Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

இருவருக்காக தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு; சாடுகிறார் விநாயகமூர்த்தி

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தே உள்ளது. பெருந்தலைவர் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டுடனேயே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் செயலாற்றி வருகின்றது. இவ்வாறு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டத்தில் ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

ஆவரங்கால் சிவன் கோயிலின் அருகில் உள்ள வயல்வெளியில் க.சிவசோதி என்பவர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றத

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

"இரண்டு பேருக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின்போது இணக்கப்பாடு காணப்பட்டு கையொப்பமிட வேண்டிய நேரத்தில் அவர் நிலையை மாற்றிக் கொண்டார். இது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இப்போது தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவப் பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக புதிய முன்னணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தென்னிலங்கையில் தமிழருக்கு எதிராக ஜே.வி.பி.யினர் நடத்தும் அரசியல் போராட்டத்தைப் போன்ற ஒன்றை அவர் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துச் செல்கிறார். அவரின் அரசியல் சுயநலத்துடன் கூடியது%27 என்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி தெரிவித்தார். மாவை சேனாதிராஜா, ஐங்கரநேசன், இரா.சிவச்சந்திரன், சரவணபவன் ஆகியோரும் பேசினர்.

http://parantan.com/

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இறைவன், எப்போதிருந்து தமிழ்க் கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளராக மாறீனீர்கள். உங்களின் எந்த இணைப்பை பார்த்தாலும் கஜேந்திரன் அணியைத் திட்டுகின்ற , வசை பாடுகின்ற ஆக்கங்களாகவும், சம்பந்தனை சரியென்று வாதிடும் ஆக்கங்களாகவும் இருக்கின்றனவே. சம்பந்தர் விசுவாசம் இருக்கலாம், அதற்காக இப்படியா??

கஜேந்திரகுமார் மட்டுமல்ல ஜீ.ஜீ, குமார் பொன்னம்பலம்,இப்போ இவர்.

தமிழர் ஒன்று சேர்ந்து நின்ற போது தமது விலாசத்திற்காக(பணம் தாராளமாக கிடக்கு)தமிழரின் ஒற்றுமையை உடைத்தவர்கள் இவர்கள்.

இதை விளங்கிக்கொள்ள எம்மவருக்கு கொஞ்சக் காலம் எடுக்கும். அதற்குள் எல்லாம் லேட் ஆகிவிடும்.

எமக்குள் பல பல "ரியூப் லைட்டுகள்" நாம் என்ன செய்ய.

இதுதான் நடந்தது எமது போராட்டத்திலும்.

சம்பந்தர் இந்திய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை விபரம் வினாயக மூர்த்திக்க்குத் தெரியுமா? கூட்டமைப்பில் ஒரு முக்கிய கட்சியான தமிழ் காங்கிரசின் செயலர் கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்குத் தெரியாமால் ஒரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது பற்றி வினாயக்மூர்த்தி என்ன சொல்கிறார்? கூட்டமைப்பின் செயற் குழுவின் முடிவுக்கு எதிரானதாக சம்பந்தன் குழு எடுத்த முடிவுகள் பற்றி வினாயக மூர்த்தி என்ன சொல்கிறார்? கூட்டமைப்புக்குள் ஜனனாயகம் இல்லாது போய் அது ஒரு குழுவின் இரகசிய முடிவுகளை மற்றவர்கள் மீது திணிக்க முற்பட்டுள்ளது.செல்வம் அடைக்கலனாதன் கூட கொள்கையளவில் கஜேந்திரக்குமாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.இவை எல்லாம் இருக்க இரண்டு பேருக்காக கஜேந்திரக் குமார் காங்கிரசைப் பயன்படுதியதாக கூசாமல் பொய் சொல்லும் வினாயகமூர்த்திக்கு எம்பிப் பதவி என்பதே முக்கியமாந்தாக இருக்கிறது.அதற்காக அவர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் அவர்களின் எதிர்கால அரசியல் எல்லாவற்றையும் இந்திய அடிவருடிகளிடம் அடகு வைத்துவிட்டார்.இவ்வாறானவர்களை நீங்கள் பாராளுமன்றம் அனுப்பி அதற்கான விழைவுகளையும் அறுவடை செய்வீர்கள்.

அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு; சாடுகிறார் விநாயகமூர்த்தி
அரசியல் முதிர்ச்சி என்றால் நரை முடியா ? விநாயகமூர்த்தி ஜயா

கயேந்திரன் மயிருக்கு வெள்ளை டை அடித்துவிட்டால் முதிர்ச்சி வந்துவிடும்

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்

:D இறைவன், எப்போதிருந்து தமிழ்க் கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளராக மாறீனீர்கள். உங்களின் எந்த இணைப்பை பார்த்தாலும் கஜேந்திரன் அணியைத் திட்டுகின்ற , வசை பாடுகின்ற ஆக்கங்களாகவும், சம்பந்தனை சரியென்று வாதிடும் ஆக்கங்களாகவும் இருக்கின்றனவே. சம்பந்தர் விசுவாசம் இருக்கலாம், அதற்காக இப்படியா??

கூட்டமைப்பினரை எதிர்ப்பது இங்கு கடமையில்லையே. கஜேந்திரன் அணியினரின் கருத்துக்கள் மட்டுமே வெளிவரவேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும். தமிழர்கள் இன்று பிரிந்து செயற்படுவதற்கும் உதிரிகளாக்கப்பட்டதற்கும் கஜேந்திரனே காரணம். ஜீ ஜீ பொன்னம்பலத்தால் வெற்றிபெறமுடியாத தமிழ் காங்கிரஸ் சொற்கேட்டு கஜேந்திரன் செல்வராசா தனது தரத்தை இறக்கிக் கொண்டுள்ளார். கொள்கையை உள்ளிருந்தே போராடி ஜெயித்திருக்க வேண்டும்.

விநாயகமூர்த்தி எக்காலத்திலும் மதிக்கப்பட வேண்டியவர்.

ஆனாலும், அவரது வயது, தள்ளாமை காரணமாக அவரது சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் ஒருங்கிணைவாக இல்லை என்பதை கடந்த சில வருடங்களாக நேரில் அறிவேன்.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி உள் இருந்து போராடியவர்களை ஒதுக்கியது யார் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி இருக்கும் நிலையில், இன்றைய பிரிவினைகளுக்கு கஜேந்திரனே காரணம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

வேண்டுமென்றால் சம்பந்தன் அவர்களால் ஒரு சில மாதங்களுக்கு முன் லண்டனில் கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்று தேசம்.னெர்ரில் இன்னும் இருக்கிறது வாசித்துவிட்டு வரவும்.

அண்மைக்காலமாக நீங்கள் உண்Mஐ சொல்வதில் இருந்து வழுவி வருவது உங்களுக்கு சம்பந்தர் அணியை ஆதரிப்பதற்க்கு கொள்கை நிலைப்படுகளுக்கு அப்பால் வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என ஐயுறுகிறேன்.ஏன்னில் உங்களின் பெயரில் யாழ்.கொம்மில் எழுதப்படும் கட்டுரைகள் உதயனில் வருவதாக சிலர் கூறி உள்ளனர்.இது தற்செயலானதாகவும் இருக்கலாம்.கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பே.ஆனால் உண்மைகளை மாறிக் கூறும் போது சில சந்தேகங்கள் எழுவது இயற்கையானதே.

Fஎப்

20புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

≡ Cஅடெகொர்ய்: ::தேர்தல்கள், ஜெயபாலன் த | ≅

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். க்ட்ட்ப்://ந்ந்ந்.இச்லன்ட்.ல்க்/2010/02/17/னெந்ச்30.க்ட்ம்ல்

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மேற்கட்டிய கட்டுரை இந்த வருடம் பெப்ரவர் மாதம் எழுதப்பட்டது.இந்தக்கட்டுரை எழுதப்பட்ட நேரத்திம் கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் கூட்டமைக்குள்ள்யே இருந்தனர்.கூட்டமைப்பைப் பிளந்தவர்கள் யார் என்பதை இக் கட்டுரை கூறுகிறது.இதற்க்கு மேலும் நீங்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைபீர்கள் என்றால் உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பது பற்றி அனைவருமே சந்தேகிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இறைவன், எப்போதிருந்து தமிழ்க் கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளராக மாறீனீர்கள். உங்களின் எந்த இணைப்பை பார்த்தாலும் கஜேந்திரன் அணியைத் திட்டுகின்ற , வசை பாடுகின்ற ஆக்கங்களாகவும், சம்பந்தனை சரியென்று வாதிடும் ஆக்கங்களாகவும் இருக்கின்றனவே. சம்பந்தர் விசுவாசம் இருக்கலாம், அதற்காக இப்படியா??

நீங்கள் எப்போதிருந்து கசேந்திரனின் அணியின் கடும்ம்ம்ம்ம் ஆதரவாளரானீர்கள்? அவர், த.தே.கூ தமிழர்களை கொடூரமாக கொன்ற சரத்துக்கு ஆதரவளிக்கும் போது நாற்காலி கனவில் இருந்த போதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி உள் இருந்து போராடியவர்களை ஒதுக்கியது யார் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி இருக்கும் நிலையில், இன்றைய பிரிவினைகளுக்கு கஜேந்திரனே காரணம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

அப்படி கஜேந்திரன் என்ன விதமாக போராடினார் என்று சொல்ல முடியுமா? இறுதி வரைக்கும், அவரின் ஆட்களுக்கு சீட்டுக் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்த பின் தான் அவரின் ரோசம் போராட்டமாக வெளிப்பட்டது

என்று த.தே.கூத்தமைப்பு சரத்துக்கு ஆதரவு தந்ததோ, அன்றே இந்த கவரிமான்கள் வெளியேறி இருந்தால் நிச்சயம் அவர்களை தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று சொல்லலாம், ஆனால் இறுதி வரைக்கும் (த.தே.கூ இந்தியாவுக்கு பலமுறை விசிட் செய்து வந்து இளைப்பாறிய பின்னும்) பேசாமல் இருந்து விட்டு, கடைசியில் வெளியேறிய செயலா 'உள் இருந்து போராடிய செயல்'?

அப்படி என்ன போராட்டம் அவர்கள் செய்தனர்?

1. தமிழர் படுகொலையாளர் சரத்தை ஆதரிக்கும் போது எதிர்த்தனரா?

2. சம்பந்தர் & co இந்தியாவுக்கு கொடி பிடிக்கும் போது (தேர்தலுக்கு வேட்பாளர் நியமிக்க முன்) அதனை எதிர்த்தனரா?

3. தங்கள் எதிர்ப்பை, விட்டு பிரிந்து செல்லும் வரைக்கும் தம் மக்களுக்கு அறியத் தந்தனரா?

இன்னும் பல கேள்விகள்

ஒருவர் இல்லாட்டி, இன்னொருவரை ஆதரிக்க வேண்டியே ஆகவேண்டும் என்பது, சோறு இல்லாட்டி மலத்தை உண்கின்ற மாதிரியான ஒரு போக்கு. தமிழ் தேசிய உணர்வில் சம்பந்தரை வெறுப்பதற்காக, கசேந்திரனை ஆதரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பிழன்பு,

உமக்கு எழுதிய கருத்துக்கு நீர் பதில் எழுதலாம். இப்படி அவசரப்பட்டு பாயக்கூடாது. உம்மிடம் கேட்டால் நீர் கதையும்.இப்ப பேசாமல் இரும்.

நான் எப்போது கஜேந்திரன் அணிக்கு ஆதரவாளன் என்பதல்ல இப்ப முக்கியம், இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு வயது முதிர்ந்த தலமையின் கீழிருக்கும் ஒரு அரசியல் கட்சி பற்றித்தான் கதை. முள்ளிவாய்க்கால்வரை துரத்திச் சென்று கொன்றுகுவித்த இந்திய மாதாவை நேச சக்தியாக , தோழனாகப் பார்க்கும் பக்குவம் கொண்ட ஒரு குழுபற்றித்தான் கதை. இந்திய மாதா செய்ததை நீரும் ஆதரிக்கிறீர் என்றால் கதையை விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பிழன்பு,

உமக்கு எழுதிய கருத்துக்கு நீர் பதில் எழுதலாம். இப்படி அவசரப்பட்டு பாயக்கூடாது. உம்மிடம் கேட்டால் நீர் கதையும்.இப்ப பேசாமல் இரும்.

ஓ, strictly for adults என்பது போல் இது strictly for இறைவன்??

முள்ளிவாய்க்கால்வரை துரத்திச் சென்று கொன்றுகுவித்த இந்திய மாதாவை நேச சக்தியாக , தோழனாகப் பார்க்கும் பக்குவம் கொண்ட ஒரு குழுபற்றித்தான் கதை. இந்திய மாதா செய்ததை நீரும் ஆதரிக்கிறீர் என்றால் கதையை விடும்

முள்ளிவாய்க்கால்வரை துரத்திச் சென்று கொன்று குவித்த தளபதியை ஆதரித்த தமிழர் கசேந்திரனை நீங்கள் மட்டும் நேச சக்தியாக, தோழனாக பார்க்கலாமோ?

அப்படி என்றால் சரத் செய்ததை ஆதரிக்கின்றீரா.. At least கசேந்திரன் சரத்துக்கு ஆதரவளித்ததை?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சரத்தை ஆதரிப்பதென்பதை நியாயப்படுத்திப் பேசியது சம்பந்தனும், மாவையும், சுரேஷும்தான். கஜேந்திரன் கட்சியில் இருந்தாலும் அவர் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது போல அன்றும் தாந்தோன்றித்தனமாக அந்த முடிவை சம்பந்தர் எடுத்தாரோ என்னவோ?? சரத்தை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு முடிவெடுத்தபோது கஜேந்திரன் என்ன செய்தார் என்று கேட்கும் நீங்கள், உங்கள் தலைவர் சம்பந்தர் சரத்தை ஆதரிப்பதாக எடுத்த முடிவை தவறென்று ஏன் சொல்கிறீர்களில்லை. அப்போதிருந்த சூழ்நிலைக்கு அதுதான் சரியென்று சொல்வீர்களாக்கும். நேரத்து நேரம் சம்பந்தன் எடுக்கும் முடிவை நியாயப்படுத்தி பக்க வாத்தியம் வாசிக்கும் ஆட்கள்தானே?! நீங்கள் என்ன வேன்டுமானாலும் சொல்வீர்கள்.

:lol: நான் சரத்தை ஆதரிக்கவுமில்லை, அவரை ஆதரிக்க சம்பந்தர் எடுத்த முடிவையும் ஆதரிக்கவில்லை. அதை கஜேந்திரன் செய்திருந்தாலும் எனது முடிவு ஒன்றுதான். எந்தச் சிங்களவனோடும், இந்தியனோடும் நாம் கூட்டுச் சேர்வது பிழை. அது எந்தவகையான நியாயப்படுத்தலாக இருந்தாலும்.

சரத்தின் கதை முடிந்த கதை. இப்போதும் சோனியாவின் முந்தானையில் சம்பந்தர் தொங்குவது பற்றிப் பேசும்.அதை எவ்வாறு நியாயப்படுத்துவீர்??

  • கருத்துக்கள உறவுகள்

:lol: , உங்கள் தலைவர் சம்பந்தர் சரத்தை ஆதரிப்பதாக எடுத்த முடிவை தவறென்று ஏன் சொல்கிறீர்களில்லை. அப்போதிருந்த சூழ்நிலைக்கு அதுதான் சரியென்று சொல்வீர்களாக்கும். நேரத்து நேரம் சம்பந்தன் எடுக்கும் முடிவை நியாயப்படுத்தி பக்க வாத்தியம் வாசிக்கும் ஆட்கள்தானே?! நீங்கள் என்ன வேன்டுமானாலும் சொல்வீர்கள்.

கருத்து வங்குரோத்தனம் என்றால் இதுதானா?......... கொஞ்சம் homework செய்து விட்டு ஒருவரிற்கு பதில் எழுதினால் நல்லம். சம்பந்தரின் தலைமைத்துவத்தை கடந்த சனாதிபதி தேர்தல் காலத்திலேயே கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் தயாவுக்கு அடுத்து நான் தான் என நம்புகின்றேன். பத்திரிகையாளர் துரைரெட்ணத்துக்கான என் பதிலை விரும்பினால் தேடி வாசிக்கவும். சம்பந்தர் எல்லாருக்கும் தெரிந்த, ஒரு காலத்தில் அரச படையினரின் பாதுகாப்புடன் பஜரோவில் வலம் வந்த தமிழ் அரசியல் வாதி. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்தியாவை காதலியாக வைத்திருந்த காலம் தொட்டு அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டி விட்டார்

ஆனால் கசேந்திரன் என்பவர், திடீர் கோசம் போட்டு (நாற்காலி கனவு பொய்த்தமையால் மட்டுமே) இன்று தமிழர் பலத்தை குலைப்பவர். கசேந்திரன்=ஜூனியர் சம்பந்தர்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த தேர்தல் முடிந்த பின் கசேந்திரனின் உண்மை முகம் நாளடைவில் தெரிய வரும் என்பதை (அத்துடன், லண்டனில் நடந்த இளையவர்களின் போராட்டத்துக்கு அழைத்தும் போகாத அம்மா பத்மினி சிதம்பரநாதனினதும்)

என் கருத்தின் சாராம்சம்

சம்பந்தரின் மாற்று கசேந்திரன் அல்ல... தேர்தலுக்காக வெற்று கோசம் போடும் ஒரு அரசியல்வாதியே கசேந்திரன் + அவரின் அணி. தாயகம், தமிழ் தேசியம் என்பது எல்லாம் கவர்சியான சொற்கள் மட்டுமே அவர்களுக்கு

காலம் எமக்கான சரியான தலைமையை நாளையோ அல்லது நானூறு ஆண்டுகளின் பின்போ காட்டும்.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

சரி, உங்களுடன் வாதிடுவதில் எனக்கு எந்தப் பயனுமில்லை. தேர்தலுக்குப் பின் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் எவர் என்ன முடிவை எடுத்தாலும் எம்மால் செய்ய முடிந்தது எதுவுமில்லை என்பதுதான் உண்மை. எனக்கு கருத்து வங்குரோத்தா?? எப்படி அந்த முடிவிற்கு வந்தீர்கள்? அப்படியென்ன கருத்துப்பஞ்சம் எனக்கு ஏற்பட்டு விட்டது? உங்களுக்கே எழுதுவதற்கு ஏதாவது இருக்கும்போது எனக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன? எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருத்து வங்குரோத்தா?? எப்படி அந்த முடிவிற்கு வந்தீர்கள்? அப்படியென்ன கருத்துப்பஞ்சம் எனக்கு ஏற்பட்டு விட்டது? உங்களுக்கே எழுதுவதற்கு ஏதாவது இருக்கும்போது எனக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன? எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

சரி மன்னியுங்கள்...என்னை சம்பந்தரின் விசுவாசி என்று எழுதியதை வாசித்த பின் வந்த கோபத்தில் எழுதியது. மற்றப்படி, உங்களின் கருத்துகளி விரும்பி படிப்பவன். ஆனால் நீங்களும் கசேந்திரன் போன்றோரை நம்புகின்றீர்களே என்ற ஆதங்கத்தில் எழுதியவை அவை

ஆனால் கசேந்திரன் என்பவர், திடீர் கோசம் போட்டு (நாற்காலி கனவு பொய்த்தமையால் மட்டுமே) இன்று தமிழர் பலத்தை குலைப்பவர். கசேந்திரன்=ஜூனியர் சம்பந்தர்.

கஜேந்திரன் திடீர் கோசம் போட்டு அரசியலுக்குள் வரவில்லை.... யாழ்ப்பாணத்தில் மட்டும் இல்லாது தமிழ் கூட்டமைப்புக்குள்ளேயே அதிகமான விருப்பு வாங்கு வாங்கியது கஜேந்திரன் தான்...

போர் நிறுத்தங்களுக்கு முன்னர் பெரிய அளவான மக்கள் விடுதலையை ஊட்டி பொங்குதமிழுக்கு திரட்டிய பெருமையும் கஜேந்திரனையே சாரும் .. வல்வை பாலத்தடியில் பொங்கு தமிழுக்கு வந்த மக்களின் வாகனங்களின் காத்தை திறந்து விட்ட இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடும் அளவுக்கு மக்கள் எழுச்சி அமைந்து இருந்தது...

இல்லை எண்று உங்களால் மறுக்க முடியும்...????

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் திடீர் கோசம் போட்டு அரசியலுக்குள் வரவில்லை.... யாழ்ப்பாணத்தில் மட்டும் இல்லாது தமிழ் கூட்டமைப்புக்குள்ளேயே அதிகமான விருப்பு வாங்கு வாங்கியது கஜேந்திரன் தான்...

போர் நிறுத்தங்களுக்கு முன்னர் பெரிய அளவான மக்கள் விடுதலையை ஊட்டி பொங்குதமிழுக்கு திரட்டிய பெருமையும் கஜேந்திரனையே சாரும் .. வல்வை பாலத்தடியில் பொங்கு தமிழுக்கு வந்த மக்களின் வாகனங்களின் காத்தை திறந்து விட்ட இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடும் அளவுக்கு மக்கள் எழுச்சி அமைந்து இருந்தது...

இல்லை எண்று உங்களால் மறுக்க முடியும்...????

நான் இவ்வளவு நேரம் சொல்வது, கஜேந்திரன் பொன்னம்பலத்தை.... எம் பி யை அல்ல. இருவரும் வேறு என்று அறிந்திருப்பீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பிழம்பு,

திருமலையில் எமது பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகிறதே என்கிற ஆதங்கம் எனக்கிருக்கிறது. பழிவாங்கல்களாலும் போட்டிகளாலும் இழக்கப்போவது எமதினம்தான். எனக்கு இவர்களிருவரும் சேர வேன்டும், அந்நிய தலையீடுகள், அது இந்தியாவாக இருக்கட்டும், சிங்களமாக இருக்கட்டும், எதுவுமில்லாமல் தமிழ் மக்கள் பலத்தை நம்பியே இவர்கள் நிற்கவேன்டும் என்று விரும்புகிறேன்.

உண்மை, நான் உங்களை சம்பந்தர் விசுவாசி என்றுதான் முதலில் நினைத்தேன். நீங்கள் சம்பந்தரை முன்னர் விமர்சித்து எழுதிய கருத்துக்களை நான் பார்க்கவில்லை. கருத்தை முழுவதுமாக வாசிக்காது, இடையில் வாசித்து எழுதுவதால் வருகிற பிரச்சனைதான் இது என்று நினைக்கிறேன்.

கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பிழம்பு,

திருமலையில் எமது பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகிறதே என்கிற ஆதங்கம் எனக்கிருக்கிறது. பழிவாங்கல்களாலும் போட்டிகளாலும் இழக்கப்போவது எமதினம்தான். எனக்கு இவர்களிருவரும் சேர வேன்டும், அந்நிய தலையீடுகள், அது இந்தியாவாக இருக்கட்டும், சிங்களமாக இருக்கட்டும், எதுவுமில்லாமல் தமிழ் மக்கள் பலத்தை நம்பியே இவர்கள் நிற்கவேன்டும் என்று விரும்புகிறேன்.

உண்மை, நான் உங்களை சம்பந்தர் விசுவாசி என்றுதான் முதலில் நினைத்தேன். நீங்கள் சம்பந்தரை முன்னர் விமர்சித்து எழுதிய கருத்துக்களை நான் பார்க்கவில்லை. கருத்தை முழுவதுமாக வாசிக்காது, இடையில் வாசித்து எழுதுவதால் வருகிற பிரச்சனைதான் இது என்று நினைக்கிறேன்.

கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே.

நன்றி ரகுநாதன்,

என் ஆதங்கம் வேறாகவே இருக்குது

ஒரு காலத்தில் பிரேமதாசாவை நம்பினோம்.. பின் சந்திரிகாவை ஒரு சமாதான தேவதையாக நம்பினோம்.. பின் ரணிலை...

இவர்கள் அனைவரும் சிங்களவர்களே ஆனாலும் எம் நம்பிக்கைகள் குறையவில்லை.

ஆனால் தமிழனும் மிகப் பெரிய ஆப்பு வைப்பார் என்பதை கருணாவின் பின் தான் புரிந்து கொண்டோம்.

புலிகளில் 25 வருடம் இருந்த கருணாவையே நம்ப முடியவில்லை எனும் போது, எமக்கு டக்ளஸ் போன்றவர்கள் மீதிருந்த கோபம் கூட கருணாவிடம் ஏற்பட்ட கோபத்தை விட குறைவாக போனது

நம்புவதும், நம்பி கெடுவதும் எம் வரலாறாக மட்டுமன்றி இயல்பாகவே (இசைவாக்கம்) போய் விட்டது

அந்த தொடர்சியில் தான் இன்று கசேந்திரனை பார்க்கின்றேன் (ஏனெனில் அந்த தொடர்ச்சியில் தலைவர் பிரபாகரனை எள்ளவும் பார்க்க முடியாமல் போய்விட்ட போது)

எமக்கு இன்று தேவை சம்பந்தருக்கான மாற்று அல்ல

தலைவர் பிரபாரனுக்கு அடுத்தான, அவரைப் போன்ற ஒரு தலைமை

அதற்கான காலம் கனியும் வரைக்கும், இடையில் கடப்பவர்கள் அனைவரும் மாற்றாக மாட்டார்கள்

நண்பர் பிழம்புக்கு,

நாங்கள் எவரின் விசுவாசியாகவும் இருக்க வேன்டியதில்லை.எங்கள் விசுவாசம் தமிழ் மக்கள் மீது தான்.தமிழர்களுக்கு எது நன்மை பயக்கும் அதற்காக நாங்கள் எந்தக் கோட்ப்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்,அந்தக் கோட்பாடுகளுக்கு யார் விசுவாசமாக இருந்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன்.

உங்களுக்கு இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்,கூட்டமைக்குள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிச்கரிக்கச் சொல்லி வாதிட்டவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.பின்னர் தேர்தலைப்பகிஸ்கரிக்கும் படி தமிழ்காங்கிரஸ் ஒரு அறிக்கையும் விட்டது.அதன் பின்னர் இபோது பலர் கதைக்கும் ஒற்றுமையின் பெயரால் அந்த நிலைப்பாடு மற்றி அமைக்கப்பட்டது.அவர்கள் இறுதி வரைக்கும் ஒற்றுமைக்காகவும் தமிழரின் தாயகக் கோட்பாடுகளாக்கவும் கூட்ட்மைப்புக்குள் இருந்தவாறு போராடினார்கள்.ஈற்றில் இந்த தன்னம்பிக்கை இல்லாத தலமையை அகற்றவே தேர்தலில் தனியாக நிற்பது என்னும் முடிவுக்கு வந்தார்கள்.இதனை அவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் கலந்துரையாடிய பின்னரே மேற்கொண்டனர்.இது தான் நடந்த நடக்கின்ற உண்மை.

இன்று தமிழரின் தாயகக் கோட்பாட்டிற்க்கு ஆதரவாக இருப்பவர்கள் நாளை மாறலாம் நேற்ற் விரோதிகளாக இருந்தவர்கள் இன்று விசுவாசிகளாஅக் மாறலமம். நாம் இன்று இருக்கும் நிலையில் எவர் எல்லாம் தாயகம்,தன்னாட்ச்சி சுய நிர்ணயம் என்னும் கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இருகிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.மக்கள் சார்ந்த அரசியல் நிலைப்பாடு அவ்வாறு தான் இருக்க முடியும்.விசுவாசம் என்பது தனி நபர்கள் சார்ந்ததாக இருக்கமுடியாது.அது கொள்கை சார்ந்ததாகவே இருக்க முடியும்.

நான் இவ்வளவு நேரம் சொல்வது, கஜேந்திரன் பொன்னம்பலத்தை.... எம் பி யை அல்ல. இருவரும் வேறு என்று அறிந்திருப்பீர்கள்

அவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... கஜேந்திரன் அல்ல...!

Edited by தயா

இறைவன்

கூட்டமைப்பினரை எதிர்ப்பது இங்கு கடமையில்லையே. கஜேந்திரன் அணியினரின் கருத்துக்கள் மட்டுமே வெளிவரவேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

தமிழர்கள் இன்று பிரிந்து செயற்படுவதற்கும் உதிரிகளாக்கப்பட்டதற்கும் கஜேந்திரனே காரணம்

சம்பந்தர் , கஜேந்திரன் என்றவிடயமா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடயமா? இங்கு பிரச்சனைக்குரியது. சம்பந்தருக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அதை ஏற்காத மாற்றுக் கருத்தாளர்கள் கஜேந்திரனுக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

நான் கஜேந்திரனுக்கு எதிரானவனல்ல. தமிழருக்கு ஒரு விடிவுகிடைத்தால் மகிழ்பவரில் நானும் ஒருவன்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

இதற்கு மேலும் நடிக்க முற்படாதீர்கள் இறைவன் நீங்கள் சம்பந்தருக்கு பல்லக்கு தூக்குகின்றீர்கள் அதை நேரடியாகவே சொல்லுங்கள் தலையைச் சுற்றி சுற்றி மிண்டும் மீண்டும் மூக்கைத் தான் தொடுகின்றீர்கள்

கஜேந்திரன் அணியினரின் கருத்துக்கள் மட்டுமே வெளிவரவேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

இதனால் தான் கீதாஞ்சலி யையும் இணைத்தீர்களா ? அப்படியானால் புளட் கருணா பிள்ளையானை ஏன் விட்டு விட்டீர்கள் ?

உண்மையிலே கயேந்திரன் முண்ணனி இங்கு மறைக்கப்பட்டு வந்ததால் தான் நான் இணைக்க ஆரம்பித்தேன் மோகன் முதல் நிழலி [நிர்வாகம் ] வரை சம்பந்தர் தரப்புச் செய்திகளை மட்டுமே இணைத்திருந்தார்கள் இணைத்தும் வருகின்றார்கள்

ஓரிரண்டு நேயர்களைத் தவிர சம்பந்த விசுவாசிகள் மட்டுமே கருத்தும் எழுதி வருகின்றார்கள்

Sooravali,

முடிவை மக்களிடம் விடுங்கள். நாங்கள் இங்கே விவாதிப்போம் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவேண்டாம்.

சம்பந்த விசுவாசிகள் எதோ தாங்கள் தமிழர்களது விடிவிற்காக உழைப்பதாக சொல்லிக்கொண்டும் கயெந்திரனுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் மற்றவர்களை கயெந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போல் குற்றம் சாட்டி தாங்கள் நடுநிலையாக எழுதுவதாக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார்கள்

இவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் முடிவு மக்களிடம் தான்

உங்கட ஆட்கள் தோத்தால் களவோட்டு,சுத்து மாத்து தேர்தல்.கஜேந்திரனுக்குஅதிகமான விருப்பு வாக்கு கிடைத்தது மட்டும் நேர்மையான தேர்தலினாலா,நீங்களும் உங்கள் நியாயங்களும்.முளிவாய்காலுடன் முக்கால்வசிப் பேர் முக்காடு,தேர்தல் முடிய மிஞ்சியவர்களும் போட வேண்டியதுதான்.

நீங்கள் எல்லாம் 2,3 வருடங்களுக்கு முதல் எழுதியவற்றை ஒருக்கா திரும்பி பாருங்கள்.எவ்வளவு அதிமேதாவிகளாக இருந்திருக்கின்றீர்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.