Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”

Featured Replies

மே 19 - "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”

header01.jpg

மே 19 ம் நாளினை "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என பிரகடனப்படுத்தவேண்டும் என இணைய செய்தி ஊடகமான புதினப்பலகை முன்மொழிந்ததை யாழ் இணையம் ஆதரிக்கிறது. அதனையேற்று தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கமாக - விடுதலைக்காக போராடும் இனங்களின் ஒரு அங்கமாக நின்று - யாழ் இணையம் இந்த நாளினை "ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என பிரகடனப்படுத்துமாறு கோருகிறது. என்றும் ஒடுக்கப்படும் மக்களோடு யாழ் இணையம் இணைந்திருக்கும் - ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது குரலினை பதிவு செய்யும்.

நாமார்க்கும் குடியல்லோம்.

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது.

ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது.

அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.

இனிமேல் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமூகமும் - எந்த ஒரு தேசிய இனமும் தன்முனைப்புடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்குடன் - வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அது.

அவ்வாறு தன்னெழுச்சி கொண்டதற்கான தண்டனையைத் தமிழ் தேசிய இனத்திற்கு வழங்கியதன் மூலம் - உலகெங்கும் உள்ள ஏனைய தேசிய இனப் போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கூட்டுப் பாடம்.

அண்ணளவாக 45,000 மனித உயிர்கள் பலி எடுக்கப்படுகையில் - வெறும் அறிக்கைகளோடு இந்த உலகம் வாழாது இருந்ததற்கும் அதுவும் ஒரு காரணம்.

தமிழ் இனத்திற்கு இத்தகைய கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்தினையும் தன்னாட்சி அதிகாரத்தினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த ஒரு விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான்.

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் - சிறிலங்கா அரச இயந்திரத்தினதும், அதன் இராணுவ அடக்குமுறையினதும் பின்புலமாக - ஒட்டுமொத்தமான சிங்கள இனத்தினது மேலாதிக்க மனோபாவம் இருந்துவந்தது.

சிங்களத் தேசிய இனத்தின் பேரினவாதச் சித்தாந்தமே - தமிழ் தேசிய இனத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறையின் இயங்கு மையம்.

அந்தச் சித்தாந்தம் ஒரு வன்முறை வடிவத்தை எடுத்த பின்னணியில் தான், ஒரு தற்காப்பு வழிமுறையாகத் தான், தமிழர்களது ஆயுதப் போராட்டம் தனது வரலாற்றுப் பிறப்பை எடுத்தது.

இந்த வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருந்தும் கூட - அனைத்துலக சமுதாயம், தமக்கிடையே இருந்த முரண்பாடுகளைக் கூட ஓரத்தில் வைத்துவிட்டு, வெளிப்படையாகவே சிறிலங்கா நிகழ்த்திய இனக்கொலைக்கு முண்டுகொடுத்தது.

அதே வேளை - ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட உரிய முறையில் செயற்படாமல் பாராமுகம் காட்டியது. "Responsibility to Protect" என்பது வெறுமனே ஏட்டில் எழுதி வைப்பதற்கான ஒரு பொறுப்பு என்று மட்டுமே ஆகிப் போனது.

நடத்தப்பட்ட ஒர் இனவழிப்பை - அது ஒரு நாட்டின் இறைமைக்கு உட்பட்ட உள் விவகாரம் என்றவிதமாக ஒதுக்கி - கொலைகளில் இருந்து மனித உயிர்களைக் காக்க வேண்டிய தமது பொறுப்பிலிருந்து இந்த உலகம் விலகிக்கொண்டது.

பலவீனங்கள் இருந்த போதும், தவறுகள் இழைத்த போதும் - ஒரு மனித சமூகத்தின் விடுதலைக்காக, அந்த சமூகத்தின் அடிப்படையான வாழ்வு உரிமைகளுக்காகப் போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினைத் தண்டித்து அழிக்கத் துணை போனதன் மூலம் - உலகின் ஆதிக்க சக்திகள் அனைத்துமே, தமக்குள் இருந்த மேலாண்மைக் கூட்டு மனோபாவத்தினை 45,000 மனித உயிர்களின் புதைகுழிகளின் மீது பிரகடனம் செய்தன.

mullivaikkal-may19.jpg

ஓராயிரம் வார்த்தைகளுக்கு உள்ளேயும் அடங்காது:

மே 19 2009. முள்ளிவாய்க்கால். ஒரு சிங்களப் படை வீரனால் எடுக்கப்பட்ட படம்.

இந்த நிலையில் இந்த "மே 19"ஆம் நாளினை வெறுமனே ஈழத் தமிழரின் ஒரு துக்க நாளாகவோ, அல்லது இந்த உலகத்திற்கு எமது துயரத்தை வெளிக்காட்டும் ஒரு சோக நாளாகவோ மட்டும் கைக்கொள்வது போதுமானதாக அமையாது என புதினப்பலகை கருதுகின்றது.

ஒளிச் சுடர்கள் ஏற்றி, கறுப்புச்சட்டை அணிந்து, மெளன ஊர்வலங்கள் போய், உணவைத் துறந்து - எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துவிட்டுக் கலைந்து சென்றுவிடாமல், அந்த நாளுக்கு ஒர் ஆழமான அரசியல் அர்த்தத்தை, ஒரு புதிய அனைத்துலகப் பரிமாணத்தை நாம் வழங்க வேண்டும்.

ஆதலால் - வெறும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுக்கு ஒரு படி மேலே சென்று - எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை விரிவுபட்ட முறையில் முன்நகர்த்தும் நோக்கோடு - உலகின் வேறு மூலைகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு நாளாக, அவர்களோடு தோழமை பூணுவதற்கான ஒரு நாளாக, ஒடுக்கப்படுவோர் எல்லோருக்குமான ஒரு நாளாக - "மே 19"-ஐ தமிழர்கள் பிரகடனம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என புதினப்பலகை நம்புகின்றது.

தமது அரசியல்-பொருளாதார-பாதுகாப்பு நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் உலக வல்லரசுகளோடு வளைந்து நெழிந்து செல்ல வேண்டிய தேவைகள் எமக்கு இருப்பினும் கூட -

வல்லாதிக்க சக்திகளின் வாசலில் மண்டியிட்டு - பலவீனமாகி - அரசியற் பிச்சைக்காகக் காத்திருப்பதை விடவும், வலிமையற்றுக் கிடக்கும் ஏனைய இனங்களோடு கைகோர்த்து - பலம் பெற்று - எமது உரிமைகளுக்காக நிமிர்வதே சிறந்த வழி என புதினப்பலகை கருதுகின்றது.

ஈழத் தமிழனத்தின் மீதும் அதன் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் முள்ளிவாய்க்காலில் "மே 19" அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரம் போன்ற ஒரு துயரம் - நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடுகின்ற வேறு எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இனிமேல் நிகழக்கூடாது என்பதை உலகின் மனச்சாட்சிக்கு உணர்த்தும் நாளாக "மே 19" பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

உலகின் அடக்கப்படும் தேசிய இனங்கள், வல்லாதிக்க சக்திகளுக்குத் தமது அதிருப்தியை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு நாளாக "மே 19" பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

புதினப்பலகை அதனை இங்கு முன்மொழிந்து பரிந்துரை செய்கின்றது.

"மே 19"-ற்குப் பின்னாலே வரும் நாட்கள் கூட - அதே அரசியல் பரிமாணங்களோடு - ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருப்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

மே 25ஆம் நாள் முதல் யூன் 1ஆம் நாள் வரை உள்ள காலத்தினை "தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்களின் மக்களுக்கு தோழமை ஆதரவு வழங்கும் வாரமாக" [ Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories ] ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்கெனவே பிரகடனப்படுத்தியுள்ளது.

ஐ.நா. சாசனம், தனது பதினோராம் அத்தியாயத்தின் 73ஆவது பிரிவில் - தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்கள் தொடர்பிலான தனது கடப்பாட்டினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. [ Charter of the United Nations, CHAPTER XI: DECLARATION REGARDING NON-SELF-GOVERNING TERRITORIES, Article 73 ]

அதன் உப பிரிவின் முதலிரண்டு பகுதிகள் பின்வருமாறு கூறுகின்றன.

அ). அப் பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அரசியல், பொருளியல், சமூக மற்றும் கல்வி சார் மேம்பாட்டினை உறுதிப்படுத்தி, அவர்கள் நீதியாக நடத்தப்படுவதையும், ஊறுபடுத்தப்படலில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.

[ to ensure, with due respect for the culture of the peoples concerned, their political, economic, social, and educational advancement, their just treatment, and their protection against abuses; ]

ஆ). அம் மக்களின் அரசியல் அபிலாசைகளினைக் கருத்தில் எடுத்து, அம் மக்களின் நிலம் மற்றும் முன்னேற்ற நிலைகளுக்குப் பொருத்தமாக - தமக்கான தன்னாட்சிக் கட்டமைப்பினை உருவாக்கத் தேவையான அரசியல் நிறுவனங்களினை அவர்கள் உருவாக்குவதற்கு ஆதரவழித்து வழிசெய்தல்.

[ to develop self-government, to take due account of the political aspirations of the peoples, and to assist them in the progressive development of their free political institutions, according to the particular circumstances of each territory and its peoples and their varying stages of advancement; ]

ஐ.நா.வின் இந்த பிரகடனமும், அதனோடு இணைந்த ஏனைய பிரகடனங்களும் - தன்னாட்சி அதிகாரம் கோரிப் போராடும் உலகத் தேசிய இனங்களுக்கு மிகவும் இன்றியமையாத விடயங்களாகும்.

இதன் அடிப்படையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாரமும், "மே 19"-ற்குப் பின்னால் இயல்பாக இணைந்து வருகின்ற காரணத்தினால், "மே 19"ஆம் நாளை -

"ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”

"The Day of The Oppressed Nations"

- என தமிழ் தேசிய இனம் பிரகடனப்படுத்த வேண்டும் என புதினப்பலகை பரிந்துரை செய்கின்றது.

இவ்வாறாக - அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டுச் சேருவதே - அந்த மக்களின் போராட்டத்தோடு இணைத்து எமது போராட்டத்தையும் முன்னெடுப்பதே - அவர்களது ஆதரவையும் எமது போராட்டத்திற்குப் பலமாகக் கட்டி எழுப்புவதே - எதிர்காலத்திற்கு உகந்த ஒர் அணுகுமுறையாகவும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தினைப் புதிய செல்நெறி ஊடாக முன்னெடுக்கும் ஓர் செயற்பாடாகவும் அமையும்.

உலகத் தமிழ் சமூக ஆர்வலர்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் தனது இந்தப் பரிந்துரையைக் கவனத்திற் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என புதினப்பலகை வேண்டுகின்றது.

நன்றி: புதினப்பலகை

நேரடி இணைப்பு: http://puthinappalakai.com/view.php?20100330100817

Edited by இளைஞன்
பொருள் தவறாக புரிந்துகொள்ளப்படாதிருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. சாசனம், தனது பதினோராம் அத்தியாயத்தின் 73ஆவது பிரிவில் - தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்கள் தொடர்பிலான தனது கடப்பாட்டினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. [ Charter of the United Nations, CHAPTER XI: DECLARATION REGARDING NON-SELF-GOVERNING TERRITORIES, Article 73 ]

அதன் உப பிரிவின் முதலிரண்டு பகுதிகள் பின்வருமாறு கூறுகின்றன.

அ). அப் பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அரசியல், பொருளியல், சமூக மற்றும் கல்வி சார் மேம்பாட்டினை உறுதிப்படுத்தி, அவர்கள் நீதியாக நடத்தப்படுவதையும், ஊறுபடுத்தப்படலில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.

[ to ensure, with due respect for the culture of the peoples concerned, their political, economic, social, and educational advancement, their just treatment, and their protection against abuses; ]

ஆ). அம் மக்களின் அரசியல் அபிலாசைகளினைக் கருத்தில் எடுத்து, அம் மக்களின் நிலம் மற்றும் முன்னேற்ற நிலைகளுக்குப் பொருத்தமாக - தமக்கான தன்னாட்சிக் கட்டமைப்பினை உருவாக்கத் தேவையான அரசியல் நிறுவனங்களினை அவர்கள் உருவாக்குவதற்கு ஆதரவழித்து வழிசெய்தல்.

[ to develop self-government, to take due account of the political aspirations of the peoples, and to assist them in the progressive development of their free political institutions, according to the particular circumstances of each territory and its peoples and their varying stages of advancement; ]

ஐ.நா.வின் இந்த பிரகடனமும், அதனோடு இணைந்த ஏனைய பிரகடனங்களும் - தன்னாட்சி அதிகாரம் கோரிப் போராடும் உலகத் தேசிய இனங்களுக்கு மிகவும் இன்றியமையாத விடயங்களாகும்

.தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை எனற கட்டுரை தொகுப்பிலிருந்து:

ஏற்கனவே, ஜ.நா சபை நிறுவனம் வாயிலாக் மனிடத்திற்க்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்கள் தொகுக்கப்பட்டு ஜ.நாவின் சாசனங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளன .அடிப்படை மனித் உரிமைகள் ,மனித சுதந்திரங்கள், அரசியல் உரிமைகள்,குடியுரிமைகள்,பெண் உரிமாஇகள்,சிறார் உரிமைகள்,தேசிய இனங்களின் உரிமைகளின் சுயநிர்ணய உரிமைகள் போன்ற உரிமைப் பிரகடனங்களாகவும் மானிடத்திற்க்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஜ.நா செயற்பட்டு வருகிறது.இந்த அறநெறிக் கோட்பாடுகாளை ஜ நாவில் அங்கம் வகிக்கும் உலகநாடுகள் அனைத்துமே எற்றுக் கொண்டுள்ளன. மானிடத்திற்கான பொதுவிழுமியங்களை மேலும் செழுமப்பப்டுத்தி, விரிவுபடுத்தவும் ஜநா முயன்று வருகிறது.ஒரே தார்மீக ஒழுங்கில் மனித குலத்தை ஒன்றுபடுத்தி நெறிப்படுத்த இந்த உலக நிறுவனம் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறது......

இந்த கருத்தை முள்ளிவாய்க்கால் சம்பவம் (மே 18 2009)முதல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதியிருந்தார் .

இன்று அவர் இருந்திருந்தால் இப்படியான கருத்தை எழுதினதையிட்டு மனம் நோந்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தினங்களை எங்களுக்குள் இணையங்களில் நினைவு கூறுவதோடு நின்றுவிடாமல் சர்வதேச மக்களும் தெரிய உணரக் கொண்டாட வேண்டும். குறிப்பாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்.. வேலைக்குச் செல்பவர்கள்.. இந்த நாட்கள் பற்றிய தகவல்களை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்வதோடு அவர்களும் அறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் இவ்வாறான நாட்களின் கனதி உலகிற்குப் புரிய வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னணிகளை மற்றவர்கள் அறியும் நிலை வரும். அதைவிடுத்து எமக்குள் இவற்றை நினைவு கூறுவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இந்த நாட்களின் தார்ப்பரியமும் புரியப் போவதில்லை. எதிரிகளும் தண்டிக்கப்படப் போவதில்லை.

Edited by nedukkalapoovan

மே மாதம் 18 ஆம் திகதி மட்டுமே விடுதலைப் புலிகளின் தலைமையுடனும் அதன் தளபதிகளில் குறிப்பிட்டவர்களுடனும் தொடர்பு இருந்தது. அவர்களை தவிர மே மாதம் 18 ஆம் திகதி காலையில் காயமடைந்த போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலும் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் புலித்தேவன் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறான சரணடைதல் நடவடிக்கையில் ஐநா அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர்.

எனவேதான் மேமாதம் 18 ஆம் நாளை தெரிவுசெய்து அனைத்து நாடுகளிலும் நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தனியே இணையதளங்கள் முடிவு எடுத்து அறிக்கையை வெளியிடுவதால் ஒரு நாளை பிரகடனம் செய்துவிடமுடியாது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்பட்ட விடயம் நல்ல விடயம் தான் ஆனால் ஏற்கனவே மே 18ம் திகதியை போர்க் குற்றவியல் நாளாகப் பிரகனப் படுத்தி அதனை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை அறியாதது போன்று இப்பொழுது திடீரென்று 19ம் திகதியை நினைவு கூருமாறு சொல்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.அதனை ஒரு இணையத்தளம் பரிந்துரை செய்வது என்று சொல்லித் திணிப்பதும் இன்னொரு இணையத்தளம் அதனை வழிமொழிவதும் வரவேற்கத்தக்கதல்ல.18ந்திகதியோ 19ம் திகதியோ ஒரு திகதியாக இருக்க வேண்டும் இவ்வளவு நாளும் தூக்கத்தில் இருந்து விட்டு இப்பொழுது ஏன் குழப்புகிறார்கள் எங்களுக்குள் ஒற்;றுமையில்லை பகையேநீ எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போன்ற அறிவிப்பாக இருக்கின்றது.இதனை இப்படித் தாமதமாக வெளிப்படையாகப் பரிந்துரை செய்வதை விட்டு முன்பே ஒன்றாக கலந்து பேசி ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.அதன் பெயரே ஒற்றுமை.

  • தொடங்கியவர்

இதில குழப்புறதுக்கு எதுவும் இல்லை புலவர். மே 18 - போர்க்குற்ற நாள். மே 19 - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள். இரண்டும் வேறு வேறு விடயங்கள் தானே - இல்லையா? தவிர "மே 18 - போர்க்குற்ற நாள்" எண்டு அறிவிக்கப்பட்டது எப்போது? "மே 19 - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என முன்மொழியப்பட்டது எப்போது? :lol:

என்ர அறிவுக்கு எட்டின வரையில / என்ர ஞாபகத்துக்கு உட்பட்ட வகையில "மே 19 - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்" என மேற்குறிப்பிட்ட இணைய ஊடகம் முன்மொழிந்து சிலகாலங்களின் பின்னரே "மே 18 - போர்க்குற்ற நாள்" என அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன்.

ஏன்? யாம் ஒன்றும் அறியோம் பராபரனே :)

  • தொடங்கியவர்

மே மாதம் 18 ஆம் திகதி மட்டுமே விடுதலைப் புலிகளின் தலைமையுடனும் அதன் தளபதிகளில் குறிப்பிட்டவர்களுடனும் தொடர்பு இருந்தது. அவர்களை தவிர மே மாதம் 18 ஆம் திகதி காலையில் காயமடைந்த போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலும் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் புலித்தேவன் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறான சரணடைதல் நடவடிக்கையில் ஐநா அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர்.

எனவேதான் மேமாதம் 18 ஆம் நாளை தெரிவுசெய்து அனைத்து நாடுகளிலும் நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தனியே இணையதளங்கள் முடிவு எடுத்து அறிக்கையை வெளியிடுவதால் ஒரு நாளை பிரகடனம் செய்துவிடமுடியாது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

விசால், "மே 18" ஐ போர்க்குற்றநாளாக தெரிவு செய்வதற்கு நீங்கள் சொன்ன காரணங்கள் பொருத்தமானதே. அதேநேரம் "மே 19" ஐ ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாளாக தெரிவு செய்வதும் பொருத்தமானேதே. அன்று தான் தமிழ் மக்களை/தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகொண்டதாக சிங்களப் பேரினவாதம் அறிவித்த நாள். தனது பேரினவாத வெற்றியை பிரகடனப்படுத்திய நாள். இரண்டும் வெவ்வேறு விடயங்கள். தவிர, இணையத்தில அறிக்கை விடுறதால ஒரு நாளை பிரகடனம் செய்துவிடமுடியாது எண்டது தெரியாத அளவுக்கு யாழ் இணையம் ஒன்றும் :) - அதேநேரத்தில் யாழ் இணையம் அறிக்கையும் விடல :lol: இன்னொரு இணைய ஊடகத்தின் முன்மொழிவை - யாழ் இணையமும் வழிமொழிகிறது.

மேலே மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையும் அதைத்தான் சொல்கிறது. ஒடுக்கப்படும் இனங்களோடு சேர்ந்து நிற்கவும், அவர்களோடு உறவை வளர்க்கவும், அவர்களோடு இணைந்து ஒட்டுமொத்தமாக இந்தநாளை "ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான நாள்" என கடைப்பிடிக்கவும் - சர்வதேச சமூகத்துக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தவும் - இந்த நாளை பயன்படுத்துமாறு தான் சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதலில் நாம் விடயங்களை உள்வாங்கவேண்டும் என்ற அடிப்படையில் யாழ் இணையம் அதனை வழிமொழிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி..... பலஸ்தீனமா இல்ல இஸ்ரேலா ஒடுக்கப்பட்ட இனம் எண்டு தெரியேல.....சொன்னாதானே யாரோட சேர்ரது எண்டு தெரியும். :)

  • தொடங்கியவர்

சரி சரி..... பலஸ்தீனமா இல்ல இஸ்ரேலா ஒடுக்கப்பட்ட இனம் எண்டு தெரியேல.....சொன்னாதானே யாரோட சேர்ரது எண்டு தெரியும். :)

:lol: இஸ்ரேல் ஒடுக்கப்பட்ட இனம். பாலஸ்தீனம் ஒடுக்கப்படும் இனம். இப்ப தெளிவாகிட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

புதினப்பலகையில் போர்க் குற்றநாள் பற்றிய செய்தியைக் காணவில்லை. இரண்டும் வேறுவேறான பெயர் கொண்டு அழைக்கப் பட்டாலும்.ஒரு தேசிய இனத்தின் மீது புரியப்பட்ட போர்க்குற்றமே அவர்களை ஒடுக்குவதற்காகத்தான் நடத்தப்பட்டது.ஒரு கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு பெரியகோட்டைப் போட்டு முன்னையதைச சிறிதாக்கும் இருகோடுகள் தத்துவம் போல அடுத்தடுத்து ஒன்றோடொன்று தொடர்புபட்ட இரு நாட்களைத் தெரிவுசெய்து இரு நாட்களின் முக்கியத்துவததையும் இல்லாமல் செய்து விடுமோ என்ற அச்சம் இயல்பாகவே எழுமா எழாதா?

  • தொடங்கியவர்

புதினப்பலகையில் கீழ்க்காணும் திகதியில் "மே 19" என்று தலைப்பிடப்பட்டு முன்மொழியப்பட்டது:

செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 17:52 GMT

http://puthinappalakai.com/view.php?20100330100817

அதன்பின்னர் moonsoon journal அதனை (03 Apr 2010 அன்று) வழிமொழிந்தது:

http://www.monsoonjournal.com/ViewArticle.aspx?ArticleId=179

ஏன் ஏனைய ஊடகங்கள் அவற்றை அப்போது ஆதரிக்காமல் அல்லது வழிமொழியாமல் - சிலகாலம் கழித்து "மே 18 - போர்க்குற்ற நாள்" என்கிற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார்கள் என்கிற கேள்வியும் சந்தேகத்தோடு எழுப்பப்படக்கூடும். ஆனால், "மே 18" ஐ போர்க்குற்றநாளாக கடைப்பிடிப்பதுவும் - தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவதும் நல்லதே. வரவேற்கத்தக்க முயற்சியே.

தவிர, "போர்க்குற்றம்" என்பது ஆதிக்க சக்திகள் போராடும் இனங்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தும் ஒரு வழிமுறை மட்டுமே. போராடும் இனங்கள் ஆதிக்க சக்திகளால் ஒன்றிணைந்தே ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற செய்தியும், அதற்கெதிராக "ஒடுக்கப்படும் இனங்கள்" ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதுவுமே முக்கியமான செய்தி. அதனை புரிந்துகொண்டு தமிழ்மக்கள் செயற்படவேண்டும் என்பதே வேண்டப்படுவது. மற்றும்படி நாங்கள் ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒண்ட சொல்லி கடைப்பிடிக்கலாம். வேணுமெண்டா "மே 20" ஐ "போராடும் இனங்களின் எழுச்சி நாள்" எண்டும் ஒண்டை பிரகடனப்படுத்திட்டு கடைப்பிடிக்கலாம். :)

அதுவல்ல பிரச்சனை. சொல்ல விளைகிற செய்தியை சரியான முறையில் சர்வதேசத்துக்கு குறிப்பாக ஆதிக்க சக்திகளுக்கு சொல்கிறோமா என்பதே முக்கியம். :lol:

மே 18 - போர்க்குற்ற நாள்.

மே 19 - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்.

இரண்டையும் வழிமொழிகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: இஸ்ரேல் ஒடுக்கப்பட்ட இனம். பாலஸ்தீனம் ஒடுக்கப்படும் இனம். இப்ப தெளிவாகிட்டா?

அப்ப ரெண்டோடயும் சேரேலாது.... ஆபிரிக்காவில கூட்டு ருட்சி எண்டு ரண்டு இனமாம்....உதில எதோட சேர்ரது? :)

அப்ப ரெண்டோடயும் சேரேலாது.... ஆபிரிக்காவில கூட்டு ருட்சி எண்டு ரண்டு இனமாம்....உதில எதோட சேர்ரது? :)

ஆபிரிக்காவின் ருவாண்டாவில்.... ஆபிரிக்கா எண்டது ஒரு கண்டம்... அதில் ஒரு நாடுதான் ருவாண்டா... ஆசியாவில் தமிழர்களை சிங்களவர் எண்டு கேட்ப்பது போல கிடக்கு...

கூட்டுக்கலை ருட்சியினர் ஒடுக்கினால் யார் யாரை ஒடுக்கினார்களோ அவர்களே மேலாதிக்க சக்தி, மற்றவர் ஒடுங்கி போனவர்...

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி..... பலஸ்தீனமா இல்ல இஸ்ரேலா ஒடுக்கப்பட்ட இனம் எண்டு தெரியேல.....சொன்னாதானே யாரோட சேர்ரது எண்டு தெரியும். :)

யாரோடையும் ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஒட்டுண்ணி என்று தெரியும்தானே. நீங்கள் எப்பவும் ஒடுக்குவோருடன்தானே ஒட்டிக் கொண்டிருப்பீர்கள்.

  • தொடங்கியவர்

அப்ப ரெண்டோடயும் சேரேலாது.... ஆபிரிக்காவில கூட்டு ருட்சி எண்டு ரண்டு இனமாம்....உதில எதோட சேர்ரது? :)

தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யார் போராடுகினமோ, ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமது விடுதலைக்காக யார் போராடுகினமோ அவையோட சேர்ந்து நிப்பம். தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று தெரியாமல், ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்து நிக்கிறவையோடயும் - தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிஞ்சிருந்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடாமல் இருப்பவர்களோடும் கைகோர்க்க வேண்டியதில்லை :lol: இப்ப சரியா?

சரி சரி..... பலஸ்தீனமா இல்ல இஸ்ரேலா ஒடுக்கப்பட்ட இனம் எண்டு தெரியேல.....சொன்னாதானே யாரோட சேர்ரது எண்டு தெரியும். :)

உலகத்துக்கே தெரிந்த விடயத்தை ஒருவர் இப்படிக கேக்ககாரணம்.. அவர்களின் வக்கிரத்துக்கு துணைபோகும் ஊடகம்..

யாழ் போன்ற சமுதாயத்தின் மீது அக்கறையில்லாத கருத்துக்களம் இந்த வைரஸுக்களை அனுமதிப்பது.... வியாபரத்துக்காக.

மே 19 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்த சிறிலங்கா அரசே இப்போது மே 18 ஆம் நாளுக்கு மாறி அதற்காக ஒரு நாளையும் பிரகடனப்படுத்தியுள்ளது. அதேவேளை புதினப்பலகையின் ஆரோக்கியமான பல கட்டுரைகளையும் செய்திகளையும் வரவேற்கும் அதேவேளை முக்கியமான வேளையில் உலகத் தமிழர் பேரவை அல்லது நாடு கடந்த தமிழீழ அரசு அல்லது மக்கள் பேரவைகள் போன்ற புலத்தில் விடுதலைப்பணியை முன்னெடுக்கும் அமைப்புக்கள் எடுக்கவேண்டிய முடிவை தானே எடுத்து இணையத்தில் பிரசுரித்து விடுவதால் அதனை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் அதனை உரிய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தி ஆராய்வதை விடுத்து தாமே ஒரு நாள் என அறிவிப்பது ஒரு ஊடகத்திற்கு தேவைதானா?

அத்துடன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நினைவுநாளை பிரகடனப்படுத்துவதாயின் ஒடுக்ககப்பட்டுள்ள தமிழினத்தை தவிர வேறு ஒடுக்கப்பட்டுள்ள இனங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துபேசி முடிவு எடுத்திருக்கவேண்டும். அதனை செய்தார்களா என்பதை பார்க்கவேண்டும்.

மேலும் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மே 18 ஆம் திகதியை போர்க்குற்ற நாள் என்றோ போர்க்குற்றவியல் நாள் என்றோ சொல்வது தவறு. அதனை போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள் என்று வைத்திருக்கலாம். எப்போதும் பிழையான விடயங்களை குறித்து நாள் பிரகடனப்படுத்துவதில்லை. வறுமை ஒழிப்பு தினம் ஊழல் ஒழிப்பு தினம் மனித உரிமைகள் தினம் என்றே நாட்கள் பிரகடனம் செய்யப்படுகின்றன. ஆனால் மே - 18 ஆம் நாளை பிரதானப்படுத்தி தமிழர்கள் நினைவுகூருவது முக்கியமானது.

Edited by vishal

  • தொடங்கியவர்

மே 19 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்த சிறிலங்கா அரசே இப்போது மே 18 ஆம் நாளுக்கு மாறி அதற்காக ஒரு நாளையும் பிரகடனப்படுத்தியுள்ளது. அதேவேளை புதினப்பலகையின் ஆரோக்கியமான பல கட்டுரைகளையும் செய்திகளையும் வரவேற்கும் அதேவேளை முக்கியமான வேளையில் உலகத் தமிழர் பேரவை அல்லது நாடு கடந்த தமிழீழ அரசு அல்லது மக்கள் பேரவைகள் போன்ற புலத்தில் விடுதலைப்பணியை முன்னெடுக்கும் அமைப்புக்கள் எடுக்கவேண்டிய முடிவை தானே எடுத்து இணையத்தில் பிரசுரித்து விடுவதால் அதனை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் அதனை உரிய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தி ஆராய்வதை விடுத்து தாமே ஒரு நாள் என அறிவிப்பது ஒரு ஊடகத்திற்கு தேவைதானா?

அத்துடன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நினைவுநாளை பிரகடனப்படுத்துவதாயின் ஒடுக்ககப்பட்டுள்ள தமிழினத்தை தவிர வேறு ஒடுக்கப்பட்டுள்ள இனங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துபேசி முடிவு எடுத்திருக்கவேண்டும். அதனை செய்தார்களா என்பதை பார்க்கவேண்டும்.

மேலும் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மே 18 ஆம் திகதியை போர்க்குற்ற நாள் என்றோ போர்க்குற்றவியல் நாள் என்றோ சொல்வது தவறு. அதனை போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள் என்று வைத்திருக்கலாம். எப்போதும் பிழையான விடயங்களை குறித்து நாள் பிரகடனப்படுத்துவதில்லை. வறுமை ஒழிப்பு தினம் ஊழல் ஒழிப்பு தினம் மனித உரிமைகள் தினம் என்றே நாட்கள் பிரகடனம் செய்யப்படுகின்றன. ஆனால் மே - 18 ஆம் நாளை பிரதானப்படுத்தி தமிழர்கள் நினைவுகூருவது முக்கியமானது.

1. குறித்த ஊடகம் எந்த இடத்திலும் பிரகடனப்படுத்தவில்லை. அது சில காரணங்களையும் அவசியங்களையும் கூறி அந்த நாளை முன்மொழிந்திருக்கிறது. இணையம் சார்ந்து இயங்கும் ஒரு ஊடகம் என்ற வகையில் யாழ் இணையம் அதை வழிமொழிகிறது. எனவே நீங்கள் குறிப்பிடுகிற "நாடுகடந்த தமிழீழ அரசோ அல்லது உலகத் தமிழர் பேரவையோ" அதை அலசி ஆராய்ந்து சரியெனப்பட்டால் ஆவன செய்யலாம். இல்லையென்றால் புறந்தள்ளி போகலாம். அதற்காகத்தானே முன்மொழிவுகள் வழங்கப்படுகின்றன. முன்மொழிவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேணும் என்றில்லைத்தானே. விவாதங்களுக்கூடாக முடிவுகளை எட்டலாம். அதற்குத்தான் இந்தத் தலைப்பும். சரி பிழைகளை - சாதக பாதகங்களை ஆராய்வதற்கே கருத்தாடல்கள் நிகழ்த்தப்படுகிறது. சரியெனப்பட்டால், அதனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தலாம்.

2. போர்க்குற்ற நாள் என்பது தொடர்பாக நீங்கள் சொல்கிற கருத்து ஏற்புடையதே. அதே நேரத்தில், "போர்க்குற்ற நாள்" என்பதை நாம் முன்னெடுக்கிற போது அதில் உள்ள சாதக பாதகங்களை சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். தனியே தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்கள் பற்றிப் பேசப்போகிறோமா? ஒட்டுமொத்தமாக போராடும் இனங்கள் மீதான போர்க்குற்றங்கள் பற்றிப் பேசப்போகிறோமா? அவர்களோடு இணைந்து போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கப்போகிறோமா? போர்க்குற்றங்களுக்கு எதிரான நாளை கடைப்பிடிக்கிற போது எந்தளவு நேர்மையோடு எம்மால் செயற்பட முடியும்? எம்முடைய நேர்மை சர்வதேச சமூகத்தால் சந்தேகிக்கப்படுமா? சந்தேகிக்கப்படாதா? நாம் வீசுகிற பந்து எம்மைத் திருப்பி வந்து தாக்குமா? தாக்காதா? போன்ற விடயங்களையும் உள்ளெடுத்தால் நல்லது என்று படுகிறது. ஏனென்றால் மனித உரிமை அமைப்புகள் என்று கருதப்படுபவையும், போர்க்குற்றங்களுக்கு எதிரான அமைப்புகள் என்று கருதப்படுபவையும், சர்வதேச ஊடகங்களும் "போர்க்குற்றம்" என்று வருகிறபோது எந்த நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.

உங்களின் ஆரோக்கியமான கருத்தாடலுக்கு நன்றி விசால். சில கருத்துகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் உங்களுடைய கருத்தாக அதை மதிக்கிறேன். :wub:

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மே 17 - தாயகத்தில் துக்க நாள்

மே 18 - போர்க் குற்றவியல் நாள்

மே 19 - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்

எனது பார்வையில் இந்த மூன்று நாட்களுமே தமிழர்களின் வரலாற்றில் மிகவும் அவலம் சுமந்த நாட்கள். யூதர்களின் நோன்பு நாட்களைப் போன்று தமிழர்களும் இந்நாட்களை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவுறுத்தும்வண்ணம் நினைவு கூரவேண்டும்.

---------

Tisha B'Av, the Fast of the Ninth of Av, is a day of mourning to commemorate the many tragedies that have befallen the Jewish people, many of which coincidentally have occurred on the ninth of Av.

Tisha B'Av means "the ninth (day) of Av." It usually occurs during August.

Tisha B'Av primarily commemorates the destruction of the first and second Temples, both of which were destroyed on the ninth of Av (the first by the Babylonians in 586 B.C.E.; the second by the Romans in 70 C.E.).

Although this holiday is primarily meant to commemorate the destruction of the Temple, it is appropriate to consider on this day the many other tragedies of the Jewish people, many of which occurred on this day, most notably the expulsion of the Jews from Spain in 1492.1

http://www.jewfaq.org/holidayd.htm

-------------

வைகாசிப் பேரவலம் இந்த அனைத்து நிகழ்வுகளையும் மொத்தமாகக் கூறுகின்றது. நினைவில் நிறுத்திக் கொள்வதற்கு தினங்கள் தேவைதான். ஒடுக்கப்பட்ட இனங்களின் நாளாக யாழ் இணையத்தில் நாம் நினைவு கூருவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படி இருப்பினும்.. யாரோ செயற்பாட்டில இறங்கி இருகிறாங்கள் போல இருக்கு, ஐக்கிய இராட்சிய உறவுகள் அனைவரும் மே - 18 பாராளுமன்ற சதுக்கத்துக்கு வந்திருங்கோ. தனிய வராமல் உங்களுடைய நண்பர் உறவினர்களையும் அழைச்சுட்டு வாங்கோ.. பிற இனத்தவர் என்றாலும் கூட.

மற்றும் தனியாக புத்திஜீவிகளும் வாங்கோ என்று தனியா ஒரு வேண்டுகோள் விடணும்..

Mullivaikal%20Remembrance%20London.jpg

உறவுகளே நீங்கள் தனியா மே - 19 இல தான் ஒடுக்கப்பட்ட இனங்களோட இணைந்து நின்ரு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை.. எங்க எப்ப யார் ஒடுக்கப்படாலும் அங்க ஓங்கி ஒரு இடி விடுகிறதுக்கு யாரும் முன்மொழிவினமா என்று காத்திருக்கவேண்ட்டாம்..

அப்புறமா நான் தான் சொன்னான் என்று போட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை

விடுதலைகாகப்போராடிக்கொண்டிருக்கும் எமதினத்துக்கு ஊடகம் எனும் கருவி மிக அவசியமானதொன்றாகும். எமது விடுதலைபோராட்டம் தான் எமது வளர்ச்சிக்கட்கு முதற்காரணம் என்பதையும் யாரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்... இன்று நான்கூட கணனியில் இருந்து தமிழில் TYPE அடிகிறேன் என்றால் பாருங்களேன்.. ஆகவே எமது மக்களை தெளிவுபடுத்தாவிடினும் குழப்பியடிக்காமல் இருப்பதில் மிகக்கவனமெடுத்து கடமையுணர்வுடன் செயற்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகிறேன்.

கருத்துப்பிழைகட்கும் எழுத்துப்பிழைகளுக்கும் சேர்த்து ஒரேமன்னிப்பா கோரி விடுகிறேன்.

நாளை கஞ்சி குடிக்கப்போவோர் யார்?

முழு நாளும் உணவு புறக்கணிப்பு..தண்ணீர் பரவாயில்லை..

கஞ்சி குடிக்க வேண்டும்... நீங்கள் தயாரா? நான் தயார்....

  • 2 weeks later...

நாளை கஞ்சி குடிக்கப்போவோர் யார்?

முழு நாளும் உணவு புறக்கணிப்பு..தண்ணீர் பரவாயில்லை..

கஞ்சி குடிக்க வேண்டும்... நீங்கள் தயாரா? நான் தயார்....

கஞ்சி உணவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.