Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐

Featured Replies

குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐ கனிய வளங்கள் காணப்படுவதனால் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி – ஊடக அமைச்சர்

08 துரநெ 10 01:37 யஅ (டீளுவு)

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆச்சரியமடையப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன்இ புலிகளின் பல்வேறு நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதனின் தகவல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பல்வேறு வெளிநாட்டு சொத்துக்களை அடையாளம் காண முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் அரசியல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எவ்வளவு சொத்துக்களை அரசாங்கம் முடக்கியுள்ளது என்பது தொடர்பில் தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது எனவும்இ விரைவில் இந்த விடயங்கள் பொது மக்களுக்கு அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதன் தற்போது அனுபவித்து வரும் தண்டனையே போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசனைப் போன்று வாழ்ந்த குமரன் பத்மநாதன் சகல வசதிகளையும் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்காக தற்போது குமரன் பத்மநாதன் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Global Tamil News

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்காக தற்போது குமரன் பத்மநாதன் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங் எயா அப்பெ ரட்ட மினியா..என்று சொல்லுறியள் <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை மேலும் பிரிப்பதற்கும் நா.க. அரசுக்கு சிக்கல்களை உண்டு பண்ணவும் போடப்படும் சூழ்ச்சியாகவே இது தெரிகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் விலை போய்விட்டார் அவரை வெட்டி விடுவதே சரியானதாகும் அவருடனான அனைத்தொடர்புகளையும் தமிழர் வெட்டி விட வேண்டும், தனித்து அவரால் என்ன செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் விரைவில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவி ஏற்றாலும் தமிழர்களுக்கு ஆச்சரியமில்லை கெகெலிய!!

  • தொடங்கியவர்

எம்மை மேலும் பிரிப்பதற்கும் நா.க. அரசுக்கு சிக்கல்களை உண்டு பண்ணவும் போடப்படும் சூழ்ச்சியாகவே இது தெரிகிறது.

<_<:lol: அப்படியா?

Edited by kalaivani

எம்மை மேலும் பிரிப்பதற்கும் நா.க. அரசுக்கு சிக்கல்களை உண்டு பண்ணவும் போடப்படும் சூழ்ச்சியாகவே இது தெரிகிறது

அவர் போர் முடியிறதுக்கு முன்னமே அந்தப்பகத்துக்காக தான் எங்களுடன் பேசி இருக்கிறார்... அவர் சர்வதேச தொடர்பாளராக பேசியது எல்லாம் இந்திய ஏஜன்ருகளுடனும் பசில் ராஜபக்ஷ வுடனும் தான்...! சரண் அடையும் படலத்துக்கு முழுமையான சொந்தக்காறர் உந்த KP தான்... சரண் அடையுங்கள் காயம் அடைந்த மக்களுக்கும் , போராளிகளுக்கும் நாங்கள் பொறுப்பு எண்று சொல்லிதான் சரண் அடைய வைத்தார்கள்... அதில் விஜய் நம்பியாருடனும் KP க்கு நேரடியாக தொடர்பு இருந்து இருக்கிறது...

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா... ? கீழை நம்பும் படி சில ஆதாரங்களை தருகிறேன்...

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

இது Marie Colvin ( மேரி கெவ்லின்) அம்மையாருடன் கடைசியில் நடேசன் அண்ணா பேசிய மேற்க்கு நாடுகளிடம் இருந்து சில உறுதிகளை வாங்கி தருமாறு கேட்டு இருக்கிறார்... ஆனால் KP அவருடன் பேசவில்லை... எரிக் சொல்கைமுடனும் நடேசன் அண்ணா நேரடியாக பேசி இருக்கிறார்... நடேசன் அண்ணா ஏன் KP யை நம்பாது தான் நேரடியாக பேச வேண்டி வந்தது...??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58739

KP இந்தியாவுடன் பேசுவதுக்கு அழைத்து இருக்கிறார்கள் எனக்கு அனுமதி தருமாறு கேட்டதால் அனுமதிக்கடிதத்தை தலைவர் அனுப்பி வைத்தார்... மற்றும் படி சர்வதேச தொடர்பாளர் என்பது எல்லாம் KP யே தன்னை சுற்றி போட்டு கொண்ட பில்டப்...

Edited by தயா

... சில காலங்களுக்கு முன்னம் கே.பி தாய்லாந்தில் கைதென்றும்,பின் அக்கதை காணாமல் போனதும் நினைவிருக்கலாம். ஒன்றில் அக்கைதோடு கே.பி அயல்நாட்டு உளவுத்துறையிடம் கையளிக்கப்பட்டிருக்கலாம். அதிலிருந்து அவர்கள் கூறுவதையே செய்ய கே.பி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம்.

அல்லது

..... யுத்தநிறுத்த கால ஆரம்பத்தில் புலிகளின் சில பிரிவுகளின் பொறுப்பாளர்களிடையே(குறிப்பாக அரசியல், சர்வதேசப்பிரிவு) ஏற்பட்ட பதவிப்போட்டியில், ஆயுதக்கொள்வனவுப் பொறுப்பை சில பிரிவுகள் கையேற்றன. அத்தோடு கே.பி ஒதுக்கப்பட்டார். இவ்வளவு காலமும் உழைந்த என்னை தூக்கி எறிந்து விட்டார்களே?! என்ற கோபத்தில் கே.பி பிற்காலத்து நாடகங்களை ஆடியிருக்கலாம்.

... எது எவ்வாறோ, இவற்றுக்கு புலிகளின் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்!

எல்லாத்துக்கும் புலிகள் பொறுப்பேற்க்க முடியாது... நீங்கள் உணர்வுள்ளவராக இருக்கிறீர்களா..? இல்லை சகிப்பு தன்மை அற்று போய் வேறுவளியில் பயணிக்க போகிறீர்களா எண்று ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பரீட்சை வைக்க முடியாது...!

பலர் தொடர்ந்தும் ஒரேவளியில் பயணிக்கும் போது ஒரு சிலர் விலகுகின்றனர்... அந்த ஒரு சிலரை வைத்துக்கொண்டு எல்லாரும் கெட்டவர்கள் என்பதோ இல்லை அந்த சில பத்து பேர்களை கட்டுப்படுத்த பிரபாகரன் தவறி விட்டார் எண்டதோ சரியானது இல்லை...

பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர்... அவர் மற்றவர்களையும் சேர்த்து வைத்துதான் நிர்வாகத்தை நடத்தினார்... அதில் அவரால் நம்பிக்கையானவர்கள் எனும் அடிப்படையில் பொறுப்பாளர்கள் தெரிவு செய்ய ப்படுவதில்லை... செயற்பாட்டில் திறமையானவர்கள் எனும் அடிப்படையிலேயே தெரிவு செய்ய பட்டார்கள்...

பிரிந்து போறவனுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.. அதை எல்லாத்தையும் விட கொள்கை தான் வேண்டும் எண்று சொல்வதுக்கோ அந்த கொள்கையில் அவர்கள் நிலையாக நிக்க வேண்டும் எண்று சொல்வதுக்கு வெளியில் நிற்க்கும் பார்வையாளர்களுக்கு எந்த தகுதியும் இல்லை... பிரிந்து போகும் நபர்களை புலிகள் எப்போதும் தடுத்ததும் இல்லை...

அப்படி பிரிந்து போகும் நபர் போய் துரோகம் இளைப்பார் எண்று அவர் துரோகம் செய்ததின் பின்னர் தான் தெரியும்... அந்த நபர் துரோகம் செய்வார் எண்று முன்னமே நினைத்து மண்டையில் போட்டால் நீங்கள் எல்லாம் தலைவரை பற்றி என்ன சொல்வீர்கள்.. கூட இருந்தவனையே காரணம் அற்று கொலை செய்த சைக்கோ எண்று தானே...

நரம்பில்லாத நாக்காலை எல்லாம் கதைக்கலாம்...

அண்ணைமாரே கொஞ்சம் பொறுங்கோ! எனக்கு தெரிஞ்ச வரையில அமெரிக்கா ஒரு மூவ் எடுததிட்டுதாம். கிளாரி அக்கா பீரிஸ் மகத்தையாவை கூப்பிட்டு இந்த மூவ் பற்றித்தான் கதைச்சவ எண்டு ஒரு தகவல். மகிந்த மகத்தையாவின் இந்திய விஜயமும் இதை ஒட்டித்தானாம்..தமிழருக்கு ஏதே உப்பச் சப்பில்லாத தீர்வு ஒண்டை தரப்போகினமாம். இங்கை நாங்கள்தான ஒறிஜினல் இயக்கம் எண்டு அறிக்கை மற்றும் ஊடகத் தாக்குதல் நடத்திக் கொண்டு (உண்மையான இயக்கத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு) இருக்கிறவைக்கு மேல பயங்கரவாத சட்டம் பாயப் போகுது எண்டும் தகவல். லண்டனிலை இயக்கத்தின் மீதான தடையை நீடிச்சதும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை தடை செய்வதா இல்லையா என்ட வழக்கின் பிரான்சிலை தீர்பை ஒத்தி வைச்சதும் ஜேர்மனியில நடந்த கைதுகளும் இந்த வேலை திட்டத்துக்கான முன்னேற்பாடு எண்டும் தகவல்.மொத்தத்தில் ஐரோப்பா கனடாவில் கைதுகள் தொடரப் போகிறது என்பதும் தண்டனைகள் கடுமையா இருக்கப் போகிறது என்பதும் உண்மை.இது யாழ் இணையம் தொடர்பாக விடப்படும் எச்சரிக்கைகள் குறித்து பாரிசல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எமது செயற்பாட்டாளர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களில் ஒருவரை நேற்று நான் சந்தித்த போது அவர் எனக்குச் சொன்ன தகவல் இது.

இப்ப பிரக்குராசிமார் தான் நாடுகளுக்கு இடையான கொள்கை திட்டங்களை முதலில் தெரிஞ்சு கொள்ளும் ஆக்களோ...??

எங்களுக்கும் முன்னம் சில ஆய்வாளர்கள் இருந்தவை... தாங்கள் நடக்க வேணும் எண்டு ஆசைப்படுகிறதுகளை ஆய்வு எண்ட பெயரிலை தாறவை... அது போல தான் இந்த பினாத்தலும்...

வேணும் எண்டால் பாரும் அமெரிக்காவோடை சேர்ந்து ஆட்ச்சி கவிழ்ப்புக்கு பிரிஸ் துணை போனார் எண்டு பதவியிலை இருந்து மகிந்த பூரிசை தூக்காட்டால்... <_<

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணிக்கு பதில் எழுதும் அளவுக்கு இந்த அறிவித்தல் நளினமானதல்ல.

தயாவின் ஆதங்கம் புரிகிறது

இயக்கத்தின் செயற்பாடுகளில் கேள்வி கேட்பவன் அல்ல யான்.

தயா சொல்லவதுபோல்

இயக்கம் என்பது என்ன?

அது நீங்களும் நானும் சேர்ந்தது

அதாவது அதன் தொழிற்பாடுகளை அல்லது கொள்கை மாற்றங்களைக்கூட எமது நடவடிக்கைகள் தீர்மானிக்க கூடியது.

அதாவது எமது ஒவ்வொருவருடைய செயற்பாடே இயக்கம்.

நாம் ஈழவிடுதலை பற்றி தெளிவாக இருந்தால் அதற்காக போராடுவோம்

இந்தியா பெற்றுத்தரும் என்று விரும்பினால் அதற்காக கும்பிடுவோம்.

இல்லை உலகம் புடுங்கும் என்றால்அவர்களுக்கு................ செய்வோம்

ஆனால் புலியாக இருக்கவேண்டுமானால் சிலவற்றில் உறுதியாக இருக்கவேண்டும் என்று கேட்கப்படுவோம்

நாமும் உறுதி சொல்வோம்

ஆனால் செயல் எப்படி இருக்கும் அது எம்மைப்பொறுத்தது.

இதற்குள் மது, மாது, சொத்து, லஞ்சம்,,, ....... என்று எத்தனையோ ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

சிலர் செயல்கள் பிழைத்து தண்டனை பெறுவர்.

பலர் தந்திரமான நடவடிக்கைகள் மூலம் தப்பித்துவிடுவர்.

எனவே எல்லோரையும் கண்காணிக்கவில்லை என்று சொல்வதைவிட நாம் எல்லோரும் ஒத்துழைக்கவில்லை அல்லது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்காய் காட்டிக்கொடுத்தோம் என்பதுதான் உண்மை.

இயக்கம் எனக்கு என் குடும்பம் போன்றது.

அது பற்றி நல்லவற்றை வெளியில் சொல்வேன். தீயவற்றை அவர்களிடம் சொல்வேன்.

எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அப்படித்தான் சொல்வேன்

ஆனால்

கே.பி கைது செய்யப்பட்ட அன்று நான் மிகவும் நொந்து போனேன்.

எனது மனைவி ஏன் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டபடியே இருந்தாள்.

அன்று தான்முதன் முதலாக நான் இயக்கத்துக்கு எதிராக, ஒரு போராளிக்கு எதிராக எனது மனைவியிடம் சொன்னது

கே. பி கைது செய்யப்பட்ட மாதிரி தெரியவில்லை. தானே காரில் ஏறிப்போனமாதிரி தெரியுது.

நாங்கள் மட்டுமல்ல தலைவரும் ஏமாற்றப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது

இதனுடைய தாக்கம் மிகவும் எம்மை பிளவுபடுத்தும். துரத்தி துரத்தி வேட்டையாடும் என்று என்று என் மனைவிடம் சொன்னேன்.

இதுவரை வேறு எவரிடமும் இது பற்றி கதைத்ததில்லை

யாழில் கூட எழுதியதில்லை .

தற்போதும் நான் கே. பி பற்றி எழுதவிரும்பவில்லை. ஏனெனில் அவரை விட்டு விடுவதுதான் நல்லது.

அவர் துரோகியா என்பது உறுதிப்படுத்தப்படாவிடிலும் இன்று அவர் எமக்கு அறிவுரை கூறும் அல்லது தலைமை தாங்கும் நிலையை இழந்துள்ளார்.

எனவே அவர் தொடர்பான செய்திகளை எம்மவர் இனிமேல் கவனியாது எம் பயணம் தொடரவேண்டும் என்பதே எனது அவா.

இந்த திரிக்கு

இந்த செய்தி எம்மை பிரிப்பதற்கே என்று எழுதியதும் அந்த காரணத்துக்காகவே.........

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்

கலைவாணிக்கு பதில் எழுதும் அளவுக்கு இந்த அறிவித்தல் நளினமானதல்ல.

நன்றி.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

கேபி தொடர்பான நம்பிக்கைத் தன்மை தொடர்பாக எந்தக் கருத்தையும் நான் கூறப்போவதில்லை.

ஆனால் இங்கு கருத்து எழுதுகின்றவர்களின் கருத்தில் எனக்கு சில முரண்கள் உள்ளன. கேபியை நம்பத் தயாரில்லை என்பது நியாயமாக இருக்கலாம். ஆனால் அNது வேளை சிங்கள அரசு தருகின்ற செய்தியை எவ்வளவு தூரம் நம்புகின்றீர்கள்?? உங்களது பிரதிபலிப்புக்கள் அனைத்துமே சிங்கள அரசு தருகின்ற செய்திகளை வைத்துத் தான் அமைகின்றனவே அன்றி, எவ்விதத்திலும் ஆராய்வுக்கு உற்பட்டதாகவே இல்லையே! Nபி பற்றி ஏன் இப்பபோது சிங்கள அரச தரப்பில் இருந்து செய்திகள் வர வேண்டும். ரொகான் முதலில் இதே மாதிரியான கருத்தைத் தெரிவித்திருந்தான்

நாளைக்குச் சிங்கள அரசு கேபிக்கு எதிராக ஏதாவது செய்தால், உடனே என் மனைவி, மக்களிடம் முன்பே சொன்னேன்... என்று தொடங்குவீர்களா?

நான் சொன்ன தகவல்கள் சிங்கள தரப்பை அடிப்படையாக கொண்டவை அல்ல...!

இங்கை KP க்கு ஆரம்பத்தில் வக்காலத்து வாங்கியவர்களில் நானும் ஒருவன்... ஆனால் இண்று நிலமை அப்படி இல்லை... KP கூட்டத்தால் இளைக்கப்பட்டு கொண்டு இருக்கும் புரளிகள் உங்களுக்கு சந்தேகங்களை தோற்று விக்கலாம்... ஆனால் உண்மை தெரியும் போது நாங்கள் இன்னும் பலவீனமாக இருப்போம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது எவரையும் நம்பத் தயாராக இல்லை. எவன் தமிழீழம் என்ற இலட்சியத்தை மீள கருத்தாக்கத்தில் கொண்டு செல்கின்றானோ, அவனை மட்டுமே நம்பமுடியும். அந்த விடயத்தில் அனைத்துலகத் தொடர்பாகத்தில் நான் கொண்டிருந்த நம்பிக்கைகளை அதோ, அல்லது அதன் பெயரில் செயற்படுபவர்களே இழக்க வைக்கின்றார்கள். முதன்மையான எதிரியான சிங்கள தரப்பை விட்டுவிட்டு, தமிழருக்குள் பொறுப்புணர்வு அற்ற விதத்தில் சகட்டுமேனிக்கு நடந்து பகையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த 1 வருடம், 23நாட்களில் அவர்கள் என்ன சாதித்தார்கள், எதிரியின் துன்புறுத்தல்களை உலகிற்குக் கொண்டு சென்றார்கள் என்றால்... பூச்சியம் தான். இதை எழுத கோபம் வந்து என்னைத் துரோகி எனலாம். வழக்குப் பதியலாம். ஆனால் இது ஒரு சராசரி மனிதன் கொண்டிருக்கின்ற ஆதங்கம். மே 17க்குப் பிறகு இவர்களின் பின்னால் வருகின்ற ஒவ்வொருவனும் விலத்திச் செல்கின்றபோது இவர்கள் மீது வருகின்ற கோபம்.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் எம்மைப் பலவீனப்படுத்துவது கேபி மட்டுமல்ல இவர்களும் தான். ஏதாவது செய்யுங்கள். பின்னால் வருகின்றோம் என்றால் அதை நடத்த தயாராக இவர்கள் இல்லை.

தலைவர் வருவார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கின்றீர்கள் அல்லவா? பரிறகு ஏன் அஞ்சுகின்றீர்கள். யாருக்குப் பின்னால் மக்கள் மதியிழந்து போனாலும், தலைவர் வரும்போது என்றைக்குமே அவர் பின்னால் தான் வரப்போகின்றார்கள். அவர் வருகையை தாமதம் செய்வது கூட உருப்படியற்ற உங்களின் நடவடிக்கை தான்.

கேபியும் உருத்திரகுமரனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்..

Edited by Panangkai

கேபியும் உருத்திரகுமரனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

மிகச்சரியான கருத்து.. :):D:huh:

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தன் இனத்திற்குச் சேவை செய்யும் ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளித்துக் கௌரவிக்கின்றான்.எத்தனையோ போராளிகள் சிறையில் வாடும் போது இவருக்கு மட்டும் மன்னிப்பு என்றால் சிறிது யோசிக்க வேண்டிய விடயம் தான்.

வெளியில் இருப்பவர்கள் ஒற்றுமையில்லாமல் உள்ளே??? இருப்பவரைப்பவரைப் பற்றிப் பேசி எந்த நன்மையும் இல்லை.

அதற்காக நாம் ஏன் எங்களுக்குள் முரண்பட வேண்டும்.

வாத்தியார்

................

நான் இப்போது எவரையும் நம்பத் தயாராக இல்லை. எவன் தமிழீழம் என்ற இலட்சியத்தை மீள கருத்தாக்கத்தில் கொண்டு செல்கின்றானோ, அவனை மட்டுமே நம்பமுடியும். அந்த விடயத்தில் அனைத்துலகத் தொடர்பாகத்தில் நான் கொண்டிருந்த நம்பிக்கைகளை அதோ, அல்லது அதன் பெயரில் செயற்படுபவர்களே இழக்க வைக்கின்றார்கள். முதன்மையான எதிரியான சிங்கள தரப்பை விட்டுவிட்டு, தமிழருக்குள் பொறுப்புணர்வு அற்ற விதத்தில் சகட்டுமேனிக்கு நடந்து பகையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த 1 வருடம், 23நாட்களில் அவர்கள் என்ன சாதித்தார்கள், எதிரியின் துன்புறுத்தல்களை உலகிற்குக் கொண்டு சென்றார்கள் என்றால்... பூச்சியம் தான். இதை எழுத கோபம் வந்து என்னைத் துரோகி எனலாம். வழக்குப் பதியலாம். ஆனால் இது ஒரு சராசரி மனிதன் கொண்டிருக்கின்ற ஆதங்கம். மே 17க்குப் பிறகு இவர்களின் பின்னால் வருகின்ற ஒவ்வொருவனும் விலத்திச் செல்கின்றபோது இவர்கள் மீது வருகின்ற கோபம்.

முதலில் தாயகத்தில் இப்போதும் போராளிகள் இருக்கிறார்கள் எண்ட அடிப்படையாவது உங்களுக்கு தெரியுமா...?? அவர்களும் இவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதுக்கு பதில் அவசியமில்லாதவை...

இவர்கள் தாங்களாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களின் கற்பனை அவர்களுக்கு பின்னால் இயக்கும் சக்தி இருக்கின்றது எனும் உண்மை உங்களுக்கு எல்லாம் காலம் கடந்து தெரிய வரலாம்... என்னைக்கேட்டால் அவர்கள் செய்ய வேண்டியது ஒண்டு மட்டும் தான்... தங்களையும் தங்களிடம் இருப்பவைகளையும் பாதுகாத்து கொள்வது... அதை அவர்கள் சரியாக செய்கிறார்கள்...

அப்படியானால் அவர்களுக்கு என்ன நீங்கள் செய்கிறீர்கள்...?? பின்னாலை வாறத்துக்கு ஆடுகள் போதும் முன்னாலை போறதுக்கு வேண்டும் எண்றால் வாருங்கள் சொல்கிறேன்...

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் எம்மைப் பலவீனப்படுத்துவது கேபி மட்டுமல்ல இவர்களும் தான். ஏதாவது செய்யுங்கள். பின்னால் வருகின்றோம் என்றால் அதை நடத்த தயாராக இவர்கள் இல்லை.

பின்னாலை வாறத்துக்கு ஆடுகள் போதும் முன்னாலை போறதுக்கு வேண்டும் எண்றால் வாருங்கள் சொல்கிறேன்...

தலைவர் வருவார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கின்றீர்கள் அல்லவா? பரிறகு ஏன் அஞ்சுகின்றீர்கள். யாருக்குப் பின்னால் மக்கள் மதியிழந்து போனாலும், தலைவர் வரும்போது என்றைக்குமே அவர் பின்னால் தான் வரப்போகின்றார்கள். அவர் வருகையை தாமதம் செய்வது கூட உருப்படியற்ற உங்களின் நடவடிக்கை தான்.

உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் கொஞ்சமாவது தெளிவு இருக்கிறதா..??

எங்களின் முதல்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கிறது... கப்பல்கள், வியாபாரங்கள் , பங்குகள் எண்று வைத்து இருப்பவர்கள் எல்லாருமே KP யின் ஆக்களால் மிரட்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்... கட்டமைப்புக்களை கலைத்து விட்டு ஒளிய வேண்டிய தேவையில் சர்வதேசம் முழுவதும் இருக்கும் புலிகள் இருக்கிறார்கள்...

KP யின் மூலம் இலங்கை அரசுக்கு எடுத்து கொடுக்கப்பட்ட சொத்தின் அளவு என்ன எண்றாவது தெரியுமா...?? எந்த நாடுகளில் நாங்கள் வைத்து இருந்தோமோ அந்த நாடுகளே எடுத்து கொள்ள வைத்ததையாவது அறிவீர்களோ...??

இருக்கிற எல்லாத்தையும் கை விட்டு போட்டு என்னத்தை பிடிச்சு கொண்டு உங்கட தாளங்களுக்கு ஆட சொல்கிறீர்கள்...

எதையுமே நீங்கள் இழக்க தயாராக இல்லை.. ஆனால் நீங்கள் 5 வருசத்துக்கு முன்னம் குடுத்த கொஞ்ச காசை வைச்சு இப்பவும் புடுங்குறது எண்டால் சும்மாவா...??

Edited by தயா

மிகச்சரியான கருத்து.. :):D:huh:

அடையாளப்படுத்தி கொண்டமைக்கு மகிழ்ச்சி...

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ இப்போது சிங்கள அரசின் விருந்தாளி. ஆகவே அவரை இனியும் நம்பிக்கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.அவர் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள அரசிற்காக இன்று வேலை பார்க்கிறார். அண்மையில் கூட வடக்குக் கிழக்கின் சில பகுதிகளுக்கு, "இனங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில்" இவர் ஆயுத படைகள் சகிதம் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் வந்திருந்தன.

நெல்லைய்யன் கூறியதுபோல இவர் தான் ஓரங்கட்டப்பட்ட ஆத்திரத்திலோ அல்லது வேறு சுய நலன்களுக்ககவோ விலை போயிருக்கலாம். ஆனால் அவை யாவும் முடிந்த கதை. அவர் எமக்குள் இப்போது இல்லை. அவருக்கும் கருணா, டக்கிளஸ் போன்றவர்களுக்குமிடையே எந்த வேறுபாடு இல்லை, என்ன நம்பிக்கைத் துரோகத்தின் அளவுதான் வேறுபடும்.இவர்களைப்போன்றவர்களை நம்பி போராட்டம் இவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டது மிகவும் தவறு. ஆனால் இப்போதுதானே தங்கள் சுயரூபம் காட்டுகிறார்கள்.

என்னவாக இருந்தாலும், இவர்கள் ஆபத்தானவர்கள்,இவர்களுடனான தொடர்பை யார் வைத்திருந்தாலும் நிறுத்த வேண்டும், அல்லது இவருடன் தொடர்பிலிருப்பவர்களை நாம் விலக்க வேன்டும்.

இனியும் இவரை நல்லவர், சந்தர்ப்ப வசத்தால் இப்படி நடக்கிறார் என்று பசப்புவதெல்லாம் அவரின் இன்றைய செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி சிங்களத்தின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத்தான் முடியும்.

கே.பீ நல்லவர் என்று வாதாடுபவர்களுக்கு கருணாவும் நல்லவன் என்று நிறுவுவதற்கு அதிக காலம் எடுக்காது.

நெல்லைய்யன் கூறியதுபோல இவர் தான் ஓரங்கட்டப்பட்ட ஆத்திரத்திலோ அல்லது வேறு சுய நலன்களுக்ககவோ விலை போயிருக்கலாம். ஆனால் அவை யாவும் முடிந்த கதை. அவர் எமக்குள் இப்போது இல்லை. அவருக்கும் கருணா, டக்கிளஸ் போன்றவர்களுக்குமிடையே எந்த வேறுபாடு இல்லை, என்ன நம்பிக்கைத் துரோகத்தின் அளவுதான் வேறுபடும்.இவர்களைப்போன்றவர்களை நம்பி போராட்டம் இவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டது மிகவும் தவறு. ஆனால் இப்போதுதானே தங்கள் சுயரூபம் காட்டுகிறார்கள்.

அப்படி இல்லை ரகு... இண்டு வரைக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையே KP தான்...!

KP சரண் அடைவதுக்கும் முன்னர் இங்கிலாந்து பிரான்ஸ் சுவிஸ் எண்று கிட்டத்தட்ட 1000 பேருடன் தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறார்... அவர் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தை முன் நகர்த்த நீண்டகாலமாக பாடுபட்டவர்கள்... அவர்களில் பலர் KP யையும் KP யின் தலைமையையும் ஏற்றுக்கொள்ள இல்லை... இதை நீங்கள் ஒரு தகவலாக வைத்து கொள்ளுங்கள்...

இப்போ விடயத்துக்கு வருகிறன்... KP யை நம்பி அவரை தலைவராக சிலர் ஏற்றுக்கொண்டனர்... அதன் போது நாடுகடந்த அரசுக்கான ஆலோசனையை உருத்திர குமார் அண்ணா வளங்க அதை ஏற்பது போல ஏற்று அங்கு நிர்வாக குழு மதியுரை குழுக்களுக்குள் தனது நெருக்கமானவர்களை உள் நுளைத்து விட்டு இருக்கிறார்...

பிரச்சினை அதோடு நிண்றால் பறவாய் இல்லை.. KP யின் தலைமையையும் அவரின் அறிக்கையையும் ஏற்காதவர்களை நோக்கி குற்றச்சாட்டுகளை விதைக்க ஆரம்பித்தார்கள் KP யின் ஆதரவாளர்கள்... இங்கே ஏற்க்காதவர்களில் அனைத்துலக தொடர்பகத்தோடு சம்பந்த பட்டவர்கள் மீது பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் சுமத்த ஆரம்பித்தார்கள்...

இதுதான் இண்றைய நிலை... KP அதி உச்சமாக பொட்டம்மான் சிங்களப்படைகளிடம் சரண் அடைந்து விட்டார்... அவர்தான் சில அமைப்புகள் சம்பந்தமான விடயங்களை சிங்கள அரசுக்கு கொடுத்தார் என்பனவும் அடக்கம்... அது தவிர தனக்கு கீழ் படியாத தூரகிழக்கு நாடுகளில் புலிகளின் புலநாய்வு, வணிகத்துறை போராளிகளின் விபரங்களை சேகரித்து அந்த நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறார்...!

இப்படி கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் நடந்த வீழ்ச்சிகளில் KP யின் பங்கு நீண்டு நெடியது...

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

எவ்வளவிற்கு உண்மை என்று தெரியாது....

மே 2009 இல் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தே. அங்கு முன்னாள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச்(புளொட்) சேர்ந்த முக்கிய நபர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பலமுறை அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன், அது வேற கதை.

வன்னியிற்கு கே.பீ இனால் பல வெற்றுக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அவராலேயே இலங்கைப் புல்நாய்வுத்துறைக்கு தகவலும் வழங்கப்பட்டதாகச் சொன்னார்(இது கே.பீ தாய்லாந்தில் பிடிபட முன்னம் நடந்தது).என்னால் அப்போது இதை நம்ப முடியவில்லை. அப்படியிருக்காது, அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று வாதாடினேன்.

பிறகு நடந்த நாடகங்களுக்குப் பின்னர் அவரை மீண்டுமொருமுறை சந்தித்தேன், அவர் சொன்னது சரியென்று பட்டது.

ஆனால், இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது தலைவர் எப்படியான ஆட்களை நம்பி தன்னுடன் வைத்திருந்திருக்கிறார் என்று யோசிக்க வைக்கிறது. மாத்தையா, கருணா...இப்போது கே.பீ.

எனக்கு தாயகத்தில் இன்னும் உண்மையான போராளிகள் இருக்கிறார்களா என்று தெரியாது, ஆனால் அதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்றுதான் எனது சின்ன மூளை சொல்கிறது. இனியொரு ஆயுதப்போராட்டம் எந்தளவிற்குச் சாத்தியம் என்றும் தெரியாது, ஆனால் ஒரு ஆயுதப் போராட்டத்தின் வெற்றியாலன்றி எமக்கு விடுதலை என்பது கிடைக்காது என்பது மட்டும் தெரிகிறது.

இக்கருத்தைப் பார்த்ததும் பலர் என்னுடன் சண்டைக்கு வரக்கூடும், என்னால் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது. உணர்வுகளை சொல்கிறேன், அவ்வளவுதான்.

ஆனால், இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது தலைவர் எப்படியான ஆட்களை நம்பி தன்னுடன் வைத்திருந்திருக்கிறார் என்று யோசிக்க வைக்கிறது. மாத்தையா, கருணா...இப்போது கே.பீ.

தலைவர் எப்போதும் தனக்கு நம்பிக்கையானவர்கள் எனும் அடிப்படையில் எப்போதும் பொறுப்பாளர்களை தெரிவு செய்தது கிடையாது... திறமையானவர்கள் எனும் அடிப்படையிலேயே தெரிவு செய்து இருக்கிறார்... சிறிய அளவான போராளிகளை வைத்துக்கொண்டு அவரால் இயங்க முடிந்தது எண்றால் அதுக்கு இதுதான் காரணம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.