Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வாழும் மண்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல.

நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ளனர், இந்த தொகையில் கிட்டத்தட்ட எனது கணிப்பின் படி பத்தாயிரம் எமது மக்களும் உள்ளடங்குவர். இங்கும் எம்மவரின் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் போன்றவற்றிற்கும் குறைவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இருப்பினும் Brampton பகுதியின் மொத்த சனத்தொகையில் ஜம்பதுக்கு மேற்பட்ட வீதத்தினர் இந்தியர்கள் தான் உள்ளனர். இங்கே எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்களின் பிரசன்னமே அதிகமாக இருக்கும்.

Brampton பகுதியில் எண்பது வீதத்திற்கு மேலான கட்டிடங்கள்(வீடுகள், வர்த்தக நிலையங்கள்) வீதிகள் போன்றவை யாவும் நவீன அமைப்பை கொண்ட புதியனவையாகும். சுருக்கமாக சொல்லப்போனால் கனடாவிலையே குறுகிய காலப்பகுதியில் மிக வேகமாக உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம் அல்லது பட்டணம் என்றும் கூறலாம்.

இந்த பதிவில் இங்கு அமைந்துள்ள ஒரு பொது மருத்துவமனை(Brampton Civic Hospital) சம்பந்தமாகவே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளேன்.

images4e.jpg

இந்த மருத்துவ மனையின் பெயர் William Osler Health Centre ஆகும், இது அமைந்திருக்கும் இடம் 2100 Bovaird Drive East என்ற முகவரியாகும்.http://www.williamoslerhc.on.ca/ இதுபற்றிய மேலதிக விபரங்களை குறிப்பிட்ட இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மருத்துவமனை 2007ம் ஆண்டு October 28ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இது 2.4 கிலோமீற்றர் (Square Kilometres)அதாவது 1.3மில்லியன் Square Feet சுற்றளவை கொண்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் வதிவிடத்தினுள் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.

images7i.jpg

இந்த மருத்துவமனை 479 படுக்கை அறைகளையும் 450 ஊழியர்களையும் கொண்டு ஆரம்பித்து இன்று 570 படுக்கை அறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 2570 வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது North Building & South Building. North Building ஆறு மாடிகளும், South Building மூன்று மாடிகளைக்கொண்டும் அமைந்துள்ளது.

இது நான்கு நுளை வாயில்களையும், நான்கு Elevators களையும் கொண்டு அமைந்துள்ளது.

lookingwest.jpg

இங்கு நீங்கள் நுளைந்ததும் நீங்கள் கேட்காமலே உதவவென அதிகளவான தொண்டர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி வாசலில் உங்கள் கரங்களில் ஒரு வழிகாட்டி தரப்படும் அதன்படி இலகுவாக உங்களது இடங்களை அடையக்கூடியதாக இருக்கும். பிரதான நுளைவாயிலில் பல பொழுதுபோக்கு சாதனங்கள். உணவகங்கள் போன்றவை தாராளமாகவே உள்ளன சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத சூழ்நிலையை இங்கே உணரக் கூடியதாகவுள்ளது.

2010 மார்ச்17ல் காலை 8மணியளவில் எனக்கு மிக வேண்டியவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சையிற்காக நானும். அவரும் இங்கு செல்கிறோம், உள் நுளைந்ததும் எங்கள் கையில் உள்ள பத்திரத்தை காண்பிக்கிறோம், அங்கு கடமையில் இருந்த தொண்டர் எங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வந்து, இணைக்க வேண்டியவர்களுடன் இணைத்த பின்பே நகருகிறார் என்றால் புரிந்திருக்கும் தானே.

அறுவைச் சிகிச்சையிற்கு முன்பும் பின்பும் அவர்களது பராமரிப்பு பாராட்டப்பட வேண்டியவை , எல்லோராலும் பாராட்டப்படும் ஜரோப்பிய நாட்டிலை பல வருடங்களாக பல மருத்துவமனைக்கு சென்றிருந்த எனக்கு இவை மிகவும் ஆச்சரியமாகவே இருந்தன.

images6t.jpg

அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு வேளையிலும் உணவு, மருந்துகள் பரிமாறப்பட்ட பின்பு தகவல்கள் சேகரிக்கப்படும் அதாவது என்ன உணவு தரப்பட்டது, எது மிகுதியாக விட்டீர்கள் போன்ற தகவல்கள் குறித்துக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட ஒரு மருத்துவமனை நான் வாழும் மண்ணில் இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றேன்.

இந்த மருத்துவமனை பற்றிய மேலதிக தகவல்கள் பெற ஆர்வமாகவுள்ளவர்கள் http://www.oslerfoundation.org/pdfs/WM_OSL_4PG_JUL06.pdf என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்லாம்.

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

உங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி அப்பு!!!

... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது! இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ... <_<

நன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி

வல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது! இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ... :)

பிரச்சினையே இல்லை, விமானச்சீட்டு இங்கிருந்து அனுப்பலாம், பணத்தை உங்கையே செலுத்தக்கூடிய வசதியையும் செய்து தாறனெங்க ஜோசிக்கவே வேண்டாம்.

யாமிருக்க பயமேன்?

உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லையான்!

Edited by வல்வை லிங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி

நன்றி சகோதரி ஈழமகள்!

நீங்கள் கூறியதுபோல் உந்த அவசரப்பிரிவு சேவை எங்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தானெங்க, இருந்தும் உள்ளே எடுத்துவிட்டார்கள் என்றால் நல்ல கவனிப்பு.

ஆனால் இந்த மருத்துவமனை அதாவது கனடாவிலையே பச்சை நிலத்தரையில் உருவாக்கப்பட்டதாகும், நல்ல சுவாத்திய பகுதியிலும் அமைந்துள்ளது. போக்குவரத்தும் இலகவானதாகும்.

வல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.

நன்றி முரளி!

உண்மைதான் முரளி. நான் இந்தப்பகுதிக்கு 2004 இறுதியில் வந்தேன், 2007ல் தான் இது கட்டப்பட்டது, அந்தப்பகுதியால் போகும் ஒவ்வொரு வேளையும் வியப்புடன்தான் பார்த்துச் செல்வேன்.

ஏனெனில் வெற்றுத்தரையாக இருந்த நிலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே

அது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. :)

(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)

அப்ப நான் வரட்டா (கனடாக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே

அது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. :)

(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)

அப்ப நான் வரட்டா (கனடாக்கு)

அப்பன் ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றியெங்க!

உதிலை பிரச்சினையில்லை என்று ஏற்கெனவே தம்பி நெல்லையானுக்கும் கூறிவிட்டேன் அதாவது உங்கள் முகவரியைத் தாங்க பிரயானச் சீட்டையும், எங்கே பணம் செலுத்தவேணும் என்ற விபரத்தையும் அனுப்பி வைக்கிறன்.

இப்போ சந்தோஷம் தானுங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.

அக்கா!

உங்களால் எனக்கு தரப்பட்ட உசாரும், உங்களைப்போன்ற நல் மனங் கொண்டவர்களின் வேண்டுதல்களும், மருத்துவனையில் உள்ளவர்களின் பராமரிப்புகளும் தான் எங்களது சிகிச்சை நல்லதாக முடிந்துள்ளது. இருப்பினும் நாளை கிடைக்கவிருக்கும் இதுபற்றிய பெறுபேறுகள் தான் மிகமிக முக்கியமானவை.

என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியதே அவர்களின் அன்பான உபசரிப்பும், மருத்துவ மனையின் சூழ்நிலையும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.