Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?

[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 21:42 GMT ] [ புதினப் பணிமனை ]

புதினப்பலகை-க்காக சண் தவராஜா

முள்ளிவாய்க்காலின் பின் அனைத்துமே மாறிவிட்டது.

4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.

அத்தகைய ஆய்வுகளில் சோகமும் விரக்தியும் இழையோடியதை மறுப்பதற்கில்லை. மனமும் ஏதோ வகையில் அதனை நியாயப் படுத்தவே செய்கிறது.

அப்போது தான் நாம் இந்தப் போராட்டத்தை எவ்வளவு தூரம் நேசித்திருந்தோம், அதன் வெற்றியை எத்துணை தூரம் விரும்பியிருந்தோம் என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

முள்ளிவாய்க்காலோடு அனைத்துமே முடிந்துபோய் விடவில்லை என அறிவு சொல்லிக் கொண்டாலும் உள்ளுணர்வு என்னவோ அனைத்துமே முடிவிற்கு வந்துவிட்டது என அடிக்கடி சொல்லிக் கொள்கிறது.

பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பல் மேட்டிலிருந்து நாம் எழுந்து வருவோம் என அறிவு சொல்லிக் கொண்டாலும் உள்ளிருந்தே கொல்லும் எதிரிகள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என உள்ளுணர்வு கூறுகின்றது.

நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கும் எதுவுமே தீமையில் முடிந்து போவதில்லை என அறிவு கூறிக் கொண்டாலும் மோசமான உள்ளுணர்வோ அவநம்பிக்கையுடன் கூடிய சிந்தனைகளையே தொடர்ந்தும் கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலை ஈழ தேச விடுதலையை நேசித்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தமிழ் மகளுக்கும் உள்ளது என்பதை அன்றாடம் நாம் சந்திக்கும் உறவுகளுடனான கருத்தாடல்களின் போது அறிந்து கொள்ள முடிகின்றது.

அதே போன்று தாயக விடுதலையை நேசித்த ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளனும் அவ்வாறே உணர்கின்றான் என்பதை அவர்களின் தொடர்ச்சியான படைப்புக்கள் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

கடந்த மே மாதம் முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் பற்றிய அறிவிப்பு ஒருவித தற்காலிக நம்பிக்கையைத் தந்திருந்தது.

ஆனால், தமிழர்களின் உள்ளிருந்தே கொல்லும் வியாதி காரணமாக, அதற்கு மாறாக மற்றொரு திட்டம் முன்வைக்கப் பட்டமையும், தமிழ் மக்கள் மனங்களில் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக அமைந்தது.

நம்பிக்கை தானே வாழ்க்கை! தமிழ் மக்கள் தவிர்க்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டார்கள்.

அலைகடல் நடுவே தத்தளிப்பவன் ஒரு சிறிய துரும்பைக் கூடப் பற்றிக் கொண்டு தன்னுயிர் காக்க நினைப்பதைப் போன்றே தமிழ் மக்களும் இன்றைய இக்கட்டான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை இரட்சிக்கும், விடுதலைப் பாதையின் அடுத்த கட்டத்திற்கு எம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

ஆனால், அது விடயத்திலும் கூட உள்ளிருந்தே கொல்லும் வியாதி விட்டுவிடவில்லை.

இப்போது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தோற்கடித்து விடும் நோக்குடன் மாற்று அணியொன்று களமிறக்கப் பட்டுள்ளது.

திருகோணமலையைப் பொறுத்தவரை பறிபோகப் போவது சம்பந்தனின் பதவி மட்டுமல்ல. திருமலை மாவட்டத்திற்கு மிகவும் அவசியமான தமிழ்ப் பிரதிநிதித்துவமும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் தான்.

சிங்களப் பேரினவாதிகள் மிகவும் விரும்பும் இந்த நிலைமை உருவாவதற்கான முடிவு புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் இருந்தே எடுக்கப்பட்டதை மறைத்து விடுவதற்கில்லை.

இத்தகைய போக்கு நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போவதில்லை. மாறாக, தமிழ்த் தேசியத்தின் எதிரிகளுக்கே உவப்பான விடயம்.

'உயிரோடு இருப்பவர்கள் யாவரும் துரோகிகள். சாவைத் தழுவிக் கொண்டவர்கள் யாவரும் மாவீரர்கள்" என அண்மையில் ஒரு ஊடக நண்பர் எழுதியிருந்தார்.

எந்தப் பாராளுமன்ற அரசியலை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கினார்களோ அதே வழியில் வந்தவர்கள் இன்று பாராளுமன்றக் கதிரைகளுக்காக தம்மிடையே அடித்துக் கொள்வதைப் பார்க்கையில் தாயாதிச் சண்டைகளால் நசித்துப் போன பண்டையத் தமிழ்ச் சாம்ராஜ்யங்கள் நினைவுக்கு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உன்னத இலட்சியத்துக்காகவே தோற்றம் பெற்றது. அதன் தேவை தமிழர் அரசியலில் இன்னமும் உள்ளது.

அதனை வழிநடத்துவோரில் தவறு இருக்கக் கூடும். அதற்காக அந்தக் கட்டமைப்பையே சிதைத்துவிட நினைப்பது எந்த வகையில் நியாயம்?

உண்மையில், கொள்கைக்கும் இலட்சியத்துக்குமாகப் போராடுவதாக இருந்தால் அதனை உள்ளிருந்து அல்லவா செய்திருக்க வேண்டும்...? கூட்டமைப்பின் உள்ளேயே உள்ள தேசியத்துக்கு ஆதரவான சக்திகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக அதனைச் சாதித்திருக்க முடியும்.

அதே போல - கூட்டமைப்பி்ன் தலைமையும், தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுள்ளவர்கள் பிரிந்து வெளியே சென்றுவிடாத சூழலையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், இன்று காலம் கடந்து விட்டது. குறுகிய அரசியற் சிந்தனைகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக தமிழர்களின் எதிர்காலம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப் பட்டுள்ளது.

தமது ஆயுத பலத்தை இழந்த தமிழ் மக்கள் எஞ்சியிருந்த அரசியற் பலத்தையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஏப்ரல் 8 இல் எழுதப்படும் வரலாறு தமிழ் மக்களுக்குக் கசப்பானதாகவும் தமிழ்த் தேசியத்தின் எதிரிகளுக்கு உவப்பானதாகவும் அமையப் போவதை நினைக்கையில் தந்தை செல்வா அன்று கூறிய வரிகளே ஞாபகத்துக்கு வருகின்றன.

'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!"

http://www.puthinappalakai.com/view.php?20100304100611

அரசியல் பலமாம் அரசியல் பலம், எப்போதாவது அப்படி ஒரு சாமான் இருந்ததா தமிழனுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பலமாம் அரசியல் பலம், எப்போதாவது அப்படி ஒரு சாமான் இருந்ததா தமிழனுக்கு?

அதுதானே

இருக்க விட்டுவிடுவோமா நாம்....

சண் தவராஜாவின் கூற்று, ஒற்றுமையின்மை என்பதுதானே. ஒற்றுமையிருந்தாலே மிகுதிகள். எத்தனைன கட்சிகள் போட்டியிட்டாலும் மக்களின் கைகளிலேயே தீர்மானமுள்ளது.

இதுவொரு இக்கட்டான நிலைதான். புதிதாகக் களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளை மட்டும் இதில் குற்றம் சுமத்த முடியாது. கூட்டமைப்பின் செயற்பாடுகள் தான்தோன்றித்தனமாக ஆரம்பத்தில் இருந்துவிட்டது. இந்த நிலைப்பாடுதான் தமிழர் எதிர்நிலைப்பாடு கொண்ட சக்திகளை இதனுள் நிலைபெறச் செய்துவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையும் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒற்றுமை கொண்ட வலுவொன்று தேவை. தற்போதைய நிலையில் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தான்தோன்றித்தனமாக ஆரம்பத்தில் இருந்துவிட்டது. இந்த நிலைப்பாடுதான் தமிழர் எதிர்நிலைப்பாடு கொண்ட சக்திகளை இதனுள் நிலைபெறச் செய்துவிட்டது.

ஆனாலும் ஒற்றுமை கொண்ட வலுவொன்று தேவை. தற்போதைய நிலையில் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.

நன்றி தங்கள் கருத்துக்கு

ஆனால்

இதற்கு

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தான்தோன்றித்தனமாக ஆரம்பத்தில் இருந்துவிட்டது.

அவர்கள் மட்டுமேதான் காரணமா....?

நன்றி தங்கள் கருத்துக்கு

ஆனால்

இதற்கு

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தான்தோன்றித்தனமாக ஆரம்பத்தில் இருந்துவிட்டது.

அவர்கள் மட்டுமேதான் காரணமா....?

வெளியேற்றப்பட்டவர்கள் பற்றிய செயற்பாடுகளை கொஞ்சம் முதிர்சியோடு அணுகியிருக்கலாம். தற்போதைய நிலையில் தமிழரின் மீள் இணைப்புத்தான் முக்கியமானது. கட்சியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெளியேறியவர்களிடம் மிகவும் அதிதுடிப்புள்ளதாக தங்களுக்கு தெரியவில்லையா...?

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை இல்லை என்று சொல்ல முடியாது, அதாவது பலமான ஒன்றுமை இல்லை என்பது தான் உண்மை.

இலகுவில் உடைக்கப்பட்டுவிட்டது, என்னவிருந்தாலும் தமிழர்களும் மனிதர்கள் தானே???

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

எதை வைத்துக்கொண்டு மல்லுக்கட்டுகிறோம் தற்போது....

ஏன் வெளியேறியவர்களிடம் மிகவும் அதிதுடிப்புள்ளதாக தங்களுக்கு தெரியவில்லையா...?

அதைத்தான் சொல்கிறேன். அதிதுடிப்புள்ளவர்களையும் இலாவகமாகக் கையாண்டிருக்க வேண்டும். வன்னிமாட்ட பேர்டியாளர் கனகரட்ணம் விடுத்திருக்கும் அறிக்கையைப் பாருங்கள். தமிழர் வாக்குகள் பிளவுபடுத்தப்படும் என்பது இந்த முதிர்ச்சியாளர்கள் அறியாததா?

பிளவுகள் காணப்பட்டதால்தானே பலவீனனுக்கு நம்பிபிக்கையூட்டப்பட்டு பிரிவுகள் உண்டாக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

செய்தி மிகவும் கடுமையானது

அடங்கிப்போ என்பதற்கே 100 வீதவாக்குகள் தற்போது

இல்லை என்று தடிஎடுப்பது பொருத்தமல்ல என்று சொன்னால் கேட்கவேண்டும்

பிரபாகரனால் முடியாததை எவராலும் செய்ய முடியாது என்ற இந்த சூடுகூட இல்லையென்று..

மீண்டும் எம்மால் முடியும் என்றால்

தள்ளியிரு என்றுதான் சொல்லத்தோன்றும் தங்போதைய நிலையில்.

ஆனால் அவர்களில் பிழை சொல்லவில்லை

வளைந்து செல்லத்தான் வேண்டும் இன்று

மீண்டும் அவர்களுடைய கைகளில் வரும்வரை....

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உடையக் கூடாது என்பதே எல்லாத்தமிழரின் விருப்பம். அந்த விருப்பத்தை கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தில் எடுக்கவில்லை.குறிப்பாக தமிழ்த்தேசியத்தின் மீது உறுதியாக இருப்பவர்களை ஒதுக்கி விடும் மனப்பான்மையே கூட்டமைப்புத் தலைமையிடம் குறிப்பாக சம்பந்தனிடம் இருந்தது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளால் தமிழ்மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை சர்வ சாதாரணமாக ஒதுக்குபவர்கள் தமிழ்மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள் என்று ஒற்றுமையின் பேரால் நம்புவது மடைமைத்தனம் ஆகும்.அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெறுபவரே நாடாளுமன்றக் குழுவின் தலைவர் என்று கூட்டமைப்பின் யாப்பில் முற் கூட்டியே எழுதப்பட்டிருந்தால் சம்பந்தர் நிலை என்னாகும்.வயதிற்கும் அரசியல் அனுபவத்திற்கும் மதிப்புக் குடுத்து தலைமைப் பொறுப்பைக் கொடுத்தால் சம்பந்தன் தன்னிச்சையாக நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.இது தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனை.இதனை வெறுமனே ஒற்றமையைக் கட்டிக் காக்க வேண்;டும் என்பதற்காக எமது உரிமை சம்பந்தப்பட்ட கோரிக்கையை மீள எழ விடாது இந்தியாவிடம் அடகு வைக்க முயலும் தனிப்பட்ட ஒரு சிலரிடம் அதிகார பூர்வமாக(தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதன் மூலம்) கையளிப்பது எப்படி நியாயமாகும் அதைவிட கூட்டமைப்பு உடைந்து மக்கள் நலன் விரும்பிகள் ஒரு சிலராவது தெரிவாவது மக்களின் எண்ணம் என்ன என்பதைப் புலப்படுத்தும். திருமலையில் தமிழரின் பிரதிநிதிதுத்துவம் கிடைக்காது விடின் அது சம்பந்தரின் குற்றமே. யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டது மாதிரித்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டய வீச்சோட கூட்டமைப்பு டபிள் துரொகி. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பந்தியாளர் ரெண்டாம் முள்ளிவாய்க்கால் என்று அழுவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்திமீதான மீள்வாக்கெடுப்பைத்தான். இத்தீர்மானத்தை ஒரு வரலாற்று அவமானம் என்று எழுதிய புதினப்பலகை மீண்டும் தனது கைங்கரியத்தை ஆரம்பித்து விட்டது.விட்ட இடத்திலிருந்து அது மீண்டும் எழுதத் தொடங்குகிறது. இன்னொரு பெயரில், அன்று வழுதி இன்று இன்னொருத்தர். ஆனால் கரு ஒன்றுதான். வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறக்கூடாது என்பதுதான் கருப்பொருள்.

ஆனால் பாவம் புதினப்பலகை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவர்கள் எல்லோரும் விரும்புவதுபோலவும், கனவு காண்பது போலவும் செத்துவிடவில்லை. அது ஒவ்வொரு நாடுதோறும் ஒட்டுமொத்த தமிழ் உணர்வுடன் எழுச்சி பூர்வமாக முன்னேறி வருகிறது. இதுவரை நடந்த 8 நாடுகளில் வாக்களிக்கத் தகுதியுடைய 270,000 பேரில் 197,000 பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.5 வீதத்திற்கும் அதிகமானோர் இதீர்மானத்தை ஏற்று ஆம் என்று வாக்களித்துள்ளனர். இது வக்களிக்கத் தகுதியுடையோரில் 70% இற்கும் அதிகமானது. இந்த வீதம், சிறிலங்காவிலோ அல்லது ஜனநாயகத்தின் மிகப்பெரிய நாடு என்கிற இந்தியாவிலோ வாக்களிக்கும் மக்களின் வீதத்தைக் காட்டிலும் மிகவும் அதிகம். இது நடைபெறுவதுதான் பலருக்கு இப்போது கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டது. அதை மரைத்து முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் கைங்கரியத்தில் பறந்து பறந்து ஈடுபடுகிறார்கள்.

அதற்காக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுத்தான் நாடு கடந்த தமிழீழ அரசிற்கெதிராக வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயங்குகிறது என்பது.ஆனால் அது கூட பொய்யென்று தற்போது நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் விடுவதாயில்லை. ஏனெறால் இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இந்தவிரு அமைப்புக்களும் தோளோடு தோளாக நின்றுதான் அதை நடாத்தி முடித்தன என்பதை இவர்களூகு யாராவது சொல்லுங்கள். இந்த இரு அமைப்புக்களினது இறுதி இலக்கு தமிழீழம் தான் என்பதை யாராவது இவர்களுக்குச் சொல்லுங்கள்.

Edited by ragunathan

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்காக அரசாங்கம் பல செல்வாக்கு மிகுந்தவர்களை தெர்தலில் சுயேட்சையாக நிப்பாட்டுகின்றது (அவர்களுக்கு பணவசதியுடன்) என ஒரு செய்தி கிடைத்தது, ஒட்டுமொத்தமாக ஒரேகட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் வருவதுக்கும், பல கட்சிகளாக உடைக்கபட்டு, அதிலிருந்து சில உறுப்பினர்கள் வருவதுக்கும், நிறய வித்தியாசம் உள்ளது, தமிழரின் ஒற்றுமையை குறைத்து அரசாங்கம் எமது பலத்தை மறுபடியும் குறைக்க முயல்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பந்தியாளர் ரெண்டாம் முள்ளிவாய்க்கால் என்று அழுவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்திமீதான மீள்வாக்கெடுப்பைத்தான். இத்தீர்மானத்தை ஒரு வரலாற்று அவமானம் என்று எழுதிய புதினப்பலகை மீண்டும் தனது கைங்கரியத்தை ஆரம்பித்து விட்டது.விட்ட இடத்திலிருந்து அது மீண்டும் எழுதத் தொடங்குகிறது. இன்னொரு பெயரில், அன்று வழுதி இன்று இன்னொருத்தர். ஆனால் கரு ஒன்றுதான். வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறக்கூடாது என்பதுதான் கருப்பொருள்.

ஆனால் பாவம் புதினப்பலகை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவர்கள் எல்லோரும் விரும்புவதுபோலவும், கனவு காண்பது போலவும் செத்துவிடவில்லை. அது ஒவ்வொரு நாடுதோறும் ஒட்டுமொத்த தமிழ் உணர்வுடன் எழுச்சி பூர்வமாக முன்னேறி வருகிறது. இதுவரை நடந்த 8 நாடுகளில் வாக்களிக்கத் தகுதியுடைய 270,000 பேரில் 197,000 பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.5 வீதத்திற்கும் அதிகமானோர் இதீர்மானத்தை ஏற்று ஆம் என்று வாக்களித்துள்ளனர். இது வக்களிக்கத் தகுதியுடையோரில் 70% இற்கும் அதிகமானது. இந்த வீதம், சிறிலங்காவிலோ அல்லது ஜனநாயகத்தின் மிகப்பெரிய நாடு என்கிற இந்தியாவிலோ வாக்களிக்கும் மக்களின் வீதத்தைக் காட்டிலும் மிகவும் அதிகம். இது நடைபெறுவதுதான் பலருக்கு இப்போது கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டது. அதை மரைத்து முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் கைங்கரியத்தில் பறந்து பறந்து ஈடுபடுகிறார்கள்.

அதற்காக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுத்தான் நாடு கடந்த தமிழீழ அரசிற்கெதிராக வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயங்குகிறது என்பது.ஆனால் அது கூட பொய்யென்று தற்போது நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் விடுவதாயில்லை. ஏனெறால் இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இந்தவிரு அமைப்புக்களும் தோளோடு தோளாக நின்றுதான் அதை நடாத்தி முடித்தன என்பதை இவர்களூகு யாராவது சொல்லுங்கள். இந்த இரு அமைப்புக்களினது இறுதி இலக்கு தமிழீழம் தான் என்பதை யாராவது இவர்களுக்குச் சொல்லுங்கள்.

இதே கருத்தைத் தான் நானும் கொண்டிருக்கிறன். இப்ப மூன்று விஷயங்கள் புலம் பெயர் தமிழரிடயே நடக்குது:

1. வட்டுக் கோட்டைத் தீர்மானம்

2. நாடுகடந்த அரசு

3. தாயக மக்களுக்கான புனர்வாழ்வு உதவிகள்

இவை மூன்றும் ஒரே திசையில் நகர்பவை என்பதை இவற்றில் ஒவ்வொன்றையும் தனியாக நின்று பார்த்து குறை கண்டு பிடிப்பவர்கள் புரிந்து கொள்கிற மாதிரித் தெரியவில்லை. எங்கள் போல நிலையில் இருந்த வேறு இனத்தவர்கள் இப்படி பல முனைகளில் செயல் பட்டார்கள் என்று வரலாறு தெரியாத இந்த ஞான சூனியங்களுக்கு தானாகவும் தெரிய வராது, யாரும் சொல்லியும் விளங்காது. இப்ப தான் கணணியில எழுதத் தெரிஞ்சாலே யாரும் அரசியல் ஆய்வாளராகலாம் எண்டு ஆகிப் போயிற்று. இதுகளை வெட்டி எழுதி ஒதுக்கி மக்களுக்குத் தெளிவான வழியச் சொல்றதை நாங்கள் கைவிடக் கூடாது. அது தான் ஒரே வழி இப்ப.

சில மாதங்களுக்கு முன்னம் இருந்த பிரிவினையோடை ஒப்பிடும் போது இது இப்போது சுமூகம் ஆகி இருக்கிறது எண்று நினைக்கிறேன்... யாரை நம்புவது என்பதில் ஏற்பட்ட குழப்பங்களை காலம் தானே தீர்த்து வைக்க முடியும்...

மூன்று விடயங்களும் சமாந்தரமாக பயணிப்பதே நல்லது எண்று நான் நினைக்கிறேன்... யாராவது ஒண்றை மட்டும் தான் செய்வார்கள் எண்று இல்லாமல் எல்லா வகையிலும் முயல்வது நல்லது தானே... ??

புலத்தில் ஒரு குழுவை அதிகாரமையத்தில் அமர்த்துவதற்கான கருத்துருவாக்கச் செயற்பாட்டிற்கு ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அணிதிரட்டி செயற்பட்டுவருகின்ற குழுவே, புலத்து அனைத்து முரண்பாட்டுக்கும் காரணம்.

புரிகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால தெரியும் ரெண்டாம் முள்ளிவாய்க்கால் எதுவெண்டு சொன்னாத்தானே தெரியும். அது சொல்லாம மூண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு தாவினா.............? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.