Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?.

யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.

இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக்சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார்கள். போருக்கு பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கிய பொன் சேகா, தேர்தலில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றதும்… முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார் ராஜ்பக்சே. ராணுவத்திற்கு ஆயுதங் களை கொள்முதல் செய்ததில் பொன்சேகா ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின்படி ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் பொன்சேகா. இந்த வழக்கை சுமார் 1 வருட மாக விசாரித்து வந்த ராணுவத் தின் இரண்டாம் நிலை நீதி மன்றம்,’”பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டி ருப்பதால் அவருக்கு 3 வருட கடும் சிறை தண்டனை விதிக்கப் படுகிறது’’என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

“”ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதனை அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ராஜபக்சேவின் பார்வைக்கு தீர்ப்பினை அனுப்பி வைத்தது கோர்ட். அப்போது அமெரிக்காவில் ராஜபக்சே இருந்ததால் இந்த தீர்ப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக் காவிலிருந்து கடந்த 30-ந்தேதி இலங்கை திரும்பியதும், பொன்சேகாவிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஃபைலை அன்று இரவு ஆராய்ந்த ராஜபக்சே, ராணுவ கோர்ட் தந்துள்ள 3 வருட சிறை தண்டனையை இரண்டரை வருடமாக (30 மாதங்கள்) குறைத்து ஒப்புதல் அளித்தார். பொன்சேகாவிற்கு கோர்ட் தந்த சிறை தண்டனையை ராஜபக்சே ஏற்று ஒப்புதல் அளித்ததால் ராணுவ சிறை கொட்டடியிலிருந்து கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைக்கு மாற்றப் பட்டார் பொன்சேகா”’’என்கிறது அதிபர் மாளிகை.

வெலிக்கடை சிறைக்கு பொன் சேகா கொண்டு செல்லப்பட்டதும் வெள்ளை நிறத்தில் அவர் அணிந் திருந்த தேசிய ஆடையை அகற்றி விட்டு கைதிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை மிகவும் லூசாக தொளதொள வென்று இருந்ததால் அதனை அணிய பொன்சேகா மறுக்க, “”இதனைத்தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும். மறுத்தால்… டெய்லர் வந்து அளவு எடுத்து சரியான ஆடையை தைத்து கொண்டு வரும்வரை அரை நிர்வாண மாகத்தான் இருக்க வேண்டும். தேசிய ஆடையுடன் சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இது அதிபரின் உத்தரவு”’’என்று ஒருமையில் அதட்டி னார் ஜெயில் வார்டன். தன் நிலையை நினைத்து நொந்தவாறு அந்த ஆடையை வாங்கிகொண்டார் பொன்சேகா. அவருக்கு 0/22032 எண் கொண்ட கைதி எண்ணை ஆடையில் குத்தி விட்டுப் போனார் ஜெயில் வார்டன்.

“சிறையில் எஸ் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார் பொன்சேகா. இது ஒரு தனிமைச் சிறை. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது, தீவிரவாதி களுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட விஜயதுங்கே அடைக்கப்பட்ட அதே அறைதான் பொன்சேகாவிற்கு தற்போது ஒதுக்கப்பட் டுள்ளது’’’என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1-ந் தேதி இரவு அடைக்கப்பட்ட பொன்சேகா, தூக்கம் இன்றி தவித்தார். மின் விசிறிகள் எதுவும் அந்த அறையில் இல்லை. நூற்றுக்கணக்கான எறும்புகள் அந்த அறையில் குடியிருந்தன. காற்று வசதி இல்லாமலும் எறும்புகளின் கடியிலும் இரவு முழுக்க அவஸ்தைபட்டார். விடியற்காலை 5 மணிக்கு எல்லா கைதிகளையும் எழுப்புவது போல பொன்சேகாவையும் எழுப்ப வந்தார் சிறை பணியாளர். ஆனால் அவர் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருந்ததை பார்த்து “”எழுந்துட்டீங்களா?”’ என்று மட்டும் சொல்லிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.

அந்த அறையில் இருந்த கழிவறையை பயன்படுத்த அவர் நினைத்த போது அதில் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த வார்டனிடம் இதனை அவர் சொன்னபோது, ஒரு அலுமினிய ஜக்கை கொடுத்து ’’””அதோ அங்கிருக்கிற தொட்டியில் தண்ணீ இருக்கு. அதிலிருந்து தண்ணீயை எடுத்து பொது கழி வறையை யூஸ் பண்ணிக்கோங்க”’’

என்று வார்டன் சொல்ல, அதே போல ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார் பொன்சேகா. பிறகு மற்ற கைதிகளைப் போலவே கியூவில் நின்று குளித்தார். குளித்து விட்டு வந்த பொன்சேகாவின் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும் கொடுக்கப்பட்டது. அந்த அலுமினிய தட்டை ஏந்தியவாறு கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். 10 மணிக்கு வந்த டெய்லர் அவருக்கு சரியான ஆடை தைக்க அளவு எடுத்துக்கொண்டு போனார்.

முதல் நாளில் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கவில் லை. காலை போலவே மதியமும் இரவும் கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். மாலை 6 மணிக்கெல்லாம் அறைக்குள் போகச் சொல்லி அவரை பூட்டினர். பகலில் மற்ற கைதிகள் யாரிடமும் பொன்சேகாவை பேச அனுமதிக்கவில்லை சிறை நிர்வாகம். முதல் நாளை போலவே இரண்டாவது இரவிலும் அவஸ்தைப்பட்டார் பொன்சேகா. சிறையில் சொகுசாக பொன்சேகா இருக்கக்கூடாது. அதனால் அச்சகத்தில் பணிபுரியும் வேலையைக் கொடுக்கலாமா அல்லது தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்கலாமா என்று 4-ந்தேதி வரை சிறை நிர்வாகம் ஆலோசித்து கொண்டிருந்தது.

வெலிக்கடை சிறைக்குள் வந்ததிலிருந்து யாரிடமும் பேசுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. நிறைய நேரம் அழுது கொண்டே இருந்தார். ஒருமுறை தனது அறையின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கதறினார் பொன்சேகா. இவரை சிறைக்குள் கொண்டுவருவதற்கு முதல் நாள் வரை அந்த அறையில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன. திடீரென்று அதனை அகற்றி விட்டனர். ஏன் என்று வார்டனிடம் கைதிகள் சிலர் கேட்க,’”இந்த அறையில்தான் நாளை இரவு பொன்சேகா அடைக்கப்பட விருக்கிறார். மின் விசிறிகளை அகற்ற சொல்லி அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது’ன்னு சொன்னார் வார்டன்” என்கின்றன சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகாவை அவரது மனைவி அனோமா சென்று சந்தித்தார். அவரிடம் தான் அணிந்திருந்த தேசிய ஆடையையும் இதுநாள்வரை பயன்படுத்தி கொண்டிருந்த கருப்பு பேக்கையும் கொடுத்தார் பொன்சேகா. கணவனின் நிலையை கண்டு கதறிய அனோமாவிடம் தனது அறையை பற்றியும் தூக்கமில்லா இரவுகளையும் தெரிவித் திருக்கிறார் நொந்து போய். பொன்சேகாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அனோமா,’’””ஒரு போர் வீரனாக நின்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த என் கணவருக்கு கடைசியில் மிஞ்சியது ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும்தான். அந்த நிலையை பார்க்க முடியவில்லை. காற்று வசதியில்லாமலும் எறும்பு கடியிலும் கொடுமையை அனுபவிக்கிறார் என் கணவர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை சுகாதாரமின்றி அசுத்தமாக இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விரைவில் பதில் சொல்லியே ஆக வேண்டும்”’’என்றார்.

பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள கட்சியான ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி,’’””பொன் சேகாவை பார்த்து அச்சம் கொண்டுள்ளது இந்த அரசு. அதனால்தான் கோர்ட் தீர்ப்பில் அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்து அவரை வெலிக்கடை சிறையில் அடைத்திருக்கிறார் அதிபர்”’’என்கிறார். ஆனால் மற்றொரு சிங்கள கட்சியான ஜாதிஹெல உறுமயவின் செய்தி தொடர்பாளர் நிசாந்தஸ்ரீவர்ண சிங்கே,’””இந்த தண்டனை பொன்சேகாவிற்கு சரியான, நியாயமான தண்டைனைதான். இவர் ராணுவ தளபதியாக இருந்த போது ராணுவ அதிகாரிகள் பலருக்கும் இதே போல தணடனை கொடுத்திருக்கிறார். அதே சட்டத்தில்தான் இவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டிருக் கிறது”’’என்கிறார்.

இதற்கிடையே,’””குற்றங்களை ஒப்புக்கொண்டு பொன்சேகா மன்னிப்பு கேட்கட்டும். அவருக்கு பொது மன்னிப்பு கொடுக்க தயாராக இருக்கிறார் அதிபர் ராஜபக்சே”’’என்கிறார் பொன்சேகாவின் தண்டனை குறித்து கருத்து தெரிவிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அனோமா பொன்சேகாவோ,’””என் கணவர் குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்யாத அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் ததற்காக இந்த அரசாங்கம் ஒரு நாள் வருந்த போகிறது”’’என்கிறார் ஆவேசமாக.

இந்நிலையில், பொன்சேகாவின் இன்றைய நிலை அறிந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஈழத்த மிழர்கள்,’””சர்வதேச நெறிகளுக்கு எதிராகவும் மனித நேயமின்றியும் கொடூரமான யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே. இரண்டாவது குற்ற வாளி பொன்சேகா. இரண்டாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அதேபோல முதல் குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும். அதிலிருந்து ராஜபக்சே தப்பிக்க முடியாது. கொன்றவனுக்கு தண்டனை என்றால் கொல்ல ஏவியவனையும் (ராஜ பக்சே) நிச்சயம் காலம் தண்டிக்கும்” என்கிறார்கள்.

http://www.tharavu.com/2010/10/blog-post_675.htmlகொழும்பிலிருந்து எழில்

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

]பாகிஸ்தானுக்குள், 1999இல் ஒரு ராணுவ சதி மூலமாக ஆட்சிக்கு வந்த முஷாரப், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். போருக்கு ஆதரவு திரட்ட பாகிஸ்தான் தலைவர் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்குகொள்ள அதிகமான அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவித்தன.

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/73767665896582657465/Kozhi%20Kuvuthu%20-%20Anne%20Anne%20Sippai%20Annae....mp3

அண்ணே ...அண்ணே... சிப்பாய் அண்ணே...

உமக்கு புத்தி கொஞ்சம் போதலண்னே...

:blink::wub::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?.

யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.

யார் குத்தியென்றாலும் அரிசியானால் சரி

தமிழரின் தற்போதைய தலைவரை உள்ளை போட்டுவிட்டாங்கள்... தமிழருக்கு தலைமைதாங்க யார் வந்தாலும் காலம் சரியில்லாமல் போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பலர் பல ஆண்டுகளாக இப்பொழுதும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தமிழர்களின் அவலங்களைப் பற்றி இப்பொழுதாவது பொன்சேகாவுக்கு நினைத்துப் பார்ப்பாரா?

சில வருடங்களுக்கு முன்பு பொன்சேகா தமிழர்களைப் பார்த்து 'தமிழர்கள் இங்கு சிறிலங்காவில் இருக்கலாம். ஆனால் உரிமை கேட்கக்கூடாது. நாங்கள் சிங்களவர்கள் தாரதைப் பெற்றுக் கொள்ளவேண்டும்' கேட்டார். இப்பொழுது பொன்சேகா, மகிந்தா வழங்கும் சிறை உணவினை உண்டு அழுது, விரக்தியுடன் வாழ்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தற்போதைய தலைவரை உள்ளை போட்டுவிட்டாங்கள்... தமிழருக்கு தலைமைதாங்க யார் வந்தாலும் காலம் சரியில்லாமல் போகுது...

தமிழர்களின் அடுத்த தலைவராக மகிந்தாவையும், கோத்தாவையும் நாம் தெரிவு செய்ய வேண்டும்.

இயலாமை என்பது ஒரு வித மனநோய்....

சில காலம் முன் தமிழ் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்பட்டு தமிழர்களின் இரட்சகனாக ஆக்கப் பட்ட பொன்சேகாவின் துயரம் பற்றி இன்று தமிழ் ஊடகங்கள் தேசிய போதை ஊற்றி "தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கின்றான்" என்ற பாணியில் எழுதுகின்றன

ஒரு பாலியல் தொலிலாளிக்கு தன் தொழில் சார்ந்து இருக்கும் நேர்மை கூட எம் தமிழ் தேசிய ஊடகங்களுக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

Nizali

அருமையான கருத்துக்கள். இதே ஊடகங்களும், எமது புலம்பெயர் அரசியல் வித்தகர்களில் எத்தினை பேரும், பொன்சேக்கா வரவேண்டும், வருவார் என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள்? இப்போது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.