Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது பேராசைகளின் பட்டியல்....!!!

Featured Replies

காசு இல்லாத உலகம் வேண்டும்

மாசு இல்லாத சூழல் வேண்டும்

எல்லை இல்லாத தேசம் வேண்டும்

கோசம் இல்லாத அரசியல் வேண்டும்

ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும்

நடுநிலையான நீதி வேண்டும்

வேஷம் இல்லாத மேடை வேண்டும்

தேசம் மதிக்கும் ஆடை வேண்டும்

யுத்தம் இல்லாத மண்ணிலம் வேண்டும்

இரத்தம் தோயாத செந்நிலம் வேண்டும்

தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும்

தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும்

மானம் காத்த பெண்ணினம் வேண்டும்

பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும்

தன்னினம் காத்த மறவர் வேண்டும்

மண்ணில் அறம்காத்த மாவீரர் வேண்டும்

விலைபோகாத தலைவன் வேண்டும்

தலைவணங்காத தன்மானம் வேண்டும்

மறைந்தவை மீண்டும் தோன்ற வேண்டும்

நல்லதைச் சொல்லும் நண்பர் வேண்டும்

நல்லதை அறிந்திடும் நன்மதி வேண்டும்

கனவுகள் நிறைந்த உறக்கம் வேண்டும்

நினைவுகள் நிறைந்த நனவுகள் வேண்டும்

இனிமைகள் நிறைந்த உணர்வுகள் வேண்டும்

தனிமைகள் அகற்றும் பொழுதுகள் வேண்டும்

அவசியப்பட்ட தேவைகள் வேண்டும்

அவசியப்படாத நிலைமைகள் வேண்டும்

அந்நியப்படாத உறவுகள் வேண்டும்

தெளிவாய் விளங்கும் புரிதல்கள் வேண்டும்

எதிரியை மதிக்கும் நற்குணம் வேண்டும்

நோயே இல்லாத சற்குணம் வேண்டும்

தாய் தந்தை பெருமை காக்க வேண்டும்

தாய்மண் மறக்காத பற்று வேண்டும்

தயவே இல்லாத வாழ்க்கை வேண்டும்

என்றும் தளராத தன்னம்பிக்கை வேண்டும்

நிஜமான நிகழ்காலம் வேண்டும்

வளமான எதிர்காலம் வேண்டும்

பந்தியில் அமர்ந்த உணவுகள் வேண்டும்

சந்தியில் பார்க்கிற காட்சிகள் வேண்டும்

விபத்துக்கள் இல்லாத வீதிகள் வேண்டும்

ஆபத்து இல்லாத அமர்க்களம் வேண்டும்

சொத்துப்பத்து கொஞ்சம் வேண்டும்

தத்தெடுக்காத புகழ் வேண்டும்

வேகம் தாண்டாத மகிழூர்தி வேண்டும்

விவேகம் தவறாத வேகம் வேண்டும்

என்றும் தணியாத தாகம் வேண்டும்

தாகம் தணியாத முயற்சி வேண்டும்

நன்கு பயின்ற பயிற்சி வேண்டும்

காதலை காதலிக்கும் காதலி வேண்டும்

உள்ளம் பேதலிக்காத காதல் வேண்டும்

சொந்தம் கொண்டாட பந்தம் வேண்டும்

மஞ்சம் காண மனைவி வேண்டும்

கொஞ்சும் குரலில் கெஞ்சல்கள் வேண்டும்

அன்பு நிறைந்த திட்டல்கள் வேண்டும்

வம்பு குறைந்த கிண்டல்கள் வேண்டும்

என்றும் தொடரும் தேடல்கள் வேண்டும்

பிரியும் தருண வாடல்கள் வேண்டும்

மீண்டும் சேரும் கூடல்கள் வேண்டும்

சின்னச் சின்ன ஊடல்கள் வேண்டும்

தோன்றி மறையும் கோபங்கள் வேண்டும்

எல்லைதாண்டும் தாபங்கள் வேண்டும்

விதிவரை வாழும் சந்தோசம் வேண்டும்

உண்மை துலக்கும் துணிவு வேண்டும்

வன்முறை தவிர்க்கும் நன்முறை வேண்டும்

சொல்முறை தவிர்க்காத வழக்கம் வேண்டும்

செயல்முறை பிழைக்காத பழக்கம் வேண்டும்

வல்லினம் தவிர்த்த வார்த்தைகள் வேண்டும்

அன்பு மட்டுமொன்றே அறமாக வேண்டும்

அன்புக்கு அனைவரும் அடிமையாக வேண்டும்

கலக்கம் இல்லாத கல்மனம் வேண்டும்

கல்நெஞ்சையும் கரைக்கும் நல்மனம் வேண்டும்

கவலை குறைக்கும் அழுகைவேண்டும்

காரணத்தோடு கண்ணீர் வேண்டும்

கண்ணில் தோன்றும் சாமி வேண்டும்

உண்மையான பக்தி வேண்டும்

புண்ணியம் செய்யும் வரமும் வேண்டும்

வரிகள் விளங்கும் பாடல்கள் வேண்டும்

திகட்டல் இல்லாத திரைப்படம் வேண்டும்

விளம்பரமில்லாத விமர்சனம் வேண்டும்

உண்மைகள் உரைக்கும் ஊடகம் வேண்டும்

பேசுகின்ற ஓவியம் வேண்டும்

மெல்லிசையான இன்னிசை வேண்டும்

புல்லும் அசையும் தென்றல் வேண்டும்

பூமரங்களோடு முன்றல் வேண்டும்

சின்னக்கூடாய் ஒரு வீடும் வேண்டும்

துளித்துளியான மழைகள் வேண்டும்

துடிதுடிப்பான மழலை வேண்டும்

பரபரப்பான தொழிலும் வேண்டும்

உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும்

வரவுக்கேற்ப செலவுகள் வேண்டும்

மிஞ்சும் அளவில் சேமிப்பு வேண்டும்

காலைச் சூரிய உதயம் வேண்டும்

இரவில் ஒளிர்க்கும் நிலவு வேண்டும்

மின்னி மறையும் விண்மீன் வேண்டும்

துள்ளிக் குதிக்கும் மீன்கள் வேண்டும்

அலைகள் நிறைந்த கடற்கரை வேண்டும்

நிலவு பொழியும் மணற்கரை வேண்டும்

இயற்கையை ரசிக்கும் ரசனை வேண்டும்

இரசித்துப்பார்க்க இயற்கைகள் வேண்டும்

இயற்கையைக் காக்கவும் இயக்கங்கள் வேண்டும்

அழிவே இல்லாத அகிலம் வேண்டும்

புனிதமான அன்பும் வேண்டும்

மனிதம் என்றும் வாழவேண்டும்

மோசம் செய்யாத பாசம் வேண்டும்

பாசம் நிறைந்த இரத்தம் வேண்டும்

தளைத்தோங்கும் தலைமுறை வேண்டும்

அம்சமான வம்சம் வேண்டும்

என்றும் மாறாத இளமை வேண்டும்

எதையும் ஏற்றும் திறமை வேண்டும்

அனைத்தையும் தாங்கும் பொறுமை வேண்டும்

ஆதரவோடு முதுமை வேண்டும்

நிம்மதியான முடிவும் வேண்டும்

சொர்க்கமோ நரகமோ ஓரிடம் வேண்டும்

மீண்டும் பிறக்காத வரம் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! எல்லாம் வேண்டும்!

போதுமென்ற மனமும் வேண்டும்!

Edited by பார்த்தீபன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=2dFfc4JbKtY

வேண்டும் ..வேண்டும்.. :rolleyes::D:D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆசையும் வைத்துக் கொண்டு...போதும் என்ட மனம் வேண்டும் என்டால் :rolleyes:

  • தொடங்கியவர்

இவ்வளவு ஆசையும் வைத்துக் கொண்டு...போதும் என்ட மனம் வேண்டும் என்டால் :rolleyes:

ஆசை யாரைத்தான் விட்டுது.......? :D

Edited by பார்த்தீபன்

  • தொடங்கியவர்

குட்டி! ஒண்ணு இல்லாட்டி இன்னொண்னு.... :rolleyes:

இதுவும் நல்லாத்தான் இருக்குது! :D

Edited by பார்த்தீபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசை என்றே முன்கூட்டி கூறிவிட்டீர்கள் பார்த்தீபன். உங்களது ஆசைகளை படிக்கும்போது எங்களுக்கும் ஆசைகள் தொற்றிவிட்டன.

என்ன செய்யலாம்? இப்போதைக்கு ஒரு பெருமூச்சை விட்டுக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

பேராசை என்றே முன்கூட்டி கூறிவிட்டீர்கள் பார்த்தீபன். உங்களது ஆசைகளை படிக்கும்போது எங்களுக்கும் ஆசைகள் தொற்றிவிட்டன.

என்ன செய்யலாம்? இப்போதைக்கு ஒரு பெருமூச்சை விட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் பெருமூச்சு விடுறதைப் பார்த்தால் என் பேராசைகளிலுள்ள சிலவரிகளில் அதிக பேராசைப்பட்டுள்ளதைபோல படுகின்றதே! :):D

காதலை காதலிக்கும் காதலி வேண்டும்

உள்ளம் பேதலிக்காத காதல் வேண்டும்

சொந்தம் கொண்டாட பந்தம் வேண்டும்

மஞ்சம் காண மனைவி வேண்டும்

கொஞ்சும் குரலில் கெஞ்சல்கள் வேண்டும்

அன்பு நிறைந்த திட்டல்கள் வேண்டும்

வம்பு குறைந்த கிண்டல்கள் வேண்டும்

என்றும் தொடரும் தேடல்கள் வேண்டும்

பிரியும் தருண வாடல்கள் வேண்டும்

மீண்டும் சேரும் கூடல்கள் வேண்டும்

சின்னச் சின்ன ஊடல்கள் வேண்டும்

தோன்றி மறையும் கோபங்கள் வேண்டும்

எல்லைதாண்டும் தாபங்கள் வேண்டும்

விதிவரை வாழும் சந்தோசம் வேண்டும்

பார்த்துப்பா.... ! எந்த விசயத்துக்கும் அவசரப்படலாம்... ஆனால்... சிலதுகளில கொஞ்சம் நிதானம் தேவை! :D:)

Edited by பார்த்தீபன்

என்னப்பு நீங்கள் மணிவாசகர் சுவாமிகளிண்ட மறு அவதாரமோ... சிவபுராணம் மாதிரி எழுதி இருக்கிறீங்கள்.

நான் உங்கள் பேராசை பட்டியலை படித்துக்கொண்டு இருந்தபோது எனது பதினொரு வயது பெறாமகள் ஒருத்தி எனக்கு தொலைபேசி எடுத்தாள். என்ன செய்துகொண்டு இருக்கிறீங்கள் என்று கேட்டாள். நான் சொன்னன் ஒரு மாமா தனது ஆசைகளை கவிதை மாதிரி எழுதிபட்டியல் போட்டு இருக்கிறார் அதை வாசிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டு. ஓ அப்படியோ எண்டு அவள் கேட்க.. நான் வாசிக்கிறதை சொல்லவோ என்று கேட்டுபோட்டு... நீங்கள் எழுதினதுகளை ஆங்கிலத்தில் ஒவ்வொன்றாக அவளுக்கு சொன்னன். ஓவ்வொன்றையும் சிரிச்சு சிரிச்சு கேட்டாள், ஒவ்வொன்றையும் கேட்கும்போது ஒவ்வோர் comment சொன்னாள்.

பெண்ணினம் போற்றும் ஆணினம் வேண்டும் என்று இதை மொழிபெயர்த்து சொன்னதும் இப்படி சொன்னாள்:

Ok, women respect men is the Dumbest idea in the world why does woman have to respect men? Why cant men respect women?

நான் சொன்னன் இல்லை மாமா ஆம்பிளை என்றபடியால அப்பிடி எழுதி உள்ளார் என்று. <_<

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

என்னப்பு நீங்கள் மணிவாசகர் சுவாமிகளிண்ட மறு அவதாரமோ... சிவபுராணம் மாதிரி எழுதி இருக்கிறீங்கள்.

கரும்பு............! நீங்கள் ரொம்ப குறும்பு! <_<

Edited by பார்த்தீபன்

  • தொடங்கியவர்

நான் உங்கள் பேராசை பட்டியலை படித்துக்கொண்டு இருந்தபோது எனது பதினொரு வயது பெறாமகள் ஒருத்தி எனக்கு தொலைபேசி எடுத்தாள். என்ன செய்துகொண்டு இருக்கிறீங்கள் என்று கேட்டாள். நான் சொன்னன் ஒரு மாமா தனது ஆசைகளை கவிதை மாதிரி எழுதிபட்டியல் போட்டு இருக்கிறார் அதை வாசிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டு. ஓ அப்படியோ எண்டு அவள் கேட்க.. நான் வாசிக்கிறதை சொல்லவோ என்று கேட்டுபோட்டு... நீங்கள் எழுதினதுகளை ஆங்கிலத்தில் ஒவ்வொன்றாக அவளுக்கு சொன்னன். ஓவ்வொன்றையும் சிரிச்சு சிரிச்சு கேட்டாள், ஒவ்வொன்றையும் கேட்கும்போது ஒவ்வோர் comment சொன்னாள்.

பெண்ணினம் போற்றும் ஆணினம் வேண்டும் என்று இதை மொழிபெயர்த்து சொன்னதும் இப்படி சொன்னாள்:

Ok, women respect men is the Dumbest idea in the world why does woman have to respect men? Why cant men respect women?

நான் சொன்னன் இல்லை மாமா ஆம்பிளை என்றபடியால அப்பிடி எழுதி உள்ளார் என்று. :lol:

கரும்பு! "பெண்ணினம் போற்றும் ஆணினம் வேண்டும்" என்று குறிப்பிட்டது பெண்ணினத்தைப் போற்றி நடக்கும் ஆணினம் வேண்டும் எனும் பொருள்படத்தான். :)

ஆனால் அது தெளிவில்லாமல் இருப்பதனால் அதனை "பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும்" என தற்போது மாற்றியுள்ளேன். இது சரியான விளக்கத்தினை அளிக்கும் என நம்புகின்றேன்.

அதுசரி கரும்பு.... உங்களுடைய 11 வயது பெறாமகளுக்கு நீங்கள் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். <_<

இதனைப் பார்க்கும்போது... "தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும்" என்ற என்னுடைய ஆசை காலப்போக்கில் நிராசை ஆகிவிடும்போல் இருக்கின்றதே!

:D:)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை இல்லாத தேசம் வேண்டும்

தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும்

தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும்

நன்றாக உள்ளது ஆசைகள் பார்த்தீபன்

ஆனால்

ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்

உதாரணமாக

இது உதைக்குதே

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டும்

அத்துடன்

எல்லைகள்இல்லா உலகம் வேண்டும்

அந்த சமயத்தில்... என் எண்ணவோட்டத்தில் தோன்றியவை அனைத்தையும் எழுதியிருந்தேன். <_<

எல்லைகளினால்தான் பல தொல்லைகள்,பிரச்சனைகள். அதனால் எல்லை இல்லாத தேசம்...அதாவது, எல்லோரையும் சமனாய்ப் பார்க்கும் ஒரே தேசமாக இந்த உலகம் மாறினால் நல்லாய் இருக்குமே என்ற எண்ணம்- ஆதலால்தான் அந்த வரியை எழுதியிருந்தேன்.

தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல... ஒவ்வொரு உண்மையான தமிழனினதும் ஆசையும், எதிர்பார்ப்பும், கனவும் அதுதான்! :)

சுட்டிக்காடியமைக்கு நன்றி அண்ணா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பார்த்தீபன்

எல்லைகள் இல்லா உலகம் என்பது பரந்து பட்டது

எமக்கென்று ஒரு நாடு என்பது சிறிய வட்டமாக இருந்தது

அதனால்தான் எழுதினேன்

ஏனெனில்

நாம் இந்தியரால் பகைவராக பார்க்கப்பட காரணமே இந்த அகல தமிழர்நாடுதான்

எம் எல்லோரின் அவாவும் தமிழருக்கென்று ஒரு நாடுதான் அதில் எந்த குளப்பமும் இல்லை

எனக்கு எது மீது நம்பிக்கை உள்ளதோ... இல்லையோ... !? ஆனால் நம் மாவீரர்கள் கண்ட கனவு மீதும், அவர்கள் கொண்டிருந்த இலட்சிய தாகத்தின் மீது, அவர்கள் செய்த தியாகங்களின் மீதும் எனக்கு தளராத நம்பிக்கை இருக்கின்றது. அவை என்றைக்குமே வீண் போகாது....!!!

ஆமென்

நானும் பின்னர் யோசித்தேன். அதில் ஓர் மயக்கம் உள்ளது. அத்துடன், இரண்டு பக்கத்தாலும் அர்த்தம் உள்ளது. நீங்கள் கூறிய தமிழ்விசயத்தில்... நான் அவளுடன் தமிழில் கதைப்பது. ஆனால்.. அவள் தனக்கு கஸ்டமாய் உள்ளது ஆங்கிலத்திலேயே கதைக்கும்படி கூறுவாள். சிறிய சொற்களை சமயம் வாய்க்கும்போது சொல்லிக்கொடுப்பது.. அத்துடன் இயல்பாக கதைக்கும்போது அவள் ஆங்கிலத்தில் ஏதாவது சொல்லும்போது அதை தமிழில் எப்படி சொல்வது என்றும் சில சமயங்களில் சொல்லிக்கொடுப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு அண்ணா :lol:

அப்பாடா இம்புட்டு ஆசையா? நம்மளுக்கு இதிலை பாதி கூட இல்லையப்பா???? <_<

(நல்லா சந்து ல சிந்து பாடுவிங்க போல) :)

  • தொடங்கியவர்

ஆமென்

"ஆமென்"...! அருமையான பதில்... விசுகு அண்ணா! <_<

"ஆமென்" என்பது கிறிஸ்தவத்தில் பல விதமான தொனிகளில் பாவிக்கப்படும்!

1.ஏற்றுக்கொள்ளல்

2.ஆச்சரியப்படுதல்

3.நிறைவு செய்தல்

இதில்... எந்த வகையான "ஆமென்" உங்களுடையது அண்ணா...? :)

  • தொடங்கியவர்

நானும் பின்னர் யோசித்தேன். அதில் ஓர் மயக்கம் உள்ளது. அத்துடன், இரண்டு பக்கத்தாலும் அர்த்தம் உள்ளது. நீங்கள் கூறிய தமிழ்விசயத்தில்... நான் அவளுடன் தமிழில் கதைப்பது. ஆனால்.. அவள் தனக்கு கஸ்டமாய் உள்ளது ஆங்கிலத்திலேயே கதைக்கும்படி கூறுவாள். சிறிய சொற்களை சமயம் வாய்க்கும்போது சொல்லிக்கொடுப்பது.. அத்துடன் இயல்பாக கதைக்கும்போது அவள் ஆங்கிலத்தில் ஏதாவது சொல்லும்போது அதை தமிழில் எப்படி சொல்வது என்றும் சில சமயங்களில் சொல்லிக்கொடுப்பது.

நல்லது கரும்பு.. எமது தாயையும் தாய்மொழியையும் நாங்கள்தான் காப்பாற்றவேண்டும்!

புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அடுத்த தலைமுறைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுப்பதில் கஷ்டத்தினை பார்க்காமல் எமது தாய்மொழியை வளர்ப்போம்! பாதுகாப்போம்!

நன்றி கரும்பு! <_<

தமிழரோடு பேசும்போது தமிழிலேயே பேசுவோம்!

நல்லது கரும்பு.. எமது தாயையும் தாய்மொழியையும் நாங்கள்தான் காப்பாற்றவேண்டும்! புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அடுத்த தலைமுறைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுப்பதில் கஷ்டத்தினை பார்க்காமல் எமது தாய்மொழியை வளர்ப்போம்! பாதுகாப்போம்! நன்றி கரும்பு! :Dதமிழரோடு பேசும்போது தமிழிலேயே பேசுவோம்!

யோவ் பாப்பு, ஆக்களுக்கு மேலால தேரை ஏத்தமாட்டன் என்று வாக்குறுதி தந்துபோட்டு இப்ப குதிரைவாலாலை சுழட்டி அடிக்கிறீங்கள். அவளுக்கு கஸ்டத்தினை பார்க்காமல் தமிழ் சொல்லிக்குடுக்கிற நேரம் நான் புதுசாய் ஏதாவது ஏலியன் பாசையை, ஸ்பானிஷ், சமஸ்கிருதம் என்று ஏதாச்சும் படிச்சு அந்த மொழியில நாலைஞ்சு புத்தகங்களும் எழுதிப்போட்டு போகலாமப்பு. உங்கள் பேராசையில அந்த ஒரு ஆசையை இப்போதைக்கு pendingஇல போட்டு வையப்பு.

:) :) :):D:):D

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிறக்காத வரம் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! எல்லாம் வேண்டும்!

போதுமென்ற மனமும் வேண்டும்!

பார்த்தீபன், மனிதருக்குள்ள ஆசைகளை தான் நீங்கள் பேராசையாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

இவ்வளவு ஆசைகளும் கிடத்த பின்....., மீண்டும் பிறக்காத வரம் வேண்டும் என்று சொல்வீர்களா? :D

.

  • தொடங்கியவர்

பார்த்தீபன், மனிதருக்குள்ள ஆசைகளை தான் நீங்கள் பேராசையாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

இவ்வளவு ஆசைகளும் கிடத்த பின்....., மீண்டும் பிறக்காத வரம் வேண்டும் என்று சொல்வீர்களா? :)

.

இறக்காத வரம் வேண்டும் என்று கேட்டாப் போச்சு! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.