Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி

Featured Replies

இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

  • Replies 120
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் Kன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை)

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு :wub:

யாழ் தேர்தலில் வெற்றிலை :lol: , சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் :lol: கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும் :lol: :lol:

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அதுவல்ல விசுகு,

இங்கு எவ்வளவுதான் எழுதப்பட்டாலும் விமர்சிக்கப்பட்டாலும் களத்தில் மக்கள் என்ற ஒரு சக்தி இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களாகத்தானே இருக்க முடியும்.

சுபம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு வருசம் ஆச்சு, இடம்பெயந்த சனத்தை சொன்ன மாதிரி வளமாக வாழ வைச்சு போட்டியளோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

  • தொடங்கியவர்

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவதே இந்திய வல்லாதிக்கத்தின் திட்டங்களை முறையடிப்பதற்கான ஒரே வழி .ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வல்லாதிக்கம் எப்போதுமே சம்பந்தனைப் பாதுகாத்து வந்தது.அனேகமான கூட்டமைப்பு எம்பிக்களுக்கு குறிப்பாக புலிகளால் பிரேரிக்கப்படவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் சம்பந்தனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது என்றால் அது இந்தியா வழங்கிய பாதுகாப்புத் தான்.அதற்க்கு ஏற்பவே சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சனிதிரனும் செயற்பட்டனர்.சிறிலங்கா அரச படைகளைப் பலப்படுத்துவது அதன் மூலம் புலிகளை அழிப்பது.அதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை நாடகத்தினூடாக நோர்வே அமெரிக்கா என்பன்வற்றினூடாக நாடத்துவது.ஈற்றில் பல்வீனமுற்றுள்ள தமிழரை சம்பந்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் மூலம் தமது கைக்குள் கொண்டுவருவது.மேற்குலகின் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறிலாங்கா அரசைக் காப்பது அதன் மூலம் தெற்கையும் தனது கைக்குள் கொண்டு வருவது.

இதில் சம்பந்தனுக்கும் சுரேசுக்கும் பிரச்சினையாக இருக்கக் கூடியோரை கூட்டமைப்பில் இருந்து விலக்குவது அல்லது விலகக் கூடிய வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பிரேரிப்பது.இதன் மூலம்முழு இலங்க்கையைஉம் தமது காலனி ஆக்குவது.இதில் இராசபக்சவே சாதூரியமாக சீனவை உள் நுழைத்ததன் வாயிலாகா இந்திய நெருக்குதலையும் மேற்குலகின் நெருக்குதலையும் தனக்குச் சாதகமாகப் பாவிக்க காய் நகர்த்தி உள்ளார்.தமிழரைப் பொறுத்தவரை சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய தாசர்களை விட்டால் வேறு எவரும் இல்லை என்ற நிலையிலையே கஜேந்திரன் பொன்னம்பலமும் கஜேந்திரக் குமாரும் குறுகிய காலக்த்தில் களத்தில் இறங்கி உள்ளனர்.சுடரொளி உதயன் மற்ரும் சில போலி இணையத் தளங்களின் உதவியுடனும், பொய்யான வந்திகளைஇப் ப்ரப்புவதன் மூலமும்,தமிழரின் பிரதினிதுவம் போவிடும் என்று பயமுறுதுவதன் மூலமும் வென்று இவர்கள் இந்தியாவின் இறுதித் தீர்வை நோக்கிப் ப்யணிக்கின்றனர்.

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

  • தொடங்கியவர்

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.இவர்கள் வென்றால் வெல்லப் போவது இந்தியாவே.தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய வல்லாதிக்கத்தின் ஆளுகைகளுக்குள் வருவார்கள்.அதனையே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அது அவர்களைக்ச் சார்ந்த விடயமே.சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.சமாதான காலத்தின் போதும் பேச்சுவார்த்தை நாடகம் பற்றியும்,பல்வேறு சர்வதேச சக்திகளின் புவி சார் நலன் அரசியல் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் எழுதினோம்.அபோது வாதிட்ட சக்திகளை இப்போது காணவில்லை.ஈற்றில் பேச்சுவார்த்தைக் காலாத்தில் சொல்லியவை எல்லாம் உண்மை ஆகியது.இன்றும் அப்படித் தான் எமக்குத் தெரிவதை எழுதுகிறோம்.ஈற்றில் யார் யாரைத் தெரிவு செய்வது என்பது களத்தில் உள்ள மக்களின் தெரிவே.அரசியல் விழிப்பு உணர்வு அற்ற மக்களும் அவர் தம் தலமைகளும் ஈற்றில் ஏமாற்றபடுவதே உலகெங்கும் நடக்கும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.

சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.

  • தொடங்கியவர்

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமில்லாத

களநிலையை கணக்கெடுக்காத

சந்தர்ப்பவாத

எழுதுபவனையை எல்லாம் நம்பித்தான் இந்தநிலைக்கு வந்தோம்

இன்னும் நிறுத்துவதாக இல்லை

புல்லரிக்கிறது நாரதா

தங்களது புலனாய்வுத்திறமை கண்டு...

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

இந்த தகவல் உண்மைதான்

வெட்கப்படணும் நாமெல்லாம் இதற்காக....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

  • தொடங்கியவர்

இதற்க்கு பெரிய புலனாய்வுத் திறன் ஒன்றும் அவசியம் இல்லை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்ட்மைப்பில் இருந்து தமிழத் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பவற்றில் உறுதியாக இருந்தவர்கள் புலிகளால் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் ஏன் சம்பந்தன் குழுவால் விலக்கப்பட்டனர்?இதற்கான் காரணத்தை இதுவரை சம்பந்தன் கூறி உள்ளாரா?

தாம் தயாரித்தது என்று கூறப்படும் தீர்வுத் திட்டத்தை இந்திய தூதுவராக வந்த மேனனிடமும் நாராயணனிடமும் கொடுத்தவர்கள்.பல காலத்தின் பின்னரே கூட்டமைஇன் ஒரு கட்ச்சியின் தலைவரான் கஜேந்திரகுமாரிடம் அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்ரிக் கூறினர்? ஏன் அத் தீர்வுத் திட்டம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மதியில் கூட விவாதிக்கப் படவில்லை? அவர்களுக்கு சில மணிதியாலங்கள் வழங்க்கப்பட்டு வாய் மூலமகவே அது வாசிக்கப்பட்டது.

உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியருக்கு ஏன் கூட்ட்மைப்பு நியமனம் வழங்கியது.அவர் அய்கிய தேசியக் கட்ச்சியின் நிர்வாக அவை அங்க்கந்துவர் ஆக இன்றும் இருக்கும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு ஒரு விடயம் செய்துள்ளேன்

தற்பெருமை அடிப்பதாக எவரும் நினைக்கவேண்டாம்

எனது ஒரு உறவினர்

முள்ளிவாய்க்காலிலிருந்து காம்ப் வந்தார்

இப்போ வவுனியாவில் நிற்கிறார்

அவரிடம் நான் சொன்னது தங்களது காணியில் போய்க்குடியிருந்து விவசாயத்தை பார்ப்பதாயின் அதற்கான காசு தருகின்றேன் என்று.

அவர் கல்மடுவைச்சேர்ந்தவர்

அங்கு போகவிடுகிறார்கள் இல்லை ஆனால் இராமநாதபுரம் போகமுடியும் என்றார்

அங்கும் தனக்கு 10 ஏக்கர் விளைநிலம் இருக்கு என்றார்.

விதை நெல்லுக்கான பணத்தையும் அது அறுவடையாகும்வரை செலவுக்கும் தருவதாக சொன்னேன்

அவர் உடனேயே ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்

இதில் எனக்கு ஒரு உறவு பயன் பெறுகிறது

10 ஏக்கர் நிலம் தமிழனால் காப்பாற்றப்படுகிறது

ஒரு தமிழ்க்குடும்பம்அங்கு குடியேறுகிறது

சிலருக்கு அவரால் வேலையும் கொடுக்கமுடியும்

என பல நன்மைகள்

இங்கு எழுதியது பிழை எனில் மன்னிக்கவும்

இதேபோல் எவராவது செய்யக்கூடாதா என்ற ஆசைதான்.

  • தொடங்கியவர்

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

  • தொடங்கியவர்

விசுகு,

நீங்கள் செய்வதைப் போல் தான் நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த வழிகளில் உதவி வருகிறோம்.ஆனால் நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.அது இப்போது அதி உயர் பாதுகாப்பு வலயம்.இவ்வாறு பல உயர் பாதுகாப்பு வலயங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் நோக்கம் தமிழரின் தாயக பூமியைப் பல கூறுகளாக்கி ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பை இல்லாது ஆக்குவது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.சம்பந்தன் அய்யா தயாரித்து உள்ள தீர்வு திட்டத்தின் படி இத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நிரந்தரமாக்கப் படும்.ஏனெனில் அவை அனைத்தும் கேந்திர மையங்களாக மத்திய அரசால் பிரகடனம் செய்யப் பட்டவை.இந்தியாவுக்கு வழங்க்கப்படுள்ள சாம்பூர் காணிகள்,தலைமன்னாரில் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ள எண்ணைப்படுகைகள் இவை எவற்றின் மீதும் தமிழர்கள் எந்த உரிமையையும் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு ஒப்பந்ததின் மூலம் இவற்றை வழங்கி விடீர்கள் என்றால் பின்னர் அவற்றை நீங்கள் மீள பெற்று விட முடியாது.அபிவிரித்தி என்பது நீண்ட கால நலங்களின் அடிப்படியில் பார்கப் பட வேண்டிய ஒரு விடயம்.ஒருவனுக்கு நீங்கல் ஒரு நேர உணவை தானமாக் வழங்குவதை விட அவனால் தன்னைப் பாராமரிக்கக் கூடிய வலுவை வழங்குவதே உண்மையான் அபிவிரிதியாக இருக்க் அமுடியும்.அதனாலையே அரசியல் அதிகாரம் தமிழர்களில் வரும் போதே உண்மையான அபிவிருத்து ஏற்பட் அமுடியும்.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

  • தொடங்கியவர்

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

முயற்சி இருக்கு... ஆனால் உங்கள் முயற்சிக்குத்தான் முதன்மை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்களின் முயற்சி பிழை என்றாகாது.

அமேரிக்கா சீனா தைவான் எல்லாம் சரி தான். ஆனால் அது எமக்கு என்னத்தை தரப்போகிறது? எந்த ஒரு பிரச்சனையும் தனித்துவமானது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்றாப்போல் தீர்வுகள் காணப்படவேண்டும். எங்கோ ஒன்று நடந்தது என்பதற்காக இங்கேயும் அதையே பிரதிட்டுப்பர்ப்பது தீர்வுக்குப்பதிலாக சிக்கலைத்தான் தரும்.

இந்தியா எமக்கு திரியா இருக்கலாம் இல்லாது போகலாம்.. அந்த பகையை நாம் பாராட்டுவதால் எங்கள் இன்றைய பிரச்சனை தீருமா? எங்களுக்கு இப்போ இருக்கும் பிரச்சனை எதுவோ அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இந்தியா எங்களுக்கு எதிரியா நினைத்தால் என்ன விட்டால் என்ன? எங்களுக்கு மேல் அவர்கள் போட்டிருக்கும் திரையை அகற்ற நாங்கள் என்ன செய்யப்போறம்? எதிர் நிலையெடுத்து செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இன்றிருகிரோமா? எந்தொரு நாடோ அமைப்போ இந்தியாவினது பசுத்தோலை தாண்டி நீங்கள் சொல்லும் நீதியை தருவார்கள் என்று காத்திருந்தால் இருங்கள். முடிந்தால் இந்தியாவே மீளமுடியாத ஒரு சூழலில் இந்தியாவை கொணந்து மாட்ட வையுங்கள். உங்கள் எதிரிகளை முரண்பட வையுங்கள்.

இலங்கைப்பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்ற பின்னர் ஏன் அந்த கதிரைகளுக்காக அடிபடுகிரீர்கள்?

பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்றால் சம்பந்தர் போனாலென்ன விட்டாலென்ன? பிறகு ஏன் சம்பந்தார் போகக்கூடாதென்று அடம்பிடிக்கிரிங்கள்?

பாராளுமன்ற கதிரை போனால் என்ன ஆகுமென்று பின்னர் உணரும்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை இழந்த பின்னர் இழந்ததை தேடி திரிவதிலும் பார்க்க இருப்பதை வைத்துக்கொண்டு மேலதிகமாக மீறுவதால் என்ன இழப்பு?

காலத்தின் மாற்றத்தில் சம்பந்தரும் ஒரு ஆயுதம்தான்.. அரசியலும் ஒரு போராட்டம்தான். இப்போது இருக்கும் அரசியல் போட்டி நல்லதோ கெட்டதோ முடிவிதான் தெரியும். ஆனாலும் இதுவும் ஒரு நன்மைக்கே.. சம்பந்தர் வென்றால் புலத்தில் இருக்கும் மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெளிப்படும். அதில் இருந்தென்றாலும் ஒரு பொது நிலைக்கு வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.