Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply

செவ்வாய்க் கிரகத்துக்கு புதிய விண்கலம்

_40683896_probe_nasa_203.jpg

புதிய விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்பும் தனது புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.

மார்ஸ் ஒபிர்ட்டர் என்னும் புதிய விண்கலம் புளோரிடா மாநிலத்தின் கனவரல் என்னும் இடத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த வார ஆரம்பத்தில் இந்த விண்கலத்தை ஏவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொழில்நுட்பக் காரணங்களுக்காக கைவிடப்பட்டன.

செவ்வாய்க் கிரகத்தை அளந்து, அதன் சுற்றாடலையும் மற்றும் சுவாத்தியத்தையும் ஆராய இந்த விண்கலம் நான்கு வருடங்களைச் செலவிடும்.

BBC தமிழ்

என்ன மதன்,? தமிழன் ஆடி மாதத்தில் சாப்பிடுறதை தவிர வேற ஒன்றும் செய்யமாட்டான் என்கின்றான், இவன் என்னன்ட விண்கலத்தை தரையிறக்கியதும் ஆடி மாதம், விண்ணுக்கு அனுப்பியதும் ஆடி மாதத்தில் இவங்கள் முன்னெற மாட்டார்கள்! :evil:

விண்வெளியில் மிதந்த சாதனங்களை மையத்துக்கு கொண்டு சேர்த்தனர்

20Space.jpg

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

கேப் கனவெரால், ஆக. 20: சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே மிதந்த பல்வேறு சாதனங்களை, மீண்டும் ஆராய்ச்சி மையத்துக்குக் கொண்டு சேர்த்தனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 350 கி.மீ. உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரு விஞ்ஞானிகள் நிரந்தரமாக தங்கி, ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். செர்ஜி கிரிகலேவ், ஜான் பிலிப்ஸ் ஆகியோர் அந்த விஞ்ஞானிகள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்தனர். மையத்தின் வெளியே, விண்வெளியில் மிதந்தவாறு இருந்த பல்வேறு சாதனங்களை மீண்டும் மையத்துக்குள் கொண்டு சேர்த்தனர். நீண்ட காலமாக இவை விண்வெளியில் மிதந்து வந்தன.

டிஸ்கவரி விண்கலம் புறப்பட்ட சில நாள்களுக்குள் இவர்கள் "விண் நடை' மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிருந்தே பணி!

இவர்கள் விண்வெளி மையத்தில் இல்லாத நேரத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டனிலும் ரஷியாவின் மாஸ்கோவிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பணிகளைக் கவனித்தனர்.

விண்வெளி பொம்மை

செர்ஜி, ஜானின் விண்நடையின் முக்கிய நோக்கம், "மாட்ரியோஷ்கா' என்ற கதிரியக்கத்தை அளவிடும் பொம்மையை எடுத்து வருவதுதான்!

மென்மையான பொருள்களால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே கடந்த ஆண்டு வைக்கப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கும் பல்வேறு முக்கியத் தகவல்களை வைத்து, நிலாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸô திட்டமிட்டு உள்ளது.

ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக, இதைச் சுற்றியிருந்த உறையை விஞ்ஞானிகள் பிரித்தனர். அதை விண்வெளியில் தூக்கி எறிந்தனர். மேலும் சாதனங்களைத் தூய்மைப்படுத்த பயன்படுத்திய துணிகளையும் தூக்கி எறிந்தனர்.

மேலும் ஒரு டிவி காமிராவை பொருத்தினர். அடுத்த ஆண்டில், விண்வெளி ஓடம் வரும்போது இது பயன்படுத்தப்படும்.

பல்வேறு சாதனங்கள் மீண்டும் ஆய்வு மையத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதால், அவற்றை மீண்டும் பூமிக்கு எடுத்து வர விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி

தகவலுக்கு நன்றியண்ணா

1708vdp1.jpg

விண்வெளிக்குச் சென்று திரும்பிய நாசாவின் டிஸ்கவரி விண்கலம் திட்டமிட்டபடி புளோரிடா மாநிலத்தில் தரையிறங்க முடியாததால் கலிபோர்னியாவில் இறக்கப்பட்டது. அவ்விண்கலம் நேற்று முன்தினம் போயிங்747ரக விமானமொன்றின் மூலம் புளோரிடாவிற்கு கொண்டுசெல்லப்படுவதைக் காணலாம்.

-Veerakesari

தகவலுக்கு நன்றிகள்

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா..

  • 2 weeks later...

pia06254s7et.jpg

சனிக்கிரகத்தையும் அதன் துணைக்கோள்களையும் ஆய்வு செய்து வரும் Cassini விண்வெளி ஓடம், சனியின் துணைக்கோள்களில் ஒன்றான Enceladus தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டியுள்ளது.

Enceladus ல் காணப்படும் "tiger stripes" என்று அழைக்கப்படும், புலித் தோலில் காணப்படும் வரிகள் போன்ற பகுதி, சுமார் 10 முதல் 1000 வருடங்களுக்குள் உருவாகிய பிளவுகள் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இப்படியான புவியியல் நிலை மாற்றங்கள், 10 வருடங்களுக்குள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி நம்பிக்கை தெரிவிக்கும் நாசா, Enceladus ன் தென் பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறான புவியியல் இயல்புகள் நடைமுறையில் இருந்துவருவதாகவும் தெரிவிக்கிறது.

இப்பிளவுகளிலிருந்து, குளிர் நீர் போன்ற திரவம் வெளியேறி, அவை பனிக்கட்டிகளாக உருவெடுக்கின்றன.

இவ்வாறான செயற்பாடு, Enceladus ன் தென்பகுதியில் அமைந்திருக்கும் "tiger stripes" பகுதியில் காணப்படுவதாக அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.

pia03551th2004ic.jpg

கீழ் காணும் இணைப்பில் Flash Animation காணப்படுகிறது.

http://www.esa.int/SPECIALS/Cassini-Huygen...VTX808BE_1.html

தகவலுக்கு நன்றி ரசிகை

பூமியிலிருந்து 100 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில், இரு நட்சத்திரக்கூட்டங்கள் மோதுண்ட காட்டியொன்றை கடந்த மாதம், ஹவாயிலிருந்து இயங்கும் Gemini North தொலைகாட்டி படம் பிடித்துள்ளது.

fig12kb.jpg

நட்சத்திரங்களின் வாழ்நாட்கள் முடிவுறும் போது, இவ்வகையான மோதல்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஐந்து பி்ல்லியன் ஆண்டுகளின் பின், பூமியும் இவ்வாறான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளை ஆள் அடிச்சுக்குதுகளா...ஏன்பா..

இந்த ஒரு விசயத்தில தான் நட்சத்திரங்களுக்கும் மனிசருக்கும் ஒற்றுமை இருக்கு...

அக்கா ஒரு கேள்வி..ஒளியாண்டுகள் எண்டா என்ன?

அதாவது ஒரு ஆண்டில் ஒளி செல்லும் தூரம்

1 ஓளியாண்டு = 9.4605284 * 10^15 மீற்றர் :roll:

ரசிகை

தற்போது சயன்ஸில் உள்ள மிகக்கடினமான பகுதிகளில் ஒன்று தான் கொஸ்மோலொஜி. கணிதவியலின் பிரயோகங்கள் தடுமாறுவதும் அங்கேதான். இதனை சுவைபட வாசிக்க :

Parker, Barry.

Albert Einstein's vision : remarkable discoveries that shaped modern science, 2004

ரசிகை

தற்போது சயன்ஸில் உள்ள மிகக்கடினமான பகுதிகளில் ஒன்று தான் கொஸ்மோலொஜி. கணிதவியலின் பிரயோகங்கள் தடுமாறுவதும் அங்கேதான். இதனை சுவைபட வாசிக்க :

Parker, Barry.

Albert Einstein's vision : remarkable discoveries that shaped modern science, 2004

ஓ தகவலுக்கு நன்றிகள் ஈழத்திருமகன்

mgsmons4ms.jpg

செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் Mars Global Surveyor தற்காலிகமாக விஞ்ஞான உபகரணங்களின் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால பிபிசி இணையச் செய்திக்குறிப்பொன்றைக் காணக்கிடைத்தது.

எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்களை நாசா நான் இதை எழுதும் வரை வெளியிட்டிருக்கவில்லை.

767 கிலோ கிராம் எடையுடைய Mars Global Surveyor ல் High-resolution camera, thermal emission spectrometer, laser altimeter, magnetometer/electron reflectometer, ultra-stable oscillator, radio relay system போன்ற விஞ்ஞான உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தானியங்கி இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு பழுது இதற்கான காரணமாக அமையலாம் என்று அறியமுடிகிறது.

இந்நிலையில் விஞ்ஞான உபகரணங்கள் யாவும் Safe Mode என்று குறிப்பிடப்படும் இயக்கமற்ற நிலையில் காணப்படும்.

எனினும், பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் இயங்கும்.

இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமைக்குத் திரும்புவது நாசாவின் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

1999ம் அளவில் தோல்வியில் முடிந்த நாசாவின் செவ்வாய்க்கான ஆய்வு முயற்சியில், காணாமல் போன உபகரணஙகள் அல்லது அவற்றின் பாகங்கள் சிதறிக் காணப்படலாம் என்று நம்பப்படும் ஒரு பிரதேசத்திற்கு மேலாக Mars Global Surveyor பறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தவேளையில் பெறப்படும் படங்கள்,தகவல்கள் 2007ம் ஆண்டு அனுப்பப்படவிருக்கும் ஆய்வு இயந்திரங்களை வடிவமைப்பதிலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமையான நிலைக்கு திரும்பும் என்று அதன் கட்டுப்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

BBC

தகவலுக்கு நன்றிகள்

தகவலுக்கு நன்றி ரசிகை அக்கா..

  • தொடங்கியவர்

_40770132_mars_nasa203x203.jpg

செவ்வாயின் வடமுனைவுப் பகுதியில் தற்போதும் உயிர்ப்பான தொழிற்பாட்டைக் காண்பிக்கத்தக்கது என்று கருதத்தக்க எரிமலையின் கூம்பு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக.. Europe's Mars Express probe அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெருவிக்கின்றன...! அதுமட்டுமன்றி செய்வாய்க் கிரகமானது ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று மில்லியன் ஆண்டுகள் முன் வரை...தொழிற்படு கிரகமாகவே இருந்துள்ளது என்றும் அதன் தொழிற்பாடுகள் தற்போதும் சில பகுதிகளில் அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது..!

தகவல் ஆதாரத்துக்கு - http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4219858.stm

சனிக்கிரகத்தின் ரகசியம்

20041223030058saturn203.jpg

சனிக்கிரக வளையங்கள்

கிரகங்களிலேயே சனிக்கிரகத்தில் தான், மேலதிக பருவநிலை மாற்றங்கள் நடக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சனிக்கிரகம் நோக்கிச் சென்றிருக்கும் அமெரிக்காவின் கஸ்ஸினி விண்கலம், அங்கிருந்து எடுத்து அனுப்பிய புகைப்படங்களை வைத்தே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.

சனிக்கிரகத்தின் வளையங்கள் பிரமாதமானவை.

ஆனால், அவற்றைத் தாண்டி சனிக்கிரகத்தில் என்ன நடக்கிறது என்று ஊடுருவிப் பார்க்க முடியாதவாறு ஒரு புகைமண்டலம் கவிந்திருக்கிறது.

இப்போது அந்தப் புகைப்படங்களில் இருந்து என்ன தெரிகிறது? சனிக்கிரகத்தில் பெரும் மேகக்கூட்டங்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன, அவற்றில் தண்ணீரும் இருக்கலாம், மழையும் பொழியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இன்னும் சில மாதங்களில், கஸ்ஸினி விண்கலம், சனிக்கிரகத்தைக் கண்காணித்து மேலும் சில புகைப்படங்களை எடுத்து அனுப்ப இருக்கிறது. அவற்றை வைத்து சனிக்கிரகத்தின் பருவநிலை மாற்றங்கள் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

BBC

தகவலுக்கு நன்றிகள்

நன்றி

நன்றிக:ள் தகவலுக்கு

133279maingammabursttrentstill.jpg

பிரபஞ்சத்தில்,அறியப்படாத தொலை தூரம் ஒன்றில் ஏற்பட்ட விண்வெளி வெடிப்பொன்று பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்டிகள், உபகரணஙகளைக்கொண்டு மனிதர்களால் பார்வையிடக்கூடிய, பிரபஞ்ச எல்லையைத் தாண்டிய பிரதேசம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பொன்றினை Swift தொலை காட்டி, செப்டம்பர் 4ம் திகதி பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில், விண்வெளியில் மிகத் தொலைவில் இடம் பெற்ற சம்பவம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தினை இச் சம்பவம் பெற்றுக்கொள்கிறது.

swift1mx.jpg

சர்வதேச நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்புடன், இவ்வாறான விண்வெளி நிகழ்வுகளைப் பதிவு செய்தவதற்காகவே இயங்கும் Swift, இதையும் விட தூரத்தில் நிகழும் சம்பவங்களையும் அவதானிக்கக்கூடியது என்று அறிய முடிகிறது.

தொலை தூரத்தில் ஏற்படும் இவ்வாறான வெடிப்புகளை gamma-ray வெடிப்புகள் என்று விஞ்ஞானம் பெயரிடுகிறது.

இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதற்கான, சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வாறான வெடிப்புகள் இரண்டு பாரிய நட்சத்திரங்களின் மோதல்களா ? அல்லது black hole என்று அறியப்படும் சூனியப்பிரதேசங்களின் தோற்றமா ? அல்லது விண்ணில் ஏதோ சில காரணங்களினால் ஏற்படும் வெடிப்புகளா என்பது பற்றியான தெளிவான விளக்கங்கள் இல்லை.

எனினும், இவை கோள்களின் தோற்றங்களுக்கு முன்னதாக ஏற்பட்டதாகக் கருதப்படும் Big Bang போன்ற பாரிய வெடிப்புகளாகவே இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

பிரபஞ்சத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு நாளைக்கு ஒரு தடவை நிகழ்வதாகவும், இவை மில்லி செக்கன்களுக்குள் அல்லது சில நூறு செக்கன்களுக்குள் மறைந்துவிடக்கூடியவை என்றும் இது பற்றி மேலும் ஆராய்ந்த போது, தகவல்கள் தெரிவிக்கின்றன, இவை தொடர்பான சில தகவல்கள் ஏற்கனவே நிலா முற்றத்தில் பதியப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சம்பவங்களை அவதானித்ததும், பூமியிலிருந்தும், விண்வெளியிலிருந்தும் செயற்படக்கூடிய அனைத்து தொலைக்காட்டிகள்,கட்டுப்பாட

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

_40818838_moon2_nasa_203.jpg

சந்திரனில் தரை இறங்கவுள்ள இறங்குகலம் - லாண்டிங் கிராவ் - lander craft

மீண்டும் 2020 வாக்கில் நாசா நான்கு விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துக்கள்ளது..! அப்பலோ (Apollo) வழியில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இது செயற்படுத்தப்படவுள்ளதாம்..!

_40819248_new_spaceship2_416.gif

(1) A heavy-lift rocket blasts off from Earth carrying a lunar lander and a "departure stage"

(2) Several days later, astronauts launch on a separate rocket system with their Crew Exploration Vehicle (CEV)

(3) The CEV docks with the lander and departure stage in Earth orbit and then heads to the Moon

(4) Having done its job of boosting the CEV and lunar lander on their way, the departure stage is jettisoned

(5) At the Moon, the astronauts leave their CEV and enter the lander for the trip to the lunar surface

(6) After exploring the lunar landscape for seven days, the crew blasts off in a portion of the lander

(7) In Moon orbit, they re-join the waiting robot-minded CEV and begin the journey back to Earth

(8) On the way, the service component of the CEV is jettisoned. This leaves just the crew capsule to enter the atmosphere

(9) A heatshield protects the capsule; parachutes bring it down on dry land, probably in California

சந்திரனுக்கு செல்வதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள பயணப்பாதையும்..பயன்படுத்தப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.