Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-புறக்கணிக்க வேண்டும்: கங்குலி பாய்ச்சல்

கொல்கத்தா: ஒரு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இவர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாய்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி.

வீரேந்திர ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேண்டும் என்றே நோ பால் போட்டு அசிங்கமாக நடந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கதை நாறிப் போயுள்ளது. அனைத்து முன்னாள், முன்னணி வீரர்களும் இலங்கையை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் செளரவ் கங்குலி இதுகுறித்துக் கூறுகையில்,

விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஷேவாக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். கேப்டன் மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரந்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.

ஒருமுறை கண்டி டெஸ்டில் நான் 98 ரன் எடுத்திருந்தேன். அப்போதும் நோ பால் வீசி என்னை சதம் அடிக்க விடாமல் தடுத்தனர்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு போட்டியில் 98 ரன்கள் எடுத்திருந்தபோதும் இதேபோலதான் செய்தனர்.

இப்படிப்பட்ட வீரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் கங்குலி.

இதனுடன் தொடர்பு பட்ட செய்தியை பார்ப்பதற்க்கு அருகே அழுத்தவும். http://thatstamil.oneindia.in/news/2010/08/18/india-srilanka-cricket-odi-sangakkara-dilshan.html

நன்றி தற்ஸ் தமிழ்

.

அதெண்டால் உண்மை தான் பாருங்கோ கங்குலி அவர்களே, இலங்கை வீரர்களுக்கு மட்டும் தான் நாகரீகம் தெரியாது, ஆனால் நீங்கள் மடும் திறமோ 1996ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையில் இந்தியா 120/8 என்ற நிலையில் இருந்தபோது போத்தல் எறிந்து போட்டியை நிறுத்திய உங்களுடைய பெங்காலிகளை என்னவென்று சொல்வது, 1996ம் ஆண்டு அகமதாபாத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லஸ்மன் போல்ட் செய்யப்பட்டு 120/5க்கு இந்தியா வீழ்ந்தவுடன் போத்தல் எறிந்த குஜராத்திகளை என்னவென்று சொல்லலாம்,1996ம் ஆண்டு மும்பாயில் அசாருதீன் ஆட்டமிழந்தவுடன் மீண்டும் போத்தல் எறிந்த மராத்திகளை என்னவென்று சொல்வது, இல்லாவிடில் 1999ம் ஆண்டு டென்டூல்க்கார் ஆட்ட்மிழந்தவுடன் மீண்டும் கல்லெறிந்து போட்டியை நிறுத்திய உம்முடைய பெங்கலிகளை என்ன்வெனலாம், இல்லாட்டி அவுஸ்த்திரேலியாவின் அன்டுரூ சைமன்ட்சை குரங்கு என் திட்டிய சீக்கியரான கர்பஜன் சிங் என்ன நாகரீகம் தெரிந்தவனா, இல்லாவிடில் நீர் யாராவது ஒருத்தர் ஆட்டமிழந்தவுடன் நீர் அடிக்கும் கூத்து உமக்கே நினைவிருக்கும் என நினைக்கிறேஎன் 1999 உலகக் கோப்பையின் போது தென் ஆபிரிக்காவின் டரில் கலினன் உமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தவுடன் நீர் அவருக்கு முன்னால் போய் நின்று சிம்பு ரேஞ்சுக்கு போட்ட குத்தாட்டம் ஞாபகம் இருக்கும் என் நினைகிறேன், எனவே வயை மூடிக் கொண்டு இரு, அதி விட சிறீசாந்தை நடு மைதானத்தில் வைத்து கர்பஜன் அறைந்தை மறந்து போட்டயா

அரசியல் அடிப்படை அறிவே இல்லாததுகள். ... சௌரவ் கங்கூலி இப்படி அடுச்சாட்டூளியம் செய்ய கூடாது... இலங்கை தூதரகத்துக்கு முன்னாலை அகிம்சை வளியிலை எதிர்ப்பை காட்ட வேண்டும்... இல்லை எண்டால் பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டி வரும்... :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் கங்குலி தமிழகத்தில் இருந்து குரல் கொடுக்கவில்லை. சிறிலங்கா இறையாண்மையுள்ள நாடு என்று கலைஞர் கருணாநிதி கங்குலியை ஒருவருடம் சிறையிலிட்டிருப்பார்.

No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையைத் தோற்கடித்திருக்கிறது. இது பத்தோடு ஒன்றாய் சாதரண கிரிக்கெட் செய்தியாக வந்திருக்க வேண்டியது பெரும் விவாதமாய் எழுந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஒரு ரன்னை சேவக் எடுத்து விட்டால் இந்திய அணி வெற்றி பெறுவதோடு, சேவக் தனது 13வது சதத்தையும் அடித்திருக்கலாம். இறுதி ஓவரை வீசிய இலங்கை அணி சுழற்பந்து வீரர் ரந்திவ் வேண்டுமென்றே “நோ பால்” வீசினார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றாலும், சேவக் சதமடிக்கவில்லை. இதுதான் இப்போது இந்தியாவின் அதி முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நன்னடத்தைக்காக ஐ.சி.சியிடம் மூன்று முறை விருது வாங்கிய தங்கள் அணியா இப்படி நடந்திருக்கிறது என்று அவர் அங்கலாய்த்துள்ளார். இலங்கை அணித் தலைவர் சங்ககராவும் இந்த செயலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர்களும் இந்த விவாகரத்தை முடித்துக் கொள்ளலாமென்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் இதை முடிப்பதாக இல்லை. இது இந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை போல மாற்றி வருகின்றனர். எல்லா செய்தி சானல்களிலும் இது பெரும் விவதாகமாக காட்டப்படுகிறது. தினசரிகளின் விளையாட்டு செய்திகளில் இதுவே கருப்பொருளாக பேசப்படுகிறது.

கேப்டன் சங்ககராவை வில்லன் என்று பேசுகிறது தினமலர். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது பதிவாகியிருக்கிறதாம். அது என்ன என்று பார்த்தால் “ஹாய் ரந்திவ், பந்தை சேவக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்” என்று மட்டும் இருக்கிறது. இதில் என்ன சதி இருக்கிறது? சேவக் அடிக்காமல் இருக்கும் வகையில் பந்து வீசச் சொல்வதில் என்ன குற்றம்?

இருப்பினும் சங்ககரா இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிறகு ஐ.பி.எல்லில் விளையாடும் வாய்ப்பும், வருமானமும் முக்கியம் என்ற விதத்தில் அவரது கவலை இருந்திருக்கும். இந்திய ரசிகர்களுக்கோ சேவக் சதமடிப்பது ஒரு ரன்னில் போய்விட்டதே என்று கவலை. தினமலரின் வாசகர்கள் பலர் இதை வைத்து சிங்களவன் என்றால் இப்படித்தான் அழுகுணி ஆட்டம் ஆடுவான் என்று குறிப்பிடுகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா? ஈழத் தமிழ் மக்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பதலிருந்து புரியாத சிங்கள இனவெறி இந்த ஒரு ரன் பிரச்சினையில் புரிந்து கொள்வதாகச் சொல்வது அயோக்கியத்தனமில்லையா?

புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றிய ராஜபக்சேவுக்கு இந்தியா எல்லா விதங்களிலும் உதவி செய்திருக்கிறது. அதில் போகாத இந்திய மானமா இந்த ஒரு ரன்னில் போய்விடப்போகிறது?

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவின் கிரிக்கெட் இரசிகனை விட ஈழத்தமிழர்களின் உயிர் மிகவும் மலிவான ஒன்றா?

ஈழத்தை அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு ஆதரவளித்ததற்கும், இந்த ஒரு ரன் பிரச்சினைக்கும் பின்னணியாக இருப்பது இந்திய முதலாளிகளின் நலன்தான். ஒன்றுபட்ட இலங்கை என்பதே இந்திய தரகுமுதலாளிகளின் தேவை என்றால், கிரிக்கெட்டை வைத்து நுகர்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இந்திய முதாளிகளுக்கு சேவக் ஒரு ரன்னை இழந்ததும் அதனால் இரசிகன் அடையும் எரிச்சலை தணிப்பதும் அவசியமாக இருக்கிறது.

அதே போல இந்திய கிரிக்கெட் சந்தையின் தயவில்தான் வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கேட்டு முடிக்க நினைக்கிறது. ஐ.பி.எல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அரசியலும் விளாயட்டும் அதன் பொருளாதார நலன்களிலிருந்தே தீர்மானக்கப்படும் என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு ஏது?

அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே?

ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல.

http://www.vinavu.com/2010/08/18/no-ball/

  • கருத்துக்கள உறவுகள்

அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே?

ஈழதமிழர் பற்றி பச்சாதாபம் காட்டியதற்கு வினவு அவர்களுக்கு நன்றி.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தார்கள் என்று சொல்லி கருணாநிதி அரசு சீமானை காலவரையறையின்றி உள்ளே தள்ளியுள்ளார்கள்.மேலும் அவர்கள் இந்திய கிறிக்கட் குழு பற்றி பேசி முழுப்பேரையும் சிறையில் தள்ள உத்தேசமா?

இந்தியா ஒரு சனநாயக நாடாக இருந்து மக்களின் கருத்துக்களை சுதந்திரமாக பேசவிட்டால் நாம் தமிழர் இயக்கம் தமிழ் நாடென்ன இந்தியாவின் வங்குரோத்து தன சனநாயகத்துக்கு ஒரு சவாலாக தான் இருப்பார்கள். அது தானே அவர்களை பேசாமல் வாயை மூடியுள்ளீர்கள். உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் சனநாயகம் வாயளவில் பேசிக்கொண்டு பின்பக்கமாக சீமானின் கட்சிக்கு ஆப்பு வைக்க நினைகிறீர்கள்.

கங்குலிக்கு இப்பவாவது உண்மை தெரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு ரண்னுக்காக குதிப்பவர்கள் வெகு விரைவில் ஒரு ரண்வேக்குகாக அழுவார்கள்.டூ லேட் :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர் பற்றி பச்சாதாபம் காட்டியதற்கு வினவு அவர்களுக்கு நன்றி.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தார்கள் என்று சொல்லி கருணாநிதி அரசு சீமானை காலவரையறையின்றி உள்ளே தள்ளியுள்ளார்கள்.மேலும் அவர்கள் இந்திய கிறிக்கட் குழு பற்றி பேசி முழுப்பேரையும் சிறையில் தள்ள உத்தேசமா?

இந்தியா ஒரு சனநாயக நாடாக இருந்து மக்களின் கருத்துக்களை சுதந்திரமாக பேசவிட்டால் நாம் தமிழர் இயக்கம் தமிழ் நாடென்ன இந்தியாவின் வங்குரோத்து தன சனநாயகத்துக்கு ஒரு சவாலாக தான் இருப்பார்கள். அது தானே அவர்களை பேசாமல் வாயை மூடியுள்ளீர்கள். உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் சனநாயகம் வாயளவில் பேசிக்கொண்டு பின்பக்கமாக சீமானின் கட்சிக்கு ஆப்பு வைக்க நினைகிறீர்கள்.

உண்மைதான் நுணா இவர்கள் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள்.

இந்தியா எவ்வளவு தான் சிங்களவனுக்கு உதவிகளை அள்ளி வழங்கினாலும்

சிங்களவன் இந்தியனின் காலை தருணம் பார்த்து வாரி விடுவான் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

வாத்தியார்

***********

மிகவும் கீழ்த்தரமான, மட்டரகாமான, இழிவான இணையத் தளம் - "வினவு".

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கீழ்த்தரமான, மட்டரகாமான, இழிவான இணையத் தளம் - "வினவு".

இப்படிச் சொல்வது தவறு.

சீமானின் நாம் தமிழர் இயக்கம பற்றி இந்தத்தகவலைத் தவிர மற்றைய விடயங்களில் வினவு தளம் சரியாகக் கருத்துக்கள் தான் பகிர்ந்திருக்கிறார்கள்.

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.