Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்களையும் தொன்மைகளையும் அழியவிட்டுப் பார்த்திருப்போமா?

Featured Replies

எங்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்களையும் தொன்மைகளையும் அழியவிட்டுப் பார்த்திருப்போமா? பேராசிரியர் இரா.சிவசந்திரன்

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழலில் மிகவும் வேண்டப்படும் கருத்துக்களாக அமைகின்றன.

தமிழர்களுக்கான வரலாறுகள் மறைக்கப்படுவதும் அடையாளங்கள் மாற்றப்படுவதும் இப்பொழுது மிகவும் சாதரணமாகத் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற சம்பவங்களாகிவிட்டன. அண்மையில் யாழ்.நூலகம் கொண்டிருந்த மிக முக்கியமான அடையாளம் சாயம் பூசி மறைக்கப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் கைகளில் 1613 இல் வீழ்ந்தது. அதன்பின் எமது பிரதேசத்தின் பண்பாட்டுத் தொன்மைகளாகவும் எங்கள் கலாசார நிலையங்களாகவும் அமைந்த கோயில்கள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பின் அடையாளமாக அழிக்கப்பட்டன அந்தக் கற்களைக்கொண்டுதான் யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்டது.. பின்னர் அதனை ஒல்லாந்தர் பாரியளவில் திருத்தி அமைத்தார்கள்.

தற்பொழுது அதிகாரத்தின் அடையாளத்தை ஆக்கிரமிப்பின் சின்னமாகப்பேணும் ஒல்லாந்தர் கோட்டையை - யாழ்ப்பாணக் கோட்டையை நெதர்லாந்து அரசு பலமில்லியன் ரூபாய்களைக் கொடுத்துத் திருத்தி அமைக்கவுள்ளது. இது எங்களது பாரம்பரிய கலாசாரத் தொன்மையினை அவமதிக்கும் செயலாகவே பார்க்க முடியும்.

நடக்கின்ற எல்லாமே அபிவிருத்தி என ஏற்றுக்கொள்ளும் நிலையில் யாழ்ப்பாண சமூகத்தினர் தற்பொழுது இல்லை. எங்களுக்கான அபிவிருத்தியில் எங்களது பண்பாடு கலாசாரம் என்பன பேணப்படுவது முக்கியம். இங்கு எங்களுக்கான தொன்மையையும் வரலாற்று அடையாளங்களையும் நிலைநிறுத்தும் சின்னங்களாக இருக்கின்ற ‘சங்கிலியன் வளைவு’ ‘மந்திரி மனை’ என்பவற்றைச் செப்பனிட்டுப் பாதுகாப்பதே முதற் செய்யவேண்டிய பணியாக இருக்கவேண்டும். அவ்வாறானவற்றை அழியவிட்டு வேடிக்கைபார்க்கும் மனோபாவத்துடனான செயற்பாடுகள் எங்களுக்குத் தேவையற்றவை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒல்லாந்தர் கோட்டையைத் திருத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் தவறானவை.

இலங்கையின் தென்பகுதியின் காலி நகரிலுள்ள கோட்டையின் வெளியமைப்பு மாற்றப்படாமல் உட்பகுதி நிலம் அரச அலுவலகங்களை அமைத்துச் செயற்படுவதற்காக பயன்படுகிறது. அவ்வாறு காலி ஒரு நகராக விருத்தி செய்யப்பட்டது போல யாழ்.கோட்டையினையும் பயன்படுத்த வாய்ப்புக்கள் இருக்கின்றன. இடப்பற்றாக்குறையுள்ள யாழ் நகரத்தில் இச்செயற்பாடு அவசியமானதாகவும் எமது வரலாற்று அடையாளங்களை பேணும் முயற்சியாகவும் அமையும்.

எனவே எங்களுக்கான திட்டங்கள் வருகின்றபோது அதனை யாழ்ப்பாண சமூகத்தினைக் கருத்திற் கொண்டு செயற்படுத்தவேண்டிய அரசியல் ஞானம் அரசில் உள்ளவர்களுக்கு வேண்டும். இல்லையெனில் அதனை நெறிப்படுத்தும் திறனுள்ளவர்கள் அரசியல் பலமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

அந்தவகையில் இப்படியான யாழ் சமூகத்துக்கான மேம்பாட்டினை சரியான வழியில் சாத்தியமாக்குவதற்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வழிசெய்யும். வாக்காளர்கள் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசிழந்தவனுக்கு நாடிழந்தவனுக்கு படை இழந்தவனுக்கு அண்டிப்பிழைக்கலாம் என்ற மனநிலை உள்ளவனுக்கு உலக வரலாற்றில் பண்பாடு.. வரலாறு.. கலாசாரம்.. என்ற தனித்துவங்கள் தொடர்ந்து இருக்க முடியாது. அதற்கு நல்ல உதாரணம் தமிழர்கள். குறிப்பாக ஈழத்தமிழர்கள்.

இருந்ததை எல்லாம் தவறவிட்டிட்டு.. எனிப் பறக்கிறதை பிடிக்க முயன்றால் அது நடக்காது. சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம் என்பதை நிலைநிறுத்த போதிய அரசு.. படை பலம் எதிரியிடம் இருக்கிறது. எனவே அவனின் செயற்பாடுகளை எனி தமிழர்களால் எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்கள் சந்தர்ப்பங்களை படிப்படியாக தவறவிட்டு விட்டார்கள். நம்பிக் கெட்டு விட்டார்கள்.

பேராசிரியர் போட்டியுடும் தமிழ் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டத்தின் படி அதிகாரப் பரவலாக்கம் மட்டுமே தமிழரிடம் இருக்கும்.அதிகாராமும் சட்டவாக்கமும் சிறிலங்காப் பாராளுமன்றிடம் மட்டுமே இருக்கும்.இவர் எம்பியாகி, சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்தியா வந்து ,இவர்கள் கேட்ட படியே வட பிராந்திய சபை வழங்ககப் பட்டாலும் இவர்களுக்கு இருக்கும் அதிகாராம் மலசலகூடத்துக்கு என்ன கலரில பெயின்ட் அடிக்கலாம் என்னும் நிலையிலையே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பிரநிதிகள் என்ற பெயரில் மகிந்த கூட்டத்தின் கால்களை கழுவிக்கொண்டு இருக்கிற அடிவருடிகளுக்கும , வெளி நாடுகளில் வசிக்கும் இவர்களின் ஊதுகுலல்களுக்கும் தமிழ் புராதன சின்னங்களை, தமிழ் கலாசாரத்தை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லையா? இவர்கள், தமிழ் தாய்க்கு பிறந்தார்களா? இவர்களும் உண்மையில் தமிழர் தானா?

நாரதர் மற்றும் ராணி.

மேல நெடுக்கு சொன்னமாதிரி இருக்கு எங்கள் நிலைமை... இதுக்குள்ள இருந்து மிளுவதுக்கு முள்ளில விழுந்த சீலையை எடுப்பதுபோல மெதுவாக விடுபடவேண்டும். இப்ப யாரையும் குறைகூறுவதால் நிலைமை திருந்தாது. நாங்கள் ஒற்றுமையா இருந்தால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் காரியத்தை நகர்த்தமுடியும்.

இதை சிங்களவன் சரியாச் செய்தான் ஆனையிறவு விழுந்த பின் சிங்களவன் காலுடைஞ்சு சேடமிளுக்கும் நேரத்தில தமிழ்த் தரப்புகள் எல்லாம் ஒரு குடையின் கீள் இருக்கும்போது நரி ரணில் தந்திரமா காய்நகர்த்தி அமைதியா நிலைமையை தமக்குச் சாதகமா மாற்றினான்.

பிறகு மகிந்த வந்து மிச்சத்தை பார்த்தான்.. எங்கள் கண்ணனுக்கு சிங்களவன் அடிப்படுமாதிரி இருந்தாலும் எங்கள் விடயத்தில் அவர்கள் ஒன்றுதான்.

நாங்கள் தான் ஒற்றுமையா இருக்கவேண்டிய நேரத்தில பிரிஞ்சு போறம்..

உடனடியா கிடைக்கிற தீர்வு தமிழ் ஈழமாக இருகவேண்டுமேன்றில்லை. முன்னம் இருக்கிற பாதகமான நிலையில் இருந்து விடுபடுவம் பின்னர் ஒரு சாதகமான தீர்வை யோசிப்பம் சிரியான வரும்போது ஈழத்தை அடையமுடியும்.

இதெல்லாம் இப்ப சாத்தியமாகாது... இஞ்ச இதைசொல்ல வெளிக்கிட்டு சம்பந்தருக்கு கு வலுறம் என்று ஒரு பேர் வந்திட்டுது.

இனி மெல்ல மெல்ல அழிஞ்சு போவம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சூறாவழி

என் கருத்தும் இதுதான்

எனக்கும் இங்கு அதுதான் நிலை

அதாவது சம்பந்தருக்கு.....

ஆனால் உண்மையில் குழியிலிருந்து வெளிவருவதற்கானது மட்டுமே எனது ஆதரவு

தங்களுக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமை பற்றி சிலர் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன். ஒற்றுமை என்பது ஒரு கொள்கை அல்லது சில கொள்கைகள் விடயத்தில் ஒருமித்துச் செயற்படுவது. அதன் அர்த்தம் எல்லோரும் ஒரு கட்சியின் பின்னால் செம்மறிகள் மாதிரி பின்தொடர்வது அல்ல. ஒரு சனநாயக அமைப்பில் பல்வேறுகட்சிகள், அமைப்புகள் இருப்பது சாதாரணம். ஆனால் அவை ஒன்றுக் கொன்று கழுத்தறுப்பு அரசியல் நடாத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இஸ்ரேல் நாட்டில் 30க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அங்கு தனித்து ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதே இல்லை. ஆனால் இந்த கட்சிகள் தமது நாட்டு நலன் விடயத்தில் உறுதியான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சி இஸ்ரேல் ஐ கட்டியமைக்க வேண்டும் என்றால் மற்றயது நாட்டைக்காட்டிக் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு அடிமையாக வாழ்வோம் என்று சொல்வதில்லை. அவ்வாறு செயற்படுவதுமில்லை. அங்கு தமது நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது, அன்னிய சக்திகளுக்கு அடிபணியாமல் இருப்பது என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

துரதிர்ஸ்ட வசமாக தமிழ் கட்சிகளிடம் அவ்வாறான நிலைப்பாடு இல்லை. இனத்தை காட்டிக் கொடுப்பதே அரைவாசி தமிழ்க்கட்சிகளின் செயற்பாடாக இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் சாகும்வரை தலைவர்களா இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள. சிறிலங்காவில் ஒரு அரச அதிகாரி ஒய்வு பெறும் வயது 54. ஆனால் 77வயது சம்பந்தனுக்கு அது பொருந்த வில்லை. (தொண்டமான், கருணாநிதி, ஜே. ஆர். ஜயவர்தன என்போரும் இப்படியான தலைவர்கள்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய கருத்தும் எடுதுகோளும் ஒரு நாடற்ற அதிலும் ஒரு சிறுபான்மை இனத்துக்கு சரிவராது.

30 கட்சியிருப்பின்

பெரும்பான்மைக்கட்சிகள் வென்றுவிடும்

இந்த அடிப்படையையும்

களநிலையையும் புரியாத எந்த முயற்சியும் வீண்.

அதைவிட மேலும்மேலும் அழிவையே தரும்

நன்றிகள் M17.. இதே போன்ற ஒரு கருத்தை (இஸ்ரேலை ஒப்பிட்டு) நேற்று ஒரு கருத்து எழுத இருந்தேன். பிறகு என்ன எப்பப் பார்த்தாலும் எங்களை இஸ்ரேலோட ஒப்பிடுறாங்கள் எண்டு குதர்க்கம் வந்திடும் எண்டு விட்டிட்டன்..! நல்லவேளை நீங்கள் எழுதிவிட்டீங்கள்..! :)

தங்களுடைய கருத்தும் எடுதுகோளும் ஒரு நாடற்ற அதிலும் ஒரு சிறுபான்மை இனத்துக்கு சரிவராது.

30 கட்சியிருப்பின்

பெரும்பான்மைக்கட்சிகள் வென்றுவிடும்

இந்த அடிப்படையையும்

களநிலையையும் புரியாத எந்த முயற்சியும் வீண்.

அதைவிட மேலும்மேலும் அழிவையே தரும்

விசுகு அண்ணை.. ஆயுதவழிச் செயற்பாட்டுக்கு ஒரு கட்சி. ஜனநாயக வழிச் செயற்பாட்டுக்கு பலகட்சிகள். இதுதான் அடிப்படையாக இருக்கவேண்டும். அதன்மூலமே ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் எத்தனை கட்சிகள் இருந்தாலும் குறிக்கோள் என்பது ஒன்றாகவே இருக்க வேண்டும். குறிக்கோளை விட்டகன்ற கட்சிகளை மக்களே ஒதுக்கி விடுவார்கள்.

ஒற்றுமை பற்றி சிலர் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன். ஒற்றுமை என்பது ஒரு கொள்கை அல்லது சில கொள்கைகள் விடயத்தில் ஒருமித்துச் செயற்படுவது. அதன் அர்த்தம் எல்லோரும் ஒரு கட்சியின் பின்னால் செம்மறிகள் மாதிரி பின்தொடர்வது அல்ல. ஒரு சனநாயக அமைப்பில் பல்வேறுகட்சிகள், அமைப்புகள் இருப்பது சாதாரணம். ஆனால் அவை ஒன்றுக் கொன்று கழுத்தறுப்பு அரசியல் நடாத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இஸ்ரேல் நாட்டில் 30க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அங்கு தனித்து ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதே இல்லை. ஆனால் இந்த கட்சிகள் தமது நாட்டு நலன் விடயத்தில் உறுதியான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சி இஸ்ரேல் ஐ கட்டியமைக்க வேண்டும் என்றால் மற்றயது நாட்டைக்காட்டிக் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு அடிமையாக வாழ்வோம் என்று சொல்வதில்லை. அவ்வாறு செயற்படுவதுமில்லை. அங்கு தமது நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது, அன்னிய சக்திகளுக்கு அடிபணியாமல் இருப்பது என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

துரதிர்ஸ்ட வசமாக தமிழ் கட்சிகளிடம் அவ்வாறான நிலைப்பாடு இல்லை. இனத்தை காட்டிக் கொடுப்பதே அரைவாசி தமிழ்க்கட்சிகளின் செயற்பாடாக இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் சாகும்வரை தலைவர்களா இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள. சிறிலங்காவில் ஒரு அரச அதிகாரி ஒய்வு பெறும் வயது 54. ஆனால் 77வயது சம்பந்தனுக்கு அது பொருந்த வில்லை. (தொண்டமான், கருணாநிதி, ஜே. ஆர். ஜயவர்தன என்போரும் இப்படியான தலைவர்கள்தான்)

ஒற்றுமை பற்றி முதலில் தவறாக நீங்களே விளங்கிக் கொண்டுள்ளீர்கள் போலும்.

இங்கே ஒரு கட்சியல்ல பிரச்சனை கொள்கையும் ஒரு இனத்தின் இருப்பும்தான் பிரச்சனை.

உங்களை யாரும் யாருக்கும் பின்னால செம்பரி மாதிரிப் போகச்சொள்ளவில்லை... ஒற்றுமையா இருங்கோ எண்டால் செம்மறி ஆடுதான் நினைவுக்கு வருகுதெண்டால் நாங்கள் இப்பிடி நிப்பதுக்கு இந்தியாவையும் சிங்களவனையும் ஏன் நோவான்? பிரச்சனை வேறேன்கொயோ இருக்கு.

இஸ்ரேல் யூதர்கள் பற்றி கதைக்கும்போது முதலில் யூதர்கள் இப்பிடித்தான் அறுபத்தெட்டு கட்சி வைத்து ஆளுக்கு ஒருபக்கமா இழுத்தாங்க்களா என்று பார்க்க வேண்டும். இஸ்ரேல் தேசம் உருவாக்கும்வரை அந்த இனம் எப்படி அந்த தேசத்தை கனவுகண்டு எத்தனை தலைமுறையா இதை பாதுகாத்து இறுதியில் உருவாக்கினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

இன்று இஸ்ரேல் எப்படி இருக்குது என்பது எமக்கு முக்கியமில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சுதந்திரமான சனாயாக தமிழ் ஈழத்தில எஸ்ரேளுக்குப் போட்டியா எத்தினை கட்சி வேண்டுமென்றாலும் வைச்சிருங்கோ. வேண்டுமென்றால் நீங்களும் ஒன்று தொடங்குங்கோ நானும் ஒன்று தொடங்கிறான். ஆனால் இப்ப அத்தனை வைச்சிருக்கவேனுமா?

நீங்கள் இப்ப இருக்கிற நிலைமையில் போய் தமிழ் ஈழத்தை யாரிடமும் கேட்கமுடியாது. முதல்ல ஆரை வைச்சென்றாலும் ஒருபடி மேல வாங்கோ பிறகு எந்தக்கட்சியை வைச்சு அரசியல் நடத்திரதேன்பதை பார்ப்பம்.

இப்ப சிங்களவன் செய்யிற தாயகப் பகுதியில் செய்யிற அபிவிருத்தியேல்லாம் எங்களை வாழவைக்க இல்லை.. அது அவன் வந்து தனதாக்க. இவ்வளவு கஷ்டப்பட்ட சிங்களவன் சம்பந்தர் கேட்டாலும் கொடான் இந்தியா கேட்டாலும் குடான். இதுக்கு இன்னொன்றா பிரிந்து வேறொன்று கேட்டு சிங்களனை குழப்பெலாது எங்களை வேணுமென்றால் குழப்பலாம்.

தனிநாடு தேவையெண்டா நீங்கள் சொன்ன இஸ்ரேல் மாதிரி அத்தனை ஆண்டுகள் இல்லாட்டிலும் ஒற்றுமையா மன்னிக்கவும் செம்மரியாடுகளா ஒரு கொஞ்சக்காலமாவது இருங்கோ. ஆப்படி இருந்திட்டால் பிறகு தனிநாட்டை அடுத்த தலைமுறையாவது அனுபவிக்கும்.

  • தொடங்கியவர்

உடனடியா கிடைக்கிற தீர்வு தமிழ் ஈழமாக இருகவேண்டுமேன்றில்லை. முன்னம் இருக்கிற பாதகமான நிலையில் இருந்து விடுபடுவம் பின்னர் ஒரு சாதகமான தீர்வை யோசிப்பம் சிரியான வரும்போது ஈழத்தை அடையமுடியும்.

என் கருத்தும் இதுதான் :)

என் கருத்தும் இதுதான் :)

இப்ப இருக்கும் தமிழரின் நிலைக்கும் தீர்வு எண்ட ஒண்டை எடுக்க போறம் எண்டு சொல்லும் உங்களின் தீர்வுக்கும் இடையிலை வித்தியாசம் என்ன....?? :rolleyes: அப்படி தமிழர் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை என்பதாவது புரிகிறதா...??

எனக்கு தெரிய ஒரு வித்தியாசம் இருக்கலாம் அது சம்பந்தனோ, டக்கிளசோ தமிழரை நிர்வகிக்கும் பதவியில் இருந்து(உலக அங்கீகாரம் கொண்ட) தமிழர்களின் தலைவராக இருப்பார்கள்...

இந்த இருவரும் தமிழகத்தின் கருணாநிதியை போல தங்களால் பெற்று கொடுக்க பட்டதே மிகச்சிறந்த தீர்வு எண்று நிலைநாட்டுவதுக்காக தமிழரின் பிரச்சினைகளை மூடி மறைப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

Edited by தயா

  • தொடங்கியவர்

இப்ப இருக்கும் தமிழரின் நிலைக்கும் தீர்வு எண்ட ஒண்டை எடுக்க போறம் எண்டு சொல்லும் உங்களின் தீர்வுக்கும் இடையிலை வித்தியாசம் என்ன....?? :)

எனக்கு தெரிய ஒரு வித்தியாசம் இருக்கலாம் அது சம்பந்தனோ, டக்கிளசோ தமிழரை நிர்வகிக்கும் பதவியில் இருந்து தமிழர்களின் தலைவராக இருப்பார்கள்...

இந்த இருவரும் தமிழகத்தின் கருணாநிதியை போல தங்களால் பெற்று கொடுக்க பட்டதே மிகச்சிறந்த தீர்வு எண்று நிலைநாட்டுவதுக்காக தமிழரின் பிரச்சினைகளை மூடி மறைப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

நீங்கள் எல்லாம் இலங்கையில் இருக்க வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் இப்படி கதைப்பார்கள், உங்களுக்கு யதார்த்தம் புரியாதா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?

நீங்கள் எல்லாம் இலங்கையில் இருக்க வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் இப்படி கதைப்பார்கள், உங்களுக்கு யதார்த்தம் புரியாதா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?

கூட்டமைப்பின் பெரும் வீட்டு சின்னத்துக்கு உரித்தான தந்தை செல்வாவும் புலம்பெயந்து வந்த தமிழன் தான்...

உங்கட விளக்கங்களை கொஞ்சம் விளக்கமாகவே சொல்லாமே.... கேக்க ஆவலாக உள்ளேன்...

Edited by தயா

இசுரேல் உருவாக முதல் பல இயக்கங்கல் இருந்தன.ஒவ்வொன்றும் வேவ்வேறு வழிமுறைகளைப் பின பற்றின.பழமைவாதாக் கட்ச்சிகளிடம் இருந்து விடுபட்டு புலம் பெயர் யூதர்கள் குறிப்பாக அய்ரோப்பாவில் இருந்து சென்ற யூதர்களே தங்களது பலத்தில் நின்று இசுரேலிய நாட்டைக் கட்டி எழுப்பினார்கள்.சில யூத இயக்கங்களை ஒவ்வொரு நாடும் பயன் படுதியது.சில இயக்கங்களைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தினார்கள்.ஒரு இயக்கத்தைப் பயன் படுத்தி மற்றையதை அழிக்க முயற்ச்சித்தனர்.ஆனால் இரண்டாம் உலக யுத்தமும் அதன் பின்னன நிகழ்வுகளும் புலம் பெயர்ந்த யூதர்களின் பொருளாதார அரசியல் செல்வாக்கும் இறுதியில் இசுரேல் என்னும் நாட்டை உருவாக்கின.யூதர்கள் எதாவது ஒரு வல்லரசின் சொற்கேட்டு செயற்பட்டிருந்தால் இன்று அவர்களுக்கு என்று ஒரு நாடு இருந்திருக்காது.ஒரு வல்லரசின் ஆளுக்கைகு உட்பட்ட பிரதேசமே இன்று அங்கு இருந்திருக்கும்.

சம்பந்தன் அணியினர் எவ்வாறு இந்தியாவை தமிழரின் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்து, தமிழரின் தாயகதைப் பாதுகாப்பர்கள் என்று எங்காவது சொல்லி உள்ளார்களா? இந்தியா அவர்களிடம் எதாவது உறுதி மொழிகளைத் தந்திருக்கிறதா? ஒன்றுமே இல்லையே? ஒன்றுமே இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் தாயகக் கோட்பாட்டியும் சுய நிர்ணயதையும் கைவிட்டனர்.கஜேந்திரன் இன்று பிரிந்து சென்று இருக்காவிட்டால் இன்று இவை பற்றி அவர்கள் வாயே திறந்திருக்க மாட்டார்கள்.மக்களுக்கும் இவர்களின் நாடகம் தெரிய வந்திருக்காது.

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள்: இந்திய ஊடகம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தின் வடபகுதியின் யாழ்ப்பாணத்தில் தமிழர் வாழ்விடங்களை சிங்கள வணிகர்கள் சுவீகரித்துவருவதாக இந்திய ஊடகமான இந்துஸ்தான் ரைம்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப்பகுதியின் வடக்கின் தென்னிலங்கை சிங்கள இனத்தவர்களின் திடீர்வருகையினையிட்டு தமிழ் மக்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் கலாச்சாரம் கலைபண்பாடு போன்ற அடையாளங்கள் படிப்படியாக அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அதாவது 1995 ஆம் ஆண்டு காலத்தில் சிங்களவர்கள் என்று சிறீலங்காக காவல்துறையினரும் சிறீலங்காப்படையினருமே காணப்பட்டார்கள்.

முகாம்கள் சோதனை நிலையங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு அங்குலமும் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது ஏ-9 வீதி திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கையினை சேர்ந்த பெருமளவான சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்கின்றார்கள். இதனால் வடபகுதியின் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி பகுதியில் நிலைகொண்டிருக்கும் சிறீலங்காப்படையினர் நகரங்களில் உணவு விடுதி மற்றும் சிறு வணிக நிலையங்களை அமைத்து பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். போர் முடிவடைந்துள்ளமையினால் வேலையின்றி இருக்கும் படையினரே வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

தென்னிலங்கை வணிகர்களின் பெருமளவான படையெடுப்பினால் யாழ்ப்பாண வர்த்தகர்களின் செயற்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு சிங்கள மக்களின் படையெடுப்புக்களினால் யாழ்ப்பாண மக்கள் அச்சத்துடனும் அமைதியுடனும் பார்த்துக்கொண்டிருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.