Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்வோருக்கு மன்னிப்பு இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்வோருக்கு மன்னிப்பு இல்லை - ரம்புக்வெல

டிச 3, 2010

மரணப் படுக்கையில் கிடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்கின்ற துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்து உள்ளார்.

பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு இவர் தெரிவித்து உள்ளார்.

இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:

”மரணப் படுக்கையில் கிடக்கும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கும் துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள். இத்துரோகிகள் நாட்டுக்கு எதிராக மிகப் பெரிய கெடுதலை செய்கின்றனர்.

புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஒரு நாட்டின் தலைவருடைய கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பாதுகாக்க தவறியதன் மூலம் பிரிட்டன் அரசின் பயந்தாங்கொள்ளித்தனமும், இயலாமையும் உலகில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.”

sangathie

  • கருத்துக்கள உறவுகள்

தாடி.

அமரிக்கன் ஜானாதிபதி சொல்லிட்டார் இனி எல்லரும் கொஞ்சம் கவனாமாய் இருங்கோ,,

மாங்காய் மடையன்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்று சிங்களம் சொல்வது தமிழ் மக்களைத் தான். தமிழ் மக்களை தாங்கள் மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டதாக அவன் பெருமிதம் கொள்கிறான்.. நாங்கள் என்னவோ அவனை லூசு என்று திட்டிறம்.

இப்படியான இனவாதம் கொப்பளிக்கும் கருத்துக்களை சிங்கள பேரினவாத சிந்தனையில் சிறீலங்கா கட்டுண்டு கிடப்பதை தமிழர்கள் சர்வதேசத்துக்கு விளக்கி இந்த சிந்தனையுள்ள மக்களோடு ஜனநாயக வழியில் சேர்ந்து வாழ முடியாது. நாம் பிரிந்து சென்று உரிமையோடு வாழ சர்வதேசம் உதவ வேண்டும். அதுவே எமக்கு பாதுகாப்பு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதன் மூலமே தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமை சர்வதேசத்தால் விளங்கிக் கொள்ளப்படும். அப்போது தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தின் பின்னால் இருந்த நியாயமும் சர்வதேசத்தின் முன் பயங்கரவாத உச்சரிப்பை தாண்டி நியாயத்தைப் பெறும்.

அதுவே சிங்களத்துக்கு நாம் எழுதும் மரண சாசனமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வது முற்றிலும் சரியானது.

மகிந்தரின் இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவிலும் பல ஊடகங்களில் வந்துள்ளது. வெளிவந்த வீடியோக்களும் காண்பிக்கப்படுகின்றன.

இது ஏற்கனவே சிங்களத்தின் சீனாவுடானான உறவில் கொஞ்சம் விசனம் அடைந்திருக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மீது, அதை இன்னும் விரிசலாக்க உதவும் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்து மக்ளைன் இதழிலும் மகிந்தவை சர்வாதியாகச் சித்தரித்து ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழர்களின் சிந்தனையும் செயலும் எப்போதும் ஒரு அடி சிங்களவனுக்கு பின்னர்தான் இருந்துகொண்டேயிருக்கிறது என்பது தான் எனக்குப் புரியவில்லை. மகிந்த இங்கிலாந்து வந்து சேர்ந்தபின்னர் தான் போரில் மனித உரிமை மீறிய விவகாரம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றனவே?. சர்வதேச மட்டத்தில் இவர்கள்மீது நிரந்த பிடியாணை இருக்கும்படியாக செய்யமுடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அநேகமாக panic mode இல்தான் வேலை செய்வார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு அரசியல், போர்க்குற்ற விசாரணைகளில் வேலை செய்வது தமிழர்களுக்குக் கடினம். அத்துடன் தற்போது உள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் அநேகமாக மகிந்தவின் அரசியலை எதிர்க்கும் சிங்கள ஊடகர்களினாலேயே வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்கள் கடிதங்கள், அறிக்கைகள் எழுதுவதும், முக்கியமில்லாத விடயங்களில் நேரத்தைச் செலவழிப்பதிலும் விண்ணர்கள். எனினும் புலத்தில் உள்ள இளையோர் தமது தனித்துவமான திறமைகளால் பல விடயங்களை முன்னெடுக்கக் கூடிய சக்தியைக் கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுப்பவர்கள் இவர்களே

அதாவது சிங்கள அரசியல்வாதிகளே...

அவர்கள் நினைத்தால்

அதற்கான தேவைகளை இல்லாது ஒழிப்பதன் மூலம்

புலிகளின் மீழ்வருகையை இல்லாது செய்யமுடியும்.

தலைப்பை இப்படி வைத்திருக்கலாம்.

எமது மாண்பு மிகு ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கட்கு லண்டனில் மரணபயத்தை காட்டியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று.

Edited by KILI TIGER

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.