Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் - காதலி - களம்

Featured Replies

அது மாசி மாசி மாதத்தின் ஆரம்ப நாட்கள் ...

சுதந்திர தினத்தன்று புதுக்குடியிருப்பில் தனது கொடியினை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நின்ற சிங்கள படைகளுக்கும் வீரதலைவனின் சொல் கேட்டு மக்களை காக்க நின்ற மானமா வீர்களுக்கும் இடையை கடும் சண்டை புதுக்குடியிருப்பை சூழ இடம்பெற்று கொண்டிருந்தது.

வேவு தகவல்கள் மூலம் பகைவனின் எறிகணை சேமிப்பு இடம் பற்றிய தகவல் அறிந்த புலிகள் படையணி ,அதனை கைப்பற்றவும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஒரு வலிந்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் ஒரு மகளிர் அணியில் பூங்கொடியும் இணைக்கபட்டாள். அன்று அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. கொடிய பகைவனுக்கு பதிலடி கொடுக்கும் அந்த தருணத்துக்காக அவள் ஏங்கிய பலன் அன்று அவளுக்கு கிடைத்திருந்தது. அது மட்டும் அல்ல ..அவள் மகிழ்ச்சிக்கு காரணம் .. அவர்களின் தாக்குதல் பிரிவுக்கு கட்டளை தளபதியாக அவளின் காதலன் காவியனே இருந்தான். காதலனின் கட்டளையை ஏற்று சமர் செய்யும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை ..அவளுக்கு கிடைத்திருந்தது ...

பூங்கொடி .. .. காதலன் போராடும் போது தான் அவனுக்கு தோள் கொடுக்காமல் வீட்டில் இருப்பது பாரம் என்று கடிதம் மூலம் எழுதி கேட்டு காவியன் இருக்கும் பிரிவிலேயே தன்னை இணைத்தவள். கணினித்துறையில் வல்லமை படைத்த இவள் பெரும் சமர்கள் இடம்பெற்ற போது எல்லாம் பின்கள வேலைகளிலே பங்கெடுத்து இருந்தாள். காதலர்கள் சந்திக்க மூன்று மாசத்துக்கு ஒரு முறை ஒரு மணித்தியாலம் அனுமதி இருந்தாலும் காவியனின் வேலை பளு காரணமாக இவர்கள் சந்திப்பது குறைவு. கடிதங்கள் மூலமே தங்கள் அன்பையும் நாட்டு பற்றையும் பரிமாறி கொண்டார்கள். இந்த சண்டையில் காவியனும் ஒரு கட்டளை தளபதி என்று தெரிந்ததும் , அங்காவது அவனை சந்திக்கலாம் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை அவன் முகத்தையாவது பார்க்கலாம் ,என்று அவள் பொறுப்பாளரை வற்புறுத்தி இந்த தாக்குதல் அணியில் இணைந்தவள் ..முதல் களம் அவளுக்கு ..கடைசி களம் என்று கூட தெரியாமல் சந்தோசமாக இருந்தாள் ...

கேப்பாபுலவு .... அதிகாலை நேரம் அதிர்ந்தது ..தளபதி லக்ஸ்மணன் தலைமையில் நந்திக்கடல் ஊடாக பகை நிலைகளுக்கு பின்புறம் சூரியகாட்டு பகுதிக்குள் ஊடுவிய புலிகள் அணி திகைப்பு தாக்குதலை தொடக்க மன்னாகண்டல் ,பத்தாம் வட்டாரம் ,மந்துவில் பகுதிகள் ஊடாக புலிகள் அணி முன்னணி நிலைகளை ஊடறுத்து பாய்ந்தன.பூங்கொடியும் அவள் அணிகளும் தீரமாக சண்டை செய்தன. எதிரி புலிகளின் பாச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான். கீர்த்தி முகாமை சூழ இருந்த பகுதியை தவிர்த்து அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பின்வாங்கி ஓடினான். 59 ம் படையணியே கதி கலங்கியது அத்தருணத்தில் புலிகள் அணி தங்களால் இயன்ற அளவு பிரதேசங்களை கைப்பற்றியவாறே முன்னேறின. மக்கள் மீது கொண்ட பாசம் எதிரி மீது கொண்ட கோபம் ..காதலன் / கட்டளை தளபதியின் நெறிப்படுத்தல் பூங்கொடியின் அணி எதிரியை துரத்தியவாறு எதிரி பிரதேசத்துக்குள் வெகு தூரம் முன்னேறி இருந்தது. அவர்களுக்கு சமாந்தரமாக நகர வேண்டிய அணிகள் சில தடைகளை தாண்ட வேண்டி இருந்தமையால் மெதுவாகவே நகர்ந்திருந்தன.

பூங்கொடியின் அணி ஒரு எதிரியின் சமையலறை மற்றும் சமையல் சேமிப்பு இடத்தை கைப்பற்றியது. அங்கே அடைக்கப்பட்ட தகர மீன், நூட்லஸ், பிஸ்கட்ஸ் எல்லாமே தொகை தொகையாக இருந்தன. அப்போ களமாடும் புலிகள் ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு நிறைய காலம் ஆகி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு மட்டுமே உண்டு விட்டு சண்டை போட்ட காலம். பயறு அல்லது பருப்பு கலந்த சோறு இது மட்டும் தான் சாப்பாடு. அதோடு தான் பதுங்கு குழி அமைக்கவேண்டும் மரம் தறிக்க வேண்டும் கனரக ஆயுதம் தூக்கி சண்டை போட வேண்டும். புலிகள் செய்தார்கள் மக்களுக்காக ..

சண்டையிலே சாப்பாடு பொருட்கள் கைப்பற்றபட்டால் அவை கட்டளைபீடம் ஊடக பின்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவை பின்னர் காயமடைந்த போராளிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். சண்டையில் ஈடுபடுபவர்களுக்கு கிடைப்பது அரிது.

பூங்கொடியும் அவள் அணிகளும் சாப்பாட்டு பொருட்களை கண்டதும் அவர்களுக்கு மூன்று நாளாக சாப்பிடாத பசி தான் ஞாபகத்துக்கு வந்தது. இராணுவம் ஓடும் வெற்றி செய்தி ஒரு பக்கம் ..நிறைய நாட்களுக்கு பின்னர் கண்ட உணவு பொருட்கள் ஒருபக்கம் ..அவர்கள் மகிழ்ச்சியினை கொண்டாட அந்த உணவு பொருட்களை பயன்படுத்தினார்கள். கையில் இருந்த அலைபேசியினை அணைத்துவிட்டு ..சாப்பாடை ஒரு பிடி பிடிக்க தொடக்கி இருந்தார்கள் ..அவ்வளவு பசி அவர்களுக்கு ..

சமாந்தர அணிகளின் முன்னேற்றம் தாமதப்பட சமர் கோட்டினை நேராக வைத்திருக்கும் நோக்கில் இவர்கள் பிரிவு கட்டளை தளபதியான காவியன் தனது காதலியின் அணிக்கு அலைபேசியில் ..அவர்களின் நிலையை சற்று பின்வாங்குமாறு தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தான். அவர்களோ அதை அறியாமல் சாபிட்டு கொண்டிருந்தனர். எதிரி அவர்களை சுற்றி வளைத்து கொண்டிருந்தான். பூங்கொடி திருப்தியாக சாபிட்டுவிட்டு அலைபேசியை இயக்கிய போது தான் நிலைமையின் விபரீதம் அவர்களுக்கு புரிந்தது.

காவியனுடன் தொடர்பை ஏற்படுத்திய பூங்கொடி தாங்கள் இராணுவத்தால் சுற்றி வளைக்கபட்டத்தை அறிவித்தாள். காவியன் உதவி அணி வரும் வரை பொறுமை காக்கும் படி கெஞ்சி கேட்டு கொண்டவாறே தானே ஒரு அணியுடன் அவள் இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக முன்னேறினான். அந்த இடத்தை நெருங்க ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது மீண்டும் அழைத்த பூங்கொடி தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அனைவரும் எதிரியிடம் பிடிபடாமல் குண்டடிக்க (நஞ்சுக்கு கூட தட்டுப்பாடான காலம் அது ) போவதாக அறிவித்தாள். தாங்கள் விட்ட பிழைக்கான தண்டனை என்று சொன்னாள். காவியன் எவளவோ சொல்லி பார்த்தான். பூங்கொடிக்கு காதலை விட காதலனின் கட்டளையை விட, கொண்ட கொள்கையும் நாட்டின் மீதான தீராதா பற்றுமே பெரிதாக பட்டது. அனைவருமே தங்கள் வயிற்றினுள் கைக்குண்டை அழுத்தி வெடித்தார்கள். இந்த நாட்டுக்காக அவர்கள் தங்களை வெடித்தார்கள் . தாங்கள் நேசித்த மண்ணுக்காக சிதறினார்கள். எந்த காதலன் முகத்தை பார்க்கலாம் என்று தாக்குதல் அணியில் இனைந்தாளோ அவன் முகத்தை கடைசி வரை பார்க்காமல் சிதறியது அவளின் உடல் மட்டும் இல்லை அவளின் காதலும் தான் ..

"வெற்றிகளுக்காக கொடுக்கப்படும் விலைகள் மிக அதிகம் . அவை வெளியிலே தெரிவதில்லை . இவர்களின் காதலும் அதற்கு விதிவிலக்கு அல்ல ."

குறிப்பு : காவியன் பிறிதொரு நாளில் தேவிபுரம் ஊடறுப்பு சமரில் காவியமானான். இதில் வரும் பெயர்கள் மட்டும் தான் கற்பனை .. இந்த சம்பவத்தில் வீரச்சாவை தழுவி கொண்ட அந்த ஏழு பெண் போராளிகளுக்கும் இந்த கதை சமர்ப்பணம்.

எனக்கு கதை எழுத தெரியாது ..இது என் முதல் எழுத்து ..பிழைகளை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா முதல் எழுத்து ...

கண்கள் குளமாகின

நன்றி ஐயா

தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை படித்தேன்...எனக்கு என்னத்தை எழுதுவது எண்டு புரியவில்லை.

அபிராம் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்..... எம்மக்களுக்கு தெரியாத இப்படி எத்தனையோ பல சம்பவங்கள் வெளிகொணரப்படவேண்டும். இப்படி எமக்காக போராடி மாவீரர்களாகிய ஒவ்வொருவருக்கும் உங்கள் எழுத்து சமர்ப்பணமாகட்டும்.

அவர்கள் மண்ணைவிட்டு போயிருக்கலாம் ஆனால் எம் மனங்களில் அவர்கள் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

அணைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்...!

"சயனைட் கூட இல்லாமல் குண்டை கட்டி வெடித்தார்கள்" நம்பவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை.இதற்குமேல் எழுதவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபிராம். ஏராளமான அர்ப்பணிப்புகளும் செய்யப்பட்டும் இறுதியில் எமது மக்களுக்கு ஒன்றும் இல்லாமல் போனது இன்றும் நெஞ்சு கனக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை காதலர்களுக்கு வீர வணக்கங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சயனைட் கூட இல்லாமல் குண்டை கட்டி வெடித்தார்கள்" நம்பவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை.இதற்குமேல் எழுதவும் முடியவில்லை.

நம்பவும் முடியவில்லை?

தாங்கவும் முடியவில்லை?

எழுதவும் முடியவில்லை?

மூண்டிலை ஒண்டும் ஏலாட்டி போர்த்துக்கொண்டு படுக்குறது தானே

எவன் வெத்திலைபாக்கு வைச்சு உங்களை இஞ்சை கூப்பிட்டவன்? :(

....... அப்போ களமாடும் புலிகள் ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு நிறைய காலம் ஆகி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு மட்டுமே உண்டு விட்டு சண்டை போட்ட காலம். பயறு அல்லது பருப்பு கலந்த சோறு இது மட்டும் தான் சாப்பாடு. அதோடு தான் பதுங்கு குழி அமைக்கவேண்டும் மரம் தறிக்க வேண்டும் கனரக ஆயுதம் தூக்கி சண்டை போட வேண்டும். புலிகள் செய்தார்கள் மக்களுக்காக .......

  • தொடங்கியவர்

கருத்துகளை பதிந்த அனைவருக்கும் நன்றி.

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது மற்றைய கதைகளைப் படித்தபின்பு தான், உங்களின் ஆக்கங்களைத் தேடிய போது கண்ட உங்களின் முதல் கதையினை இன்று படித்தேன். வெற்றி வரும் போது அதற்கான விலைகளப் பற்றி அறியமால் பாராட்டி விட்டு தோற்கும் போது அவர்களைத் தூற்றுகிறார்கள் பலர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.