Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிட்டாய் தாத்தா தந்த ரோதனை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரியா எட்டு மணிக்கு ஸ்கூல் கேற்றில் நின்றேன். கேற் பூட்டி இருந்தது. கொஞ்ச நேரம் கேற்றுக்கு வெளியே வெயிட் பண்ணினேன். வோர்ச்மன் வந்தான்..

ஏன் லேட்.... இன்றைக்கு அசம்பிளி எல்லோ. வெள்ளன வர வேணும் என்று தெரியாதா என்றான்.

கடவுளே இன்றைக்கு அசம்பிளியா. வழமையா அது வெள்ளிக்கிழமையில தானே வரும்... இன்றைக்கு என்ன திங்கட்கிழமை வைக்கிறாங்க. கந்தசாமி வாத்தி பிரம்போட அலையப் போகுதே. தொலைஞ்சேண்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. எனக்கு இன்றைக்கு அசம்பிளி என்று தெரியாது.. போன வெள்ளி நான் ஸ்கூலுக்கு வரல்ல என்று ஒரு பொய்யைப் போட..

சரி கெதியா போ.. அசம்பிளி தொடங்கிட்டு என்றான்.

கேற்றை வெற்றிகரமாக தாண்டி அசம்பிளி கோலுக்குள் நுழைய முற்பட்ட எனக்கு.. மாணவ முதல்வர்கள் இருவர் நந்தி மாதிரி வாசலில் நிற்பது தெரிந்தது. இவன் வோர்ச்மன ஏமாத்தியாச்சு.. அண்ணாமாரை எப்படி தாண்டிறது என்று யோசிட்டுக் கொண்டே போன எனக்கு..

கலோ.. இப்ப என்ன நேரம். இப்ப தானா அசம்பிளிக்கு வாறது என்று கத்தினார் ஒரு நந்தி அண்ணா.

இல்ல அண்ண.. வாற வழில சூ பிஞ்சிட்டுது. வீட்ட போய் சூ மாத்திக் கொண்டு வாறத்துக்கிடையில நேரம் போட்டுதண்ண என்றேன் அப்பாவியாக.

அவரும் அதை நம்பி.. சரி போடா... என்று ஒரு முறாய்ப்போடு வழியனுப்பி வைக்க.. பதட்டம் குறைய

அசம்பிளி கோலுக்குள் நுழைந்த நான் கந்தசாமியரைத் தேடினேன்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரைக் காணவில்லை. நிம்மதியா ஓடிப் போய் சக நண்பர்களோடு கலந்துவிட்டேன்.

அசம்பிளியில் பிறின்சி (தலைமை ஆசிரியர்) ஏதேதோ அலட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் அதில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை. எங்களிடம் உள்ள ரிவி கேம் பற்றியே மெல்லப் பேசிக் கொண்டு இருப்போம். இறுதியில் பிறின்சி இன்றைக்கு அசம்பிளி முடிய ஒரு படம் போடப் போறம். அதனால இன்றைக்கு பாடங்கள் ஒவ்வொன்றும் அரை மணி நேரம் தான் நடக்கும். ஆனால் எட்டு பாடமும் நடக்கும் என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட நான்.. அருகில் இருந்த நண்பனை தட்டி.. டேய் படமாண்டா. என்ன விசயம்டா இண்டைக்கு என்றேன்.

எனக்கும் ஒன்றுமா புரியல்லை மச்சான்.. பொறுத்திருந்து நடக்கிறதைப் பார்ப்பம். விஜய் படம் போட்டாங்கண்ணா நல்லா இருக்கும் என்றான் அவன் பதிலுக்கு.

ஆமா உனக்கு பிறின்சி விஜய் படம் போடுவார்.. பார்த்துக் கொண்டிரு என்று திட்டிவிட்டு.. படம் போடும் வரை காத்துக் கொண்டிருந்தோம்.

அசம்பிளி கோல் மின் விளக்குகள் அணைய ஸ்கிரீன் விரிய.. புரஜெக்டர்.. விம்பங்களை அகண்ட திரையில் விழுத்த ஆரம்பித்தது. அசம்பிளி கோலே நிசப்தமாக இருந்தது. எல்லோர் கண்களிலும் ஒரு எதிர்பார்ப்பு...!

சிறிது நேரத்தில் திரையில் முழு விம்பங்களும் விழ ஆரம்பித்தன. மகாத்மா காந்தி.. என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட ஒரு படம் ஓட ஆரம்பித்திருந்தது. ஒரே கறுப்பு வெள்ளையில் ஓடிக்கொண்டிருந்தது படம்.

படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே.. சத்தத்தை நிறுத்தி.. பிறின்சி அறிவித்தார்.. இன்று இந்தியாவின் சுதந்திர தினம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க முதல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. அதனால் தான் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் மகாத்மா காந்தி. அவரின் வரலாறு பற்றிய படமே இப்போது போட்டுக் காட்டப்படுகிறது. எல்லா மாணவர்களும் அமைதியாக இருந்து படத்தை பார்த்துவிட்டு.. வகுப்பிற்கு சென்றதும் இது தொடர்பாக ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.

போச்சுடா மச்சான். இந்தப் படத்தை பார்த்திட்டு ரெஸ்டும் எழுதனுமாமில்ல... என்ற படி நான் குறிப்பேட்டை எடுத்து படம் பார்த்தபடி குறிப்பும் எடுக்கத் தொடங்கினேன்.

டேய் எனக்கும் காட்டடா.. என்றான் அருகில் இருந்த நண்பன். இவன் யாராட ஒரு கிழவன்.. நம்மளப் படுத்திறாண்டா.. என்று எகிறியும் கொண்டான்.

டேய் அது காந்தியாண்டா.. இந்தியாவின் பெரிய தலைவராமில்ல என்றேன் நான் ஒரு பிரமாண்ட பிரமையை அவனிடத்தில் வளர்த்து விட. சில சினிமா படங்களில இவரின் பிறந்த தினத்துக்கு மிட்டாய் கொடுப்பாங்க கண்டிருக்கிறியா என்றேன்... பெரிய எதிர்பார்ப்போடு.

இவர் தலைவரோ.. எங்கட தலைவர் பிரபாகரன் தானே. இவங்க எப்பைடா எங்களுக்காக போராடினாங்க. 1987 இல எங்கட அப்பாவைக் கொன்றதே இந்தியப் படைகள் தானேடா. இங்க நிலைமை அப்படி இருக்க.. இந்தியா எப்படி எங்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கும். எதுக்கு இவங்களப் பற்றி நாங்க தெரிஞ்சுக்கனும்..! இந்தப் பிறின்சிக்கு வேற வேலை இல்லைடா என்றான்... முற்றிலும் நான் எதிர்பார்க்காத வகைக்கு.

ம்ம்.. அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதை என் மனசு ஒத்துக் கொண்டாலும்.. பிறின்சிய மீறி என்ன செய்ய முடியும்.. என்று எனக்குள் எண்ணிவிட்டு.. சரிடா விட்டுத் தொலைடா.. வகுப்புக்கு ரீச்சர் வரட்டும் கேட்பம் இந்தக் கேள்வியை என்று கொண்டே குறிப்பேட்டை மூடி புத்தகப் பைக்குள் அடக்கி விட்டேன்.

காந்தியும் இந்திய சுதந்திரமும்.. மண்ணாங்கட்டியும் என்றது என் மனது உள்ளூர வந்த கோபத்தை அடக்கியபடி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுதந்திரம் என்டு கை மாறினதுதானே எங்கட பிரச்சனை.இதுக்குள்ள படம் வேற :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காந்தீயவாதிகள் அடிக்க வரப் போகிறார்கள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தீயவாதிகள் அடிக்க வரப் போகிறார்கள் :rolleyes:

நீங்களே சொல்லிட்டிங்களே அக்கா.. அவை காந்(தீய) வாதிகள் என்று. அந்த தீயதை ஏன் நாங்கள் கவனத்தில எடுக்கனும்..! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்! முன்பெல்லாம் காந்தி, பாரதி என்றெல்லாம் ஒரு பிம்பமும், மயக்கமும் இருந்ததென்னவோ உண்மைதான், இப்ப இல்லை! :rolleyes:

நெடுக்கர் கதை சொன்ன விதம் நன்றாயிருக்கிறது.

ஆனால் தேச பிதா காந்தியைப் பற்றிய உங்கள் புரிதலில் எனக்கு உடன்பாடில்லை. அவர் எங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்.

நீங்கள் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி பெரோஸ் காந்தி, சோனியா காந்தி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் சுப்பையா காந்தி எல்லோரையும் கேவலப்படுதுவதாகத்தான் எனக்குதெரிகிறது. காந்தித் தாத்தா என்றால் உங்களுக்கு எதோ பகிடி மாதிரி.

ஜெய் கிந் !!!!!!

Edited by thappili

உண்மைதான் நெடுக்ஸ்! முன்பெல்லாம் காந்தி, ... என்றெல்லாம் ஒரு பிம்பமும், மயக்கமும் இருந்ததென்னவோ உண்மைதான், இப்ப இல்லை! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 15

இந்திய சுதந்திரநாள்

எமக்கு வலிக்கும்நாள்

இரண்டையும் இணைத்து வலிக்கவைத்த நெடுக்கருக்கு நன்றி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் முற்றுமுழுதாக ஈழத்தமிழர்கள் படிக்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு ஆசிரியர் வழங்கிய தலைப்பு காந்தி அடிகள். திலிபன், அன்னை பூபதி என்பவர்கள் இவர்களுக்குப் பிடிக்காதா? சரி போராளிகள் வேண்டாம் என்றால் ஈழத்தில் வாழ்ந்த பெரியார்கள் இவர்களுக்குத் தெரியாதா? தங்கம்மா உ+ம் - அப்பாக்குட்டி. எங்கட சனத்துக்கு கம்பனையும் ,காந்தியையும் விட்டால் வேறு ஒருவரையும் தெரியாது. ஏன் இந்த அடிமைப் புத்தி.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் முற்றுமுழுதாக ஈழத்தமிழர்கள் படிக்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு ஆசிரியர் வழங்கிய தலைப்பு காந்தி அடிகள். திலிபன், அன்னை பூபதி என்பவர்கள் இவர்களுக்குப் பிடிக்காதா? சரி போராளிகள் வேண்டாம் என்றால் ஈழத்தில் வாழ்ந்த பெரியார்கள் இவர்களுக்குத் தெரியாதா? தங்கம்மா உ+ம் - அப்பாக்குட்டி. எங்கட சனத்துக்கு கம்பனையும் ,காந்தியையும் விட்டால் வேறு ஒருவரையும் தெரியாது. ஏன் இந்த அடிமைப் புத்தி.

அப்பு தமிழ் பாடசாலையை விடும்.............. அந்த ஆசிரியர்மாருக்கு காந்தியைபற்றித்தான் பல்கலைகழகத்திலயும் சொல்லிகொடுத்திருப்பினம்.

ஆனால் இப்ப முன்னால் ஆயுதம் ஏந்தியவர்களும் காந்தி அகிம்சை என்று புலம்பும் பொழுது, நெஞ்சு பொருக்குது இல்லை

அன்னை பூபதி.திலிபன் ஆகியோரைபற்றி கதைக்கும் பொழுது நாங்கள் எங்களை அறியாமலயே காந்தியத்தை உள்வாங்குவதாகவே அர்த்தம்.

30000 மாவீரர்களின் இலட்சியத்தை கொச்சைப்டுத்துகிறோமோ என்று எண்ணதோன்றுகிறது.

30000 ஆயிரம் திலிபன்களை நாங்கள் உருவாக்கியிருந்தால் திலிபனையும் காந்தியையும் மதிக்கலாம் ஆனால் 30000 ஆயுத போராளிகளை மாவீரர்களை உருவாக்கிய பின்பு இப்பொழுது அன்னை பூபதி, திலிபன்....அகிம்சை என்பது ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதி.திலிபன் ஆகியோரைபற்றி கதைக்கும் பொழுது நாங்கள் எங்களை அறியாமலயே காந்தியத்தை உள்வாங்குவதாகவே அர்த்தம்.

30000 மாவீரர்களின் இலட்சியத்தை கொச்சைப்டுத்துகிறோமோ என்று எண்ணதோன்றுகிறது.

30000 ஆயிரம் திலிபன்களை நாங்கள் உருவாக்கியிருந்தால் திலிபனையும் காந்தியையும் மதிக்கலாம் ஆனால் 30000 ஆயுத போராளிகளை மாவீரர்களை உருவாக்கிய பின்பு இப்பொழுது அன்னை பூபதி, திலிபன்....அகிம்சை என்பது ...........

புத்தன்.. திலீபன் தன்னை அகிம்சாவாதியாக இனங்காட்டி பிழைப்பு நடத்த அல்ல.. அகிம்சையை தெரிவு செய்தார். திலீபன் 30,000 போராளிகளில் ஒருவர். அவர் ஆயுத வழிப் போராட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒருவர்.

ஆயுத பலத்தால் செய்ய முடியாத ஒரு சூழல் நிலவிய கட்டத்தில் அதுவும் அகிம்சை பேசுவோர்களிடம் அதன் வழியில் போய் ஒரு தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க திலீபன் தேர்வு செய்த ஒரு வழிமுறைதான் அகிம்சையே தவிர.. அகிம்சையால் எமது உரிமைகளை வெல்ல முடியும் என்ற நிலைப்பாட்டை திலீபனோ.. அன்னை பூபதியோ கொண்டிருக்கவில்லை.

அப்படி நம்பி இருந்தால் இருவரும் தமிழீழம் கேட்டு உண்ணா விரதம் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் ஒரு இடைக்கால தீர்வை அல்லது மக்களின் இடைக்கால நலன்கள் குறித்தே அகிம்சையை பேசியோருக்கு முன்னாள் அதைச் செய்து சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் பின்பற்றிய பாதையில் அகிம்சை இருக்கிறதே அன்றி அவர்கள்.. காந்தியை மதிக்கச் சொல்லி அகிம்சையைப் பின்பற்றவில்லை..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.