Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி

Featured Replies

இங்கு செய்தியில் கூறப்பட்ட விடயம்… இராணுவம் காங்கேசன் துறையில் ஓர் புதிய அல்லது மீள்வடிவாக்கம் செய்யப்பட்ட உல்லாசவிடுதியை இயங்கவைத்துள்ளது என்பது. இதற்கு நான் ஆரம்பத்தில் எழுதிய முதலாவது கருத்தையே ரகுநாதனினால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனடியாகவே நான் சிங்களவர்களை நல்லவர்கள் என்று கூறுவதாக தனது பாணியில் தொடங்கினார்.

நீங்கள் யாருடனாவது உழுது போட்டு போங்கோ... அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை... ஆனால் போராடியவர்களை இழிவு படுத்தும் வேலையை செய்த போதுதான் நான் உள்ளை வந்தனான்...

நீங்கள் மேலை எழுதிய கருத்துக்கள், இணைத்த கருத்து உட்பட உங்களுக்கு விடுதலை போர் ஏன் ஆரம்பித்தது எண்ட ஒரு கோதாரியும் தெரியாது எண்டது மட்டும் தெளிவாக புரிகிறது... !

கீழை இருக்குக் கருத்தை நீங்கள் தானே எழுதினீர்...??

சனங்கள் விரட்டப்பட்டார்கள்? த.வி.பு காங்கேசன் துறை, பலாலி முகாம் என்று சுற்றிவளைத்து இராணுவத்தை பூண்டோடு கைலாயம் அனுப்ப முயற்சி செய்தார்கள். இராணுவம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக த.வி.புவின் முற்றுகையை முறியடித்துக்கொண்டு வெளியேறியது. முதலில் மாவிட்டபுரம், கீரிமலை வரை முன்னேறியது. பின்னர் தெல்லிப்பளை விழுந்தது. போரை தெரிவு செய்தது யார்? குண்டுகள், துப்பாக்கிச்சூடுகள் இவற்றின் மத்தியில் வாழமுடியாத பட்சத்திலேயே நாம் காங்கேசன்துறையை விட்டு வெளியேறினோம். இங்கு சனங்களை உண்மையில் விரட்டியவர் யார்?

இப்ப தலைப்பை பற்றி ஞாபகம் கொள்ளும் நீங்கள் இதை தலைப்பை அண்டித்தான் எழுதினீர்களோ...??

இதை பற்றி விவாதிக்க்க வேணும் எண்டால் நான் தயார்... ! ஆனால் தேவை அற்ற அவமானங்களை தவிர்க்க வரலாற்றை அறிந்து கொண்டு வாருங்கள்...

இங்கு நான் கூறக்கூடியது உங்களினால்.. கருத்துக்களிற்கு சரியான எதிர்வாதத்தை வைக்கமுடியவில்லை. கருத்து எழுதுபவரை கேவலப்படுத்தமட்டுமே உங்களினால் முடிகின்றது. இப்படியான நிலையில் எனக்கு போராட்டத்தை பற்றி விளங்கப்படுத்த போகின்றீர்களா? நகைப்பாக உள்ளது.

கேள்வியே புரட்டுகளோடை சேர்ந்த தரவுகளாக இருக்கும் போது உங்களுக்கு பதில் சொல்லி மினக்கெட வேணுமா...?? வரலாறு எண்டது என்ன எண்டதே தெரியாமல் வந்து நிண்டு கொண்டு அரிவரியிலை இருந்து உங்களுக்கு தொடங்க வேண்டும் பதில் சொல்வதுக்கு...

Edited by தயா

  • Replies 62
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,

நீங்கள் முன்வைத்த கருத்தை என்னால் புறிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்வதன் மூலம் என்னை முட்டாள் ஆகக் காட்ட முறப்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். திரியை தொடக்கிவைத்தது நான். அதன் நோக்கம் இதுவரை உங்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. சிங்களவர்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் நிரந்தர ஆக்கிரமிப்புப்பற்றியே இந்தத் திரி தொடங்கப்பட்டாது. இதைப் பலமுறை நான் இதே திரியில் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அதை இன்னும் கண்டுகொள்ளவில்லை, அல்லது கண்டுகொள்ள மறுக்கிறீர்கள்.

நீங்கள் செய்ததெல்லாம், நான் ஈனைத்த திரியின் உண்மைத்தன்மை பொய்யென்று நிரூபிக்கப் பாடுபட்டதுதான். முதலில் தமிழ்நெட் காரர் சிங்கள ராணுவ இணையத் தளத்தினுள் படுத்திருந்து செய்தி புடுங்குகிறார்கள் என்றீர்கள், பின்னர் தமிழ்நெட் போடும் செய்தியெல்லாம் உண்மையாகிவிடுமா என்றீர்கள், பிறகு "உமது தமிழ்நெட்" என்று என்னை விழித்தீர்கள். ஆகவே உங்கள் நோக்கம் தெளிவானது, அதாவது, இங்கே இணைக்கப்பட்ட செய்தி பொய்யென்று நிரூபிக்கப்பட வேண்டும், இன்னொரு வழியில் சொல்வதானால், சிங்கள அரசும் ராணுவமும் அப்படியொன்றைச் செய்யவில்லை, வலிகாமம் வடக்கில் மக்களை குடியமர்த்தத்தான் போகின்றன என்று நான் இரண்டாவதாக இணைத்த "வலிகாமம் வடக்கில் மக்களைக் குடியமர்த்த முடியாது - சிங்கள ஆக்கிரமிப்புத் தளபதி" என்கிற செய்திக்குப் பதிலளித்திருந்தீர்கள்.

ஆகவே உங்களின் நோக்கம் மிகவும் தெளிவாககத் தெரிகிறது.

முதலில் அக்கட்டிடம் பழையதா புதியதா என்கிற விவாதத்தைத் தொடக்கி வைத்த நீங்கள், பின்னர் நான் அதைத் தொடக்கிவைத்ததாக கதையை மாற்றியது விந்தை. நான் செய்ததெல்லாம், நீங்கள் கூறிய இரண்டுச் சிங்களத் தளங்களிலிருந்து செய்தியை இணைத்ததுதான். பிறகு அங்கிருந்து நகர்ந்து, தமிழர் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி அழிக்கப்பார்த்ததுதான் காரணம் என்கிற புதிய கண்டுபிடிப்பை எழுதினீர்கள்.ஆனால், உண்மை என்னவென்றால், தெல்லிப்பளை, மாவிட்டபுறம், கட்டுவன், மயிலிட்டி, காங்கேசந்துறை, கீரிமலை போன்ற இடங்களிலிருந்து மக்கள்முதன் முதலில் வெளியேறியது 1987 இல சிங்கள அரசால் தொடங்கப்பட்ட ஒப்பெரேஷன் லிபரேஷன் எனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போதுதான். இந்திய ராணுவத்தின் வருகையுடன் அந்தப் பகுதிகளில் மீளக் குடியமர்ந்த மக்கள், 1990 இல் பிரேமதாசவுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய காலத்தில் நிரந்தரமாக தமது வாழ்விடங்களிலிருந்து திறத்தப்பட்டனர். நீங்கள் சொல்லிய புலிகள் பலாலித்தளத்தை அழிக்க நினைத்திருந்தனர் என்கிற சரித்திரம் 1999 இல் நடந்தது. அதாவது ஜயசிக்குரு நடவடிக்கையைத் தோற்கடித்து யாழ்ப்பாணம் நோக்கிப் புலிகள் முன்னேறியபோது பலாலி விமான ஓடுபாதைகள் புலிகளின் பீரங்கித் தாக்குதலின் எல்லைக்குள் வந்தபோதே நீங்கள் முன்னர் கூறிய "பலாலி ராணுவத்தை கைலாயம் அனுப்பும் நடவடிக்கை" பற்றிப் பேசப்பட்டதும், இந்தியத் தலையீட்டினாலும் இன்னும் சில காரணங்களினாலும் புலிகளின்முன்னேற்றம் கைவிடப்பட்டதும், பலாலி சிங்கள இராணுவத்தின் கூண்டோடு கைலாயம் போகும் நிலையும் தடுக்கப்பட்டது.

திரியைத் திசை திருப்பி விட்டு, நான் எனது வழமையான பாணியில் உளறுகிறேன் என்கிறீர்கள். எது வழமையான பாணி?? எந்தத் திரிக்குள்ளும் புலிப்பயங்கரவாதிகாளல்த்தான் எல்லாப் பிரச்சனையுமே என்கிற வாதமா?? தமிழர் தாயகத்தில் சிங்களத்தின் நிரந்தர ஆக்கிரமிப்புச் செய்தியினுள் புலிப்பயங்கரவாதத்தினைச் செருகியது யார்?? செய்தியை பொய்யென்று நிரூபிக்க முற்பட்டது யார்?? செய்தி உண்மைதான் என்று நிரூபிக்கப்பட்டபோது திரியைத் திசை திருப்பி, அடிப்பம், வெட்டுவம் எண்டு சில லூசுகள் திரியுதுகள், சிங்களவன் பலமானவன் என்று நிரூபித்து வருகிறான் என்று எழுதியது யார்?

வழமையான பாணி எது தெரியுமா?? எவர் ஒரு செய்தியை இணைத்தாலும் அதைப் பொய்யென்று வாதிட வந்திவிட்டு பின்னர் அது உண்மைதான் என்கிறபோது திரியையே திசை திருப்பும் பாணி இருக்கிறதே, அதுவா?? ஏன் கேட்கிறேன் என்றால், வருகிற ஜனவரியில் கொழும்பில் நடக்கவிருக்கும்"சர்வதேச எழுத்தாளர் மாநாடு" பற்றி நான் ஆரம்பித்த தலைப்பிற்குள் புகுந்து விட்டு, முதலில் செய்தியைப் பொய்யென்று வாதிட்ட நீங்கள் பின்னர் திரியைத் திசை திருப்பி தேசியத்துக்கு ஆதரவானவர்களைத் திட்டித் தீர்த்தீர்கள். அதேபோல இங்கேயும் செய்கிறீர்கள். ஆகத் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருப்பது நீங்கள்தான். என்னையோ, நெல்லைய்யனையோ, அல்லது தயாவையோ "வழக்கமான பாணியில்" என்று நீங்கள் சொல்வது நகைப்பிற்கிடமானது.

தலை, இங்கு குற்றச்சாட்டு சனங்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பது. சனங்கள் எப்படி விரட்டியடிக்கப்பட்டார்கள்? எப்போது விரட்டியடிக்கப்பட்டார்கள்? போரிற்கு யார் காரணம்? ஒரு தரப்பு மட்டுமே போரிற்கு காரணம்? ஒரு தரப்பு மட்டுமே போரை செய்தது? உங்களுக்கு போராட்டம் பற்றி யார் எத்தனையாம் ஆண்டு எந்த திக்கில் ஆரம்பித்தார்கள் என்று விசயம் தெரிந்து இருக்கலாம். ஆனால் உமக்கு ஒரு விடயத்தை நடுவுநிலமையுடன் அலசி ஆராயும் அடிப்படை அறிவு இல்லை என்று மட்டும் தெரிகின்றது. இப்படிப்பட்ட உம்முடன் கருத்தாடல் செய்தால் நானே அவமானப்படவேண்டும் என்று நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ரகுநாதன், இங்கு நான் ஊர்ப்புதினத்தில் கருத்தாடல் செய்வது மிகவும் குறைவு. ஊர்ப்புதினத்தில் கொழும்பு மாநாடு, மற்றும் தற்போதைய திரி இவற்றில் மட்டுமே அண்மைக்காலத்தில் நீண்டவாதம் செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். கொழும்பு மாநாடு பற்றிய விடயத்தை மீண்டும் இங்கு இழுத்துப்போடவேண்டிய தேவை எனக்கு இல்லை. ஏன் என்றால் குறிப்பிட்ட திரியை ஆரம்பம் முதல் இறுதிவரை வாசிப்பவர்களுக்கு அங்கு பேசப்பட்ட விடயங்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தத்திரியில் நான் எழுதுவதற்கு ஆர்வத்தை தூண்டியது நாமும் காங்கேசன்துறையில் சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்து உள்ளோம். எனவே நேரில் நாம் பெற்றுணர்ந்த அனுபவங்கள் இங்கு கருத்தாடல் செய்யத்தூண்டியது. இங்கு திரியை ஆரம்பம் முதல் இறுதிவரை வாசிப்பவர்களிற்கு கருத்தாடல் எப்படி சென்றது என்பதை நன்றாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே உங்கள் வினாக்களிற்கு பதில் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனைய விடயங்கள் அதாவது ஒப்பரேசன் லிபரேசன் போன்ற விடயங்களை வேறு ஓர் சமயம் வாய்க்கும்போது அவை பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றேன்.

உங்கள் கோபம் எனக்கு விளங்குகின்றது ரகுநாதன். நீங்கள் இணைக்கும் செய்திக்கு நான் ஜால்ரா போடவில்லை. கருத்தாடலில் கருத்துக்களிற்கு சரியான எதிர்வாதம் வைக்க முடியாதவர்களினால் போராட்டத்தின் பின்னாலும், தேசியத்தின் பின்னாலும் ஒளிந்துகொள்ள cover எடுக்க மட்டுமே முடிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:blink: கரும்பு,

உங்கள் போன்றவர்களின் ஜால்ராக்களுக்காக நான் இங்கு எழுதவில்லை. விதண்டாவாதம் மட்டுமே செய்யத்தெரிந்த உங்கள் போன்றவர்களால் எமக்கு எந்தப்பயனுமே விளையப்போவதில்லை என்பது நாம் காலம் காலமாக கண்டுணரும் ஒரு அனுபவம்.

நான் எதைப்பற்றி இங்கே எழுதினேன் என்பதும், ஆனால் நீங்கள் இங்கே செய்ய விளைவது என்னவென்பது இந்தத் திரியை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்வார்கள். மனிதநேயம் பற்றியும், நடுவுநிலமை பற்றியும் பேசும் உங்கள் போன்ற ஜனநாயகவாதிகளால் நாம் கண்டபலன் என்றால் ஒன்றுமேயில்லை. ஆகிரமிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு அல்லலுறும் ஒரு சமூகத்துக்கும், அவர்களை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளாத உங்கள் போன்ற ஜனனாயகவாதிகளைப் போல் பலரைப் பார்த்தாயிற்று.

உங்கள் போன்ற போலி ஜனநாயகவாதிகளைப் பொறுத்தவரை புலிகளின் போராட்டத்தினால்த்தான் தமிழருக்கு எல்லாமே நடந்தது, அவர்கள் போராடியிருக்காவிட்டால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள், சிங்களவர்களும் அவர்களை அன்புடன் நடத்தியிருப்பார்கள், அப்படித்தானே?? உங்கள் அரசியல் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

நீங்களும் உங்கள் கருத்துக்களும்....

ரகுநாதன்,

இங்கு எனது வாதம் போரின் வடுக்களிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட தரப்புக்கள் காரணம் என்பது. இங்கு சிறீ லங்கா அரசாங்கத்திற்கோ அல்லது சிறீ லங்கா இராணுவத்திற்கோ நான் வக்காளத்து வாங்கவில்லை. ஏன் என்றால் சிறீ லங்கா முப்படைகளின் பல்வேறு மிலேச்சத்தனமான தாக்குதல்களை நான் நேரில் பார்த்தவன். இங்கு விடயம் என்ன என்றால் போரின் வடுக்கள், போரின் அவலங்கள் என்றுவரும்போது ஒருதலைபட்சமாக சிறீ லங்காவே, சிறீ லங்கா இராணுவமே காரணம் என்று கூறமுடியாது. இங்கு தமிழ்நெட் மற்றும் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது சனங்கள் இடம்பெயர்ந்ததற்கு சிறீ லங்கா இராணுவம் மட்டுமே காரணம் என்று கூறப்படுகின்றது.

போர் ஏன் தொடங்கப்பட்டது.. அது நல்லபோரா கெட்ட போரா.. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையில் நடைபெற்றதா.. தேவையான போரா தேவவயற்ற போரா.. எனும் கேள்விகளெல்லாம் போக.. அதற்கு முதலில் போர் என்று தீர்மானித்து போரில் ஈடுபடும்போது அந்த தீர்மானத்தை எடுப்பவர்களுக்கு - போரிடுபவர்களிற்கு அது எந்த தரப்பாக இருக்கட்டும்… போரின் வடுக்களில்… போரினால் மக்கள் படக்கூடிய அவலங்களில் நேரடியான பங்கு உண்டு. போர் என்று தொடங்கும்போது போரினால் மக்கள் எப்படியும் பாதிக்கப்படுவார்கள் என்று நிச்சயம் போரில் ஈடுபடும் தரப்புகளிற்கு தெரியும். ஆயினும்.. இப்போது போர் நிறைவடைந்து.. மீண்டும் இயல்புநிலைக்கு மக்கள் முயற்சிசெய்யும் நிலையில்.. போரின் வடுக்களிற்கு.. இடம்பெயர்வுகளிற்கு சிறீ லங்கா இராணுவமே சிறீ லங்கா அரசு மட்டுமே காரணம் என்று கூறி பிரச்சாரம் செய்வது வேடிக்கையானது.

இறுதியாக எனது சிந்தனைகள், கருத்துக்கள் சமுதாயத்திற்கு உதவியதா அல்லது இல்லையா என்பதை தனிநபராகிய நீங்கள் தீர்மானிக்கமுடியாது. உங்கள் சுய விருப்பு, வெறுப்பு ஒட்டுமொத்த சமுதாயத்தின் தேர்வாக காணப்படவேண்டிய அவசியம் இல்லை. உங்களைப் பொறுத்தவரையில் த.வி.புவிற்கு ஆதரவாக கருத்து எழுதாமையால் நான் ஓர் போலி ஜனநாயகவாதி, ஓர் விதண்டாவாதி, எனது கருத்துக்களினால் சிந்தனைகளினால் ஒரு பயனும் இல்லை. நல்லதொரு கண்டுபிடிப்பு ரகுநாதன்.

தலை, இங்கு குற்றச்சாட்டு சனங்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பது. சனங்கள் எப்படி விரட்டியடிக்கப்பட்டார்கள்? எப்போது விரட்டியடிக்கப்பட்டார்கள்? போரிற்கு யார் காரணம்? ஒரு தரப்பு மட்டுமே போரிற்கு காரணம்? ஒரு தரப்பு மட்டுமே போரை செய்தது? உங்களுக்கு போராட்டம் பற்றி யார் எத்தனையாம் ஆண்டு எந்த திக்கில் ஆரம்பித்தார்கள் என்று விசயம் தெரிந்து இருக்கலாம். ஆனால் உமக்கு ஒரு விடயத்தை நடுவுநிலமையுடன் அலசி ஆராயும் அடிப்படை அறிவு இல்லை என்று மட்டும் தெரிகின்றது. இப்படிப்பட்ட உம்முடன் கருத்தாடல் செய்தால் நானே அவமானப்படவேண்டும் என்று நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அடிச்சால் அடி விழாதவாறு தடுக்க வேண்டும்... அப்படி தடுக்காதவன் எண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும்... எந்த உயிராக இருந்தாலும் தற்பாதுகாத்து கொள்ளத்தான் தாக்குகிறது... தமிழன் இதுக்கு விதி விலக்கு அல்ல...

சொந்தக்காணிகளில் இருந்து துரத்தப்பட்டும், இனப்படுகொலைகள் மூலமும் தமிழர்கள் விரட்டப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டும், குண்டர்கள் மூலம் துரத்தப்பட்டும் கல்வி பறிக்கப்பட்ட போது எல்லாம் சிங்களவனில் நியாயம் இருக்கிறது அதனால் தான் துரத்துறான் பறிக்கிறான் எண்டு நியாயம் பிடிக்க நிக்கும் உங்களை போண்ற கூட்டத்தை என்ன எண்டு சொல்லுறது...

***

ஆகக்குறைந்தது சொந்த இனத்தின் அபிலாசைகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் எல்லாம் என்னத்தை புரிந்து கொள்ளப்போகிறீர்கள்...??

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொருக்கா யாராவது புரிய வையுங்கோ

இந்த நடுவில நிற்கிறது

அல்லது

நடுவில இருக்கிறது

அல்லது

நடுவில

நடுவில

நடுவில

.........?என்றால் என்ன...?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சமாதானம்செய்தாலும் மனம் ஒத்துக்கொள்ளுதில்லை

யாராவது தெளிவு தாங்கப்பா

இப்போ

ஆண் பெண்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

சரி மனிதன் மிருகம்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

நாய் அல்லது பூனை

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

பனையில ஏறினால் ஒன்றில் மேல போகணும் இல்லை கீழ வரணும்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

ஒரு பயணம் போனால் ஒன்றில் போகும் இடத்தை அடையணும் இல்லை திரும்பி ஆரம்பித்த இடத்துக்கு வந்திடணும்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

ஆற்றில் விழுந்துவிட்டால் நீந்தணும் இல்லை சாகணும்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

நல்லவன் அல்லது கெட்டவன்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

குழந்தை வயித்தில வந்தால் பெத்துக்கொள்ளணும் இல்லை அழித்திடணும்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

சரி பொய் அல்லது உண்மை

இரண்டுக்கும் நடுவில் எப்படி...?

தமிழன் அல்லது சிங்களவன்

இரண்டுக்கும் நடுவில் எப்படி...??????????????????????????

ஆகக்குறைந்தது சொந்த இனத்தின் அபிலாசைகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் எல்லாம் என்னத்தை புரிந்து கொள்ளப்போகிறீர்கள்...??

உங்கள் தனிப்பட்ட அபிலாசைகளே சொந்த இனத்தின் அபிலாசைகள்? மேலே கேட்ட கேள்விக்கு ஏற்கனவே பதில் உள்ளது.

போர் ஏன் தொடங்கப்பட்டது.. அது நல்லபோரா கெட்ட போரா.. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையில் நடைபெற்றதா.. தேவையான போரா தேவவயற்ற போரா.. எனும் கேள்விகளெல்லாம் போக.. அதற்கு முதலில் போர் என்று தீர்மானித்து போரில் ஈடுபடும்போது அந்த தீர்மானத்தை எடுப்பவர்களுக்கு - போரிடுபவர்களிற்கு அது எந்த தரப்பாக இருக்கட்டும்… போரின் வடுக்களில்… போரினால் மக்கள் படக்கூடிய அவலங்களில் நேரடியான பங்கு உண்டு. போர் என்று தொடங்கும்போது போரினால் மக்கள் எப்படியும் பாதிக்கப்படுவார்கள் என்று நிச்சயம் போரில் ஈடுபடும் தரப்புகளிற்கு தெரியும். ஆயினும்.. இப்போது போர் நிறைவடைந்து.. மீண்டும் இயல்புநிலைக்கு மக்கள் முயற்சிசெய்யும் நிலையில்.. போரின் வடுக்களிற்கு.. இடம்பெயர்வுகளிற்கு சிறீ லங்கா இராணுவமே சிறீ லங்கா அரசு மட்டுமே காரணம் என்று கூறி பிரச்சாரம் செய்வது வேடிக்கையானது.

விசுகு அண்ணை, நீங்கள் ஓர் உண்மையான நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதியாக விளங்கினால் எப்படியான உளநிலையுடன் காணப்படுவீங்கள்? உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அங்கு செல்வாக்கு செலுத்துவதற்கு இடம் அளிப்பீர்களா?

தமிழரின் போராட்ட வரலாறு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்துடன் ஆரம்பிக்கவில்லை என்பது எந்தச் சிறுவனுக்கும் தெரிந்த வரலாறு.ஒரு அரசு ஆயுதம் கொண்டு மக்கள் மீது ஒரு போரைத் தொடுக்கும் போது அடக்கப்படும் மக்கள் அதற்க்கு எதிராக ஆயுதங்களைக் கொண்டே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது உலகெங்கும் நடக்கும், நடந்த ஆயுதப் போராட்டங்களின் மூலம் எந்தச் சிறுவனும் அறியக் கூடிய வரலாற்றுத் தரவு.

மேலே இருக்கும் கருத்தாடலை வாசிக்கும் எவருக்கும் விளங்கும் யார் பக்கம் நியாயம் இருக்கிறது உண்மை இருக்கிறது என்று. தம்மை மேதாவிகள் என்று காட்டிக் கொள்ள சிலர் விதண்டாவாதம் செய்வார்கள்,இவர்களை விட்டு விட்டு வேறு விடயங்களில் கவனம் செலுத்துவதே எமது நேரத்தை பயன் உள்ளதாக்க உதவும்.

ஒர் நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்ப்பதற்கு மேதாவியாக இருக்கத் தேவையில்லை. நாணயத்திற்கு ஒரு பக்கம் மட்டுமே உள்ளது என்று கூறி சனங்களை மேய்ப்பது மட்டுமே பலருக்கு பிடித்துள்ளது போல.

கோவிக்க வேண்டாம் விசுகு அண்ணா.

நடுநிலை என்று ஒன்று இல்லாவிட்டால் அப்படி ஒரு சொல் ஏன் வந்தது.நீங்கள் ஒருவித சம்பந்தமுமில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவிவில ,அதுக்கும் இதுக்கும் நடுவில என்ன என்று விளங்கப் படுத்த குழந்தைபிள்ளை மாதிரி கேட்கின்றீர்கள்.

யூரோப்பியன் கப் புட்போல் பார்த்தல் fபைனலை இரண்டு கிளப்பிற்குமில்லாத இரு கிரவுன்Dஇல் வைப்பார்கள்.கிரிக்கெட்டில் அமபயரை தமிழில் அழைப்பது நடுவர்.

அணிசேரா மகாநாட்டில் "கடாபி" பேசும் போது சொன்னார் நடுநிலை என்று ஒன்று இல்லை ஒன்றில் மேற்கு அல்லது கிழக்கு என்று.அதற்கு "முகாபே "சொன்னார் அப்படியொன்று இல்லாவிட்டால் உமக்கு இன்று பேச மேடையே இராது என்று.அதுதான் உண்மையும் கூட.

அர்ஜுன் உங்கள் கருத்தை பார்த்தபின்னர் இப்போது கூகிழில் நடுவுநிலமை என்கின்ற சொல்லை தேடிப்பார்த்தேன். இதில் முதலாவதாக நான் முன்பு எழுதிய கருத்து சம்மந்தமான கருத்தாடல் வந்தது. குறிப்பிட்ட கருத்து:

நடுவுநிலமையுடன் இருந்தால்தான் கருத்தாடல் தளத்தை நல்ல முறையில் கொண்டுசெல்ல முடியும். நல்லபடியாக கருத்தாடல் செய்யமுடியும்.

ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடல் நடைபெறுவதற்கு நடுவுநிலமை முக்கியமானது.

சாணக்கியன் அண்ணை, தனது கருத்தில் தனிநபர் தாக்குதல் ஒன்றும் செய்யவில்லை. தனது அபிப்பிராயத்தை கூறி இருந்தார். ஆனால், அவர் கூறிய கருத்துக்கு பதில் கருத்து எழுதியவர்கள் தனிநபர் தாக்குதல் செய்து இருந்தார்கள்.

இங்கே ஒருபக்கச் சார்பான கருத்துக்கள் எழுதப்படுவதையா நிருவாகம் எதிர்பார்க்கின்றது?

சாணக்கியன் அண்ணா வித்தியாசமான முறையில் எழுதுவதால் அவர் போராட்டத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல.

சாணக்கியன் அண்ணாவின் கருத்தினை கருத்தினால் வெல்ல முடியாது அவர்மீது தனிநபர் தாக்குதல் நடாத்தப்பட்டதை நிருவாகம் கண்டுகொள்ளாது அவரது கருத்துக்களை அப்புறப்படுத்தி உள்ளது சரியாகத் தெரியவில்லை.

இருதரப்பு வாதங்கள் இருந்தால்தான் ஓர் ஆரோக்கியமான கருத்தாடல் நடைபெற முடியும். எல்லாத்துக்கும் ஓம் ஓம் ஓம் சரி சரி சரி எண்டு கருத்து எழுதிப்பழகினால் அது எங்கே போய் முடியும்?

கள உறவுகளே, கருத்தினை கருத்தினால் மோதிக்கொள்ளுங்கள். நானும் பிழைவிடுவது உண்டு. நானும் சாணக்கியன் அண்ணாவுடன் ஆரம்பத்தில் பகைத்துக்கொண்டது உண்டு. ஆனால், அவர் கூறும் கருத்தினை பாராது அவரை தனிப்பட நோக்கி கருத்து எழுதுவதனால் கிடைக்கப்போவது என்ன?

நடுவுநிலமை நடுவுநிலமை நடுவுநிலமை.. எண்டு ஒண்டு இங்கு உருவாகுமா? :o

சரி அதை நான் இப்படியாவது இங்கு உருவாக்கி மகிழ்கின்றேன்.

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

நடுவுநிலமை

குறிப்பிட்ட கருத்தாடல் திரி: கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது?

+++

நடுவு நிலமை என்று வு, நி இற்கு இடையில் இடைவெளி விட்டு கூகிழில் தேடல் செய்தேன். நமது தமிழ்வேதம் நடுவு நிலமை பற்றி பேசுகின்றது:

அறத்துப்பால் - இல்லறவியல் - நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மு.வ உரை:

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

மு.வ உரை:

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை:

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

மு.வ உரை:

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

மு.வ உரை:

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

மு.வ உரை:

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

மு.வ உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

தகவல் மூலம்: திருக்குறள்

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவர்களின் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்பவர்களிற்கு பக்க பலமாக அதிகாரம், ஆயுதம் மற்றும் ஆட்பலம் உண்டு அவர்களுக்காக பேசுவது நடுநிலைமையா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தனை அத்தனை ஆயுத ஆள் அம்பு செனைகளுக்கேதிராக தனியாளாக துணிச்சலாக நிதியின் வழி நின்று குரல் கொடுப்பவரே நடு நிலையாளர்

உங்கள் தனிப்பட்ட அபிலாசைகளே சொந்த இனத்தின் அபிலாசைகள்? மேலே கேட்ட கேள்விக்கு ஏற்கனவே பதில் உள்ளது.

அப்ப போராடி மடிந்தவையும் அதுக்கு ஆதரவு வழங்கியவர்களும் யார்...?? வேண்டும் எண்டால் யாழுக்கையே ஒரு கருத்துக்கணிப்பை வைத்து பாருங்களேன்... முடிவு தெரிந்து விட்டு போகும்...

உங்களுக்காக போராடினவை உங்களுக்கு தொந்தரவு தராமல் போராடி இருக்க வேணும், நீங்கள் சொகுசாக வாழ வளி விட்டு அவர்கள் போராடி இருப்பதுதான் முறை எண்டு ஒரு நடு நிலையோடு மக்களை பற்றி கவலைப்படுவதாக பாசாங்கு காட்டினீங்கள் பாருங்கோ ... அதுக்கு பெயர் கவலை கூட இல்லை... அப்பட்டமான சுயநலம்... நீங்கள் வளமாக வாழ யாராவது போராடி இருக்க வேண்டுமாக்கும்... இதை ஒரு தமிழனால் மட்டும் தான் வெளிப்படையாக சொல்ல முடியும் என்பது மட்டும் உண்மை...

அது எல்லாம் இல்லை போராடினது தவறு எண்டு சொல்லும் ஆளாக இருந்தால், நீங்கள் தமிழரில் எத்தினை விகிதம் எண்டதாவது தெரியுமோ...??

அமைதி என்பதும் சுதந்திரம் எண்டதும் இண்டைக்கு என்ன நடக்குமோ எண்டு நினைத்ததை பயந்து பயந்து கதைப்பதும் அல்ல...

Edited by தயா

வசி, இங்கு வைக்கப்பட்ட வாதம் போரின் வடுக்களிற்கு, போரினால் மக்கள் பட்ட அவலங்களிற்கு ஒரு தரப்பு மட்டுமே காரணமா அல்லது இதில் ஒன்றிற்கு மேற்பட்ட தரப்புக்கள் சம்மந்தப்பட்டு உள்ளனவா என்பது. மக்களிற்கு பாதிப்பு ஆக சிறீ லங்கா அரசினால் மட்டுமே ஏற்படுத்தப்படவில்லை. இதைத்தான் நாம் கூறுகின்றோம். இந்திய அரசு, பல்வேறு இயக்கங்கள், இலங்கை அரசு, த.வி.பு இவர்கள் அனைவருக்குமே போரின் வடுக்களில் நேரடியான பங்கு உண்டு. ஆனால்.. இப்போது போர் ஓய்ந்துள்ள நிலையில் போரின் வடுக்களிற்கு ஒரு தரப்பு மட்டுமே காரணம் என்று கூறி பிரச்சாரம் செய்வதுபற்றியே நான் எதிர்வாதம் வைத்துள்ளேன்.

இங்கு நீங்கள் மக்களை ஒரு தரப்பிற்கு ஒருபக்கம் இழுத்து வைத்துக்கொண்டு கதைப்பது நடுவுநிலமை அல்ல. மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை சிங்கம் கடித்து ஒருபக்கம் இழுத்தது, புலி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது, நரி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது. இங்கு மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை ஒவ்வொரு தரப்பும் தமது தேவைக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள். இப்போது கடைசியில் மானுக்கு வந்த அவலத்தை பார்த்தபோது.. மான் தமகே சொந்தம் என்று கூறி உரிமை கொண்டாடுபவர்களில் ஒருசாரார் சிங்கமே மானிற்கு வந்த அவலத்திற்கு காரணம் எனக்கூறி பிரச்சாரம் செய்கின்றார்கள்.

இங்கு நீங்கள் மக்களை ஒரு தரப்பிற்கு ஒருபக்கம் இழுத்து வைத்துக்கொண்டு கதைப்பது நடுவுநிலமை அல்ல. மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை சிங்கம் கடித்து ஒருபக்கம் இழுத்தது, புலி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது, நரி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது. இங்கு மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை ஒவ்வொரு தரப்பும் தமது தேவைக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள். இப்போது கடைசியில் மானுக்கு வந்த அவலத்தை பார்த்தபோது.. மான் தமகே சொந்தம் என்று கூறி உரிமை கொண்டாடுபவர்களில் ஒருசாரார் சிங்கமே மானிற்கு வந்த அவலத்திற்கு காரணம் எனக்கூறி பிரச்சாரம் செய்கின்றார்கள்.

அப்படி புலி கடித்து இழுத்த சம்பவங்களை உங்களாலை வருணிக்கவோ ஆதாரப்படுத்தவோ முடியுமா...?? அது சரி அப்பாவி மக்கள் எண்டு யாரையோ சொல்லுகிறீயளே அவர்கள் யார்...?? நீங்களும் உங்களது உறவுகளுமா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை சிங்கம் கடித்து ஒருபக்கம் இழுத்தது, புலி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது, நரி கடித்து இன்னோர் பக்கம் இழுத்தது. இங்கு மான் எனப்படுகின்ற அப்பாவி மக்களை ஒவ்வொரு தரப்பும் தமது தேவைக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள். இப்போது கடைசியில் மானுக்கு வந்த அவலத்தை பார்த்தபோது.. மான் தமகே சொந்தம் என்று கூறி உரிமை கொண்டாடுபவர்களில் ஒருசாரார் சிங்கமே மானிற்கு வந்த அவலத்திற்கு காரணம் எனக்கூறி பிரச்சாரம் செய்கின்றார்கள்.

மாப்பிளை.. தமிழ்மக்களில் (மான்கள்) இருந்து வந்தவர்கள்தானே புலிகள்? ஆக, மான்கள் புலிக்குட்டி போட்டிருக்கு..! :o

அப்ப போராடி மடிந்தவையும் அதுக்கு ஆதரவு வழங்கியவர்களும் யார்...?? வேண்டும் எண்டால் யாழுக்கையே ஒரு கருத்துக்கணிப்பை வைத்து பாருங்களேன்... முடிவு தெரிந்து விட்டு போகும்... உங்களுக்காக போராடினவை உங்களுக்கு தொந்தரவு தராமல் போராடி இருக்க வேணும், நீங்கள் சொகுசாக வாழ வழிவிட்டு அவர்கள் போராடி இருப்பதுதான் முறை எண்டு ஒரு நடு நிலையோடு மக்களை பற்றி கவலைப்படுவதாக பாசாங்கு காட்டினீங்கள் பாருங்கோ ... அதுக்கு பெயர் கவலை கூட இல்லை... அப்பட்டமான சுயநலம்... நீங்கள் வளமாக வாழ யாராவது போராடி இருக்க வேண்டுமாக்கும்... இதை ஒரு தமிழனால் மட்டும் தான் வெளிப்படையாக சொல்ல முடியும் என்பது மட்டும் உண்மை... அது எல்லாம் இல்லை போராடினது தவறு எண்டு சொல்லும் ஆளாக இருந்தால், நீங்கள் தமிழரில் எத்தினை விகிதம் எண்டதாவது தெரியுமோ...?? அமைதி என்பதும் சுதந்திரம் எண்டதும் இண்டைக்கு என்ன நடக்குமோ எண்டு நினைத்ததை பயந்து பயந்து கதைப்பதும் அல்ல...

தலை, யாழ் களம் ஒட்டுமொத்த தமிழினத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. எனவே இங்கு வைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு ஒட்டுமொத்த தமிழரின் கருத்தை வெளிக்காட்டப்போவது இல்லை. இங்கு நான் சுருக்கமாக கூறக்கூடியது.. என்னவெல்லாம் நடந்தன நடந்து முடிந்தன.. என்பவை அதாவது.. வரலாறு என்பது ஓர் சுனாமி மாதிரி. இந்த சுனாமியில் பலநூறு ஆண்டுகள் முன்புவரை வாழ்ந்த எமது மூதாதையர்கூட சம்மந்தப்பட்டு உள்ளார்கள். உங்கள் மிகுதி கேள்விகள் பற்றி வேறொரு சமயம் வாய்க்கும்போது கருத்து கூறுகின்றேன்.

தலை, யாழ் களம் ஒட்டுமொத்த தமிழினத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. எனவே இங்கு வைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு ஒட்டுமொத்த தமிழரின் கருத்தை வெளிக்காட்டப்போவது இல்லை. இங்கு நான் சுருக்கமாக கூறக்கூடியது.. என்னவெல்லாம் நடந்தன நடந்து முடிந்தன.. என்பவை அதாவது.. வரலாறு என்பது ஓர் சுனாமி மாதிரி. இந்த சுனாமியில் பலநூறு ஆண்டுகள் முன்புவரை வாழ்ந்த எமது மூதாதையர்கூட சம்மந்தப்பட்டு உள்ளார்கள். உங்கள் மிகுதி கேள்விகள் பற்றி வேறொரு சமயம் வாய்க்கும்போது கருத்து கூறுகின்றேன்.

நடந்து முடிஞ்சது எல்லாம் எங்கட கண்ணுக்கு முன்னாலை தான் நடந்தன... 30 000 போராளிகள் இதே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துதான் வீரச்சாவடைந்தார்கள்... அப்படியாயின் 30 000 குடும்பங்கள் அவை... ! அவர்களுக்கு பின்னாலை அவர்களின் உறவினர்கள் எண்டு லட்ச்சக்கணக்கில் இருந்து இருக்கிறார்கள்...

நீங்கள் ஒரிருவர் வந்து நிண்டு கொண்டு நாங்கள் அப்பவிகள் எங்களை புலிகள் பழாக்கி போட்டார்கள் எண்று சொல்வதாக இருந்தால் உங்களின் உறவினருக்கு உறவினர் கூட புலிகள் அமைப்பில் இல்லை எண்று அர்த்தம்...

ஏன் அப்படி எண்றால் உங்களின் உறவு புலியில் இருந்து மக்களை துன்புறுத்துகிறான் எண்று சொல்ல ஒப்பாது... அப்பவியான உங்களை போண்றவரை துன்புறுத்த அந்த புலிக்கும் ஒப்பாது...

Edited by தயா

அப்படி புலி கடித்து இழுத்த சம்பவங்களை உங்களாலை வருணிக்கவோ ஆதாரப்படுத்தவோ முடியுமா...?? அது சரி அப்பாவி மக்கள் எண்டு யாரையோ சொல்லுகிறீயளே அவர்கள் யார்...?? நீங்களும் உங்களது உறவுகளுமா...??

நான் ஓர் 'போராளியின் வாக்குமூலம்' என்று ஓர் கதையை எழுதி கதை கதையாம் பகுதியில் இணைத்திருந்தேன். வாசித்து பாருங்கள். உங்களுக்குத்தான் த.வி.பு பற்றி ஏதாவது சொன்னால் பிடிக்காதே. நான் புலி கடித்து இழுத்த சம்பவங்கள் பற்றி வருணித்தால், ஆதாரப்படுத்தினால் அதை தாங்கும் சக்தி முதலில் உங்களுக்கு உள்ளதா?

நடந்து முடிஞ்சது எல்லாம் எங்கட கண்ணுக்கு முன்னாலை தான் நடந்தன... 30 000 போராளிகள் இதே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துதான் வீரச்சாவடைந்தார்கள்... அப்படியாயின் 30 000 குடும்பங்கள் அவை... ! அவர்களுக்கு பின்னாலை அவர்களின் உறவினர்கள் எண்டு லட்ச்சக்கணக்கில் இருந்து இருக்கிறார்கள்... நீங்கள் ஒரிருவர் வந்து நிண்டு கொண்டு நாங்கள் அப்பவிகள் எங்களை புலிகள் பழாக்கி போட்டார்கள் எண்று சொல்வதாக இருந்தால் உங்களின் உறவினருக்கு உறவினர் கூட புலிகள் அமைப்பில் இல்லை எண்று அர்த்தம்... ஏன் அப்படி எண்றால் உங்களின் உறவு புலியில் இருந்து மக்களை துன்புறுத்துகிறான் எண்று சொல்ல ஒப்பாது... அப்பவியான உங்களை போண்றவரை துன்புறுத்த அந்த புலிக்கும் ஒப்பாது...

ஆரம்பத்திலும் ஊகத்தின் அடிப்படையில் கருத்து எழுதினீர்கள். நான் அநுராதபுரம் தாக்குதலின்போது எழுதிய கருத்தை பதிந்தேன். பின்னர் என்னை மனிதாபிமானி என்று காட்ட முனைவதாக கிண்டல் செய்தீர்கள். உங்களுக்கு இங்கு வாதத்திற்கு எதிர்வாதம் செய்யமுடியவில்லை. சுற்றிச் சுற்றி தனிப்பட என்னை மட்டுமே விசாரணை செய்ய முடிகின்றது. இன்னமும் கொஞ்சம் போனால்.. சிறீ லங்கா ஐடி கார்ட் இனை இங்கு இணைத்தால்தான் நான் தாயகத்தில் வாழ்ந்தேன் என்று நீங்கள் நம்புவதாயும் சொல்வீர்கள் தலை.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பதற்காக உலகம் தட்டையானது என்று வாதிடுவோருடன் பதில் வாதம் செய்வது எவருக்கும் எந்தப் பயனையும் தராது.உலகம் தட்டையானது என்று வாதிடுபவர் உண்மையில் அவ்வாறு வாதிடுவது தம்மை தனிதுவமானவர்களாகக் காட்டிக் கொள்ளவே அவ்வாறு வாதுடுகிறார்கள்,அதன் மூலம் மற்றவர்களின் கவனிப்பைப் பெற முயல்பவர்கள்.உளவியல் ரீதியில் பார்த்தால் இது ஒரு வகை மனப் பிறழ்வின் வெளிப்பாடே.

போர் கொடியது என்று எலோருக்கும் தெரியும்.சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் எழுந்தது சிறிலங்கா பவுத்த பேரின்வாத அரசின் இராணுவ அடக்குமுறையால்.அதற்க்கு எதிராக தமிழ் மக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புச் சக்தியே விடுதலைப் புலிகள்.புலிகள் வானத்தில் இருந்து குதித்து விடவில்லை.போரின் விழைவுகளுக்கு போரை நடாத்தியவர்களே பொறுப்பானவர்கள்.போரிற்க்கு எதிராகப் போராடியவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

.உலகம் தட்டையானது என்று வாதிடுபவர் உண்மையில் அவ்வாறு வாதிடுவது தம்மை தனிதுவமானவர்களாகக் காட்டிக் கொள்ளவே அவ்வாறு வாதுடுகிறார்கள்,அதன் மூலம் மற்றவர்களின் கவனிப்பைப் பெற முயல்பவர்கள்.உளவியல் ரீதியில் பார்த்தால் இது ஒரு வகை மனப் பிறழ்வின் வெளிப்பாடே.

சரியாக சொனீங்க நாரதர். இப்படி கொஞ்சம் அலையுதுகள் யாழுக்குள்ளே. தாங்கள் ஏதோ ஐ.நா, மக்கள் நலன், மனிதாபிமானம் , மக்களுக்காக பாடுபடுகிறம் என்று. உண்மையிலே மக்களுக்காக உயிரை கொடுக்க முன்வந்த புலிகளை விமர்சிக்க அல்லது அவர்களின் பாதையை விமர்சிக்க இதுகளுக்கு என்ன தகுதி இருக்கு.

புலிகள் பிறந்த இனத்திலே தாங்களும் பிறந்தவை என்ற தகுதியை தவிர இதுகளுக்கு ஒண்டுமே இல்லை.

மாதாந்தம் கொஞ்ச காசு மக்களுக்கு செலவழிச்சா இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுவினமோ. இப்படி ஒரு குறுக்கு வழி எனக்கு இண்டைக்கு தான் தெரியும்.

சும்மா வாக் வாக் என்று கத்துறதை விட்டுவிட்டு, அதுகள் தங்கட சொந்த வாழ்கையை ஒழுங்கா பார்த்தாலே அரைவாசி பிரச்னை தீர்ந்துவிடும்.

சொந்த வாழ்க்கையில் இருக்கும் விரக்தியில், பழியை புலிகள் மீது போடும் கூட்டத்துடன் வாதிப்பதில் எந்த பயனும் இல்லை தயா.

இதுகள் திருந்தாதுகள். நடுநிலைமை, சுயவிமர்சனம், மனிதாபிமானம் இதுகள் எல்லாம் புலிகள் ஆனையிறவை வெல்லக்கே எங்கே போனது. வெல்லும்போது புலிகள், தோற்றுவிட்டால் மக்கள்.

இந்த ஓநாய்களின் ஊளையை மக்கள் நன்றாக புரிஞ்சுகொள்ளுவார்கள்.

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முதல்வன் இப்படி எழுதுகின்றீர்கள்

இந்த வார்த்தைகளை தாங்கள் பாவிக்கலாமா...?

அவர்கள் அடித்தால் மறு கன்னத்தை காட்டவேணும்

அம்மாவை கற்பழித்துக்கொண்டிருந்தால்.........

உண்மையான நீதிபதியாக இருந்து........

இருவரையும் விசாரித்து......

சட்டப்புத்தகத்தில் என்ன உள்ளதோ அதை வாசிக்கவேண்டுமே தவிர...

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டால்

நம்ம நடுநிலை என்னாவது

படித்த புத்தகங்களையாவது மதிக்கவேண்டாமா....

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.