Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்': தமிழ் பாடசாலைகள் துரத்திய தமிழ் மாணவர்களுக்கு இடமளித்தது சிங்களப் பாடசாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 06 மே 2010, 12:56 GMT ] [ புதினப் பணிமனை ]

வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன்.

புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட 'நேசக்கரங்கள்' உதவி நிறுவனத்தின் செயற்பாட்டளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூணடபோது சீர்குலையத் தொடங்கியது.

நாளுக்கு நாள் இடம்பெயர்வுகளைச் சந்தித்து, பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்கள், உடன் பிறந்த சகோதர, சகோதரியரை இழங்தவர்கள், ஏன் போரின் கொடூரப் பிடிக்குள் சிக்கித் தங்களது அங்கங்களை இழந்தவர்கள் என பலதரப்பட்டோர் வன்னி மாணவர்கள் மத்தியில் இருக்கிறார்கள்.

இறுதிப் போரின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களுள் இருந்த 73496 மாணவர்கள் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்தனர். இவர்களிடத்தே இரண்டு பிரதான பிரச்சினைகள் வேரூன்றிக் காணப்பட்டன.

போர் தந்த இழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒருபுறமும் தங்களது கல்வியினைச் சரியாகத் தொடரமுடியாத வளப் பற்றாக்குறை மறுபுறமுமாக இவர்களது வினைத்திறன் மிக்க கல்வி கேள்விக் குறியாகி நிற்கிறது.

மனதை ஒருநிலைப்படுத்திக் கல்வியைத் தொடரமுடியாத நிலையிலே இந்த மாணவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். முகாம்களிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் பலர் வவுனியா நகரத்தினை அண்டியுள்ள சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

தாம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாகவுள்ள வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, இரம்பைக்குளம் மகளிர் கல்லூரி, விபுலனாந்தக் கல்லூரி உள்ளிட்ட நகரின் முதன்மையான பாடசாலைகளுக்கே வவுனியா நகரத்தினை அண்டிய பகுதிகளில் குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்றுவந்தார்கள்.

tamilschool_vavunia01.jpg

இவ்வாறு வவுனியா நகரப் பாடசாலைக்கு வரும் இடம்பெயர்ந்த மாணவர்களது தொகை அதிகரித்ததையடுத்து குறித்த இந்தப் பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென மாலை நேரப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்போது வவுனியா தெற்குவலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த திருமதி வீ.ஆர்.எஸ் ஓஸ்வேள்ட் அவர்களே இதற்கான உத்தரவினை வழங்கியிருந்தார்.

வவுனியாவின் இந்த முன்னணிப் பாடசாலைகளில் காலை நேரப் பாடசாலையில் சேரவேண்டுமெனில் உதவித் தொகையாக 5000 ரூபா கட்டவேண்டும் என அதிபர்கள் கோரியிருக்கிறார்கள்.

tamilschool_vavunia02.jpg

தனது பாடசாலையில் 'அகதி வாசமே வீசக்கூடாது' என வெளிப்படையாக ஒரு அதிபர் கூறி மாணவர்களது மனங்களைப் புண்படுத்தித் திரும்பியனுப்பிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தேறியது.

இது இவ்வாறிருக்கக் கடந்த பெப்பிரவரி 16ம் திகதி முதல் இடம்பெயர்ந்த மாணவர்கள் எவரும் வவுனியா நகரப் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என்றும் அவர்கள் காமினி மகாவித்தியாலயத்திற்கே செல்லவேண்டும் என்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை அறிவுறுத்தியது.

tamilschool_vavunia03.jpg

இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மாணவர்களைக் கழுத்தில் பிடித்துத் தள்ளாத குறையாக குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் வெளியேற்றினர்.

அடிக்குமேல் அடிவாங்கி இழப்பதற்கு இனி ஏதுமில்லை என்ற நிலையில் தங்களின் ஒரே சொத்தாகக் கருதும் கல்வியினைத் தொடர்வதற்காக ஆவலுடன் காத்திருந்த வன்னி மாணவர்களுக்குப் பேரிடியாக இந்தச் சம்பவம் அமைந்தது.

வன்னி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெறுமிடத்து, வெட்டுப்புள்ளி அடிப்படையில், அது வவுனியா மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பினைப் பாதித்துவிடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை ஊழியர்கள் தம்மிடையே பேசிக்கொண்டார்களாம்.

tamilschool_vavunia04.jpg

தமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியினை எதிர்த்து இடம்பெயர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் வன்னி மாணவர்களை வெளியேற்றுவது என்ற முடிவினை எடுத்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட இணைந்த பாடசாலையில் ஆரம்பத்தில் 3500 மாணவர்கள் வரையில் கல்வி கற்று வந்தார்கள்.

எந்தவிதமான வளங்களுமற்ற நிலையில் தாங்கள் அகதிப் பிள்ளைகளே என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்த இணைந்த பாடசாலை தரப்பாள் கொட்டில்களிலும் மர நிழல்களின் கீழும் தற்போதும் இயங்கிவருகிறது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் காமினி சிங்கள மகாவித்தியலயத்தின் சிங்கள அதிபர் ஒரு மண்டபத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

'அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்' என்றும் 'அகதி வாசமே வீசக்கூடாது' என்றும் வன்னி மாணவர்களை துரத்தித் தெருவில்விட்ட வவுனியாவின் முன்னணித் தமிழ் பாடசாலைகளின் அதிபர்களை விட இந்தச் சிங்கள அதிபர் எவ்வளவோ மேல் என ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்ற போதும் காமினி இணைந்த பாடசாலையில் மாணவர் தொகை பெரிதாகக் குறையவில்லை.

தற்போது 2500 வரையிலான மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுள் பெற்றோரையும் தங்களது உடல் அவயவங்களையும் இழந்த 84 மாணவர்கள் உள்ளார்கள்.

tamilschool_vavunia05.jpg

மீள்குடியேற்றப் பதிவினை மேற்கொள்வதற்காக தங்களது ஊர்களுக்குக் குடும்பத்துடன் செல்லும் மாணவர்கள் ஓரிரு நாட்களுக்குள்ளேயே வவுனியா திரும்பிவிடுகிறார்கள்.

குறிப்பாக உயர் கல்வியினைக் கற்கும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மீள்குடியேறிய பகுதிகளில் இல்லாமையினாலும் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருக்கும் வன்னிப் பகுதியில் பெற்றோர்கள் வயதுக்குவந்த பெண் பிள்ளைகளை வைத்திருக்க அஞ்சுவதாலும் இந்த மாணவர்கள் மீண்டும் வவுனியா திரும்பி, காமினி இணைந்த பாடசாலையில் தங்களது கல்வியைத் தொடர்கிறார்கள்.

1-2.png

காமினி மாகவித்தியாலயத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய நிலையில் தங்களது கல்வியினைத் தொடரும் மாணவர்கள் ஏக்கத்துடனும் தவிப்புடனேயே இருப்பதாகவும் வவுனியா நகரில் தீடீர் தீடீரெனப் பொழிந்துவரும் மழையின் காரணமாக வகுப்பறை என்ற தறப்பாள் கொட்டில்களின் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க அதற்குள் இருந்தவாறே மாணவர்கள் கல்வியைத் தொடர்வதாக அதிபர் ரங்கநாதன் கண்ணீருடன் கூறுகிறார்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் கணவன் தடுப்பில், பிள்ளைகளைக் கவனிக்க எவருமற்ற நிலையின் மத்தியில், போர் தந்த கொடிய நினைவுகளாலும் சொந்தங்களும் உறவுகளும் திக்கொன்று திசைக்கொன்றாய் சிதறிக் கிடப்பதனாலும் அவர்களும் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களாகவே தங்களது கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்கிறார்கள்.

தங்களது அங்கங்களையும் உறவுகளையும் இழந்து கல்வி என்ற சொத்தினைப் பெறுவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த மாணவர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் நேசக்கரம் நீட்டவேண்டும் என்கிறார் அதிபர் ரங்கன்.

நன்றி புதினப்பலகை

அதிபர் ரங்கநாதன் அவர்களுடனான உரையாடலை ஒலிவடிவில் கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..

Edited by sathiri

"வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்'"

நம்புவதற்கு மிக மிக கடினாமாக உள்ளது.

எந்த பாடசாலைகள் அப்படி கூறின? அங்கு யார் கூறினார்கள்?

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் - அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

கண்களால் காண்பதுவும், காதுகளால் கேட்பதுவும் பொய்யாகிவிடலாம். தீர விசாரிப்பதே மெய்யாகும்.

பெரும்பாலான வவுனியா தமிழ் பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்கள். அந்த பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் ஒரு பகுதியிலும், கோவில் மண்டபங்களிலும், கிடைத்த மர நிழல்களிலும் படித்து வந்ததை நான் கடந்த வருடம் ஜூலை, செப்டெம்பர் மாதம் வவுனியா சென்றபோது பார்த்தேன்.

எனது சொந்தக்கார பிள்ளைகள் ஒவ்வொருவரும் தாயுடன் 'சண்டைபோட்டு' தினமும் மூன்று நாலு சாப்பாட்டு பார்சல்கள் கொண்டு சென்று, இடம்பெர்ந்து வந்து பாடசாலையின் மறுபக்கத்தில் இராணுவத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு வேலிக்கால் கொடுப்பதாக கூறினர். நானும், சொந்தக்காரரும் எமது பிள்ளைகளின் இந்த உணர்வுகளை பார்த்து பலதரம் மகிழ்ந்துள்ளோம்.

Edited by ஆராவமுதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்'"

நம்புவதற்கு மிக மிக கடினாமாக உள்ளது.

எந்த பாடசாலைகள் அப்படி கூறின? அங்கு யார் கூறினார்கள்?

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் - அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

கண்களால் காண்பதுவும், காதுகளால் கேட்பதுவும் பொய்யாகிவிடலாம். தீர விசாரிப்பதே மெய்யாகும்.

பெரும்பாலான வவுனியா தமிழ் பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்கள். அந்த பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் ஒரு பகுதியிலும், கோவில் மண்டபங்களிலும், கிடைத்த மர நிழல்களிலும் படித்து வந்ததை நான் கடந்த வருடம் ஜூலை, செப்டெம்பர் மாதம் வவுனியா சென்றபோது பார்த்தேன்.

எனது சொந்தக்கார பிள்ளைகள் ஒவ்வொருவரும் தாயுடன் 'சண்டைபோட்டு' தினமும் மூன்று நாலு சாப்பாட்டு பார்சல்கள் கொண்டு சென்று, இடம்பெர்ந்து வந்து பாடசாலையின் மறுபக்கத்தில் இராணுவத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு வேலிக்கால் கொடுப்பதாக கூறினர். நானும், சொந்தக்காரரும் எமது பிள்ளைகளின் இந்த உணர்வுகளை பார்த்து பலதரம் மகிழ்ந்துள்ளோம்.

ஆராவமுதன் விடயத்தை சொன்னவர் யாரோ ஒரு சமூகப்பொறுப்பற்றவரோ..அல்லது தன்னை யாரென்று அடையாளப்படுத்தமல் ஒழிந்திருந்து அனாமதேயமாகவோ கூறவில்லை..மூவாயிரம் இடம்பெயர்ந்த மாணவர்களை வழிநடத்தும் ஒரு அதிபர் அதே நேரம் தங்கள் நிலைமைகளை நேரடியாக யார் வேண்டுமானாலும் வந்து பாரக்கலாம் என்றும் கூறுகிறார்..நீங்கள் யாராவது காமினி மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக சென்று அவரை சந்திக்கலாம்..நன்றி

ஆராவமுதன் விடயத்தை சொன்னவர் யாரோ ஒரு சமூகப்பொறுப்பற்றவரோ..அல்லது தன்னை யாரென்று அடையாளப்படுத்தமல் ஒழிந்திருந்து அனாமதேயமாகவோ கூறவில்லை..மூவாயிரம் இடம்பெயர்ந்த மாணவர்களை வழிநடத்தும் ஒரு அதிபர் அதே நேரம் தங்கள் நிலைமைகளை நேரடியாக யார் வேண்டுமானாலும் வந்து பாரக்கலாம் என்றும் கூறுகிறார்..நீங்கள் யாராவது காமினி மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக சென்று அவரை சந்திக்கலாம்..நன்றி

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், டக்கி, கெஹெலிய, கோட்டபாய, ஜி. எல். பிரிஸ், கருணா, சிங்கள இனவாதிகள் நேரடியாக கூறுவதெல்லாம் உண்மையாகிவிடும்.

ஒரு அதிபர் சமூகப் பொறுப்பு உள்ளவர் என்றாலும், எல்லாரும் அப்படியில்லை. மேலும் நீங்கள் கூறும் அதிபரின் கூற்றுக்களில் நியாயத்தன்மை, நடுநிலை, பொறுப்பான வார்த்தைகள் எதுவுமே இல்லை. பாதிக்கப்பட்ட ஒருவர் உணர்வு மேலீட்டால் அனைவரையும் குற்றவாளிகளாக காணும் மனநிலை அந்த அதிபரில் காணப்படுகிறது.

மேலும் நான் காமினி வித்தியாலய மாணவர்களின் நிலையை விவாதிக்கவில்லை, மறுக்கவில்லை.

அதிபரின் "வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனும் கூற்றை மட்டுமே குறிப்பிட்டு விவாதித்துள்ளேன். அந்த 7 பாடசாலைகளின் அற்புதமான பணிகளை ஆதாரம் இல்லாமல் கேவலப் படுத்தாதீர்கள்.

தமிழ் ஊடகத்துறை பொறுப்பான உடகத்துறையாக வளாராமை கவலையான விடயம். உணர்வுபூர்வமான செய்திகளை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி பிரபல்யம் ஆவது அவர்களது கொள்கையாக உள்ளது.நேர்மையான, ஓரளவாவது நடுநிலையான Investigative Journalism துளியும் இல்லாதது தமிழரின் அழிவுக்கும், பிளவுக்கும், வெறுப்புக்கும் காரணமாகி விட்டது.

எதற்கும் மறுபக்கம் உண்டு.

உங்கள் முயற்சியை பாராட்டும் அதேவேளை, பிரபல பாடசாலை அதிபர்களிடம் ரங்கநாதனின் கருத்தைக் கூறி அவர்களின் கருத்துக்களைப் பெற்று, அதை ரங்கநாதனிடம் கூறி அவரின் கருத்தைப் பெற்று, சொல்லும்போது ஓரளவு உண்மைகள் வெளிவரலாம்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் சும்மா உழராதையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காமினி மகாவித்தியாலையத்தில் தற்போதும் கல்விகற்று வருவதே இதற்க்கு ஆதாரம் சும்மா தமிழன் மிச்சம் நல்லவன் எண்டு சபபைக்கட்டுக்கடடாதையுங்கோ. மற்றது இங்க விவாதிக்கப்பட்ட விடையம் பாடசாலை அதிபர்களது நடத்தையே வவுனியாவில் வாழ்கின்ற மக்களது நடத்தைகளல்ல. இதற்கு வவுனியாப்பிரதேச கல்வித்திணைக்களமும் பொறுப்பே. சாத்தியார், பல பொருளாதாரப் பிடுங்குப்பாடுகள் எனக்கு இருக்கு, ஆகையால்தான் என்னால் இதுவரை நேசக்கரம் உதவித்திட்டத்திற்கு பங்களிக்கமுடியவில்லை. என்றாலும் கூடிய விரைவில் நான் உங்களுடன் இணைந்துகொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாதத்திற்கே வருகிறேன்.நீங்கள் சொல்வது போல டக்கி கெஹெலிய கோட்டபாய ஜி. எல். பிரிஸ் கருணா இவர்களிற்கு ஏதோ அரசியல் தேவைகள் இருக்கின்றன அதற்காக அவர்கள் எதனையும் சொல்வார்கள்..ஆனால் சம்பத்தப்பட்ட அதிபர் வன்னியில் இறுதிவரை தங்கியிருந்து தன்னுடைய பாடசாலைப்பிள்ளைகளுடனேயே வெளியேறிவவர் அதுமட்டுமல்ல அவரும் அந்த யுத்தத்தில் தனிப்பட பாதிக்கப்பட்ட ஒருவர்..அதன் விபரங்களை நாங்கள் ஒலிப்பதிவில் தவிர்த்திருக்கிறோம்..ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மாணவர்வர்களை வவுனியா பிரபல பாடசாலைகள் நிராகரித்ததென்பது புதியசெய்தியோ அல்லது ரங்கநாதன் மட்டும்தான் அதை சொல்கிறார் என்பதல்ல..ஏற்கனவே கடந்த மாதம் இடம்பெயர்ந்த மாணவிகள் இருவர் காமினி மகாவித்தியாலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பொழுது விபத்தொன்றில் எட்டுவயது மாணவி கஸ்மிகா இறந்துபோக 16 வயதான மாணவியொருத்தி படுகாயமடைந்து இன்னமும் வைத்தியசாலையிலேயே இருக்கிறாள்..அவர்களிற்கான உதவிகளை நேசக்கரம் செய்திருத்தவேளை அந்த மாணவியின் தாயாரிடம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்..அவர்கள் இருக்கும் முகாமிற்கு அருகில் பெரிய பாடசாலையொன்று இருக்கும் பொழுது எதற்காக தூர இடத்திலிலுள்ள காமினி மகாவித்தியலத்திற்கு அனுப்பினீர்கள் என்றதற்கு அந்தத் தாய் கண்ணீருடன் சொன்ன விடயமும் அந்த பிரபல பாடசாலை தன்னுடைய பிள்ளையை அனுமதிக்கவில்லையென்பதே..அதனை இதே அவரது குரலிலேயே நீங்கள் கேட்கலாம்..

இங்கு அழுத்தி கேழுங்கள்..

3-1.jpg

Edited by sathiri

ஆராவமுதன் சும்மா உழராதையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காமினி மகாவித்தியாலையத்தில் தற்போதும் கல்விகற்று வருவதே இதற்க்கு ஆதாரம் சும்மா தமிழன் மிச்சம் நல்லவன் எண்டு சபபைக்கட்டுக்கடடாதையுங்கோ. மற்றது இங்க விவாதிக்கப்பட்ட விடையம் பாடசாலை அதிபர்களது நடத்தையே வவுனியாவில் வாழ்கின்ற மக்களது நடத்தைகளல்ல. இதற்கு வவுனியாப்பிரதேச கல்வித்திணைக்களமும் பொறுப்பே. சாத்தியார், பல பொருளாதாரப் பிடுங்குப்பாடுகள் எனக்கு இருக்கு, ஆகையால்தான் என்னால் இதுவரை நேசக்கரம் உதவித்திட்டத்திற்கு பங்களிக்கமுடியவில்லை. என்றாலும் கூடிய விரைவில் நான் உங்களுடன் இணைந்துகொள்கிறேன்.

உளறுவது நானல்ல. கருத்துக் கூறும் பக்குவம் இருந்தால் நேரடியாக கருத்துக்களை முன்வையுங்கள். அதைவிட்டு கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம், ஜால்ரா அடித்து வாழும் புத்தியை காடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் சும்மா உழராதையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காமினி மகாவித்தியாலையத்தில் தற்போதும் கல்விகற்று வருவதே இதற்க்கு ஆதாரம் சும்மா தமிழன் மிச்சம் நல்லவன் எண்டு சபபைக்கட்டுக்கடடாதையுங்கோ. மற்றது இங்க விவாதிக்கப்பட்ட விடையம் பாடசாலை அதிபர்களது நடத்தையே வவுனியாவில் வாழ்கின்ற மக்களது நடத்தைகளல்ல. இதற்கு வவுனியாப்பிரதேச கல்வித்திணைக்களமும் பொறுப்பே. சாத்தியார், பல பொருளாதாரப் பிடுங்குப்பாடுகள் எனக்கு இருக்கு, ஆகையால்தான் என்னால் இதுவரை நேசக்கரம் உதவித்திட்டத்திற்கு பங்களிக்கமுடியவில்லை. என்றாலும் கூடிய விரைவில் நான் உங்களுடன் இணைந்துகொள்கிறேன்.

நன்றிகள் இணைந்து கொள்ளுங்கள்.அதேவேளை ஆராவமுதன் தன்னுடைய சந்தேகத்தினையே கேட்டிருந்தார் அவரிற்கு விளக்கவேண்டியது எமது கடைமை.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி சிங்களப் படை ஆக்கிரமிப்பின் பின்னர் வவுனியா பாடசாலைகள் எங்கனும் மக்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை முன்னைய காலங்களில் இடம்பெயர்வுகளோடு வாழ்ந்தவர்கள் என்ற வகையில் எம்மால் உணர முடிகிறது.

இப்போ வவுனியா பாடசாலைகளும் மாணவர்களால் நிரம்பி வழியும் நிலையில்.. வன்னி மாணவர்கள் எல்லோரையும் ஒரு சில பாடசாலைகள் உள்ளெடுப்பது என்பது கடினமான காரியம். உண்மையில் அந்த மாணவர்களுக்கான கல்வியில் அக்கறை கொண்டிருப்பின் சிறீலங்கா அரசாங்கமே அதன் படைகளை மக்கள் வாழிடங்களில் இருந்து விலக்கி வன்னியை இயல்பு நிலைக்கு விரைந்து கொண்டு வந்து பாடசாலைகளை திறந்திருக்க வேண்டும்.

1987 இந்திய படை நடவடிக்கையின் போது மக்கள் இடம்பெயர்ந்து பல காலம் வெளியில் தங்கி இருக்கச் செய்யப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டும் மக்கள் ஒரு சில மாதங்கள் இடம்பெயர்ந்து தங்கி இருந்தனர்.

ஆனால் இம்முறை சிங்களம் வேண்டும் என்றே எமது நிலத்தை மக்களின் வாழ்விடங்களை பொதுவசதிகளை பறித்தெடுத்துவிட்டு இப்போ சிங்கள மகாவித்தியாலத்தில் இடமளித்ததை பெருமையாகப் பேச வைத்துள்ளது.

பிரச்சனையின் தோற்றுவாயே பிரச்சனைகளை வளர்த்து வரும் நிலையில் அதனிடமே மக்கள் சரணடையும் நிலை நிலவுவது மிகவும் ஆபத்தானதுமன்றி எமது மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாகி நிற்கிறது.

இந்த இடத்தில் அரசியல் பேசிக் கொண்டிருக்க முடியாது. எங்கேயோ மாணவர்களின் கல்வியை தொடர்ந்து சூழ்நிலையை அந்த மாணவர்களிற்கு சாத்தியமாக்கி அவர்கள் சொந்த இடங்களிற்கு சென்று எந்த இராணுவ அச்சமும் இன்றி உலகத் தரத்திற்கு இணையாக கல்வி கற்க ஐநா சிறுவர் அமைப்புக்கள் போன்றவை உதவ முன் வர வேண்டும்.

சிறுவர் போராளிகளை பார்க்கிறம் புடுங்கிறம் என்று வன்னிக்கு போனவர்கள்.. இப்போ இத்தனை ஆயிரம் சிறுவர்களையும் அடைத்து வைத்து அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் கல்வி கற்க அனுமதித்திருக்கிறது ஐநா சிறுவர் அமைப்பு... அதாவது யுனிசெப்.

இவர்கள் எதனை அடிப்படையாக கொண்டு சிறுவர் போராளிகள் என்ற விடயத்தை மட்டும் தூக்கிப் பிடித்தார்கள் என்பது இப்போ அப்பட்டமாகத் தெரிகிறது.

எதுஎப்படியோ மாணவர்களின் இன்றைய உடனடித் தேவைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர.. ஆளையாள் திட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. எல்லோரும் கடந்த காலத்தில் அசெளகரியங்களை சந்தித்திருக்கின்றனர். அது அனைத்திற்கும் சிங்களமே பொறுப்பு. அந்த வகையில் காமினி மகாவித்தியாலயம் கருணை காட்டியுள்ளதாக சொல்வதிலும் சிங்களம் ஆக்கிரமித்து வைத்துள்ள வளங்களயே எமது பிள்ளைகள் பாவிக்கின்றனர் என்ற முடிவுக்கே வர வேண்டும்.

சிங்களம் ஒரு அரசு என்ற வகையில் அதற்குரிய கடப்பாட்டில் இருந்து விலகி தமிழ் மாணவர்கள் இரண்டாம் தரத்தில் வைத்து எப்போதும் போல செயற்பட்டு வருகிறது. ஐநாவும் அப்படியே செயற்படுகிறது. இவற்றை சுட்டிக்காட்டவும் எமது மாணவர்களின் இன்றைய உடனடித் தேவைகளை இயலுமானவரை வெறுப்புக்களை சம்பாதிக்காது தீர்த்துக் கொண்டு அவர்களிற்கு நிரந்த கல்விக் கூடங்களில் உலக தரத்திற்கு ஏற்ப கல்வி கற்பிக்க சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் பலமான கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்து அந்த மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

நேசக்கரம் மாணவர்களின் உடனடித் தேவைகளிற்காக அவர்களோடு இணைந்திருந்து பணியாற்றுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் மட்டுமன்றி எல்லோராலும் கைவிடப்பட்டுள்ள அந்த மாணவர்களிற்கு இன்றி அமையாத சேவையாகவும் அமைந்துள்ளது. இதனையே நேசக்கரம் முன்னிலைப்படுத்த வேண்டும். அடுத்தவர்களை குற்றம்சாட்டி பயனில்லை. அவர்களிற்கும் பல நெருக்கடிகள் இருக்கலாம்.

Edited by nedukkalapoovan

குறிப்பிட்ட சதவீதத்துக்குமேல் மாணவர்களை வகுப்புக்கு அனுமதிக்கமுடியாது.. சாத்திரியார்தான் பிறந்தது தொடக்கம் புலியாச்சே.. தெரிந்திருக்க முடியாது... :rolleyes:

Edited by Panangkai

சாத்திரி அவர்களே! உங்கள் பதில்கள் அனைத்தும் எனது விவாதத்தை ஒட்டியதாக இல்லை. தயவு செய்து உங்களுடன் நான் முரண்படுவதாக கருதவேண்டாம். நேசக்கரத்தின் பணிகளை நான் பாராட்டியுள்ளேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=69787 #57 பதிவை பாருங்கள்.

நான் எடுத்த விடயம் "வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்" என்ற அதிபரின் கூற்றை. ஒரு பாடசாலையல்ல. ஏழு பாடசாலைகள், அங்கு படிக்கும் 12,000 இற்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களையும், பலநூறு ஆசிரியர்களையும், அதிபர்களையும் இழிவுபடுத்துவதாக அந்த அதிபரின் கூற்று அமைந்துள்ளது. இந்த ஏழு அதிபர்களையும் பொறுப்பற்ற அதிபர்களாக நீங்கள் மறைமுகமாக கருதுவதும் கவலையளிக்கிறது.

பல்லாயிரம் இடம்பெயர்ந்த மாணவர்களை இந்த ஏழு பாடசாலைகள் உள்வாங்கியுள்ளது. அனைவரையும் உள்வாங்கவில்லை என்பது உண்மை. அது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்பதுவும் உண்மை. இந்த பாடசாலைகள் எந்த ஒரு இடம்பெயர்ந்த மாணவனையும் அனுமதிக்கவில்லை என்றால், உங்கள் விவாதம் மிகச் சரி.

இன்னொரு விதமாக சொல்லப் போனால், "காமினி வித்தியாலய மாணவர்கள் மிக மோசமான சூழலில் கல்வி கற்பதற்கு 'நேசக்கரம்' தான் காரணம். அவர்கள் ஒழுங்காக உதவி செய்திருந்தால் அந்த மாணவர்களுக்கு நல்ல வசதிகள் கிடைத்திருக்கும்" என்று ஒருவர் சொன்னால் அதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். காரணம் "நேசக்கரத்தால்" பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் செய்துவிட முடியாது. அவர்கள் (நீங்கள்) செய்யும் சிறு (பெரு) முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் மற்றும் நெடுக்காலை போவான் உங்கள் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன்..மற்றும்படி இங்கு எமது நோக்கம் மற்றவர்களை குற்றம் சுமத்துவதல்ல.இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே.. அதே நேரம் அந்த அதிபரின் கருத்தையும் வெளிக்கொண்டுவந்தோம்.அதனை ஜரேப்பிய இணைய ஊடகங்களான புதினப்பலகை...குளேபல்தமிழ் செய்திகள்..அதிர்வு (இதில் அதிர்வுமட்டும் கொஞ்சம் குளறுபடியாக செய்தியை வெளியிட்டிருக்கின்றது)ஆகியவை பதிவாக்கியுள்ளனர்கள் இதனை யாழ் பிரந்திய பத்திரிகையான உதயனும் பதிவாக்கியுள்ளது எனவே இந்த செய்திகளினூடாக வெளிவந்தவைகள் நிச்சயமாக அந்த வவுனியா பாடசாலை அதிபர்களையும் சென்றடையும் எனவே அவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிக்கொணருவார்கள் என எதிர்பார்ப்போம்..மற்றும்படி யாரிற்காவது இதனால் மனச்சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதோடு நேசக்கரத்தின் நோக்கம் உறவுகளிற்கு உதவுவதேயன்றி வேறு எவ்வித தனிப்பட்ட அரசியல் சார்ந்தவையல்ல என்பதனை தெளிவுபடுத்துகின்றோம் நன்றி.

Edited by sathiri

அதிபர் சொன்னதைதானே இதில இணைச்சு இருக்கிறீனம். எல்லாரும் ஒலிப்பதிவை கேட்டனீங்களோ? அதிபர் திருப்பித் திருப்பி அதை கேட்கிறார்: "வன்னி ஊத்தைகள் ஏன் இஞ்ச வரவேணும்". இப்படி சொல்லிச்சீனமாம் என்று சொல்லிறார், இதுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கோ என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த நியூச வெளிநாட்டு பத்திரிகையளில வராம பாத்து கொள்ளுங்கோ.

தலைவரும் தமிழீழத்த புலம்பெயர் தமிழரிட்ட ஒப்படைச்சிட்டு ஓடீட்டார்.....

அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள் எண்டு வந்திருக்கிற நாட்டுக்காரன் துரத்தினா எங்க நாங்கள் போறது? :D

உந்த நியூச வெளிநாட்டு பத்திரிகையளில வராம பாத்து கொள்ளுங்கோ.

தலைவரும் தமிழீழத்த புலம்பெயர் தமிழரிட்ட ஒப்படைச்சிட்டு ஓடீட்டார்.....

அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள் எண்டு வந்திருக்கிற நாட்டுக்காரன் துரத்தினா எங்க நாங்கள் போறது? :D

வெளிநாடுகளில மெல்ல மெல்ல தொடங்கிட்டாங்கள்

சிறிலங்கா ஊத்தைப் பைகளே போங்கள் என்று ஆரம்பிக்கிறார்கள்...

இதுக்கு சம்பந்தனையா என்ன சொல்லப்போறார்?

அவரின் கையாலாகாத்தனமே இதுக்கெல்லாம் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நியூச வெளிநாட்டு பத்திரிகையளில வராம பாத்து கொள்ளுங்கோ.

தலைவரும் தமிழீழத்த புலம்பெயர் தமிழரிட்ட ஒப்படைச்சிட்டு ஓடீட்டார்.....

அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள் எண்டு வந்திருக்கிற நாட்டுக்காரன் துரத்தினா எங்க நாங்கள் போறது? :D

உங்கட கேள்வியில் உணமை உள்ளதுதான். தலைவர் இல்லை என்று உடனேயே கக்கூசுக்குள்ளால் வெளிக்கிட வேண்டாம். கழுவினததான் கழுவினீகள் இன்னமும் கொஞ்சகாலம் மகிந்தவிற்கும் கோத்தபாயவிற்கும் கழுவிட்டு வாறதுதானே? அதிலும் கோத்தா அமெரிக்காவில் சிலகாலம் என்றாலும் வாழ்நதவர் அதிகம் அசிங்கம் செய்யமாட்டார் என்று நினைககிறோம். நீங்கள் எஜமானிகளிடம் கோரிக்கை வைத்து புதிய செம்பு வாங்குங்ககோ. மற்றவை உங்களுக்க தேவையில்லாதது என்று நினைக்கிறேன். அதிலும் பாடசாலை என்றால் அது படிப்போடு சம்ந்தபட்டிருக்கும். அதுக்கு அலர்ஜி இருக்கும் என்பது எமக்கு தெரிந்ததுதானே.............. எழுதியும் காட்டவேண்டுமா?

முன்னர் மலையகப்பகுதியில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு யாழ்பாணம் வந்தவர்கள்....அங்கேயுள்ள யாழ்பாணதமிழர்களால் இப்படித்தான் நடாத்தப்பட்டார்கள்...இது வரலாறு...

  • கருத்துக்கள உறவுகள்

தாராக்கி அண்ணா இது யாழ்ப்பாணத்தார் மட்டும் செய்வதல்ல எல்லா தமிழனிடமும் உள்ள ஒன்று ஆனால் வன்னி மக்கள் மட்டும் விதி விலக்கு, 90 களில் புத்தூரில் உள்ள ஒரு பிரபல பாடசாலை அகதிகளாக வந்த பக்கத்தூர் மக்களை எந்த இராணுவ பயங்கரவாதத்திற்கு பயந்து வந்தார்களோ அந்த இடத்துக்கே போங்கள் என்றும் இல்லாவிட்டால் வேறு எங்காவது தங்குங்கள் என்று கூறப்பட்டது வெறுமனே 3 நாட்கள் தற்காலிகமாக தங்கிய அம்மக்களுக்கே அந்த் நிலை போராளிகள் எவ்வளவோ கூறியும் அதிபர் தன்னிலையில் இறங்கவில்லை அதை விட புத்தூர் வாழ் மக்கள் அந்த மக்களை இகழ்வாக பேசினர்.

ஆனால் விதி கடைசியில் அவர்களையும் அகதியாக்கியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.