Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறங்காத உண்மைகள் - சேரமான்

Featured Replies

உறங்காத உண்மைகள் - சேரமான்

ஆக 27, 2010

Font size: Decrease font Enlarge font

வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது இவர்கள் திண்டாடுவதை அண்மைய நாட்களில் சடுதியாகக் கட்டவிழத் தொடங்கியுள்ள பல்வேறு நிகழ்வுகள் நிதர்சனப்படுத்துகின்றன.

முள்ளிவாய்க்காலில் களமாடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் சிலர், மே 17 வரை புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் கடமையாற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசித் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். எனினும் மே 17ஆம் நாள் காலையுடன் இந்த நிலை சற்றுத் தலைகீழாக மாறியிருந்தது.

அன்று காலையுடன் முள்ளிவாய்க்காலில் நின்ற முக்கிய போராளிகளுடனான வெளித்தொடர்புகள் ஏறத்தாள முடக்கநிலையை எய்தியிருந்ததோடு, ஒவ்வொரு மணித்துளிகளையும் பதற்றத்துடனேயே உலகத் தமிழர்கள் அனைவரும் கழித்த வண்ணமிருந்தனர். அதேநேரத்தில் அன்று முற்பகல் உலகத் தமிழர்களுக்கான செய்தியன்றை வழங்கிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, ‘கடைசி மணித்தியாலங்கள்’ நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டதோடு, ‘கடைசிவரைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்றும் சூளுரைத்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் தளபதி சூசை அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், திடீரென அன்று மாலை பிரித்தானியாவின் சணல்-4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய கே.பி, ‘ஆயுதங்களை மௌனிப்பதற்கும், அவற்றைக் கீழே போடுவதற்கும்’ தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாகவும், ‘பிரபாகரனுடன் நான்கு மணிநேரம் கதைத்த பின்னர்’ இந்த முடிவைத் தான் எடுத்ததாகவும் அறிவித்திருந்தார்.

உண்மையில் கே.பி விடுத்த இந்த அறிவித்தல், புகலிட தேசங்களிலும் சரி, தமிழகத்திலும் சரி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயுதங்களை கீழே போடுவதோ அன்றி சரணடைவது என்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு அல்ல என்பதை முழு உலகமும் நன்கு அறிந்திருந்தது.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை தொடர்ந்து, இந்தியப் படைகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்த பொழுதும், அது ஒரு வெறும் சம்பிரதாயபூர்வ ஆயுத ஒப்படைப்பாகவே அமைந் திருந்தது.

அதனை விட, தமிழீழ மக்களின் பாதுகாப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தியப் படைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ரஜீவ் காந்தி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள். இது தொடர்பாக சுதுமலைப் பிரகடனத்தில் பின்வருமாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்: ‘இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது.

எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங் களாக, இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

திடீரென கால அவகாசமின்றி எமது போராளி களின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனம் திறந்து பேசினேன்.

சிங்கள இனவாத அரசில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார்.

எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம் பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை.

எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.’ இவ்வாறான முடிவைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எடுத்தமைக்கான காரணிபற்றியும், இதுவிடயத்தில் ரஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பாகவும், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பின்வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்:

‘அடுத்ததாக, விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றிப் பேசப்பட்டது. ‘உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லாப் படையணிகளையும் கலைத்துவிடு மாறும் நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாகச் சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும்.

இந்திய - இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என சிறீலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்பவைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது முக் கியம். தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும்.

அத்துடன் சிங்கள ஆயுதப் படைகள் போர்நிறுத்தம் பேணியவாறு முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்று கூறினார் ரஜீவ் காந்தி.பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார் பண்டுருட்டி. “எதற்காகக் கடுமையாக யோசிக்க வேண்டும்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த, பாவிக்கமுடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றைக் கையளித்தால் போச்சு” என்றார் பண்டுருட்டி இராமச் சந்திரன். “இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவை எல்லாமே பழுதடைந்த, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள்தான்” என்று கிண்டலாகப் பதிலளித்தார் பிரபாகரன்.“பரவாயில்லையே, அந்தப் பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம்.” என்றார் அமைச்சர்.தமிழ் மொழியில் நிகழ்ந்த இந்த சுவையான உரையாடலின் அர்த்தத்தை அறிய விரும்பினார் ராஜீவ். அதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் பண்டுருட்டி.

அதை ஆமோதித்தபடி புன்முறுவலுடன் தலையசைத்தார் பிரதம மந்திரி.’தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனத்திலும், தேசத்தின் குரல் எழுதிய ‘போரும் சமாதானமும்’ நூலிலும் குறிப்பிடப்படும் செய்தி ஒன்றுதான்: தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், வெறும் சம்பிரதாய ரீதியிலு மேயே 1987ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கையளிப்பு நிகழ்ந்தேறியிருந்தது என்பதே அது.

பின்னாளில் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பொழுது ஆயுதக் களைவு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய பொழுது அதற்குப் பதிலளித்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்: ‘எங்கடை ஆயுதங்கள்... புலிகள் வைச்சிருக்கிற ஆயுதங்களும், எங்கடை இராணுவப் படைகளும்... இது மக்களின்ரை சொத்தாகப் பார்க்கிறம். மக்கள் வாங்கித் தந்த சொத்து.

17,000 போராளிகள் தங்களைப் பலிகொடுத்துச் சேர்த்த ஆயுதப் பலம். இதுதான் எங்கட மக்களது பலம். நாங்கள் இந்த ஆயுதங்களைப் பாவிக்கிறம். ஆனால் உரி மையாளர்கள் எமது மக்கள். ஆகவே, எங்கட மக்களுக்குச் சுதந்திரம் கிட்டாமல், கரும்புலிகளைக் கலைக்கச் சொல்லுவதோ, ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம்.’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த மேற்குலக அரசுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடித்தளமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமை அமைந்ததே இதற்குக் காரணமாக இருந்தது.

எனினும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமான முறையில் சிங்கள அரசு முறித்துக் கொண்டு, வன்னி மீதான தனது கொடூர இனவழித்தொழிப்பு - நில ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்திய பொழுது, இந் தியாவும், அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளும், தமிழீழ விடுலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாகப் பேசத் தொடங்கியிருந்தன.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக அமையவில்லை. இந்தியாவினதும், மேற்குலக வல்லரசுகளின் ஆயுதக் களைவு வலியுறுத்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் அடியோடு நிராகரித்ததோடு, சரணாகதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்திருந் தனர். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும் வரை, ஆயுதக் களைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஆயுதக் களைவு - சரணாகதி வலியுறுத்தலை, எவ்வித தயக்கமும் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு சமர்ப்பித்த கே.பி, பின்னர் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார் என்பதை, இறுதிப் போரில் அவர் வெளியிட்ட அறிக்கைகளும், வழங்கிய ஊடகச் செவ்விகளும், தற்பொழுது அவர் வழங்கும் செவ்விகளும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இதில் ஒருபடி மேலே சென்று கடந்த வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் கே.பி, ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிப்பது தொடர்பான அறிவித்தலை தானே வெளியிட்டதாகவும், இது தொடர்பாக சிறப்புத் தளபதி சூசை அவர்களுடன் மட்டுமே தான் உரையாடியதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதேநேரத்தில் பிறிதொரு முனையில் பா.நடேசன் அவர்களும், புலித்தேவன் அவர்களும் வெளிநாடுகளுடன் தொடர்பாடல்களைப் பேணியதாகவும் கே.பி குறிப்பிடுகின்றார். முதலில் தமிழீழத் தேசியத் தலைவரும் உரையாடியே ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பான முடிவை தான் எடுத்ததாகக் கூறிய கே.பி, தற்பொழுது இது தன்னால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஒப்புக்கொள்கின்றார்.

இறுதிவரை அடிபணியப் போவதில்லை என்றும் தளபதி சூசை அவர்கள் வழங்கிய செவ்வியுடன் இதனை ஒப்புநோக்கும் பொழுது, தளபதி சூசை அவர்களின் ஒப் புதல்கூட இன்றி தன்னிச்சையாக இந்த முடிவை கே.பி எடுத்ததாகவே நாம் கொள்ள முடியும். இதனைவிட, ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி செவ்வி வழங்கிய ஒருசில மணிநேரங்களில், மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சிங்களப் படைகளுடன் பேசுவதற்காக வெள்ளைக் கொடியுடன் சென்ற பா.நடேசன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.

சிங்களப் படைகளிடம் சரணடைவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சென்றார் என்று பல ஊடகங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகின்ற பொழுதும், உண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாகச் சென்றார் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த உண்மை.

இதுபற்றி முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவின் சண்டே ரைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதிய மேரி கொல்வின் அம்மையார், தன்னுடன் இறுதிவரை பா.நடேசன் அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், ‘சரணடைதல்’ என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்கு இறுதிவரை அவர் மறுத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

இதேநேரத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி அவர்களின் அறிவித்தல் வெளியாகிய சில மணிநேரங்களில் பா.நடேசன் அவர்கள் சிங்களப் படைகளால் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தோடு, அதற்கு முன்னர் எத்தருணத்திலும் கே.பியின் ஆயுத மௌனிப்பு அறிவித்தலை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் எதனையும் பா.நடேசன் அவர்கள் வெளியிடவில்லை.

இதில் நாம் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அதாவது சரணடைபவர்களைப் படுகொலை செய்வது மட்டும் போர்க்குற்றம் ஆகாது. சமாதானம் பேசச் செல்லும் நிராயுபாணிகளைப் படு கொலை செய்வதும் அதற்கு ஒப்பான போர்க்குற்றமே. இந்த வகையில் நிராயுதபாணியாகப் பேசச் சென்ற பா.நடேசன் அவர்களை சிங்களப் படைகள் படுகொலை செய்தமை என்பது ஒரு போர்க்குற்றமே. இதனை சரணாகதி நிலையுடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது. இதனை விட, ஆயுதங்களை மௌனிப்பதற்காக அறி வித்தலை கே.பி வெளியிட்ட பின்னரும், மே 19ஆம் நாள் இரவு வரை முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடைபெற்றதாக சிங்களப் படைத்துறை தலைமையத்தின் முன்னைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய செய்தி யாதெ னில், ஆயுதங்களை மௌனித்தலும், கீழே போடுதலும் என்ற முடிவு கே.பி என்ற தனிநபரால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும் எவ்வித தொடர்புமே இருக்கவில்லை. இதனைக் கே.பி கூட பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

க.வே.பாலகுமாரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இறுதிக் கணங்களில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த பொழுதும், இதனை அவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருத முடியுமே தவிர, தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதல் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ முடிவாக இதனை நாம் கருதிவிட முடியாது.

இதனை சுட்டிக் காட்டியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ, எந்தக் கணத்திலும் சரணாகதி என்ற முடிவைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எடுத்திருக்க மாட்டார் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில், இறுதிப் போரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் எவ்விதமான தொடர்பாடல்களையும் கொண்டிருக்காத கே.பி, இறுதிக் கணங்களில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், தனது தனிப்பட்ட தொடர்புகள் ஊடாகப் போர்க்களத்திலும், புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் பெரும் குழப்பத்தை விளைவித்து போராட்டத்தை சிதைத்தார் என்றே நாம் கொள்ள வேண்டும்.

இதற்கு வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும், புகலிட தேசங்களில் உள்ள தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களும் இணங்க மறுத்த நிலையில், இவர்களை ஓரம்கட்டி தமிழீழக் கனவை சிதைக்கும் நோக்கத்துடனேயே வி.உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசை அமைப்பதற்கான முடிவை கே.பி எடுத்தார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாமெல்லாம் விண்வெளி விஞ்ஞானம் கற்றவர்களாக இருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஒப்புதலுடன் தமிழீழ தேசியத் தலைவர் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தான் எடுத்த முயற்சியை, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் குழப்பியதாக கே.பி கூறியிருப்பது, கே.பியும், அவருடன் இணைந்து வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், வே.மனோகரன், த.சர்வேஸ்வரன் போன்றோர் இறுதிப் போரில் ஏற்படுத்திய குழப்பங்களையே வெளிப்படுத்துகின்றது.

தமிழீழம் இனிமேல் சாத்தியமில்லை என்றும், மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமில்லை என்றும் தொலைபேசி உரையாடல் ஒன்றில் வி.உருத்திரகுமாரன் கூறியமை தொடர்பான ஒலிப்பதிவு வடிவம் ஒன்று, கடந்த சில நாட்களாக இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழர்களை வலம் வந்த வண்ண முள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் அதிபதி என்ற கோதாவில், இவ்வாறு உலகத் தமிழினத்தை ஏமாற்றும் செய்கையில் வி.உருத்திரகுமாரன் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் இயங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பினால் இவ்வாரம் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் இப்பத்தியில் எதிர்வுகூறப்பட்டமை போன்று, கே.பியின் நிழல் மனிதர்கள் தற்பொழுது பட்டவர்த்தனமாகக் தொடங்கியுள்ளார்கள்.

இந்த வகையில் இவ்வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு கே.பி வழங்கப் போகும் செவ்வி, வெளிநாடுகளில் உள்ள அவரது குழுவினர் தொடர்பான மேலும் பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்பதை மட்டும் இங்கு உறுதியாக எதிர்வுகூற முடியும். ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்கிக் கொண்டிருக்கப் போவதில்லை அல்லவா?

நன்றி: ஈழமுரசு (27.08.2010)

http://www.sangathie.com/news/10126/64//d,fullart.aspx

.வே.பாலகுமாரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இறுதிக் கணங்களில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த பொழுதும், இதனை அவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருத முடியுமே தவிர, தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதல் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ முடிவாக இதனை நாம் கருதிவிட முடியாது.

இவை துரோகிகள் ஆக்கும்?பார்க்கலாம் யார்வரை இந்த துரோகிகள் பட்டம் தொடருது என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது புலத்திலும், ஈழத்திலும்..?

பட்டங்களும், வேசங்களும் இலவசமாய்..! ஒன்னுமே புரியலை..

மற்றுமொரு அவதாரத்திற்குள், தமிழ் இனம் இருக்காதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதனை அவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருத முடியுமே

சேரமான் சொல்வதை எல்லாம் கேட்டு கோயில் மாடு போல் தலையாட்டாமல் சொந்த அறிவு கொண்டும் சிந்திக்க வேண்டும். சேரமானின் வாக்கு வேதவாக்கில்லை.

அப்பாவி போன்று நீ சொல்லும் அம்புலிமாமா கதையை நம்பி, கேபி எதிர்ப்பு அரசியல் என நீ நடத்திய நாடகத்தினை நம்பி தனது கட்டமைப்பினை திறந்துவிட்டு, நிதியும் கொடுத்த நெடியவன் மிகப்பெரும் பின்னடைவை தமிழ்சமூகத்திற்கு ஏற்படுத்திவிட்டார்.

ஆனால், நீ காலஓட்டத்தில் நெடியவன் குழு அல்லது காஸ்ரோ குழவினையும் ஓரங்கட்டிவிட்டு உனக்கென நீ உருவாக்கிய குழுக்களுடன் இயங்க நீ முற்படுவாய்.

உனக்கு கேபி, உருத்திரகுமார், மனேகரன் மட்டும் எதிரிகள் இல்லை, நெடியவன் உள்ளிட்ட குழுவும் எதிரிகள் தான். நீ இப்போது விசயம் தெரிந்த குழுவினை ஒரங்கட்டிவிட்டு விசயம் தெரியாது குழுவினை பின்னர் அழிக்கலாம் என்று திட்டம் போடுகின்றாய்.

ஆனால், நீ தோற்றுப்போவாய். இரத்தமும், உயிரும் கொடுத்து நடத்தப்பட்ட போரினை உன்னைப் போல எவன் சுயநலன்களுக்காக பயன்படுத்த நினைத்தாலும் தோற்றுப்போவான்.

நீ எத்தனை ஆட்டங்கள் போட்டாலும் ஈற்றில் உனது முகமூடி கழன்று விழுந்து, கேவலமான தேசத்துரோகியாக வரலாறு உன்னை இனங்காணும் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளது.

சேரமான் எனப்படும் சகுனிக்கு,நக்கீரன் எழுதும் மடல்!!

தில்லு முள்ளு… தில்லு முள்ளு…. உள்ளம் எல்லாம் கள்ள முள்ளு!!

மூன்று மாடி வீடு, மேல்மாடியில் மனைவி கீழ்மாடியில் அடியாள் என்கின்ற வசதிகளுடன் வாழ்ந்தவாறு புலத்தில் எஞ்சிக்கிடக்கும் கிடக்கும் புலிகளின் வேர்களை புடுங்கி எறியும் ‘ஒப்பரேசனில்’ ஈடுபட்டுள்ள உமது முகத்தில் காறி உமிழ்வதற்காக இந்தக் கடிதத்தினை எழுதுகின்றேன்.

எங்கிருந்து உனது ‘நாசமாய்போன’ வேலையை விபரிக்கத் தொடங்குவது?. புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்களின் உதவிகளுடன், தமிழ்செல்வன் உட்பட பல நோர்வே ஆர்வலர்களின் கூட்டு முயற்சியில் உருவான தமிழ்நெற் எனும் ஊடகத்தினை தில்லுமுல்லுச் செய்து உனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வஞ்சகக் கதையை சொல்லவா?. அல்லது சிவராம் என்கின்ற ஊடகவியலான் தனது உயிரைப் பணயம் வைத்து வளர்த்துவிட்ட தமிழீழத்திற்கான ஆங்கில ஊடகத்தினை உனது தனிப்பட்ட லாபங்களுக்காக அமெரிக்க கனவான் சிறீதரனுடன் சேர்ந்து திசைதிருப்பி தமிழீழ விடுதலைப்போரினை சீரழிக்கும் தற்குறி அரசியலுக்குப் பயன்படுத்துவதை சொல்வதா?. அல்லது இயக்கதினுள் நிலவிய உயர்மட்டப் பொறுப்பாளர்களுக்கிடையான இடைவெளிகளைப் பயன்படுத்தி சகுனி போன்று உள்நுழைந்த உனது கயவாளித்தனத்தினை படம்பிடித்துக் காட்டவா? அல்லது பாலா அண்ணர் இருக்கும் வரை இயக்கத்தின் அரசியல் அறிக்கைகளை முதலில் வெளியிட்டு தமிழ்நெற்றிற்கு பெயர்தேடி – பிற்பாடு இயக்க அறிக்கைகளில் உனது நோக்கத்திற்காக கைவைத்து விளையாடத்தொடங்கிய சதி அரசியலைச் சொல்லவா? அல்லது உனது சதி முகம் அம்பலமாகி – கிளிநொச்சி உன்னை ஒதுக்கிய கதையை சொல்லவா?. கிளிநொச்சி வீழும்வரை காத்திருந்து விட்டு இயக்கத்தின் ஒரேயொரு உத்தியோகபூர்வ இணையமான சமாதானச் செயலக இணையத்தினை உனக்கு தரப்பட்ட இரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி முடக்கிய துரோகத்தினை சொல்லவா? அதன் பிற்பாடு இயக்கமும், தலைவரும் களத்தில் கடும் போர் நடத்திக் கொண்டிருக்கையில் மாற்றுவழி பற்றி தமிழ்நெற்றிற்கு எழுதும்படி ஊக்குவித்த வஞ்சக அரசியலைச் சொல்லவா?. அல்லது, மே-18ற்குப் பின்னர் காஸ்ரோ குழுவின் வெளிநாட்டு பிள்ளைகளை தூண்டிவிட்டு ‘கேபி எதிர்ப்பு’ அரசியலை மையப்படுத்தி இயக்கத்தினை வெளிநாடுகளில் உடைத்த அதர்மத்தினை சொல்லவா?. அல்லது மக்களவை என்கின்ற பெயர்களில் நீண்டகால புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களை ஓரங்கட்டிவிட்டு உனது திட்டத்திற்கு ஆட்டம்போடும் அப்பாவி குழுவினை உருவாக்கும் அரசியலைச் சொல்லவா? அல்லது இயக்கத்தின் எச்சசொச்சங்களை வெறும் மீடியா மாபியா விளையாட்டு மூலம் கைப்பற்றும் திட்டத்திற்கு உருத்திரகுமாரன், மனேகரன் போன்றவர்கள் தடையாக இருப்பதால் அவர்களை கொச்சைப்படுத்த நீ இப்போது போட்டுள்ள சேரமான் வேடத்தினைச் சொல்வதா?.

நீ எத்தனை ஆட்டங்கள் போட்டாலும் ஈற்றில் உனது முகமூடி கழன்று விழுந்து, கேவலமான தேசத்துரோகியாக வரலாறு உன்னை இனங்காணும் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனெனில், நீ நடத்துவது தில்லுமுல்லு அரசியல். உனக்கு மக்களையும் தெரியாது, மக்கள் மீது உனக்கு நம்பிக்கையும் கிடையாது. ஈழமுரசு, பதிவு, ஒடுகாலி சங்கதி இணையங்களில் உண்மையைத் திரித்து எழுதுவதால் மட்டும் ஒரு மக்கள் சமூகத்தினை தோற்கடிக்க முடியாது. குறுங்காலத்திற்கு இந்தத் தில்லுமுள்ளு வேலை செய்தாலும் பிற்பாடு உன்பாடுதான் தில்லுமுள்ளு ஆகும்.

உனது அமெரிக்க சகபாடி சிறீதரன் இனி ஐந்து வருடத்திற்கு புலி என்ற வார்த்தையையே இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தைரியமாக வாசிங்டனில் சொல்லித்திரிய – நீ அப்பாவி நெடியவன் குழுவினை பயன்படுத்தி இருக்கின்ற கட்டமைப்புக்களை பலவீனப்படுத்தும் அரசியலில் மும்முரமாக உள்ளாய் என்பது அனைவருக்கும் தெரிகின்றது. உனது கரங்கள் இந்த நெடியவன் குழு மூலம் தமிழ்நாட்டு அரசியலில் உள்ள சில தலைவர்களையும் சென்றடைகின்றது என்றும் தெரிகின்றது. கNஐந்திரன் என்ற மற்றுமொரு குத்துக்கரண அரசியல்வாதியினைப் பயன்படுத்தி நீ யாழ்ப்பாணம் செல்ல முற்படுவதும் தெரிகின்றது. அது முடியாத போது சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற உன்னையொத்தவர்களின் உதவியினை பெற நீ முற்படுவதும் தெரிகின்றது. ஆனாலும் தமிழ்நெற்றில் உளறும் அரசியலை பேசுவதும், பதிவு, ஒடுகாலி சங்கதி, ஈழமுரசில் அரிப்பு அடங்கும் வரை சொறிவதும்தான் உனது உச்சபட்ச அரசியல். பிழைப்புக்காக உனது மூன்றுமாடி மாளிகையின் கீழ்மாடியில் தங்கியிருந்து நீ சொல்லும் அரசியலுக்கு வரைவிலக்கணம் எழுத முற்படும் செம்மொழி ரகுபதிக்கும் இந்த சொறியும் வேலைதான் தெரியும்.

எனது கோபமெல்லாம் உன்னிலும் பார்க்க உனக்கு இந்த சந்தர்ப்பத்தினைக் கொடுத்த நெடியவன் மீதுதான். அப்பாவி போன்று நீ சொல்லும் அம்புலிமாமா கதையை நம்பி, கேபி எதிர்ப்பு அரசியல் என நீ நடத்திய நாடகத்தினை நம்பி தனது கட்டமைப்பினை திறந்துவிட்டு, நிதியும் கொடுத்த நெடியவன் மிகப்பெரும் பின்னடைவை தமிழ்சமூகத்திற்கு ஏற்படுத்திவிட்டார். ஆனால், நீ காலஓட்டத்தில் நெடியவன் குழு அல்லது காஸ்ரோ குழவினையும் ஓரங்கட்டிவிட்டு உனக்கென நீ உருவாக்கிய குழுக்களுடன் இயங்க நீ முற்படுவாய். உனக்கு கேபி, உருத்திரகுமார், மனேகரன் மட்டும் எதிரிகள் இல்லை, நெடியவன் உள்ளிட்ட குழுவும் எதிரிகள் தான். நீ இப்போது விசயம் தெரிந்த குழுவினை ஒரங்கட்டிவிட்டு விசயம் தெரியாது குழுவினை பின்னர் அழிக்கலாம் என்று திட்டம் போடுகின்றாய்.

ஆனால், நீ தோற்றுப்போவாய். இரத்தமும், உயிரும் கொடுத்து நடத்தப்பட்ட போரினை உன்னைப் போல எவன் சுயநலன்களுக்காக பயன்படுத்த நினைத்தாலும் தோற்றுப்போவான்.

நாசமாய் போ என உன்னை வாழ்த்தி உனது முகத்தில் காறி உமிழ்கின்றேன்.

நக்கீரன்

கனடா

20.08.2010

சேரமான் சொல்வதை எல்லாம் கேட்டு கோயில் மாடு போல் தலையாட்டாமல் சொந்த அறிவு கொண்டும் சிந்திக்க வேண்டும். சேரமானின் வாக்கு வேதவாக்கில்லை.

சரி நுணா! நீர் சொல்லுகிற மாதிரி சொந்த அறிவிலை சிந்திக்க வேண்டும் என்றால் ....

1. யார் இந்த சேரமான்????

2. என்னத்திலை எழுதுகிறார்?

3. யார் மீள பிரசுரிக்கிறார்கள்?

4. இந்த சேரமானை இப்படி தூண்டி எழுதுபவர்கள் யார்?

5. யாரின் தூண்டுதலில் இவர்கள், சேரமான் போன்றவர்களை தூண்டி, மக்களை குழப்புகிறார்கள்?

6. இதில் பயனடைவது யார்?

7. ...

... இப்படியான கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள்! உண்மை புரியும்!!! இந்த சேரமான்களும், அவர்களை தூண்டுபவர்களுக்கும் பின்னணியோ/முன்னணி சிங்கள அரசுதான் என எண்ணத்தோன்றுகிறது!!! ???

... நேற்றைய தினம் ஓருவர் கூறினார் ..." மே18 இற்குப்பின்னமும் மக்கள் தெளிவாக இருந்தார்கள்! அவர்கள் குழம்பவில்லை. அதன் பின் மக்களை குழப்பி அடித்து நாற்றமடிக்க வைத்த பெருமை சாக்கடை காஸ்ரோக்களையே சாரும்" ....

சிந்தியுங்கள் சில கணம் தயவுசெய்து ... புரியும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... நேற்றைய தினம் ஓருவர் கூறினார் ..." மே18 இற்குப்பின்னமும் மக்கள் தெளிவாக இருந்தார்கள்! அவர்கள் குழம்பவில்லை. அதன் பின் மக்களை குழப்பி அடித்து நாற்றமடிக்க வைத்த பெருமை சாக்கடை காஸ்ரோக்களையே சாரும்" ....

சிந்தியுங்கள் சில கணம் தயவுசெய்து ... புரியும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!!

நொள்ளை... மே 18 வரைக்கும் கஸ்ரோக்களோடை வால் பிடிச்சதுகளுக்கை நீரும் ஒருவர் தானே...?? ஆக்களிடம் அவர்களிட்டை காசை குடுக்குமாறு சொல்லி நிண்டதிலை நீரும் இருந்தீர்தானே... இல்லை எண்டு மறுக்க போகிறீரா...?? இண்டைக்கு ஆள் ஆளுக்கு சேறடிப்பதில் ஒருவராக இருக்கிறீர் எண்டதும் உண்மைதானே...??

இரண்டு பிரிவாக பிரிஞ்சு நிண்டு கொண்டு யாரை குழப்ப இப்ப நிக்கிறீர்கள்... ??

... நேற்றைய தினம் ஓருவர் கூறினார் ..." மே18 இற்குப்பின்னமும் மக்கள் தெளிவாக இருந்தார்கள்! அவர்கள் குழம்பவில்லை. அதன் பின் மக்களை குழப்பி அடித்து நாற்றமடிக்க வைத்த பெருமை சாக்கடை காஸ்ரோக்களையே சாரும்" ....

உங்கள் கருத்து உள்நோக்கம் உடையதாக இருக்கின்றது.

2009 மே 18 இற்குப்பின் அனைத்து குழப்பங்களுங்கும் கே.பி யும், கே.பியைத்தலைவராக்கி மீண்டும் செயற்பட முற்பட்ட முன் நாள் செயற்பட்டாளர்களுமே, கே.பி குழுமத்திடம் தோல்வியடைந்தவர்களை பெரிய சக்தியாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்.

Edited by aathirai

... நேற்றைய தினம் ஓருவர் கூறினார் ..." மே18 இற்குப்பின்னமும் மக்கள் தெளிவாக இருந்தார்கள்! அவர்கள் குழம்பவில்லை. அதன் பின் மக்களை குழப்பி அடித்து நாற்றமடிக்க வைத்த பெருமை சாக்கடை காஸ்ரோக்களையே சாரும்" ....

சிந்தியுங்கள் சில கணம் தயவுசெய்து ... புரியும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!!

நேற்றைக்கு முன் தினம் ஒருவர் கூறினார்...!

நேற்றைய தினம் ஓருவர் கூறினார்...!!

இன்றைக்கு ஒருவர் கூறினார்...!!!

சுயசிந்தனையே இல்லையா!? :wub:

சிந்தியுங்கள் சில கணம் தயவுசெய்து ... புரியும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!!

காஸ்ட்ரோவிற்கு ஆதரவாக, எதிராக,

KP க்கு ஆதரவாக, எதிராக,

யாழ் களத்தில் எழுதி பிரச்சினைகளை உருவாக்கும் தமிழின விரோதிகளை அடையாளம் காண முடிகிறது.

அதுவும் ஒருசிலர் குறித்த ஒருவரின் செய்திகளை உலாவவிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதையும் அடையாளம் காண முடிகிறது.

யாழ் களத்தில் தொடர்ந்து எழுதிவரும் இந்த தமிழின விரோதிகள்,

- தமிழினப்படுகொலை செய்துவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

- தமிழினப்படுகொலை செய்ய தொடர்ந்து உதவிவரும் இந்திய அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

- தமிழினப்படுகொலை செய்ய தொடர்ந்து உதவிவரும் தமிழ் ஒட்டுக் குழுக்களின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

தமிழ் மக்கள் யாழ் களத்தில் தொடர்ந்து நடமாடிவரும் இந்த தமிழின விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளட்டும்.

தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களப் பயங்கரவாதிகளின், தமிழின அழிப்பிற்கு தொடர்ந்து உதவிவரும் வட இந்திய பயங்கரவாதிகளின், ......., பிடியில் இருக்கும் எவரையும் நம்பமுடியாது. நம்ப வேண்டியதில்லை.

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தமிழ்ப் பழமொழி.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இது செல்லுபடியாகும்.

தமிழினப்படுகொலை செய்துவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான இந்த விரோதிகளுக்கு எதிராக கருத்துக்களை ஒருசிலர் தொடர்ந்து எழுதி அவர்களின் நோக்கத்துக்கு துணை போகாமல் இருந்தால் நல்லது. சிந்தித்து பொருத்தமான சில கருத்துக்களை எழுதியபின் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது, என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு சிலர் தொடர்ந்து இத்தகைய விவாதங்களில் அறிந்தோ - அறியாமலோ தொடர்ந்து ஈடுபடுவது தமிழின விரோதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சதிகாரர்களுக்கு துணை போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விடுதலைப்புலிகளை வேரறுக்க சதியா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு என்பது இலகுவில் அழிந்து போகக் கூடிய காகிதத்தில் எழுதப்பட்ட அல்லது கணனியில் தட்டச்சு செய்பட்ட கற்பிதமான ஒன்றல்ல.

அது 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவிரர்களதும் அதை விட அதிகமான போராளிகளினதும் அப்பழுக்கில்லாத ஈகத்தினாலும் ஈழப்போராட்டத்தின் வலியை வேதனையை பாரத்தை சுமந்த இலட்சக்கணக்கான மக்களின் உண்மையான அர்ப்பணிப்பினாலும் பங்களிப்பினாலும் காலப் பெருவெளியில் பதியப்பட்ட ஒன்றாகும்.

இந்த வரலாற்றை பதிவதற்கு ஆயிரமாயிரம் முகமறிந்த வீரர்களுடன் ஆயிரமாயிரம் முகமறியா வீரர்களும் தமது பங்களிப்பை நல்கியுள்ளனர்.குறிப்பாக விடுதலைப்புலிகளிடம் சிறந்தபுலனாய்வுக் கட்டமைப்புகள் இருந்தன. இந்தப் புலனாய்வுக் கட்டமைப்புகள் விடுதலைப்புலிகளின் பல்வேறு வெற்றிகளுக்கு -இராணுவ சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்தப் புலனாய்வு கட்டமைப்புக்களில் பணிபுரிந்த எந்தவொரு போராளியும் தங்களை பகிரங்கமாக இனங்;காட்டியதும் கிடையாது தங்களுடைய வேலைகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதும் கிடையாது.

ஆனால் கடந்த வாரம் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தும் சிலர் தாங்கள் சிலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக சில ஊடகங்களில் விடுதலைப்புலிகள் இயக்க மரபுக்கு மாறாக பரபரப்பு செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

இந்தப் பரபரப்பு செய்திகளின் உண்மை மற்றும் நம்பகத் தன்மைக்கு அப்பால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாகக் கூட தலையெடுக்க விடக் கூடாது என்கின்ற ஒரு சதிப்பின்னணி இதற்குப் பின்னால் இருப்பதாகவே எமக்குப் படுகிறது.

பொதுவான சர்வதேச நடைமுறையின் படி பல நாடுகள் தங்களது அரசியல் பொருளாதார இராணுவ நலன்களுக்காக ஏனைய நாடுகளை உளவு பார்ப்பது வழக்கமாகும் இதற்காக பல நாடுகள் தனியான வெளிநாட்டு உளவுத்துறை கட்டமைப்புக்களை வைத்திருக்கின்றன.

இந்த உளவுத்துறை கட்டமைப்புகள் ஒவ்வொருநாடுகளுக்கும் உரிய இராஜந்திர வலைப்பின்னலுக்குள் நுளைந்து தங்களது உளவு நடவடிக்கைளை மேற்கொள்வது வழக்கமாகும்;.

ஆனால் இந்த உளவு நடவடிக்கை கண்டுபிடிக்கப்படும் போது அல்லது பகிரங்கப்படுத்தப்படும் போது அந்த நடவடிக்கையின் ஈடுபட்டவர் ஒரு இராஜந்திர சேவையை சேர்ந்தவராக இருந்தால்அவரது இராஜதந்திர அந்தஸ்த்து பறிக்கப்பட்டு அவர் அவரது சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்.சாதாரண குடிமகனாக இருந்தால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதி உயர்ந்தபட்ச தண்டனைக்குள்ளாக்கப்படுவார்.இவ்வறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போர்களை உண்டாக்கிய வரலாறுகள் நிறைய இருக்கின்றன.

உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பல விடுதலை இயக்கங்களை மேலாதிக்க சக்திகள் திட்டமிட்டு அழித்த வரலாறுகளும் நிறைய இருக்கின்றன.

விடுதலைப்புலிகளை இந்த மேலாதிக்க சக்திகள் தங்களது பிராந்திய நலன்களுக்காக பயங்கரவாதப் பட்டியலில் இட்டிருக்கும் நிலையில் நாங்கள் உளவுப்பிரிவு நடத்துகிறோம் புலம் பெயர்ந்த நாடுகளில் வதிபவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கிறோம் என்று அறிக்கை விடுவதும் காதில் பூச்சுற்றுவதும் இதைச் செய்பவர்களைச் சேர்ந்தவர்களுக்கு சாகசம் மிக்கதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கலாம்

ஆனால் விடுதலைப்புலிகளுக்காக புலத்தில் தங்களை அர்ப்பணித்து வேலை செய்த உண்மையான பல செயற்பாட்டாளர்களுக்கும் கடந்த வருடம் இடம் பெற்ற வன்னிப் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பி புலத்தில் தஞ்மடைந்து அகதி அந்தஸ்த்துக்காக காத்திருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களுக்கு இது பாரிய தீங்கை விளைவிக்கும் என்பதையும்; எதிர்காலத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் விடுதலைப்புலிகள் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிiயாதபடி இது தடுக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் இவ்வாறான போலி புலனாய்வு அமைப்புக்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தவும் இல்லை என்பதையும் புலம்பெயர்ந்த நாடுகளின் மனித உரிமைச் சட்டங்களை மீறம் வகையில் தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் எந்தவித உளவுச் செயற்பாடுகளிலும் ஈடுபடவதில்லை என்பதையும் மேற்குலகிற்கு தெளிவுபடுத்தவேண்டும்

தாய்நிலம் ஆசிரியர் தலையங்கம் 29.08.2010

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் இவ்வாறான போலி புலனாய்வு அமைப்புக்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தவும் இல்லை என்பதையும் புலம்பெயர்ந்த நாடுகளின் மனித உரிமைச் சட்டங்களை மீறம் வகையில் தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் எந்தவித உளவுச் செயற்பாடுகளிலும் ஈடுபடவதில்லை என்பதையும் மேற்குலகிற்கு தெளிவுபடுத்தவேண்டும்

தாய்நிலம் ஆசிரியர் தலையங்கம் 29.08.2010

புலிகளுக்கும் இந்த சேறடிப்புக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எண்டது உங்களுக்கு தெரியும் என்பதில் மகிழ்ச்சி...

இப்ப புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தவன் எல்லாம் தான் தான் புலி என்றார்கள்...! தங்களுக்குள் பிரிந்து நிண்டு கொண்டு அடிபடுகிறார்கள்... தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்ள இது நல்லதொரு சந்தர்ப்பமும் கூட...

இப்ப பிரச்சினை அது அல்ல... புலிகள் எப்போதும் குழப்பவாதிகளாக இருந்தது கிடையாது... அதுவும் தமிழ் மக்களை குழப்பியதே கிடையாது... இதை பலர் புலிகள் வெளிப்படை தன்மை அற்றவர்கள் மக்களுக்கு எதையும் சொல்வதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு காரணமும் இதுதான்...

இங்கே புலிகள் இப்படியான சில்லறைகளுக்கு பதில் அளிப்பார்கள் எண்று என்னால் எதிர்பார்க்க முடியவில்லை....

நீங்கள் உங்களை புலி எண்று சொல்லிக்கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சி எண்றாலும்... நான் புலி எண்று சொல்லும் கூட்டமும் நீ புலி எண்று திட்டும் கூட்டமும் போடும் ஆட்டங்கள் , நோக்கங்கள் எல்லாம் ஒண்றை நோக்கித்தான்... அது புலிகள் மீதும் மாவீரர்கள் மீதும் சேறடித்து நாறடிப்பதுக்காகவே...!

உங்களால் முடிந்தால் மக்களுக்கு வித்தியாசத்தை புரிய வையுங்கள்... சேறடிக்கும் கூட்டம் வேறு புலிகள் வேறு எண்று...

அது ஊடகராக உங்களின் கடமையும் கூட

Edited by தயா

எத்தனைநாளைக்கு செய்யினம் எண்டு பாப்பம்

Edited by athiyan

புலிகளுக்கும் இந்த சேறடிப்புக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எண்டது உங்களுக்கு தெரியும் என்பதில் மகிழ்ச்சி...

இப்ப புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தவன் எல்லாம் தான் தான் புலி என்றார்கள்...! தங்களுக்குள் பிரிந்து நிண்டு கொண்டு அடிபடுகிறார்கள்... தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்ள இது நல்லதொரு சந்தர்ப்பமும் கூட...

இப்ப பிரச்சினை அது அல்ல... புலிகள் எப்போதும் குழப்பவாதிகளாக இருந்தது கிடையாது... அதுவும் தமிழ் மக்களை குழப்பியதே கிடையாது... இதை பலர் புலிகள் வெளிப்படை தன்மை அற்றவர்கள் மக்களுக்கு எதையும் சொல்வதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு காரணமும் இதுதான்...

இங்கே புலிகள் இப்படியான சில்லறைகளுக்கு பதில் அளிப்பார்கள் எண்று என்னால் எதிர்பார்க்க முடியவில்லை....

நீங்கள் உங்களை புலி எண்று சொல்லிக்கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சி எண்றாலும்... நான் புலி எண்று சொல்லும் கூட்டமும் நீ புலி எண்று திட்டும் கூட்டமும் போடும் ஆட்டங்கள் , நோக்கங்கள் எல்லாம் ஒண்றை நோக்கித்தான்... அது புலிகள் மீதும் மாவீரர்கள் மீதும் சேறடித்து நாறடிப்பதுக்காகவே...!

உங்களால் முடிந்தால் மக்களுக்கு வித்தியாசத்தை புரிய வையுங்கள்... சேறடிக்கும் கூட்டம் வேறு புலிகள் வேறு எண்று...

அது ஊடகராக உங்களின் கடமையும் கூட

குமரன் பத்மநாதன் என்ற பெயரில் பேஸ் புக்கில் ஒரு கணக்கு திறக்கப்பட்டு பலரது இணைப்புக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று எனக்கும் இந்த இணைப்புக்கான நட்பு வேண்டகோள் ஒன்று விடுக்கப்பட்டது..இது உள்நோக்கம் கொண்ட போலி இணைப்பு என்றே நான் கருதியதால் இது தொடர்பாக இன்று இந்த இணைப்புக்குரிவர்களை கண்டுபிடிக்கும் படி ஐரோப்பிய சைபர் கிறைம் பிரிவினருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளேன்.

Interpol - Regional Working Parties on Information Technology Crime

INTERPOL

General Secretariat

200, quai Charles de Gaulle

69006 Lyon

France

Fax. +33 (0)4 72 44 71 63

International Association of Prosecutors (IAP)

Hartogstraat 13, The Hague, The Netherlands

Tel. +45 33 43 67 34

Email: info@gpen.info

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் உள்நோக்கம் நாடுகடந்த அரசையும் உருத்திரகுமாரனையும் தவறானதாகச் சித்தரிப்பதே.ஆரம்பத்தில் கட்டுரையின் போக்கு கேபி யை விமர்சிப்பது போல் எழுதப்பட்டாலும் அதன் முடிவு உருத்திரகுமாரனையும் நா.க.அரசையும் பற்றி மக்களுக்கு குழப்புவதாகஅமைகிறது.கேபியைப் பற்றி எழுதுவதோ பேசுவதோ நேரத்தை வீணடிக்கும் செயல். ஆனால் தமிழ்த்தேசியத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் எவரும் நாடுகடந்த தமிழீழ அரசை இன்றைய சூழ்நிலையில் ஆதரிக்காமல் இருக்கமாட்டார்கள்.அதன் நோக்கம் கொள்கை தெளிவானது வெளிப்படையானது.நா.க.அரசு மீது நம்பிக்கையற்றவர்கள் அதன் மீது சேறு பூசுவதை விடுத்து தங்களுக்குச் சாத்தியமான வழிகளில் போராடலாம்.அதை விடுத்து மக்களைக் குழப்புவதும் 2 பிரிவாக்குவதும் சிறிலங்கா ஆட்சியாளரின் வேலையைச் சுலபமாக்கும்.(புலத்தில் தமிழர்களை ஓன்று சேராது தடுக்கும்)

சரி நுணா! நீர் சொல்லுகிற மாதிரி சொந்த அறிவிலை சிந்திக்க வேண்டும் என்றால் ....

1. யார் இந்த சேரமான்????

2. என்னத்திலை எழுதுகிறார்?

3. யார் மீள பிரசுரிக்கிறார்கள்?

4. இந்த சேரமானை இப்படி தூண்டி எழுதுபவர்கள் யார்?

5. யாரின் தூண்டுதலில் இவர்கள், சேரமான் போன்றவர்களை தூண்டி, மக்களை குழப்புகிறார்கள்?

6. இதில் பயனடைவது யார்?

7. ...

... இப்படியான கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள்! உண்மை புரியும்!!! இந்த சேரமான்களும், அவர்களை தூண்டுபவர்களுக்கும் பின்னணியோ/முன்னணி சிங்கள அரசுதான் என எண்ணத்தோன்றுகிறது!!! ???

... நேற்றைய தினம் ஓருவர் கூறினார் ..." மே18 இற்குப்பின்னமும் மக்கள் தெளிவாக இருந்தார்கள்! அவர்கள் குழம்பவில்லை. அதன் பின் மக்களை குழப்பி அடித்து நாற்றமடிக்க வைத்த பெருமை சாக்கடை காஸ்ரோக்களையே சாரும்" ....

சிந்தியுங்கள் சில கணம் தயவுசெய்து ... புரியும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!!

சேரமான் மற்றும் ஈழமுரசு பத்திரிக்கை குழுவினரும் நோக்கம் கே பி யை எதிர்ப்பதல்ல

மாறாக நாடுகடந்த அரசை செயலிழக்க செய்து புலம்பெயர்ந்த மக்களை தமது கட்டுபாட்டில் வைத்து

வெறும் வேற்று வார்த்தைகளால் தமிழ் மக்கள் போராட்டத்தை பத்திரிகைகளில் மட்டுமே இவர்களால்

போராட முடியும் எல்லோரும் ஒத்துளைத்தால் நாடுகடந்த அரசை ஒரு பலம்மிக்கதாக மாற்றமுடியும்

சட்டரீதியான வெளிப்படையாக இயங்க கூடிய இந்த அமைப்பை கெடுத்துவிட்டு இவர்கள் யாரென்றே தெரியாமல்

ஒளிந்திருந்து கொண்டு பத்திரிக்கை வாயிலாக மட்டுமே வழிநடத்த முடியும்

கண்டிப்பாக ஒருவர் வந்து எதிர்ப்பார் அவர்தான் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில ஒரு பதினெட்டுப்பேரும் அதுதவிர சேரமான் அதியமான் தாய்நிலம் பதிவு சங்கதி என்றொரு ஐந்தாறு ஊடகவியலாளர்களும்.. - அதில பலர் முகமூடிகள் - மட்டும்தான் கேபி.. பீப்பி.. நெடியவன்.. வெடியவன்.. துரோகி தியாகி என்று சண்டை பிடிச்சுக்கொண்டிருக்க மிகுதி லட்சத்துச் சொச்ச மக்களும் இதைப்பற்றி எதையும் அலட்டிக் கொள்ளாமல் - கொலிடேயில - கசூர்ணா பீச்சிலும் சாளை கடலிலும் நல்லுர்திருவிழாவிலும் நிற்கினம்.

ஒரு பெரும் பிரளயம் முடிந்து வெறும் ஓராண்டு முடியும் தருணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டுக்குப் படையெடுக்கினம் என்றால் என்ன அர்த்தம்..சனம் குண்டியில தட்டிட்டு போக ரெடியாகிட்டினம் என்றுதான். சனங்கள் தங்களுக்குத் தேவையில்லையென்று முடிவெடுத்துவிட்ட ஓர் அரசியலை புலத்தில யார் செய்தும் பிரியோசனம் இல்லை.

அது நேரம் இங்கை நடக்கிற பிக்கல்கள் பிடுங்கல்கள் ஒரு இனத்தின் பாற்பட்டவையும் அல்ல.. அது சில சண்டியர்களின் தனிப்பட்ட சண்டை. அதானல நமக்கு 5 சதத்துக்கும் பிரியோசனம் இல்லையென்று சனங்கள் விளங்கிக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.