Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

Featured Replies

மீண்டும் பூசி மெழுகும் விடயத்துக்கு அல்லது சடையல் கதைக்கே தயா வருகின்றீர்கள்.

அந்த ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்ததே இந்திய மக்கள் என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக போராடும் புலிகள் போரை எப்ப சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பினார்கள்...?? மாவீரர் நாள் உரைகளிலும் மற்றய உரைகளிலும் மிகவும் துல்லியமாக தலவர் சொல்லிய விடயம் சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்பது.. அதை முன்னர் கேள்விப்பட்டாவது இருப்பீர்களா...???

மக்கள் தெரிவு செய்த அரசு என்பதில் அந்த மக்களின் உணர்வுகளை மட்டும் தானா அந்த அரசு செயற்படுகிறது... அப்படியானால் அந்த அரசு ஏன் அடுத்த முறைகளில் மக்களால் நிராகரிக்க படும் சந்தர்ப்பங்கள் வருகிறது... எப்போதும் மக்களின் விருப்பை மட்டும் செய்பவர்கள் தானே..?? அவர்களை ஏன் மக்கள் வெளியேற்றி புதியவர்களை கொண்டு வருகிறார்கள்....??

நீங்கள் சொல்வது போல பார்த்தால் மக்களால் ஒரு முறை தெரிவு செய்ய பட்ட அரசு ஒரு நாளும் மாறாமல் அப்படியே அரசர்களின் ஆட்ச்சி போல நிரந்தரமாக இருக்க வேண்டும்... அப்படி நடப்பது இல்லை... அப்படி எண்றால் மக்களின் விருப்புக்கு மாறாக செயற்படுவதால் எனும் முடிவுக்கு வரலாமா..? இல்லையா...??

ராஜீவ் படுகொலைக்கு முன்னர் எமக்கு இருந்த அனுதாப அலை பின்னர் ஏன் இல்லாமற் போய்விட்டது? இதனை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கத் துணியவில்லை?

தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து ஏன் எமக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் தடையாக இருந்தார்கள் என்றா கூறப் போகின்றீர்கள்? இல்லையே, மக்களின் மன உணர்வுகளை அறிந்துதான் அந்த அந்த மாநில அரசு இருக்கும். மாநில அரசுகளின் உணர்வுகளை அறிந்துதான் இந்திய அரசு இருக்கும்; நடவடிக்கை எடுக்கும்.

இராசீவ் கொலையை புலிகள் செய்தார்கள் எண்றால் புலிகளை மட்டும் குறிவைத்து இந்திய அரசு செயற்பட்டு இருக்க வேண்டும்... ஆனால் தமிழீழ மக்களின் மீது ஒட்டு மொத்தமாக இந்திய மக்கள் கவனைத்தை திருப்பவில்லை என்பது கொஞ்சமும் உங்களுக்கு வித்தியாசமாக படவில்லையா...??

தமிழீழ ஆதரவாக யார் இருந்தாலும் இந்திய அதிகாரம் கொடுத்த தொல்லைகள் தான் தமிழக மக்களை பிச்சை வேண்டாம் நாயை பிடி எனும் நிலைக்கு கொண்டு வந்தது... புலிகள் மீது குற்றம் நிரூபிக்க பட முன்னரே தடையை கொண்டு வந்து கண்ணில் பட்டவன் எல்லாரையும் கைது செய்து அடைத்து வைத்து செய்ய கொடுமைகளை நீங்கள் அறியாமல் இருக்கலாம்...

இதையும் மீறி தமிழக மக்களிடம் ஈழத்தமிழர் மீது அனுதாபமே இருக்க வில்லை என்பது உங்களின் அறியாமையே...

நீங்கள் ஒரு விடயத்தினைக் கூறியிருந்தீர்கள். இந்திய அரசுடன்தான் எமக்குப் பிரச்சினை. அந்த மக்களுடன் அல்ல. அப்படியாயின் ஏன் புலத்தில் உள்ளவர்கள் தமிழ்த் திரைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றை புறக்கணியுங்கள் எனக் கூக்குரலிட்டனர்.

அந்தத் திரைப்படங்களை தயாரிப்பது, இயக்குவது தமிழர்கள் அல்லவா? உங்களின் கருத்துக்கள் முரண்பாடாக உங்களுக்கே தோன்றவில்லையா தயா?

புலத்தில் உள்ளவர்கள் குக்குரல் இடுவதில் எனக்கு எப்போதும் எந்த உடன்பாடும் இருந்தது கிடையாது.... நான் ஆதரித்ததும் கிடையாது...

தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பாருங்கள் எமது சாபக்கேடு, நாம் தவறே செய்யவில்லை. நாம் எல்லாம் உத்தமர்கள் என்றல்லவா கருதிக்கொண்டு எழுதி வருகின்றீர்கள்.

தவறுகள் என்பது சித்தரிக்க பட்ட தவறுகளாக இல்லாத இடத்து நாங்கள் திருந்த முடியும்... ஆனால் எங்களின் மீது சொல்ல பட்ட குற்றச்சாட்டுகளில் பலவும் ஊடக பலங்களோடு எங்கள் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்...

Edited by தயா

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கும் இனவாத அரசுக்கும் தான் எப்போதும் போர் நடந்து கொண்டு இருந்ததே தவிர சிங்களவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் போர் நடக்க வில்லை.... அதே போல தான் இந்திய ஆழும் வர்க்கத்துடன் தான் பிரச்சினையே தவிர இந்திய மக்களுடன் இல்லை... இதை புரிய உங்களால் முடியும் எண்றால் எங்களுக்கு நேரம் மிச்சம்...

தலைப்புக்கும் கருத்துக்கும் தொடர்பு இல்லாட்டிலும் .......

தமிழருக்கும் சிங்களவருக்கும் சண்டை இல்லயாம், தமிழருக்கும் அரசுக்கும் இடையிலகூட சண்டை இல்லயாம், புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலதான் சண்டையாம். உப்பிடி சொல்லித்தான் உலக ஆதரவு கேட்டு உலகம் ஆதரவு குடுத்ததாம் எண்டு உங்கின எங்கயோ வாசிச்சன். முள்ளிவாய்க்காலில முடிஞ்சத பாக்க ஆய்வாளர் செல்லுறது சரியா இருக்கலாம் எண்டு தோனுது. :(

தமிழர்கள் தம்மை தமது இனத்தை நிலத்தை அடையாளம் காண முடியாதவாறு அவர்களைக் கட்டிப்போட்டுள்ள இந்திய, திராவிட மற்றும் இதர தேசிய மாயைகளில் இருந்து அவர்களை வெளிக்கொணராமல்.. தமிழர்களின் இனத்துவத்தை தமிழர்களுக்கு புரிய வைக்க முடியாது. மற்றையவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் தங்கள் இனத்துவத்தை காக்க முற்படும் போது தமிழர்கள் ஏன் தமதை இழப்பதில் திருப்தி கொள்கின்றனரோ..???!

தமிழர்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள.. இந்திய தேசிய மாயை தகர்ப்பட்ட வேண்டும். திராவிட மாயை தகர்ப்பட்ட வேண்டும். அவற்றை தகர்க்காமல் தமிழர்களை இந்திய மற்றும் திராவிட மாயைகளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு தமிழ் தேசிய இனத்தினராக அவர்களை உணர்வுறச் செய்ய முடியாது.

தமிழர்களை உணர்வுறச் செய்து ஒருங்கிணைக்காமல்.. தமிழர்கள் இந்த உலகில் பாதுகாப்புப் பெற முடியாது. இதைச் செய்யத் தவறின் தமிழினம் என்பது இன்னும் சில காலத்தில் முற்றாக அதன் இனத்துவம் இழந்து இதர அடையாளங்களால் போலி அடையாளம் இடப்பட்டு.. இதர இனக்குழுமங்களுக்குள் அடக்கப்பட்டு விடும் அல்லது நசுக்கப்பட்டு விடும்.

திராவிடம் பற்றியும், இந்திய தேசியம் பற்றியும் வேறு எந்த தென் மானில்த்திலும் பேசுவதில்லை,இந்த் திராவிடக் கொள்கையே மதம் மாற்றும் குழுக்களால் தான் ஊக்குவிக்கப்பட்டது :(:(:(

தலைப்புக்கும் கருத்துக்கும் தொடர்பு இல்லாட்டிலும் .......

தமிழருக்கும் சிங்களவருக்கும் சண்டை இல்லயாம், தமிழருக்கும் அரசுக்கும் இடையிலகூட சண்டை இல்லயாம், புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலதான் சண்டையாம். உப்பிடி சொல்லித்தான் உலக ஆதரவு கேட்டு உலகம் ஆதரவு குடுத்ததாம் எண்டு உங்கின எங்கயோ வாசிச்சன். முள்ளிவாய்க்காலில முடிஞ்சத பாக்க ஆய்வாளர் செல்லுறது சரியா இருக்கலாம் எண்டு தோனுது. :(

தமிழர்களுக்கும் அரசுக்கும் சண்டை எண்டுதான் வந்திருக்க வேண்டும்... ஆனால் எப்பவும் சண்டை புலிகளுக்கும் அரசுக்கும் தான் நடந்தது... புலியை அடிக்க அரசு எப்பவும் சனத்தை அடித்து வீரத்தை வெளிப்படுத்தினது... புலிகளின் பலவீனமும் அந்த மக்கள்தான் என்பதால் அது அரசாங்க தரப்பால் சரியாக கொள்ளவும் பட்டது...

ஏன் அதுக்கும் மேலை அரசாங்கத்தை நல்லவர்களாக காட்டும் சிலர் அவர்கள் மக்களை கொலை செய்ததை ஒருநாளும் கண்டிச்சது கிடையாது... ஆனால் மக்களுக்காக போராடின புலிகளை கண்டுப்பினம்... அரசாங்கம் உலகத்துக்கு காட்ட செய்யும் சில நல்லதுகளை தூக்கி பிடிப்பினம்... இப்படி தான் இருக்கிறது எங்கட மாற்று கருத்து தமிழ் நாய்கள்...

புலத்து ஊடகத்துறையும், தமிழீழ விடுதலைப்போரட்டமும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் படுகொலைக்கு முன்னர் எமக்கு இருந்த அனுதாப அலை பின்னர் ஏன் இல்லாமற் போய்விட்டது? இதனை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கத் துணியவில்லை?

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1)1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறி பெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

(2)பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

(3)ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

(4) சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

(5)தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

(6)1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.அதை ஏன் விசாரிக்கவில்லை..

(7) வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?அவர்களை விசாரிக்க முதலில் மனு போட திரணி உண்டா இவர்களுக்கு?

(8) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது காங்கிரசு களவாணிகள் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?சிறிபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. சிறி பெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்..

(9) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(10) கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த பன்னாட்டு அரசியல் மாமா சப்புரமணி சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(11) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே போபர்சு ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

(12) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(13) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலசுதீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(14) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(15) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(16) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(17) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் கருநாடக போலீசார் சாகடித்தது எதற்காக?

(18) புலனாய்வு செய்த புண்ணாக்குகளிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(19) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் விசாரிக்கவில்லை.

(20) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

(21)சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?

(22)திருபெரும்புதூர் உள்ள காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள்.

லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?

(23)திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

ஆனால் இதுவரையில் மரகதம் சந்திரசேகர் மௌனமாக இருக்கிறார். ஏன்?

(24) மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?

(25)ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?

(26) உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?

(27) வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?

-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள முண்டங்களே விடை கூறுங்கள்..இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா? ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

எனவே ராஜிவை கொன்றது முன்னாள் ஒட்டல் சப்ளையரும் அவர்தம் பாய் பிரண்டும் என உறுதியாக தெரிகிறது....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஒன்டு சொல்லுறன் குற நெக்காதீங்கோ...

மலேஷியாவில இருந்து தமிழ்நாட்டுக்கு வைத்தியம் பாக்கப்போன ஒரேஆள் பார்வதியம்மாவாகத்தான் இருக்கமுடியும்..

இது தமிழ்நாட்டு கருங்காலி அரசியல்வாதிகளின் கொல்மால் போலதான் இருக்கு..... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் மே 19 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப்பின்னர் எத்தனையோ போராளிகள் மற்றும் அவர்களினது குடும்பங்கள் மன்னார் ஊடாக இந்தியா தப்பிச் சென்று பல நாடுகளுக்கும் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இவை எல்லாம் இந்தியாவுக்கு தெரியாது என்று யாரும் கனவு காணாதீர்கள். இந்தியா மறைமுக மனிதாபிமான அடிப்படையில் கண்டும் காணாது விட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

7.30 மணி முதல் 2.30 மணி வரை தாக்கினார்கள் - அக‌திக‌ள் கடித‌ம்

M_Id_76777_Sonia-Gandhi_M-Karunanidhi.jpg

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் எழுதிய கடிதம் இங்கே அப்படியே அளிக்கப்படுகிறது.

மதிப்பிற்குரிய ஐயா,

நா‌ம் அனைவரும் இலங்கையில் ஏற்பட்ட இனவெறி யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் வந்து அகதிமுகாம்களிலும் திறந்தவெளி அகதிமுகாம்களிலும் முறையாக பதிவு செய்து வாழ்ந்து வந்த எம்மை குரோதம் காரணமாகவும் சந்தேகத்தின் பேரிலும் கியூ பிரிவு காவ‌ல் துறையினர் கைது செய்து பலதரப்பட்ட வழக்குகளை எம்மீது ஜோடித்து புழல், திருச்சி, மதுரை ஆகிய சிறைகளில் அவரவர் இடத்திற்கேற்றால் போல் அடைக்கப்பட்டோம். பின் பல சிரமங்களிற்கு மத்தியிலும் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் பல இலட்சங்கள் ரூபாய் வரை செலவழித்து எமது குடும்பத்தார் பிணையில் எடுத்தார்கள். பிணையில் வெளி வந்தவர்களையும் வழக்கு முடிந்து வந்தவர்களையும் சிறைவாசலில் வைத்தே மீண்டும் கியூ பிரிவு காவ‌ல் துறையினர் கைது செய்து அயல் நாட்டார் சட்டமான 3(2) வெளியில் வாழமுடியாத சட்டத்தினை எம்மீது திணித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு எனும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டோம்.

அயல் நாட்டார் சட்டம் என்பது, ஒரு சிங்களவனுக்கு அல்லது பிற நாட்டவனுக்கோ பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது. அனால், ஈழத்தமிழனுக்கு அகதியாக வந்து அகதியாக அங்கீகரிக்கப்பட்டு வெளிப்பதிவில் வாழ அனுமதிக்கப்பட்டு சகல பதிவுகளுடன் இருந்தும் பல வருடங்களாக வாழ்ந்தவனையும் மன விரோதம் காரணமாக உள்நோக்கத்துடன் எந்தவித தயவு தாட்சனம் இன்றி கைது செய்து அயல் நாட்டார் சட்டம் பயன்படுத்தி சிறையில் அடைத்துவிடுகின்றார்கள்.

செங்கல்பட்டு கிளைச் சிறையில் இருந்தும் எம்மில் பல பேருக்கு பலவருட காலமாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் அதேபோல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவ‌ர்களுக்கு முறையாக குறிப்பிட்ட திகதியில் வழிக்காவல் துணையுடன் நீதிமன்றம் அழைத்துச் செல்வதிலும் தாமதங்கள் ஏற்படுத்தி, பல பேரை அழைத்து செல்லாமல் பிடிவாரண்ட் போட செய்து திரும்பவும் அவர்கள் முதலில் அடைக்கப்பட்ட அதே சிறையில் அடைத்து வைப்பதிலும் பல கஸ்டங்களை உண்டு பண்ணி மனழுத்தத்தை தந்து குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேலாக எம்மீது அமர்த்தப்பட்ட வழக்குகள் நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு பலவருடங்களாக எம் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் நாங்கள் அனைவரும் எமது விடுதலையை வலியுறுத்தி அதாவது எம்மில் பல பேரின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றார்கள். அவர்களுடன் வெளியில் நாமும் தங்கியிருந்து எம்மீது அவர்த்தப்பட்டு இருக்கும் வழக்குகளை முடிக்கிறோம் என்பதை கோரிக்கையாக வைத்து கடந்த 2009 ஜூலை மாதம் ஏழுநாட்கள் உண்ணாவிரம் இருந்தோம். இதில் ஒரு சில நாட்களில் மட்டுமே ஒரு சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். (எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கு தகுந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை) ஏழாவது நாளில் ஒரு சில அதிகாரிகள் வருகை தந்து உங்களை விடுதலை செய்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும் இரண்டு மாதத்திற்குள் உங்கள் விடுதலைக்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் நம்பிக்கை வார்த்தைகள் அளித்தமையால் எமது உண்ணாவிரத போராட்டத்தை ஏழாவது நாளில் கைவிட்டோம்.

ஆனால், எமக்கு அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வாக்கு நிறைவேறாத பட்சத்தில் நாம் மீண்டும் 20.09.09 அன்று முன்னர் குறிப்பிட்ட கோரிக்கைகளை வைத்தே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் கைவிடும்படி வலியுறுத்தினார்களே தவிர எமது கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இதனால், பத்தாவது நாளிலும் பன்னிரண்டாவது நாளிலும் உண்ணாவிரதம் இருந்த ஏழுபேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அதன்பின்னர், மீதமுள்ளவர்கள் நீராகாரம் எதுவும் அருந்தாமல் மூன்று நாட்கள் இருந்தபோது குறிப்பிட்ட அதிகாரிகள் சிலர் வந்து முன்னர் இருந்த உண்ணாவிரதத்தில் கூறியது போல் இரண்டாவது உண்ணாவிரத போராட்டத்திலும் எமது வழக்குகள் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி மூன்று மாதத்திற்குள் நல்ல முடிவு கூறுவதாக அவகாரம் கொடுக்கப்பட்டது.

திரும்பவும் எமக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காதபட்சத்தில் கடந்த 18.01.10 அன்று நாம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் நாம் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் போது தான் ஒரு சில அதிகாரிகள் முகாமை வந்து பார்வையிடுவது வழக்கம். இதற்காக எமது வழக்குகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்த மூன்றாவது நாள் 20.01.10 அன்று நாம் எமது முகாம் கதவை அடைத்து பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தாமல் எமது உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். இதன் பலனாக பல அதிகாரிகள் வருகை தந்து எமது கோரிக்கைகளை ஏற்று பத்து நாட்களில் தீர்வு சொல்வதாக கூறிச்சென்றனர். (முதல் மூன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஏமாற்றப்பட்டது போல) பின்னர் 01.02.10 அன்று நான்காவது உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் உண்ணாவிரதம் இருந்து இரண்டாவது நாள் நகரகாவல் அதிகாரியான ஆல்பிரட் வின்சன் என்பவர் எமது கோரிக்கைகளை எதுவும் நிறைவேறாது என்று கூறியதால் நாம் மனமுடைந்த நிலையில் நாம் அனைத்தும் மீண்டுமொரு உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். 02.02.10 அன்று மாலையளவில் காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் விளைவிக்காமல் முகாமினுள் உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது போராட்டத்தை ஏற்காமல் கொச்சைப்படுத்தும் விதத்தில் திடீரென்று எமது முகாம் அவர் மீது ஏணி வைத்து ஏறி எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் (இருபத்தைந்து பேர் சாதாரண உடையணிந்த காவலர்கள் மற்றும் கியூபிரிவினர் உட்பட) எமது முகாமிற்குள் இறங்கி அதாவது ஏற்கனவே திட்டமிட்டது போல் எந்தவித ஒரு பேச்சுக்கும் இடமளிக்காமல் அவர்கள் கொண்டுவந்த லத்தி உருட்டுக்கட்டைகளால் முகாமில் இருந்த பல பேருக்கு இரத்தகாயங்கள் ஏற்படும் அளவுக்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டோம். இதனால் நாம் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு எமது அறைகளுக்குள் ஓடி ஒழிந்த போது, கியூபிரிவு குமார் என்பவரால் அடையாளம் காட்டப்பட்டு எம்மை எமது அறையில் இருந்து பலவந்தமாக வெளியில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்து முகாம் முற்றத்தில் உள்ள மரத்தடியில் முட்டிபோட்டு உட்கார வைத்தனர்.

photos%5CN2009011156.jpg

பின்னர் ஒவ்வொருவரின் பெயர்களை தனித்தனியாக அழைத்து எம்மை சுற்று சுமாராக பத்து காவலர்கள் (சேவியர் தன்ராஜ் - எ.எஸ்.பி, நகரகாவல் அதிகாரி அல்பிரட்வின்சன் பதில் அதிகாரி, ராஜேந்திர பிரசாத் ஓட்டுனர் ரமேஷ், முனியாண்டி, எஸ்.பி ஏட்டு, அன்று முகாம் கடமையில் இருந்த அதிகாரி அவருடன் இருந்த காவலர்கள், எஸ்.ஐ கியூபிரிவு காவ‌லர், எ.ஏஸ்.பி. காவலர்கள், எஸ்.பி காவலர்கள்) சுற்றி நின்று கதறக்கதற ஜீரணிக்க முடியாத பிறப்பை இழுவுபடுத்தும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் (அக்கா, அம்மா, தங்கை, மனைவி போன்றோர்களை ச‌ம்மந்தபடுத்தி) திட்டி அடித்தனர். அதுமட்டும் இன்றி சில பேர் போதையிலும் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் என்று கூட பாராமல் தலையிலும் ரமணன் என்பவருக்கு உக்காரவைத்து அவரது ஆண்குறியிலும் பூட்ஸ் காலால் மிதித்து அடித்தார்கள். நாம் விடுதலை கேட்பதற்காகவும் குற்றப்பத்திர்கை தாக்கல் செய்யச்சொல்லி கேட்டதற்காகவும் மருத்துவமனை சென்றுவர வழிக்காவல் கேட்டதற்காகவும் தாம் அனைவரும் அடிப்பதாக காரணம் சொன்னார்கள். அடித்ததோடு மட்டுமல்லாமல் “நீங்கள் அனைவரும் இரண்டு வருடத்திற்கு வெளியில் வராதபடி ஓர் வழக்கையும் தொடரப்போவதாக” கூறி எம்மீது பொய்யான வழக்கை தாராளமாக பல பிரிவுகளில் பதிவு செய்தார்கள்.

பின்னர், பெயர்களை அழைத்து அடித்து உதைத்த பின்னர் எம்மை உட்கார வைத்துவிட்டு எமது உடமைகள் அனைத்தையும் எம் கண்முன்னே சூறையாடி எம்மை உட்கார வைத்து மாறி மாறி எந்தவித கேள்வியும் இன்றி மாறிமாறி அடித்தனர். அதாவது இரவு 7.30 தொடக்கம் அதிகாலை 2.30 மணிவரை இந்த துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டு இருந்தது. பின்னர் எங்களை காவலர்களின் வாகனத்தில் ஏற அழைத்துச் செல்லும் போது எம்மை வரிசையில் விட்டு இரண்டு கரையில் காவலர்கள் நின்று கொண்டு அடித்து அடித்தே ஏற்றினர்கள். இச்சம்பவம் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையிலேயே நடந்தது. இந்த தாசில்தார் எமது ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டத்திலும் வந்து வாக்குறுதிகள் தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கைவிலங்கிட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காவலர்கள் அடித்த விபரங்களை கூறக்கூடாது என்று லத்தியாலும் பூட்ஸ் காலாலும் அடித்து உதைத்தே மருத்துவரிடம் கூட்டிச்சென்றார்கள். பி.பி மட்டுமே பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள். பின்னர் 03.02.10 அதிகாலை செங்கல்பட்டு ஜே.எம்.ஐ நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது நாம் அணிந்திருந்த காலணிகள் அனைத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து பறித்து எறிந்து விட்டுத்தான் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். அதே நேரம் நீதிபதி அவர்களும் எம் அனைவரையும் எந்த கேள்விகளும் கேட்கவில்லை. எம்மை கூட்டிச்சென்ற காவலர்களும் எமது கையில் விலங்கிட்ட விலங்கை கழட்டி வலப்பக்கம் (எம்மில் ஒரு சிலரிடம்) அழுத்தி பிடித்து எதுவும் நீதிபதியிடம் கூறக்கூடாது. மீறி கூறினால் வாகனத்தில் வைத்து எமது கால்களை உடைப்போம் என்று மிரட்டினார்கள். அதனில் எமக்கு நடந்த கொடூர சம்பத்தை நீதிபதி முன் கூற முடியவில்லை.

நீதிபதி முன் ஆஜர்படுத்தி கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றிய பின்னரும் எம் அனைவரையும் அடித்து துன்புறுத்தி கையொப்பம் இட வற்புறுத்தி சில பத்திரங்களில் கையொப்பம் பெற்றார்கள் அதோடு எம்மை ஏற்றிய வாகனம் புழல் மத்திய சிறைக்கு சென்று கொண்டிருந்த போது எமது எமது உள்ளாடைகளை கழட்டிவீசும்படி அடித்தார்கள். புழல் மத்திய சிறையில் சிங்கள மீனவர்கள் இருப்பதால் எமக்கும் அவர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படும் என்று அங்கு அடைக்காமல் பின்னர் திரும்ப வேலூர் சிறையை நோக்கி எம்மை கொண்டு வரும்போது எம்மில் ஒரு சிலர் உண்ணாவிரதம் இருந்ததனால் மிகவும் சோர்வாக இருந்தார்கள் அவர்களுக்கும் ஒரு சொட்டு தண்ணீரோ சாப்பாடோ எதுவும் கொடுக்கவில்லை. எம் கையில் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டார்கள். இதுமட்டும் இன்றி எம்மில் ஒரு சிலரில் சோர்வாக சாய்ந்தவர்களை அடித்து அடித்தே வேலூர் சிறையை நோக்கி கொண்டு வந்து பகல் 12 மணியளவில் சிறையில் இறக்கிவிட்டார்கள்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை யாதெனில் இதுவரை விடுதலை செய்யப்பட்டவர்களில் கடந்த உண்ணாவிரதங்களில் மிக தீவிரமாக முன்னின்று நடத்தியவர்கள் யாரும் (பழிவாங்கும் நோக்குடன்) விடுதலை செய்யப்படவில்லை. அதே நேரம் இச்சம்பவத்தில் பழைய உண்ணாவிரத போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர்கள் பெயர் சொல்லி அழைத்து அடித்து துன்புறுத்தினார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.

எம்மை அடித்தால் எமக்காக எந்த நாய் குரல் கொடுக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லி சொல்லி அடித்தார்கள். இதனால் இவர்கள் கூறிய இக்கூற்றை தயவு செய்து உண்மையாக்கிடாதீர்கள்.

நீங்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து கொண்டு வவுனியாவில் இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களின் முற்கம்பி வேலியை அகற்ற முடியவில்லை. அவர்களை விடுதலை செய்து காப்பாற்ற முடியவில்லை. செங்கல்பட்டில் உறவுகள் இழந்து, உடமைகள் இழந்து, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமை நிராகரிக்கப்பட்டு, பெரும் துயரங்களுடன் வாழும் உங்கள் தொப்புள்கொடி உறவுகளை அடைத்து வைத்திருக்கும் முற்கம்பி வேலியையாவது அகற்றிவிடுங்கள்.

நாட்டில் நடந்தேறிய இறுதி கொடிய இராணுவ நடவடிக்கை காரணமாக எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் பட்ட அவலங்களை போல் ஒரே இரவில் எமது பொருட்கள் சூறையாடப்பட்டு அனாதைகளாக பொய்வழக்குகள் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். நாம் அங்கு அனுபவிக்க தவறிய துன்பங்களை இங்கு அனுபவித்து விட்டோம்.

அன்பான உறவுகளே! எமது இந்த துன்ப துயரத்திற்கு பிறகாவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு மட்டும் பயன்படுத்தப்படும் அயல் நாட்டார் சட்டத்தில் 3(2) இருந்து விடுதலை பெற அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆவன செய்து எம்மை வந்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வேலூர் சிறையில் காத்திருக்கின்றோம்.

நன்றி: ஈழதமிழர்களின் கடித்ததை வெளியிட்ட தமிழ்வெப்துனியா இணையத்திற்கு..

போலீஸார் தாக்குதலின் போது பயன்படுத்திய திருவாசகங்கள் :

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா..

செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது

பேசியவார்த்தைகள்.

நன்றி:சங்கதி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

போலீஸார் தாக்குதலின் போது பயன்படுத்திய திருவாசகங்கள் :

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா..

செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது

பேசியவார்த்தைகள்.

நன்றி:சங்கதி

சில கசப்பான உண்மைகளை சிலர் எப்போதும் உணர விரும்புவதில்லை. அப்படி உணர்ந்தாலும் அதை அறிவுக்கு கொண்டு செல்வதும் இல்லை. இன்னும் இதியாவே பழி எனக்கிடக்கும் பலர் இன்னும் ஈழத்தமிழர் மத்தியில் இருக்கிறார்கள் எனும் உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இந்தியா எனும் மாயையை தமிழர்கள் தாண்டாத வரைக்கு விடிவு எண்டது கிடையவே கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு சொல்லுறன் குற நெக்காதீங்கோ...

மலேஷியாவில இருந்து தமிழ்நாட்டுக்கு வைத்தியம் பாக்கப்போன ஒரேஆள் பார்வதியம்மாவாகத்தான் இருக்கமுடியும்..

இது தமிழ்நாட்டு கருங்காலி அரசியல்வாதிகளின் கொல்மால் போலதான் இருக்கு..... :(

ஆனால் பொந்திய கைத்தடிகள் சொல்லாமல் யாரும் உள்ளே விடபோவதில்லை .... பார்த்தீர்களோ இவர்கள்தானே தெற்காசிய பேட்டை ரவுடி....... மேற்குலகிற்குள் அழைத்து சென்றிருக்கலாம்... ஆனால் அங்கும் பொந்தியத்தின் அரக்க கரம் நீளுமோ என்னவோ????

மேற்குலகிற்குள் அழைத்து சென்றிருக்கலாம்... ஆனால் அங்கும் பொந்தியத்தின் அரக்க கரம் நீளுமோ என்னவோ????

குறிப்பிட்ட மேற்க்குலக நாடுகளில் இருக்கும் மருத்துவ வசதிகளை விட மலேஷியாவில் அதிக வசதிகள் இருக்குது...

எல்லாம் பம்மாத்து... :(

நான் நினைக்கிறேன்.. தலைவரின் அம்மா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் பயமுறுத்தி அல்லது ஏமாத்தி அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்..... ஷோ காட்ட... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட மேற்க்குலக நாடுகளில் இருக்கும் மருத்துவ வசதிகளை விட மலேஷியாவில் அதிக வசதிகள் இருக்குது...

எல்லாம் பம்மாத்து... :(

நான் நினைக்கிறேன்.. தலைவரின் அம்மா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் பயமுறுத்தி அல்லது ஏமாத்தி அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்..... ஷோ காட்ட... :(

ஆம் தோழர் ஏதோ உள்குத்து இருக்கும் தான் இருக்கிறது ....முதலில் அனுமதி அளித்துவிட்டு பிறகு தடுப்பது ம்ம்ம்.....

ஈழத்தை காட்டி ஓட்டு பொறுக்கும்.... மைக் செட் மணியாட்டிகள் உள்ளார்கள் இங்கும் உள்ளார்கள் அல்ல்வா????

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது மனிதநேயமற்ற செயல் - திருமாவளவன்

இவனுங்கள் எதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று முதலில் இவனுங்களுக்கே தெரியாது..... இங்கு அவனவன் ஈழ சிக்கலை ஆச்சி ஊறுகாயை போல் தொட்டு கொள்கிறான்... ஒருத்தர் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்... இதற்காக உண்ணவிரதம் இருக்க போறாராம்... இன்னுமோர் கைத்தடி.... அறிக்கை விட்டு அட்டகாசம் செய்கிறது... இன்னும் ஒருவர் கண்டணம் தெரிவிக்கிறார்... இவனுங்க கண்டனமெல்லாம் கேட்டு ஐ.நா சபையெ ஆடி போய் இவர்களை உடனே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துமென்றால் .... இவர்கள் பவுசை பார்த்து கொள்ளுங்களேன்....

ஆனால் இதில் கட்டாயம் சிங்களவன் - இந்திய தேர்தல் கங்காணிகள் கூட்டு உள்ளது தோழரெ பனங்காய்... ஏனெனில் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தது.....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...முதலில் அனுமதி அளித்துவிட்டு பிறகு தடுப்பது ம்ம்ம்.....

இங்கே விசா கொடுத்ததை நாட்டுக்குள் அனுமதிப்பதர்ற்கு ஒத்தமாதிரியான செயல் என்று பலரும் பேசுகிறார்கள்.ஏன் எழுதுகிறேன், என்றால் இங்கே எனக்கு தெரிந்த ஒருவருடன் கதைத்தபோது அவரும் இதை சொன்னபடியால். விசா உம் நாட்டுக்கு உள் அனுமதிப்பதும் வெவ்வேறான செயற்பாடுகள்...விசா உள்ள எல்லோரும் குறித்த நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை ...எங்கள் திருப்பதிக்கு இரண்டையும் ஒன்று என நாங்கள் கதைக்கலாம்.

என்னுடைய கருத்தும் மேலே சிலர்/ பலர் சொன்னமாதிரி என்ன நோக்கத்திற்காய் இந்தியாவை தெரிவு செய்தார்கள்.....மனிதம் செத்த இடத்தில் மானிதாபினத்தை தேட மனிதாபிமானம் அற்றவர்கள் செய்யும் மனிதாபிமானம் அற்ற செயல்....

என்னுடைய கருத்தும் மேலே சிலர்/ பலர் சொன்னமாதிரி என்ன நோக்கத்திற்காய் இந்தியாவை தெரிவு செய்தார்கள்.....மனிதம் செத்த இடத்தில் மானிதாபினத்தை தேட மனிதாபிமானம் அற்றவர்கள் செய்யும் மனிதாபிமானம் அற்ற செயல்....

பார்வதி அம்மாவுக்கு பிள்ளைகள் யாரும் மலேசியா / சிங்கப்பூரில் இல்லை. ஆனால் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். சரி இப்ப அந்த அம்மா தன் பிள்ளை இருக்கும் இடத்தில் போய் இருக்க முடியுமா முடியாதா.?

நுளைவு நிராகரிக்கப்பட்ட அம்மா இதுக்கும் முன்னர் இந்தியாவில் இருந்தவர் தானே. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுளைவு நிராகரிக்கப்பட்ட அம்மா இதுக்கும் முன்னர் இந்தியாவில் இருந்தவர் தானே. ?

ஒரு முறை ஒரு நாட்டில் முன்னர் இருந்தவர் இன்னுமொருமுறை மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு விதியும், சட்டமும் இல்லை...நல்ல உதாரணம்: லண்டன் இல் ஸ்டுடென்ட் விசா இல் இருப்பவர்கள்..அருகே பிரான்ஸ் க்கு போனால். சில சந்தர்பங்களில் அங்கிருந்தே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருகிறார்கள்.. .எனவே இந்தியாவில் முன்பு இருந்தது என்பது இம்முறை ஆட்டோமாடிக் ஆக அனுமதிக்கிற சந்தர்பம் என எண்ண வேண்டாம்...

பார்வதி அம்மாவுக்கு பிள்ளைகள் யாரும் மலேசியா / சிங்கப்பூரில் இல்லை. ஆனால் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். சரி இப்ப அந்த அம்மா தன் பிள்ளை இருக்கும் இடத்தில் போய் இருக்க முடியுமா முடியாதா.?

இதன் படி பார்த்தால் இந்தியாவை மட்டும் ஏன் குறைபட வேண்டும்...கனடாவிலும் ஒரு மகள் உள்ளார், பிரான்ஸ்/ ஜெர்மனி இல்லும் ஒரு மகன் உள்ளார்...அந்த நாடுகளிலும் முயற்சி செய்திருக்கலாமே..அந்த நாடுகளில் உள்ள அவர்களுது பிள்ளைகள் அவரது தாயை பார்பதற்கு ஏன் வசதி செய்து கொடுக்கவில்லை என்று அந்த நாடுகளையும் அல்லவா நாங்கள் குறைப்பட வேண்டும்..கனடா அனுமதிக்காட்டி ஒரு சட்டம், இந்திய அனுமதிக்காட்டி ஒரு சட்டம்!!!

என்னை பொறுத்தவரையில், இங்கே சில ஆட்களுக்கு இந்தியாவையும், எல்லாவல் மேலானத தேரையும் , வைகோ , சீமான் , கருணாதி , சோனியா டக்லஸ், பிள்ளையான், சம்பந்தன், கஜேந்திர்கள், சுப்பரமனியசுவாமி ....விட்டால் செய்தி இல்லை/ பொழுது இல்லை.. இவர்களை தவிர யார் செய்தி என்று சிலர் கேட்பார்கள்...அங்குள்ள மக்களை பற்றி எழுதுங்கள்...இந்த பார்வதி அம்மா படுகிற அல்லல்களை போன்ற அல்லல்களைதான் சாத்திரி........ எழுதுகிற கதைகளில் வருபர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள்..அதே போன்ற கதைகளை வெளிக்கொணர பாருங்கள்...அவர்களுக்காய் ஏதாவது செய்யலாமா என திட்டம் திட்டுங்கள், பட்டிமன்றங்கள் , வழக்காடு மன்றங்கள் போடுங்கள்..அதையும் தமிழ் நாடு சட்டசபையில் எதிரொலிக்க செயுங்கள்...

முடிவாக அந்த வயோதிப, நோய்வாய்பட்ட தாய், கணவனை இழந்த தாய் அடைகிற வேதனை யாவரும் உணர்கிறோம்..ஏலக்கூடிய எலாவற்றையும் செய்வோம்..ஆனால் அதையே ஒரு காழ்புணர்ச்சிமாதிரி மற்றவர்களை தூற்ற பயன்படுத்த வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ஒரு நாட்டில் முன்னர் இருந்தவர் இன்னுமொருமுறை மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு விதியும், சட்டமும் இல்லை...நல்ல உதாரணம்: லண்டன் இல் ஸ்டுடென்ட் விசா இல் இருப்பவர்கள்..அருகே பிரான்ஸ் க்கு போனால். சில சந்தர்பங்களில் அங்கிருந்தே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருகிறார்கள்.. .எனவே இந்தியாவில் முன்பு இருந்தது என்பது இம்முறை ஆட்டோமாடிக் ஆக அனுமதிக்கிற சந்தர்பம் என எண்ண வேண்டாம்...

இதன் படி பார்த்தால் இந்தியாவை மட்டும் ஏன் குறைபட வேண்டும்...கனடாவிலும் ஒரு மகள் உள்ளார், பிரான்ஸ்/ ஜெர்மனி இல்லும் ஒரு மகன் உள்ளார்...அந்த நாடுகளிலும் முயற்சி செய்திருக்கலாமே..அந்த நாடுகளில் உள்ள அவர்களுது பிள்ளைகள் அவரது தாயை பார்பதற்கு ஏன் வசதி செய்து கொடுக்கவில்லை என்று அந்த நாடுகளையும் அல்லவா நாங்கள் குறைப்பட வேண்டும்..கனடா அனுமதிக்காட்டி ஒரு சட்டம், இந்திய அனுமதிக்காட்டி ஒரு சட்டம்!!!

என்னை பொறுத்தவரையில், இங்கே சில ஆட்களுக்கு இந்தியாவையும், எல்லாவல் மேலானத தேரையும் , வைகோ , சீமான் , கருணாதி , சோனியா டக்லஸ், பிள்ளையான், சம்பந்தன், கஜேந்திர்கள், சுப்பரமனியசுவாமி ....விட்டால் செய்தி இல்லை/ பொழுது இல்லை.. இவர்களை தவிர யார் செய்தி என்று சிலர் கேட்பார்கள்...அங்குள்ள மக்களை பற்றி எழுதுங்கள்...இந்த பார்வதி அம்மா படுகிற அல்லல்களை போன்ற அல்லல்களைதான் சாத்திரி........ எழுதுகிற கதைகளில் வருபர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள்..அதே போன்ற கதைகளை வெளிக்கொணர பாருங்கள்...அவர்களுக்காய் ஏதாவது செய்யலாமா என திட்டம் திட்டுங்கள், பட்டிமன்றங்கள் , வழக்காடு மன்றங்கள் போடுங்கள்..அதையும் தமிழ் நாடு சட்டசபையில் எதிரொலிக்க செயுங்கள்...

முடிவாக அந்த வயோதிப, நோய்வாய்பட்ட தாய், கணவனை இழந்த தாய் அடைகிற வேதனை யாவரும் உணர்கிறோம்..ஏலக்கூடிய எலாவற்றையும் செய்வோம்..ஆனால் அதையே ஒரு காழ்புணர்ச்சிமாதிரி மற்றவர்களை தூற்ற பயன்படுத்த வேண்டாம்..

யாழ் கள பேரீந்து கட்டுரையாளர்கள் பதிலளித்தால் நானல்ல யாழ்கள பங்காளிகள் அனைவரும் பதிலளிப்போம்.

கவனித்து பாருங்கோ..... தம்பி எரிமலை, கதையை மாத்துறாருங்கோ........ :lol:

ஆனால் இதில் கட்டாயம் சிங்களவன் - இந்திய தேர்தல் கங்காணிகள் கூட்டு உள்ளது தோழரெ பனங்காய்...

நூறு சதவீதம் இந்தியாதான் அண்ணாச்சி......

உலகம் முழுக்க தடை தொடக்கம் ஆழ ஊடுறுவி படைவரை அவையல்தானுங்கோ..

மற்றபடி நாங்களும் நீங்களும் எடுப்பார் கை புள்ளேதானுங்கோ... :lol:

ஒரு முறை ஒரு நாட்டில் முன்னர் இருந்தவர் இன்னுமொருமுறை மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு விதியும், சட்டமும் இல்லை...நல்ல உதாரணம்: லண்டன் இல் ஸ்டுடென்ட் விசா இல் இருப்பவர்கள்..அருகே பிரான்ஸ் க்கு போனால். சில சந்தர்பங்களில் அங்கிருந்தே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருகிறார்கள்.. .எனவே இந்தியாவில் முன்பு இருந்தது என்பது இம்முறை ஆட்டோமாடிக் ஆக அனுமதிக்கிற சந்தர்பம் என எண்ண வேண்டாம்...

விட முடியாது எண்று சொல்ல இந்திய அரசுக்கு உரிமை இருப்பது போல, அவர்கள் எடுத்த முடிவு தவறானது எண்று தட்டிக்கேக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. மறுக்கிறீர்களா.?

இந்தியா ஜனநாயக நாடுதானே.?

இதன் படி பார்த்தால் இந்தியாவை மட்டும் ஏன் குறைபட வேண்டும்...கனடாவிலும் ஒரு மகள் உள்ளார், பிரான்ஸ்/ ஜெர்மனி இல்லும் ஒரு மகன் உள்ளார்...அந்த நாடுகளிலும் முயற்சி செய்திருக்கலாமே..அந்த நாடுகளில் உள்ள அவர்களுது பிள்ளைகள் அவரது தாயை பார்பதற்கு ஏன் வசதி செய்து கொடுக்கவில்லை என்று அந்த நாடுகளையும் அல்லவா நாங்கள் குறைப்பட வேண்டும்..கனடா அனுமதிக்காட்டி ஒரு சட்டம், இந்திய அனுமதிக்காட்டி ஒரு சட்டம்!!!

இந்தியாவில் மகள் இருக்கிறார் அங்கு போவதாய் அம்மா முடிவும் எடுக்கிறார். அதை தட்டிக்கேக்க உங்களுக்கு உரிமை இருக்கிறதா.? எங்கு போய் யாருடன் தங்குவது எண்று முடிவெடுக்க வேண்டியவர் யார்.? அந்த அம்மாவா இல்லை கனடாவுக்கு போய் இருக்கலாம் எண்று சொல்லும் நீங்களா.?

அவர் விசாவுக்கு முறைப்படி விண்ணப்பித்து தானே போனார்.

என்னை பொறுத்தவரையில், இங்கே சில ஆட்களுக்கு இந்தியாவையும், எல்லாவல் மேலானத தேரையும் , வைகோ , சீமான் , கருணாதி , சோனியா டக்லஸ், பிள்ளையான், சம்பந்தன், கஜேந்திர்கள், சுப்பரமனியசுவாமி ....விட்டால் செய்தி இல்லை/ பொழுது இல்லை.. இவர்களை தவிர யார் செய்தி என்று சிலர் கேட்பார்கள்...அங்குள்ள மக்களை பற்றி எழுதுங்கள்...இந்த பார்வதி அம்மா படுகிற அல்லல்களை போன்ற அல்லல்களைதான் சாத்திரி........ எழுதுகிற கதைகளில் வருபர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள்..அதே போன்ற கதைகளை வெளிக்கொணர பாருங்கள்...அவர்களுக்காய் ஏதாவது செய்யலாமா என திட்டம் திட்டுங்கள், பட்டிமன்றங்கள் , வழக்காடு மன்றங்கள் போடுங்கள்..அதையும் தமிழ் நாடு சட்டசபையில் எதிரொலிக்க செயுங்கள்...

ஏன் இல்லை.? யாழ்களத்தில் அதிகமாக விவாதிக்க வேறு பட்ட பல விடயங்கள் இருக்கின்றன. உங்களின் பார்வையில் மட்டுமே பிழை இருக்கிறது. துன்பகரமான கதைகளை சொல்லி அழுதால் மட்டும் நல்லவர் ஆகிவிட முடியாது.

முடிவாக அந்த வயோதிப, நோய்வாய்பட்ட தாய், கணவனை இழந்த தாய் அடைகிற வேதனை யாவரும் உணர்கிறோம்..ஏலக்கூடிய எலாவற்றையும் செய்வோம்..ஆனால் அதையே ஒரு காழ்புணர்ச்சிமாதிரி மற்றவர்களை தூற்ற பயன்படுத்த வேண்டாம்..

தூற்றபட வேண்டியவன் தன்னை மாற்றி நல்ல பெயரை வாங்க வேண்டுமே அண்றி நாங்கள் எல்லாருமாக சேர்ந்து அவர்களுக்கு நல்ல பெயரை கொடுக்க முடியாது. பந்தயம் பிடி துன்பத்தை மட்டுமே தருவேன் என்பவனை அவனிடம் இருந்து நலன்களை பெறுபவர்களை தவிர வேறுயார் போற்ற முடியும்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் மகள் இருக்கிறார் அங்கு போவதாய் அம்மா முடிவும் எடுக்கிறார். அதை தட்டிக்கேக்க உங்களுக்கு உரிமை இருக்கிறதா.? எங்கு போய் யாருடன் தங்குவது எண்று முடிவெடுக்க வேண்டியவர் யார்.? அந்த அம்மாவா இல்லை கனடாவுக்கு போய் இருக்கலாம் எண்று சொல்லும் நீங்களா.?

அவர் விசாவுக்கு முறைப்படி விண்ணப்பித்து தானே போனார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71119

நான் நேற்று எழுதும்போது இப்படி ஒன்று நடந்தது என்றே தெரியாது.....இதற்கு மேல் என்ன இருக்கிறது சொல்ல......

மற்றது நான் யாரையும் போற்ற வரவில்லை ...மற்றவர்களை துற்ருவதால் தாங்களும் பெரியவர்கள் என்றுநினைக்கும் பதர்களை நினைத்தே கவலைப்படுகிறேன். இதற்கும் பதில் இருந்தால்..ஐயோ சாமி ஆளை விடுங்கோ...நான் எழுதின எல்லாவற்றையும் எடுத்து விடுகிறேன்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71119

நான் நேற்று எழுதும்போது இப்படி ஒன்று நடந்தது என்றே தெரியாது.....இதற்கு மேல் என்ன இருக்கிறது சொல்ல......

மற்றது நான் யாரையும் போற்ற வரவில்லை ...மற்றவர்களை துற்ருவதால் தாங்களும் பெரியவர்கள் என்றுநினைக்கும் பதர்களை நினைத்தே கவலைப்படுகிறேன். இதற்கும் பதில் இருந்தால்..ஐயோ சாமி ஆளை விடுங்கோ...நான் எழுதின எல்லாவற்றையும் எடுத்து விடுகிறேன்...

நீங்கள் யாரையும் திட்டுவது இல்லையா.? அப்படியானால் மேலை நீங்கள் குறிப்பிட்ட பதர்கள் எனும் பதத்தை எதுக்கு பயன் படுத்து கிறீர்கள் வாழ்த்துவதற்கா.?

போதனைகள் மற்றவர்களுக்கு மட்டும் கொடுப்பதுக்கு மட்டும் அல்லாமல் உங்களின் செயற்பாட்டுக்கு சேர்த்ததாகவும் இருக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பார்க்கும் போது எனக்கு ஒன்று படுகிறது

தமிழின அழிப்பில் இலங்கைக்கு எவ்வளவு பங்கோ அவ்வளவுக்கு இந்தியாவுக்கும் இருக்கிறது.

இந்திய தேசம் எமக்கு அருகில் இல்லாமல் இருந்திருந்தால் எமக்கு இவ்வளவு இன்னல்களும் நேர்ந்திருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இருந்தாலும் இந்தியாவினது தேசிய நலனின் தாக்கமும் அழுத்தமும் எங்கள் மீது எவ்வளவு உள்ளதென்பதை நான் யாருக்கும் சொல்லத்தேவை இல்லை என்றே நினைக்கிறன்.

எம்மில் பலரும் இந்தியாவை எதிரியாக பார்க்கும்போது எமது தேசியத் தலைவரின் உடன்பிறப்பில் ஒன்று இந்தியாவில் தான் வாழ்கின்றது. என்னத்தை சொன்னாலும் பார்வதியம்மா இந்தியாவுக்குப் போகவேண்டிய சூழல் உருவானது மறுக்கமுடியாது.

அப்படியானால் எமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இந்தியாவை எம்மால் விழமுடியாது என்று கொள்ளலாமா?

அப்படி விலக முடியாவிட்டால் நாம் இந்தியாவை சரியாக அனுகுரோமா?

இந்தியாவுடன் உறவுகளை நாம் சரியாக கையாளுகிரோமா?

இந்தியாவைப் பற்றி எம்மிடம் ஒரு தெளிவான கொள்கை இருக்கின்றதா?

எந்த வகையான கொள்கையை நாம் கொள்ளப்போகிறோம்? யாரை வைத்து அதை அணுகப் போகிறோம்?

உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.