Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஏன் ஓடி ஒளிச்சு திரியுறார்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முயற்சியும் பலனளிக்கவில்லை! உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடலைத் தவிர்த்தார் சம்பந்தர்

உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்துக் கொண்டார்.

இரண்டு தமிழ் தேசிய கட்சிகளையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்த உலகத் தமிழர் பேரவை தலைவர் எஸ். ஜே. இம்மாறுவேல் அவர்களால் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

அதேவேளை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தரப்பின் நியாயங்களை விளக்கியதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் வழங்கினார் என உலகத் தமிழர் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை (02/04/2010) அன்று இந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் மக்கள் கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழர் பேரவை என்ற குடையமைப்பு இயங்கி வருவது தெரிந்ததே. இந்த அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.

தாயகத்தில் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரு தமிழ்த் தேசிய அணிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியையும் அழைத்து அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்து, முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையாகச் செயற்படுமாறு அவர்களை ஊக்குவிப்பதே அக்கலந்துரையாடலின் நோக்கமாகும். அன்றைய நாளில்தான் Good Friday Appeal என்று இரு தலைவர்களுக்கும் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அருட்தந்தையின் அறிக்கையைத் தொடர்ந்து, ‘இருதரப்புடனும் இதுகுறித்துக் கலந்துரையாடினீர்களா? ஏதாவது அனுகூலமான பதில்கள் வந்தனவா?’ என தகவலறியும் பொருட்டு பேரவையினரைத் தொடர்புகொள்ள முற்பட்டபோது மேற்படித் தகவல்கள் கசிந்தன.

அன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்படி இரா. சம்பந்தனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இம்மானுவேல் அடிகளார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கஜேந்திரகுமார் அச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கமளித்தார்.

அதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த - வருவதாக ஒப்புக்கொணடிருந்த இரா. சம்பந்தன் அவர்கள் அக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பந்தன் கலந்துகொள்ளாத நிலையில் அக்கலந்துரையாடல் முடிவுற்றது என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதேவேளை, ஏற்கனவே நிகழ்ந்த சில பிரச்சனைகள் குறித்து சம்பந்தரிடம் விளக்கம் கேட்கவென சிலர் தயாராகியிருந்ததாகவும், குறிப்பாக கடந்த அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களால் எழுதப்பட்டு சம்பந்தரிடம் சேர்க்கப்பட்ட கடிதம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்படாதது, பேரவையில் உள்ளடங்கியிருக்கும் ஓரமைப்பு சம்பந்தர் அவர்களது நாட்டுக்கு வருகை தந்தபோது அவரைச் சந்திக்க விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டது, மேலும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பன தொடர்பான சந்தேகங்கள் என்பவற்றை அவரிடம் கேட்டுத் தெளிவுறும் எண்ணத்தோடு அவர்கள் சம்பந்தரை எதிர்பார்த்திருந்ததாகவும், இவற்றைத் தவிர்க்கவே அவர் அக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளாமல் இறுதிநேரத்தில் தவிர்த்தார் எனவும் பேரமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் கருதுவதாகவும் தெரிய வருகிறது.

சங்கதி.கொம்

பாதிரி கூப்பிட்ட உடன போறதுக்கு பாதிரி பெரிய கொம்போ

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரி கூப்பிட்ட உடன போறதுக்கு பாதிரி பெரிய கொம்போ

எழுத்தில் தடிப்புள்ளதண்ணா

அது நமக்கு இனி வேண்டாம்

பாதிரி கூப்பிட்ட உடன போறதுக்கு பாதிரி பெரிய கொம்போ

போகாமல் விடும் அளவுக்கு சம்பந்தன் பெரிய கொம்பு... !

பல்கலைக்களக மாணவர்களின் கலந்துரையாடல்களையும் கூட்டமைப்பு யாழில் தவிர்க்கிறது..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

போகாமல் விடும் அளவுக்கு சம்பந்தன் பெரிய கொம்பு... !

எழுத்தில் தடிப்புள்ளதண்ணா

அது நமக்கு இனி வேண்டாம்

எழுத்தில் தடிப்புள்ளதண்ணா

அது நமக்கு இனி வேண்டாம்

எங்களையே வேண்டாம் எண்ட முடிவை விட வார்த்தைகள் தடிப்பது ஒண்டும் தவறும் இல்லை...

சம்பந்தன் தமிழர் தலைநகரின் பிரதிநிதி எண்டது தெரியாதோ... இனியும் அவர்தான் பிரதிநிதி எண்டு 9ஆம் திகதி அறிவிக்க போறாங்களே... அப்ப எங்க ஓடி ஒளிக்க போறீங்கள்.....

சம்பந்தன் தமிழர் தலைநகரின் பிரதிநிதி எண்டது தெரியாதோ... இனியும் அவர்தான் பிரதிநிதி எண்டு 9ஆம் திகதி அறிவிக்க போறாங்களே... அப்ப எங்க ஓடி ஒளிக்க போறீங்கள்.....

சம்பந்தருக்கு தலைநகரில் நிரந்தரமாக அலுவலகமே இல்லையாம் எண்டு சொல்லுகினமே உண்மையோ. ? தேர்தல் வந்தால் தான் அலுவலகம் திறப்பாரம். ஊரிலை இருந்து சொன்னார்கள்.

தமிழர்களுக்கு இனி பிரதி நிதிகளே இல்லாத ஊர் எப்படி தமிழர்களின் தலைநகராகும்?

இன்னும் கொஞ்ச நாளைக்குள்ள வட்டுக்கொட்டையும் சிங்கள ஊரானாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதை செய்துட்டுத்தான் அடுத்த வேலை என்று சிங்களவன் சொல்லல

இங்கு சறம் தூக்கி கட்டி நாளாச்சு...

சக்தி எவ்.எம் இல் சம்பந்தன் ஐயாவிற்கு விளம்பரம் போகுது... கேளுங்கோ..

தமிழர்களின் தானைத் தலைவன் சம்பந்தன் அவர்களுக்கே உங்கள் வாக்கு தலை நகர காவல்தெய்வத்தை வெற்றிபெற செய்யுங்கள் என போகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ( பட்டமும் பணமும் வழங்கியோர் கனேடிய புலம்பெயர் மக்கள் என்பது சிறு குறிப்பு)

இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும்.

எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டாம் அவர்கட்கு, தங்கள் பெயரும், தாங்கள் பயன்படுத்தும் வாசகங்களும் தங்களது முகவரியை அடையாளம் காட்டுகிறது. இப்படியான வார்த்தைப்பிரயோகங்களை தாங்கள் பயன்படுத்தாதுவிட்டலே நாம் ஆச்சரியப்படவேண்டும். தவிர, உங்கள்போன்றோர்மூலமே சம்பந்தன் குழு எந்தக்கூட்டத்துடன் இணைந்திருக்கின்றது என்பது வெளிச்சமாகிறது. மேலும் இந்திய அடிவருடிகளான சம்பந்தன் தலைமையினர் இப்பொதுத்தேர்த்தலில் வெற்றிபெறுவார்களாகவிருந்தால். பின்வரும் விடையங்கள் நடைபெறும், தமிழீழமக்கள் (?), புலம்பெயர் தமிழர்கள் அநேகரது வேண்டுகோளையும் புறக்கணித்து ஆரம்பத்தில் சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தமிழர்கள், தமிழீழக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டனர், புலம்பொயர் தேசங்களில் வாழ்கின்ற, தமிழீழ விடுதலை அன்றேல் தமழர்களது சுயநிர்ணய உரிமைக்காய்க் குரல்கொடுக்கும தமிழர்கள் புலிகள் அன்றேல் புலி ஆதரவாளர், என இந்திய, மற்றும் சிறீலங்காவின் தமிழின அழிப்பாளர்கள் சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்வார்கள், அது நிச்சயமாக சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனால்தான் நாம் புலம்பெயர் தேசங்கள் தோறும் 2009 மே மாதத்திற்கு முன்பு தமிழர்களால் முன்னெடக்கப்பட்ட போராட்டங்கள் எதனையும் நாம் கண்டுகொள்ளவில்லை என சர்வதேசநாடுகளால் தமது தவறுகட்கு புது வியாக்கியானம் கூறக்கூடிய சந்தர்ப்பம் புலத்துத் தமிழர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும், இவற்றின் காரணமாக விரக்தியடைந்த புலம்பெயர் தமிழ் சமூகம் தமிழர்கான சுயநிர்ணயத்திற்கான போராட்டங்களில் தலையிடாக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிவரும். பிறகென்ன, இந்;திய சிறீலங்காவின், தமிழர்மீதான கூட்டு இனவழிப்பு நடவடிக்கை இனிதே எதுவிதத் தடங்கலுமின்றி தொடர்ந்து நடைபெறும்.

இது முன்னர் இந்தியாவில் தற்காலிகமாக குடியேறிய சம்பந்தன் அவர்கட்கு நல்ல தீனி. எல்லோரும் சுருட்டினம் நானும் னானும் சுருட்டினால் என்ன என்று த தே கூ .......

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.

எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது. இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மையானது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சக்திகளுக்கு பலமானதாகப்போய்விடும் என அஞ்சுகின்றோம். அவ்வாறான நிலைமை, எமக்கு ஏற்படுகின்ற மிகப்பாரிய பின்னடைவாகவே இருக்கும்.

அதன்காரணமாக இந்த இறுதி நிமிடத்திலும் உங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு ஒரு அணியாக போட்டியில் தேர்தலை எதிர்கொள்வதன் மூலம், துணிவுடன் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுக்கக்கூடிய வேட்பாளர்களை தெரிவுசெய்யப்படுவதை இலகுபடுத்துமாறு புலத்து தமிழ் மக்களின் சார்பாக, உலகத் தமிழர்களின் பேரவையானது வேண்டிக்கொள்கின்றது.

- என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilarkal.com/

இந்த அறிக்கையை 10 ம் திகதி விட்டால் நல்லது :huh:

10 ஆந் திகதிக்குப் பின்னென்றாலும் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழ்க் கட்சிகள் வரவேண்டும்.

வணக்கத்துக்குரிய இம்மானுவல் ஐயா அவர்கள் இந்தியாவுக்கு முதுகு சொறிஞ்சுவிடச் சொல்லுறூர். உலகத்தமிழர் பேரவை, இந்தியா தமிழர் விரோததேசம் என்பதை உணரவில்லையா அன்றேல் இன்னமும் கனவுலகில் வாழ்கின்றதா? எஸ்எம்எஸ் அணியினர் இந்தியாவின் அடிமைகள்போல் நடக்கிறார்கள். இந்தியாவும் தம்மீது விழுந்த வடுவசையை நல்லபடி துடைத்தெறியாது மீண்டும் மீண்டும் துரோகத்தின் மீதே பயணம் சொய்து எமை அழி;க்கமுனைகின்றதற்குக் போடரிக்காம்பகளாக கூட்டமைப்பின் மாறியுள்ளனர். இத்தேர்த்தலின்மூலம் தமிழர்கள் உடனடித்தீர்வினையெட்டிட முடியாது. ஆனால் நாம் இத்தேர்தலின்மூலம் உலகத்திற்கு ஒரு செய்தியினைக் கூறலாம் அதுவெதுவெனில், இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் உள்ள இந்தியா எனும்தேசத்தை நாம், எமது இனப்பிரச்சனையைத் தீர்த்துவைத்திட உதவிடும் நடுநிலைநாடாக சோக்கவில்லையென்பதையும,; மாறாக அதை ஒரு தமிழர்விரோததேசமாகவே நாம்சோக்குகிறோமென்பதையும். இத்தேர்தல் தமிழர் வாழ்வில் பாலாறும் தேனாறையும் கொண்டுவந்து சேர்க்காது. ஆனால் தமிழர் நாம் எவ்வழியில்ப் பயனிப்பது என்பதை அறியத்தருமு ஒரு கருவியாகவே இருக்கும். ஆனால் கட்டுச்சாதத்திற்குள் எலியையும் சேர்த்துக்கட்டியதுபோல் இந்தியாவையும் கைகோர்த்துக்கொண்டு போனால் உருப்பட்டமாதிரித்தான். புலம்பெயர் தேசங்களில் உலகத்தமிழர் பேரவைக்கு இருக்கின்ற ஒரேயொரு அச்சுறுத்தல் நாடுகடந்த தமிழீழ அரசமைப்பாகும். இந்த நாடுகடந்த தமிழீழ அரசை சிங்களமும் இந்தியாவும் எப்படி முடக்குவது எனத்தருணம் பார்த்துக்கொண்டிருக்கினம் ஆக புலத்தில் அரசியல்பேரம்பேசும் வலுவைஇந்தேர்தலைச் சாக்காக வைத்து நாடுகடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவடலாம் எனத்தருணம்பார்த்து உலகத்தமிழர் பேரவையும் காய்நகர்த்துகின்றது.

எட்டப்பன் கருநாநிதி போக தமிழக் குரல் என்றோ ஒருநாள் மாறும்.

அப்போ இந்தியாவும் மாறும்,

மக்கள் சிங்கள கட்சிகள் சேர்ந்த தமிழர்களுக்கு வாக்களிக்காமல் விட்டால் சரி.அவர்கள்தோற்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு அதுதான் முக்கியம்.

வெளிநாடுகள் அதை தான் பார்க்கின்றன.

தனித்துவம் அங்குதான் பார்க்க படுகிறது.

மற்றும்படி தமிழ்கட்சிகளின் ஒற்றுமை பற்றி பிறகு பார்க்கலாம்.

ஈராக்கில் இப்போ நடந்து முடிந்த தேர்தலில் சியாமுஸ்லிம் பகுதிகளில் ஒரு சுனி முஸ்லீம் வேட்பாளர் கூட வெல்லவில்லை.அதேபோல் சுனி முஸ்லீம் பகுதியில் ஒரு சியா வேட்பாளர் வெல்லவில்லை. அனால் எல்லாரும் முஸ்லீம் இனம் தான்.

இப்போ கூட்டு ஆட்சி அமைப்பதற்கு பேசி கொண்டு இருக்கிறார்கள்

இதுதான் தமிழீழ மக்களுக்கும் தேவை. தமிழ்கட்சிகள் வென்று சிங்களகட்சி தோற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.