Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் கடந்த 3 நாட்களாக கோல்டன் வைசின் 'கூண்டு' வாசித்தேன். புத்தகம் வாசிக்கும் முன்னர் இவரைப் பற்றி கேள்வி படேக்குள்ள இவர் ஒரு புலி ஆதரவாளர் என்று கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.ஆனால் புத்தகத்தை வாசிக்கும் போது அப்படித் தெரியவில்லை.இவரை விட பிரன்சிஸ் ஹாரிசன் நடுநிலைமையாக எழுதி இருக்கிறார்.கோல்டன் வைஸ் முள்ளி வாய்க்கால் ய்த்தத்தின் போது அகதிகளாய் வந்த மக்களை இராணுவம் அந்த மாதிரி உபசரித்தது என தனது நூலில் சொல்லியுள்ளார்.அதில் அவர் இராணுவத்தின் பெண்கள் மீதான பலாத்கார‌ம் பற்றி எதுவுமே குறிப்பிட‌வில்லை.

 

இந்த நூலை வாசித்த ஏனையோரின் கருத்தை முக்கியமாக கிருபனது கருத்தை அறிய விரும்புகிறேன் :)

நான் இன்னமும் படிக்கவில்லை. ஏனோ அரசியல் புத்தங்களை வாங்கினாலும் படிக்க முடியவில்லை. புதிதாக ஒன்றையும் அறியப்போவதில்லை என்ற முன்னுணர்வாக இருக்கலாம்!

நண்பர் ஒருவர் ஆங்கில மொழியில் உள்ள புத்தகத்தை படிக்க இரவலாகத் தருவதாகச் சொல்லியும் நாட்டத்தைக் காட்டவில்லை. அடுத்த முறை சந்திக்கும்போது பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன். தமிழில் படிப்பதைவிட ஆங்கிலத்தில் படித்தால் மொழிபெயர்ப்பில் உள்ள கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.

  • Replies 152
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நான் இன்னமும் படிக்கவில்லை. ஏனோ அரசியல் புத்தங்களை வாங்கினாலும் படிக்க முடியவில்லை. புதிதாக ஒன்றையும் அறியப்போவதில்லை என்ற முன்னுணர்வாக இருக்கலாம்!

நண்பர் ஒருவர் ஆங்கில மொழியில் உள்ள புத்தகத்தை படிக்க இரவலாகத் தருவதாகச் சொல்லியும் நாட்டத்தைக் காட்டவில்லை. அடுத்த முறை சந்திக்கும்போது பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன். தமிழில் படிப்பதைவிட ஆங்கிலத்தில் படித்தால் மொழிபெயர்ப்பில் உள்ள கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.

 

ஓ நீங்கள் ஏற்கனவே வாசித்து விட்டீர்கள் என்று தான் நினைத்தேன்.நல்லது முடிந்தால் வாசித்து விட்டு எழுதுங்கள்.ஆங்கிலத்தில் வந்த புத்தகத்திற்கும்,தமிழ் மொழி மாற்று புத்தகத்திற்கும் வித்தியாசம் இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.ரகுநாதன்,அர்ஜீன் அண்ணா போன்றோர் ஏற்கனவே வாசித்து விட்டோம் என எழுதியிருந்தனர்.தங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் அண்மையில் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" வாசித்தேன்.புலம் பெயர்ந்து வாழும் கிழக்கு மாகணத்தை சேர்ந்த எழுத்தளார் இவர்.
 
இந்த நூல் அக்கரைபற்றில் வாழும் தமிழ்,முஸ்லீம் சமூகங்களுக்கிடையே நடைபெறும் சம்பவங்களையும்,இனப் பிரச்சனையையும் சொல்லி நிற்கிறது.இவர் கதையை அப் பிராந்திய வட்டார மொழி நடையில் கொண்டு நகர்த்தியுள்ளார்.கதையை எழுதிய விதம் பாராட்டுக்குரியது.வாசிக்கத் தூண்டுகிறது.ஒரு எழுத்தளாராக மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
 
அவர‌து "என்னுரையில்" பின்வருமாறு எழுதியுள்ளார்;
"தேவதூதர்கள் போல் வந்தார்கள்."
"ராஜகுமார‌ர்கள்போல் உபச‌ரிக்கப்பட்டார்கள்."
"மாய மந்திர‌ம் செய்ததுபோல் மறைந்தே போனார்கள்."
தேவதூதர்கள் அல்ல...சத்துராதிகளே அவர்கள் என்பதை இன்னும் கூட‌ அந்த மக்கள் புரிந்து கொள்ளவில்லையாம் :o
 
விமல் முஸ்லீம் மக்களால் பாதிப்படைய முதல் புலத்திற்கு தப்பி ஓடி வந்தவராக இருப்பார் என்றே நினைக்கிறேன் :D அவரது கதையில் முஸ்லீம் மக்கள் அனைவரும் நல்லவர்கள் என்ட மாதிரி எழுதியுள்ளார்.தேவையில்லாமல் தமிழ்,முஸ்லீம் பிரச்சனையை ஆரம்பத்தில் தொடக்கியது தமிழர் என்ட மாதிரி எழுதியுள்ளார்.அத்தோடு ஒருவன் போராடினால் அவனது குடும்பவே அழியும் என்ட‌ மாதிரித் தான் எழுதியுள்ளார் :(
 
இது நான் அவர‌து கதையை வாசித்ததில் இருந்து புரிந்து கொண்ட‌து.வேறு யார‌வது இக் கதையை வாசித்திருந்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள்.
 
கச‌கறணம் என்டால் தொட‌ர்ச்சியான தொந்தர‌வு,முடிவுறா இன்னல்கள் என்று பொருளாம்
 
 
 
 

 

அக்கரைப்பற்று வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல். முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை ஒரு பக்கச் சார்பாகவே எழுதியுள்ளார். இந்தக் கதையில் அதிகம் ஈபிஆர்எல்எப் ஐ பற்றி எழுதப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை 'கசவாரங்கள்' என்று கேவலமாக அழைப்பார்கள்.

 

தேவதூதர்கள் போல் வந்தார்கள்.

ராஜகுமார‌ர்கள்போல் உபச‌ரிக்கப்பட்டார்கள்.

மாய மந்திர‌ம் செய்ததுபோல் மறைந்தே போனார்கள்
மேற்குறிப்பிட்ட வரிகள்  ஈபிஆர்எல்எப், புளொட், டெலோ ஆகிய இயக்கங்களுக்கு மிகப் பொருத்தமானது. 83 கலவரத்தின் பின்  தங்களைக் காப்பாற்ற வந்த தேவதூதர்கள் என்று போற்றப்பட்டவர்கள் ஓரிரு வருடங்களிலேயே மக்களால் வெறுக்கப்பட்டார்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அக்கரைப்பற்று வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல். முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை ஒரு பக்கச் சார்பாகவே எழுதியுள்ளார். இந்தக் கதையில் அதிகம் ஈபிஆர்எல்எப் ஐ பற்றி எழுதப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை 'கசவாரங்கள்' என்று கேவலமாக அழைப்பார்கள்.

 

தேவதூதர்கள் போல் வந்தார்கள்.

ராஜகுமார‌ர்கள்போல் உபச‌ரிக்கப்பட்டார்கள்.

மாய மந்திர‌ம் செய்ததுபோல் மறைந்தே போனார்கள்
மேற்குறிப்பிட்ட வரிகள்  ஈபிஆர்எல்எப், புளொட், டெலோ ஆகிய இயக்கங்களுக்கு மிகப் பொருத்தமானது. 83 கலவரத்தின் பின்  தங்களைக் காப்பாற்ற வந்த தேவதூதர்கள் என்று போற்றப்பட்டவர்கள் ஓரிரு வருடங்களிலேயே மக்களால் வெறுக்கப்பட்டார்கள்.

 

 

தப்பிலி நீங்கள் "விமல் குழந்தைவேல்" இல்லைத் தானே :unsure:

தப்பிலி நீங்கள் "விமல் குழந்தைவேல்" இல்லைத் தானே :unsure:

 

 எனக்கு அவர் யாரென்றும் தெரியாது.  நான் இங்க ஒரு குறுங்கதை கூட எழுதியதில்லை.

 இதுக்காகவாவது ஒரு கதை எழுதி யாழில் போடப்போறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" வாசித்தேன்.புலம் பெயர்ந்து வாழும் கிழக்கு மாகணத்தை சேர்ந்த எழுத்தளார் இவர்.

 

இது நான் அவர‌து கதையை வாசித்ததில் இருந்து புரிந்து கொண்ட‌து.வேறு யார‌வது இக் கதையை வாசித்திருந்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

 

கச‌கறணம் என்டால் தொட‌ர்ச்சியான தொந்தர‌வு,முடிவுறா இன்னல்கள் என்று பொருளாம்

குழந்தைவேலின் கசறணம் மற்றும் வெள்ளாவி நாவல்களை வாங்கி பத்திரமாக வைத்திருக்கின்றேன். :)  படிப்பதற்கு நேரமும் சூழலும் விரைவில் வரும் என்று நினைக்கின்றேன்.

 

கசகறணம் வாசித்து அதைப்பற்றி யாழில் சிறு குறிப்பும் எழுதிய ஞாபகம் .

இப்போது இளங்கோ (டி சே தமிழன்) எழுதிய "சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் " சிறுகதை தொகுதி வாசித்துக்கொண்டு இருக்கின்றேன்.அதில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன . அதில் உள்ள சில சிறுகதைகள் ஏற்கனவே யாழில் கிருபனால் இணைக்கப்பட்டிருக்கு ,சில புதிய கதைகள் .

மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் .எல்லா கதைகளிலும் காமம் சற்று அதிகமாக தூவியுள்ளார்.  எனக்கு அதிலுள்ள "கொட்டியா " கதை நன்கு பிடித்திருந்தது .

இணைக்க முடிந்தால் அந்த கதையை கிருபன் இணைத்துவிடவும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கு அவர் யாரென்றும் தெரியாது.  நான் இங்க ஒரு குறுங்கதை கூட எழுதியதில்லை.

 இதுக்காகவாவது ஒரு கதை எழுதி யாழில் போடப்போறன். :D

 

எழுதுங்கோ கதையை வாசிக்க நான் தயாராய் இருக்கிறேன் :)

குழந்தைவேலின் கசறணம் மற்றும் வெள்ளாவி நாவல்களை வாங்கி பத்திரமாக வைத்திருக்கின்றேன். :)  படிப்பதற்கு நேரமும் சூழலும் விரைவில் வரும் என்று நினைக்கின்றேன்.

 

 

கசகறணம் இங்கு நூலகத்தில் தான் கிடைத்தது.வெள்ளாவி இன்னும் வாசிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

 

கசகறணம் வாசித்து அதைப்பற்றி யாழில் சிறு குறிப்பும் எழுதிய ஞாபகம் .

இப்போது இளங்கோ (டி சே தமிழன்) எழுதிய "சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் " சிறுகதை தொகுதி வாசித்துக்கொண்டு இருக்கின்றேன்.அதில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன . அதில் உள்ள சில சிறுகதைகள் ஏற்கனவே யாழில் கிருபனால் இணைக்கப்பட்டிருக்கு ,சில புதிய கதைகள் .

மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் .எல்லா கதைகளிலும் காமம் சற்று அதிகமாக தூவியுள்ளார்.  எனக்கு அதிலுள்ள "கொட்டியா " கதை நன்கு பிடித்திருந்தது .

இணைக்க முடிந்தால் அந்த கதையை கிருபன் இணைத்துவிடவும் .

"கொட்டியா" ஏற்கனவே இணைத்துள்ளேன் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89393

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் ரஞ்சகுமார்,தாமரைச்செல்வி,மலைமகள்,மலரன்னை,தட்சாயினி.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் ரஞ்சகுமார்,தாமரைச்செல்வி,மலைமகள்,மலரன்னை,தட்சாயினி.

 

 

வருகைக்கு நன்றி லியோ.நான் இவர்களில் ரஞ்சக்குமாரது ஒரு சில கதைகளை மட்டுமே வாசித்துள்ளேன்.மலைமகளை பற்றி கேள்விப்பட்டு உள்ளேன்.ஆனால் வாசிக்கவில்லை.ஏனைய ஒருத்தரைப் பற்றியும் கேள்விப்படவும் இல்லை.வாசித்திருக்கவும் இல்லை என்பதை மிகுந்த கவலையுடன் சொல்லிக் கொள்கிறேன்

  • 3 weeks later...

பிரதீப் மத்தியூவின் கதை சுவாரசியமானது தான். உங்களிற்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி ரதி.

  • 3 months later...

எனது அக்கா சில வருடங்களின் முன் கனடாவிற்கு வந்தபோது ஓர் ஆங்கில நாவலை வாங்கி அப்பாவிற்கு கொடுத்தார். அண்மையில் நான் அலுமாரியை துப்பரவு செய்தபோது குறிப்பிட்ட இந்தப்புத்தகம் எனது கவனத்தை ஈர்த்தது, காரணம் புத்தகத்தின் உள் அட்டையில் இவ்வாறு எழுதப்பட்டு காணப்பட்டது. To: அப்பா 

 

இதனால் The Fall of Giants என்ற இந்த 1000 பக்கங்கள் புத்தகத்தை மெதுமெதுவாக வாசிக்கத்தொடங்கினேன். என்னவொரு அற்புதமான படைப்பு. சுமார் பத்து, பதினைந்து பக்கங்கள் தாண்டிய பின்னர் முழுக்கவனத்துடன் விறுவிறுவென்று வாசிக்கத்தொடங்கிவிட்டேன். இதை எழுதியவர் Ken Follett அவர்கள். பல விடயங்களை இந்த வரலாற்று நாவல் மூலம் அறியக்கூடியதாய் இருந்தது. விரைவில் இதன் தொடர்ச்சியான Winter of the Worldஐயும் வாசிக்க விரும்புகின்றேன். 

 

Ken Follettஅவர்களின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

 

 

சிறுவயதில் இருந்து வாசித்த எழுத்தாளகள் என்றால்

 

வாண்டுமாமா (தமிழில் குழந்தைகளின் கதைகள் காமிக்ஸ் கதைகளுக்கு பிரபலமானவர்)

 

அம்புலிமாமாவில் விக்கிரமாதித்தன் கதை தொடராக எழுதியவர்

 

செங்கையாழியன் - கொத்தியின் காதல் ,ஆச்சி பயணம் போகிறாள்

 

அருள் சுப்பிரமணியம் -வீரகேசரி பிரசுரமாக வந்த நாவல்கள்

 

பட்லி நாவல் போன்ற கிளுகிளுப்பூட்டும் வகையான மித்திரன் பிரசுரங்களாக வந்த நாவல்கள்

பி.டி .சாமி போன்ற எழுத்தாளர்களின் துப்பறியும் நாவல்கள்

 

சரோஜாதேவி போன்ற எழுத்தாளர்களின் கிளுகிளுப்பு புத்தகங்கள்

 

 

 

 

 

 

செ.கணேசலிங்கத்தின் கதைகள்

 

மு,வரதராசன்

   

ஜெயந்தன் 

 

மணியனின் பயண தொடர்கதைகள்

 

தாமரை மணாளன்

 

சுஜாதா

 

சாண்டிலியன்

அகிலன்

நா.பார்த்தசாரதி

 

எஸ் .பொ- சடங்கு ,

 

அறிஞர் அண்ணாத்துரை

 

புதுமைபித்தன்

 

ஜெயகாந்தன்

 

இந்திரா பார்த்தசாரதி

 

தகழி சிவசங்கரபிள்ளை 

 

பி.டி வாசுதேவன்

 

 

 

 

இப்பொழுதுதான் இந்த திரியை கவனிக்கிறேன். ஆங்கிலப் புத்தகம் படித்து அதிக நாளாயிற்று. கடந்த ஆறு வருடங்களாக தமிழில் சரித்திர நாவல் என்று எது கண்ணில் பட்டாலும் விடுவதில்லை. சமீபத்தில் பாலகுமாரன எழுதிய கங்கை கொண்ட சோழன் முதல் & இரண்டு பாகம் படித்தேன். சரித்திர நாவலுக்குரிய அந்த போர்க் காட்சிகள், காதல் எல்லாம் குறைவு என்பதால்,  மூன்றாவது பாகம் வந்தாலும் படிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

இப்பொழுது பல ஆய்வு கட்டுரைகள் ஒரு சேர தொகுக்கப்பட்ட "அறியப்படாத தமிழ் உலகம்" என்ற நூலையும், கா. அப்பாத்துரை எழுதிய "1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்" என்ற நூலையும் வாசித்து கொண்டிருக்கிறேன்.

 

அகிலன், கல்கிக்கு பின் கோகுல் சேஷாத்ரி எழுதும் சரித்திர நாவல்களை விரும்பி படிக்கிறேன்.


 

  • 2 weeks later...

Ken Follettஅவர்கள் எழுதிய Winter of the Worldஐ வாசித்தேன். Fall of the Giants முதலாம் உலக மகாயுத்தம் சார்ந்த கதை. Winter of the World முதல் நூலின் தொடர்ச்சியாக இரண்டாம் உலக மகாயுத்தம் சார்ந்து செல்கின்றது. முதலாவதை விட இரண்டாம் பாகம் சற்று ஆபாசமும், வன்முறையும் கலந்திருந்தது. நாவலில் தமிழ் சினிமாத்தனங்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றாலும் அறிவுபூர்வமாக, தத்துவார்த்தமாக, மற்றும் யதார்த்தமாக வரலாற்று சம்பவங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. நிறைய விடயங்களை Ken Follettஅவர்களின் எழுத்தினூடு அறிந்தேன்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் "நஞ்சுண்ட காடு" வாசித்து முடித்தேன். வாசிக்க முதல் இந்த நூலைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்த பின் வெறுமை தான் மிஞ்சியிருக்குது.

இந்த நூல் தான் குணா கவியழகனின் முதல் நாவல் என்பதை நம்ப முடியாமல் உள்ளது. நல்ல எழுத்து நடை.இவர் தொடர்ந்தும் எழுத வேண்டும்.முக்கியமாக மு.வாய்க்கால் அனுபவங்களை இவர் கட்டாயம் எழுத வேண்டும்.

நஞ்சுண்ட காடு பற்றி சொல்ல வேண்டுமானால் இப்படியான சில கதைகளை போராளிகள் சொல்ல நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனக்குத் தெரிந்து நான் பார்த்து,கேட்ட வரையில் வறுமைக் கோட்டுக்குள் இருப்போர் தான் 70% ஆனோர் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல்,மற்றவருக்கு நடக்கும் அநியாயங்களை,உயிரிழப்புக்களை பார்க்க பொறுக்காமல் நாட்டுக்காக போராடப் போனார்கள். மிச்ச 20 % நடுத்தர வர்க்கமாகவும்,10% வசதியானவர்களாகவும் இருந்திருப்பர்கள்.

இந்தக் கதையை வாசிக்கும் போது நிறையக் கேள்விகள் எழுகின்றன. நடுத்தர,வசதியானவர்கள் 1) படித்து நல்ல பதவியில் இருக்கும் போது அல்லது புலத்தில் இருக்கும் போது கஸ்டப்படும் மக்கள் போராட்டத்திற்குப் போய் கடைசியில் கண்டது என்ன?

இந்தக் கதை மு.வாய்க்காலுக்கு முன்பு நடந்த கதை 2004யில் இருந்து,இரு தடவை வன்னியின் தடையையும் மீறி, 10 வருடத் தடையைத் தாண்டி இப்பத் தான் வெளியில் வந்திருக்குது.காரணம் என்ன? கதையை வாசிச்சால் கஸ்டப்படுகின்ற குடும்பத்தை சேர்ந்தவர் போராட போக மாட்டார்கள் என்பததாலோ!

போராட்டம் மக்கள் போராட்டமாக இல்லாமல் ஒரு சிலர் மீது போராட்டத்தை திணித்தால் அந்தப் போராட்டமானது அந்த மக்களை,அவர்கள் முந்தி இருந்த நிலைக்கும் கேவலமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு எங்கள் போராட்டம் ஒரு உதாரணம். இதைப் பற்றி எழுத வேண்டுமானால் நிறைய எழுதலாம். நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

இந்த நூலை வாசிச்சதும் என்ட பார்வை இப்படித் தான் இருந்தது. அதற்காக மற்றவர்கள் பார்வை அப்படி இருக்க வேண்டியதில்லை. இந்த நூல் தொடர்பாக மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி

Edited by ரதி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சாஸ்திரியின் "ஆயுத எழுத்தை" அண்மையில் வாசித்து முடித்தேன்.யாழில் இருக்கும் கண பேர் துள்ளுகின்ற அளவிற்கு சாஸ்திரி ஒன்றும் இல்லாததை,ஒருதருக்கும் தெரியாதை எழுதவில்லை. தவிர புலிகளுக்கு அவப் பெயர் வருமளவிற்கு புலிகள் செய்யாததை அவர் எழுதவில்லை.புலிகள் செய்ததை கூட நூறில் ஒரு பங்கைத் தான் சாஸ்திரி எழுதியுள்ளார்.

நான் மேலே சொன்னது பெரும்பாலும் ஊரில் நடந்தது.இந்தியன் ஆமி இருக்கும் வரைக்கும் அங்குள்ள மக்களுக்கு,புலிகளுக்கு என்ன நடந்தது என தான் கண்டவற்றை எழுதியுள்ளார். பீற்றர் அண்ணாவின் மரணம் தொடர்பாக நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே கேட்டு இருக்குறோம்.

என்னைப் பொறுத்த வரை ஊரில் நடந்த பலவற்றை அவர் எழுதவில்லை.அல்லது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.புலத்தில் நடந்தவற்றில் புலிகள் செய்த ஒரு முக்கியமான அநியாயமான கொலையை,புலிகள் தான் செய்தார்கள் என ஒத்துக் கொண்டு இருக்கிறார்.

அநேகமான சம்பவங்கள் சாஸ்திரி ஏற்கனவே யாழில் எழுதியது தான்.நான் கதையை வாசித்து விட்டு யாழில் போய் தேடிப் பார்த்தேன்.சாஸ்திரி யாழில் எழுதின பழைய பதிவுகளை காணவில்லை அல்லது நான் தான் வடிவாகத் தேடிப் பார்க்கவில்லையோ தெரியாது.

மற்றப் படி சாஸ்திரி தனக்கே உரிய பாணியில் கதையைக் நகைச்சுவையாகவும்,விறு விறுப்பாகவும் கொண்டு நகர்த்தி உள்ளார்.அதற்கு ஒரு சபாஸ்...கதையின் நாயகனாக அவரை போட்டு தன்னைத் தானே உயர்த்தி உள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஓவர் கற்பனையோ என்று மனதிற்கு தோன்றுகிறது.ஒரு,சில கேள்விகள் இருக்குது. இப்ப வேண்டாம் யாழில் பல பேர் இன்னும் இந்த புத்தகம் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

ஒரு எழுத்தளாராக சாஸ்திரி தொடர்ந்து எழுதவும்,பிரகாசிக்கவும் வாழ்த்துக்கள்

Edited by ரதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத் தான் தமிழ்கவியின் "ஊழிக்காலம்" வாசித்தேன்.ஏற்கனவே மு.வாய்க்காலில் நடந்த சம்பவங்களை பார்த்தவர்கள் நேரில் சொல்ல கேள்விப்பட்டு உள்ளதால் இவரின் ஆக்கம் பெரிதாய் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தான் பார்த்த,அனுபவித்த துயரத்தை தான் நூலக வடித்திருக்கேன் என்று தமிழ்கவி நூலின் "என்னுரையிலே" சொல்லி விடுகிறார். எனக்கு வாய் மூலம் தாங்கள் பட்ட துயரத்தை சொன்னவர்களை விட இந்தம்மா பெரிதாய் எதுவும் துன்பத்தை அனுபவித்து விடவில்லை.

இறுதி யுத்தத்திலும் மக்கள் சாதி பார்த்ததகவும், புலிகள்,மக்களை பலவந்தமாக ஆட்சேர்ப்புக்கு கூட்டிப் போனதாகவும்,இடப் பெயர்வின் போதும் கூட தளபதிமாரின்ட வீட்டுக்காரரை பாதுகாப்பதற்காக சாதரண புலிகளை பயன்படுத்தியதாகவும்,பல பொறுப்பாளார்கள் அந்த இறுதி சண்டையின் போதும் கூட குடும்பத்தோடு வீட்டில் இருந்ததாகவும்,பொறுப்பாளார்கள் கடைசி வரை வசதியாக வாழ்ந்ததாகவும்,தீபன் போன்றோர் இறந்தது "பாப்பா" காட்டிக் கொடுத்து என்றும் எழுதியிருந்தார்.

அந்தம்மா சொல்வதிலும் சில உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எனக்கு என்னவோ யுத்த்ம் தொடங்க புலிகள் அந்த அம்மாவின் கொடுப்பனவை நிறுத்தி விட்டார்களாம்[அதை அவரே எழுதி இருந்தார்]. அதை தொடர்ந்து இறுதி வரைக் கொடுத்திருந்தால்,அந்தம்மாவை வசதியாய் வைத்திருந்தால் இப்படி ஒரு நூலை அவர் எழுதி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.ஆமி கொத்துக் குண்டு போட்டார்கள்,செல் அடித்தார்கள் என்று எழுதினதை தவிர அவர்களை பற்றி பெரிதாய் ஒன்றுமே எழுதலேல்ல.

எது எப்படி இருந்தாலும் அவருக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது. அத்தோடு எங்கே போனாலும் பிழைத்துக் கொள்ளும் அறிவு இருக்கின்றது. இது எனது பார்வை மற்றவர்களது பார்வை வேறாகவும் இருக்கலாம்.

Edited by ரதி

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் ஜனநாயக அரங்கு" என்னும் அமைப்பினரால் அண்மையில் லண்டனில் தமிழினியின் "ஒரு கூர்வாளின் நிழலில்" வெளியிடப்பட்டதாம்.புலிகளின் மகளிர் அரசியற் பொறுப்பாளாரின் நூல் வெளியீட்டை மாற்றுக் கருத்துக்களை கொண்ட இந்த அமைப்பினர் செய்வது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

மு.வாய்க்காலில் கடைசி வரைக்கும் இருந்த டொக்டர் வரதராசா,தமிழினியின் உதவியாளாராக இருந்த சந்திரிக்கா போன்றோர் இந் நிகழ்வில் உரையாற்றுவதாக இருந்தும்,கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லையாம்...புலி ஆதரவாளார்களால்[வாலுகளால்] இந்த நிகழ்வு நடக்க கூடாதாம் என்று மிரட்டப்பட்டதாம்.

இவ் நிகழ்வுக்குப் போய் இருந்த ஒருத்தர் ஒன்று மக்கள் அதி தீவிர புலி ஆதரவாளார்களாக இருக்கிறார்கள் அல்லது அதிகம் மாற்றுக் கருத்துக் கதைப்பவர்களாக இருக்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே கலந்து,பேசுவதற்கு ஒருத்தருமே தயார் இல்லை சொன்னராம்...உண்மை தான் புலிகளது மிகப் பெரிய பலவீனமே மற்றவரது கருத்தை மதித்துக் கேட்காதது தான்.நிற்க;

எனக்கும்,தமிழினியின் நூல் வெளியீட்டை புலம் பெயர் புலி வாலுகள் செய்யாதது கொஞ்சம் வெட்கமும்,வேதனையும்,கவலையுமாகத் தான் இருந்தது.எல்லாம் புத்தகத்தை வாசிக்காத வரைக்கும் தான்...நூலை வாசித்து முடித்த பிறகு தான் யோசித்தேன் இந்த நூலை புலிகள் வெளியிட்டு இருந்தால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் இந் நூலை போராட்டம் என்டால் என்னவென்று தெரியாத எமது எதிர்காலச் சந்ததி வாசிச்சால் நிட்சயமாக போராட்டத்திற்கு[ஆயுதப் போராட்டத்திற்கு] எதிராகத் தான் இருப்பார்கள்.
அடக்கு முறைக்கு உள்ளான மக்கள் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை அந்த மக்களே தான் தீர்மானிக்க வேண்டும்.அதை தமிழினியோ அல்லது ரதியோ கூற முடியாது.
மக்களுக்குகாக போராடப் போனேன்,மக்களுகாகப் போராடப் போனேன் என அழுது புலம்பும் இவர் அந்த மக்கள்,புலிகளால் பட்ட துன்பத்தை மட்டுமே பேசுகிறார்.புலிகளால்,அந்த மக்கள் பட்ட துன்பத்தை எழுத வேண்டாம் எனச் சொல்லவில்லை.இதை எழுதும் அதே நேரத்தில் சிங்கள ஆமியால் மக்கள் பட்ட துன்பத்தையும் எழுதி இருக்கலாம் தானே!
மற்றத் தளபதிகள் ஒருத்தரும் தன்னோடு ஆரம்பத்தில் இருந்தே மனசு விட்டு கதைப்பதில்லை என்றும்,விதுசாக்கா மட்டுமே தன்னோடு மனம் விட்டு கதைப்பவர் என்று எழுதும் இவர் விதுசாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ளார்...சிலதுகளை விதுசா மனம் விட்டு இவவோடு கதைத்திருக்கலாம்.அது உண்மையோ/பொய்யோ என்று விதுசா வந்து சொல்லப் போவதில்லை.ஒரு வீரப் பெண் தளபதி போரிலே மடிந்த பிறகு உந்தக் கதைகள் தேவையற்றது என்பது என் கருத்து.
சங்கரையும்,விதுசாவையும் தவிர ஒரு தளபதிமாரையும் மதித்து அவ எழுதி இல்லை...எதிரியே போற்றி மதிக்கும் பால்ராஜைக் கூட சர்க்கரை நோய் வந்து இறந்து போனார் என்று எழுதியுள்ளார். அவ எழுதியுள்ள விதம்,பெரிய அவ மதிப்பாகவே எனக்குப்பட்டது.
புலிகளது புலனாய்வுத் துறையையும்,பொட்டரையும் அவமதித்துள்ளார்.
கடைசி நேரத்தில் பெண் போராளிகளையும்,தன்னையும் தவிர்க்க விட்டு,விட்டு தலைவர் தப்பிக்க முயற் செய்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.தலைவரை நேசித்த ஒருவர் என்டால் தலைவர் தப்பிப் போக வேண்டும் என்றல்லவா நினைத்திருக்க வேண்டும்.
இவர் ஏன் நடேசன்,தங்கனோடு போய் சரணடைய முயற்சிக்கவில்லை?


மற்றப்படி கருணா பிரிவு பற்றி,புலிகள் செய்தது பற்றி இவ எழுதியது உண்மை....எனக்கு என்னவென்டால் அந்த நேரத்தில் இவ தன்னுடைய பதவியை தக்க வைக்கவோ விரும்பியோ/விரும்பாமலோ இதற்கு ஒத்து ஊதி விட்டு இப்ப வந்து தேவாரம் பாடுவது தான் சிரிப்பாய் இருக்குது.

புலிகளைப் பற்றி சாதகங்களை எழுதினதை விட பாதகங்கள் குற்றம்,குறை எழுதினது தான் அதிகம். சிங்களவனை மருந்திற்கு கூட‌ ஒர் இடத்திலும் தப்பாக எழுதேல்ல.தப்பி ஆமியின்ட பகுதிக்குப் போகும் போது இவவுற்கு இராஜ மரியாதை அவர்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் இவவை சுத்தி இருந்தவர்கள் எத்தகைய கொடுகைகள் அனுபவித்தார்கள் என பார்த்து தானே இருப்பார்.அதை எழுதி இருக்கலாமே!...தமிழ்கவி இவ விட எவ்வளவோ பெட்டர்.தைரியமாக மக்கள் பட்ட கஸ்டங்களை தமிழ்கவி எழுதி இருப்பார்.

மக்களுக்காக போராடப் போனப் புலிகள் கடைசியில் மக்களையே சுட்டுக் கொண்டார்கள் என புலம்பும் இவர்,இவர் சரணந்து வரும் போது அந்த மக்கள் இவவை திட்டும் போது அதே மக்களை இவர் குற்றவாளி ஆக்குகிறார்.வாசிக்க சிரிப்பு,சிரிப்பாய் வந்தது

இந்த நூலை இவ தான் எழுதினவா? அல்லது இவவிடம் விசயத்தை புடுங்கி வேறு யாராவது எழுதினார்களா தெரியாது?...ஆனால் இந்த நூல் புலிகளது அரசியல் துறைக்கே ஒரு களங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில தினங்களில் தமிழினியின் புத்தகம் கையில் கிடைக்கும். வாசித்தால் ரதியின் கேள்விகள் நியாயமானவையா என்று புரியும்.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,"அப்பால் ஒரு நிலம்" வாசித்து விட்டீர்களா?

நான் இப்போ அப்பால் நிலம் தான் வாசித்துக்கொண்டு இருக்கின்றேன் . ஆரம்பம் Saving Private Ryan படம் போலிருந்து இப்ப சும்மா போகுது வீரனின் கதை ,

கிரிதரனின் "குடிவரவாளன் " வாங்கியாச்சு அடுத்து அதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.