Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் தாயகம் சென்ற போது

Featured Replies

  • தொடங்கியவர்

புத்தரின் சிலைக்கு பூசை செய்து கொண்டிருந்த இளம் பிக்கு என்னுடன் வந்த உறவினரைப் பார்த்து இவர் இந்தியரா என்று என்னைக் கேட்டார். உறவினர் சிலை உடுத்தி குங்குமப் பொட்டு அணிந்திருந்தார். சிலவேளை பிக்கு, பெளத்த மத்தை அல்லது சிங்கள மொழியை பின்பற்றாதவர்கள் இலங்கையரல்ல என்ற உணர்வில் இருந்திருக்கலாம் அல்லது தலதா மாளிகைக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம். நான் அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றேன். அடுத்ததாக இருந்த (கீழே படத்தில் காணப்படுகிற) சிலையை நோக்கிச் சென்ற போது பெளத்தர்கள் அல்லாதவர்கள் அச்சிலைக்கு கிட்ட சென்று வழிபட முடியாது என்று எங்களைத் தடுத்தார்கள். ஒரு சிங்களவர் எங்களை நோக்கி வந்து நீங்கள் போகவேண்டாம். உங்களைத் தடுத்தவர்கள் போனதும் நான் உங்களை அச்சிலைக்கு கிட்ட சென்று வழிபட உதவி செய்கிறேன் என்றார்.சில நிமிடங்களில் தடுத்தவர்கள் சென்றபின்பு, அச்சிங்களவர் எங்களை அந்த புத்தர் சிலையை நோக்கிச் செல்ல அனுமதி வழங்கினார்.

kuppilan191.jpg

  • Replies 65
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

-------

கொழும்பில் இருந்து கம்பகா,கேகாலை வழியாகக் கண்டிக்குச் செல்லலாம். கம்பகாவைக் கடந்து கண்டியை நோக்கிச் செல்லும் போது விதிகளின் இருபக்கமும் சில குடில்களைக் கண்டேன். அங்கே பழங்கள், ஒலையினால் வேயப்பட்ட பொருட்கள் இருந்தன. வேறு சில குடில்களில் பழங்கள், பொருட்கள் இல்லை. ஆனால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்கள் ஒவ்வொரு குடிசைகளிலும் தனியாக இருந்தார்கள்.

-------

அவர்களை கஜூ(கசுக்கொட்டை) நோனா என்று சொல்வார்கள்.

அவர்களில் பெரும் பாலானோர், சபல புத்தி உள்ள ஆண்களை விபச்சாரத்துக்கு அழைத்து, கையில் உள்ளதை எல்லாம் புடுங்கிப் போட்டு.... வெறுங்கையுடன் அனுப்பி விடுவார்கள். பலரை தூரத்தில் இருந்து பார்க்க.... பெண்கள் போல்... இருக்கும். கிட்டப் போய் பார்த்தால்....அவர்கள் பொய் மார்பகம் வைத்த ஆண்கள். அவர்களின் மறைவிடத்தில், பெரிய கும்பலே..... பணத்தைப் பறிக்க காத்துக் கொண்டிருக்கும்.

pd2541160_s.jpg

Edited by தமிழ் சிறி

அவர்களை கஜூ(கசுக்கொட்டை) நோனா என்று சொல்வார்கள்.

அவர்களில் பெரும் பாலானோர், சபல புத்தி உள்ள ஆண்களை விபச்சாரத்துக்கு அழைத்து, கையில் உள்ளதை எல்லாம் புடுங்கிப் போட்டு.... வெறுங்கையுடன் அனுப்பி விடுவார்கள். பலரை தூரத்தில் இருந்து பார்க்க.... பெண்கள் போல்... இருக்கும். கிட்டப் போய் பார்த்தால்....அவர்கள் பொய் மார்பகம் வைத்த ஆண்கள். அவர்களின் மறைவிடத்தில், பெரிய கும்பலே..... பணத்தைப் பறிக்க காத்துக் கொண்டிருக்கும்.

pd2541160_s.jpg

துல்லியமான தகவலுக்கு நன்றி சிறி.

நீங்கள் எவ்வளவு பணம் இழந்தீர்கள்? :blink:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

துல்லியமான தகவலுக்கு நன்றி சிறி.

நீங்கள் எவ்வளவு பணம் இழந்தீர்கள்? :blink:

அதைத்தான் நானும் கேட்கவேணும் எண்டு நினைச்சன்..! :lol: :lol: :lol:

துல்லியமான தகவலுக்கு நன்றி சிறி.

நீங்கள் எவ்வளவு பணம் இழந்தீர்கள்? :blink:

வெட்கப்படாமல் சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் இலங்கையில் இருக்கா. அம்ஸ்ரடாம், பிராங்க்பெர்ட் போன்ற இடங்களில் இருப்பதாக கேள்விப் (!) பட்டுள்ளேன் :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கப்படாமல் சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் இலங்கையில் இருக்கா. அம்ஸ்ரடாம், பிராங்க்பெர்ட் போன்ற இடங்களில் இருப்பதாக கேள்விப் (!) பட்டுள்ளேன் :lol: .

சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளதாகவும் நான் கேள்விப் (!) பட்டுள்ளேன்..! :lol:

சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளதாகவும் நான் கேள்விப் (!) பட்டுள்ளேன்..! :lol:

அட்ரா சக்கை. நீங்கள் உலகம் சுற்றும்(!) வாலிபன் போல.

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை. நீங்கள் உலகம் சுற்றும்(!) வாலிபன் போல.

:lol: :lol: :lol:

சேச்சே.. நான் ரொம்ப நல்ல பையன்.. :rolleyes: பார்த்து ரசிக்கிறதோடை சரி..! :lol:

வெட்கப்படாமல் சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் இலங்கையில் இருக்கா. அம்ஸ்ரடாம், பிராங்க்பெர்ட் போன்ற இடங்களில் இருப்பதாக கேள்விப் (!) பட்டுள்ளேன் :lol: .

சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளதாகவும் நான் கேள்விப் (!) பட்டுள்ளேன்..! :lol:

மத்திய லண்டனில் Soho எனும் இடத்திலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக பெரிய அண்ணாமார் கதை கதையாக கூறுவார்கள்.

Edited by thappili

  • 2 months later...
  • தொடங்கியவர்

தலதா மாளிகையில் புத்தரின் பல்லு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். புத்தரின் பல்லைப் பார்க்கப் போய் என்ற பற்களை இழக்க விரும்பாது தலதா மாளிகையைச் சுற்றிப் பார்த்தபின்பு அருகில் இருக்கும் ஏரியையும் பார்த்தபின்பு அவ்விடத்தை விட்டு சென்றேன்.

கண்டியில் செல்வ விநாயகர் ஆலயம் ஒன்று இருக்கிறது. என்னுடன் வந்த உறவினர்கள் செல்லவிரும்பியதினால் அவ்வாலயத்துக்கு சென்றேன். அக்கோவிலில் கும்பிட்டுக் கொண்டிருந்த இந்தியா வம்சவாளித் தமிழரைச் சந்தித்தேன். கண்டியில் எதாவது பிரச்சனை என்றால் எங்களை சிங்களவர்கள் தாக்குவார்கள். பல கலவரங்களில் தாங்கள் தப்பிப் பிழைத்ததாகச் சொன்னார். ஆனால் விடுதலைப்புலிகள் பலமாக இருப்பதினால் தங்களை முந்திமாதிரி இப்பொழுது தாக்குவதில்லை.சிங்களவர்கள் தங்களைத் தேவையில்லாமல் சீண்டுவதில்லை என்று சொன்னார். தான் இந்தியாவில் இருந்து வந்த 3வது வழி பரம்பரை என்றும் சொன்னார். கெளசல்யனை அநியாயமாகக் கொன்று விட்டார்கள். தனக்கு கவலையாக இருப்பதாகவும் சொன்னார். அக்கோவிலில் பசுமாட்டிற்கு குளிப்பாட்டி கோமாதா பூசை செய்வார்கள். என்னைப் பசுமாட்டிற்கு ஒருவாளி தண்ணீர் வாக்கச் சொன்னார். kuppilan204.jpgஎங்கட உறவினர்களில் ஒருவரைத் தேவாரம் பாடவும் அன்பாகக் கேட்டார். அத்துடன் அருகில் இருக்கும் தமிழ் உணவகத்துக்கு கூட்டிச் சென்று வழிகாட்டி விட்டு விடுதலைப்புலிகள் பலமாக இருப்பதினால் தான் தாங்கள் பயமில்லாமல் நிம்மதியாக இங்கு இருப்பதாகச் சொன்னார்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அருகில் இருக்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் சென்றபின்பு தொடர்ந்து பயணித்தேன்.

7644020.jpg

universityofperadeniya2.jpg

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

அருகில் இருக்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் சென்றபின்பு தொடர்ந்து பயணித்தேன்.

பட்டதாரியான பின்புதான் தொடருவீயளோ? ஜயோ அவ்வளவு காலமும் என்னால் காத்திருக்க முடியாது விரைவில் தொடரவும்

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி அதிகம் விடாமல் தொடருங்கள் அரவிந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொன்னாலும் இது ஓவர் ஒருவருசத்தை தாண்ட போகுது

  • 2 months later...
  • தொடங்கியவர்

கண்டியில் இருந்து நுவரேலியா செல்லும் வழியில் கம்பளை என்ற இடத்தினை அடைந்தோம். அங்கே சென்ட் ஜோசப் பாலிக மகாவித்தியாலயம் என்ற பாடசாலை இருக்கிறது. இங்கு முன்பு 70 களில் தமிழ் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். தமிழர்களும் கல்வி கற்றார்கள். இப்பொழுது அங்கு தமிழர்கள் படிக்கிறார்களா என்று தெரியவில்லை.

kuppilan211.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் ரெம்பதான் கடுப்போத்திறியள்,

பேரப்பிள்ளையை காணும்போதுதான் இத் தொடர் முடியும் போல

  • தொடங்கியவர்

இப்பொழுது தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகள், புத்தகோவில்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.மத்திய இலங்கையில் கம்பளையில் மலை உச்சியின் மேல் தெரியும் புத்தகோவில் ஒன்று.

kuppilan214.jpg

kuppilan212.jpg

  • தொடங்கியவர்

கம்பளையில் உள்ள திரையரங்குகளில் வயது வந்தோருக்கான தமிழ் திரைப்படங்கள் தான் திரையிடுகிறார்கள் போல இருக்கிறது. புகையிரதக்கடவையில் அருகில் நிற்கும் போது ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்கள்

kuppilan213.jpg

படங்களின் பெயர்கள் எதோ மோகம் எதோ தாகம், மையூரி என்று எழுதப்படிருக்கின்றன. நல்ல தமிழ்ப் படங்களின் விளம்பரங்களைக் காணவில்லை. நல்ல படங்களை இங்கு வசிப்போர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒருவேளை பார்க்கினமோ தெரியவில்லை.

அரவிந்தன் ரெம்பதான் கடுப்போத்திறியள்,

பேரப்பிள்ளையை காணும்போதுதான் இத் தொடர் முடியும் போல

நிட்சயம் உங்கட பேரப்பிள்ளையினைக் காணமுன்னம் இத்தொடரினை முடிக்கப் பார்க்கிறேன்

என்ன சொன்னாலும் இது ஓவர் ஒருவருசத்தை தாண்ட போகுது

இவ்வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன. பார்ப்பம்...

  • தொடங்கியவர்

கண்டியில் இருந்து நுவரெலியா செல்லும் நோக்கிச் செல்லும் போது பார்த்தவை.

kuppilan215.jpg

kuppilan216.jpg

kuppilan217.jpg

kuppilan218.jpg

kuppilan219.jpg

kuppilan220.jpg

kuppilan221.jpg

  • தொடங்கியவர்

இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் தேயிலை. மலையகத்தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் உரிய ஊதியம் கிடைக்காமல் வேலை செய்துவருகிறார்கள். இவர்களில் பலர் குடியுரிமை அற்றவர்கள். இவர்களின் சிலரது இருப்பிடங்கள் மலைச்சரிவிலே இருக்கின்றன.

kuppilan222.jpg

தேயிலைத் தோட்டம்

kuppilan223.jpg

  • தொடங்கியவர்

வீதியில் பயணிக்கும் போது ஒரிடத்தில் அதிகளவு மக்களும், மாணவ மாணவிகளும் விதியின் இருமருங்கிலும் நிற்பதனைக் கண்டேன். மேளம், நாதஸ்வரத்தோடு, பாண்டு வாத்தியக் கலைஞர்களும் இசைவழங்க ஆயுத்தமாக நின்றார்கள். காவல்துறையினர் சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு அமைச்சர் ஒருவரினை வரவேற்கவே இந்த ஏற்பாடுகள் என பிறகு அறிந்தேன்.

kuppilan224.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

போகிற வழியில் தென்பட்ட இன்னுமொரு புத்த கோவில்

kuppilan225.jpg

மலைச்சரிவில் அமைந்திருக்கும் வீடுகள்

kuppilan226.jpg

  • தொடங்கியவர்

புசல்லாவை கண்டி மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகரம். இங்கு அதிக தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன.

143812.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கம் புகைப்படங்களோடு நன்றாக உள்ளது தோழர்... :) :)

  • 2 months later...
  • தொடங்கியவர்

சின்மயா மிசன் என்ற அமைப்பானது  இந்தியாவில் இருக்கின்றது. இராமர், கிருஸ்ணர், அனுமான் கோவில்கள் என்றால் உதவி செய்து வருபவர்கள். இலங்கையில் 80களுக்கு முன்பு இராமர், அனுமான் கோவில்கள் ஒன்று இரண்டு தான் இருந்தன. பிற்காலத்தில் பல வைஸ்ணவ கோவில்கள் இலங்கையில் சின்மயா மிசனரியினாரால் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்று இறம்பொட அனுமார் கோவில். சின்மயா மிசனரியினர் இக்கோவிலை இங்கு கட்டியதற்கு காரணம் ஒன்று சொல்லுகிறார்கள். இராவணனின் படையுடன் யூத்தம் ஆரம்பிக்கும் போது இங்கு தான் இராமரின் படை ஒன்றாக சேர்ந்திருந்தார்கள். இராமனின் படைதான் இறம்பொட(ராம்படை) என்று மாறியதாக சொல்கிறார்கள். இறம்பொடயில் இருந்த மலையில இருந்து கொண்டுதான் அனுமார் சீதையைத் தேடினார் என்றும் சொல்கிறார்கள்.

kuppilan235.jpg

தமிழர்களின் படையினை சிங்களப்படை வெற்றி பெற்ற கதைகளைச் சொல்லி வன்னியில் சிங்களவர்கள் தற்பொழுது சுற்றுலா சென்றுவருகிறார்கள். இதே போல வட இந்தியார்களும் இலங்கையில் இராவணனை இராமர்  வெற்ற இடங்கள், இராமாயணக் கதைகள் நடந்த இடம் என்று சொல்லி சுற்றுலா சென்றுவருகிறார்கள்

kuppilan237.jpg

kuppilan238.jpg

'உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்' என்ற வாக்கியத்தினை ஒரு பலகையில் எழுதி அக்கோவிலில் நட்டு வைத்திருக்கிறார்கள். அழும் போது யார் உதடுகளைப் பற்றி நினைப்பது?

உங்கள் ஆக்கம் புகைப்படங்களோடு நன்றாக உள்ளது தோழர்... :) :)

நன்றிகள் புரட்சி

Edited by Aravinthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.