Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்தமிழர்கள்

http://www.youtube.com/watch?v=TptwEuDHZVI&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

அதிலும் கனடா நாட்டில் இருந்து வந்திருந்த பெண்.. தான் ஈழத்தில் பட்ட துன்பங்களைச் சொன்னார்.

அவர் சொன்னது அத்தனையும் உண்மை.

வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் போது இங்கையே பிறந்து வளர்ந்தவர்களும் வருவார்கள்.. நாமும் போவோம். எல்லோரும் ஒரே அளவீடு கொண்டுதான் அளவிடப் படுவோம். அதிலும் எமக்கு வெளிநாட்டவர்கள் என்ற இரண்டாம் நிலை.

ஆனால்.. நாங்கள் கல்வி கற்றது.. போரின் கீழ்.. செல் மழையின் மத்தியில்.. மின்சாரமில்லாத.. கணணி இல்லாத.. ஏன் ஒரு இரசாயன ஆய்வுகூடத்துக்குரிய இரசாயனமும் இல்லாமல் என்பது பலருக்கு தெரிவதில்லை.

இந்தியப் படையின் காலத்தில் வெள்ளை வானில் சுட்டுக் கொன்று விட்டு பிணங்களை சந்திகளில் கொண்டு வந்து வீசிவிட்டுப் போவார்கள். ஒரு நாள் அவ்வாறு ஒரு பிணத்தை அதிகாலை வேளையில் (ஒரு 5.30 இருக்கும்) வீசிய போது..நானும் எனது நண்பனும் அரசடிச் சந்தியில் (யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகில்- மின்சார சபை கட்டடப் பகுதியில்) கண்டோம். அதற்காகவே எம்மை நோக்கி சுட்டுக் கொண்டே வானில் வேகமாக ஓடிப் போய் விட்டார்கள். நாங்கள் கண்ட பிணம்.. பின்னர் அப்போது பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்ற ஒரு திறமை மிக்க மாணவனது என்று பின்னர் பத்திரிகையில் படித்தோம். அப்போ நாங்கள் சிறுவர்களாக இருந்த போதும் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. காரணம்.. அவர்கள் பிணத்தை வீசுவதைக் கண்ட குற்றம்..!

இப்படிப் பல...!

நாங்கள் எல்லாம் மேற்படிப்புக்கு கொழும்புக்கு தெரிவாகிப் போனதால்.. அங்கு தான் முதற் தடவையா இரசாயன உபகரணங்களையே பார்த்தது. யாழ் பல்கலைக்கழகம் இன்னும் பல நெருக்கடிகளை சந்தித்ததாக எமது மூத்த நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக 1995 இடம்பெயர்வு காலத்தில்..!

நான் கல்வி கற்ற போது பெரும் பொருளாதாரத் தடை. சாதாரண தரப் பரீட்சையை பதுங்கு குழிக்குள் இருந்து அதுவும் மழை பெய்து சேறும் சகதியுமா இருந்த பதுங்கு குழிக்குள் மெழுகுவர்த்தி ஒளியில்.. படித்து எழுதினோம். பரீட்சைக்கு சமீப நாள் ஒன்றில்.. ஒரு விமானத் தாக்குதலில் எங்கள் வீடும் தேசமடைந்திருந்தது. பரீட்சை நடந்து கொண்டிருக்கும் போது கூட சுப்பர் சொனிக்.. விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால் மற்றவர்களை விட எவ்வளவோ சிரமப்பட்டு சாவின் விளிம்பில் நின்று கல்வி கற்ற நாமும்.. பல செளகரியமான சூழலில் கல்வி கற்ற பிறரும் ஒரே அளவீட்டின் கீழ் தான் அளவிடப்படுவது.. நேர்மை அற்றதாக இருப்பினும்.. எமக்குள்ளேயே புதைந்துவிட்ட ஆதங்கங்களை.. அனுபங்களைக் கொண்டது. அதனை அவர் வெளிப்படுத்திய போது அதற்கு முன்னுரிமை அளித்த விஜய் ரீவியை பாராட்டுவது தகும்.

நன்றி விஜய் ரீவி.. கனடா சென்று கனடியத் தமிழ் என்று பெருமையாகச் சொல்லி சொந்த மண்ணில் பட்ட அவலங்களை மறந்த பலரைக் கண்டிருக்கிறேன். ஆனாலும்.. இந்தத் தங்கை தான் பட்ட துன்பங்களை வெளி உலகும் குறிப்பாக தமிழகம் உணரச் செய்தமைக்கு நன்றிகள்.

சில தமிழக ரீவிகளுக்கு எமது வலியை உணரக் கூடத் தெரிவதில்லை. ஆனால் எம்மிடம் பணம் பறிக்கத் தெரிகிறது. விஜய் ரீவிக்கு எமது வலி உணரும்.. அந்த மனிதாபிமானம் கொஞ்சம் என்றாலும் இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே போல வன்னி அவலம் நடந்தபோது ஈழத்து நடனக்கலைஞன் பிறேம் அவர்களின் நடனத்தில் எமது அவலங்களை விஜய் தொலைக்காட்சி காண்பித்தது.

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ&feature=channel_page

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4&feature=channel

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கந்தப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி,கந்தப்பு. வெற்றிபெற வாழ்த்துக்கள் அச்சகோதரிகளுக்கு.ஒரளவாவது எமது செய்திகளை உலகுக்கு காட்ட முயலும் விஜய் தொலக்காட்சிக்கும் நன்றிகள்.

நானும் விஜய் தொலைக்காட்சியில் இதனைப் பார்த்தவுடன் இணைப்பை youtube இல் தேடி போடா வேண்டும் என்று நினைத்தன்...கந்தப்பு முந்திட்டார் :lol:

அதிரடிச்சிங்கர் இல் வந்த மட்டக்கள்ப்பை சார்ந்த பாலசிங்கம் கோபிகிருஸ்ணா வையும் இணையுங்கோவன் யாராச்சும். இவர் முன்னர் இலங்கை சனாதிபதியின் கையால் கூட பரிசு பெற்றிருந்தார்.அவரது தொடர்பு இருக்கா யாருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழரின் துயரங்களை வெளியுலகிற்கு எடுத்து வருபவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நன்றி சகோதரி

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவ கனடா நாட்டு சிங்கி சொறீலங்காரை ரெப்ரசன்ற் பண்ணப்போறாவம். ஏன் சிங்களவண்ட படத்தில சான்ஸ் எடுக்கவோ

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடிச்சிங்கர் இல் வந்த மட்டக்கள்ப்பை சார்ந்த பாலசிங்கம் கோபிகிருஸ்ணா வையும் இணையுங்கோவன் யாராச்சும். இவர் முன்னர் இலங்கை சனாதிபதியின் கையால் கூட பரிசு பெற்றிருந்தார்.அவரது தொடர்பு இருக்கா யாருக்கும் ?

வளமான குரலை கொண்டவர். பாலசுப்பிரமணியம் போலவே பாடுகிறார்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான, வெகு நேர்த்தியான பங்களிப்புகள். நார்வேயிலிருந்து வந்து பாடிய "பூப்பூக்கும்" பாடல் அசலின் வடிவத்தைவிட பக்கவாத்திய இசையில்லாமல் வளமான குரலில் இவர் இனிமையாக பாடியதைக் கேட்க சிறப்பாக இருந்தது. கனடாவிலிருந்து வந்து பாடியவர் அறிமுகத்தில் ஈழத்தின் வலியை சொன்னபோது கலங்கினாலும் அவர் பாடியவிதமான "நாளை இந்தவேளை பார்த்து" அருமை.

இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மட்டக்கிளப்பு கோபியின் குரல், அச்சாக பாலசுப்பிரமணியத்தின் பிரதிபலிப்பு..அதிலும் அவர் அனுபவித்து மேடையில் முகபாவனையுடன் வெகு அனாசியமாக தெளிவாக பாடியது வசீகரமானது.

வந்த அனைவருமே இலங்கை என்றே கூறினார்கள்... ஏன் ஈழத்திலிருந்து என்று சொல்லியிருக்கலாமே?

அனைத்தையுமே பலமுறை ஓடவிட்டு ரசித்துக்கேட்டேன்.. ஆங்கிலக் கலப்பில்லாமல் சுத்தத் தமிழில் சரளமான, தெளிவான தமிழ் உச்சரிப்பு...எமக்கு பொறாமையாக இருக்கிறது..சங்கம் வைத்து வளர்த்த எம்நகரத் தமிழ், இன்னும் நறுமணத்துடன் இன்று வாழ்வது ஈழத்திலேயே..

ஏமாந்தது கம்பன் மட்டுமல்ல..சில நொடிகளில் நானும் ஏமாந்தேன்..இருப்பது தமிழகமா..இல்லை "தமிழ் நாடா"..?

:)

Edited by ராஜவன்னியன்

நன்றி கந்தப்பு

இவர்கள் (ஈழ சகோதரர்) அவர்கள் (இந்திய சகோதரர்கள் ;) )

ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்போது தமிழிலேயே பதில் சொன்னால் என்னம் அந்தமாதிரி இருக்கும்...

[சகோதரர்களே சிறிலங்கா வின் தமிழ் பெயர் இலங்கை :) ;) அதை நாம் அடிக்கடி ஆங்காங்கே மறந்துவிடுகிறோம்.... நன்றி ]

ஏன் ஈழத்திலிருந்து என்று சொல்லியிருக்கலாமே?

:D:)

நன்றி ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள பதிவில் நடனக்கலைஞர் பிரேம் குழுவினரின் நேர்த்தியான விளக்கம் பற்றி சொல்ல வார்த்தைகளுமில்லை..அவற்றைப் பார்க்க விழிகளும் இல்லை-கண்ணீரில் மூழ்கியதால்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.