Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19ம் திகதியே தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war.

Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead.

The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger

http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html

நாங்கள்தான் இருக்கிறார் இல்லை என்று அவரை வைச்சு அரசியல் நடத்திரம் என்றால்

அடோ ...நீங்களுமா? அவர் 18 செத்தார் 19 செத்தார் என்று அரசியல் நடத்திறது...

யானை இருந்தாலும் ஆயிரம் , இறந்தாலும் ...ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அல்ல தமிழ் மக்களின் மக்கள் போராட்டம் எனவே வரலாற்றை மாற்ற முற்படாதீர்கள்

கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அல்ல தமிழ் மக்கள் தான். அவர்களின் மக்கள் போராட்டம் தான் தோற்கடிக்கப்பட்டது. எனவே வரலாற்றை மாற்ற முற்படாதீர்கள் அதனை திருத்திக் கொள்ளுங்கள் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஐ.பி.சி வானொலிக்கு வழங்கிய ஆய்வுரையில் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்காக மக்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் நேற்று வழங்கிய செவ்வியின் எழுத்து வடிவம் வருமாறு:

முள்ளிவாய்காலில் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனமாகி இன்றுடன் ஒரு வருடம் கடந்துவிட்டது. 3 இலட்சம் படையினர், பலஆயிரக்கணக்கான வான் தாக்குதல்கள், பல இலட்சம் எறிகணை வீச்சுக்கள் போன்றவற்றுடன் இரண்டரை வருடங்கள் வன்னி பிரதேசத்தின் மீது சிறிலலங்கா இராணுவம் தனது கூட்டணி நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளின் இராணுவ தொழில்நுட்ப உதவிகளுடன் இந்த கொடுமையான போரை மேற்கொண்டிருந்தது.

50,000 படையினரையும், 40 டாங்கிகளையும் தாருங்கள் போரை முடித்துவிடுகிறேன் என 1986 களில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்து முதலி வரைந்த அதே திட்டத்தை தான் தற்போதை அரசு கையில் எடுத்திருந்தது. 6 மடங்கு படை பல அதிகரிப்பு பல மடங்கு ஆயுதப்பிரயோகம் என போரை மேற்கொண்ட சிங்கள அரசு அனைத்துலகத்தின் போரியல் விதிகள் அனைத்தையும் புறம்தள்ளி இந்த பேரை பெரும் மனித அவலங்களுடன் நிறைவு செய்துள்ளது.

கடந்த வருடம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை போர் நிறைவுபெற்றது வரையான காலப்பகுதியில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர், எத்தனைபேர் காணமாமல் பேயினர், எனத்தனைபேர் காயமடைந்தனர் என்ற தகவல்களை கூட அனைத்துலக அமைப்புக்கள் ஒரு வருடம் கடந்த நிலையிலும் உத்தியோகபூர்வமாக வெளியிடமுடியாத நிலையில் உள்ளன.

40,000 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்ததன் மூலம் கோடன் வைஸ் தனது மனதின் பாரங்களை இறக்கி வைத்துள்ளார். ஆனால் சிங்கள இனவாதிகளின் பார்வையில் அவரும் புலியாகிவிட்டார்.

சிங்கள இனத்திற்கு சாமரம் வீசும் பல ஆய்வாளர்களும், ஊடகங்களும் போரை சிறீலங்கா அரசு நிறைவு செய்தது அதன் இராணுவ வல்லமையை காட்டுவதாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல, அங்கு உண்மையான போரியல் விதிகள் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு போர் நடைபெறவில்லை, முற்று முழுதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றுள்ளது.

வன்னிப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளும், வர்த்தக நிலையங்களும் அழிக்கப்பட்டன. அங்குலம், அங்குலமாக எறிகணைகள் வீசப்பட்டன. கனரக ஆயுதங்களை கொண்டு பொதுமக்கள் செறிந்து வாழ்ந்த முகாம்களையும், நோயாளர்களும், காயமடைந்தவர்களும் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைகளையும் சிங்கள படையினர் தாக்கினர்.

உலகின் கண்களில் இருந்து பிராந்திய வல்லரகளால் மறைக்கப்பட்ட ஒரு சிறிய பிரதேசத்திற்குள் சுற்றிவழைக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் எமது அடிமைகள் என்ற இனவாத சிந்தனைக்குள் வளர்க்கப்பட்ட சிங்கள காடைய இனத்தின் படை சிப்பாய்கள் கனரக ஆயுதங்களுடன் களம் இறங்கினர்.

உச்சக்ககட்ட இன அழிப்பு மே 16 ஆம் நாளில் இருந்து 18 ஆம் நாள் வரை நடந்தேறியது. முள்ளிவாய்க்காலில் குழந்தைகளும், வயதானவர்களும், பெண்களும், நோயாளிகளும், சிறுவர்களும் எழுப்பிய மரண ஓலங்கள் கந்தக புகைக்குள் மறைந்துபோனது.

தமிழ் இனம் சிந்திய குருதி காயும் முன்னரே இந்தியாவும், சீனாவும் சிங்கள பேரினவாதிகளை கட்டியணைத்து அதன் வெற்றியை பாராட்டின. ஒரு நாட்டின் அத்தனை கட்டமைப்புக்களுடன் அமைதியாக வாழ்ந்து வந்த தமிழ் இனத்தின் அந்த நிர்வாகம், சின்னம் சிறிய தேசம் மீண்டும் சிங்கள படைகளால் கைப்பற்றப்பட்டு விட்டது.

மே 18 என்பது தமிழ் மக்கள் ஆயுத ரீதியாக தோற்றடிக்கப்பட்ட தினமல்ல, அவர்களின் நாடு சிங்கள இனத்தினால் கைப்பற்றப்பட்ட தினம். நான் ஏன் இதனை இங்கு கூறுகிறேன் என்றால் வன்னியை தமிழ் மக்கள் ஆண்டபோது, அனைத்துலக சமூகம் அங்கு சென்று வந்தது. தமிழ் மக்களின் தலைவனாக தேசியத்தலைவரை ஏற்றுக்கொண்டு பேச்சுக்களையும் நடத்தியது.

சில மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளின் போர் நுட்பங்களையும் கேட்டு வாங்கிக்கொண்டன. 2000 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கிழக்கு கடலில் தரித்து நின்ற பிரித்தானியா கப்பலை பார்வையிட கடற்புலிகளும் அனுமதிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் காலம் சென்ற அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைக்கென சென்றபோதெல்லாம் அவரை ஒருதேசத்தின் இரஜதந்திரியாகவே உலகம் வரவேற்றுக் கொண்டது என்பதை பிரித்தானியாவின் இன்டிப்பென்டன்ற் நாளேடே தெரிவித்திருந்தது.

ஐ.நாவின் சிறுவர்களுக்கான பிரதிநிதி ஒலாரா ஒட்டுணு கூட வன்னி சென்று விடுதலைப்புலிகளின் படைத் தளங்களையும், சிறுவர் பராமரிப்பு முறைகளையும் கண்டு சென்றிருந்தார். இவ்வாறு பல காரணிகளை கூறலாம் அதற்கு இங்கு நேரம் போதாது.

எமது தேசத்தின் குழந்தைகள் தமது வாழ்க்கையையும், உயிரையும் அர்ப்பணித்து சிறுகச் சிறுக கட்டியமைந்த தேசத்தை ஆசிய பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் மீண்டும் சிங்கள இனம் கைப்பற்றிகொண்டுள்ளது.

இந்த போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஆதரவு ஊடகங்களும், ஆய்வாளர்களும் தெரிவிக்கன்றனர். ஆனால் தோற்கடிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழ் இனமும் என்பதே உண்மை.

போரின் இறுதிக்கட்டத்தில் எமது தேசத்தையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக அனைத்துலகத்திலும் வாழ்ந்து வரும் புலம்பெயர் மக்களிடம் ஒரு மக்கள் போரட்டம் வெடித்திருந்தது. ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். போரை நிறுத்த உதவுமாறு உலக நாடுகளின் வாசல்களில் குவிந்தார்கள்.

ஈழத்தின் தமிழ் புதல்வர்கள் ஏன் பிரித்தானியாவின் சாலைகளை முடக்கினார்கள் என்ற தலைப்பில் ஈவினிங் ஸ்ரான்டட் பத்திரியை செய்தியை வெளியிட்டிருந்தது. அது மட்டுமல்லாது அனைத்துலக ஊடகங்களிலும் தமிழ் மக்களின் போராட்டம் தான் அதிக இடங்களை பிடித்து கொண்டது.

ஆனாலும் நாம் தோற்கடிக்கப்பட்டோம், இராஜதந்திர நடவடிக்கை என்ற அஸ்த்திரத்தின் மூலம் ஆசிய பிராந்திய வல்லரகள் உலகத்தின் காதுகளை பொத்திக்கொண்டது.

எனவே 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அல்ல தமிழ் மக்கள் தான். அவர்களின் மக்கள் போராட்டம் தான் தோற்கடிக்கப்பட்டது. எனவே வரலாற்றை மாற்ற முற்படாதீர்கள் அதனை திருத்திக் கொள்ளுங்கள்.

எமது முன்னோர்கள் இழந்த தேசத்தை மீண்டும் கட்டியமமைத்த நாம் அதனை மீண்டும் இனவாதிகளிடம் இழந்துவிட்டோம். போரில் கைப்பற்றப்பட்ட மக்கள் ஒரு நாட்டடை கைப்பற்றும் எதிரி நாடு மேற்கொள்ளும் சீரழிவுகளில் சிக்குண்டுள்ளனர்.

எனவே மீண்டும் எமது தேசத்தை கைப்பற்றுவதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? எங்கருந்து அதனை ஆரம்பிக்கப்போகிறோம்? எந்த இரஜதந்திரவழிகளை கையாளப்போகிறோம்? எந்த நாட்டுடன் கூட்டுச்சேரப்போகிறோம்?

சிங்கள காடையர்களை தோற்கடிக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் இனத்தின் மீது தீவிர பற்றுக்கொண்டவர்களாக மாறியே தீரவேண்டும். அதனை தான் வன்னியில் நடைபெற்ற போரும், அதன் பின்னர் ஒரு வருடமாக அங்கு கைப்பற்றப்பட்ட மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சீரழிவுகளும், மெல்ல மெல்ல விழுங்கப்படும் எமது பிரதேசமும் எமக்கு கற்றுத்தந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அல்ல தமிழ் மக்கள் தான். அவர்களின் மக்கள் போராட்டம் தான் தோற்கடிக்கப்பட்டது. எனவே வரலாற்றை மாற்ற முற்படாதீர்கள் அதனை திருத்திக் கொள்ளுங்கள் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஐ.பி.சி வானொலிக்கு வழங்கிய ஆய்வுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து ஏற்க முடியாதது.

மாறாக தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகளேயன்றி ஒருபோதும் தமிழ் மக்களையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் இனவிடுதலைப் போராட்டத்தை யாராலும் அழித்து விட முடியாது.தோற்கடிக்க முடியாது.

தோற்கடிக்கப்பட்டது ஜன நாயகம் என்ற முகமூடிக்குள் மறைந்து கொண்டு இன அழிப்பை ஊக்கப்படுத்திய உலக, பிராந்திய அராஜக வல்லரசுகளே.

அவர்களின் முகமூடியே கிழித்தெறியப்பட்டுள்ளது.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னர் சொன்னா சரியா தான் இருக்கும். போரில ராஜபக்சா பிரதர்ஸ் மனித உரிமை மீறினது தொடர்பா சாட்சியம் சொல்ல றெடியெண்டு போன கிழமையும் இங்க செய்தி போட்டவை. :)

பொன்னர் சொன்னா சரியா தான் இருக்கும். போரில ராஜபக்சா பிரதர்ஸ் மனித உரிமை மீறினது தொடர்பா சாட்சியம் சொல்ல றெடியெண்டு போன கிழமையும் இங்க செய்தி போட்டவை. :)

எங்கை போட்டவை...??

அப்படி செய்தியை குடுத்தது டெயிலி மிரர் எண்டு எல்லொ சொன்னவை... அவர் செய்தி குடுத்தது யாழிணையத்துக்கே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி இருக்கிறார் அரசியல் இல்ல எண்டுறீயள். அப்ப இனியாவது துக்கம் அனுட்டிக்லாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னர் சொன்னா சரியா தான் இருக்கும். போரில ராஜபக்சா பிரதர்ஸ் மனித உரிமை மீறினது தொடர்பா சாட்சியம் சொல்ல றெடியெண்டு போன கிழமையும் இங்க செய்தி போட்டவை. :)

ஜோவ் பம்மாத்து செய்தியின் ஆதாரத்தை தரமுடியுமா. தமிழும் ஒழுங்காக தெரியாது. அதற்குள் விவாதிக்க வந்து விட்டார். யாரையா உள்ளே விட்டது?? உங்களை போன்றவர்களால் யாழ் கள உறுப்பினர்கள் என்றுமே அதிர்ச்சி அடைய போவதில்லை.என்னை போல் ஒரு சிலர் விடை தருவது மறுத்தான் தான். எப்பவுமே உமது பருப்பு இங்கு வேகாது.

மிக நம்பகமான தகவல்களின்படி 16 இரவு அல்லது 17 அதிகாலை பெரும்பாலானான விடயங்கள் களத்தில் முடிந்துவிட்டது. செய்திகள் 17 மாலை முதல் கசியத் தொடங்கின.

சரத் உளறுவது போல் மகிந்த பாராளுமன்றத்தில் இறப்பை அறிவிக்கவில்லை. போர் முடிந்தது என்பதே அவரது தகவல்.

... இருக்கிறார் ... இல்லை ... தப்பி விட்டார் ... என்பவைகள் ஒரு புறத்தே இருக்கட்டும்! சரத் பொன்சேகா தெரிவித்த செய்தியால் சிறிலங்கா அரசு கலங்கியிருக்கிறது! ஏன்???? ... யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவும் வழி வகுக்கும்!

18ல் கொல்லப்பட்டதாக தெரிவித்து ... இல்லை 19ல் என்றால்?? ... இங்கிருந்து சிறிலங்க அரசின் அழைப்பின் பேரில் சென்று சென்று வந்த ஒட்டு/ஒட்டில்லா குழு அங்கத்தவர்களும், கொழும்புத் தகவல்களும் .... அங்கு ஒரு ஒளிப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அதில் ...!!! ... பின்பு அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு, கோடாரியால் தலையின் பின் புறத்தே வெட்டித்தான் கொன்றார்களென்றும் ....!

ஆனால் எம்மூடகங்களோ, எம் புலத்து அரசொயல் வாதிகளோ மூச்சு இதைப்பற்றி விடுகிறார்களில்லை?????????!!!!!!!!! ... இருக்கிறார்/இல்லை அரசியல் அவர்களை தடுக்கிறது!!

படைத்துறை ஆய்வாளர் அருஷ் பட்டம் கொடுத்தது ஆர். அவர்தான் யாழ் இணையத்தை படுகேவலமாக தனது லங்காஈநியூஸ் என்ற களவெடுத்து போடுகிற இணையத்தளத்தில எழுதினவர். எந்த படைத்துறை ஆய்வை உவர் செய்கிறார். உந்த ஆய்வாளர்கள் காட்டின பம்மாத்திலதானே மேற்குலக நாடுகளில இருந்த சனம் ஏமாந்திருந்தது. அதோட உந்த அருஷ் எண்டவர் சரியான சுத்துமாத்துக்காரர். தான் பெரிய சுத்தமான ஆள் எண்டு யாழ் இணையத்தை மிகக்கேவலமாக தாக்கி எழுதியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இருக்கிறார் ... இல்லை ... தப்பி விட்டார் ... என்பவைகள் ஒரு புறத்தே இருக்கட்டும்! சரத் பொன்சேகா தெரிவித்த செய்தியால் சிறிலங்கா அரசு கலங்கியிருக்கிறது! ஏன்???? ... யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவும் வழி வகுக்கும்!

18ல் கொல்லப்பட்டதாக தெரிவித்து ... இல்லை 19ல் என்றால்?? ... இங்கிருந்து சிறிலங்க அரசின் அழைப்பின் பேரில் சென்று சென்று வந்த ஒட்டு/ஒட்டில்லா குழு அங்கத்தவர்களும், கொழும்புத் தகவல்களும் .... அங்கு ஒரு ஒளிப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அதில் சரணடைந்த பின்பு அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு, கோடாரியால் தலையின் பின் புறத்தே வெட்டித்தான் கொன்றார்களென்றும் ....!

ஆனால் எம்மூடகங்களோ, எம் புலத்து அரசொயல் வாதிகளோ மூச்சு இதைப்பற்றி விடுகிறார்களில்லை?????????!!!!!!!!! ... இருக்கிறார்/இல்லை அரசியல் அவர்களை தடுக்கிறது!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அண்ணை "இல்லை இல்லை" குழுமத்தை சேர்ந்தவர் எண்டு எடுத்துக்கொள்ளலாமோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

... இருக்கிறார் ... இல்லை ... தப்பி விட்டார் ... என்பவைகள் ஒரு புறத்தே இருக்கட்டும்! சரத் பொன்சேகா தெரிவித்த செய்தியால் சிறிலங்கா அரசு கலங்கியிருக்கிறது! ஏன்???? ... யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவும் வழி வகுக்கும்!

18ல் கொல்லப்பட்டதாக தெரிவித்து ... இல்லை 19ல் என்றால்?? ... இங்கிருந்து சிறிலங்க அரசின் அழைப்பின் பேரில் சென்று சென்று வந்த ஒட்டு/ஒட்டில்லா குழு அங்கத்தவர்களும், கொழும்புத் தகவல்களும் .... அங்கு ஒரு ஒளிப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அதில் ...!!! ... பின்பு அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு, கோடாரியால் தலையின் பின் புறத்தே வெட்டித்தான் கொன்றார்களென்றும் ....!

ஆனால் எம்மூடகங்களோ, எம் புலத்து அரசொயல் வாதிகளோ மூச்சு இதைப்பற்றி விடுகிறார்களில்லை?????????!!!!!!!!! ... இருக்கிறார்/இல்லை அரசியல் அவர்களை தடுக்கிறது!!

என்ன நெல்லையன் எல்லாம் வைத்து எடுத்த மாதிரி சொல்கிறீங்கள்.எனது முன்னைய இராணுவ நண்பர்களே (தமிழர்களும், சிங்களவர்களும்)தலையை சொறியும் போது.உங்களின் கொள்கையில் மட்டும் உறுதியாக உள்ளீர்கள் என்பது மட்டும் உறுதி.யாரும் உங்களை இனம் காண மாட்டார்கள் என நினைத்தால் அது உங்களின் மடமை.

... இருக்கிறார் ... இல்லை ... தப்பி விட்டார் ... என்பவைகள் ஒரு புறத்தே இருக்கட்டும்! சரத் பொன்சேகா தெரிவித்த செய்தியால் சிறிலங்கா அரசு கலங்கியிருக்கிறது! ஏன்???? ... யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவும் வழி வகுக்கும்!

18ல் கொல்லப்பட்டதாக தெரிவித்து ... இல்லை 19ல் என்றால்?? ... இங்கிருந்து சிறிலங்க அரசின் அழைப்பின் பேரில் சென்று சென்று வந்த ஒட்டு/ஒட்டில்லா குழு அங்கத்தவர்களும், கொழும்புத் தகவல்களும் .... அங்கு ஒரு ஒளிப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அதில் ...!!! ... பின்பு அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு, கோடாரியால் தலையின் பின் புறத்தே வெட்டித்தான் கொன்றார்களென்றும் ....!

ஆனால் எம்மூடகங்களோ, எம் புலத்து அரசொயல் வாதிகளோ மூச்சு இதைப்பற்றி விடுகிறார்களில்லை?????????!!!!!!!!! ... இருக்கிறார்/இல்லை அரசியல் அவர்களை தடுக்கிறது!!

இந்த செய்திய ஒருக்கா படியுங்கோ... இந்தச்செய்தி வெளிவந்தது 27 ம் திகதி தலைவர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நாளில் இருந்து 8 நாள் களித்து...

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=9985&cat=1

அதோடை 17 திகதி சூசை அண்ணை பேசியதையும் கேழுங்கோ... நீங்கள் சொல்லுறது புரளி எண்டு உங்களுக்கே விளங்கும்...

http://www.tamilnational.net/data/2009/may/17/Soosai_TamilNational_17May_2009.mp3

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

பொன், இன்னும் மறியலிலா......

நன்றி கடவுளே.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோடை 17 திகதி சூசை அண்ணை பேசியதையும் கேழுங்கோ... நீங்கள் சொல்லுறது புரளி எண்டு உங்களுக்கே விளங்கும்...

http://www.tamilnational.net/data/2009/may/17/Soosai_TamilNational_17May_2009.mp3

சூசையண்ணையும் உணர்ச்சி ததும்ப ரண்ணிங் கொமன்றி குடுக்கிறார்....அவற்ற மனிசி புள்ளையள கப்பலில ஏத்தி கொக்குத்தொடுவாய்க்கு அனுப்பிப்போட்டுத்தானே!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

சூசையண்ணையும் உணர்ச்சி ததும்ப ரண்ணிங் கொமன்றி குடுக்கிறார்....அவற்ற மனிசி புள்ளையள கப்பலில ஏத்தி கொக்குத்தொடுவாய்க்கு அனுப்பிப்போட்டுத்தானே!!!! :)

ரன்னிங் கொமன்றி எனும்போது வயிற்றால் தானாக போகும் என்பது தானே. :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரன்னிங் கொமன்றி எனும்போது வயிற்றால் தானாக போகும் என்பது தானே. :):)

சூசையண்ணை ....அவற்ற மனிசி புள்ளையள கப்பலில ஏத்தி கொக்குத்தொடுவாய்க்கு அனுப்பிப்போட்டு குடுத்ததுதான் ரண்ணிங் கொமென்றி....தெரியாதோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சூசையண்ணையும் உணர்ச்சி ததும்ப ரண்ணிங் கொமன்றி குடுக்கிறார்....அவற்ற மனிசி புள்ளையள கப்பலில ஏத்தி கொக்குத்தொடுவாய்க்கு அனுப்பிப்போட்டுத்தானே!!!! :)

உங்களுடைய மனிசி, பிள்ளைகள் இன்னும் உயிரோடை இருந்தால் .....

கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். முடியாவிட்டால் பொத்திக்கொண்டிருங்கள்.

.

Edited by தமிழ் சிறி

..பிட்சுட்டார் .. பிட்சுட்டார் ... கண்ணுபிட்சுட்டார்! ஏன் நேரடியாக து** என்றே சொல்லி இருக்கலாமே? போங்கோடாப்பா நீங்களும் உங்கள் புலுஆய்வும்!

... இருக்கிறார் .. இல்லை .. தப்பி விட்டார் ... என்றெல்லாம் இங்கு மண்டையை உடைக்கையில், அந்தாள் தப்பி இருந்தாலும் .. இருக்கிறார் ... என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால், இற்றைக்கு அறிக்கையாவது விட்டிருப்பார். ஏன் விடவில்லை? ... இருந்தாலும் ... இல்லை ... என்று இருக்கட்டும் என்றே விட்டிருப்பார். ஆனால் இங்குள்ள விசிலடித்தானுகளோ அந்தாள் ... இருக்கிறார் ... உலகமே விடாதேங்கோடாப்பா, அந்தாளையும் தேடி முடியுங்கோ, அங்குள்ள மக்களையும் சும்மா விடாதையுங்கோ, .... என்னாஆஆஆ.. அரசியல்? ..... இவர்கள் எம்மினத்தை தலைவர்களில்லை தொலைப்பவர்கள்!!

சூசையண்ணையும் உணர்ச்சி ததும்ப ரண்ணிங் கொமன்றி குடுக்கிறார்....அவற்ற மனிசி புள்ளையள கப்பலில ஏத்தி கொக்குத்தொடுவாய்க்கு அனுப்பிப்போட்டுத்தானே!!!! :)

பருத்துரை முனை உங்களுக்கு இப்ப கொக்குத்தொடுவாயிலையே இருக்கு...?? உங்கட ஆக்கள் தரும் செய்தியளையாவது நீங்கள் படிச்சு போட்டு எழுத்தப்பழகுங்கோ...

சனத்த வெளியாலை விடுங்கோ எண்டு விடபண்ணின நீர் எல்லாம் கடந்த ஒர்வருசமாய் என்னத்தை கிளிச்சீர்...?? சூசை அண்ணையை பற்றி பேசுவதுக்கு...??

அவர்களுக்கு பக்கத்தை நீர் எல்லாம் ஏணிவைச்சு கூட நிக்க முடியாது...!

... இருக்கிறார் .. இல்லை .. தப்பி விட்டார் ... என்றெல்லாம் இங்கு மண்டையை உடைக்கையில், அந்தாள் தப்பி இருந்தாலும் .. இருக்கிறார் ... என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால், இற்றைக்கு அறிக்கையாவது விட்டிருப்பார். ஏன் விடவில்லை? ... இருந்தாலும் ... இல்லை ... என்று இருக்கட்டும் என்றே விட்டிருப்பார். ஆனால் இங்குள்ள விசிலடித்தானுகளோ அந்தாள் ... இருக்கிறார் ... உலகமே விடாதேங்கோடாப்பா, அந்தாளையும் தேடி முடியுங்கோ, அங்குள்ள மக்களையும் சும்மா விடாதையுங்கோ, .... என்னாஆஆஆ.. அரசியல்? ..... இவர்கள் எம்மினத்தை தலைவர்களில்லை தொலைப்பவர்கள்!!

அப்ப நீங்களும் உங்கட வீடியோ கதைகளையும், சுத்துமாத்துகளையும் சுறுட்டி வைச்சு போட்டு திரியுங்கோ...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.