Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது

Featured Replies

தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது.

இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

W4J_20100805_001.jpg

W4J_20100805_002.jpg

W4J_20100805_003.jpg

W4J_20100805_004.jpg

W4J_20100805_005.jpg

W4J_20100805_006.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை சில மணித்துளிகள் அவருடன் இருந்தேன்

50ஆயிரம் தமிழர்கள் உள்ள பிரான்சில் அதே 11 இளைஞர்கள் அவருடன் தொடர்ந்தும்...

வெட்கப்படுகின்றேன்

இன்று காலை சில மணித்துளிகள் அவருடன் இருந்தேன்

50ஆயிரம் தமிழர்கள் உள்ள பிரான்சில் அதே 11 இளைஞர்கள் அவருடன் தொடர்ந்தும்...

வெட்கப்படுகின்றேன்

:D மனிதாபிமான முறையிலாவது அங்குள்ளவர்கள் முக்கியமாக இளைஞ்சர்கள் பங்கெடுத்து சிவந்தனை ஊக்குவிக்கலாமே? பிரான்ஸ் தமிழர் அமைப்புகளில் உள்ளவர்கள் எல்லாரும் எங்கே? :wub: ஒரு நாளைக்கு இருபது கிலோ மீட்டார்கள் ஆவது முறை (turn) எடுத்து சிவந்தனுடன் நடக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை சில மணித்துளிகள் அவருடன் இருந்தேன்

50ஆயிரம் தமிழர்கள் உள்ள பிரான்சில் அதே 11 இளைஞர்கள் அவருடன் தொடர்ந்தும்...

வெட்கப்படுகின்றேன்

விசுகு அண்ணா கேட்கிறதிற்கு மன்னிக்கவும்...சிலவேளை தப்பாய் கூட இருக்கலாம் உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன் உங்கட பிள்ளைகள் போனவர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் நடத்தும்போது மக்கள் அலைஅலையாக வந்து ஆதரவு தரவேண்டும் என நினைப்பவர்கள், போராட்டதை இடையில் நிறுத்தும் போது அதற்கான சரியான காரணத்தை மக்களுக்கு சொல்ல கடமை பட்டவர்கள், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் என்றால் சனமும் வெளியே சொல்ல முடியாத காரணங்கள் என்று சொல்லி போட்டு தன்ர வேலையை பாக்க போயிடும், இதை நான் எழுதுவது சிவந்தனை புண்படுத்துவதற்காக அல்ல தவறு செய்தவர்கள் பண்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே, அவர்களது தவறுகள் மற்றவர்களது முயற்சிகளையும் பாதிக்கும் என காட்டுவதற்காக மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா கேட்கிறதிற்கு மன்னிக்கவும்...சிலவேளை தப்பாய் கூட இருக்கலாம்

உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன் உங்கட பிள்ளைகள் போனவர்களா?

ஆம்

படம் போடச்சொல்ல மாட்டீர்கள் தானே...

இதுதான் தமிழன்

தான் செய்யமாட்டான்

செய்பவனை ஆயிரம் கேள்விகள்...

உள்குத்து

வெளிக்குத்து

அதற்கும்மேல் காட்டிக்கொடுப்பு...

ஓம் சித்தன்

என்னிடமும் ஒருவர் நேற்றுக்கேட்டவர்

இவரும் வழக்கில் காசு எடுப்பாரோ என்று...???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்

படம் போடச்சொல்ல மாட்டீர்கள் தானே...

இதுதான் தமிழன்

தான் செய்யமாட்டான்

செய்பவனை ஆயிரம் கேள்விகள்...

உள்குத்து

வெளிக்குத்து

அதற்கும்மேல் காட்டிக்கொடுப்பு...

நான் செய்கிறவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் ஆனால் தாங்கள்,தங்கட பிள்ளைகள் ஒன்டுமே செய்யாமல் இருந்து கொண்டு மற்றவரை செய்ய சொல்பவரைத் தான் பிடிப்பதில்லை...நீங்கள் அப்படி இல்லா விடத்து என்னை மன்னிக்கவும்.

இன்று காலை சில மணித்துளிகள் அவருடன் இருந்தேன்

50ஆயிரம் தமிழர்கள் உள்ள பிரான்சில் அதே 11 இளைஞர்கள் மட்டுமே அவருடன் தொடர்ந்தும்...

வெட்கப்படுகின்றேன்

இந்தக்கருத்தில் சிலபேருக்கு பொருள் மயக்கம் ஏற்படவாய்பபுண்டு

இதேபோன்று (மட்டுமே) திருத்தம் செய்துவிடுங்கள்

போராட்டம் நடத்தும்போது மக்கள் அலைஅலையாக வந்து ஆதரவு தரவேண்டும் என நினைப்பவர்கள், போராட்டதை இடையில் நிறுத்தும் போது அதற்கான சரியான காரணத்தை மக்களுக்கு சொல்ல கடமை பட்டவர்கள், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் என்றால் சனமும் வெளியே சொல்ல முடியாத காரணங்கள் என்று சொல்லி போட்டு தன்ர வேலையை பாக்க போயிடும், இதை நான் எழுதுவது சிவந்தனை புண்படுத்துவதற்காக அல்ல தவறு செய்தவர்கள் பண்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே, அவர்களது தவறுகள் மற்றவர்களது முயற்சிகளையும் பாதிக்கும் என காட்டுவதற்காக மட்டுமே.

சித்தன்,

உங்கள் கருத்து தான் எனதும்.

விசுகு அண்ணா கேட்கிறதிற்கு மன்னிக்கவும்...சிலவேளை தப்பாய் கூட இருக்கலாம் உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன் உங்கட பிள்ளைகள் போனவர்களா?

இப்படி மிக மட்டரகமான கேள்விகளைக் கேட்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

தியாகம் என்றால் முழுக்குடும்பமும் தியாகம் செய்ய வேண்டும் - பின்னர் ஏனைய உறவுகளும் தியாகம் செய்ய வேண்டும் - அதுவும் நடந்தால் வேறு எங்காவது பிழை கண்டுபிட்டிக்க வேண்டும் என்ற தொனியில் மிக இழிவான கேள்விகளைக் கேட்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

தாங்கள் எதுவும் செய்யாமல், தங்களது பங்களிப்பைக் கூறாமல், மற்றவர்கள் பங்களிப்பை மலினப்படுத்தும் கேள்விகளைக் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியான ஈனர்கள் பலர் தமிழரில் உண்டென்பதால் தான் என்னவோ, தமிழனின் பலத்தை உலகறியச் செய்தவன், தனது வாரிசுகள், மனைவி என்று குறைந்தது ஒருவர் கூட வாழவேண்டும் என நினைக்கவில்லை.

ஆக்கிரமிப்பாளனின் ஆழமான வேர்கள் உங்களுக்கு ஒருபோதும் புலபட்டதில்லை...............

இதை நான் எழுதவில்லை உங்கள் கருத்துக்கள் ஊடக நீங்கள் எழுதி உள்ளீர்கள். ஒரு சாதரண பணக்காரனின் வேலை தளம் ஒன்றிலேயே கண்முன்னால் களவெடுக்கும் அநியாயங்களை என்றாவது ஒருநாள் தட்டி கேட்ட ஆனுபவம் உங்களுக்கு இருந்திருப்பின். இந்த புலுட கருத்தை நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள்.

நன்மை செய்ய புறபட்டவன் நலிந்து சாகவேண்டும். நாலு பக்கமும் நாக்கை வளைக்க தெரிந்த கூட்டம் நலமுடன் வாழவேண்டும்.

நல்ல சிந்தனை! தற்போதைய உலகில் இது தந்திரமும் கூட

நான் எழுதியதில் என்ன பிழை கண்டு பிடித்தீங்கள்....2009 மே மாதற்திற்கு முன்பு என்டால் நானும் இந்த கதைகளை எல்லாம் நம்பி இருப்பேன்...இணையத்தில வந்து எழுதிற எல்லாரும் அத்தோட,புலி,புலி என்டு மூச்சு முட்ட கதைக்கிற எல்லாரும் எப்படியாவது போராட்டத்தில் ஒன்றினைந்து செயலில் காட்டுவார்கள் எனத் தான் நினைத்தேன்...காலம் கடந்த பிறகு தான் தெரியும் அவர்களுக்கும் போராட்டத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை[ஒரு சிலரைத் தவிர]...அவர்கள் இணையத்திலும்,பேச்சுக்கு தாங்கள் புலி ஆதரவாளர்கள் என காண்பிப்பதோடு நின்டு விடுவார்கள் என.

பாராளுமன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டவர்களை பார்த்தால் இங்கே பிறந்த மாணவ,மாணவிகளை விட 2 அல்லது 3 வேலைக்கு போகின்றவர்கள்,நாளுக்கு இவ்வளவு சம்பளம் எனப் போகின்றவர்கள் சுருக்கமாக சொல்லப் போனால் படித்து நல்ல வேலையில் அல்லது சொந்தமாக வியாபாரம் செய்பவர்களை விட இப்படியானவர்கள் தான் அதிகம் கலந்து கொண்டார்கள்...கடைசியில் அவர்கள் வேலையும் இழந்து,மனநிலை பாதிக்கப்‍பட்டு திரிந்தது தான் மிச்சம்...அது எல்லாவற்றையும் என் கண்ணாலே பார்த்த படியால் தான் யாராவது வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்லி கேட்டால் முதலில் அவர்கள் கலந்து கொண்டார்களா எனக் கேட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கிரமிப்பாளனின் ஆழமான வேர்கள் உங்களுக்கு ஒருபோதும் புலபட்டதில்லை...............

இதை நான் எழுதவில்லை உங்கள் கருத்துக்கள் ஊடக நீங்கள் எழுதி உள்ளீர்கள். ஒரு சாதரண பணக்காரனின் வேலை தளம் ஒன்றிலேயே கண்முன்னால் களவெடுக்கும் அநியாயங்களை என்றாவது ஒருநாள் தட்டி கேட்ட ஆனுபவம் உங்களுக்கு இருந்திருப்பின். இந்த புலுட கருத்தை நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள்.

நன்மை செய்ய புறபட்டவன் நலிந்து சாகவேண்டும். நாலு பக்கமும் நாக்கை வளைக்க தெரிந்த கூட்டம் நலமுடன் வாழவேண்டும்.

நல்ல சிந்தனை! தற்போதைய உலகில் இது தந்திரமும் கூட

இரவு பகல் என பாராது வேலை வெட்டிகளை விட்டு விட்டு, அவர்களோடு கூட நின்றவர்களுக்கு , தாங்கள் அவ்வளவு நாளும் பட்ட கஸ்ரத்துக்கு என்ன பலன் கிடைத்தது என அறிந்து கொள்ள ஊரிமை இல்லை என்கிறீர்களா? அல்லது அவர்கள் அதுபற்றி எல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா? வா என்று சொன்னால் வரவும் போ என்று சொன்னால் போகவும் மட்டுமே மக்கள் தேவை என நினைக்கிறீர்களா? மிச்சம் எல்லாத்தையும் நாமே பாத்து கொள்கிறோம் என நினைக்கிறீகளா? அவர்கள் என்ன உறுதி மொழி தந்தார்கள் என கேட்பது குற்றமா? சரி மக்களாவது காப்பாற்றபடார்களா என்றால் அதுவும் இல்லை, சரி எதையும் செய்யமாட்டோம் என சொன்னார்களா? என்றால் அதையும் சொல்ல மாட்டோம் என்கிறீர்கள், பிறகு எப்படி மக்கள் மீண்டும் மீண்டும் நீங்கள் கூப்பிட்டவுடன் வருவார்கள் என எதிர் பாக்கிறீகள், புலத்தில் நடப்பது மக்கள் போராட்டம்தானே, போராடும்மக்களுக்கு உண்மை அறிந்து கொள்ளும் உரிமை இல்லை என்கிறீர்களா? நடத்த போராட்டத்தின் பெறுபேறு தெரியாது எப்படி அவன் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர்வான் அல்லது போராடும் முறையை மாற்றி அமைப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

[இப்படியான ஈனர்கள் பலர் தமிழரில் உண்டென்பதால் தான் என்னவோ, தமிழனின் பலத்தை உலகறியச் செய்தவன், தனது வாரிசுகள், மனைவி என்று குறைந்தது ஒருவர் கூட வாழவேண்டும் என நினைக்கவில்லை.

எமது கண் முன்னால் நடந்த வரலாறு

பாடம் இன்னும்வேண்டுமென்பவர்களை என்ன செய்யமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று போயிருந்தபோது..

வாருங்கள் அண்ணா

இவ்வளவு தூரம் வந்தும் தொடர்ந்து வருகின்றீர்களே

நன்றியண்ணா என்று...

ஒரு நிமிடம் எனது தோழில் தலைசாய்த்து நிமிர்ந்தார்

கண்ணைக்கவனித்தேன்

அந்த வேதனையைத்தான் இங்கு எழுதினேன்

என்னால் முடிந்ததை நான் செய்கின்றேன்

எம்மைப்பற்றி எதுவும் செய்திகளில் சொல்லவேண்டாம் என்று கேட்டிருந்தோம்

ஆனால் அவர் GTV இல் இது பற்றி சொன்னார் என்று கேட்டவர்கள் சொன்னார்கள்.

பாறாங்கல் ஒன்று அடைத்தபடி கிடக்கிறது

ஒருவர் தனியே தள்ளிபடி உள்ளார்

நான் சேர்ந்தாலும் தள்ளுவது கடினம்

நீங்களும் வாருங்கள் சுலபமாக தள்ளலாம் என்றுதான் இங்கு எழுதினேன்

தப்பானால் மன்னிக்கவும்

Edited by விசுகு

விசுகு அண்ணா கேட்கிறதிற்கு மன்னிக்கவும்...சிலவேளை தப்பாய் கூட இருக்கலாம் உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன் உங்கட பிள்ளைகள் போனவர்களா?

ஆம்

படம் போடச்சொல்ல மாட்டீர்கள் தானே...

இதுதான் தமிழன்

தான் செய்யமாட்டான்

செய்பவனை ஆயிரம் கேள்விகள்...

உள்குத்து

வெளிக்குத்து

அதற்கும்மேல் காட்டிக்கொடுப்பு...

...

எத்தனையோ பேர் 'ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை' என்ற அளவுக்கு, அப்படி இருக்கும் சமூகத்தில் குடும்பத்தில் ஒருவரேனும் பங்கெடுத்து செய்வது வரவேற்கத் தக்கது... வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.