Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2010.10.30) 20 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை.....GTN னின் விசேட தொகுப்பு‐மீள்பிரசுரம்‐

Featured Replies

:rolleyes:

பாண்டி பஜார் சம்பவம் என்னால் மறக்கப்பட முடியாதது. இந்திரா அம்மையாருக்குப் பெரும் அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்திய சம்பவம் அது. அச்சமயத்தில் டில்லி செங்கோட்டையில் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த என்னால் இதை அவதானிக்க முடிந்தது..! :D:lol::)

:D :D :D:lol:

Edited by thappili

எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொண்டால் அது சிங்களத்துக்கே சாதகமானது என்பதை எந்த ஒரு இயக்கத்தலமையும் உணர்ந்ததில்லையா? இந்தியப் புலனாய்வாளர்கள் பொறாமையை ஊட்டுவதற்கு இயக்கத்தலமைகள் என்ன பவாக்களா? சொந்தப் புத்தி எங்கே போனது? இவ்வாறு தமிழர்கள் அல்லாத ஒரு முன்றாம் நபர் கேள்வி கேட்கலாம் ஆனால் எம்மால் அதை கேட்கமுடியாது. எமக்கந்த அருகதை இல்லை. நினைத்தபடி எம்மை அடுத்தவன் ஆட்டிவைக்குமளவுக்கு எம்மிடம் பலவீனம் தொன்றுதொட்டு இருக்கின்றது. பிடிவாதம் விட்டுக்கொடுக்கமுடியாத தனிமனிதக் குணம் என மிக இறுக்கமான நிலை என்பது அனைத்து இயக்கத்தலைமைகளினதும் மற்றும் அனைவரினதும் சொத்து தவிர அது புலிகளினதோ அல்லது தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட குணாதிசயம் இல்லை. என்னால் சுட்டிக்காட்டப்படுவது இயக்கமேதல்களையும் அதன் விழைவுகளையுமே.

எங்களுக்கு எண்று யாரை சொல்ல வருகிறீர்கள்...??? நான் எனது தலைவர் , தலைவருக்கு கீழ் இருக்கும் மற்றய போராளிகளுடனா...?? கொள்கையளவில் முரண்பட்டு வேறு அமைப்புக்களை ஆரம்பித்தவர்களையா....??

பிரபாகரன் என்பவர் எதுவுமே செய்யாது அவர்களை போல சோம்பி சோத்து பாசல்களை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்து இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லாது இருந்து இருக்கலாம் தான்... ஆனால் போராட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டும் எனும் போது தாக்குதல்களும் தீரச்செயல்களும் மக்கள் மத்தியில் புலிகளுக்கு கொடுத்த பிரபல்யத்தை விரும்பாத மற்ற அமைப்புக்கள் சேறடிப்புக்களையும் சீண்டல்களையும்( சில வேளைகளில் காட்டிக்கொடுப்புக்களும், மட்டும் தான் செய்தன... அவர்களின் பிரதான எதிரி புலிகளாக மட்டும் ஆன போது தலைவரால் எதுவும் செய்வதுக்கு இருந்து இருக்க முடியாது...

நான் தலைவரை நம்பி அவரின் கீழ் போராட போனவனாக இருந்தால் எனது பாதுக்காப்புக்கும் , நம்பிக்கைக்கும் பொறுப்பு தலைவரே... அதை காக்க தவறும் பட்ச்சத்தில் அவர் தலைவராக இருக்க தகுதி அற்றவர்...

1985 களில் புலிகளால் யாழ்ப்பாணம் பூராகவும் ஆதரவாளர்களை வைத்து பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு வியாபாரம் மூலம் தங்களின் உணவுக்கும் செலவுக்கும் பணம் ஈட்டப்பட்டு வந்தன... மக்களின் வரவேற்ப்பும் அதுக்கு இருந்தது... அந்த வேளையில் சாவகச்சேரி நுணாவில் சந்தியில் இருந்த பல்பொருள் அங்காடி TELO அமைப்பினரால் சூறையாடப்பட்டது... சூறையாடி விட்டு போய் இருந்தாலும் பறவாய் இல்லை காசு வைத்து இருந்த லாச்சியில் ஒரு குண்டை கழட்டி திறந்தால் வெடிக்குமாறு வைத்து விட்டும் போயினர்... பயிற்ச்சி இல்லாத எனது ஒண்று விட்ட அண்ணன் ஒருவர் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர் அந்த கடையில் உதவியாளராக வேலை செய்த மாணவர் அந்த குண்டு வெடித்து காயம் படுகிறார்...

நான் என்ன கேக்கிறன் எண்டால் இந்திய படையில் முழுமையான ஆதரவும் பலமும் இருந்தால் அவர்கள் என்ன வேண்டும் எண்டாலும் செய்யலாம், தனது போராளிகளுக்கு என்ன நடந்தாலும் பறவாய் இல்லை எண்டு புலிகள் பேசாமல் அமைதி காத்து இருக்க வேண்டுமோ....

எல்லா விடயங்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன... முடிந்த அளவுக்கு அவைகளையும் சீர் தூக்கி பாருங்கள்...

இனத்துக்கான விடுதலைப்போராட்டத்தில் மதப்பிளவுகள் என்பது இனவிடுதலையை கேள்விக்குறியாக்கியது என்பதை மறைக்கமுடியாது. இன அடிப்படையில் பிரிவினையா அல்லது மத அடிப்படையில் பிரிவினையா என்ற அடிப்படையை தோற்றுவித்தது. இந்துக்களுக்கு ஒரு தமிழீழம் இஸ்லாமியர்களுக்கு ஒரு தமிழீழம் குறித்து சிந்திக்க முடியாது. பிறகு மலையகத் தமிழர்களுக்கு ஒரு குட்டித் தமிழீழம் யாழ்பாணத்துக்குள் இருக்கும் புரட்டஸ்தாந்துக்களுக்கு ஒரு சுக்குட்டி தமிழீழம் என பட்டியல் நீண்டு செல்லும்.

சுந்திரம் கிடைத்த பின்பு அல்ல அதற்கு முன்னமும் இந்துக்கள் கிருத்துவர்கள் முஸ்லீம்கள் என அளுக்கு ஆள் எட்டாம் பொருத்தம் தான். தமிழினம் என்பது முஸ்லீம் கிருத்துவர் இந்துக்கள் என்ற மும்மதங்களையும் பின்பற்றும் மக்களும் இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் அடக்கியதுதான். இஸ்லாமியர்கள் இனத்தை விட மதத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்தார்கள் என்பதும் உண்மை ஏனைய இந்து கிருத்துவர்கள் சாதி மதம் பிரதேசவாதம் என்பதற்கு பின்பே இனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதும் உண்மை. இதுதான் தொன்று தொட்டு தொடர்ந்த நிலை. சிங்களம் இனரீதியாக ஒடுக்கியபோதே இனம் என்ற முக்கியத்துவம் முன்னுக்கு வர முற்பட்டது. ஆரம்ப காலங்களில் பல்லாயிரம் முஸ்லீம் போராளிகளும் இனவிடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்டதும் இந்த அடிப்படையில் தான்.

இணையவன் குறிப்பிட்டது போல் என்னும் சில வருடங்களில் இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்பது தவிர்க்கமுடியாதது. அதன் பின் மூன்றாவது சிறுபான்மையாக தமிழ்பேசும் இந்துக்களும் கிருத்துவர்களும் இருப்பார்கள். பெரும்பான்மை இந்துக்களை கொண்ட சிங்களத்துக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எவ்வாறு முரண்பட்டார்களோ அவ்வாறானதொரு நிலை எதிர்வரும் காலங்களில் பெரும்பான்மை இஸ்லாமியத்தமிழர்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்தில் இந்துக்களுக்கு வரலாம்.

இன அடிப்படையில் சிங்களம் தமிழனை அம்மணமாக்கி விட்டிருப்பினும் தமிழனுக்கு மதம் என்ற சட்டை நிர்வாணத்தை மறைப்பதாகவே அவன் எண்ணுகின்றான். இதற்கு தீர்வே இல்லை. இப்படியே அழியவேண்டியதுதான்.

இந்துக்களின் போராட்டமாக எப்போதும் தமிழர்களின் போராட்டம் முன் எடுக்க படவில்லை... இனிவரும் காலங்களும் அப்படி இருக்காது...

ஒரு இனம் தன்னை மற்றய இனத்தின் அங்கமாக சிந்தித்து இருக்க வேண்டும்... ஏன் நீண்ட தூரம் போக வேண்டும்... தமிழகத்தில் நிறைய முஸ்லீம்கள் இருக்கிறார்கள்... எப்போதாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களாக அவரகள் தங்களை முஸ்லீம் தமிழர் எண்று தன்னை அறிமுகப்படுத்தி...?? தமிழகத்தில் பல மதங்கள், சாதிகள் சண்டைகள் இருந்தாலும் எல்லாரும் தங்களை தமிழர் எண்று தான் உணர்கிறார்கள் கூறுகிறார்கள்...

ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன் இப்படி... முஸ்லீம் என்பது என்ன மொழியா...?? ஒரு மதம்... இங்கிலாந்து காறன் தன்னை இங்கிலிஸ் எண்று அடையாளப்படுத்தி கொள்கிறான்... ஒரு அரேபியன் தன்னை அரபி எண்று அறிமுகப்படுத்துகிறான்... பாக்கிஸ்தானி தன்னை பாக்கிஸ்தானி எண்று தான் அடையாளப்படுத்துக்கிறான்... ஒரு குஜராத்தி தன்னை குஜராத்தி எண்று தான் அடையாளப்படுத்துகிறான், ஒரு வங்காளி தன்னை வங்காளி என்கிறான்... ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழன் மட்டும் தன்னை முஸ்லீம் எண்று அடையாளப்படுத்துகிறான்...

ஏன் இப்படி முஸ்லீம் என்கிறான் எண்றால் தமிழர்களுக்குள் தான் வேறானவன் எண்டு காட்டிக்கொள்ளவே... தமிழர்களில் எந்த கிறிஸ்தவனும் தன்னை கிறிஸ்தவன் எண்று பிரித்துக்கொண்டதில்லை...

கனடாவிலை வந்து நிண்டு கொண்டு நான் கனடியன் வெள்ளைக்காறன் எண்டு சொன்னால் கேக்கிறவன்கள் சிரிப்பாங்கள்.... நாங்கள் தமிழர்கள் ஆனால் கனேடியர்கள் எண்டு தான் சொல்ல முடியும்... அப்படித்தான் அவர்களுக்கு எங்களை தெரியும்... நான் இந்து, அல்லது முஸ்லீம் எண்டு சொன்னால் தான் அவர்களுக்கு புரியும்...

எங்களுடன் இணைந்து இருக்க விரும்பாதவர்கள் முஸ்லீம்கள்... அப்படியான முஸ்லீம் களுக்காக நாங்கள் போரட வேண்டும் எண்றால் உண்மையில் இந்த சிங்கள பௌத்த அரசுகளால் கஸ்ரப்பட்ட சிங்களவர்களுக்காகவும் நாங்கள் போராடி இருக்க வேண்டும்... அதுதான் உண்மையான சம தர்மம்...

அடக்குமுறை அரசுகளுக்கு எதிராக இனபேதம் இல்லாது பாடுபடுவதைதான் சமதர்மம் உரைக்கின்றது... அதைத்தான் மாக்சும் சுட்டினார், மாவோவும் செய்தார், சேவும் செய்தார்... ஆனால் எங்களுக்கு இந்த நவீன காலத்தில் முடியாமல் போய் விட்டது... அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றன...

Edited by தயா

வேரை இழத்தலின் வலி! - மப்றூக்

வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இருபதாவது ஆண்டு நினைவுக் கட்டுரை

ஒரு தாவரத்தை அது முளைத்த மண்ணிலிருந்து பிடிங்கியெடுத்து வேறிடத்தில் நடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக, அந்தத் தாவரம் பிழைப்பதென்பது மிக அரிது. அப்படிப் பிழைத்தாலும் செழிப்பாக வளராது. அது முளைத்து வளர்ந்த மண்ணில்தான் அதன் பாதி உயிர் ஒட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அந்த தாவரம் பிடுங்கியெடுக்கப்படும்போது கிட்டத்தட்ட அது இறந்து போகிறது

ஆத்மா இல்லாத, ஒரு தாவரத்துக்கே அதன் பிறப்பிடத்திலிருந்து பிடுங்கியெடுக்கப்படும்போது இத்தனை இன்னல்கள் என்றால், மனிதனின் நிலை மிகக் கொடுமை!

தான், பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து பலாத்காரமாக பிடுங்கியெறியப்படும் ஒருவன் அனுபவிக்கும் வலியும், இன்னல்களும், அவமானங்களும் - அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியவை.

தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும், யுத்தத்தின்போது தங்கள் வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கும் வலிகள் என்பவை வேறு வேறானவைகள் அல்ல.

ஆனாலும், கடந்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதுபற்றி தமிழ் தரப்பிலிருந்து போதுமான அளவு எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை என்பது கசப்பானதோர் உண்மையாகும்.

புலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழர் தரப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும் அதற்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. ஆனாலும், முஸ்லிம்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தமிழ் மக்களில் மிக அதிகமானோர் வெறுத்தார்கள் அல்லது விரும்பவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இருந்தபோதும், புலிகள் மீதான அச்சத்தினால் தமது வெறுப்பினை தமிழ் மக்களால் அப்போது வெளியிட முடியவில்லை.

கொழும்பில் நான் ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றியபோது, என்னுடன் வேலை செய்த தமிழ் நண்பரொருவர்ளூ வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கையினை அடிக்கடி நியாயப்படுத்திப் பேசுவார். முஸ்லிம்கள் ராணுவத்துக்கு உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டமையினாலேயே அவர்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்று புலிகளுக்காக அவர் வாதாடிக் கொண்டேயிருப்பார்.

அந்த நண்பர் சொன்ன விடயங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். சிலவேளைகளில் ராணுவத்தினருக்காக முஸ்லிம்களில் ஒருவரோ, இருவரோ, அல்லது சிலரோ - உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக, வடக்கிலிருந்த சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் இரண்டு மணி நேரத்துக்குள் அவர்களின் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்தமை எந்த விதத்தில் நியாயமாகும்?!

இந்த இடத்தில் அப்பாவித்தனமாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. வடக்கிலிருந்த தமிழர் தரப்பிலும் ராணுவத்துக்காக உளவு பார்த்தவர்கள், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் என நிறையப்பேர் இருந்தார்களல்லவா? அப்படியென்றால், அந்த உளவாளிகளைக் காரணமாக வைத்து வடக்கிலிருந்த தமிழர்களையெல்லாம் ஏன் புலிகள்; வெளியேற்றவில்லை!

எனவே, ராணுவத்துக்காக உளவு பார்த்ததால்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று புலிகளாலும், புலி ஆதரவாளர்களாலும் கூறப்படும் கதையானது, வெற்றுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகளாகும்

புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு வேறு ஒரு கதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அது இங்கு - இப்போது தேவையில்லை!

பழையவற்றைக் கிளறிக்கொண்டும், ஆளாள் மீது குற்றம் சுமத்திக் கொண்டுமிருப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. எனினும், நமது தரப்புத் தவறுகளை பெருமனதுடன் நாம் ஏற்றுக் கொள்வதாலும், அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பிடம் நாம் மன்னிப்புக் கோருவதாலும் எதுவும் எவர்க்கும் குறைந்து விடவும் போவதில்லை.

இடம்பெயர்வு, அதனால் ஏற்படும் இன்னல்கள், அவமானங்கள், கொடுமைகளை - போதும் என்றளவுக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவிட்டார்கள். பலாத்காரமாக இடம்பெயர்க்கப்படுதலின் வலியை அனுபவபூர்வமாக உணர்ந்து வைத்துள்ள தமிழ் மக்கள், புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தமாட்டார்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை ஒரு தடவை கொழும்பில் வைத்துச் சந்திக்கக் கிடைத்தது. அவருக்கு 60 வயதிருக்கும். அவர் எனது நண்பரொருவரின் தூரத்து உறவினர். என்னை ஒரு முஸ்லிம் என அறிந்து கொண்டதும், அவரின் முஸ்லிம் நண்பர்கள் பற்றியும், யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய அயலவர்களாக இருந்த முஸ்லிம்கள் பற்றியும் அந்தப் பெரியவர் பேசத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பிறகும் கூட, அவரின் குடும்பத்தினருக்கும், அயலவர்களாக இருந்த முஸ்லிம் குடும்பத்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னும் இருப்பதாக அவர் கூறினார். இப்படி, அந்த உறவை நட்பைப் பற்றிப் பேசிக் கொண்டு போன அந்தப் பெரியவர் ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழுதே விட்டார்.

போலியற்ற அந்த அழுகையை இப்போது நினைத்தாலும், மெய் சிலிர்த்துப் போகிறது!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அந்த மக்களின் அவல வாழ்வு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ; என்கிற பெயரால் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களுக்குள் ஏற்படுகின்ற வலி, அவமானம் குறித்தெல்லாம் நம்மில் எத்தனைபேர்தான் சிந்தித்திருக்கின்றோம்?

கோடீஸ்வரர்களாக உறக்கத்துக்குச் சென்ற எத்தனையோ வடக்கு முஸ்லிம்கள், விடியும்போது எதுவுமற்றவர்களாக வெளியேற்றப்பட்டார்கள். நாம் அகதி என்று அழைக்கும் வடக்கு முஸ்லிம்களில் அதிகமானோர், தமது மண்ணில்; மேல் தட்டு வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்மில் பலபேர் நினைத்துப் பார்ப்பதேயில்லை. ஆகவேதான் அவர்களை அகதி; எனும் சொல்லால் நாம் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் 'ஆத்ம வலி குறித்து நம்மில் பலர் கவலைப் படுவதேயில்லை!

இது ஒருபுறமிருக்க, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடித்த பாவத்தின் சொந்தக்காரர்களான சில முன்னாள் புலிகள் - இப்போது கூட அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் மிக விசனத்துக்குரிய விடயமாகும்.

புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த ; தற்போதைய பிரதியமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது - புரிந்ததும், நிகழ்ந்ததுமான தவறுகளை இப்போது கூட, ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இல்லை! தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதற்கே மறுக்கும் இவர்கள், இவர்களாலும், இவர்கள் அங்கம் வகித்த இயக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக எதைத்தான் செய்துவிடப் போகிறார்கள்!

புலிகளால் புரியப்பட்ட பிழைகளை சந்திரகாந்தன் - முரளிதரனின் தலையில் போடுவதும், பின்னர் முரளிதரன் அவற்றை பிரபாகரனின் தலையில் இறக்கி வைத்து அறிக்கை விடுவதும் வாடிக்கையான செயல்களாகிவிட்டன.

புலிகள் இயக்கத்தின் யுத்த வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் - தானே பிரதான காரணம் என மார்பு தட்டும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகளின் தவறுகளையும் பொறுப்பேற்றே ஆக வேண்டும். புலிகள் இயக்கத்திலிருந்து விலகி வந்து விட்டதனால் மட்டும், சந்திரகாந்தனோ, முரளிதரனோ புனிதர்களாகி விடப்போவதில்லை!

இவைதவிர, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தை அரசியலாக்கி அதன் மூலம் தமது பதவிகளையும், அரசியல் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் கேவலமான விளையாட்டுக்களில் நமது அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவதும் வெட்கக்கேடான விடயமாகும். புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் பெயரால் சில அரசியல்வாதிகளும், அவர்களின் கூட்டத்தாரும் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பது சமூக துரோகம்

புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களில் சில குடும்பத்தவர்கள் மட்டுமே தொடர்ந்தும் புத்தளத்தில் இருப்பதற்கு விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏனையோர் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டுமென்றே ஆசைப்படுகின்றார்கள். ஆனால், இதுவரையும், சில நூற்றுக் கணக்கான குடும்பங்கள் மட்டுமே வடக்கில் குடியேற்றப்பட்டுள்ளன. ஏனையோர் அகதிகள் என்கிற அழியாப் பெயருடன் புத்தளத்திலும் வேறுபல இடங்களிலும் வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த இடத்தில் ஒரு கசக்கும் உண்மையைக் கூறியே ஆக வேண்டியிருக்கிறது. உதாரணமாக, புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை விடவும் அங்கு இருப்பதையே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்று கவலையோடு கூறினார் அங்குள்ள நமது நண்பரொருவர்.

பிச்சைக்காரனின் புண்ணைப்போல், இந்த அகதிகள் விவகாரத்தைத் காட்டிக் காட்டியே, தமது அரசியலையும், பொருளாதாரத்தையும் குறித்த அரசியல்வாதிகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது நண்பர் கவலைப்பட்டுக் கூறிய மற்றொரு விடயமாகும். இந்த அகதிகள் இல்லாமல் போவது இந்த அரசியல்வாதிகளுக்கு ஆபத்தானதாம்!

இப்படியான அவலங்கள் அசிங்கங்களுக்கெல்லாம் அப்பால், வேரை இழந்த அந்த மக்களின் வலி குறித்து இன்றைய தினம் நாம் எல்லோரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேர்களையும், அவை பரவிக் கிடந்த மண்ணையும் இழத்தலின் வலி மிகக் கொடுமையானது!

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் தமிழர்கள் கனடியர்கள் என்ற பொதுவான தேசிய அடையாளத்தினை விரும்பாது, கனடிய தமிழர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவது போன்றது.

நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ என்பது முக்கியம்மல்ல. ஏனெனில் அவர்களே(வெள்ளையர்கள்) ஏற்கனவே பெயர் வைக்க தொடங்கிவிட்டான். அதாவது ஆபிரிக்க அமெரிக்கன்(Africa American ) மெக்சிக்கன் அமெரிக்கன்(Mexican American), இத்தாலியன் கனேடியன்(Italian Canadian) என்பது போல தமிழ் கனேடியன்(Ttamil Canadian) என்ற பெயரும் வந்தது.

ஆங்கிலேயர் தமிழ்நாடு ஆற்காட்டில் வந்திறங்கும் போது தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத்தவிர‌ ஏறகுறைய முழு இந்தியாவும் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது. தமிழக குறுநில மன்னர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கெதிராக வாழ்வா சாவாப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் முஸ்லீம் ஆதிக்கத்தை இந்தியாவில் உடைத்தார்கள்.

அப்படி இருந்தும் இன்று இந்திய உப கண்டத்தில் 45 கோடி முஸ்லீம்கள். 80 கோடி இந்துக்கள்.

ஆங்கிலேயர் வந்திராவிட்டால்...

நான் ஈஸாப் ஹாஜியார்..

நிழலி நிஜாம் ஹாஜியார்....

இசை இன்ஷா ஹாஜியார்.. :wub:

இந்திய உப‌க‌ண்ட‌ம் இன்னொரு இந்தோனேசியா அல்ல‌து ம‌லேசியா போன்று 100 ச‌த‌ம் முஸ்லீம் நாடாக‌ மாறியிருக்கும். கிழ‌க்கு ஆசியா முழுதுமே முஸ்லீம் நாடுக‌ளாகியிருக்கும்.

வ‌ர‌லாறு நிறைய‌ பாட‌ங்க‌ளைக் கொண்டுள்ள‌து.

யாருட‌ன் சேர்ந்து யாருக்கு எதிராக‌ப் போராடுவ‌து ?? :D

கேள்வி இதுதான்.

த‌மிழ‌ர் சிங்க‌ள‌வ‌ருட‌ன் சேர்ந்து வாழ்ந்தாலா அல்ல‌து முஸ்லீம்க‌ளுட‌ன் சேர்ந்து வாழ்ந்தாலா த‌ம‌து இன‌ அடையாள‌த்தை விரைவாக‌ இழ‌ப்ப‌ர் ?

( விடைக்கு வ‌ர‌லாற்றை திரும்ப‌ ப‌டிக்க‌வும்)

உது எந்தப்படத்திலை வந்த கட்டம்...?? இல்லை நண்பர் யாராவது போண் அடிச்சு சொன்ன விண்ணாணமோ...??

லெப் சங்கர் வீரச்சாவடையும் போது எங்கட தலைவர் உமாஅகேஸ்வரனுடனான பாண்டிபஜர் சம்பவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்... அப்ப ஆண்டு 1982 ... தலைவர் பதவியில் இருந்த தங்கத்துரையண்ணைக்காக சிறிசபாரத்தினம் பதிவியேற்ற காலம் அது...

இதேகாலப்பகுதியி போராளிகள் இந்திய அரசியல் வாதிகளுடன் பேச்சில் ஈடுபட்ட காலம், அதனால் தான் தலைவர் சிறையில் அடைக்கப்படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்...!

ஆஆஆஆ.... தயா,

.... பிரபா/உமா பாண்டிபஜார் திகிலுக்கு முன்னம், யாழில் இறைகுமாரன், உமைகுமாரனை ஒருபக்கம் போட, மற்றப்பக்கம் சுந்தரத்தை போட்டது! ... அதற்கு முன் செட்டி உட்பட சிலர் உள்ளுக்குள்ளேயே போடப்பட்டது ... ஐயரின் பதிவுகளையோ, அல்லது வேறு பல இருக்குது, அவற்றை திருப்பிப்பாரும்!! ...

நான் இங்கு இதை எழுத வேண்டி ஏற்பட்டது, ஆரம்பகால இயக்க மோதல்களுக்கு ... என்ற நிழலியின் கருத்துக்கே!!! இல்லை இந்தியாதான் இயக்க மோதல்களின் சூத்திரதாரி என்று நீரும் கருதினால் .... பிரபா, உமா மீது இந்தியாவின் அழுத்தத்தினால் தான் பாண்டிபஜாரில் சுட்டார் என்றும் எழுதுங்கோ!!!!!!!???????????

Edited by Nellaiyan

சாந்தி தியட்டர் இருப்பது அண்ணா சாலையில் , ஆனால் துப்பாக்கி சூடு நடந்தது பாண்டி பஜாரில்... பாண்டி பஜார் கடற்கரையில் இருக்கிறது... இரண்டுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும் எண்டு அண்ணளவாக தன்னும் தெரியுமோ...

அண்ணோய் நீர் எவ்வளவு பெரிய சுத்தல் மன்னன் எண்டு இப்ப விளங்குது...

தயா, பாண்டிபஜார், கடற்கரையிலா இருக்கிறது???? ... எனக்கு தெரியாது, கேட்கிறேன்!

தயா, பாண்டிபஜார், கடற்கரையிலா இருக்கிறது???? ... எனக்கு தெரியாது, கேட்கிறேன்!

கடற்கரையோடை இல்லை தான் ஆனால் துறை முக பெரும் சுவரோடை இருக்கு... :wub:

ஏன் வம்பு... :D:lol: :lol:

தீ நகரிலை பனகல்பாக் பக்கம் இருக்கு எண்டும் வைச்சு கொள்ளலாம்...

Edited by தயா

கடற்கரையோடை இல்லை தான் ஆனால் துறை முக பெரும் சுவரோடை இருக்கு... :wub:

pondibazaar.png:D

pondibazaar.png:lol:

வெரி குட் கண்டு பிடிச்சிட்டீர்.... :wub: உதுக்கை இருக்கும் சாந்தி தியட்டரிலை என்ன படம் ஓடுது எண்டு பாத்து சொல்லுங்கோவன்... :D

காலம உதுக்கு பதில் எழுதி கிளிக் பண்ண பதில் எங்கேயோ போய்விட்டது.பின்னர் அதுவும் நல்லதுக்குத்தான் ஏன் சும்மா பதிலுக்கு பதில் எழுதுவான் என விட்டுவிட்டேன்.

நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் வேறு வேறு.

பாண்டி பசார் தீ. நகரில் இருக்கு பர்மா பசார் தான் கடற்கரையுடன் இருக்கு கொன்பியூஸ் ஆகிவிட்டீர்கள்.

சும்மா பழையதுகளை எழுதி என்ன பயன் ஆனால் ரோ என்று ஒன்றை அறியமுன்னமே எமக்குள் சூடுபாடுகள் தொடங்கிவிட்டதுதான் உண்மை.இயக்கத்தைவிட்டால்,காதல் கொண்டால் சூடு என்பது தான் இயக்க கட்டுப்பாடு.எல்லாம் தனக்கு தனக்கென வரேக்க தளர்தப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தைவிட்டால்,காதல் கொண்டால் சூடு என்பது தான் இயக்க கட்டுப்பாடு.எல்லாம் தனக்கு தனக்கென வரேக்க தளர்தப்பட்டுவிட்டது.

வயது அதிகரிக்க அநுபவங்கள் கூட பக்குவமும் வரும்தானே.

சும்மா பழையதுகளை எழுதி என்ன பயன் ஆனால் ரோ என்று ஒன்றை அறியமுன்னமே எமக்குள் சூடுபாடுகள் தொடங்கிவிட்டதுதான்

சூடு பாட்டுக்கு துவக்குகளை யார் தந்தவை...??? PLO தந்ததோ...?? இல்லை சொட்கண் களாலையும் இடியனாலையும் தான் பெடியள் சண்டை பிடிச்சவை...?? புலிகளாவது இலங்கை பொலிசிட்டையும், ஊர்காவல் கடைகளை அடிச்சு எடுத்து இருந்து இருப்பினம்... மற்றவைக்கு எப்படி...??

ஆயுதங்கள் வாங்க எங்கட ஆக்கள் படகை பிடிச்சு இந்தியா தான் போய் வந்தவை...

ஆயுதம் இல்லாம உங்கட PLOT காறர் படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்களுக்கை பெடியளின் தலையை விட்டு கொண்டதுகள் எங்களுக்கு தெரியும்.

உண்மை.இயக்கத்தைவிட்டால்,காதல் கொண்டால் சூடு என்பது தான் இயக்க கட்டுப்பாடு.எல்லாம் தனக்கு தனக்கென வரேக்க தளர்தப்பட்டுவிட்டது.

இண்டைக்கு அண்டைக்கு 15 வயசிலை போட்ட காச்கட்டையை தான் போட்டுக்கொண்டு திரிகிறீர்களா...??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.