Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிட்ட முறையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Featured Replies

ஊடகச் செய்தி

இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை காட்டி ஏறத்தாழ 150க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் செய்யப்படிருந்தது. அவர்களும் நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் சந்தித்தனர். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகள் சென்று அவர்களுக்கான நிவாரண வசதிகள் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அரசாங்கம் அவர்களை மிகக் கவனமாக பாராமரித்து வருகின்றது.

ஆனால் இவர்கள் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு நிலம் சொந்தமாக கிடையாது. இவர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்களுமல்ல. ஆனால் இவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டுமென்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

இதன் முதற்படியாக புகையிரத நிலையத்தில் இருந்த ஒரு பகுதியினர் 10 ஆம் திகதி இரவு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழி 'அப்பன் குடியிருப்பு' என்ற பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஏற்கனவே குடியிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீளக்குடியேற வந்த பொழுது இந்நிலம் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமானதென கூறி அவர்கள் அங்கு மீளக்குடியமர்வது அரசாங்கத்தால் மறுதலிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் இன்று சிங்கள் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90,000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்த விரட்டப்பட்டு இன்னும் அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியவில்லை. உயர் நீதிமன்றம் மீள் குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை. இவர்களில் ஒரு பகுதியினரை குடியேற அனுமதித்தாலும், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அதற்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையே இன்றுள்ளது.

இந்நிலையில் 20 வருடம் அப்படி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் என்ன கொழும்பிலா காணியும் வீடும் கட்டிக் கொடுக்கப் போகின்றது?

1977,81,83 ஆம் ஆண்டுகளில் அடித்து விரட்டப்பட்ட எத்தனை தமிழ் மக்களின் சொத்துக்கள் தென் பகுதியில் மீளக்கொடுக்கப்பட்டன. உயிர்த்தப்பினால் போதுமென, எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வில்லையா? தென் பகுதியில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி அவர்களை அரசாங்கம் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவி;ல்லையா? இன்று யாழ்ப்பாணத்திலும் அவர்களுக்கு பாதுகாப்;பு இருக்கக் கூடாது என்பதற்காகவா இந்த சிங்கள குடியேற்றம்? இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் குடிசன பரம்பல் விகிதாசாரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், கிழக்கு மகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களிலே சிறுபான்மையாக்கப்பட்டு, அவர்களின் தனித்துவமும் பறிபோகும் சூழலும் ஏற்படுத்ப்படுகின்றது.

இராணுவத்தின் துணையுடன் அரசாங்கம் செய்யும் இவ்வின ஒழித்தல் நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தை கோருகின்றது.

யாழ்ப்பணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ் மக்களும் மீளக்குடியெற அனுமதிப்பட்ட வேண்டும். அப்படி மீளக்குடியேற முடியாத மக்கள் இருப்பின் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து அந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதிமுகாம்களில் வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களை குடியேற்றுவது நீதியானதுமல்ல, எந்த வகையிலும் ஏற்றக் கொள்ளக்கூயதுமல்ல. இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களை பயமுறுத்தி இப்படியான சிங்கள் குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது.

சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யுத்திற்கு பின் இலங்கை அரசாங்கம் எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.

சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் 2010-11-11

பேச்சாளர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தயவுசெய்து கவலைப்படாதீர்கள், இது குறித்து .... எமது விடுதலைக்காக ஆயுதம் தூக்கி, பின் எம் மக்களின் விடிவிற்காக சிங்களத்துடன் ஒட்டி என்ன ஜனநாயக விழுமியத்தில் கலந்த ...

1) எம் யாழ் தந்த தலைவன் அமைச்சர் வாழ் டக்லசு இருக்கிறார்?

2) சித்தார்த்தன் இருக்கிறார்?

3) ஆனந்தசங்கரியார் இருக்கிறார்?

4) வரதராசர் இருக்கிறார்?

5) போதாக்குறைக்கு புரட்சித்தலைவர் கேபி இருக்கிறார்?

... நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் புலம்பெயர் பரதேசிகளே??????, அவர்கள் எம்மக்களை தடவி விடுவார்கள்/கட்டிப்பிடிப்பார்கள்/..... குடியேற்றங்கள் என்னவென்ன வந்தாலும் இந்த வீராதி வீர சூரர்கள் .........!!!!!!!!!?????????

..... என்று இங்கு சில எழுதும், அதுகளை ஏன் கஸ்டப்படுத்தி எழுதுவான், என்றிட்டு நானே எழுதி விட்டேன்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது எங்கள் கவனம் எல்லாம் எப்படி இந்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது என்பதிலேயே இருக்க வேண்டும்...அதற்காகத் தான் பாடுபட வேண்டும்.

தற்போது எங்கள் கவனம் எல்லாம் எப்படி இந்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது என்பதிலேயே இருக்க வேண்டும்...அதற்காகத் தான் பாடுபட வேண்டும்.

... யாழ் மண் தந்த வீரன்/சூரன்/அமைச்சர் வாழ் சொல்லியிருக்கிறார் ... இந்த சிங்கள மக்களின் குடியேற்றத்தில், அரசியலை கலக்காதீர்கள், அவர்களை அன்புடன் வரவேற்று குடியேற்றுவோம் ... என்று!!!! .... நீங்கள் இங்கிருந்து தடுக்கப்போகிறீர்களோ???????

  • கருத்துக்கள உறவுகள்

... யாழ் மண் தந்த வீரன்/சூரன்/அமைச்சர் வாழ் சொல்லியிருக்கிறார் ... இந்த சிங்கள மக்களின் குடியேற்றத்தில், அரசியலை கலக்காதீர்கள், அவர்களை அன்புடன் வரவேற்று குடியேற்றுவோம் ... என்று!!!! .... நீங்கள் இங்கிருந்து தடுக்கப்போகிறீர்களோ???????

நெல்லையன் அவர் மட்டும் அல்ல மாற்று இயக்கங்களும் அது சரி எனத் தான் சொல்கிறார்கள்...தமிழர்கள் போய் கொழும்பு தொடக்கம் எல்லாப் பகுதியிலும் இருக்கலாம் என்டால் ஏன் சிங்களவர் இருக்க முடியாது என்பது தான் அவர்களது கேள்வி?...ஆனால் அப்படி அந்த சிங்கள மக்களுக்கு யாழில் குடியேற விருப்பம் என்டால் புலிகள் இருக்கும் போதே குடியேறி இருக்கலாமே என்டால் அதற்கு புலிகள் விட்டு இருக்க மாட்டார்கள் எனக் காரணம் சொல்கிறார்கள்...சொல்லப் போனால் ஒரு வகையில் இதுவும் நல்லதிற்கு தான்...எப்பவும் ஆக்கிரமிப்பில் இருந்து தான் போராட்டம் வெடிக்கும் இன்னும் 2,3 வருடங்கள் போக மக்கள் தாங்களாக உணரத் தொடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டக்ளஸ் போன்ற வாய்ச்சொல் வீரர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மக்களை குடியேற்றுவதை பார்த்துக்கொண்டு இருக்கும் பயந்தாங்கொள்ளிகள். புலிகள் எப்பொழுதாவது சிங்கள மக்களின் வாழ்விடங்களில் இப்படி குடியேற்றினார்களா? புலிகள் இருக்கும் வரை அவர்களை குறை கூறி அரசிடம் பிச்சை எடுக்கும் இவர்கள் இன்று நாடு நாடாக (வேறு யார் வரதராம்) கொள்கை விளக்கம் அளிக்கிறாராம்.அதற்கு இங்கு சில வக்காலத்து வாங்கும் கூட்டம்.மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி முதலில் கதைக்கட்டும். பிறகு கால்மாக்ஸ் என்ன சொன்னவர் அல்லது லெனின் என்ன சொன்னவர் என பிறகு ஆராயலாம்.

தமிழர்கள் இலங்கையில் எங்கும் இருக்கலாம் எனில் வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அநுராதபுரத்தில் சிங்களவர்களின் காணியில் அடாத்தாக போய் குடியேற முடியுமா? தங்களது சொந்த காணியிலேயே குடியிருக்க விடுகிறார்கள் இல்லை பிறகு இந்த (சிங்கள) குடியேற்றத்துக்குள் அரசியல் கலக்க வேண்டாமாம் டக்கு மாமா Douglas_Devananda_300.jpg .சொல்கிறார். உண்மையிலேயே டக்கு நீங்கள் மாமா தான்.

யாராயினும் இடம்பெயர்ந்த மக்களை முதலில் குடியேற்றி அவர்களை சொந்த காலில் வைக்கவிட்டு பின்னர் அரசியல் செய்யலாம்.அதுவரை ஏதாவது செய்பவர்களையும் சும்மா குறைசொல்லிக் கொண்டிருப்பதை விடுவதே நல்லது. 30 வருசமா மற்றவனை குறைபிடிப்பதிலே தான் குறியாக இருக்கின்றீர்கள்

சிங்களம் இரண்டு வெற்றிக் களிப்பில் (போர்,தேர்தல்) திளைத்துபோய் தலைகால் தெரியாமல் ஆடுகின்றது.இந்த நேரத்தில் மேலே குறிப்பிட்ட எவராவது வாயை திறந்தால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும்.அனுசரித்து முடிந்ததை செய்வது தான் புத்திசாலித்தனம்.உள்ளதையும் குழப்ப புலம் பெயர்ந்த கூட்டமொன்று கூச்சலிடுவது அவர்களுக்கும் தெரியும்.

அரசியல் செய்வதற்கு சில பக்குவங்கள் வேண்டும்.வீரத்தை விட விவேகம் தான் இங்கு தேவை.

குடியேற்றம்,பாலியல் வல்லுறுவு,இடம் பெயர்ந்த மக்களை ஆடு,மாடுகள் போல் வேண்டுமென்றே அலைய வைப்பது என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.தமிழனாக பிறந்த எவனுக்குமே இரத்தம் கொதிக்க வைக்கும் நிகழ்வுகள்தான்.இதை நிறுத்த உங்க்களிடம் என்ன வழிகள் இருக்கு? இப்போது ஒருவருடமும் ஒன்றுமில்லை

சேர்ந்திருந்து நேரம் வரும் போது குழி பறிப்பதும் ஒருவித அரசியல் தான்.அது சிங்களத்திற்கும் தெரியும் அதனாலேயே இவர்களை வடிவாக கையாளுகின்றான்.

கடைசி முழுமக்களும் மீள் குடியேறுமட்டுமாவது முடிந்தளவு மனிதாபிமான பணிகளை செய்துகொண்டு அரசியலை சற்று புறம் தள்ளிவைப்பது நல்லது என நினைக்கின்றேன்.

யாராயினும் இடம்பெயர்ந்த மக்களை முதலில் குடியேற்றி அவர்களை சொந்த காலில் வைக்கவிட்டு பின்னர் அரசியல் செய்யலாம்.அதுவரை ஏதாவது செய்பவர்களையும் சும்மா குறைசொல்லிக் கொண்டிருப்பதை விடுவதே நல்லது. 30 வருசமா மற்றவனை குறைபிடிப்பதிலே தான் குறியாக இருக்கின்றீர்கள்

சிங்களம் இரண்டு வெற்றிக் களிப்பில் (போர்,தேர்தல்) திளைத்துபோய் தலைகால் தெரியாமல் ஆடுகின்றது.இந்த நேரத்தில் மேலே குறிப்பிட்ட எவராவது வாயை திறந்தால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும்.அனுசரித்து முடிந்ததை செய்வது தான் புத்திசாலித்தனம்.உள்ளதையும் குழப்ப புலம் பெயர்ந்த கூட்டமொன்று கூச்சலிடுவது அவர்களுக்கும் தெரியும்.

அரசியல் செய்வதற்கு சில பக்குவங்கள் வேண்டும்.வீரத்தை விட விவேகம் தான் இங்கு தேவை.

குடியேற்றம்,பாலியல் வல்லுறுவு,இடம் பெயர்ந்த மக்களை ஆடு,மாடுகள் போல் வேண்டுமென்றே அலைய வைப்பது என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.தமிழனாக பிறந்த எவனுக்குமே இரத்தம் கொதிக்க வைக்கும் நிகழ்வுகள்தான்.இதை நிறுத்த உங்க்களிடம் என்ன வழிகள் இருக்கு? இப்போது ஒருவருடமும் ஒன்றுமில்லை

சேர்ந்திருந்து நேரம் வரும் போது குழி பறிப்பதும் ஒருவித அரசியல் தான்.அது சிங்களத்திற்கும் தெரியும் அதனாலேயே இவர்களை வடிவாக கையாளுகின்றான்.

கடைசி முழுமக்களும் மீள் குடியேறுமட்டுமாவது முடிந்தளவு மனிதாபிமான பணிகளை செய்துகொண்டு அரசியலை சற்று புறம் தள்ளிவைப்பது நல்லது என நினைக்கின்றேன்.

அர்ஜுன் உண்மைதான்!! மனிதாபிமான பணிகள் தொடர வேண்டும், அது வேறு!!, அதற்காக சிங்களக் குடியேற்றங்கள் போன்றவைகளுக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதும், அதனை சேர்ந்து செய்வதும் என்பது கேவலமான அரசியல்!!! ... இன்று கேட்காது விடின் ... என்றும் கேட முடியாமல் போய் விடும்!! ...

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு திட்டமிட்டு இலங்கை முழுவதையும் சிங்களமயமாக்குகின்றது. அதனைத் தடுத்த நிறுத்த தமிழர்களால் ஒன்றுபட்டு ஒரு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்ததனாலேயேதான் துணிந்து வேகமாகத் தமது திட்டங்களைச் செயற்படுத்துகின்றார்கள். இன்னும் சில வருடங்களில் வடகிழக்கு கரையோரப் பகுதி முழுவதும் சிங்களவர்களால் நிரம்பிவிடும். அப்போதும் நாம் புலத்தில் இருந்துகொண்டு வீராவேசக் கதைகளையும், குழிபறிப்புக்களையும் செய்துகொண்டிருப்போம்.

வாழ்க தமிழ். வளர்க நம்மக்கள்!

என்ன ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமா???... நாங்கள் எல்லோரும் கேபிக்களையும், டக்லஸுகளையும், ஆனந்தசங்கரிகளையும் தொடர்ந்து ஆதரிப்போம்!!!!

30 வருசமா மற்றவனை குறைபிடிப்பதிலே தான் குறியாக இருக்கின்றீர்கள்

சொன்னியள் பாருங்கோ ஒரு சொல்லு... அங்கை நிக்கிறீயள்...! :huh: :huh: :huh:

ஒரு விரலை சுட்டி மற்றவனை காட்டும் போது பெருவிரல் வானத்தையும் மிச்ச மூண்டு விரலும் உங்களை பாத்த படி தான் இருக்கும் கவனிச்சு இருக்கிறனீங்களோ....?? ஏதாவது விளங்கிச்சோ....?? நீங்கள் மேலை சொன்னது உங்களை தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.