Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூட்டிய மன கதவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றுதான் அவளுக்காக காத்திருந்தேன் என்னவோ தெரியாது.எனது காரியாலத்தில் வேலை செய்யும் உயரதிகாரியான மோகன் அண்ணா வந்து புதிதாக ஒரு பெண் வேலைக்கு வருவதாகவும் இன்று அவளை நீங்கள் நம் ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் ராஜன் நீங்கள் ஏத்தி செல்ல வேண்டும் என்று சொன்னார் நானும் சரியென தலையாட்டி அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனமோ காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது ஆனால் சுயமாக எந்த முடிவுகளூம் எடுக்கமுடியாது ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு வெளி நாட்டு நிறுவனம் கைக்கூலியாக செயற்பட்டு வந்தது அதில் நான் ஒரு சாரதியாக பணி புரிந்து கொண்டிருந்தேன் மட்டுநகரில்.

நானும் வாகனத்தில் அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன் . காரியாலயத்தில் பெண் ஒன்று உள் நுழைவதை கண்டேன் .போன அவள் உயரதிகாரியான மோகன் அண்ணாவை கூட்டிக்கொண்டு என் வாகனம் நிற்கும் இடத்திற்கு வந்தாள். உடனே மோகன் அண்ணா ராஜன் இந்த பிள்ளை எங்கள் சொந்தகாரபிள்ளை இவளை கவனமாக எல்லா இடங்களுக்கும் கூட்டி செல்லுங்கள் என்றார்.நானும் சரி என்று சொல்லி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன் .ஆகா ஒரு அழகிய தேவதை போல் ஒரு பெண் என் கண்ணை உறுத்தி கொண்டிருந்தாள்.நானும் ஒரு புன்சிரிப்புடன் வாகனத்தினுள் அமர்ந்து கொண்டேன் அவளூம் ஏறி அமர்ந்தாள் வாகனத்தில்

வாகனமும் நகரதொடங்கியது நான் அவளிடம் உங்கள் பெயர் என்ன?. அவளிடம் கேட்க அவளோ உங்களிடம் என் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றாள் நானும் என் மனதுக்குள் எனக்கு இது தேவை தான் என நினைத்துக்கொண்டு வாகனத்தில் உள்ள வானொலி பெட்டியை கொஞ்சம் சத்தம் அதிகமாக போட்டு கேட்டு கொண்டிருந்தேன்.கொஞ்சம் அவளை பார்க்கலாம் என்று கண்ணாடியில் பார்த்தேன் அவளை ஆனால் அந்த முகத்தை என்னால் பார்க்க முடியாமல் இருந்தது அவ்வளவு ஆத்திரம் தென்பட்டது. உடனே சத்தை குறைத்து பாடலை கேட்டேன் அப்போதும் அவள் என்னை திட்டுவதும் அவளது முகத்தில் ஒருசோகமும் தெரிந்தது .

நான் அவளை எங்கள் நிறுவன ஊழியர்கள் வேலைசெய்யும் இடத்தில் இறக்கிவிட மெல்ல நடக்க துவங்கினாள் அவள் பின் அழகையும் நடையையும் ரசித்தேன் பின் அழகை ரசிக்க என் கீழ் உதடு பற்களுக்குள் சென்று கவ்விக்கொண்டது. அப்படி ஒரு அழகு

போன அவளோ ஒரு போட்டோவை காட்டி எல்லோரிடமும் விசாரித்துக்கொண்டிருந்தாள் .நானும் என் வேலை முடிந்து விட்டது பின்நேரம் வந்து எல்லோரையும் ஏத்தி கொண்டு சென்றால் சரி என்று வீட்டுக்கு புறப்பட்டேன். மீண்டும் மாலை அவர்களை ஏற்றுவதற்க்காக அங்கு வந்தேன் அவளும் நின்றாள் சோகம் நிறைந்த கன்னங்களுடன் எல்லோருடனும் அவளூம் ஏறினாள்.மற்ற வேலையாட்கள் எல்லோரும் சந்தோசமாக பேசி வந்தார்கள் .நான் அவளின் பெயர் என்னவாம் என கேட்டேன் பக்கத்தில் உள்ள பெண் ஆகா வந்த முதல் நாளிலேயா என்று ஒரு நக்கல் சிரிப்பு செய்தாள் நான் அப்படி ஒன்றும் இல்லை சும்மா தெரிந்து கொள்ளதான் என்று நானும் சிரித்தேன் அவள் சொன்னாள் சுலோச்சனா என்று பெயரை கேட்டதும் எனக்கு ஏதோ இனிப்பு சாப்பிட்டது போல் ஒரு உணர்வு.எல்லோரையும் அவர்களது வீட்டில் இறக்கிவிட்டு அவளிடம் கேட்டேன் உங்களை எங்கே இறக்கிவிடவேண்டும் அவளோ ஏற்றிய இடத்தில் இறக்கிவிடுங்கள் என்றாள் நானும் இறக்கிவிட்டு வாகனத்தையும் நிறுத்திவிட்டு அவளை அவதானித்து கொண்டிருந்தேன் அவளோ மோகன் அண்ணாவுடன் சென்றாள் .பின்னர் நானும் வீடு சென்றுவிட்டேன்

அடுத்த நாள் காலை எல்லோரும் வந்திருந்தார்கள் என் கண் அவளை தேடியது அவளும் கூட்டத்தில் இருந்தாள் .எல்லோரையும் ஏத்திக்கொண்டு ஒரு சிங்களபகுதிக்கு சென்று கொண்டிருந்தோம் .அது மட்டு நகரில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வெலிகந்த எனும் பகுதி அங்கு சிலர் கைதிகளாகவும் ,கடத்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.நான் அவர்களை இறக்கிவிட்டு அங்கேயே காத்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுதும் சுலோச்சனா அந்த போட்டோவைக்காட்டி கைதியாக இருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.அப்போதுதான் எனக்கு தெரியவந்தது அவள் யாரையோ தேடுகிறாள் என்று மட்டும் தெரிந்தது அவள் வேலைக்கு வரவில்லை என்று நேரம் சென்றது எல்லோரும் ஊருக்கு திரும்பினோம் எல்லோரும் வீடு சென்றனர் நானும் அவளை வினவ அவளோ என்னிடம் பேசாதீர்கள் என எரிந்து விழுந்தாள் நானும் ஒன்றும் பேசாமல் அவளை மடடு நகர் பஸ்தரிப்பு நிலையத்தில் இறக்கி விட்டு வீடு சென்றேன் .ஆனால் உறங்கும் போது அவள் பேசிய விதம் என் மனதை உறுத்தியது ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோபமா என நினைத்து கொண்டு உறங்கி விட்டேன்

அடுத்த நாள் காலை அவள் மட்டும் மோகன் அண்ணனுடன் நிற்பதை கண்டேன் மோகன் அண்ணாவோ ராஜன் இவரை தனியே நீங்கள் மட்டும் அழைத்து செல்லுங்கள் என்றார் நானும் தலையசைத்து அந்த சிங்களப்பகுதியில் இருந்து கொஞ்சம் தூர இடம் போக வேண்டும் வாகனத்தினுள் ஏறினாள் .ஏறிய உடனே சாந்தமாக என்னை மன்னித்து விடுங்கள் என்றாள் நான் தலையசைத்து பரவாயில்லை விடுங்கள் என்றேன் அதிகம் பேசாத அவளை எனக்கு பிடித்திருந்தது .அந்த பகுதிக்கு சென்றோம் அவளூக்கு சிங்களம் பெரிதாக தெரிந்திருக்க வில்லை.நானும் கூடச்சென்று உதவி செய்தேன் ஆனால் அந்த போட்டோவை அவள் எனக்கு காட்டவில்லை அங்கிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் காட்டி வினவினாள்.ஆனால் எந்த பலனும் இல்லை மீண்டும் ஊர் திரும்பும் போது அவளிடம் நான் சுலோச்சனா நான் உங்களை விரும்புகிறேன் என்று பட்டென சொல்ல என்னை பார்த்து ஒரு ஏளன சிரிப்பு சிரித்தாள் அந்த சிரிப்புக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை.

வரும் போது நல்ல மழை உடனே அவளோ என்னை இன்று எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள் என்றாள் எனக்கும் சந்தோசம் வீட்டை கண்டு கொள்வதில் இருவரும் வீட்டை அடைந்தோம் மழை கொட்டியது அவளோ உள்ளே வாங்கள் தேத்தண்ணி குடித்துசெல்லுங்கள் என்றாள் நானும் வாகனத்தை வீட்டு வாசலின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.உள்ளே சென்றவுடன் இரு குழந்தைகள் அவளை அம்மா அம்மா என்று அவளை கூப்பிட்டு அவளை அணைத்துக்கொண்டது எனக்கு ஒன்றும் புரியவில்லை நெத்தியில் பொட்டும் இல்லை கழுத்தில் தாலியும் இல்லை ஆனால் எப்படி அம்மா என்று நினைத்து அல்லாடியது என் மனது என்னை அவள் இருங்கள் சட்டையை மாற்றி வருகிறேன் என்று உள்ளே சென்றாள் குழந்தைகளும் அவள் சீலையை இழுத்தவாறு உட்சென்றன.நானும் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தேன் ஒரு பெரிய மாளிகை போல தென்பட்டது .உழவு இயந்திரம்.அரிசி குத்தும் ஆலை அவர்கள் வீட்டில் இருந்தது இவ்வளவு சொத்துக்களா எனக்கு வியப்பாய் இருந்தது. வெளியில் ஒரு அலறல் சத்தம் கேட்டது அவள் அப்பாவோ கதறிக்கொண்டு வந்தார் யார் பிள்ள இது யார் பிள்ளை இது என்று ஒரு மன பதட்டத்துடன் வீட்டுக்குள் வந்தார் சுலோச்சனாவோ வந்து இவர்தானப்பா என்னை எல்லா இடங்களுக்கு கூட்டி சென்றவர் எனக்கு நல்ல உதவி செய்தவர் என்று சொன்ன பின்பே அவர் பெரு மூச்சு விட்டார் ஓ அப்படியா என்று கேட்டு இருக்க சொன்னார் அவளோ இருங்கள் தண்ணி கொதிக்கிறது தேநீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்றாள்

நான் அவள் அப்பாவிடம் பேச அரம்பிக்கும் போதே சுலோச்சனாவை எனக்கு பிடித்திருக்கிறது நான் அவளை கல்யாணம் கட்டி கொள்ளமா என கேட்க அவரோ எனக்கும் ஆசைதான் அவளுக்கு கல்யாணம் கட்டி கொடுப்பதுல ஆனால் அவள்தான் மறுக்கிறாள் என்று சொல்லி உள்ளே சென்றவர் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் இருக்கும் ஒரு பெண்ணை தள்ளிக்கொண்டு வந்தார் வந்த அவர் இவள்தான் என் மூத்த மகள் ந‌ல்ல வசதியாக இருந்தோம் இவளுக்கும் கல்யாண‌ம் கட்டிகொடுத்தோம் மாப்பிள்ளை இஞ்சினியர் நல்ல சம்பாத்தியம் ப‌ண்ணினார் ப‌ணத்திற்காக‌ சில கைக்கூலிகள் அவரை கடத்தி சென்று விட்டனர் என்றார் அவள் குழந்தைகள்தான் அந்த குழந்தைகள் என்றும் அவரை கடத்திய நாள் முதல் இவள் பைத்தியமாக இருப்பதாகவும் சொன்னார் அன்றுமுதல் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் போனதனால் குழந்தைகள் இளையவளை அம்மா என கூப்பிடுவதாக கூறினார் அப்போதுதான் என் மனதுக்கு நிம்மதி .சுலோச்சனா தேநீர் கொண்டு வந்தாள்

வந்தவளிடம் அவர் என்ன புள்ள தம்பி சொல்றது உன்மையா என கேட்க அவளோ இல்லை அப்பா அவர் முடிவை மாற்றிக்கொள்ள சொல்லுங்கள் என் அக்காவின் கணவர் வரும் வரைக்கும் நான் கல்யாணம் கட்ட விரும்பவில்லை என்று சொன்னாள் நானும் எவ்வளவோ கட்டாய படுத்தினேன் மசியவில்லை அவள் உங்களுக்கு முடிந்தால் என் அக்காவின் கணவர் பற்றி கேள்விபட்டால் சொல்லுங்கள் என்று அவள் அக்காவின் கணவரின் போட்டோவை எடுத்து அப்போதுதான் காட்டினாள் எனக்கு .எனக்கு தெரிந்த உன்மையை சொல்ல முடியவில்லை . அவள் அக்கா கணவர் பணத்திற்க்காக கொலை செய்யபட்டார் என்பது என்னை போன்ற சில சாரதிமார்களுக்கு மட்டுமே தெரியும் ஏனென்றால் நாங்களும் துப்பாக்கி முனையில் சில குழுக்களுக்காக எங்கள் வாகனத்தை கொடுக்கும் போது அப்போது நாங்கள் சாரதியில்லை அந்த குழுக்களில் உள்ளவர்கள்தான் சாரதி

இந்த உன்மையை சொல்ல முடியாமல் அவள் நினைவுகளுடன் விட்டகல்கிறேன் நான்

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜி! கதை கற்பனையா, நிஜமா! ஏதோ நிஜம் மாதிரி உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜி! கதை கற்பனையா, நிஜமா! ஏதோ நிஜம் மாதிரி உள்ளது. :D

என்ன கேள்வியிது ? :wub:

முனிவர் ஜி! கதையில் கலக்குறீங்கள். பாராட்டுக்கள். கனநாளைக்கு பிறகு ஒரு கதை வாசிச்சிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.பாராட்டுகள்...கடைசியில் சுலோச்சனாவுடன் திருமணம் முடிந்ததா? இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கதையை விடாமல் படித்து முடித்தேன்..! விறுவிறுப்புடன் எழுத முடிகிறது உங்களால்..! வாழ்த்துக்கள் முனி..! :D

ஆனால் கதையைப் பார்த்தால் உண்மைக்கதை போலத்தான் இருக்கு..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜி உண்மைக்கதையை தத்ரூபமமாக எழுதியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் கதை விறுவிறுபாக் இருக்கிறது. ஆறாத ரணம் நம் மக்களின் மன வலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆரம்பத்திலிருந்து, முடிவு வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதையை நகர்த்திய விதம் அழகாக இருந்தது, முனிவர் ஜீ. :D

எனக்கும், இது உண்மைக்கதை போல தான் தெரிகின்றது.

.

ஜீ கதை அச்சா ஜீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர்...........கதை அருமை உண்மைக்கதை போல் இருக்கு. காலப்போக்கில் சரிவரலாம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜி! கதை கற்பனையா, நிஜமா! ஏதோ நிஜம் மாதிரி உள்ளது. :)

நன்றி சுவி அண்ணை

கதை உன்மைதான் நம் சனங்களுக்கு நடக்காததா என்ன அதை தான் எழுதினேன்

shanthy

Posted 18 November 2010 - 01:49 PM

முனிவர் ஜி! கதையில் கலக்குறீங்கள். பாராட்டுக்கள். கனநாளைக்கு பிறகு ஒரு கதை வாசிச்சிருக்கிறேன்.

நன்றி சாந்தியக்கா உங்களை போன்ற சிலரின் கருத்துக்கள்தான் என்னை கதை எழுத தூண்டுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.பாராட்டுகள்...கடைசியில் சுலோச்சனாவுடன் திருமணம் முடிந்ததா? இல்லையா?

திருமணம் முடிந்ததா என கேள்வி கேட்கிறதிலேயே இருக்குறீங்கள் ரதி இன்னும் மடங்கவில்லை அந்த சுலோச்சனா ரதி :unsure::wub:

இசைக்கலைஞன்

Posted 18 November 2010 - 05:07 PM

கதையை விடாமல் படித்து முடித்தேன்..! விறுவிறுப்புடன் எழுத முடிகிறது உங்களால்..! வாழ்த்துக்கள் முனி..! :)

ஆனால் கதையைப் பார்த்தால் உண்மைக்கதை போலத்தான் இருக்கு..! :wub:

நன்றி டங்குவார் [இசை .க] :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜி உண்மைக்கதையை தத்ரூபமமாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி நுணாவிலன் :)

நிலாமதி

Posted 18 November 2010 - 08:11 PM

முனிவர் கதை விறுவிறுபாக் இருக்கிறது. ஆறாத ரணம் நம் மக்களின் மன வலிகள்.

நன்றி நிலாமதியக்கா :wub:

Jil

Posted Yesterday, 03:37 PM

ஜீ கதை அச்சா ஜீ

நன்றி ஜில [துமாரா கிந்தி அச்சாகே] :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

Posted 18 November 2010 - 08:19 PM

.

ஆரம்பத்திலிருந்து, முடிவு வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதையை நகர்த்திய விதம் அழகாக இருந்தது, முனிவர் ஜீ. :unsure:

எனக்கும், இது உண்மைக்கதை போல தான் தெரிகின்றது.

நன்றி தமிழ் சிறி :wub:

abithaayini

Posted Yesterday, 05:47 PM

முனிவர்...........கதை அருமை உண்மைக்கதை போல் இருக்கு. காலப்போக்கில் சரிவரலாம். :D

நன்றி அபிதாயினி

[யாரப்பா உது புதுசா கிடக்கு] :mellow::):wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கதையினை எழுதிய விதம் வாசிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கதையினை எழுதிய விதம் வாசிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி அண்ணா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.