Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தோல்வி உறுதி

:)

இந்தப் போட்டிகளை வைத்து மட்டும் பார்த்து இந்தியா தோற்றுப் போகும் என சொல்ல முடியாது

  • Replies 2.2k
  • Views 83.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது இந்த போட்டில மட்டும்.. ஆனால் இந்தியா ஆஸ்திரேலியாவை மடக்கி போட்டு

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமர்க்கள ஆரம்பம்! * பயிற்சியில் அபார வெற்றி * சுழலில் சிக்கியது ஆஸி.,

பெங்களூரு: உலக கோப்பை தொடரை இந்தியா அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் இருவரும் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப். 19ல் துவங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடக்கின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

காம்பிர் ஏமாற்றம்:

இந்திய அணிக்கு சேவக், காம்பிர் இணைந்து துவக்கம் தந்தனர். பிரட் லீயின் முதல் ஓவரில் ரன் எடுக்கத் திணறிய காம்பிர் (6), போலிஞ்சர் வேகத்தில் வீழ்ந்தார். மறு முனையில் வழக்கம் போல பவுண்டரி அடித்து, தன் ரன் கணக்கை துவக்கினார் சேவக். இவருடன் விராத் கோஹ்லியும் இணைய, ஸ்கோர் சீராக உயர்ந்தது.

சேவக் அரைசதம்:

விராத் கோஹ்லி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின் வந்த யுவராஜ் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். அதிக எதிர்பார்ப்புடன் வந்த கேப்டன் தோனி (11) அணியை கை விட்டு சென்றார். கிரெஜ்ஜாவின் சுழலை சேவக் சிறப்பாக எதிர்கொண்டார். இவரது பந்தில் 2 பவுண்டரி விளாசி, ஒரு சிக்சர் விளாசி அரைசதம் அடித்த சேவக் (54), அவரிடமே போல்டானார்.

"மிடில் ஆர்டர்' சொதப்பல்:

அடுத்து வந்த ரெய்னா (12), ஹர்பஜன் சிங் (4) இருவரையும், பிரட் லீ ஒரே ஓவரில் வெளியேற்றினார். பியுஸ் சாவ்லா "டக்' அவுட்டாக, இந்திய அணி 138 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் யூசுப் பதான், தமிழகத்தின் அஷ்வின் இணைந்தனர். இவர்கள் சற்று பொறுமையாக ரன்கள் சேர்த்து, அணியை மீட்க போராடினர்.

இந்தியா "ஆல் அவுட்':

டேவிட் ஹசியின் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்து மிரட்டிய யூசுப் பதான் (32), அவரது பந்திலேயே கிரெஜ்ஜாவிடன் பிடி கொடுத்தார். ஜான்சன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஆஷிஸ் நெஹ்ரா 19 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 44.3 ஓவரில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின் 25 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் பிரட் லீ 3, ஹாஸ்டிங்ஸ், டேவிட் ஹசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கு:

எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், பெய்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வாட்சன் துவக்கத்தில் இருந்தே அதிரடியில் மிரட்டினார். நெஹ்ரா ஓவரில் 2 பவுண்டரி விளாசிய இவர், முனாப் படேலின் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிரட்டிய வாட்சன் 33 ரன்கள் எடுத்தார்.

சாவ்லா அசத்தல்:

மறு முனையில் பெய்னே 37 ரன்கள் எடுத்து திரும்பினார். பின் வந்த கிளார்க்கை, சாவ்லா "டக்' அவுட்டாக்கினார். சுழலில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்த சாவ்லா, காமிரான் ஒயிட் (4), டேவிட் ஹசி (0) இருவரையும் ஒரே ஓவரில் திருப்பி அனுப்பினார். இவர் பெர்குசனையும் (8) விட்டுவைக்கவில்லை.

பாண்டிங் ஆறுதல்:

அஷ்வின் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய கேப்டன் பாண்டிங், அரைசதம் (57) அடித்து ஆறுதல் தந்தார். அபாராமாக விளையாடிக் கொண்டிருந்த இவர் தோனியின் "சூப்பர்' ஸ்டம்பிங்கில் வெளியேற இந்திய அணிக்கு நம்பிக்கை அதிகரித்தது.

இந்தியா வெற்றி:

சற்று ஆறுதல் அளித்த ஜான்சன் (15), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். இதே ஓவரில் கிரெஜ்ஜாவையும், ஹர்பஜன் "டக்' அவுட்டாக்கினார். கடைசியாக பிரட் லீயை (1) அஷ்வின் போல்டாக்க, ஆஸ்திரேலிய அணி 37.5 ஓவரில் 176 ரன்னுக்கு சுருண்டு, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பியுஸ் சாவ்லா 4, ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

வரும் 16 ம் தேதி சென்னையில் நடக்கும் இரண்டாவது பயிற்சி போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

உலகக் கோப்பை: யார் பெறுவார் இந்த அரியாசனம் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

கிரிக்கட் உலகில் அடிமட்டத்தில் கிடந்து போராடிப் போராடி மேலெழுந்து வந்தஅணிகள் பங்களாதேஷும் - ஸிம்பாப்வேயும். உச்சியிலிருந்து உருண்டு விழுந்த இரு அணிகள் ஆஸ்த்ரேலியாவும் - மேற்கு இந்தியத் தீவுகளும். ஏகப்பட்ட திறமை இருந்தும் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் கிடந்து அல்லாடும் அணிகள் பாகிஸ்தானும் நியூ சீலந்தும். இழந்த பெருமைகளை மீட்டெடுத்த இரு அணிகள் இங்கிலாந்தும் - தென் ஆப்ரிக்காவும். இளம் விரர்கள் ஏராளம், அனுபவம் வாய்ந்தவர்களும் அப்படி. அதனால் எல்லா அணிகளும் பார்த்து அஞ்சும் அணிகள் இந்தியாவும் இலங்கையும். இவை போக இன்னும் நான்கு ICC-யின் துணை உறுப்பு நாடுகள் மோதும் களம்:கிரிக்கெட் உலகக் கோப்பை..!இந்த உலகக் கோப்பையையார் வெல்வார்கள்..? மில்லியன் டாலர் கேள்வி இது!

முதல் இரண்டு தடவைகள் மே.இ.தீவுகள் வென்றது. அத்தோடு சரி. ஆஸ்த்ரேலிய அணி மூன்று முறை வென்றிருக்கிறது. இரண்டு முறை இரண்டாவது இடம். இங்கிலாந்து மூன்று முறை இரண்டாவது இடம். ஒருதடவை கூட வெல்லவில்லை. இந்தியாவும் இலங்கையும் ஓரோர்தடவை முதலாவது இரண்டாவது இடங்கள். பாகிஸ்தான் ஒரே ஒரு தடவை முதல் இடம். தென் ஆஃப்ரிக்காஇதுவரை வென்றதில்லை நியூசீலந்து ஒரு தடவை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றும் பட்டம் வெல்ல முடியாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில் இப்போதைய நிலையை ஆய்வு செய்வது சுவையானது தான்.

ஆஸ்த்ரேலியா சமீப காலங்களில் முக்கி - முனகி - தட்டுத் தடுமாறி - திக்கித் திணறி - தோல்வி மேல் தோல்வி கண்டு - ஆசஷ் தொடரில் இங்கிலாந்திடம் படுமோசமாகத் தோற்று - துவண்டு போய்க் கிடந்த நிலையில், ஒரு தினப் போட்டியில் 5-1 என்று இங்கிலாந்தை தோற்கடித்ததன் மூலம் இழந்த நம்பிக்கையையும் மரியாதையையும் ஓரளவுமீண்டெடுத்திருக்கிறது. அதன் பலமான வேகப் பந்து வீச்சில் பழைய கூர்மை இல்லை. சுழற்பந்து வீச்சு சுத்த சைபர். ஹோரிட்ஸ் (Hauritz) டோஹர்ட்டி (Doherty) பியர் (Beer) யாரும் தேர்வார்கள் போல தெரியவில்லை. மட்டை ஆட்சியில் வாட்சன் (Watson) மட்டுமே உருப்படியாக ஆடுகிறார். பொண்டிங்கும் (Ponting) கிளார்க்கும் (Clarke) மங்கு நிலாபொங்கு நிலாவாகிப் போனார்கள். அவர்கள் பழைய நிலைக்கு மீண்டால் ஓரளவு நம்பிக்கை துளிர்க்கலாம்.இங்கிலாந்து சமீப காலங்களில் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங் பௌலிங் - ஃபீல்டிங்ஆகிய அத்தனை துறைகளிலும் அவர்களது அரைப் பட்டினி நிலை அல்ல,

அஜீர்ண நிலை. கொலிங்வூடைத் (Collingwood) தவிர ஸ்ட்ராஸ் (Strauss) குக் (Cook) பெல் (Bell) ட்ரொட் (Trott) பீட்டர்சன் (Pietersen) எல்லோருமே நன்றாக ஆடிவருகிறார்கள். ட்ரம்லெட் (Tremlett) நல்ல ஆல்ரவுண்டர். வேகப் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் (Graeme Swann) தான் அவர்களது பிரதான துருப்புச்சீட்டு. அவர்கள் போன போக்கைப் பார்த்தால் வரும் உலகக் கோப்பையை அவர்கள்தான் வெல்வார்கள் என்று எண்ண வைத்தது. ஆனால் ஆஸ்த்ரேலிய. அணியிடம் அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் அடி - அவர்களுக்கு ஒத்து வராத இந்திய உபகண்ட தட்ப - வெப்ப நிலை - ஆகியவை தோஷமாக அமையலாம்.

மேற்கு இந்திய தீவுகள் அணி வலுவான ஒன்றுதான். ஆனால் சம்பளத் தகராறு - ஒவ்வொரு தீவுகளுக்கு இடையிலும் நடக்கு ஆதிக்கப் போட்டி - உள்ளூர் அரசியல் - வீரகளுக்கிடையே ஒற்றுமையின்மை அந்த அணியை வெகுவாக சோர்வடைய வைத்துள்ளன. சென்ற முறை IPL ஏலத்தில் மிக அதிக விலைக்கு ஏலம்போன கிறிஸ் கெயிலை (Gayle) மட்டுமல்ல பிரயன் லாராவைக்கூட இந்த முறை யாரும் தீண்டவில்லை என்பதே மே.இ.தீவுகள் அணியின் இன்றைய பரிதாப நிலையை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. என்றாலும் இரண்டு முறை பட்டம் வென்றிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் மகத்துவமிக்க நிச்சயமற்ற தன்மை (The Glorious Un-certainity of Cricket) என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

தென் ஆஃப்ரிக்கா: ஹாஷிம் அம்லா (Hashim Amla) - ஜேக் கல்லீஸ் (Jacques Kallis) - டி விலியர்ஸ் (de Villiers) - கிரேம் ஸ்மித் (Graeme Smith) ஆகிய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்கள், ஸ்டெயின் (Steyn) –மோர்க்கல் (Morkel) சொட்சொபே(Tsotsobe) என்ற சீறிப்பாயும் ஏவுகணைகள் - இதுவரை பட்டம் வெல்லாத நிலை - சொந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டி ஆட்டங்கள் நடந்தபோது உன்னதச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் போன அவலம் ஆகியவை கோப்பையை கைப்பற்றும் வெறியுடன்இவர்களை செயல்பட வைக்கும். ஆனால் பச்சைப் பசேல் என்ற புல் தரையும் காற்றில் ஈரப்பதமும் இல்லாத ஆடுகளங்கள் இவர்களுக்கு எவ்வளவு தூரம் கைகொடுக்கும் - கரை சேர்க்கும் என்பது தெரியவில்லை. தென் ஆஃப்ரிக்கா வைரத்துக்கு மட்டுமல்ல வைராக்கியத்துக்கும் பேர்போன நாடு. வைரம் அழகும் தரும் உயிரையும் கொல்லும். இவர்கள் விஷயத்தில் எப்படியோ...

பாகிஸ்தான்: அருமையான பேட்ஸ்மென்கள் - அற்புதமான பந்து வீச்சாளர்கள் - அசகாய சூரர்களான ஃபீல்டர்கள். இருந்தும் என்ன செய்ய..? சூதாட்டாக் குற்றச்சாட்டுகள் - நிர்வாகச் சீர்கேடுகள் - நிச்சயமற்ற தன்மை - நாம் அணியில் இருக்கிறோமா - பதவியில் தொடர்கிறோமா என்பதை காலைப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஆகியவை உச்சாணிக் கொப்பிலிருந்து படுபாதாளத்துக்கு அந்த அணியை தள்ளி விட்டுள்ளன. இந்த உலகக் கோப்பையை சேர்ந்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய உப-கண்ட நாடுகளில் அதுவும் ஒன்று. ஆனால் அந்த நாட்டில் நிலவும் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக ஒரு ஆட்டத்தைக் கூட அங்கு நடத்த முடியாத நிலை. ஆகவே போட்டி நடத்தும் பொறுப்பை இந்திய-இலங்கை-பங்களாதேஷ் நாடுகள் ஏற்றுக் கொண்டு பாகிஸ்தானை கழற்றி விட்டு விட்டன. ஆனால் களத்தில் அதைச் செய்ய முடியுமா..? சற்றும் எதிர்பாராமல் வெற்றி பெறக்கூடியவர்களை டார்க் ஹோர்ஸ் என்பார்கள். பாகிஸ்தான் அத்தகைய ஒரு கறுப்புக் குதிரை என்று கருதப்படுகிறது.

கறுப்புதான் நியூசீலந்து அணியின் வண்ணம். எந்த நேரத்தில் விஸ்வரூபம் எடுப்பரர்கள் என்று சொல்ல முடியது. அதனாலேயே பல அணிகளுக்கு இவர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வந்தார்கள். ஆனால் கடந்த சில காலமாக பங்களாதேஷிடம் அடியும் இந்தியாவிடம் உதையும் வாங்கும் அளவுக்கு நற்று நலிந்து போய்க் கிடக்கிறார்கள். வெட்டோரி (Vettori) டைரிஸ் (Styris) மெக்கல்லம் (McCullum) சௌதீ (Southee) ரொஸ் டெய்லர் (Ross Taylor) வில்லியம்சன் (Williamson) –குப்டில் (Guptill) என்று நிறைய திறமைசாலிகள். ஆனால் இவர்கள் எப்போது எழுவார்கள் - எப்போது விழுவார்கள் என்பது எவருக்கும் - ஏன் - அவர்களுக்கே கூடத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

பங்களாதேஷில் சக்கிபுல் ஹசன் (Shakib Al Hasan) முர்துதுஸா (Mortaza) - தமீம் இக்பால் (Tamim Iqbal) - இம்ருல் கயஸ் (Imrul Kayes) மஹ்மூதுல்லா (Mahmudullah) அஷ்ரஃபுல் (Ashraful) - ஜுனைது சித்தீக் (Junaid Siddique) என்று ஏகப்பட்ட திறமையான ஆட்டாக்காரர்கள்..!

அது போல ஸிம்பாப்வே அணியில் டய்லர் (Taylor) வைட் (white) - சிக்கும்பர (Chibhabha) டைபு (Taibu)மஸகட்ஸா (Masakadza) என்று பல நம்பிக்கை நட்சத்திரங்கள். என்றாலும் இந்த இரண்டு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. இப்போதும் கூட எதுவும் சாதிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் சில வெற்றி தோல்விகள் மூலம் சில அணிகளின் வெற்றிக் கனவுகளை கலைப்பதில் பெரிதும் பங்காற்றுவார்கள்என்று மட்டுமே இப்போதைக்கு சொல்லக் கூடியதாக இருக்கிறது.

அதுபோலத்தான் துணை உறுப்பு நாடுகளும்...! சில பெரிய அணிகள் தங்கள் ரன் விகிதாசாரத்தை கூட்டிக் கொள்ளவும் - உன்னதச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு உதவி செய்யும் அளவுக்கே இவர்களது பங்களிப்பு இருக்கும். இப்படி இவர்களை ஒரேயடியாகத் தள்ளி விடவும் முடியாது. கென்யாவும் கனடாவும் நம் கவனத்துக்கு உரியவை. இந்த அணிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் தொழில் முறை விளையாட்டு வீரர்கள் அல்ல. ஆனால் இந்த அணிகளுக்காக ஆடும் பல இந்திய வம்சாவழியினர் மிகுந்த திறமைசாலிகள். இவர்கள் எதை சாதிக்கிறார்களோ இல்லையோ பல அணிகளின் தூக்கத்தைக் கெடுப்பது உறுதி.

1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது அதில் எட்டு ஆல்-ரவுண்டர் கள் இருந்தார்கள். இன்று அந்த அளவுக்குள்ள ஒரே அணி இலங்கை என்று சொல்லலாம். ஏஞ்சலா மேத்யூஸ் (Angelo Mathews) மட்டுமல்ல வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா (Malinga) வரை பலர் இந்தத் தகுதிக்கு உரியவர்கள். ஜெயசூரியா - சமிந்தா வாஸ் போன்ற ஜாம்பவான்கள் இல்லை. ஆனால் முரளி இருக்கிறர். அத்துடன் இளைய தலைமுறை அவர்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தில்ஷான் (Dilshan) போன்ற அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் போக, நடு நிலையிலும் சங்கக்கார - மஹேலா ஜெயவர்த்தன போன்ற (Sangakkara Jayawardene) அதீத திறமைசாலிகள்..! வேகப்பந்து வீச்சிலும்சோடை இல்லை. ஆனால் சுழற்பந்து வீச்சில் மற்ற எல்லா அணிகளையும் விட சிறந்தவர்கள் முரளி - அஜித் மெண்டிஸ் (Ajantha Winslo Mendis) - ரங்கன ஹெரத் (Rangana Herath) - என்றிருக்கிறார்கள். திறமை ஒன்றை மாத்திரம் வைத்துக் கணக்குப் போடுவதாக இருந்தால் உலகக் கோப்பையை வெல்லும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இலங்கைக்கு உண்டு என்று துணிந்து சொல்லலாம்.

சேவாக் (Sehwag) கம்பீர் (Gambhir) ரெய்னா (Raina) கோஹ்லி (Kohli) யுவராஜ் (Yuvraj Singh) - யூசுஃப் பத்தான் (Yusuf Pathan) தோனி (Dhoni) ஹர்பஜன் (Harbhajan) என்று எட்டாவது வரை மிகச் சிறந்த பேட்ஸ்மென்கள் இருப்பதுவேறு எந்த அணியிலும் இல்லை. பந்து வீச்சில் இன்னொரு ஸஹீரும் (Zaheer) இன்னொரு ஹர்பஜனும் இருந்தால் இந்தியாவை வெல்ல யாராலும் முடியாது. இருப்பவர்களில் நெஹ்ரா (Nehra) முனாஃப் (Munaf) - முதலில் கழற்றி விடப்பட்டு பிறகு இப்போது அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் - ஆகியோர் சந்தர்ப்பத்தை அனுசரித்து எழுந்தார்கள் என்றால் - ஹர்பஜனுக்கு இணையாக தமிழ்நாட்டின் அஸ்வினும் தன் முழுத் திறமையை வெளிப்படுத்துவார் என்றால் - இந்த இரண்டு என்றால்களும் ஒன்றானால் - வெற்றியின் தலை வாசல் வரை சென்று படியில் தடுக்கி விழுந்துவிடும் தன் சுபாவத்திலிருந்தும் இந்திய அணியும் மீண்டால் 110 கோடி மக்களின் வயிற்றில் பால் வார்ப்பது மட்டுமல்ல தலையில் நெய் அபிஷேகமே செய்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்வார்கள்...!

எல்லா அணிகளிலும் வலிமை இருக்கிறது வல்லமை இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு மட்டும் தான் 110 கோடி மக்களின் வாழ்த்தும் பிரார்த்தனையும் சேர்ந்தே இருக்கிறது. வெற்றி பெற வேண்டியது இந்திய அணியின் கடமை. வெற்றி பெறுவார்கள் என்பது இந்திய மக்களின் கனவு - ஆசை - ஆதங்கம் - எதிர்பார்ப்பு எல்லாம்...!! 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இன்னொரு முறை தலை நிமிர வேண்டும் - நிமிரும்..!!!

http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={E1C95D19-7F03-4769-808C-08B3AF91E1C9}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா :(:( -தென் ஆப்ரிக்கா :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

128417.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் வசிப்பவர்கள் இந்த துடுப்பாட்ட போட்டி நேரஞ்சலை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? rolleye0017.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் வசிப்பவர்கள் இந்த துடுப்பாட்ட போட்டி நேரஞ்சலை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? rolleye0017.gif

eurosport 2

skysports

sky sports 1

sky sport 2

sky sport 3

british eurosport

british eurosport 2

இந்த சனலில் நீங்கள் பார்க்கலாம் தாத்தா..

அப்படி உங்களிட்டை இந்த சனல்கள் இல்லாட்டி ^_^

இந்த இணைய தளத்துக்கு போய் பாருங்கோ எல்லா விளையாட்டும்.. நேரடி ஒலிபரப்பு..

இது > http://myp2p.eu/competition.php?competitionid=&part=sports&discipline=cricket :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக்க கிண்ண துவக்க விழா வீடியோ..நல்லா செய்து இருக்கிறாங்கள்

http://www.mycrickethighlights.com/cricket-world-cup-2011-opening-ceremony/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆக்க போக்குது :):D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆக்க போக்குது :):D

பையா....

துடுப்பாட்ட ஒளிப்பதிவுகளையும் அன்று நடந்த, விளையாட்டுக்களைப் பற்றிய உங்களது விமர்சனத்தையும் எழுதுங்கள்.

வாசிக்க, ஆவலுடன் காத்திருக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகளின் கெட்ட காலம்!

வெள்ளி, 18 பெப்ரவரி 2011 22:31

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் கார்ல்டன் போக் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எட்ரியன் பரத் ஆகியோர் காயத்தால் அவதியுறுதால் உலகக் கிண்ண போட்டியில் பங்கு கொள்வது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

இவ்விரு வீரர்களும் விளையாட முடியாத சந்தர்ப்பத்தில் டெவோன் தோமஸ் மற்றும் கிர்க் எடவட்ஸ் ஆகியோர் மீள அழைக்கப்படலாம் என மேற்கிந்திய கிரிகெட் சபை அறிவித்துள்ளது.

அவ்வாறு அவர்கள் மீளஅழைக்கப்பட வேண்டுமாயின் ஐ.சி.சியின் விசேட அனுமதியினை பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 24ஆம் திகதி தனது முதலாவது உலகக் கிண்ண போட்டியில் பங்கு பற்றவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இவ்விரு வீரர்களின் வெளியேற்றமானது பெரும் இழப்பாகவே இருக்கும் என கிரிகெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

tamilcnn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஓவருக்கு 60 ரன்ஸ் நொ வீக்கேட்..

சச்சின் சீவாக் நல்ல தொடக்கம்... ^_^:)

  • கருத்துக்கள உறவுகள்

பையன் தந்த இணைப்பில் பார்த்துக் கொண்டிருந்தேன் திடீரென்று நின்று விட்டதே?

  • கருத்துக்கள உறவுகள்

10 ஓவருக்கு 60 ரன்ஸ் நொ வீக்கேட்..

சச்சின் சீவாக் நல்ல தொடக்கம்... ^_^:)

நன்றி பையா...

ரன்ஸ் என்றால் ..... ஓட்டம்

விக்கெட் என்றால் தடியா?

ஓவரை எப்படி தமிழில் எழுதுவது என்று யாராவது.. சொல்லித்தருவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன் தந்த இணைப்பில் பார்த்துக் கொண்டிருந்தேன் திடீரென்று நின்று விட்டதே?

அதிலை பந்து லிங்ஸ் வரும் ஒன்டில நின்ட மற்றதை அமத்தி பாருங்கோ

இல்லாட்டி இதிலை பாருங்கோ நல்ல கிலியர்... http://cjssports.altervista.org/index.html

Mozilla Firefox நெற் இருந்த அதிலை இந்த லிங்ஸ்ச தொடுத்து போட்டு பாருங்கோ..அப்ப நிக்காமை பார்க்கலாம் :D

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா...

ரன்ஸ் என்றால் ..... ஓட்டம்

விக்கெட் என்றால் தடியா?

ஓவரை எப்படி தமிழில் எழுதுவது என்று யாராவது.. சொல்லித்தருவீர்களா?

எனக்கும் தெரியாது சிறி அண்ணா..அது தான் நான் ஆங்கிலத்திலை எழுதினான்..!

இந்தியாடை மட்டையடிய பார்க்க 300 ரன்ஸ்ச தான்டும் போல தான் இருக்கு..

நீங்கள் விளையாட்டை பார்க்கிறிங்களா..நான் விளையாட்டை பார்த்து கொன்டு தான் உங்க கூட எழுதுறன் பெரிய அதிசயம் :D:)

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு டெல்லி வீரகளும் வங்கிளாதேஸ் பந்த பதம் பாக்கினம்..

வங்கிளாதேஸ் ரசிகர்களை பார்க்க பரிதாவமாய் இருக்கு... :D:)

  • கருத்துக்கள உறவுகள்

பை

எனக்கும் தெரியாது சிறி அண்ணா..அது தான் நான் ஆங்கிலத்திலை எழுதினான்..!

இந்தியாடை மட்டையடிய பார்க்க 300 ரன்ஸ்ச தான்டும் போல தான் இருக்கு..

நீங்கள் விளையாட்டை பார்க்கிறிங்களா..நான் விளையாட்டை பார்த்து கொன்டு தான் உங்க கூட எழுதுறன் பெரிய அதிசயம் :D:)

நன்றி பையா!!!!!!!!!!!!!!!!

யன் நீங்களும் நல்ல தமிழ் கதைக்கிறீர்கள். :)

புலவரும் வந்துள்ளார், நாங்கள் இனிய தமிழை கதைப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி சிறி அண்ணா

சிறி அண்ணா நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்..

இந்தியா 300 ஓட்டம் எடுத்தா , அதை வங்கிளாதேஸ் அடிச்சு பிடிக்கும்மா..

300 தான்டினா கொஞ்சம் கஸ்ரம் போல தான் இருக்கு.. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

370 :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் 51 ஓட்டம்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

56-1 :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.