Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள்

30-kp200.jpg

கொழும்பு: மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து, கஷ்டப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என கேபி எனப்படும் குமரன் பத்மநாபன் தமிழக தலைவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். மலேசியாவில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக பேட்டிகள் அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி:

தற்போது இலங்கை தமிழர்களுக்கு சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும், ஒற்றுமையும்தான் தேவை. அதை விடுத்து எதிர்க்கும் போக்கு மற்றும் மனக் கசப்பு போன்றவை தேவையில்லை.

தற்போது நான் கைது செய்யப்பட்டிருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் [^] வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் சமூக சேவகராக உள்ளேன். இந்த நிறுவனம் இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படுகிறது.

தற்போது நான் டெலிபோன், இ மெயில், பேக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளேன். எங்கள் மக்களுக்கு தற்போது அரசியல்வாதிகள் தேவையில்லை. மனிதாபிமானிகள் தான் தேவை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது மறுவாழ்வு, மற்றும் மறு சீரமைப்பு சிறப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் வாழ்வு மீண்டும் நல்ல முறையில் அமைய வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே செய்து உதவி வருகிறார்.

கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் அவர்களை இன்னும் 6 மாதங்களில் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாகாண மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. போரில் அனாதையான குழந்தைகளை பராமரிக்க வவுனியாவில் அன்பு இல்லம் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் சண்டையின் போது கை, கால்கள் மற்றும் பார்வை இழந்தவர்களும் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.

போரில் காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வவுனியா அருகே ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை தொடங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாழ்வை சீரமைக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கிளிநொச்சி அல்லது வவுனியாவில் அமைக்கப்படும்.

போரில் விடுதலைப்புலிகள் [^] தோல்வி அடைந்தால் எங்கள் மக்களையும் இயக்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை பிரபாகரன் [^] என்னிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கடமையை நான் செய்து வருகிறேன்.

00020063.gif

இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் தேவையற்ற அலங்கார கவர்ச்சிகரமான வார்த்தைகளால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வீணாக பேச வேண்டாம். எங்கள் வாழ்வுக்கு தேவையான ஆக்க பூர்வமான உதவிகளை செய்யுங்கள்..." என்று கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2010/08/30/srilanka-kp-tamils-ltte-tamilnadu-leaders.html

டிஸ்கி:

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_2/PARAKUM_PAVAI/YARAI_THAN.MP3&OBT_fname=YARAI_THAN.mp3

t2320.gif

மக்களை யாரிடம் இருந்து பாதுகாக்கிறீர்கள்? போராளிகளை யாரிடம் இருந்து விடுவிக்கப் போகிறீர்கள்? இவற்றிற்க்கும் தமிழகத் தலைவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழகத்தில் எமக்காகக் குரல் கொடுப்பவர்களின் வாயை அடைப்பதன் மூலம் யாருக்குப் பயன்? வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் கரு நா நிதிக்கும் ,காங்கிரசுக் கட்சிக்கும் நன்மை பயக்கும் அரசியல் ரீதியான அறிக்கைகளை கேபி வெளியிடுவது எதற்காக?

சிந்திப்பீர்கள், தெளிவடைவீர்கள். குழம்ப வேண்டியதில்லை. மகிந்த மன்மோகன் சோனியா கருணனிதி எல்லோரும் ஓர் அணியில்.கேபி இவர்களைப் பாதுகாக்கிறார்.புலத்தில் இருக்கும் சிலர் தெரிந்தும் தெரியாமலும் இவர்களின் சதியில் பங்கு பெறுகின்றனர்.

போராளிகளையும் மக்களையும் பணயம் வைத்து இவர்கள் நடாத்தும் வெட்கம்கெட்ட அரசியல் மக்கள் மத்தில் அம்பலப் படத் தான் போகிறது.ஏனெனில் உண்மைகள் உறகுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னபுரட்சி, நீங்கபோய் இந்தச் செய்தியை யாழில் இணைத்துள்ளீர்கள் எனது மனம் மிகவும் விசனமடைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னபுரட்சி, நீங்கபோய் இந்தச் செய்தியை யாழில் இணைத்துள்ளீர்கள் எனது மனம் மிகவும் விசனமடைகிறது.

ஆமா தோழர் இவர் அறிவுறையை கேட்கவேண்டியது இல்லை... இந்தாள் ராஜபக்சே கைக்கூலி ... ஏனையோர் விழிப்படைய...கீழே பாடல் கேட்டீர்களா? :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஏனையோர் விழிப்படைய...கீழே பாடல் கேட்டீர்களா? :rolleyes:

இந்தப் பாட்டு சிங்கள பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் போக்கற்ற ஒருவரின் உளறல்களை இணைத்தவரை குறிக்கவில்லைத் தானே? :D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட.... இணைத்தவரை.... விடுங்க தோழர் ஆரவமுதன்.... இந்த பாடல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் .....இங்கே தமிழ்நாட்டு ஆட்டு மந்தைகளுக்கும்......அனைவருக்கும் கச்சிதமா அப்படியே பொருந்துகிறதா இல்லையா? :rolleyes:

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_3/URYMAIKURAL/ANBALAGAL.MP3&OBT_fname=ANBALAGAL.mp3

:D:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் தேசியன்.

மிக்க நன்றி தோழர் ஆராவமுதன்

நம்ப தமிழ்நாட்டு நண்பர்களுடன் நான் இணக்கப்பட்டாலும், பொதுப்படையா ஒரு கேள்வியுங்கோ...

சிலரை பொறுத்தவரை தமிழர்களின் எதிரிகளுக்கு ஒரு சிறந்த சவாலாக இருந்து சுய இன வஞ்சத்தினால் சிறையிருக்கும் குமரன் பத்மநாதனையோ.. அல்லது பலரை பொறுத்தவரை சிங்களவனின் கைகூலியாக மாறி எமது உரிமைப்போராட்டம் அழிந்துபோக வைத்த கே.பீயையோ.. இப்படி தலையில் தூக்கிவைத்துகொண்டு திரிய சிங்களவன் ஒண்டுமாங்காய் மடையனல்ல.. முக்கியமாக தேவையுமல்ல.. உவன், நிகழ்கால உலகப்போக்கை அறிந்தவன்.. வடிவாக காய்நகர்த்துகிறான்.. தமிழர் தரப்பு இப்பொது வாயில் ஒப்பாரி/இரஞ்சுதல்/வழிதல் என்பன மட்டுமே மிஞ்சியுள்ளது. பாக்கப்போனால் கணக்கே எடுக்கக்த்தேவையில்லை

ஆளிட்ட எதொ ஒண்டு இருக்கு.. அதுதான் ஆளுக்கு பெனிபிட்டுக்கள் கிடைக்குதுபோல..

குமரன் பத்மநாபனுக்கு ஒரு சந்தர்ப்பம் (காசு இல்லை! :rolleyes: ) குடுப்பதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.. :D

Edited by Panangkai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய வெளிநாடுகளில் இருக்கும் புலிகளின் சொத்துகளை நைசாக பேசி அமுக்கவும்... நல்லா இருக்கும் பிள்ளைகளை குருடராக்கி உலக தமிழர்களிடமும்... ஏனைய நாடுகளிடமும்... பிச்சைஎடுக்க விட்டு ...

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே.... என சிங்கள கைத்தடிகளை உயர்த்தி பிடித்து.....

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_5/KALATHUR%20KANNAMMA/03%20%20KALATHUR%20KANNAMMA.mp3&OBT_fname=03++KALATHUR+KANNAMMA.mp3

அந்த பிச்சையின் மூலம் சிங்களத்தினை வளபடுத்தி கொள்ளவும்.... கே.பி ஒரு கையாள்... மற்றது வரும் காசினை சிங்களம் அப்படியே தமிழர்களுக்கு செலவழிக்க போவதில்லை......

அவ்வளவுதான் தோழர் என் சிற்றறிவுக்கு பட்டது... இந்த ஆளின் மூலம் காசு கொடுப்பதினை விட்டு... சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்தால் ஏதாவது உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு..... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு முதலில் செய்யவேண்டியது சர்வதேச தொண்டு நிறுவனங்களை உள்ளே நுழைக்கவேண்டும்... இல்லையேனில் முகாம் மக்கள் முகாம்களில் இருந்துதான் வாழ்நாளை கழித்து உயிர்விடுவார்கள்... அவர்களை காட்டியே சிங்களவன் காசு வாங்கி கொண்டு ... சோக்காக தின்று கழிந்து கொண்டு தான் இருப்பான்... இந்திய கைத்தடிகளும் கண்காணிப்பு என ஏதாவது ஒரு குழுவை அனுப்பி அனைவரும் சோக்காக உள்ளார்கள் சிங்களத்தின் சார்பாக சர்வதேசத்தின் வாயை அடைத்து கொண்டு தான் இருப்பார்கள் ... முதல் கண்காணிப்பு குழு கனி மொழி சார்பாக சர்ட்பிகெட் கொடுத்தாகிவிட்டது... இனி இரண்டாவது குழு கிளம்பபோகிறது... இனி மூனறாவது.. நான்காவது...

ஸ்டார்டி மியுசிக்...

இங்கு சர்வதேசத்தின் வாயை அடைப்பதற்கு சிங்களம் கைக்கொள்வது இந்தியத்தின் வாயை..... இதை ஈழத்தோழர்கள் நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும் ... சீனாவை அல்ல....பாகிஸ்தானை அல்ல... இதில் இருந்து முதல் எதிரி யார் என்ற தெளிவு வேண்டும்...

இளிச்சவாயன் பொண்டாட்டி...... ஊருக்கெல்லாம்... .. ப்பாடி .... அதுக்குனு.... இப்படியாட ... ஏறுவிங்க... தூத்தேறி.... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஆளிட்ட எதொ ஒண்டு இருக்கு.. அதுதான் ஆளுக்கு பெனிபிட்டுக்கள் கிடைக்குதுபோல..

குமரன் பத்மநாபனுக்கு ஒரு சந்தர்ப்பம் (காசு இல்லை! :rolleyes: ) குடுப்பதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.. :D

முரளிதரன் போய் என்ன கிழிச்சவர்?

சந்தர்ப்பத்தை நாங்க என்ன குடுக்கிறது அவராகத்தான் எடுத்துக்கொண்டாரே

என்னத்த கிழிக்கிறார் எண்டு பார்ப்பம்

(எல்லாரும் ஏறிக்களைத்த குதிரையில சக்கடத்தார் ஏறி சக்கி விழுந்தாராம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனைய வெளிநாடுகளில் இருக்கும் புலிகளின் சொத்துகளை

சார் லோன் எடுத்து கொடுத்த சனங்கள் லோ லோ என்று அலைகினம். நீங்க சொன்னமாதிரி சொத்துப்பத்து ஏதாவது இருந்தால் அதன்மூலம் அந்தக் கடன்களை அடைக்கலாம் இல்லையா..

NERDO, President Mr.S.Thavarathinam

அன்புடையீர்,

போருக்குப் பிந்திய மீள் கட்டுமானம் மற்றும் போரினால் பாதிப்புற்றவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.

ஒவ்வொரு தேசமும் தனிச் சிறப்பு வாய்ந்த துன்பச் சூழல்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் இன்றைய துயரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அனைத்துத் தமிழர்களினதும் துணையுடனே கையாள முடியும். இது மனிதாபிமான நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி என்பதுடன், சுயகௌரவம், சகோதரத்துவம், நீதியான சமாதானம், வறுமை ஒழிப்பு என்பவற்றையும் இலக்காகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

உங்களுடைய உதவி இந்த விடயத்தில் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. உங்களுடைய நேரடிப் பங்களிப்புடன், அறிவுசார், பொருளாதார மற்றும் திட்ட ஆலோசனைகளையும் உங்களிடம் நாம் வேண்டி நிற்கிறோம். உங்களுடைய அனுபவங்களுடன் இந்த உயர்ந்த இலக்கை அடைய நாம் விரும்புகிறோம்.

கருத்திட்டங்களை அமைப்பதில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அடைவுகளை கண்காணிப்பதிலும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் உங்களுக்குத் துணை நிற்போம். கணக்கு விபரங்களை கிரமமாக உங்களுக்கு அறியத்தருவதுடன், கணக்காய்வுகளையும் நாம் மேற்கொள்வோம். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான திட்டங்களை தெரிவசெய்யும் சுதந்திரம் உங்களுக்க உண்டு. திட்டம் அமுலாக்கப்படும் இடத்துக்கு நீங்கள் நேரில் செல்ல முடியும் என்பதுடன், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிவதுடன், விரும்பினால் நீங்களே அதனை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.

திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் வெளிப்படைத்தன்மை பிரதான கொள்கையாக இங்கு கடைப்பிடிக்கப்படும்.

எங்களுடைய மக்கள் மிகவும் மனிதநேயமற்ற ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மிகுந்த சிரமங்களில் மத்தியில், பலரது உயிர்களையும், அவயவங்களையும் காவு கொடுத்து நிற்கின்றனர். உள நெருக்கீடுகளினாலும், வெளியில் சொல்ல முடியாத துயரங்களினாலும் அவர்களது வாழ்வு முடமாகிப்போயுள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் துயரங்களிலிருந்து நாம் மீண்டெழுந்து, சமத்துவமான, பாதுகாப்பான, சுயகௌரவத்துடன் கூடிய, சமாதானமான ஒரு வாழ்வை நோக்கி நாம் முன்னோக்கிச் சென்றாகவேண்டும்.

எங்களுடைய மக்களுடைய தேவைகள் வரையறையற்றவை. அனாதை இல்லங்களிலிருந்து முதியோர் இல்லங்கள் வரையிலும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், நிவாரணப் பணிகளிலிருந்து புனர்வாழ்வுத் தேவைகளை நோக்கி அவர்களது வாழ்வை நகர்த்துவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு வகிபாகம் உண்டு.

எங்களுடைய வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். எமது இளம் சமுதாயம் பல தசாப்தங்களாக தமது கல்வியை இழந்து நிற்கிறது. ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து உயர் கல்வி வரையிலும், தொழிற்கல்வியிலிருந்து தொழில்நுட்பப் பயிற்சி வரையிலும் அவசரமாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

திறன்மிக்க, கல்வியறிவுடைய பணியாளர்கள் இன்மையால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறைசார் கல்வியும், பயிற்சியும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னோக்கி நகர்த்த முடியாது. சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் தொழில்முறைசார் கல்வியைப் பெறவேண்டியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமூக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரது வாழ்விலும் இயல்புத்தன்மையைக் கொண்டுவர முடியும்.

இதுதான் எமது பிரதான இலக்கு.

ஏராளமான விதவைகளுக்கும், அங்கவீனர்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. வன்னி மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிலேயே ஏழைகளாக்கப்பட்டுள்ளதுடன், பலர் வேறிடங்களுக்குச் சென்றுமுள்ளனர். பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இவர்களுக்கு ஏதாவது செயல்பூர்வமான உதவிகள் கிடைத்தாலொழிய, இவர்கள் ஒரு நிரந்தர வெறுமைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

இவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதையுமே இப்போது கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பினால், இவர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நாம்தான். எம்மால் இவர்களுக்கு உதவ முடியாவிட்டால், வேறு எவர்தான் உதவுவர்?

.... ... நேற்று முந்தினம் ஒரு கிறிக்கெட் விளையாட்டுப்போட்டி ... அதற்கு பல தமிழர்கள், சில சிங்களவர்கள், ஓரிரு காஸ்ரோக்கள், ஓரிரு கேபிக்கள், ஓரிரு ஓட்டு.ஓணான் குழுக்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள் ...

.... அதில் என்னோடு கதைத்துக் கொண்டிருந்த கேபி ஒருவர், அண்மையில் லங்கா சென்று யாழும் சென்று வந்தவராம். கூறினார் .... "யாழில், டக்லஸ் என்னத்தை தான்(நல்லவற்றைக்கூட) செய்தாலும் மக்கள் மதிக்கிறார்கள் இல்லையாம்" ... என்றார்.

சில மாதங்களுக்கு முன்னுக்கு ஒரு புளொட் உறுப்பினரை கொழும்பில் சந்தித்தேன் ... கூறினார், "கடந்த தேர்த்தலுக்கு முன்னுக்கு, கோயில்குளத்தில் ஒவ்வொரு நாளும் தண்ணியும், புரியாணியும் அங்குள்ள மக்களுக்கு படைத்தவர்களாம். ஆனால் இலெக்ஷனில் புளொட்டுக்கு விழுந்த வாக்கோ இருபது, இருபத்தினாலுதானாம். ...

.... முன்பு புலிகளுக்கு எதிரான குழுக்களை இறக்கி, புலிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி மக்கள் மத்தியில் சிங்களம் வெற்றி அடையலாம் என நீண்ட காலம் முயன்றது! ... தோல்வியைக் கண்டது!! இறுதியில் புலியிலிருந்து விலகியவர்களை கொண்டும் முயன்றது ... முடியவில்லை!!

ஆனால் இப்போ ... கொழும்பிலிருந்து கொண்டு ... "என் தலைவன் நானிருக்கிறேன் மக்களையும், போராளிகளையும் காப்பாற்றுவான்" ... என்று கூறிவிட்டார். அதற்காக அவர்களை நாந்தான் காப்பாற்றியாக வேண்டும் என இந்த கேயண்ணா பீயாண்ணாவை கொண்டு ... புலிப்பல்லவியுடன் ... அதுவும் இவர் ஒருவர்தான் அங்கிருந்து புலிப்புராணமும் பாடிக்கொண்டிருக்கிறார் ... அவங்கள் விடுகிறாங்க்களாம்?????? ஆனால் இந்த புலிப்புராணம் சிறிதளவாவது இங்குள்ளவர்களை அசைத்துப் போட்டது உண்மைதான்!! ஏன்????? மே18இற்குப் பின்னம் இங்குள்ள காஸ்ரோக்கள், அங்கு அகப்பட்டிருக்கும் போராளிகள், பொதுமக்கள், அவர்களின் புணர்வாழ்வு விடயங்களில் எவ்வித அக்கறையும் எடுக்காததால், இந்த ஓநாயின் அழுகை எடுபடப்பார்க்கிறது!!!!

.... ஒட்டுக்குழுக்கள், புலியிலிருந்து தப்பியவர்களை கொண்டு, புலி எதிர்ப்பு அரசியல் மூலம் செய்ய முடியாததை .... இன்று சிங்களம், புலிக்கோசத்துடன் அதே அரசியல் வேலையை செய்ய இந்த கேபி அகப்பட்டிருக்கிறது!!!! ... இதன் வெற்றி, தோல்வி, இங்குள்ள காஸ்ரோக்களின் கைகளிலேயே இருக்கிறது!!!!

Not mine... But others quotes...

.... ஒட்டுக்குழுக்கள், புலியிலிருந்து தப்பியவர்களை கொண்டு, புலி எதிர்ப்பு அரசியல் மூலம் செய்ய முடியாததை .... இன்று சிங்களம், புலிக்கோசத்துடன் அதே அரசியல் வேலையை செய்ய இந்த கேபி அகப்பட்டிருக்கிறது!!!! ... இதன் வெற்றி, தோல்வி, இங்குள்ள காஸ்ரோக்களின் கைகளிலேயே இருக்கிறது!!!!

......."கேபியும் அவருக்கு ஆதரவானவர்களும் வெளிப்படையாகவே இயங்கிவருகிறார்கள். ஆனால் கேபிக்கு எதிராக எழுதும் பலர் தான் பட்டவர்த்தனமாக நிழல் மனித தாதாக்களாக உள்ளனர். கேபியை மக்களுக்கு தெரியும். கேபி பிழையானவர் என சொல்பவர்களையும் மக்கள் அறிந்திருக்க வேண்டிய நேர்மையை தாங்கள் உணருவீர்கள் என மிகத்திடமாக நம்புகிறேன்."

நேர்மையுடன்

சிவப்பிரகாசம் மதியழகன்

எனது மின்னஞ்சல்

mathinorway@yahoo.com

ottawa suresh Says:

August 23, 2010 at 6:53 am

கருணாவை நீண்ட காலத்துக்கு மாவட்ட தளபதியாக தலைவர் விட்டதால் தான் கருணாவின் துரோகங்கள் தலைவருக்கு தெரியாமல் போய்விட்டது என்று கருணாவின் பிரிவின் போது பலர் முணுமுணுத்த ஞாபகம்.அதேபோல் கஸ்ரோவும் தனக்கு கிடைத்த ‍ஆறுவருட பொறுப்பில் இயக்கத்துக்கும் போராட்டத்துக்கும் விசுவாசமாக தனக்கு கீழ் இருந்த போராளிகளை வளர்க்காமல் தனக்கு மட்டும் விசுவாசமாக வளர்த்துள்ளார் என்றுதான் எண்ண வைக்கிறது.

கஸ்ரோ பொறுப்பு எடுத்தவுடன் தனக்கு விசுவாசமானவர்களையே பொறுப்புகளிலும் போட்டார். எனக்கு தெரிய இங்கு கனடாவில் தனக்கு தெரிந்த ஜெயம் என்ற வல்வெட்டிதுறை முன்னாள் புலியை ஒரு ஏரியாவுக்கு பொறுப்பாக போட்டார். ஆனால் ஜெயம் முன்னர் காசு கேட்டு வீட்டுக்கு போன ஏரியாகாரரை பேசி துரத்தியவர் என்றும், உலகதமிழர் இயக்கதுக்கு எதிராக கனக.மனோகரனுடன் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர் என்று பழைய ஏரியாகாரர்கள் பலர் குறைபட்டுக் கொண்டதுமல்லாமல் செயற்பாட்டில் இருந்து கூட விலகினர். அதேபோல் இப்போது கனடா பொறுப்பாளர் தமிழ் என்பவர் கூட மொன்றியலில் காசு கேட்டு போனவர்களை விரட்டியடித்தவராம். பின்னர் சமாதானதுடன் நாட்டுக்கு போய் புலியானவர். இப்படியானவர்கள் தான் கஸ்ரொவின் விசுவாசதுக்குரியவர்கள்.

இதேபோல் கஸ்ரோ கனடாவுக்கு ரெஜிக்கு பின்னர் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மரியதாஸ் முன்னர் கேபியின் ஆளாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து சுவிஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரித்தவர். பின்னர் கஸ்ரோவுக்கு தகடுகொடுத்து ரெஜியை விலக்கப்பண்ணியவர் இந்த மரியதாஸ். இந்த மரியதாஸ் பற்றி இன்னொரு தகவலும் உண்டு. மாத்தையாவை கைது செய்த காலத்தில் தலைவரை படுமோசமாக திட்டி திரிந்தவர். அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.கண்டுகொள்ளாதேங்கோ.

1993இல்தலைவரின் பாதுகாப்புபிரிவில் இருந்த ரிச்சார்ட் பெண் பிரச்சனையில் தப்பியோடிய போது எனக்கு தெரிந்த ஒருவர் சொன்ன வாக்கியம் தான் ஞாபகதுக்கு வருகிறது.” தலைவர் யார் யாரை எல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லாம் இயக்க பணத்துடனும் இயக்க ஆயுதங்களுடனும் ஓடித்தப்பினர்” என்பதெ அது.

Not mine... But others quotes...

......."கேபியும் அவருக்கு ஆதரவானவர்களும் வெளிப்படையாகவே இயங்கிவருகிறார்கள். ஆனால் கேபிக்கு எதிராக எழுதும் பலர் தான் பட்டவர்த்தனமாக நிழல் மனித தாதாக்களாக உள்ளனர். கேபியை மக்களுக்கு தெரியும். கேபி பிழையானவர் என சொல்பவர்களையும் மக்கள் அறிந்திருக்க வேண்டிய நேர்மையை தாங்கள் உணருவீர்கள் என மிகத்திடமாக நம்புகிறேன்."

கேபியின் மிகப்பெரிய தூண்/வலதுகரம் சுவுஸுக்கு பொறுப்பாகவிருந்த முரளி!! அன்னார் பெண் பிரட்சனை, காசுப்பிரட்சனை, சண்டித்தனம் எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறந்தவர்! கனடாவுக்கு எஸ்கேப் ஆக முன்னுக்கு பல கோடிக்கள் மிஸ்ஸிங்காம்! ... இன்னும் பல வலது/இடதுகளை பற்றி தேவையா??? ... எல்லாம் சாக்கடைகள்!!!

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.

ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத்திற்காகவும் முழுக்குடும்பமுமே தம்மை அர்ப்பணித்திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரு குடும்பம். கடந்த வாரம் அந்த குடும்பத்தில் எஞ்சியிருந்த போராளித் தாயும் இறந்து போனபோது அவர்களின் இரு பிள்ளைகள் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என மேற்குலக நாடுகளில் இருந்து வீரப்பிரதாபம் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டிருக்காது.

கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் எத்தனை கோடி ரூபா என்றாலும் தருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு மட்டக்களப்பில் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவை நிறுத்த வேண்டும் என லண்டனிலிருந்து கங்கணம் கட்டி நின்ற அந்த அரசியல்வாதிக்கு கூட தனது பிரதேசத்தில் கேட்கும் அவலக்குரல்கள் கேட்டிருக்காது. ஏனெனில் அவர்கள் அந்த அழுகுரல்கள் கேட்கும் திசையை நோக்கி தமது புலன்களை செலுத்த தயாராக இல்லை. அவர்கள் பயணிப்பதெல்லாம் தமது மக்களை பலிகொடுத்து தமது சொகுசு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காகத்தான்.

பெண்போராளியான ஒரு தாய் தனது மருத்துவ செலவுக்கு வேண்டிநின்றதெல்லாம் வெறும் 38ஆயிரம் ரூபாதான். ஆனால் அந்த பணம் அவளது கைகளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி தனது இரு குழந்தைகளையும் அனாதைகளாக விட்டு இந்த உலகைவிட்டு பிரிந்து போனாள். அவள் மட்டுமல்ல அவளின் கணவன், தந்தை என முழுக்குடும்பமுமே இனவிடுதலைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தியாக குடும்பத்தின் வாரிசுகளான இரு பிஞ்சுக்குழந்தைகள் இன்று அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்கலடியிலிருந்து 4கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளைவீதியில் அமைந்துள்ள கிராமம்தான் பன்குடாவெளியாகும். புளொட் இயக்க கொலைகாரக் குழுக்கள் ஆக்கிரமித்திருந்த கறுப்பு பாலத்தை கடந்து சென்றால் வரும் கிராமம்தான் பன்குடாவெளியாகும். பல போராளிகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தந்த கிராமம்தான் அது.

அக்கிராமத்தில் பிறந்தவள்தான் சித்திரா என்ற ஷகிலா. அவளது தந்தை சீனித்தம்பி பத்மநாதன் அந்த கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். வயல் காணி என பொருளாதார ரீதியில் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த குடும்பம்.

இந்திய இராணுவம் வடகிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையில் விடுதலைப்புலிகள் காடுகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். இனவிடுதலையை நேசித்த பத்மநாதன் விடுதலைப்புலிகளுக்கு உணவு உட்பட அனைத்து உதவிகளையும் கொண்டு சென்று சேர்ப்பிப்பதில் அவரும் அவரது குடும்பமும் பெரும்பங்களிப்பு செய்தது.

இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த போது மட்டக்களப்பு அம்பாறை பிரதேச போராளிகள் காடுகளில் சில இடங்களில் குழுக்களாக தங்கியிருந்தனர். வாகரை, அம்பாறை காட்டுப்பகுதிகளில் இரு குழுக்களும், தாந்தாமலை, மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை, மீசைக்கல்திடல் ஆகிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏனைய மூன்று குழுக்களும் தங்கியிருந்தனர். இவர்களில் மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை போன்ற காட்டுப்பகுதியில் இருந்த போராளிகளுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதில் பத்மநாதன் பெரும்பங்கு வகித்தார். சகல காட்டுப்பாதைகளையும் பரிச்சயமாக கொண்ட பத்மநாதன் மகியங்கனை வீதிவரை போராளிகளை கொண்டு சேர்த்திருக்கிறார். பத்மநாதன் அண்ணன் என்றால் அப்போதையை போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒருவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த போராளிகளுக்கு உணவுப்பொருள்களை எடுத்து சென்ற போது இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன் இந்திய இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தமிழ்குழுக்களாலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் விடுதலையானார்.

விடுதலையான பத்மநாதன் 1990ம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து படுவான்கரைப் பிரதேசத்தில் செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு பல வழிகளிலும் தொடர்ந்து உதவி செய்து வந்தார். இதனால் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் அரச ஆதரவுத் தமிழ் குழுக்களாலும் பல முறை தாக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் 1991 ஏப்ரல் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் போன்ற ஆயுதக்குழுக்களும், இலுப்பையடிச்சேனையில் வைத்து பத்மநாதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். காலில் காயமடைந்த பத்மநாதனை கரடியனாறு இராணுவ முகாமுக்கு கட்டி இழுத்து சென்றனர். பின்னர் சடலத்தை கூட அவரின் குடும்பத்தினருக்கு இராணுவத்தினர் கொடுக்கவில்லை. அவரின் தேச விடுதலைப்பற்றையும் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மதித்து விடுதலைப்புலிகளின் தேசியத்தலைமை அவருக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்திருந்தது.

அவரது மூத்தமகள் ஷகிலா 1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்போராளியாக இணைந்து சித்திரா என்ற பெயரோடு ஆயுதப்போரட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1990 ஜனவரியில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி அரசியல் கட்சியின் உருவாக்கத்தை தொடந்து வாகரையில் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டது இம் மகாநாடுக்கு விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பு பிரதிநிதி சுந்தரியும் வருகை தந்திருந்தார். அங்கு வந்த அவர் பெண்கள் மத்தியில் நடத்திய பல சந்திப்புக்களை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து பல பெண்போராளிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். அந்த பெண் போராளிகளில் ஒருவர்தான் பன்குடாவெளி பத்மநாதனின் மகள் ஷகிலா என்ற சித்திரா. க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றிருந்த அவர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பிருந்த போதிலும் அதை துறந்து இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு சென்ற சித்திரா அங்கு ஆயுதப்பயிற்சி பெற்று போராட்ட களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். 1991 முற்பகுதியில் ஆனையிறவு சமரின் போது சித்திரா காயமடைந்தார். அவரது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஓரளவு குணமடைந்த சித்திரா தொடர்ந்து பல களங்களைச் சந்தித்தார்.

சித்திரா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டதையடுத்து அவரது கிராமத்தை சேர்ந்த அவரது காதலனான உருத்தியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு வன்னியில் திருமணமும் நடைபெற்றது.

இரு பிள்ளைகள் பிறந்ததை தொடர்ந்தும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்ததாலும் சித்திரா இயக்க பணிகளிலிருந்து விலகியிருந்தார். ஆனால் அவரது கணவன் உருத்தி தொடர்ந்து போராட்ட களத்திலேயே இருந்தார்.

வன்னியிலிருந்த உருத்தி 2007ஆம் ஆண்டு இயக்க பணிகளுக்காக மட்டக்களப்பு தளவாய் பகுதிக்கு அனுப்பபட்டிருந்த போது 2007ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவருக்கு விடுதலைப்புலிகளால் மேஜர் தரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தனது இரு பிள்ளைகளுடன் பன்குடாவெளியில் வாழ்ந்து வந்த சித்திராவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் வரை விடுதலைப்புலிகளால் வன்னியிலிருந்து மாவீரர் குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நிதியில் தனது இரு பிள்ளைகளையும் சித்திரா படிப்பித்துக்கொண்டிருந்தார்.

ஆனையிறவு சமரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் நீண்டகாலமாக அந்த நோவினால் பாதிக்கப்பட்டிருந்த சித்திராவுக்கு முள்ளந்தண்டில் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். அதற்காக அவளுக்கு 38ஆயிரம் ரூபா தேவைப்பட்டது. தனக்கு தெரிந்த வெளிநாடுகளில் உள்ள சிலரிடமும் உதவியை கோரியிருந்தாள். ஆனால் அந்த உதவி அவளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி (17.08.2010) தனது இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு இந்த உலகைவிட்டே சென்றுவிட்டாள். அவள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முதல் வெளிநாடு ஒன்றில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கும் போராளி ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிள்ளைகள் இரண்டும் அநாதைகளாக போய்விடப்போகிறார்கள் என கவலைப்பட்டிருந்தார்.

விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்றதெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப்போகிறது.

சித்திராவின் தந்தையும் அவரது குடும்பமும் விடுதலைப்புலி போராளிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சம் அல்ல. ஓடி ஒடி உதவி செய்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று அனாதைகளாக நடுவீதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

போராளிகளுக்கு அவரது குடும்பம் செய்த உதவிகளில் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளரும் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு வடக்கு வட்டவையின் தலைவராகவும் இருந்த சட்டத்தரணி வேணுதாஸ் 1990 யூன் மாதத்தின் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முழுநேரமாக இணைந்து பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து சென்ற வேணுதாஸின் மனைவியை இராணுவத்தினர் பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டு செங்கலடி கறுப்பு பாலத்திற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தனர்.

அதை அறிந்த பத்மநாதனும் சிலரும் அங்கு சென்று வேணுதாஸின் மனைவியின் சடலத்தை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தனர். சவ அடக்கத்தை செய்திருந்தனர். அதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வேணுதாசும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதேபோன்றுதான் வேணுதாஸின் இரு பெண் பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

வேணுதாஸின் மரணம் குறித்து மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகள் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்கவே இல்லை. தமிழ் இளைஞர் பேரவையின் மட்டக்களப்பு செயலாளரும் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட சட்டத்தரணி வேணுதாஸ் பற்றி ஈழநாதம் பத்திரிகையில் செய்தி வெளிவந்த போதுதான் அதை அறிந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வேணுதாஸிற்கு மேஜர் தரம் வழங்கி மதிப்பளித்திருந்தார். வேணுதாஸ் தனது ஆரம்பகால நண்பர் என்பதையும் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல விடுதலைப் போராளிகள் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் உதவிகளை செய்து வந்த ஒரு குடும்பம்தான் பன்குடாவெளி பத்மநாதனின் குடும்பம். தமிழ் இனத்தின் விடுதலையை அதீதமாக நேசித்ததன் காரணமாக அவரின் பேரப்பிள்ளைகளான சங்கீதா (11வயது) சங்கீத் ( 7வயது) ஆகியோர் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவரின் போராளி மகள் வெறும் மருத்துவச் செலவுக்கு 38ஆயிரம் ரூபா கிடைக்காமல் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.

யுத்தத்தின் கோரத்தின் ஒரு துளிதான் சித்திராவின் கதை. சித்திராவைப்போல ஆயிரம் ஆயிரம் போராளிகளும், போராளிகளின் இழப்பினால் அனாதைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளும் மட்டக்களப்பு வன்னி என தமிழர் தேசம் எங்கும் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களின் அழுகுரல்களை மட்டும் இந்த சமூகம் கேட்கமறுக்கிறது.

மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. கேட்டாலும் அதைப்பற்றி இரங்குவதற்கு அவர்களுக்கு மனங்களும் இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் அழுகுரல்களின் ஊடாக அவலங்களின் ஊடாக மரணங்களின் ஊடாக தமது சொகுசு வாழ்க்கையை அமைப்பதுதான்

இந்த வீராப்பு பேசுபவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழ் இனமும் அழிந்து போகவேண்டும் என்பதுதான்.

இப்போது தமிழ் இனம் வேண்டிநிற்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதுதான். இனவிடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய அந்த தாயினதும் தந்தையினதும் ஆத்மாக்கள் வேண்டுதெல்லாம் தங்களின் குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள் என்பதுதான். அனாதைகளாக்கப்பட்ட சித்திராவின் இரு பிள்ளைகளைப்போல கண்ணீருடன் எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் பிஞ்சுகளுக்கு யார் உதவ முன்வருவார்?

thurair@hotmail.com

Edited by Bond007

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் .. வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கினால் அது போய் சேராதா? அல்லது தமிழ் நாட்டில் இருந்து உதவி பொருட்களை நேரடியாக வன்னியில் இறக்கினால் வன்னி மக்களுக்கு அது செரிக்காதா? அதென்ன கே.பி மூலமாகத்தான் வழங்கவேண்டுமா? இலங்கை அரசு.. கேபி மூலம் வரும் காசில் .... சைடு கேப்பில் ஆட்டோ ஒட்டாதா?

டிஸ்கி:

கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து "கோ ஆப் டெக்ஸ்" மூலமாக வழங்க பட்ட உடைகள் பல கொழும்பு வீதிகளில் விற்கபட்டது என புலிகளின் குரல் இறைவன் கூறியதை கேட்டேன்... முதலில் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் ... தமிழ்நாட்டுக்கும் உதவி செய்யும் களத்தினை நேரடியாக திறந்துவிடவேண்டும்.. மற்றதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்... :rolleyes:

டிஸ்கிக்கு டிஸ்கி:

நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமல் அடுத்த மாநிலத்திற்கு செக் போஸ்டுக்கு அருகில் கண்விழித்து எவன் எப்ப போறான் என கேப்பில் லாரி நிறைய அரிசி கடத்தும் கோஸ்டியையும் கண்டுள்ளேன்... இதெல்லாம்... முடக்கி... இலவசமாக என்றாலும்( என்ன 1 ரூபாய் அரிசிதான் கொடுப்பார்கள்) புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவி என்றாலும்(சூப்பர் பொன்னி ... டீலக்ஸ் பொன்னி) ஈழத்தினை நோக்கி திருப்பலாம்... வேறுமாநில கைத்தடிகள் உண்டு கொழுத்து முதுகில் குத்துவதை விட... இவ்வாறு ஆக்கபூர்வமாக ....உறவுகளுக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியெ.. :D:lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கேபியின் மிகப்பெரிய தூண்/வலதுகரம் சுவுஸுக்கு பொறுப்பாகவிருந்த முரளி!! அன்னார் பெண் பிரட்சனை, காசுப்பிரட்சனை, சண்டித்தனம் எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறந்தவர்! கனடாவுக்கு எஸ்கேப் ஆக முன்னுக்கு பல கோடிக்கள் மிஸ்ஸிங்காம்! ... இன்னும் பல வலது/இடதுகளை பற்றி தேவையா??? ... எல்லாம் சாக்கடைகள்!!!

முரளி மீது பெண் குற்றமும் சேகரித்த காசை நீண்டகாலமாக சுவிஸில் வைத்து இருந்தது தான் முக்கிய குற்றம்( சுவிஸில் முரளி இருந்த காலத்தில் சுவிஸ் பொலிஸால் காரியாலிஅயம் அனைத்தும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தது அப்போது சுவிஸில் புலிகளுக்கு சேரும் காசின் தொகை வெளீயே வந்த்து ஆனால் மீண்டும் அனைத்தும் திருபி கொடுக்கப்பட்டது)

முரளி அண்ணை காசு அடிச்சார் என்பது சரியாக தெரியாது ஆனால் பெண்கள் விடையத்தில் பெயர் அடிபட்டது என்று தெரியும் அதையும் அவர் ஏற்று வன்னி கூட்டி சென்று வந்தார்கள் என்று கேள்வி ஆதாவது சுவிஸில் வீட்டுகாவலில் வைத்து பரிஸ் கூட்டி வந்து கப்பலில் போய் பிறகு தான் அவர் தனியே கனடாவுக்கு சென்றார் மனைவி பிள்ளைகளை முதலே சுவிஸ்ல் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

முரளி மீது பெண் குற்றமும் சேகரித்த காசை நீண்டகாலமாக சுவிஸில் வைத்து இருந்தது தான் முக்கிய குற்றம்( சுவிஸில் முரளி இருந்த காலத்தில் சுவிஸ் பொலிஸால் காரியாலிஅயம் அனைத்தும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தது அப்போது சுவிஸில் புலிகளுக்கு சேரும் காசின் தொகை வெளீயே வந்த்து ஆனால் மீண்டும் அனைத்தும் திருபி கொடுக்கப்பட்டது)

முரளி அண்ணை காசு அடிச்சார் என்பது சரியாக தெரியாது ஆனால் பெண்கள் விடையத்தில் பெயர் அடிபட்டது என்று தெரியும் அதையும் அவர் ஏற்று வன்னி கூட்டி சென்று வந்தார்கள் என்று கேள்வி ஆதாவது சுவிஸில் வீட்டுகாவலில் வைத்து பரிஸ் கூட்டி வந்து கப்பலில் போய் பிறகு தான் அவர் தனியே கனடாவுக்கு சென்றார் மனைவி பிள்ளைகளை முதலே சுவிஸ்ல் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த முரளி என்பவர் விட்ட அத்தனை சேட்டைகளும் கேபிக்கு தெரிந்தே இருந்தது!! இவருக்கு பெண் பித்தம் தலைக்கேறி ஓடித்திரிகையிலும் ஒருவரும் ஏன் என்று கேட்கவில்லை!! இவர் பொலிஸில் அகப்பட்டதின் பின்புதான்(புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் யாராவது பொலிஸில் மட்டுப்பட்டால், அதன் பிறகு தலைமை அவர்களை நம்பாதாம், ஏனென்றால் இவர்கள் அவர்களீன் வலையில் சில சமயம் வீழ்ந்து இருந்தாலும் ... என்ற பயம்), முரளி ஓடத்திட்டமிட்டாராம்! அவர் நாட்டுக்கும் போகவில்லை/வீட்டுக்கும் போகவில்லை!!! இவரின் கனடா ஓட்டத்துக்கு ஒழுங்கு செய்தது கேபிதான்!!! இவர் ஓடும்போது சுற்றிக்கொண்டோடியது மட்டுமல்ல இவரின் சில வாலுகளும் அகப்பட்டதுகளை சுருட்டியதாம்!!!

இவரின் குணாதிசயங்களை ஒத்தவர்தான் கேபியும்!!! ....

***

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள், இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள் யார் என்பதை, தமிழின விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதை, இத்தகைய தலைப்புக்களை இணைப்பவர்கள் - இத்தகைய தலைப்புக்களுக்கு ஆதரவாக ஊளையிட்டுக் கொண்டிருக்கும் விசக் கிருமிகள் எது என்பதை உலகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.

இந்த எலும்புத் துண்டு நக்கிகள் தமிழினப் படுகொலையாளர்களை விட்டால் தமக்கு வேறு கதியில்லை என்று பொய் செய்திகளை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்தக் கைகூலிகள் அவிழ்த்துவிடும் பொய்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர் நம்பப் போவதில்லை.

சிங்கள பயங்கரவாதியின் காலடியில் ஒடுங்கிக் கிடக்கும் KP என்னும் ஒட்டுண்ணியின் பெயரில் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகள், காஸ்ட்ரோ குழுக்களை கற்பனையில் உருவாக்கி KP என்னும் ஒட்டுண்ணியின் அடிவருடிகளால் கட்டிவிட்ட பொய்கள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருகின்றன.

செல்லா காசாக மாறிக் கொண்டிருக்கும் KP என்னும் ஒட்டுண்ணியின் வால்கள் முகவரியற்று காணாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சிங்கள பௌத்த தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள், இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள் யார் என்பதை, தமிழின விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதை, இத்தகைய தலைப்புக்களை இணைப்பவர்கள் - இத்தகைய தலைப்புக்களுக்கு ஆதரவாக ஊளையிட்டுக் கொண்டிருக்கும் விசக் கிருமிகள் எது என்பதை உலகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.

இந்த எலும்புத் துண்டு நக்கிகள் தமிழினப் படுகொலையாளர்களை விட்டால் தமக்கு வேறு கதியில்லை என்று பொய் செய்திகளை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்தக் கைகூலிகள் அவிழ்த்துவிடும் பொய்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர் நம்பப் போவதில்லை.

சிங்கள பயங்கரவாதியின் காலடியில் ஒடுங்கிக் கிடக்கும் KP என்னும் ஒட்டுண்ணியின் பெயரில் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகள், காஸ்ட்ரோ குழுக்களை கற்பனையில் உருவாக்கி KP என்னும் ஒட்டுண்ணியின் அடிவருடிகளால் கட்டிவிட்ட பொய்கள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருகின்றன.

செல்லா காசாக மாறிக் கொண்டிருக்கும் KP என்னும் ஒட்டுண்ணியின் வால்கள் முகவரியற்று காணாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Boo.gif

Boo.gif

இந்திய, சிங்கள தமிழினப் படுகொலையாளர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை நக்கியபடி, தமிழின அழிப்புக்குத் துணை போட்ட கூட்டத்தினர் தமது சுயரூபத்தை மேலும் மறைக்க முடியாமல் இங்கே வெளிப்படுத்தியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள், இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள் யார் என்பதை, தமிழின விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதை, இத்தகைய தலைப்புக்களை இணைப்பவர்கள் - இத்தகைய தலைப்புக்களுக்கு ஆதரவாக ஊளையிட்டுக் கொண்டிருக்கும் விசக் கிருமிகள் எது என்பதை உலகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.

இந்த செய்தி தமிழகம் நோக்கி வந்ததால் இணைத்தேன் தோழரே .... மற்றபடி வெளிநாட்டில் இருந்து ஊளையிட்டு எதுவும் ஆகபோவதில்லை நண்பரே... துணிவோடு மீண்டும் அறிவியல் பலத்தோடு .... தமது தாயகத்திற்கு செல்ல ஈழத்தோழர்கள் தயாராக் இருக்க வேண்டும்... உம்ம...... யாழ்களத்தில் கண்டனம் தெரிவித்து டைப்படிப்பதால் ஈ... காக்கா கூட சீண்டாது ... ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மையிலும் உண்மை....சிங்களவனை சுளுக்கெடுக்கவேணும்... :rolleyes:

டிஸ்கி:

ஒருவர் உதிர்க்கின்ற வாய்சொல்/கண்டனங்களின் மதிப்பு அவர்கள் அந்த தேசியத்தில் வகிக்கின்ற பதவிகளாலே கருத்தில் கொள்ளபடும்...

ஏன் நானும் இங்கு கண்டனம் தெரிவிக்கிறேன்... எந்த பேப்பர் காரன் போடுவான்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.