Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவந்த முள்ளிவாய்க்கால் பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்....

என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன்.

மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்...

http://karumpu.com/wp-content/uploads/2010/mullivaaykaal song.mp3

இசையமைப்பு, பாடல் வரிகள், பாடியவர்: இளங்கவி

பல்லவி

பிஞ்சுகள் கருகிய நிலம்

புதை குழியெங்கும் பிணம்

அவலத்தின் உச்சம் பார்த்துவிட்ட

முள்ளிவாய்க்கால் பேரவலம்.....

சரணம் - 1

எங்கள் இதயத்தின் மூச்சு

உலகே கேட்கலையா...

ஒன்றாய் புதைந்த எங்கள் பிணம்

உங்கள் கண்களில் தெரியலையா...

ஏனிந்த மெளனம் கலையுங்கள்

எங்கள் இனத்தைக் காத்திடுங்கள்

இல்லாதிருந்தால் தமிழினமே

சரித்திரமின்றி அழிந்துவிடும்....

சரணம் -2

நாம் விழுந்திட மாட்டோம்

விழ விழ எழுந்திடுவோம்...

விடுதலை நோக்கி நம் பயணம்

தொடரும் இறுதிவரை தொடரும்..

தமிழீழம் பிறக்கும் நாளை

தமிழர் மனங்கள் மகிழும்....

அதுவரை வலிகள் எமது

வலிகள் நீங்கி எங்கே விடுதலை...

இடையிடையே INTERLUDE இல் போடப்பட்ட வசனங்கள்...

வீழாது எங்களினம் வீழாது என்றும்

ஓயாது எங்களினம் விடுதலையின்றி ஓயாது...

வீணாய் காலில் மிதிபட்டுச் சாக

எலிகள் என்று நினைத்தாயா...

கொடியிலும் வீரம் காட்டிப் பாயும்

புலியினம் எங்கள் கொடி தோழா....

முதலாவது சரணம் முடிவின் பின்னர் வரும் வரிகள்..

புதை குழியெல்லாம் பிணம்..

புதை குழியெல்லாம் பிணம்..

தமிழர் அழிந்த ஒரிடம்

முள்ளிவாய்க்கால் பேரவலம்....

இளங்கவி

குறிப்பு: இருக்கும் குறைகள் அனைத்தயும் தயயங்காமல் கூறவும்.. அது என்னை வளர்க்க உதவும்...

நிறைகள் இருந்தாலும் குறிப்பிடவும் அது மேலும் பல படைப்புக்களைத் தர எனக்கு ஊக்கத்தைத் தரும்

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது, தொடருங்கள் இளங்கவி! பாடல் வரிகளையும் பதிந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

உங்கள் குரலில் உங்கள் பாடலை கேட்டது மிக்க மகிழ்ச்சி இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பாளனாகவும் பாடகனாகவும் புது அவதாரமெடுத்திருக்கும் எங்கள் இளங்கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.பாடல் வரிகள் உணர்வுபூர்வமாக வெளிப்பட்டிருக்கின்றன.

துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது, தொடருங்கள் இளங்கவி! பாடல் வரிகளையும் பதிந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

suvy

நன்று என்று சொன்னதற்கு நன்றிகள்... உங்கள் விருப்பப்படியே பாடல் வரிகளையும் பதிந்துவிட்டேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் குரலில் உங்கள் பாடலை கேட்டது மிக்க மகிழ்ச்சி இளங்கவி.

மச்சான்

பாடக்கூடிய குரல் வளம் உள்ளவர்களிடம் எனக்கு இந்தப்பாடலை இலவசமாகப் பாடித்தரமுடியுமா என்று கேட்டு அவர்களின் நேரத்தை விரயமாக்கவோ, அவர்களை தர்மசங்கடமாக்கவோ விரும்பாத காரணத்தினாலேயே நான் இதைப் பாடினேனே தவிர எனக்கு நான் தான் பாடவேண்டுமென்ற விருப்பத்துடன் அல்ல... காரணம் பணம் கொடுத்துப் பாடவைக்கும் பொருளாதார நிலை எனக்கில்லை...

நான் இந்தப் பாடலை உருவாக உதவிய Mac கணனியும் அதில் install பண்ணப்பட்டிருந்த Logic Express 7 என்ற பழைய மென்பொருளும் நான் தற்பொழுது இசை பயின்றி கொண்டிருக்கும் கல்லூரியினால் குப்பையில் போடவைத்திருந்ததை £40 பவுண்ஸ்க்கு தந்தார்கள் அதில் தான் இதை செய்திருக்கிறேன், புதிய கணனியும் latest மென்பொருளும் வாங்கும் நிலை வரும் போது நிச்சயம் தரமான ஆக்கங்களைத் தரமுடியும்..

மேலும் நான் இசையமைக்கும் melody க்கு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது நான் எழுதித் தரும் தாயகம் சம்மந்தமான பாடலை இலவசமாகப் பாடி எனக்கு any form of audio files ஆக எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார்களானால் நிச்சயம் நல்ல குரல் வளமுள்ளவர்களின் பாடலை எனது இசையில் நீங்கள் கேட்கமுடியும்..

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மச்சான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையமைப்பாளனாகவும் பாடகனாகவும் புது அவதாரமெடுத்திருக்கும் எங்கள் இளங்கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.பாடல் வரிகள் உணர்வுபூர்வமாக வெளிப்பட்டிருக்கின்றன.

துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி.

காவலூர் கண்மணி அக்காவுக்கு

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா....

சிறு வயதிலிருந்தே இசையில் நாட்டம்.... அதனால் இப்போது இசைப்படிப்பு, தாய் நாடு சம்மந்தமான ஆக்கங்கள் தான் என்னிசையில் அதிகம் இருக்கும்... ஆனால் நிசசயமாகப் பாடகராக வரவேண்டுமென்ற ஆசையில்லையக்கா, மச்சானுக்கு சொல்லியிருந்த பதிலில் எப்படிப் பாடகராக வரவேண்டியிருந்தது என்ற பதில் இருக்கு...

பணம் கொடுத்து ஆக்கங்களை உருவாக்க முடியாத நிலையில் என் குரல் அப்பப்போ வெளிப்படும்... காதுகளை தயாராக வைத்திருங்கள்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

இசை அமைப்பாளனாகவும்,பாடகனாவும் புதிய பிறப்பு எடுத்து இருக்கும் இளங்கவிக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துகள்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எண்டு சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்..அப்படித் தான் குப்பையில் கிடந்து வாங்கிய மென்பொருளும் தங்கள் முன்றேற்றத்துக்கு அடித்தளம் போட்டுள்ளது..மேலும்,மேலும் இதைப் போன்று பல படைப்புக்கள் வெளி வரவேண்டும் எண்டு வாழ்த்தி செல்கிறேன்.நன்றி. :)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பாளனாகவும் பாடகனாகவும் புது அவதாரமெடுத்திருக்கும் எங்கள் இளங்கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.பாடல் வரிகள் உணர்வுபூர்வமாக வெளிப்பட்டிருக்கின்றன.பச்சை ஒன்று குத்தியுள்ளேன்

பணம் கொடுத்துப் பாடவைக்கும் பொருளாதார நிலை எனக்கில்லை...

நான் இந்தப் பாடலை உருவாக உதவிய Mac கணனியும் அதில் install பண்ணப்பட்டிருந்த Logic Express 7 என்ற பழைய மென்பொருளும் நான் தற்பொழுது இசை பயின்றி கொண்டிருக்கும் கல்லூரியினால் குப்பையில் போடவைத்திருந்ததை £40 பவுண்ஸ்க்கு தந்தார்கள் அதில் தான் இதை செய்திருக்கிறேன், புதிய கணனியும் latest மென்பொருளும் வாங்கும் நிலை வரும் போது நிச்சயம் தரமான ஆக்கங்களைத் தரமுடியும்..

தங்களது சூழ்நிலை புரிவதால் தவறுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை அமைப்பாளனாகவும்,பாடகனாவும் புதிய பிறப்பு எடுத்து இருக்கும் இளங்கவிக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துகள்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எண்டு சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்..அப்படித் தான் குப்பையில் கிடந்து வாங்கிய மென்பொருளும் தங்கள் முன்றேற்றத்துக்கு அடித்தளம் போட்டுள்ளது..மேலும்,மேலும் இதைப் போன்று பல படைப்புக்கள் வெளி வரவேண்டும் எண்டு வாழ்த்தி செல்கிறேன்.நன்றி. :)

யாயினி

நான் ஏன் இந்தப் பாடலை பாட வேண்டியிருந்தது என்பதை மற்றவர்களுக்கான பதிலில் ஏற்கனவே சொல்லியிருந்தேன்...

மற்றும் மன உணர்வுகளை வெளிப்படுத்த இசை மிகச்சிறந்த ஓர் ஊடகம், அது இலகுவில் எல்லோரையும் போய்ச் சேரக்கூடியது , அதுதான் இந்த முயற்சி...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையமைப்பாளனாகவும் பாடகனாகவும் புது அவதாரமெடுத்திருக்கும் எங்கள் இளங்கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.பாடல் வரிகள் உணர்வுபூர்வமாக வெளிப்பட்டிருக்கின்றன.பச்சை ஒன்று குத்தியுள்ளேன்

தங்களது சூழ்நிலை புரிவதால் தவறுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை

நன்றி அண்ணா...

ஆரம்பமென்றபடியால் தவறுகள் நிறைய இருக்கலாம், தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போதுதான் எமக்கும் புரியவரும் எனவே தயங்கவேண்டாம் தவறுகளை சுட்டிக்காட்ட....

உங்கள் பச்சைப் புள்ளிக்கும் நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா..தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகச் செய்திருக்கிறீர்கள் இளங்கவி..! வாழ்த்துக்கள் உங்களுக்கு..! உங்கள் முயற்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அர்த்தம் விளங்கிக் கேட்க நன்றாக இருக்கிறது! :lol:

வரிகளை தந்ததுக்கு நன்றி! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை அண்ணா..தொடருங்கள்..

பையன் 26

மிக்க நன்றிகள் பாராட்டியதற்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இளங்கவி.

nunavilan

மிக்க நன்றி... என் படைப்புக உங்கள் விருப்பம் போல நிச்சயம் தொடரும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாகச் செய்திருக்கிறீர்கள் இளங்கவி..! வாழ்த்துக்கள் உங்களுக்கு..! உங்கள் முயற்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும்..!

இசைக்கலைஞன்

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு...

நிச்சயம் நல்ல படைப்புக்களைத் தர முயற்சிப்பேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா,

உங்கள் சொந்த குரலில் கேட்கும் போது தான் நீங்கள் சொல்ல வந்த விடையம், அதனுடைய வலியைச் சொல்ல முடியும்.

நன்றாக இருக்கிறது அண்ணா. மேலும் குறைகளைக் களைந்து உங்கள் படைப்புக்கள் மேன் மேலும் வளர என் உளமார்ந்த‌

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது அர்த்தம் விளங்கிக் கேட்க நன்றாக இருக்கிறது! :rolleyes:

வரிகளை தந்ததுக்கு நன்றி! :lol:

நன்றி suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா,

உங்கள் சொந்த குரலில் கேட்கும் போது தான் நீங்கள் சொல்ல வந்த விடையம், அதனுடைய வலியைச் சொல்ல முடியும்.

நன்றாக இருக்கிறது அண்ணா. மேலும் குறைகளைக் களைந்து உங்கள் படைப்புக்கள் மேன் மேலும் வளர என் உளமார்ந்த‌

வாழ்த்துக்கள்.

ஜீவா

இந்தப் படைப்பு உண்மையிலேயே அவசரத்தில் முள்ளிவாய்க்கால் 18ம் திகதி நினைவு தினத்துக்கு தரவேண்டுமென்று படைக்கப்பட்டதால் பல குறைகள் நிச்சயம் இருக்கும்... இதன் குறைகளையே நிவர்த்தி செய்து video வும் சேர்த்து தர சில முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்.... தரப்போகும் இதே பாடலில் சில வித்தியாசங்களை உணருவீர்கள்...

எனது அடுத்த படைப்புக்களில் நிச்சயம் முன்னேற்றம் இருக்கும்....

கருத்துக்கு நன்றி ஜீவா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.