Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித்

இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது.

3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. (செய்தி 12.06.10)

railletter.jpg

இலங்கைப் பிரச்சனையில் இந்திய உளவுத்துறையின் ஆளுமையும் தலையீடும் இனப்பிரச்சனை குறித்த இந்திய அரசியலைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகித்திருக்கிறது. இந்திய வெளியக உளவுத்துறையான RAW மற்றும் IB ,MI போன்றவற்றின் நிரந்தரமான ஆளுமை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்திருக்கிறது. அதி முக்கியத்துவப்படுதப்பட்ட உளவுத்துறையின் தலையீட்டிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில், RAW இன் ஓய்வுபெற்ற அதிகாரி மேஜர் ஜெனரல் வீ.கே.சிங் குறிப்பிடுவது போல் அரசியலில் ஆளுமை செலுத்தும் அதிகாரம் அவ்வமைப்பிற்கு எப்போதும் இருந்துவந்திருக்கிறது. இரண்டாவதாக, இலங்கை விவகாரம் என்பது பிராந்தியப் பாதுகாப்புடன் தொடர்புடையதாயினும் தமிழ் நாடு என்ற காரணியும் உள்ளடங்கியிருந்தது.

80 களின் பின்னர், தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வு என்பது ஈழத் தமிழர் பிரச்சனையுடன் தொடர்புடையதாகவே உருவகப்படுத்தப்பட்டது. இதன் பின்புலம் குறித்த விவாதங்களுக்கு அப்பால் இதன் உண்மைத் தன்மை மறுக்கப்பட முடியாதது. கட்சிகள் வாக்குப் பலத்தைத் அதிகரித்துக் கொள்ளவும், பணம் திரட்டிக்கொள்ளவும் ஈழப்பிரச்சனை பல சந்தர்ப்பங்களில் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் தமிழ்த்தேசிய உணர்வு தீர்மானகரமான அரசியலற்ற வெற்று உணர்ச்சிக் கோசங்களாகவே அமைந்திருந்தது. இந்த உணர்ச்சியை ஈழத் தலைமைகள் தமிழ் நாட்டு சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்கான மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டன. எது எவ்வாறாயினும் அப்பவித் தமிழ்த் தேசிய வாதிகளிடம் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு இருந்ததை மறுக்கமுடியாது. ஒரு வகையில் இந்த உணர்வை சரியான திசைவழியை நோக்கி நகர்த்த தமிழக முற்போக்கு சக்திகளிடமும் உறுதியான நிகழ்ச்சித் திட்டம் இருந்ததில்லை.

2009 மே மாதம் ஈழப் போராட்டமும் புலிகளும் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்த நிலைமைகள் உள்ளடக்கத்தில் மாற்றமடையாவிட்டாலும் சில பண்பு மாற்றங்களை உருவாக்கின.

தமிழக அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டதை வெளிப்படையாகவே உணர்ந்துகொண்ட நகர்ப் புறம் சார்ந்த மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதியினர், அறிவுஜீவிகள், வக்கீல்கள் போன்ற புதிய சமூகக் கூறுகள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பொதுவாக தலித் ஒன்றுகூடல்கள், சிறு பத்திரிகை விமர்சனங்கள், நூல் வெளியீடுகள் நிகழும் சந்திப்பு மையங்களிலெல்லாம் ஈழப் பிரச்சனை குறித்த குரல்களே ஒலித்தன. வியாபாரப் பத்திரிகைகள் கூட ஈழப்பிரச்சனைய முதன்மைப்படுத்தும் அளவிற்கு ஒரு வாசகர்வட்டம் வளர்ந்திருந்தது.

கருணாநிதி ஆட்சியின் தமிழுணர்வு நாடகத்தை தமிழ் நாட்டு படித்த இளைஞர் வட்டம் புரிந்து கொண்டது. வழக்குரைஞர்களின் நீதிமன்றப் போராட்டம், முத்துக்குமார் போராட்டம் என்று சிறுகச் சிறுக நடைபெற்ற போராடங்கள் அரசிற்கு எதிரான மக்களின் உணர்வை தூண்டின. ராஜபக்ச சென்னை வந்த வேளையில் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்திய சிறிய குழுக்களின் பங்கு இப் போராட்டத்தின் வெற்றிக்கு பிரதான பங்கு வகித்தது. விரக்தியடைந்த படித்த இளைஞர் மத்தியிலருந்து இந்திய அரசிற்கு எதிரான போராட்டம் உருவாகும் நிலை காணப்பட்டது. இதுவரை தமிழக மக்களையும் போராடும் திறன் கொண்ட சமூக உணர்வுள்ளவ்ர்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்த திராவிடக் கோசம் அம்பலத்திற்கு வந்துவிட்டது இன்னொரு அதிர்ச்சியை அரசிற்கு வழங்கியது.

இவ்வாறான ஒரு அரசியற் பகைப் புலத்தில் தான் சீபா என்று அழைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் முக்கிய பகுதிகளில் ஒன்று பிராந்தியப் பாதுகாப்புக் குறித்ததாகும். இவ்வேளையில் தான் மறுபடி இந்திய வெளிவிவகார உளவுத்துறையின் முக்கியத்துவம் இலங்கைப் பிரச்சனையில் அதிகரிக்கிறது.

இலங்கையுடனான கைதிகள் பரிமாற்றம், பயங்கரவாதத்தை முறியடிக்கும் கூட்டு நடவடிக்கை போன்றன பாதுகாப்பு ஒப்பந்ததின் முக்கிய அம்சங்கள். இலங்கையைப் பொறுத்தவரை “பயங்கரவாதம்” இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. அரச பயங்கரவாதம் குறித்து வேண்டுமானால் பேசலாம். இந்னிலையில் தமிழ் நாடு மட்டுமே இவர்களின் உடனடிக் குறியாக அமைய வாய்ப்புண்டு.

தமிழ் நாட்டில் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களையும் எழுச்சிகளையும் சீர்குலைக்க வலுவான காரணம் இந்திய உளவுத் துறைக்கு இல்லை. இதனால் அவ்வாறான காரணத்தை உருவகப்படுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு இதற்கு சிறப்பான சந்தர்ப்பத்தை வழங்கும். ஆக, இந்தக் குண்டுவைப்பு சம்பவம் இந்திய உளவுத்துறையின் நடவடிக்கையாக அமையலாம் என்ற சந்தேகங்கள் வலுவாக எழுகின்றது.

தமிழ்த் தேசிய வாதிகளின் உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள் ஒரு வகையில் மக்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. தமிழ் உணர்வினூடாக மக்கள் ஆதரவைத் திரட்டி அவர்களை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்க உந்துவதுதான் இதன் அடிப்படை. இவ்வாறான மக்கள் ஆதரவைக் கோருகின்ற தமிழுணர்வுக் கோசங்களை அடிப்படை அரசியலாக முன்வைப்பவர்கள், மக்களின் வெறுப்பை உருவாக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இங்கு நகைமுரண்.

மக்களை அழிப்பதற்குக் குண்டுவைத்துவிட்டு அதையும் தமிழ் உணர்வாளர்களே மேற்கொண்டார்கள் என்று கடிதம் எழுதி உரிமை கோருவது என்பது வேடிக்கையானது. ஆக, பிரபாகரனின் தம்பிகள் என்று அடிக்குறிப்பிட்ட கடிதம் தமிழ்த் தேசிய வாதிகளால் எழுதப்பட்டதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது.

குண்டுவைத்துவிட்டு கடிதத்தையும் இந்திய உளவுத்துறையே எழுதி வைத்ததற்கான சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.

தவிர, ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது. அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன.

இன்னும் சில நாட்களில் சில இலங்கைத் தமிழர்களைம், சிறிய தமிழ்த் தேசிய வாதக் குழுக்களையும் மத்திய மாநிலப் பாதுகாப்புப் படைகள் கைதுசெய்யும் என்பது எதிர்வு கூறல். தவிர, இது போன்ற சிறிய தாக்குதல்களை இந்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தி தமிழ் நாட்டில் எழுச்சியை அழிக்கும் நடவடிக்கைகளையும், மக்கள் மத்தியிலிருந்து ஈழ ஆதரவுக் குழுக்களை அன்னியப்ப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இவையெல்லாம் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளைப் புரிந்துகொள்ளாமல், மக்கள் அழிவு குறித்துக் கரிசனையற்ற புலம் பெயர் புலி ஆதரவு ஊடகங்கள், தண்டவாளத் தகர்ப்பைப் புரட்ட்சியென்று மார்தட்டிக் கொள்கின்றன.

இவ்வாறான திட்டமிட்ட அழிப்பையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்ள வேண்டுமாயின், நீண்ட கால நோக்கிலான அரசியல் திட்டத்துடன் கூடிய முற்போக்கு அரசியல் தலைமையை நோக்கிய நகர்வை சமூக உணர்வுள்ள, மக்களை நேசிக்கும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

http://inioru.com/?p=13850

தழிகத்தின் அபிமானதிரையரங்குளில் இதோ ஆரம்பமாகிவிட்டது

கருணாநிதி கதை கதைவசனமெழுத, றோ வின் இயக்கத்தில், "அலுமனியக் கடத்தல்" திரைப்படத்தின் இரண்டாம் பாகமான "புலி வருது புலிவருது".

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியல் வேகத்தையும் மக்களின் விழிப்புணர்வையும் பொறுக்காத கருணா நிதியின் கபட நாடகம்.

வாத்தியார்

.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உளவுத்துறையின் இப்படிபட்ட வேடிக்கையான நிகழ்வே பின்னர் வாடிக்கையாகிவிடப்போகிறது, எதிர்காலத்தில் மாவோக்களின் போராட்டம் போல தமிழ் நட்டிலும் வலுத்து விடும், பாத்தால் குஞ்சு மாதிரித்தான் இருக்கும் அதுவே முழு காட்டையும் எரித்து சாம்பலாக்கி விடும், நெருப்பினில் குஞ்சென்றும் பெரிதென்றும் இருக்கோ? இவற்றை பார்க்கும் போது எமது போராட்டகாலத்தின் ஆரம்ப நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

சீமானின் அரசியல் வேகத்தையும் மக்களின் விழிப்புணர்வையும் பொறுக்காத கருணா நிதியின் கபட நாடகம்.

வாத்தியார்

.........................

கருநாநிதி என்றே அழைக்கக் கோருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உளவுத்துறையின் இப்படிபட்ட வேடிக்கையான நிகழ்வே பின்னர் வாடிக்கையாகிவிடப்போகிறது, எதிர்காலத்தில் மாவோக்களின் போராட்டம் போல தமிழ் நட்டிலும் வலுத்து விடும், பாத்தால் குஞ்சு மாதிரித்தான் இருக்கும் அதுவே முழு காட்டையும் எரித்து சாம்பலாக்கி விடும், நெருப்பினில் குஞ்சென்றும் பெரிதென்றும் இருக்கோ? இவற்றை பார்க்கும் போது எமது போராட்டகாலத்தின் ஆரம்ப நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

அண்ணாவின் கொள்கையை கருநாநிதி மறந்து பல நாளாச்சு

ஆயுதத்துக்கு இருபக்கமும் கூர் என்பது இனித்தான் கருவுக்கு தெரியவரும்

அப்பாவிகள் பாதிக்கப்படபோகின்றார்கள் என்ற வருத்தத்தை தவிர ஆரம்பம் சந்தோசமே

சில நாட்களுக்கு முன் இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சகத்திலிருந்து ஒரு அறிக்கை "Emergency Gazette" இல் வெளியாகி இருந்தது- புலிகள் மீளவும் ஒருங்கிணைய தமிழ்நாட்டை தளமாக பயன் படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளதாக என்று. இதில் IB, CBI சம்பந்தப்படாத RAW, உள்துறை இணை அமைச்சகம் அதன் கீழ் இயங்கும் தமிழ்நாடு Q-branch இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி நிரலின் முதற் கட்டமாக இந்த தண்டவாள தகர்ப்பு ஒத்திகை.

இதற்க்கான காரணங்களை நோக்குவோமாயின்.....

1. புலிகளுக்கான ஆதரவு இந்தியா முழுவதும் பெருகி வரும் நிலை....

2. கருனாநிதியின் மீது மக்களுக்கு ஏற்ப்பட்டு வரும் வெறுப்பு......இந்திய காங்கிரஸ் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் வெறுப்பு.....

3. புதிய அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் மத்தியில் புலி ஆதரவு கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு.....

4. நெருங்கி வரும் சட்டசபைத் தேர்தல்

5. புலிகள் மாவோயிஸ்ட்கள் போன்ற குழுக்களுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று அரசாங்கம் செய்யும் அநீதிகளுக்கு ஆதரவு தேடி இந்தியாவில் நடக்கும் எல்லா வன்முறைகளுக்கும் புலிகளை இழுத்து விடுவது.....

இவற்றை முக்கிய காரணங்களாக கருதலாம்.

இந்த தகர்ப்புச் செயலை புலிகள் செய்தார்கள் என்றால் எந்த ஒரு பாமரனும் நம்ப மாட்டான்..... அதுவும் தன்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு அதுவும் தமிழ்நாட்டில் வந்து செய்வார்கள் என்றால் இதை சோ, ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமியைத் தவிர எவரும் நம்ப மாட்டார்கள்.சம்பவம் செய்திகளில் வெளியான ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இப்படியான செயல்களை புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்று தன்னை புலி எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்பவர்களே இதை ஒரு கேலியாக பேசத் தொடங்கி விட்டார்கள்..... இது உளவுத் துறையின் திட்டமிட்ட சதி என்று நாடு முழுவதும் பேச்சு அடிபடுவதை தொடர்ந்தே Tamilnadu police D.G.P., Lathika charan இது உள்ளூர் விஷமிகளின் செயல் தான் என்று ஒரு செய்தியை வெளியிட்டார். அத்தோடு உளவுத் துறையின் சதிச் செயல் அம்பலமானதையிட்டு இந்த தீவிரவாத செயலின் விசாரணையை CBI க்கு மாற்றாமல் Q-Branch இன் கீழ் விசாரிக்க உத்தரவிட்டு அதை அப்படியே மறக்கடிக்கச் செய்வது.

தோழர் சீமான் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகள் தான் 'நான் பிரபாகரனின் தம்பி'; 'ரத்தவெறி பிடித்த ராஜபக்ஷே'

அந்த கடிதத்திலும் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள்.... சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் எழுச்சி மாநாட்டில் அவருக்கு கூடிய மக்கள் கூட்டத்தை கண்ட DMK இன் அதிர்ச்சி மற்றும் வயிற்ரேரிச்சல் தான் இது. நிச்சயமாக சீமானைக் குறிவைத்து, நாம் தமிழர் இயக்கத்தை குறிவைத்து அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கான RAW வின் துணையுடன் உள்ளூர் உளவுத்துறையின் கருணாநிதி குடும்பத்தின் ஒரு திட்டமிட்ட சதி வெள்ளோட்டம் என்றே தோன்றுகிறது.

Edited by Rudran

இவையெல்லாம் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளைப் புரிந்துகொள்ளாமல், மக்கள் அழிவு குறித்துக் கரிசனையற்ற புலம் பெயர் புலி ஆதரவு ஊடகங்கள், தண்டவாளத் தகர்ப்பைப் புரட்ட்சியென்று மார்தட்டிக் கொள்கின்றன.

அது எந்த ஊடகங்கள்....??? இல்லை இனியொரு இணைய காறாரின் வழமையான கற்பனைகளின் இதுவும் ஒண்டோ...??

:D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை விட கொடியது ஜெயலலிதா என்ற நாகம். அது ஈவு இரக்கமின்றி எம்மிளம் தோழர்களை விசம் உண்ண வைத்துக் கொன்று குவித்ததை மறக்க முடியாது.

இந்த இரண்டு விச ஜந்துகளும் தமிழகத்தை ஆளும் நிலையை அகற்றி தமிழ் தேசிய உணர்வுள்ள உண்மையான வளம் மிகுந்த தமிழகத்தை தமிழர் தாய் மண்ணை கட்டியெழுப்ப விரும்பும் இளைய தலைமுறை தமிழகத்தை ஆள முன்வர வேண்டும்.

கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதா குறித்தும் எச்சரிக்கைகள் செய்வதும் கட்டாயம்..!

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறேன் எனும் பேரில் தமிழக மக்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் கருணாநிதியும் சரி, ஈழத் தமிழர்கள் என்றாலே விஷத்தைக் கக்கும் மூல வியாதியால் அவதிப்படும் நோயாளியைப் போன்றே செயல்படும் முடிவுகளை எடுக்கும் ஜெயலலிதாவானாலும் சரி, ஒரு கால கட்டத்திற்கு மேல் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாது.

காசுக்கு ஒரு சாரார் ஒட்டு போட்டாலும் தமிழகம் ஒரு கொதி நிலையிலே தான் உள்ளது....... கருணாநிதி தான் சாவதற்கு முன் ஜெயலலிதாவுக்கும் அவரது கொள்கைகளுக்கும் சமாதி கட்டுவார். கருணாநிதியின் மறைவுக்கு பின் DMK காலவோட்டத்தில் புதிய இனமானமிக்க அரசியல் கட்சிகளின் வரவால் ஆட்சியை இழக்கும். தமிழர்க்கு செய்த துரோகத்திற்கு செய்யும் குடும்ப அரசியல் அராஜக ஆட்ச்சிக்கு மக்கள் அக்கட்சியை காணாமல் போகச் செய்வார்கள். மக்களின் விழிப்பும் எழுச்சியுமே ஓர் மாபெரும் அரசியட் புரசிக்கு வழிவகுக்கும்.... அது இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அமையும்......அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவரான ஒபாமாவின் ஆட்சி மாற்றம், ஜப்பானில் 50 வருடங்களுக்குப் பின்பு ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றம், இங்கிலாந்தில் கோன்செர்வடிவ் கட்சியின் ஆட்சி ஆகியவை காலத்தின் மாபெரும் கட்டாய மாற்றங்கள் ..... அது போலவே மாற்றம் தமிழ்நாட்டிலும் அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்ப்படும்... கருணாநிதியின் மறைவே இந்தியத்திடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் எழுச்சிக்கான முதல் வெற்றிப்படி.... கருணாநிதியின் மறைவை ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழர்கள்

முன்னரும் இந்திய மீனவர்களை அவர்களே கடத்தி வைச்சுக்கொண்டு

புலிகள் கடத்திவிட்டார்கள் என நாடகமாடி மூக்கு உடைபட்டவை

10 வயது சிறுவனையும் சேர்த்து கடத்தினதால அந்தச் சிறுவன்

அவர்களுடைய நாடகத்த அம்பலப்படுத்திவிட்டான்

கடத்தப்பட்ட அனைத்து மீனவர்களும் தமிழ் அபிமானிகளால்

சாட்சியாக கொண்டுவந்து நிறுத்தப்பட்டுவிடுவார்கள் என்பதால்

அவர்களால் கடத்தப்பட்ட அனைத்து மீனவர்களையும்

அவர்களது குடும்ப உறவுகள் அனைவரையும் தமிழ் நாட்டில் இருந்து

கடத்தி வேறு மானிலத்தில் குடுயேற்றிவிட்டார்கள்

அதேபோன்றுதான் இதுவும் அவர்களால் அரங்கேறியிருக்கும் நாடகம்

தமிழ் தேசாபிமானிகள் இதனை மிகவும் அவதானமாக கையாள்வது நல்லது

இது இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் கூட்டுச் சதி.

கருணாநிதியை விட கொடியது ஜெயலலிதா என்ற நாகம். அது ஈவு இரக்கமின்றி எம்மிளம் தோழர்களை விசம் உண்ண வைத்துக் கொன்று குவித்ததை மறக்க முடியாது.

இந்த இரண்டு விச ஜந்துகளும் தமிழகத்தை ஆளும் நிலையை அகற்றி தமிழ் தேசிய உணர்வுள்ள உண்மையான வளம் மிகுந்த தமிழகத்தை தமிழர் தாய் மண்ணை கட்டியெழுப்ப விரும்பும் இளைய தலைமுறை தமிழகத்தை ஆள முன்வர வேண்டும்.

கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதா குறித்தும் எச்சரிக்கைகள் செய்வதும் கட்டாயம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இது இறந்து போன ரவுடி மின்னல் ராஜா கோஸ்டியை சேர்ந்த திமுக அமைச்சர்... பொன்முடியின் கைத்தடிகள்.... செய்த வேலையாகவே தோன்றுகிறது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.