்து கொண்டு இருகிறோம், ரேக்கிட் ஈசி பாலிசி :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்... கோதாரிலிங்கத்திற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு பற்றி நன்கு அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். அவரின் சிறப்பியல்புகளை அறிய நீங்கள் National Post எல்லாம் எடுத்து படிக்கவேண்டியதில்லை :lol: . சிம்பிள் வேலை .. இப்பொழுது நீங்கள் 2978 கருத்துகளை எழுதிவிட்டீர்கள். வெகு விரைவில் 3000 கருத்துக்களைத் தொட்டுவிடுவீர்கள். இதை வெகு விமர்சையாக கொண்டாட விரும்பினால் செல்லுங்கள் கோதாரிலிங்கத்திடம். கேட்கும் காசைக் கொடுங்கள். அடுத்த உதயனில் வரும் பாருங்கள் சும்மா .. முன் பக்கத்தில் பெரிய தலைப்புச் செய்தி போல கொட்டை எழுத்தில் ...

யாழ் களத்தில் 3000 கருத்துக்கள் எழுதி சாதனை புரிந்த மச்சான் அவர்களுக்கு கவிஞர் xxx அவர்கள் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவம். :lol:

கூடவே உங்களுக்கு பொன்னாடை போர்த்தும் புகைப்படமும் அச்சிடப்பட்டிருக்கும். :lol:

தம்பி நீங்க நகைச்சுவையா சொன்னாலும் உங்கள் கருத்தில் பல உண்மைகள் உள்ளடங்கியுள்ளன, இவற்றை கூறுவதினால் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்றும் கூறலாம்.

இந்த பச்சோந்திகளைப்பற்றி அறிந்து கொள்ள உங்களுக்கு ஊடக அறிவு வேண்டியதில்லை, நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன் இந்த சம்பவம் கண்டிப்பாக கண்டிக்கவேண்டியது தான், ஆனால் இவரை தன்னிப்பட்ட முறையில் உத்தமனாக விமர்சிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருவீரம் மற்றும் கோழைத்தனம் பற்றிய சான்றிதழ்கள் எந்தக்காலத்திற்கும் செல்லுபடியானவை அல்ல.

துரையப்பாவை சுட்டது பெருவீரம்.ஆனால் ஆயுதம் ஏதுமில்லாமல் கோயிலுக்குவந்த அரசகட்சிப்பொறுப்பாளரை கொன்றது கோழைத்தனம் என்றும் இப்போது எவரும் வாதிடலாம்.

ஏன் கரும்புலிகளைக்கூட தாக்குதல்முன்னெச்சரிக்கையோ தயார்ப்படுத்தலோ இல்லாத சிங்களபடை மீது தாக்குதல் நடாத்தியது கோழைத்தனம் என்றும் லொயிக் காக ரியல் எழுத்தாளர்கள் இப்போது எழுதலாம்.

ஆனால்,தமிழ்மக்கள் தமது படுக்கையில்இருந்தபோதும்,பள்ளிக்குப்போகும் போதும்,படகில்போகும் போதும் மிலேச்சத்தனமாக கொல்லும் ஒரு இனவெறிக்கொலை அரசுக்கு தமதுஎமுத்துக்களின் மூலமும்,செயல்கள்மூலமும் முண்டுகொடுப்பவர்களை அந்த மக்களிலிருந்து எழும் புரட்சிச்சக்திகள் சிங்களப்டையினனை கையாள்வதுபோலவே கையாள்வார்கள்.

மற்றப்படி உதயன் பேப்பர்பற்றி எழுத என்ன இருக்கிறது.

தேவையற்று ஒன்றுமேயில்லாத உதயனுக்கு விளம்பரம் தேடத்தான் இத்திரி உதவுகிறது

உறவுகளே இத்திரியானது 3000ற்கு மேற்பட்ட பார்வையையும் தாண்டி 80 பின்னூட்டங்களுடன் 5 பக்கங்களை எட்டியுள்ளது தேசியத்துக்கு எதிரானவர்களின் முகத்திரையை அம்பலப்படுத்தக்கூடிய எத்தனையோ திரிகள் இங்கே கொண்டுவரப்பட்டன ஆனால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை

உதாரணத்துக்கு இதோ ஒன்று GLOBAL TAMIL NEWS இருந்து கொண்டுவந்து போட்டேன்

மகிந்த சொன்னார் தான் நான் நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதில் என்று ஆனால் இந்த நீதிபதி என்ன சொல்கிறார் இதுபோன்றவிடயங்களை ஊதிப்பெருப்பித்து அதிக மக்களின் பார்வைக்கு ஏன்கொண்டுவரவில்லை

இப்படியானவிடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

Edited by vvsiva

வணக்கம், இன்று இவ்வளவு விசயங்கள் கூறப்பட்டதன் பின்னர்... உதயன் பத்திரிகையை கூகிழில தேடி அதன் வலைத்தளத்துக்கு போய் பார்த்தன் பத்திரிகை எப்படி இருக்கிது என்று. விளம்பரம் என்பது வியாபாரத்தின் கண்கள். அண்மையில வெளிவிடப்பட்ட எல்லாளன் படம்பற்றியும் உதயன் ஆசிரியர் [ என்று நினைக்கிறன் ] அவர்களின் எண்ணப்பகிர்வு இருக்கிது. இங்கு பலரால் தூற்றப்படுவது ஒருபுறம் இருக்க.. பத்திரிகையை பார்க்கும்போது வித்தியாசமாக ஒன்றையும் காண இல்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான ரசனை, ருசி. இந்தப்பத்திரிகையும் ஓர் தனித்தன்மையுடன் இருக்கிது.

வலைத்தளம்: http://www.canadauthayan.ca

19-02-2010 இதழின் சில பக்கங்கள்

19feb10a.jpg

19feb10b.jpg

19feb10-10000.jpg

19feb10-10001.jpg

19feb10-10002.jpg

19feb10-10003.jpg

19feb10-10004.jpg

19feb10-10005.jpg

19feb10-10006.jpg

19feb10-10007.jpg

அப்ப இவ்வளவு காலமும் நீங்கள் உதயனைப் பார்வையிடாமலே கருத்தெழுதியிருக்கிறீர்கள். விளம்பரங்கள் இல்லாத பக்கங்கள் ஏதாவது அதில் உள்ளதா? முதல் பக்கத்திலேயே இவ்வளவு விளம்பரங்கள் எனில் மற்றப் பக்கங்கள் எப்படியிருக்கும்???? எதற்கும் நீங்கள் தமிழ்க்கடைகளில் கிடைக்கும் உதயனையும் எடுத்துப் பார்த்துவிட்டு கருத்தெழுதுங்கள்.

Edited by தமிழச்சி

உது என்ன கனடாவிலை இருந்து வெளிவருகிற பத்திரிகையோ மருமக்கள்? உதைப்பற்றியே எல்லாரும் பேசினீங்க?என்ன அழகான கலரான பத்திரிகை. இதைப்போய் இப்படி தூற்றலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

flyer மீது தாக்குதல் என்று தலைப்பு வந்திருக்கவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வரியில சொல்லுவது என்றால் "இது ஒரு கோழைத்தனமான செயற்பாடு"..முற்றுப்புள்ளி.

அனா இங்கே கனடா உதயனுக்கு குடுக்கிற பில்ட் அப்பை பார்த்தால் ( நாங்கள் எல்லாரும் மாறி மாறி எழுதுவதால ) , ஒரு படத்தில ?(ரன்) விவேக் சொன்னமாதிரி காபரேசன் தண்ணி பைப்பை திறந்து பார்க்க காத்துதான் வரும் அப்ப சொல்லுவார், ""இதென்னட சென்னை முனிசிபலிடிக்கும் உசா பான் கம்பனிக்கும் என்ன கொலப்றேசனா எண்டு ?"" அது மாதிரி யாழுக்கும் (அதன் வாசகர்களுக்கும்) உதயனுக்கும் என்ன கொலபிறேசனா? அல்லது இதுவும் யாழின் மார்ச் மட்டுமான ப்ரீ விளம்பர சேவையின் ஒரு பகுதியோ...:lol: (--சும்மா பகிடியாய் இருக்கட்டும் எண்டுதான் எழுதினான் மற்றும் படி ஒரு குறையும் இல்லை----)

மற்றது மச்சான் ...

லோகேந்திர லிங்கம் எல்லாளனை பற்றி நல்லாத்தான் சொல்லியிருக்கிறார்..அதற்கு அவரை மெச்சவேண்டும்...பத்திரிக்கைகாரர் அல்லவே வடிவாக சொல்லுகிறார்..நன்றி இணைத்ததற்கு.

மற்றது ..உந்த பேப்பர் போட்டது பற்றி ..தொடந்து செய்வீங்களோ, ஏனென்டா இப்ப உதுகளை வீட்டை கொண்டுவந்து அதை திரும்ப garbage அடிகிறதிலும் பார்க்க, நீங்களே உப்பிடி போட்டால் நல்ல சேவையாக இருக்கும் , காடுகளை பாதுகாத்தது ஆகவும் இருக்கும்

Edited by Volcano

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேப்பரினர களரும் விளம்பரங்களும் ஸ்..ஸப்பா ... இந்த பேப்பரை மாடே சாப்பிடாது :lol:

உதயன் பத்திரிகையில வித்தியாசமாய் ஒன்றையும் காண இல்லை. உதயன் பத்திரிகை சுமார் 15 வருசமாய் கனடாவில வெளிவருகிதாம். ஒரு பத்திரிகை 15 வருசம் வருகிது என்றால் அது பெரிய விசயம். யாழ் வலைத்தளத்திலையும் தான் நாங்கள் விளம்பரங்களை இணைக்க முயற்சி செய்கிறம். விளம்பரம் இல்லாமல் வியாபாரம் இல்லை. ஏன் வானொலி, தொலைக்காட்சி என்று எல்லாத்திலையும்தான் விளம்பரம் இருக்கிது. விளம்பரங்களை பெறுவது, ஒரு நிறுவனத்தை இலாபகரமாக கொண்டுசெல்வது ஓர் திறமை. உங்களுக்கு அது பிடிக்காட்டிக்கு, அந்த திறமை உங்களுக்கு இல்லாட்டிக்கு என்ன செய்கிறது. அப்பிடியெண்டால் விளம்பரம் ஒன்றும் இல்லாமல் ஓர் பத்திரிகை செய்யுங்கோ , பத்திரிகையை மாடு விரும்பி சாப்பிடக்கூடிய வகையில :)

a) கனடா உதயன் பத்திரிகை காரியாலயம் நேற்று உடைக்கப்பட்டதாகவும் அதன் முன்பு நின்று கொண்டு அதன் உரிமையாளர் லோகேந்திரலிங்கம், குலா செல்லத்துரையும் கீதவாணி தமிழ்வானொலியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் அதாவது இன்று உருக்கமான பேட்டியினைக் கொடுத்தார்கள்

b) ஏற்கனவே இதே போல் ரொரன்ரோவில் உள்ள புத்த விகாரையும் மூன்று தடவைகள் புலிகளால் உடைக்கப்பட்டது என்று காப்புறுதி நிறுவனங்களிடம் பணம் கறந்து வந்திருக்கின்றது

அதே பாணியில் அவர்களின் நண்பர்களான இந்த எட்டப்பர்களும் பின்பற்றுவது ஏனோ இந்த காவல்துறைக்கு தெரியவில்லை?

c) ஏற்கனவே வட்டுக்கோட்டைத் தேர்தலில் இந்த உதயன் லோகேந்திரலிங்கம் பொய்யான பேட்டியைக் கொடுத்திருந்தார்

சாதாரண தமிழ் பொதுமகன் எதையும் செய்யலாம். சிங்களத்துடன் கூத்தடிக்கலாம்.சிங்கள அரசுக்காக வால் பிடிக்கலாம்

ஆனால் தமிழர் ,தமிழர் என்று கத்தி காசு ,பதவி எல்லாம் பெற்றா பிறகு. அவன் கேணைத் தமிழன் எதுவும் செய்யலாம் என்று நினைப்பது தவறு.

அதன் வெளிப்பாடுதான் உதயன் பத்திரிகை மீதான கோபம்.

மூன்று இலட்சம் தமிழரை கேணையனாக நினைப்பது தவறு.

பத்து பேராவது உணர்வுள்ளவனாக இருப்பான்.

இது புலி இருக்கும் போது வால் வால் என்று கத்தி போட்டு இப்ப தனது சுய ரூபத்தை காட்ட முற்படுபவர்களுக்கு எச்சரிக்கை யாக கூட இருக்கலாம்.

தமிழன், போர், என்று கொடி பிடிச்சு போட்டு பிறகு பலமிழந்து விட்டோம் என்றவுடன் சிங்களத்தின் வால் பிடிக்க முற்படுகிறவர்களை

புலம் பெயர் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒரு பத்திகையாளன் என்ற முறையில் கேட்கிறன், அட சித்தன் எப்படி அதுக்குள் பதிரிகையாளன் ஆனான் என்று புருவத்தை உயர்த்தும் நண்பர்களுக்கு, நானும் சில காலம் ஊர் கரும்பலகையில் செய்திகள் எழுதி இருக்கிறேன் என்ற முறையில் நானும் பத்திரிகையாளன்தான் ஒத்துக்கொள்ளுங்கோ இல்லாட்டி அழுதுடுவன் :):D

பத்திரிகையாளன் என்ற முறையில நான் கேட்கிறது என்ன வென்றால், பத்திரிகையில் இரண்டு விதம் இருக்கு, ஒன்று சமூகத்துக்கு பயன்தரகூடியது, மற்றது சமூகத்தை கெடுப்பது உதாரணமாக மஞ்சள் பத்திரிகை, இதற்கு கல் எறிந்தாலும் கோழைகளின் தாக்குதலுக்குள் வருமா என்பதுதான் எனது கேள்வி?

இவன் கரும்பலகை பத்திரிகையாளன் சித்தன் :lol::lol::lol:

ஓ அப்படியோ. பிறக்கேக்கையோ வாயிலை பத்திரிகையை கவ்விக்கொண்டு பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லையோ? அட்லீஸ்ட் பிறக்கும்போது யேசுநாதர் வைக்கற்போரின் மேல பிறந்தமாதிரி பத்திரிகை மேல பிறந்த ஆக்கள் யாராச்சும்...? இதேமாதிரி.. ஏடு தொடக்கும்போதே பத்திரிகைக்காய் எழுதின வேற யாராச்சும்..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.