Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)

Featured Replies

கேபி ஓடிப் போய் ஆபிரிக்கா நாடுகளீல் தஞ்சம் கோராததுக்கு காரணம் வன்னிப் புலியை அழித்து முடித்தாகி விட்டது புலம் பெயர் புலிக் கட்டமைப்பை அழிக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளதால் அதுக்கு உதவ வேண்டிய தேவை கேபிக்கு இருந்திருக்கலாம்...அதுக்காக கேபி இலங்கை அரசோடு சேர்ந்திருக்கலாம்...இப்படி எழுதிறதால் நான் நொடியவனுக்கு ஆதரவு என நினைத்து விடாதீர்கள்.

கேபீ புலம்பெயர் புலிகளை அழிக்க சிங்களவனோடு கூட்டு சேர்வது சரி ஆனால் அதை உடனே வெளிக் கட்டுவாரா? இன்னும் நெருக்கமாக எல்லோ நின்று பழிதீர்பார்?

:unsure::):D:D:lol:

இது சுயருபம் தெரியும் காலம் :lol::lol:

Edited by I.V.Sasi

  • Replies 106
  • Views 8.7k
  • Created
  • Last Reply

:unsure:

இந்த ர***** தா க்கி கேபீயை விட கேவலமானவர்கள் நம்புவது கஷ்டம் ஆனால் சிங்களவன் திண்டு காலையில் வரும் கழிவுகள் தான் இவர்களின் என்னங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:o

விசுகு அண்ணா ஊரில் கடைசியாக தலைமை இருந்தது வன்னியிலே அது தான் வன்னிப் புலிகள் என எழுதினேன்.. அவர்கள் வன்னிப் புலியை அழித்து விட்டார்கள் என்டு சொன்னாலும் நான் அதை நம்பவில்லை[தலைவர் உட்பட தளபதிகள் உயிரோட இருக்கிறார்கள் என நம்புகிறேன்]...தலைவர் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்க வரா விட்டாலும் பரவாயில்லை உயிரோடு இருந்தால் சரி என்பது தான் என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளின் வலி எமக்கு தெரியும் சகோதரி

அதைத்தாங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று எழுதவேண்டாம்

அப்படி புரிந்து கொள்ளவில்லையென்றால்

தலைவர் பற்றியும் தளபதிகள்பற்றியும் எழுதும் அல்லது கவலைப்படும் கனதி தங்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்னை எழுத வேண்டாம் என சொல்வதற்கு நீங்கள் யார்...நான் உங்களை எப்பவாவது எழுத வேண்டாம் என நான் எழுதியிருக்கேனா...உங்கள போல ஆட்கள் தான் புலிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உண்மையை மறைத்து உசுப்பேத்தி,உசுப்பேத்தியே இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டிங்கள்...ஆனாலும் இன்னும் நீங்கள் ஓயவில்லை...அங்கியிருக்கும் மிச்ச தமிழரையும் அழிக்காமல் விட மாட்டீங்கள்..உங்களப் போல ஆட்கள் தான் முட்டைக்குள் மயிர் புடுங்கிற வேலை செய்பவர்கள் நீங்கள் கடைசி வரை திருந்தப் போவதுமில்லை,தமிழனுக்கு விடிவுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கேபி சரணடைந்தார்" என்று திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி செய்யப்பட்ட சதி அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதை புலனாக்குகின்றது. சரணடைவதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை கேபிக்கு இல்லை. கேபியிடம் இருக்கின்ற வசதிக்கு அவர் யாரும் அறியாத முறையில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

இரண்டாம் உலக யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்த எத்தனையே ஜேர்மனியத் தளபதிகள் தென்னமெரிக்க நாடுகளில் தப்பிச் சென்று வாழ்ந்தார்கள். அவர்களிடம் இருந்த பணம் இதனை சாத்தியமாக்கியது. கேபியும் ஏதோ ஒரு ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

விடுதலைப் போராட்டத்தை தொடர வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் குழப்பவாதிகளிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கின்ற உன்னத பணிக்காகவும் அவர் வெளிப்படையாக இயங்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இதை எதிரி பயன்படுத்திக் கொண்டான். இதனுடன் சுயநலவாதிகளின் காட்டிக் கொடுப்பும் சேர, கேபி கைது செய்யப்பட்டார்.

"போர்க் குற்றம்", "அரசியற் தீர்வு" என்று உலக நாடுகள் செய்கின்ற அழுத்தம் கேபியை உயிரோடு வைத்திருக்கின்ற தேவையை சிறிலங்கா அரசுக்கு கொடுத்தது. புலம்பெயர் மக்களை வென்றெடுப்பதற்கு கேபி பயன்படுவார் என்பதனால் அவரை நல்ல முறையில் பராமரிக்கின்ற கட்டாயத்தையும் சிறிலங்கா அரசுக்கு கொடுத்தது.

சிறிலங்கா அரசின் நலன்களின் பொருட்டே இன்று கேபி உயிரோடு இருக்கிறார். அவருக்கு நல்ல முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

பலவீனமாக இருக்கின்ற பொழுது எதிரியோடு தற்காலிகமாக என்றாலும் ஒட்டி உறவாடுவது எமக்கு ஒன்றும் புதிது இல்லை. இப்பொழுது இருப்பது போன்று மிகப் பலவீனமாக நாம் என்றும் இருந்தது இல்லை. இந்த நிலையில் கேபி செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

எமது தேசியத் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது எமது இனமாவது ஒரு ஓர்மம் மிக்க இனமாக இருந்திருந்தாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் எதிரி மிகத் திறமையாக செயற்பட்டான். தேசியத் தலைவரின் வீரச் சாவில் திட்டமிட்ட பல செயற்கையான மர்மங்களை உருவாக்கியதன் மூலம் எமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினான். எம்மை ஓரணியில் திரள விடாது தடுத்தான்.

தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்பதை மக்கள் நம்பத் தொடங்குகின்ற நேரங்களில் புதிய செய்திகளை பரப்பி எம்மை இரண்டும் கெட்டான் நிலைக்குள் தள்ளினான். இந்தக் குழப்பத்தை மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் கும்பல்களும் பயன்படுத்திக் கொண்டன. இன்றைக்கும் எல்லாம் முடிந்து விட்டது. நாம் விரும்பினாலும் எமது மக்களை தற்போதைக்கு ஓரணியில் திரட்ட முடியாது.

காலம் வரும் வரை பொறுக்கத்தான் வேண்டும். நூறு ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதற்கு எம்மைத் தக்க வைப்போம். தக்க வைப்;பதற்கு எதிரியோடு ஒட்டி உறவாடத்தான் வேண்டும் என்றால் அதையும் செய்வோம்.

இது தான் யதார்த்தமான,ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு அடிநாதமாய் இருக்கும். நன்றி உங்கள் கருத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு சில நோக்கங்களுக்காகவே ஒன்றாகியுள்ளோம்

அதை தாங்கள் மறந்துவிடவேண்டாம்

அந்த நோக்கங்களுக்கு எதிரான எழுத்துக்களை நாம் ஆட்சேபிக்கின்றோம்

நிர்வாகம் கூட தங்களது அந்த வரிகளை அனுமதிப்பதன் நோக்கம் தங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கின்றேன்

புரியும்போது தாங்கள் இங்கு எழுத மாட்டீர்கள்.

தங்களுக்கு இனி எழுதும் நோக்கமில்லை

ஆனால் எனக்கு தாங்கள் ஒன்றுக்கு மட்டும் விளக்கம்தரணும்

எங்கே நான் புலிகளை உசுப்பிவிட்டேன்

எப்போது அவர்களுக்கு தவறான வழி காட்டினேன்

அதை மட்டும் தரணும்

மற்றும்படி

தங்களை எழுதவேண்டாம் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை

இங்கு எழுதுவதற்கான அதிமுக்கிய ஒற்றுமையை தாங்கள் சிதைப்பதால்

அதன் பாரம் தங்களுக்கு புரியாததால்

அந்த கனதியை தாங்கள் இனித்தான் புரிந்து கொள்ள போகின்றீர்கள் என்றால்

இதுவரை எழுதியவை வீண் என்பதே எனது கருத்து.

நன்றி

ஆனால் எனக்கு இவற்றிற்கு கட்டாயம் தங்களிடமிருந்து பதில் வேண்டும்

தங்களுக்கு இனி எழுதும் நோக்கமில்லை

ஆனால் எனக்கு தாங்கள் ஒன்றுக்கு மட்டும் விளக்கம்தரணும்

எங்கே நான் புலிகளை உசுப்பிவிட்டேன்

எப்போது அவர்களுக்கு தவறான வழி காட்டினேன்

அதை மட்டும் தரணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன், on 12 August 2010 - 04:08 PM, said:

"கேபி சரணடைந்தார்" என்று திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி செய்யப்பட்ட சதி அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதை புலனாக்குகின்றது. சரணடைவதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை கேபிக்கு இல்லை. கேபியிடம் இருக்கின்ற வசதிக்கு அவர் யாரும் அறியாத முறையில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

இது தான் யதார்த்தமான,ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு அடிநாதமாய் இருக்கும். நன்றி உங்கள் கருத்துக்கு.

அவருக்கே உண்மைதெரியாது சந்தேகத்தில் ஒரு அனுமானத்தில் எழுதுறார், அதுக்குள்ள நீங்கள் அதை யாதார்த்தம் பதார்தம் என்று கொண்டு :o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், on 12 August 2010 - 04:08 PM, said:

"கேபி சரணடைந்தார்" என்று திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி செய்யப்பட்ட சதி அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதை புலனாக்குகின்றது. சரணடைவதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை கேபிக்கு இல்லை. கேபியிடம் இருக்கின்ற வசதிக்கு அவர் யாரும் அறியாத முறையில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

உலக இரகசிய ராட்சத வலைப்பிப்பின்னல் வல்லுனர்கள்

நாம் காட்டிக்கொடுத்துத்தான் அவரைப்பிடித்திருப்பார்கள் என்பதும் உதைக்குதே.........

நான் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை மட்டும் சொல்லவில்லை அவர் எழுதிய ஒட்டுமொத்த கருத்தையுமே சொல்கிறேன்.

அதைவிட கே.பி காட்டிக்கொடுக்கப்பட்டார் என நான் 100000000000% நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை மட்டும் சொல்லவில்லை அவர் எழுதிய ஒட்டுமொத்த கருத்தையுமே சொல்கிறேன்.

அதைவிட கே.பி காட்டிக்கொடுக்கப்பட்டார் என நான் 100000000000% நம்புகிறேன்.

நீங்கள் நம்புறதும் நம்பாததும் உங்கட பிரச்சினை, எங்களுக்கு உண்மை மட்டுமே தேவை. அதை மட்டுமே நம்புவோம், நீங்கள் நம்புற உண்மையில்லாத விடயங்களை எல்லாம் யாதார்தம், பதார்தம் என்று சொல்லிகொண்டு திரியாதீங்க :o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நம்புறதும் நம்பாததும் உங்கட பிரச்சினை, எங்களுக்கு உண்மை மட்டுமே தேவை. அதை மட்டுமே நம்புவோம், நீங்கள் நம்புற உண்மையில்லாத விடயங்களை எல்லாம் யாதார்தம், பதார்தம் என்று சொல்லிகொண்டு திரியாதீங்க :lol::lol:

கே.பி காட்டிக்கொடுக்கப்படவில்லை என்றால் மலேசியாவில் அவருடன் கூட சந்திப்பில் இருந்த நடேசனின் சகோதரர்,சீ.எம்.ஆர் வானொலிகாரன் ஏன் இதுவரை வாயே திறக்கவில்லை?

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டும் என முதலே முடிவு செய்திருந்தால் எதற்கு தமிழரின் விடுதலைப் பயணம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என

நாடுகடந்த அரசாங்கம் அமைக்க முதல் அடி எடுத்து வைத்திருக்க வேண்டும்??

இளநீர் குடிச்சவனை விட்டிடு கோம்பை நக்கினவனை இடியுங்கோ :o

"கேபி சரணடைந்தார்" என்று திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி செய்யப்பட்ட சதி அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதை புலனாக்குகின்றது. சரணடைவதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை கேபிக்கு இல்லை. கேபியிடம் இருக்கின்ற வசதிக்கு அவர் யாரும் அறியாத முறையில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

KP தானாக போய் சரண் அடைந்து கொண்டார் ... சரண் அடைந்தார் காட்டிக்கொடுத்தார் இப்போதும் காட்டிக்கொடுக்கிறார்... ! தலைவருக்கு மட்டுமே தெரிந்த முகம் கூட மற்றவர்களால் அறியப்படாத பலரை பற்றிய விபரங்கள் வெளிப்படுவதுக்கும் KP யே காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு சில நோக்கங்களுக்காகவே ஒன்றாகியுள்ளோம்

அதை தாங்கள் மறந்துவிடவேண்டாம்

அந்த நோக்கங்களுக்கு எதிரான எழுத்துக்களை நாம் ஆட்சேபிக்கின்றோம்

நிர்வாகம் கூட தங்களது அந்த வரிகளை அனுமதிப்பதன் நோக்கம் தங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கின்றேன்

புரியும்போது தாங்கள் இங்கு எழுத மாட்டீர்கள்.

தங்களுக்கு இனி எழுதும் நோக்கமில்லை

ஆனால் எனக்கு தாங்கள் ஒன்றுக்கு மட்டும் விளக்கம்தரணும்

எங்கே நான் புலிகளை உசுப்பிவிட்டேன்

எப்போது அவர்களுக்கு தவறான வழி காட்டினேன்

அதை மட்டும் தரணும்

மற்றும்படி

தங்களை எழுதவேண்டாம் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை

இங்கு எழுதுவதற்கான அதிமுக்கிய ஒற்றுமையை தாங்கள் சிதைப்பதால்

அதன் பாரம் தங்களுக்கு புரியாததால்

அந்த கனதியை தாங்கள் இனித்தான் புரிந்து கொள்ள போகின்றீர்கள் என்றால்

இதுவரை எழுதியவை வீண் என்பதே எனது கருத்து.

நன்றி

ஆனால் எனக்கு இவற்றிற்கு கட்டாயம் தங்களிடமிருந்து பதில் வேண்டும்

தங்களுக்கு இனி எழுதும் நோக்கமில்லை

ஆனால் எனக்கு தாங்கள் ஒன்றுக்கு மட்டும் விளக்கம்தரணும்

எங்கே நான் புலிகளை உசுப்பிவிட்டேன்

எப்போது அவர்களுக்கு தவறான வழி காட்டினேன்

அதை மட்டும் தரணும்

இந்த மிரட்டும் வரிகளில் இருந்தே தெரிகிறது நீங்கள் தான் நிர்வாகத்திற்கும்,மோகன் அண்ணாவுக்கு மிரட்டல்கள் விடுத்து யாழை பூட்டுறதில் முன் நிற்கிறனீங்கள் என...இலங்கை அரசாலோ அல்லது மாற்றுக் கருத்துக்காராளோ இவ்வளவு மிரட்டல் யாழுக்கு வந்து இராது உங்களைப் போல புலி ஆதரவாளர்களால் தான் மிரட்டல் அதிகம் வந்திருக்கும்...நன்றி நீங்களே உங்களை வெளிக் காட்டியமைக்கு.

போன வருடம் மே மாதத்திற்கு முன் வரை புலி அடிக்கும்,உள்ளுக்குள்ள விட்டு அடிக்கும் என எதிர்பார்த்து உசுப்பேத்திற கதைகள் எழுதினவர்கள் தானே நாங்கள்...தீபன் அண்ணாவும் அவரோடு சேர்ந்த அவ்வளவு போராளிகளும்,மக்களும் சாகும் வரை சும்மா பார்த்துக் கொண்டே தானே இருந்தனாங்கள்...புலிகள் சில பிழை விட்ட போதும் கூட நாங்கள் அவர்களுக்கு ஆதரவாய்த் தான் கதைத்தோம் ஆனால் அப்படி நாங்கள் அவர்களுக்கு ஆதரவாய் கதைத்ததை தான் உசுப்பேற்றல் என சொன்னேன்... அந்த உசுப்பேற்றலே கடைசியில் எங்களின் வீழ்ச்சிக்கு காரணமாய்ப் போய் விட்டது...யாராவது ஒரு ஆள் உண்மையாய் நின்டு தலைவருக்கு உண்மை எடுத்து உரைத்திருக்கலாம் ஆனாலும் அழிவை தடுக்க முடியாது[உலக நாடுகள் சேர்ந்து அழித்தது]ஆனால் குறைத்திருக்கலாம் என்பது என் கருத்து.

புலிகள் வீழ்ந்ததிற்கு காரணம் அவர்களுடைய எதிரிகளை விட புலி ஆதரவாளர்களால் தான் என்பது என் கருத்து...பழங்கதைகளை கதைத்து பிரயோசனமில்லை...அண்ணா இப்ப கூட நீங்கள் எதிரிகளை சேர்க்கிறீங்களே வழிய அவர்களை எப்படி நட்பாக்குவது என யோசிக்கிறீங்கள் இல்லை...உங்களோடு கருத்தாடி பயனில்லை நீங்கள் நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என சொல்பவர்கள்...எப்போது நாங்கள் மாற்றுக் கருத்துக்காரர் உட்பட அனைவரையும் ஒரு குடைக்குள் கொண்டு வருகிறோமோ அப்போது தான் தமிழனுக்கு என்டொரு நாடு[தமிழிழம்] சாத்தியம் என்டது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மிரட்டும் வரிகளில் இருந்தே தெரிகிறது நீங்கள் தான் நிர்வாகத்திற்கும்,மோகன் அண்ணாவுக்கு மிரட்டல்கள் விடுத்து யாழை பூட்டுறதில் முன் நிற்கிறனீங்கள் என...இலங்கை அரசாலோ அல்லது மாற்றுக் கருத்துக்காராளோ இவ்வளவு மிரட்டல் யாழுக்கு வந்து இராது உங்களைப் போல புலி ஆதரவாளர்களால் தான் மிரட்டல் அதிகம் வந்திருக்கும்...நன்றி நீங்களே உங்களை வெளிக் காட்டியமைக்கு.

அந்த உசுப்பேற்றலே கடைசியில் எங்களின் வீழ்ச்சிக்கு காரணமாய்ப் போய் விட்டது...யாராவது ஒரு ஆள் உண்மையாய் நின்டு தலைவருக்கு உண்மை எடுத்து உரைத்திருக்கலாம் ஆனாலும் அழிவை தடுக்க முடியாது[உலக நாடுகள் சேர்ந்து அழித்தது]ஆனால் குறைத்திருக்கலாம் என்பது என் கருத்து.

புலிகள் வீழ்ந்ததிற்கு காரணம் அவர்களுடைய எதிரிகளை விட புலி ஆதரவாளர்களால் தான் என்பது என் கருத்து...பழங்கதைகளை கதைத்து பிரயோசனமில்லை...அண்ணா இப்ப கூட நீங்கள் எதிரிகளை சேர்க்கிறீங்களே வழிய அவர்களை எப்படி நட்பாக்குவது என யோசிக்கிறீங்கள் இல்லை...உங்களோடு கருத்தாடி பயனில்லை நீங்கள் நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என சொல்பவர்கள்...எப்போது நாங்கள் மாற்றுக் கருத்துக்காரர் உட்பட அனைவரையும் ஒரு குடைக்குள் கொண்டு வருகிறோமோ அப்போது தான் தமிழனுக்கு என்டொரு நாடு[தமிழிழம்] சாத்தியம் என்டது என் கருத்து.

புலிகளின் வீழ்ச்சியென்பது எதிரிகளால் ஆனதைவிட

துரோகிகளால் ஆனதுதான் அதிகம் என்பது தெரியும்

அதிலும் தங்களைப்போல்

புலிகளுக்குள் பலபெயர்களை சூட்டும் தங்களைப்போன்றவர்களையும்

எல்லோரையும் அரவணைத்தல் என்கின்ற ரீதியில் உள்ளே விட்டே நாம் அழிந்தோம்

இன்றும் அதையே மறக்காத தங்களுடன் கூட்டுவைத்துக்கொண்டு

எந்த இலட்சியத்தை நோக்கி பயணிப்பது...

எல்லாத்தையும் கட்டி முடிக்க

தாங்கள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவதுதான் மிச்சம்

எங்கே,எப்போது எல்லோரையும் ஒருங்கிணைத்தீர்கள்? மாற்றுக் கருத்துக்காரர் எல்லாரையும் உங்களால் ஒரு குடைக்குள் கொண்டு வர முடிந்ததா...அவர்களும் வர முயற்சி செய்யவில்லை நீங்களும் அவர்களை ஒரு குடைக்குள் இணைக்க முயற்சிக்கவில்லை...ஆனால் அழிந்தது மட்டும் அவர்களால் என்கிறீர்கள்...அடுத்தது நான் எப்போது புலிகளுக்கு பல பேர் சூட்டினேன் என சொல்ல முடியுமா...நீங்கள் கடைசி வரைக்கும் உண்மையை உணர மாட்டீர்கள்...அல்லது அப்படி உண்மையை உணர்ந்தாலும் அதை வெளியில சொன்னால் புலி என்ட உங்கள் இமேஜ் போய் விடும் என்பது தான் உங்கள் கருத்து.

இந்த உங்களால் என்பது யாரைக்குறிக்கிறது...???

சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளை நம்பி சரணடைகின்ற அளவிற்கு கேபி ஒன்றும் முட்டாள் இல்லை. உலகின் மிகப் பெரிய விடுதலை இயக்கத்தின் முக்கிய தூணாக இருந்தவர்.

கேபி சரணடைந்தார் என்கின்ற வதந்தியானது கேபியை மட்டும் முட்டாள் என்று சொல்லவில்லை. மிக முக்கிய தருணத்தில் முக்கிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்த தேசியத் தலைவரையும் சேர்த்தே அப்படி சொல்கிறது.

கேபி சிறிலங்கா அரசின் முகவராக செயற்பட்டிருந்தால் கேபியை சரணடையச் செய்வதை விட கேபியை வைத்து புலம்பெயர் மக்களை தன்னுடைய விருப்பத்தின்படி ஆட்டி வைப்பதையே சிறிலங்கா அரசு செய்திருக்கும். கேபியின் சரணடைவு அடிப்படையற்ற ஒரு கற்பனை.

கேபி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது தமிழ் மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடைய எதிரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதியே சரணடைவு பற்றிய இட்டுக்கட்டப்பட்ட கதையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக இரகசிய ராட்சத வலைப்பிப்பின்னல் வல்லுனர்கள்

நாம் காட்டிக்கொடுத்துத்தான் அவரைப்பிடித்திருப்பார்கள் என்பதும் உதைக்குதே.........

வணக்கம் சபேசன் அண்ணா

இந்த கேள்விக்கு தங்களது பதில்....???

Dignity and respect for our people is all we ask – Pathmanathan

[TamilNet, Sunday, 17 May 2009, 08:22 GMT]

“Despite our plea to the world to save the thousands of people in Vanni from the clutches of death, the silence of the international community has only encouraged the Sri Lankan military to execute the war to its bitter end. In the past 24 hours, over 3000 civilians lie dead on the streets while another 25,000 are critically injured with no medical attention. To save the lives of our people is the need of the hour. Mindful of this, we have already announced to the world our position to silence our guns to save our people," Selvarasa Pathmanathan, the head of LTTE’s International Diplomatic Relations has said in an urgent statement issued Sunday.

S. Pathmanathan, Head of LTTE's International Diplomatic Relations"This we have appealed to the countries of the world and called on them to halt the unrelenting massacre of our people by the Sri Lankan armed machinery. We are extremely saddened that this plea has fallen on deaf ears”, Mr Pathmanathan further said as he desperately called on the International Community to take immediate actions to save the Tamil people caught in the war zone and take necessary actions to protect the cadres and people giving themselves up to the military.

This battle has reached its bitter end. Against all odds, we have held back the advancing Sinhalese forces without help or support, except for the unending support of our people. It is our people who are dying now from bombs, shells, illness and hunger. We cannot permit any more harm to befall them. We remain with one last choice – to remove the last weak excuse of the enemy for killing our people. We have decided to silence our guns. Our only regrets are for the lives lost and that we could not hold out for longer. We can no longer bear to see the innocent blood of our people being spilled," Mr. Pathmanathan said.

The LTTE had for almost three decades fought the Sri Lankan military and defended its right to carry arms as a means of protecting the Tamil people living in the island. After unilaterally walking away from the Peace Process that began in 2002 with Norwegian facilitation, The Sri Lankan Government had opted for a military solution to end the crisis. Since the war intensified in 2007, several thousand Tamil civilians have died. The recent thrust by the military into the Northern strong holds of the Tamils have seen an escalation in the deaths and has resulted in untold misery with people succumbing to starvation and lack of medical supplies.

“We need to do everything within our means to stop this carnage. If this means silencing our arms and entering a peace process, that is something that we have already agreed to,” said Mr Pathamanathan. “This is the need of the hour. These are historically unprecedented times and require historically prudent decisions. If this means saving the lives of thousands of people, it needs to be done” he stated.

Mr Pathamanathan further stated that, “There is not a person who can doubt the LTTEs fearless and unending commitment to this cause with which we have been entrusted by our people. Know that the Tamils are a people deeply rooted in culture and history. No force can prevent the attainment of justice for our people. Our sons and daughters have taken up this call without question and without hesitation or fear of death. None have hesitated to make the supreme sacrifice for the cause of liberating their motherland. We have not forgotten that it is for our people that we fight. In the face of the current conditions, we will no longer permit this battle to be used as a justification by the forces of the Sinhala state to kill our people. We willingly stand up with courage and silence our guns. We have no other option other than to continue our plea to the international community to save our people”.

சர்வதேசம் ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எதையும் செய்யவில்லை. சிறீலங்காவோடு இணக்க அரசியல் செய்யத்தான் அறிவுறுத்தியது அதற்கு மாத்திரமே இடமும் அளித்தது. இந்த யதார்த்தத்தை ஏற்று தாயக மக்களின் அவல நிலைக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

இந்த இறுதி முடிவுகளில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதையே தொடர்கிறார் ஒரு கைதியாகவும். முன்பு போராட்டத்திற்கு தனது திறமைகளால் முடிந்த அளவில் எப்படி பங்களித்தாரோ அதையே இன்றும் கைதியாக தாயக மக்களிற்கு செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுகின்ற இணக்க அரசில் என்பது சாத்தியமற்றது.

பொதுவாகச் சிறிலங்கா அரசின் செயற்பாட்டைப் பார்த்தாலே ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளமுடியும். தன்னுடைய எதிரியை அழிப்பதற்காவும், தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகவும் தான் மகிந்த 3ம் நபர் கூட உறவு வைத்துக் கொள்ளுவார். தொடக்கத்தில் ஜேவிபி கூட நின்று பதவிக்கு வந்தார். தேவை முடிந்ததும், அவர்களைக் கழட்டி விட்டுவிட்டார். மங்களவுக்கும் அதே கதி தான் நடந்தது. கருணாவைப் போரின் போது தூக்கிப் பிடித்தார்கள். பிற்பாடு அவன் பதவிக்காக காலைப் பிடிக்கின்ற நிலையை உருவாக்கியது. இவை ஏன் என்றால் இன்றைய சூழ்நிலையில் கேபி நியாயமாகச் நெய்யலாம். அவர் மக்களுக்காகச் சிந்திக்கலாம். ஆனால் சிங்கள அரசு காட்டும் அரசியல் என்பது புலம்பெயர் சமூகம், சர்வதேசம் என்கின்ற 2 சூழ்நிலை எதிரிகளை முறியடிக்கவே ஆகும்.

இதுவரைக்கும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் பெரியளவு சிரத்தை கொண்டு மகிந்த அரசு நடந்து கொள்ளவில்லை.

தற்போதைய முன்னாள் போராளிகள் என்ற கேபியின் காணொளி என்பது அனைத்துப் போராளிகளின் அடையாளமும் அல்ல. அவர்களின் முழுமையான கஸ்டத்தை அது எடுத்துக் காட்டவும் இல்லை.

கடைசியாக ஒரு நிலை. அன்று தொடக்கம் மகிந்தவின் காலைப் பிடித்த டக்ளஸ் கடைசியில் மிரட்டப்பட்டு,த் தான் சென்ற தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டார் என்பதும், அதே நிலை தான் தொண்டமானின் பாதுகாவலர் நீக்கப்பட்ட ஒரு மிரட்டலைப் பெற்றிருந்தார் என்பதும் நினைவில் கொள்ள. மகிந்த செய்கின்ற அரசியல் என்பது அவரைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதும், அவரது முடிவு சார்ந்ததாகவே அமைய Nவுண்டும் என்பதுமாகும்.

சரணுமில்லை, கைதுமில்லை.

தேடப்பட்டுபவர் என சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டு, அவரை இலங்கைக்கு கொண்டுவர பயங்கரவாத சிங்கள அரசின் நாடகமே "கைது" என்பது.

பணிகள் கைமாற்றுதல் என்ற முடிவின் படியே, பல பணிகளில் புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். மக்களின் மீது, கொள்கைகளின் மீது பற்றிருப்பவர்கள் இதில் உடன்பட்டிருப்பார். இது தனக்கு மட்டுமே உரிமையான பணி என்ற கோதாவில் வெறுப்புற்று இருந்த சிலரை, தெற்காசிய அரச பயங்கரவாதிகளின் முகவர்கள் தாய்லாந்தில் சந்தித்து மூன்று வருடங்களின் முன்னர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்பது இரண்டு வருடங்களின் முன்பே உறுதி செய்யப்பட்டிருந்தது.

விளங்குபவர்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எதையும் செய்யவில்லை. சிறீலங்காவோடு இணக்க அரசியல் செய்யத்தான் அறிவுறுத்தியது அதற்கு மாத்திரமே இடமும் அளித்தது. இந்த யதார்த்தத்தை ஏற்று தாயக மக்களின் அவல நிலைக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

இந்த இறுதி முடிவுகளில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதையே தொடர்கிறார் ஒரு கைதியாகவும். முன்பு போராட்டத்திற்கு தனது திறமைகளால் முடிந்த அளவில் எப்படி பங்களித்தாரோ அதையே இன்றும் கைதியாக தாயக மக்களிற்கு செய்கிறார்.

கைதியாக இருந்து அதுவும் இந்த இனவாத அரசுடன் சேர்ந்து எமது மக்களுக்கு சேவை செய்வதை விட அவர் வெளியில் இருந்தே செய்திருக்கலாம். அவர் பிடிபட்டு மக்களுக்காக தான் என அறியாமல் இருக்க சிங்கள அரசு மடையர்கள் அல்ல.கே.பி சிங்கள அரசுக்கு கடவுள் இல்லை அவர் சொன்ன படி அரசு கேட்பதற்கு.

இவரிடம் இருந்த கோடிக்கணக்கான பணம் மகிந்த குடும்பத்தால் கையாடப்பட்டதா? அதனால் தான் இவர் இப்படி சுதந்திரமாக நடமாடுகிறாரா?

“This is the need of the hour. These are historically unprecedented times and require historically prudent decisions. If this means saving the lives of thousands of people, it needs to be done

இறுதி நேரத்தில் தலைவர் இவரிடம் பொறுப்பு கொடுத்த பின் ஒட்டுக்குழுக்களின் வானொலி/ தொலைக்காட்சிக்கு பேட்டி ஏன் கொடுக்க வேண்டும்.இவர்கள் மூலம் மிக சுலபமாக கே.பியை காட்டி கொடுக்கபடலாம் (ஒரு வேளை) என கே.பி நினைக்கவில்லையா? அல்லது சரணடையவேண்டும் என்ற நினைப்பில் தான் செய்தாரா?.இறுதி நேரத்தில் இப்பேட்டி மக்களை ஆத்திரப்பட வைத்தது, சந்தேகபட வைத்தது. ஒரு நாள் தலைவர் உயிருடன் உள்ளார் என கூறிவிட்டு அடுத்த நாள் உயிருடன் இல்லை என கூறி மக்களை குழப்பி அடித்து விட்டார். அது இன்று வரை தொடர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.