Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

_44689104_soil_nasa_226.jpg

பீனிக்ஸ் அனுப்பிய செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய காட்சி. (பீனிக்ஸ் தரையிறங்கிய பகுதியை அண்டிய பகுதிகளில் ஒரு சிறிய பகுதி இதில் காண்பிக்கப்படுகின்றது.)

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமான Phoenix lander (பீனிக்ஸ் லாண்டர்) சுருக்கமாக பீனிக்ஸ் என்று அழைக்கப்படும் செவ்வாயில் உயிரினங்களின் பெறுதிகள் மற்றும் நீர் இருப்புக்கான சான்றுகளைத் தேடச் சென்றுள்ள ஆய்வுக்கலம், செவ்வாயின் மேற்பரப்பில் நாசா விஞ்ஞானிகள் நிச்சயத்தபடி வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

விண்வெளியில் இருந்து செவ்வாயின் அடர்ந்த காற்றுமண்டலத்தினுள் சுமார் 21,000 கிலோமீற்றர்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் பிரவேசித்த இக்கலம் குடைவிரிப்பான் (பரசூட்)உதவியுடன் தன் வேகத்தை ஒரு மனிதனின் அவசர நடைக்குரிய வேகத்துக்குக் குறைத்துக் கொண்டு இறுதியில் அதன் 3 கால்களையும் சரியான முறையில் செவ்வாயின் தரை மீது பதித்துக் கொண்டுள்ளது.

தரையிறங்கிய Phoenix ஆய்வுக்கலம் அனுப்பியுள்ள படங்களினை ஆதாரமாகக் கொண்டு பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை அது அனுப்பியுள்ள படங்களில் செவ்வாயின் மேற்பரப்புப் பாறைகள் மற்றும் கூறுகள் பற்றிய படங்களும்; Phoenix கலத்தின் சூரியக் கலத்தட்டுக்கள் சரியான வகையில் விரிந்திருக்கும் படங்களும்; கலத்தின் மூன்று கால்களில் ஒன்று சரிவர செவ்வாய் மேற்பரப்பில் பதிந்து நிற்கும் காட்சிகளும் பிரமிக்க வைப்பனவாக அமைந்துள்ளன.

Phoenix இன் இந்த வெற்றிகர தரையிறக்கத்தை நாசா விஞ்ஞானிகள் அக்கலம் தரையிறங்கித் தகவல்களை அனுப்பத் தொடங்கியதும்.. கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Phoenix ஆய்வுக்கலம் ஓரிடத்திலேயே தொடர்ந்து தரித்து நின்று ஆய்வுகளைச் செய்யக் கூடிய தன்மை உடையது. இது இடம்விட்டு இடம் நகரும் ஆற்றல் அற்றது. இதற்கு முன்னர் 2004 இல் நாசா அனுப்பிய இரண்டு ரோவர்களான ஸ்பிரிட் மற்றும் ஒப்பசுனிற்றி ரோவர்கள் நகரும் தன்மை உடையன. ஆனால் அவற்றால் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைத் திரட்டி பகுப்பாய்வுகளைச் செய்யும் திறன் அதிகம் இருக்கவில்லை. ஆனால் Phoenix அது தன்னுடன் கொண்டுள்ள தன்னியக்க பொறியில் இயங்கவல்ல கையைக் கொண்டு மாதிரிகளைத் திரட்டி, ஏலவே அதில் பொருத்தப்பட்டுள்ள பெளதீக மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு உபகரணங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வுகளைச் செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும் வல்லமை கொண்டது மட்டுமன்றி நின்ற இடத்தில் இருந்து கொண்டு சுற்றயலைப் படம் பிடிக்கும் மற்றும் சூழலின் தன்மைகளை பெளதீக ரீதியில் உணரும் திறனும் அதற்கு உண்டு. அதற்கேற்ற வகையில் அதில் பல விஞ்ஞான பகுப்பாய்வு உபகரணங்களுடன் உணரிகளும் படப்பிடிப்புக் கருவிகளும் (கமராக்களும், இமேஜர்களும்) பொருத்தப்பட்டுள்ளன.

Phoenix அனுப்பிய செவ்வாயின் மேற்பரப்புப் பற்றிய படங்களையே நாசா தற்போது ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகிறது. அடுத்து வரும் சில தினங்களில் Phoenix தனது பகுப்பாய்வுச் செயற்பாட்டையும் வெற்றிகரமாக செய்ய ஆரம்பித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சுமார் 50% கலங்கள் வெற்றிகரமாக தரையிறங்கத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாசாவினால் செவ்வாய் நோக்கி அனுப்பப்பட்டு தோல்வியில் முடிந்த கலங்களின் சாம்பலில் இருந்து உருவானது என்பதை நினைவு கூறவே இக்கலத்துக்கு பீனிக்ஸ் (Phoenix) என்று பெயரிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கு பூமியில் இருந்து மனிதன் உருவாக்கிய செயற்கைக் கலத்தை அனுப்பிய முதலாவது நாடு ரஷ்சியா ஆகும். அந்த நாடு 1960 ம் ஆண்டு தனது முதற்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. விண்ணியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை.. சரித்திரத்தை ஆரம்பித்து வைத்து மனித குலத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் ரஷ்சியர்கள் என்றால் அது மிகையல்ல.

மேலும் படங்கள் மற்றும் மூல ஆக்கத்துக்கு: http://kuruvikal.blogspot.com/

  • Replies 419
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாஷிங்டன்: கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் தரையிறங்கியுள்ளது அமெரிக்கா அனுப்பிய அதி நவீன விண்கலமான பீனிக்ஸ். தனது முதல் புகைப்படங்களையும் அது அனுப்பி வைத்துள்ளது.

பூமியைத் தாண்டி செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழும் சூழ்நிலை இருப்பதாக நம்பப்படுகிறது. அங்கு தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரக ஆய்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில்தான் பெருமளவில் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வட துருவத்தில் முழுமையான ஆய்வை நடத்த பீனிக்ஸ் என்கிற அதி நவீன விண்கலத்தை நாசா வடிவமைத்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பீனிக்ஸ் செவ்வாய் பயணத்தைத் தொடங்கியது. கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பின்னர், 422 மில்லியன் மைல்களைக் கடந்த செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் நேற்று பீனிக்ஸ் வெற்றிகரமாக தரையிறங்கியது.

mars.jpg

mars_sonde_DW_Wisse_338061g.jpg

Phoenix2_BM_Berlin__309697g.jpg

Phoenix6_BM_Berlin__309751g.jpg

செவ்வாய் கிரகம் பத்திரமாக தரையிறங்கியதும், பாசதீனா நகரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆரவாரத்துடன் கைகளைத் தட்டி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்ட பிரசுன் தேசாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுதான் பீனிக்ஸ் தரையிறங்குவதை கண்காணித்து வந்த குழு என்பது குறிப்பிடத்தக்கது.

10 மாதமாக பீனிக்ஸ் பயணம் செய்ததை விட அது தரையிறங்க எடுத்துக் கொண்ட 7 நிமிடங்கள்தான் நாசா விஞ்ஞானிகளை பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் வெற்றிகரமாக பீனிக்ஸ் தரையிறங்கியதால் அனைவரும் பெரும் நிம்மதியடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு 12,000 மைல் வேகத்தில், பீனிக்ஸ் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

mars1.jpg

செவ்வாயில் தரையிறங்கியுள்ள பீனிக்ஸ் விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

அது அனுப்பியுள்ள முதல் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. விண்கலத்தின் இரு பகுதிகளின் படங்கள் மற்றும் பரந்து விரிந்து கிடக்கும் செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பு ஆகியவற்றை பீனிக்ஸ் படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

பீனிக்ஸ், செவ்வாயில் 3 மாதங்களுக்கு தங்கியிருக்கும். அங்கு உறைந்த நிலையில் உள்ள தண்ணீர் எப்போதாவது உருகியிருக்கிறதா என்பது குறித்தும், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற வாய்ப்புகள் செவ்வாயில் உள்ளதா என்பது குறித்து பீனிக்ஸ் முக்கியமாக ஆராய உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பிரசுன் தேசாய் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏராளமான தாதுக்கள் இருப்பதாக கருதுகிறோம். அதுகுறித்து இந்த முறை விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற நேரடி வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அதேசமயம், அதற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்புகிறோம் என்றார் தேசாய்.

பீனிக்ஸ் அனுப்பப் போகும் படங்கள், கொடுக்கப் போகும் தகவல்களை நாசா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்

தற்ஸ்தமிழ்.கொம்

படங்கள். thatstamil மற்றும் welt.de

Posted

செவ்வாய் கிரகத்தில் இறங்கும் `பறவை'

[27 - May - 2008] என்.ராமதுரை

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து 9 மாதங்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட விண்கலம் சுமார் 42 கோடி கிலோ மீற்றர் பயணத்துக்குப் பிறகு இந்திய நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) பகலில் செவ்வாய் கிரகத்தில் இறங்கப் போகிறது. இது ஆளில்லா விண்கலமாகும்.

கிரேக்க புராணத்தில் வரும் `பீனிக்ஸ்' என்னும் பறவையின் பெயர் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்துக்குப் பறவையின் பெயர் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதன் வடிவத்துக்கும் பறவையின் உருவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப் போனால் பீனிக்ஸ் விண்கலத்தின் வடிவம் ஹோட்டல்களில் காணப்படும் வட்டமான மேசை போல உள்ளது. உயரம் சுமார் ஒன்றரை மீற்றர், எடை 350 கிலோ.

இந்த விண்கலத்தில் பல பரிசோதனைகளுக்கான கருவிகள் உண்டு. முக்கியமாக மண்ணைத் தோண்டுவதற்கென சுமார் இரண்டரை மீற்றர் நீளத்துக்கு வலுவான கரம் உள்ளது.

பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய பின்னர் இந்தக் கரத்தைப் பயன்படுத்தி சுமார் 2 அடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டி அங்கு மண்ணுக்கு அடியில் ஐஸ் கட்டி இருக்கிறதா என்று ஆராயப்போகிறது. எதற்கு இந்தப் பரிசோதனை?

செவ்வாய் கிரகத்தில் பரவலாக மண்ணுக்கு அடியில் நிறைய ஐஸ் கடடி இருக்குமானால் அதை உருக்கி நீரைப் பெற முடியும். நீரைப் பெற முடியும் என்றால் அந்த நீரை ஆக்சிஜன் வாயுவாகவும் ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்துக் கொள்ள இயலும். இந்த வாயுக்களைப் பின்னர் ராக்கெட் இயக்கத்துக்கான எரிபொருளாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

இன்னும் சுமார் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப உத்தேசம் உள்ளது. ஆகவே செவ்வாயில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகத் தெரியவருமானால் அது செவ்வாயில் மனிதன் தங்கி இருப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் செவ்வாயில் எண்ணற்ற கால்வாய்கள் இருப்பதாக பெர்சிவல் லோவல் (1855 - 1916) என்ற அமெரிக்க விஞ்ஞானி 1895 இல் அடித்துக் கூறினார்.

வானவியலில் ஆர்வம் கொண்ட அவர் சொந்தச் செலவில் வான் ஆராய்ச்சிக் கூடம் அமைத்து டெலஸ்கோப் மூலம் செவ்வாய் கிரகத்தை விரிவாக ஆராய்ந்தார்.

செவ்வாய் கிரக வாசிகள் பொறியியலில் நம்மை விட மிக முன்னேறிய நிலையில் உள்ளதாகவும் செவ்வாயின் கால்வாய்கள் இதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

லோவலின் இக் கருத்துகளுக்கு அப்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், லோவலை தப்பு சொல்ல முடியாது. டெலஸ்கோப் மூலம் செவ்வாய் கிரகத்தை உற்றுக் கவனித்த போது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் தெரிந்தன. லோவல் அவற்றைக் கால்வாய்கள் என்று நம்பினார். பின்னர் தான் அவை வெறும் மாயை என்று தெரிய வந்தது.

நீங்கள் வானில் மேகங்களைக் கவனித்தால் சில சமயங்களில் அவை மாடு போல அல்லது யானை போல தோற்றம் அளிக்கும். செவ்வாய் கிரகத்தின் கோடுகள் அப்படி கண்ணை ஏமாற்றுகின்றன மாயை என்பது பின்னர் புலனாகியது.

எனினும், லோவல் காலத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி மேலை நாடுகளில் பல நாவலாசிரியர்கள் செவ்வாய் கிரகம் பற்றி இஷ்டத்துக்குத் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு செவ்வாயில் விசித்தர உருவம் கொண்ட `மனிதர்கள்' இருப்பதாகக் கதைகள் எழுதினர்.

செவ்வாயிலிருந்து `பச்சை' நிற மனிதர்கள் பூமி மீது படையெடுப்பு நடத்துவது போன்ற கதைகள் அமெரிக்காவில் நிறையவே வெளிவந்தன. ஆகவே, அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் செவ்வாய் கிரகத்தில் உண்மையிலேயே பச்சை நிற மனிதர்கள் உள்ளதாகப் பாமர மக்களில் பலரும் நம்பினர்.

அமெரிக்க ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்கள் இன்னமும் விடுவதாக இல்லை. செவ்வாயில் அபூர்வ மனிதர்கள் இருப்பது போன்ற கற்பனையில் பல ஆங்கிலப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

உண்மையில் செவ்வாய் கிரகத்தில் புழு பூச்சி கூட இல்லை. நுண்ணுயிர்களும் இல்லை. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆளில்லா விண்கலங்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆரம்பித்தபோது இது உறுதியாகியது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு நாடுகளும் பல விண்கலங்களை அனுப்பியுள்ளன. எனினும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் அமெரிக்காவுக்குத் தான் அதிக வெற்றி கிட்டியுள்ளது. பல ரஷிய விண்கலங்கள் தோல்வியே கண்டன.

அமெரிக்கா 1975 இல் அனுப்பிய வைக்கிங் - 1 மற்றும் வைக்கிங் -2 விண்கலங்கள் செவ்வாயில் இறங்கி விரிவான பரிசோதனைகளை நடத்தின.

செவ்வாயின் தரையில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்று இவை ஆராய்ந்தன. ஆனால் அதில் தீர்மானமான முடிவு கிட்டவில்லை. அதன் பிறகு பல விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன.

பல விண்கலங்கள் செவ்வாயில் இறங்கி ஆராய்ந்துள்ள போதிலும் அக்கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இது விஷயத்தில் விடாப்பிடியாக விஞ்ஞானிகள் விண்கலங்களை அனுப்பி ஆராய்வதற்கு காரணம் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் என்றோ- பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் பெரும் பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர் நீளம் கொண்ட மிகப் பெரிய நதி செவ்வாயில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நதி ஓடியபோது ஏற்பட்ட மிக ஆழமான பள்ளத்தாக்குகள் இப்போதும் காணப்படுகின்றன.

கடந்த காலத்தில் செவ்வாய்க்குச் சென்ற விண்கலங்கள் இவை பற்றி விரிவான படங்களை அனுப்பியுள்ளன.

செவ்வாயில் ஏதோ ஒரு காலத்தில் பிரம்மாண்டமான நதி ஓடியது என்றால் அந்த தண்ணீர் அனைத்தும் எங்கே போயிற்று என்பது பெரும் புதிராக உள்ளது.

காற்று மண்டலத்தில் நீராவி வடிவில் தண்ணீர் உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது. செவ்வாயின் குறுக்களவு பூமியின் குறுக்களவில் பாதி தான்.

எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் அது எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கு ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது என்பதால் அதன் ஈர்ப்பு சக்தி குறைவு.

ஆகவே அக் கிரகத்தினால் தனது காற்று மண்டலத்தை ஈர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

இன்னொன்று, ஒரு கிரகத்தில் காற்று மண்டலத்தின் அடர்த்தி நல்ல அளவில் இருக்குமானால் அதனால் பல சாதகங்கள் உண்டு. பூமியின் காற்று மண்டலம் நன்கு அடர்த்தியாக உள்ள காரணத்தால் தான் பூமியில் நீரானது திரவ வடிவில் உள்ளது.

செவ்வாயில் ஏதோ ஒரு காலகட்டத்தில் காற்று மண்டல அடர்த்தி பெரிதும் குறைந்தபோது அதன் தண்ணீரானது வாயுக்களாகப் பிரிந்து அக் கிரகத்திலிருந்தே வெளியேறி விண்வெளிக்குப் போய்விட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.

ஒரு வேளை செவ்வாயில் மிச்ச மீதியாக இருக்கின்ற நீரானது அதன் துருவப் பகுதியில் உறைந்த ஐஸ் கட்டி வடிவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆகவே தான் இப்போது முதல் தடவையாக அமெரிக்க விண்கலம் ஒன்று செவ்வாயின் வட துருவப் பகுதியில் போய் இறங்க இருக்கிறது.

பீனிக்ஸ் விண்கலம் மட்டும் செவ்வாயில் நிலத்துக்கு அடியில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதாகக் கண்டுபிடிக்குமேயானால் அது கடந்த பல நூற்றாண்டுகளில் இல்லாத மாபெரும் கண்டுபிடிப்பாக இருக்கும்.

ஆனால் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாயில் பத்திரமாகப் போய் இறங்க வேண்டுமே என்பது அமெரிக்க விஞ்ஞானிகளின் முதல் கவலையாகும்.

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி விண்வெளியில் செலுத்தப்பட்ட பீனிக்ஸ், செவ்வாயை நெருங்கும் கட்டத்தில் அதன் வேகம் மணிக்கு 21 ஆயிரம் கிலோமீற்றராக இருக்கும்.

அடுத்து அது செவ்வாய் கிரகத்தின் தரையை நோக்கிப் பாயும். அப்போது செவ்வாயின் காற்று மண்டல உராய்வு காரணமாக சுமார் 2000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தோன்றும். இந்த வெப்பம் விண்கலத்தைத் தாக்காதபடி வெப்பக் காப்புக் கேடயம் உள்ளது. தரையிலிருந்து சற்று உயரத்தில் பீனிக்ஸ் விண்கலத்தின் பாராசூட்டுகள் விரிவடையும்.

ஒரு கட்டத்தில் பாராசூட்டுகள் கழன்றுகொள்ளும். பின்னர் விண்கலத்தின் வேகத்தை மிகவும் குறைப்பதற்கான கருவிகள் செயல்படும். இறுதியில் வேகம் மணிக்கு 8 கிலோ மீற்றராகக் குறையும் போது விண்கலத்தின் மூன்று கால்களும் தரையில் ஊன்றி உட்காரும். தரையிறங்குவதில் வெவ்வேறு கட்டங்களில் எல்லாம் சரியாகச் செயல்பட்டாக வேண்டுமே என்பது தான் விஞ்ஞானிகளின் கவலை.

கடந்த காலத்தில் பல விண்கலங்கள் சரியாகத் தரையிறங்காமல் செவ்வாயின் தரையில் மோதி நொறுங்கியது உண்டு. பீனிக்ஸ் விஷயத்தில் அப்படி ஏற்படாது என்று கருத இடம் இருக்கிறது.

ஏனெனில் கிரேக்க புராணப்படி பீனிக்ஸ் பறவை சாகாவரம் பெற்றதாகும்.

(கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்)

தினமணி

http://www.thinakkural.com/news/2008/5/27/...s_page51582.htm

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த விஞ்ஞானத்திலையும் கை வைக்க வேண்டும் என்று புத்தனிற்கு ஆசை வந்துவிட்டது ஆனபடியா தான் எழுதுகிறேன் தப்பா நினைக்க கூடாது கிரகத்தில் உயிரினங்கள் வாழலாமா என்பதனை முதன் முதலில் அறிய கூடிய தன்மை அவுஸ்ரெலியாவில் தலைநகர் கன்பராவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தான் தெரிய வரும் என்று இங்குள்ள பத்திரிகைகள் விலாசி தள்ளுகிறது உண்மையா?

விஞ்ஞான ரீதியாக செவ்வாயில் இறங்கியது தெரிய வந்துள்ளது என்றாலும் ஆத்மீக ரீதியில் நிருபித்தால் தான் என்னால் நம்பமுடியும். :rolleyes:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

_44871070_artistsimpression_pa466.jpg

தாய்க் கலத்தை ஒட்டியபடி SpaceShipTwo (நடுவில் உள்ள கலம்) விண்ணில் பறக்கும் காட்சி. (சித்திரம்)

கோடை விடுமுறைக்கு இது வரை காலமும் பூமியில் தான் ஊர் ஊரா சுற்றி வந்தார்கள் மனிதர்கள். இப்போ விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லும் காலம் எல்லோ. நேற்று வரை அந்தப் பாக்கியம் சிலருக்கு என்று தான் இருந்தது. ஆனால் பிரித்தானிய வர்த்தகரும் அமெரிக்க வேர்ஜின் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய வகை தனியார் விண்ணோடம் தற்போது விண்வெளிக்கான சுற்றுலாவை எளிமைப்படுத்தப் போகிறது என்றால் மிகையல்ல.

SpaceShipTwo எனும் விண்ணோடம் 4 இயந்திரங்களைக் கொண்ட தாய்க் கலம் மூலம் வானில் சுமார் 50000 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பூமிக்கு வெளியே விண்வெளி நோக்கி ஏவப்படும். பூமிக்கு மேலே 100 கிலோமீற்றர்கள் தூரம் வரை இந்த விண்ணோடம் பயணிகளை காவிச் செல்லும்.

இந்த விண்ணோடம் ஒரு தடவையில் 6 பயணிகளையும் 2 பணியாளர்களையும் காவிக் கொண்டு செல்ல என்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே எடைக் குறைப்பு நோக்கோடு, உலோகங்கள் கொண்டு அல்லாமல் காபன் மற்றும் விசேட பசைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடற்பகுதியைக் கொண்டதாக தாய்க்கலம் உருவாக்கப்பட்டு அண்மையில் அமெரிக்காவில் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் SpaceShipTwo விண்ணோட தயாரிப்பு இன்னும் 30 வீதத்தால் பூர்த்தி செய்யப்பட வேண்டி இருக்கிறது. ஏலவே 70% பணிகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் மிகுதிப் பணி பூர்த்தியானதும் விண்ணோடம் தாய்க்கலத்தோடு ஒட்டியபடி வானில் உயரப் பறந்து விண்வெளிக்கு பாய வேண்டியதுதான் பாங்கி.

இந்த விண்வெளிச் சுற்றுலாச் செய்ய ஒரு பயணிக்கு சுமார் 200,000 அமெரிக்க டாலர்கள் தேவை. இந்த SpaceShipTwo வில் சுற்றுலாச் செல்ல இதுவரை சுமார் 250 பேர் தம்மை முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.

source: http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூமிப்பந்தில் இன்று (01-08-2008) பல பகுதிகளில் பூரண அல்லது பகுதியான சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

_44882949_becki_466.jpg

சூரிய கிரகணத்தின் போது சூரியன் சந்திரனால் மறைக்கப்பட்டு பூமியில் தோன்றும் காட்சி.

_44882872_peter_b_466.jpg

சந்திரனால் பகுதி மறைக்கப்பட்டு பிறை வடிவில் தெரியும் சூரியன். வழமையாக சந்திரன் தான் பூமியால் பகுதி மறைக்கபட்டு பிறை வடிவில் தெரிவது.

_44883732_david_466.jpg

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/7537136.stm

சூரிய கிரகணத்தை குறிப்பிட்ட கண்ணாடி அணிந்தபடி பார்வையிடும் நாயார்.

படங்கள்: பிபிசி.கொம்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

_45283952_milkyway.jpg

image:bbc.com

எமது பூமி உட்பட்ட கோள்களும் பல நட்சத்திரங்களும் அடங்கும் எமது அகிலத் தொகுதி ( galaxy) க்குரிய கருந்துவாரம் (Black hole) ஜேர்மனிய வானியலாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கருந்துவாரம் பூமியில் இருந்து 27,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது.

சூரியனைப் போல 4 மில்லியன் மடங்கு அதிக திணிவுடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த கருந்துவாரப் பகுதியை அண்டி 28 நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றனவாம்.

கருந்துவாரத்தின் ஈர்ப்பு சக்தி ஒளியைக் கூட தப்பிச் செல்லவிடாது கவர்ந்திழுக்கக் கூடிய சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள the European Southern Observatory இனைப் பாவித்து 16 ஆண்டுகளாக செய்யப்பட்ட விண்ணியல் ஆய்வில் இருந்து இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

milkyway.jpg

எமது அகிலத் தொகுதியில் சூரியனின் ஸ்தானம்.

படம்: http://www.atlasoftheuniverse.com/milkyway.html

கருந்துவாரத்தில் இருந்தே நட்சத்திரங்கள் மற்றும் திணிவுகள் பிறப்பெடுப்பதாக நம்பப்பட்டு வருகிறது.

பேரண்டத்தில் (universe) பல ஆயிரக்கணக்கான அகிலத் தொகுதிகள் (galaxy) உள்ளன. அவற்றில் ஒன்றில் எங்கோ ஒரு மூலையில் தான் எமது பூமி இருக்கிறது..!

source: http://www.kuruvikal.blogspot.com/

  • 1 year later...
Posted

பறக்கும் தட்டு இரகசியங்களை வெளியிட்டது பிரிட்டன் பாதுகாப்புத் துறை

இன்று வெளியான 6000 பக்கங்கள் கொண்ட பறக்கும் தட்டுக்களின் இரகசிய அறிக்கை

மாற்றுக் கிரகங்களில் புவியில் வாழ்வதைப் போல சிவிலைஸ் பண்ணப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற சந்தேகம் மனிதனை தொடர்ந்து வாட்டி வருகிறது. இந்தவகையில் வேறு கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுக்கள் வருவதாக பேசப்பட்டு வருவதும், இது குறித்த தகவல்கள் வெளிவருவதும் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை இன்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப்பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதாகும். இதில் சுவை தரும் விடயம் என்னவென்றால் கடந்த 1997 ல் பிரிட்டன் கொன்ஸ்ச வேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் காவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான தோற்றம் ஒன்றும் அவதானிக்கப்பட்டதாகும் என்றும் இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது. இந்த பறக்கும்தட்டு மூக்கோண வடிவம் கொண்டதாக இருந்தது, சகல திசைகளிலும் ஒளிர்வுகளை வீசியபடி நின்றது, இதன் முன்புறத்திலும் ஒளிவெள்ளம் பெருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பறக்கும் தட்டு குறித்த கேள்விகள் தொடர்ந்து வருவதால் இது குறித்த தகவல்களை மறைப்பது பயனற்றது என்பதால் தமது சேமிப்புக்களை பொது மக்களுக்காக வெளியீடு செய்துள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. மேலும் இவை அனைத்தும் தகவல்களாக உள்ளனவேயல்லாது இவற்றின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் தொடர் கதையாகவே உள்ளது.

அத்தோடு பல்லாயிரக்கணக்கான அவதானிப்புக்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. முன்னாள் புகழ் பெற்ற பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் அவதானிப்புக்களும் அதில் உள்ளன. இங்கு காணப்படும் படம் 16 யூன் 1963ம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகும்.

http://www.alaikal.com/

Posted

-

UFO-related documents released in February 2010

The files contain a wide range of UFO-related documents covering the years 1994-2000.

Find out more about close encounters, strange illnesses, flying ‘Toblerones’ and unidentified objects tracked on radar.

... ... files are

-

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்டம் (யுனிவேர்ஸ்) எந்தளவு பெரியது..?! தெரிந்து கொள்ளுங்கள். (காணொளி)

http://kuruvikal.blogspot.com/

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

4 வது பூமி கண்டுபிடிப்பு..!

space.jpg

விண்வெளியில் எமது பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் உண்டா என்ற தேடலின் விளைவாக இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் இறுதியாக இணைந்திருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள GJ 667C என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் (GJ 667Cc) ஒன்று.

இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன்.. 4.5 மடங்கு அதிக அளவு திணிவையும் கொண்டிருப்பதுடன் 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றியும் வந்துவிடுகிறதாம்..! இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Gallaxy.jpg

இதற்கிடையே நாசாவின் விண்ணியல் தொலைநோக்கியான கபிள் அகிலம் (Gallaxy) ஒன்றின் பிரமிக்கத்தக்க படம் ஒன்றை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

Astronomers say they've discovered a fourth planet outside our solar system that could support life.

It orbits a star called GJ 667C, about 22 light years away from Earth.

The star is less hot than our sun but the planet - called GJ 667Cc - is close enough that its surface temperature should be about the same as Earth's.

The planet's much bigger than Earth - about 4.5 times our planet's mass - but it orbits its star about every 28 days, so its year is about one Earth-month. - (bbc.co.uk)

http://kuruvikal.blogspot.com/

  • 1 month later...
  • 7 months later...
Posted

126753110moon.jpg

பூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் எச்.டி. 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏற்கனவே 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவை பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுடையவை என அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட 7 மடங்கு பெரியது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவில்தான் இந்த புதிய கிரகமும் எச்.டி. 40307 நட்சத்திரத்தில் இருந்து உள்ளது.

பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இங்கு நிலவுகிறது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோன தெரிவித்துள்ளார்.

மேலும், எச்.டி. 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் 2 புதிய கிரகங்கள் உள்ளன. அது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=31017

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10155098_10152020543452944_2870109178537

 

தனது 63வது நிலவை குட்டி போடும் சனிக் கோள். ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் அவதானிப்பு: Birth of 'new Saturn moon' witnessed.

 

http://www.bbc.co.uk/news/science-environment-27056698

  • கருத்துக்கள உறவுகள்
Posted

_39854694_arianekou_ariane_203long.jpg

பயணத்துக்குத் தயாராக Kourou in French Guiana இல் இருக்கும் உந்துவாகனம்....!

laun.jpg

பத்தாண்டுகள் பயணத்தின் பின் வால்வெள்ளியை அடையத் திட்டமிட்டுள்ள விண்கலம் (Rosetta probe )

ஐரோப்பிய விண்ணாய்வு நிறுவனம் இவ்வாண்டில்( Thursday,26 Feb.2004) இருந்து சுமார் பத்தாண்டுப் பயணத்தின் பின் (அடைய வேண்டிய மொத்ததூரம் 7 பில்லியன் கிலோமீற்றர்கள்....!) வால் வெள்ளி (comet 67P/Churyumov-Gerasimenko) ஒன்றில் தரையிறங்கத்தக்கதாக விண்கலம் (Rosetta probe ) ஒன்றை மிக விரைவில் (at 0736 GMT, Thursday, 26.Feb. 2004) Kourou in French Guiana இருந்து விண்ணிக்கனுப்பத் தயாராகி வருகிறது....!

[url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3514941.stm] மேலதிக தகவல் இங்கே..

Thanks bbc.com

 

ஆகா.. Rosetta விண்கலம் விண்ணுக்குப் போன செய்தியை தாங்கி நிற்கும் யாழிற்கு முதலில் நன்றி. அதனை நினைவாற்றலில் அப்படியே தாங்கி நிற்கும் மூளைக்கும் நன்றி.

 

சக்தியை சேமிக்கும் பொருட்டு.. நீண்ட தூக்கத்தின் பின்.. இப்போது..விழித்தெழுந்திருக்கும்.. Rosetta விண்கலம்.. அது தரையிறங்க வேண்டிய வால்நட்சத்திரத்தை துரத்த ஆரம்பித்துள்ளது.

 

இந்த ஆண்டின் ஆகஸ்ட் வாக்கில் அது வால்நடத்திரத்தை அண்மித்து.. நவம்பர் வாக்கில்.. அங்கு தரையிறங்கு கலத்தை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த 10 ஆண்டு திட்டம் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால்.. (ESA) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

_72376235_roosetta_mission_624.jpg

 

 

Rosetta comet-chaser phones home.

A signal confirming its alert status was received by controllers in Darmstadt,

 

Germany, at 18:17 GMT.

 

Rosetta has spent the past 31 months in hibernation to conserve power as it arced beyond the orbit of Jupiter on a path that should take it to Comet 67P/Churyumov-Gerasimenko in August.

 

Engineers will now finesse the probe's trajectory and prepare its instruments for the daring encounter.

One of the highlights of the mission will be the attempt to put a small robotic lander, Philae, on the surface of the 4.5km-wide comet. This will occur in November.

 

http://www.bbc.co.uk/news/science-environment-25814454

 

மீண்டும் யாழே நீ வாழி. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவப்புச் சந்திர சந்திர கிரகணம் . சித்திரை - 2014

 

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயிரின அடிப்படை மூலக்கூறு அண்டவெளியில் கண்டுபிடிப்பு.

_77824083_77824082.jpg

பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் காபன் இரசாயன உயிரினங்கள் என்றால் மிகையல்ல. மனிதர்கள் எமது உடல் கூட காபனை அடிப்படையாகக் கொண்ட சங்கிலி மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

சிலியில் உள்ள விண்வெளி அவதான மையத்தில் உள்ள ரெடியோ மின்னலை உணர் கருவிகளின் உதவி கொண்டு ஐசோ புரப்பைல் சயனைட் (Iso-propyl cyanide) என்ற காபன் சங்கிலி கொண்ட சேதன மூலக்கூறு.. அகிலம் (galaxy) ஒன்றின் நட்சத்திரங்களை உருவாக்கவல்ல.. விண்வெளி தூசுகள் மத்தியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாம்.

இந்த அகிலம் பூமியில் இருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

_77824307_77824306.jpg

[ஐசோ புரப்பைல் சயனைட் (Iso-propyl cyanide)]

இந்த மூலக்கூறு கண்டறியப்பட்டதானது.. உயிரின அடிப்படை சேதன மூலக்கூறுகள் (புரத அடிப்படை மூலக்கூறுகளான அமினோஅமிலங்கள் கூட) விண்வெளி எங்கும் பரந்திருப்பதற்கான சாத்தியத்தை கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

_77824086_5fa1ffae-4eca-4f4d-9131-036a5e

[சிலியில் உள்ள விண்வெளி அவதான மையம்]

 

http://kuruvikal.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொசெட்டாவின் துணை விண்கலம் வால்வெள்ளியில் இறங்கும் நாள் குறிக்கப்பட்டது.

 

_77839232_77839231.jpg

[ரொசெட்டாவின் துணைக்கலம் இறங்கவுள்ள வால்வெள்ளி (67P) யின் தோற்றம் - ரொசெட்டா பிடித்த படம். ]

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய ரொசெட்டாவின் (Rosetta) துணை விண்கலம் (Philae)  வால்வெள்ளியில் இறங்கும் நாள் குறிக்கப்பட்டது. புதன்கிழமை, கார்த்திகை 12, 2014 என்று அது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் 2004 இல் விண்ணுக்கு செலுத்தப்பட்டு அண்மையில்.. குறிப்பிட்ட வால்வெள்ளியை மிக நெருங்கி அண்மித்து சுற்றிவரத் தொடங்கியது நினைவிருக்கலாம்.

_77093269_77093268.jpg

[வால்வெள்ளியில் இறங்கினால் ரொசெட்டா அனுப்பும் ஒரு வாசிங் மிசின் அளவே உள்ள துணைக் கலத்தின் தோற்றம் இப்படி இருக்கும். சித்தரிக்கப்பட்ட படம். ]

 

http://kuruvikal.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வால்வெள்ளிகள் வினாடிக்கு 30 - 250 km வரைக்கும் பிரயாணம் செய்யும், இதை உபயோகித்து இதிலிருந்தபடியே விண்வெளியை ஆராயலாமே. ஆனல் இந்த lander, 1 வருடம்தான் சேவையிலிருக்குமாம். What a waste

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1935584_10153265597381466_61174836625575

புளுட்டோவுக்கு அப்பால்.. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த.. 9 வது கிரகம் எனக் கருதத்தக்க ஒரு கோளை விண்ணியல் ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனராம்.

அது பூமியை போல 10 மடங்கு (திணிவில்) பெரியதாக உள்ளதாம்.

ஆனாலும் இந்தக் கிரகம் சூரியக் குடும்பக் கிரகமாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட இன்னும் பல நிலை ஆய்வுகளும் சான்றுகளும் அவசியமாகின்றன.

http://www.bbc.co.uk/news/science-environment-35365323

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.