Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா கவிதைகளும் அருமையாய் இருக்கிறது,அவசரத்துக்கு மேய்ந்து விட்டேன், இனி ஒருநாள் ஆறுதலாய் இரை மீட்க வேண்டும்......!  ?

  • 2 weeks later...
  • Replies 333
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வண்ணங்கள் நிரந்தரமல்ல

By முனியாண்டி ராஜ். 
 

எனக்குத் தெரிந்த முகங்கள்தாம் அவை

இப்போது

வெவ்வேறு வண்ணங்களில்

தங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள் 

உள்ளுக்குள் குடைந்து

என் வண்ணம் அலசினார்கள்

வார்த்தைகளைத் தூண்டில்களுக்குள் வைத்து 

உள்ளத்தை இழுக்கிறார்கள்

வண்ணங்களை இரையாகப் பொருத்தி

 

வண்ணங்களில் விழுந்தெழுவது

அப்படியொன்றும் பழையதல்ல எனக்கு

மரங்கள் தோறும்

மரஞ்சார்ந்த தூண்கள் தோறும்

தூணற்ற கொம்புகளில் படர்ந்தும்

வண்ணங்கள் பறப்பதென்னவோ புதிதல்ல

ஒரு திருவிழா போல

முளைத்து விடுகிறது ஆண்டைந்து கணக்கில்

 

வண்ணங்களை மாற்ற முடியா தூரத்தில் 

எப்போதுமே தோற்று விடுகிறேன் நான்

என் வண்ணங்களை முதன்மைப்படுத்துவதில் 

வண்ணமற்றவனாகவே மாறி விடுகிறேன்

இப்போதும்கூட

என்னைக் கடக்கும் அறிமுக முகங்கள்

ஓர் எக்காளப் பார்வையைத்தான்

எறிந்துவிட்டுப் போகின்றன

ஒரு கருமைக்குள் என்னைத் தள்ளி 

 

கருப்பும் ஒரு வண்ணமென

கடப்பவர் உணரும் தருணத்தில்

வண்ணமற்றவர்களாகவே மாறியிருப்பர் அவர்களும்

 

 

http://neerkoodu.net/Site/news1/58

 

  • Like 1
  • 4 weeks later...
Posted

எது சுதந்திரம்

எது சுதந்திரம்? 
போராடி போராடி உரிமையை பெறுவதா 
காசு கொடுத்து கல்வியை பெறுவதா 
மரத்தை வெட்டி நிழலை பெறுவதா 
நிலத்தை விற்று உணவை பெறுவதா 

எது சுதந்திரம்? 
தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா 
சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா 
இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா 
பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா 

எது சுதந்திரம்? 
சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா 
மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா 
உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா 
சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா 

எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட....... 

உரிமையை பெற உரிமை இல்லை 
கல்வியை பெற கல்வி இல்லை 
நிழல் பெற மரமும் இல்லை 
உணவை பெற நிலமும் இல்லை 

வீரம் பேச தைரியம் இல்லை 
சமத்துவம் பேச தகுதி இல்லை 
ஆண்மிகம் பேச இறைத்தன்மை இல்லை 
பாரம்பரியம் பேச பழமை இல்லை 

நிம்மதி தேட சந்தோசம் இல்லை 
மனிதநேயம் தேட மனிதன் இல்லை 
பாசத்தை தேட உறவுகள் இல்லை - கடைசியில் 
சுதந்திரம் தேடும் சுதந்திரமும் இல்லை.

https://eluthu.com/kavithai/360390.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவி மகாத்மியம்

- சுகுமாரன்

 

changanuoorbhagawathy.jpg

 

தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறதுகனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடைபிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.

 

http://vaalnilam.blogspot.com/2018/08/blog-post.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/21/2018 at 5:20 PM, nunavilan said:

39745118_10156312194998801_7845543362907

 

மனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்?

ஆர். அபிலாஷ்

தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ் மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்?

முகநூலில் ராஜன் குறை குறிப்பிட்டது போல இது ஒரு அரசியல் வியூகம் மட்டுமே. மனுஷ்யபுத்திரன் ஒரு இஸ்லாமியர், ஒரு இஸ்லாமியர் இந்துக்களை அவமதிக்கிறார் எனும் சித்திரத்தை உருவாக்குவதே எச். ராஜாவின் நோக்கம். ஆனால் அவர் நிச்சயம் வெல்லப் போவதில்லை; ஏனெனில் தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பின் சுவடுகள் இருந்ததில்லை; இஸ்லாமியரை மற்றமையாய் பார்க்கும் மரபோ வரலாறோ நமக்கு இல்லை. இஸ்லாமிய படையெடுப்பினால் நாம் நிலைகுலைந்த தருணங்கள் நம் வரலாற்றில் இல்லை. ஆனாலும் இது ஒரு சள்ளுபிடித்த பிரச்சனை தான். ஒருவர் சாக்கடையில் விழுந்து குதித்தால் சாலையில் போகிறவர்களின் மீது தான் சாக்கடை நீர் பட்டு அழுக்காகும். இந்துத்துவர்கள் அப்படி தம்மையும் சேறாக்கி வழிப்போக்கர்களையும் சேறாக்க போகிறார்கள். 

என்ன வியப்பென்றால், மனுஷ்யபுத்திரன் இதே போல முன்பு ஜனாய்லுதீன் தலைமையிலான பிற்போக்காளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் – அப்போது அவர் (நக்கீரனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில்) இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என சொன்னார்கள். அப்போது அவர் இஸ்லாத்தை விமர்சித்த ஒரு இஸ்லாமியர்; இப்போது அவர் இந்து தெய்வத்தை அவமதித்த இஸ்லாமியர். இஸ்லாத்தை விமர்சிப்பவர் இஸ்லாமியரே அல்ல தானே; அப்படி எனில் இஸ்லாத்தில் இருந்து வெளியே வந்து விட்ட மனுஷ், இப்போது “ஊழியின் நடனம்” எழுதிய மனுஷ், இஸ்லாமியர் அல்ல தானே?

இஸ்லாத்தின் உள்ளே இருந்தும் அடி, வெளியே இருந்தும் இடி என்பதே அவரது அவல நிலை.

ஒரு காரணம் மனுஷ் ஒரு முற்போக்காளர், தன் மதத்தை துறந்த முற்போக்காளர், என்பது. ஆனால் இந்தியாவில் நீங்களே மதத்தை துறந்தாலும் மதம் உங்களைத் துறக்காது. 

இது மேற்கில் நிகழாது – அங்கே பெர்ட்னெண்ட் ரஸலை யாரும் கிறித்துவர் எனப் பார்க்க மாட்டார்கள்; அவர் ஒரு நாத்திகர். அவர் ஒருவேளை இஸ்லாத்தை விமர்சித்து எழுதியிருந்தால் இஸ்லாமிய அமைப்பினர் ஒரு கிறுத்துவர் தம்மை அவமதித்து விட்டார் எனப் பார்க்க மாட்டார்கள். நம் நாட்டில் மட்டுமே மதம் ஒரு நிழல் போல நம்மைத் தொடர்கிறது.

“ஊழியின் நடனம்” ஒரு அரசியல் கவிதை – ஆக அது நேரடியாகவும் கூர்மையாகவும் உள்ளது. நகைமுரணே அதன் தொனி.

“தேவி 

உன் விடாய்க் குருதி

ஊழிக் காலங்களை 

உருவாக்க வல்லதா?”

எனக் கேட்கையில் சபரி மலையில் பெண்கள் நுழைவதற்கு உரிமை கோரும் போராட்டத்தை, அதன் மீதான தெய்வ சாபமே இப்போதைய கேரள வெள்ளம் எனும் சர்ச்சையை குறிக்கிறார்.

“உன் விடாய்க் குருதியை

அசுத்தம் என்றார்கள்

தீட்டு என்றார்கள்

உன் குருதியின் வெள்ளம்

இந்த நிலத்தின் மீதிருக்கும்

அத்தனையையும்

முழுமையாக கழுவிக் கொண்டிருக்கிறது

இவ்வளவு தூய்மை

எங்களுக்கு வேண்டாம்”

இந்த இடத்தில் நகைமுரண் தோன்றுகிறது. தேவியின் விடாய்க் குருதி அல்ல, பக்தைகளின் விடாய்க் குருதி அல்ல, இந்துத்துவர்களின் வெறியே அசிங்கம் என சுட்டுகிறது. இந்த வெள்ளம் அதைக் கழுவுவதற்கான தேவ கோபம் என்கிறது. போதும், கருணை காட்டு என தெய்வத்தை கோருகிறது.

இது ஒரு எளிய கவிதை தான். ஆனால் இதன் நகைமுரணை புரிந்து கொள்ளும் திறன் நம் சங்கிகளுக்கு உண்டா எனத் தெரியவில்லை.

சரி, இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மனுஷ் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய முடியாது – அவர் எந்த மதத்தையும் சாராதவராய், எல்லா மதங்களையும் விமர்சிப்பவராக, அதே நேரம் தன் பிறப்படையாளத்தை அழிக்க முடியாதவராய் (அது அவர் தவறல்ல என்றாலும்) இருக்கும் வரையில், இது போன்ற தாக்குதல்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.

 

http://thiruttusavi.blogspot.com/2018/08/blog-post_20.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/24/2018 at 7:13 PM, கிருபன் said:

தேவி மகாத்மியம்

- சுகுமாரன்

 

changanuoorbhagawathy.jpg

 

தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறதுகனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடைபிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.

 

http://vaalnilam.blogspot.com/2018/08/blog-post.html?m=1

 

பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை

ஸ்ரீபதி பத்மநாபா

பாண்டியனைக் கொன்று தன் இடமுலை திருகி வீசி மதுரையை எரித்தாள் அவள். அதன் பின்னர் மதுரை விட்டு நீங்கி வையையாற்றின் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாட்டை அடைந்து அங்கு திருச்செங்குன்று என்ற மலை மீதேறி ஓர் வேங்கை மரத்தின் நிழலில் வந்து நின்றாள். அங்கு தேவர்கள் பூமாரி பொழிய ஆகாயத்தினின்றும் அழகிய விமானம் கீழே இறங்க, அவ்விமானத்தில் தெய்வ வடிவோடு கோவலன் இலங்க, கண்ணகி களிகூர்ந்து அவ்விமானத்திலேறி விண்ணுலகடைந்தாள்.
*
செங்குன்றூருக்கு (இன்று பிரளயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் செங்கன்னூர்) சேரன் செங்குட்டுவன் வருகிறான். அங்கு மக்கள் வியந்தோதும் கண்ணகியின் கதையைக் கேட்கிறான். இமயத்திலிருந்து எடுத்து வந்த ஒரு கல் கொண்டு சிலை வடித்து செங்கமலவல்லி எனும் தெய்வமாக்குகிறான்.
*
பல நூற்றாண்டு ஐதீகத்தின் கீற்றுகள் இவை. இன்றும் இந்தக் கோவிலில் கண்ணகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். அதுவும் தன் மாதவிடாய் நாட்கள்கூட இன்னும் தீராத ருதுவதியாய்.
*
கேரளத்தில் கோட்டயம் திருவல்லா கடந்து சபரிமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் செங்கன்னூர். பம்பை ஆற்றங்கரையில் பரந்து விரிந்து கிடக்கிறது செங்கன்னூர் மகாதேவர் கோவில்.

பெயரில் ஆண் தெய்வம் இருந்தாலும் செங்கன்னூர் பகவதி என்றுதான் சொல்வார்கள்.

இந்தக் கோவிலின் மேல்சாந்திக்கு மற்ற கோவிலின் சாந்திகளில் இருந்து வேறுபட்ட ஒரு முக்கியமான நித்தியக்கடன் ஒன்று உண்டு. இரவுகளில் இணத்தோர்த்து (இணைத்துவர்த்து) உடுத்துறங்கும் தேவியின் உடையாடையில் மாதவிடாயின் அம்சம் ஏதேனும் இருக்கிறதா என்று தினமும் காலையில் பரிசோதிக்கும் கடன் அது.

தூமையின் அம்சம் இருக்குமாயின் அந்த உடையாடையை கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார் அவர். கோவிலின் தந்திரி வகையினரான தாழமண் மற்றும் வஞ்சிப்புழை இல்லத்தைச் சேர்ந்த மூத்த பெண்கள் யாரேனும் வந்து விலக்கை உறுதிப்படுத்துகிறார்கள். ‘திருப்பூத்து’ உறுதியானவுடன் தேவியின் நடை அடைக்கப் படுகிறது. ஸ்ரீகோவிலுக்கு வெளியே நாலம்பலத்து க்குள் ஏதேனும் ஓர் இடத்தில் உற்சவ தேவியாகிறாள் அவள். இப்போது அவள் தமிழ் மரபுப்படி வெள்ளை ஆடையணிந்த செங்கமலவல்லி.

நான்காம் நாள். பம்பை நதிக்கரையின் மித்திரக் கடவுத்துறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்குப் புனித நீராட்டு செய்யப்படுகிறது. திருப்பூத்து ஆறாட்டு. பின் யானையின் மீது அமர்ந்து கோவிலுக்குச் செல்கிறாள். கோவில் வாசலில் மகாதேவன் அவளுக்காக இன்னொரு யானையில் காத்துக்கொண்டிருக்கிறார். நாலம்பலத்தை மும்முறை பிரதட்சணம் செய்கிறார்கள். மகாதேவன் கிழக்குத் திசையிலும் வல்லி மேற்குத் திசையிலுமாகத் தங்கள் நடைகளுக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.

கொடுங்கல்லூர் தேவி புராணத்திலும் கண்ணகி வந்து சேர்ந்த காதை இவ்வாறே இருக்கிறது. ஆனால் கொடுங்கல்லூர் தேவிக்கு இந்த மாதவிடாய் நாட்கள் இல்லை.

முன்பெல்லாம் மாதம் தவறாமல் ஏற்பட்டுக் கொண்டிருந்த(!) விலக்கின் கிரமம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும், பக்தர்களிடம் திருப்பூத்து ஆறாட்டின் மகிமை இன்னும் மங்கி விடவில்லை. தேவியின் திருப்பூத்து உடையாடை பக்தர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. அது வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் என்பது ஒரு நம்பிக்கை.

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, முன்னாள் கவர்னர் ஜோதி வெங்கடாசலம், சித்திரைத் திருநாள் மஹாராஜா, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரும் இந்த உடையாடைக் காணிக்கையைப் பெற்றிருக்கின்றனர். தேவியின் உடையாடையைப் பெறுவதற்கு முன்பதிவு அவசியம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு அந்தத் தூமைத் துணி முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் ‘மலையாளக் கரையோரம்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து இந்தப் பத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி பத்மநாபா எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். 

 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

(மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம்

சுகுமாரன்

normal_Titian-Noli-me-Tangere-1511-12.jpg



 

 

என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை.

                                                                              யோவான் 20:17.

 

ன் என்னை விலக்குகிறீர்ரபூனி?

ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்?

உம் சீடர்களைப் பார்க்கிலும்

வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல

உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா?

 

என் பிரியரே,

மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள்.

உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான

ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே?

மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல

உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய 

ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே?

 

போதகரே,

உம் சீடரைப் பார்க்கிலும்

எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர்

உம் சீடரைப் பார்க்கிலும்

நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம்

 

எனினும்

என்னை ஏன் தள்ளிவைக்கிறீர்ரபூனி?

உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்?

 

திராட்சைரசம் மணக்கும்

உமது அதரங்களால்

நீர் முத்தமிட்டது என்னைத்தானே?

அப்போது

உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய 

புளித்த காடியை உணர்ந்தீரா?

 

சீமோன் மாளிகை விருந்தில்

உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் 

கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப் 

பரிமளத்தைலம் பூசினேனே,

அப்போது

உமது பாதங்களைத் துளைத்த ஆணியின்

காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா?

 

அன்பரே,

கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில் 

நடுங்கி நின்றவள் நானே

பாவமற்ற கரம் எறியட்டும் என்று 

என்னை மீட்டவர் நீர் - அப்போது

நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா?

அப்போது

இலக்கு நானல்லநீரே என்று

அறியாமலா இருந்தீர்?

 

உம் மீது விழுந்த கசையடியில் 

துடிதுடித்தவளும்

உம் சிரசிலிருந்து பெருகிய

ரத்த வியர்வையை ஒற்றியவளும்

உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக்

கையிலேந்தியவழும் நானல்லவா?

அப்போது

உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று

உச்சாடனம் செய்யவில்லையா நீர்?

 

பின்பு ஏன்

உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்?

 

ரபூனி,

நான் பற்றிப் பிடித்துக் கொண்டால்

பிதாவிடம் ஏறமுடியாது எனில்

நான்  நாங்கள்   மரியாள்கள்

விலக்கப்பட்ட கனிகளா?

 

எனில் போதகரே,

மரியாள்கள் தொடாத நீர்

வயற்புலத்தின் விதையல்ல

பாறைமேல் சிதறிய தானியம்.

 




பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியர் டிஷியனின் ‘ என்னைத் தொடாதே ( Noli me tangere ) ஓவியத்தால் தூண்டப்பட்ட கவிதை.

 

http://vaalnilam.blogspot.com/2018/09/blog-post.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

(மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம்

சுகுமாரன்

normal_Titian-Noli-me-Tangere-1511-12.jpg



 

 

என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை.

                                                                              யோவான் 20:17.

 

ன் என்னை விலக்குகிறீர்ரபூனி?

ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்?

உம் சீடர்களைப் பார்க்கிலும்

வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல

உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா?

மரியாளே உன்னை ஒருபோதும் தள்ளிவைக்கவில்லை. அதனால்தான் உயிர்தெழுந்த‌ பின்பு முதல் முதல் உனக்கு காட்சி கொடுத்தேன்

என் பிரியரே,

மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள்.

உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான

ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே?

மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல

உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய 

ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே?

 

போதகரே,

உம் சீடரைப் பார்க்கிலும்

எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர்

உம் சீடரைப் பார்க்கிலும்

நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம்

 

எனினும்

என்னை ஏன் தள்ளிவைக்கிறீர்ரபூனி?

உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்?

 

திராட்சைரசம் மணக்கும்

உமது அதரங்களால்

நீர் முத்தமிட்டது என்னைத்தானே?

அப்போது

உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய 

புளித்த காடியை உணர்ந்தீரா?

இது எங்கே எப்பொழுது?.....மகளே, நான் வந்த நோக்கம் / உன்னை இரட்சித்தது எல்லம் இந்த இழிவான நோக்கத்திற்கு அல்ல.

சீமோன் மாளிகை விருந்தில்

உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் 

கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப் 

பரிமளத்தைலம் பூசினேனே,

அப்போது

உமது பாதங்களைத் துளைத்த ஆணியின்

காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா?

இல்லையே மகளே...அதுதான் அன்றே சொல்லிவிட்டேனே. நற்செய்தி எங்கெல்லாம் பிரசங்கின்றதோ, அங்கெல்லாம் உன்பெயரும் அதில் வரும் என்று. 

 

அன்பரே,

கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில் 

நடுங்கி நின்றவள் நானே

பாவமற்ற கரம் எறியட்டும் என்று 

என்னை மீட்டவர் நீர் - அப்போது

நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா?

அப்போது

இலக்கு நானல்லநீரே என்று

அறியாமலா இருந்தீர்?

இல்லையே.... பிதாவே.மோசேயின் கட்டளைகளை இவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்றள்ளவா எழுதினேன். நீயும் ஆபிரகாமின் குமாராத்தியாக இருக்கின்றாய். மனம் திரும்ம வேண்டுமென்றல்லவா எழுதினேன். 

உம் மீது விழுந்த கசையடியில் 

துடிதுடித்தவளும்

உம் சிரசிலிருந்து பெருகிய

ரத்த வியர்வையை ஒற்றியவளும்

உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக்

கையிலேந்தியவழும் நானல்லவா?

அப்போது

உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று

உச்சாடனம் செய்யவில்லையா நீர்?

நிட்சயமாக இல்லை மகளே... பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்னதென்று தெரியாமல் செய்கின்றாகள் என்றல்லவா கதறினேன்.

பின்பு ஏன்

உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்?

 

ரபூனி,

நான் பற்றிப் பிடித்துக் கொண்டால்

பிதாவிடம் ஏறமுடியாது எனில்

நான்  நாங்கள்   மரியாள்கள்

விலக்கப்பட்ட கனிகளா?

உயிர்த்த பின் நான் ஆவியாக இருக்கின்றேன் மகளே. எப்படி என்னை தொடுவாய்? உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல. நானிந்த உலகத்தான் அல்ல. என்னை அனுப்பினவரின் திட்டத்தை நிறைவேற்றவே வந்தேன். நான் பிதாவிடம் போகாவிட்டால் எப்படி இந்த உலகத்திற்கு இரட்ச்சிப்பு கிடைக்கும். நித்திய உலகத்தில் என் மக்கள் எல்லொருடன் நீயும் இருப்பாய் மகளே
 

எனில் போதகரே,

மரியாள்கள் தொடாத நீர்

வயற்புலத்தின் விதையல்ல

பாறைமேல் சிதறிய தானியம்.

உன்னை போன்ற பாவிகளையே அழைக்கவந்தேன். நீதிமன்களை அல்ல. என்பதை பலதடவை கூறியும் இன்னுமா புரியவில்லை பேதை பெண்ணே?


பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியர் டிஷியனின் ‘ என்னைத் தொடாதே ( Noli me tangere ) ஓவியத்தால் தூண்டப்பட்ட கவிதை.

மகளே இன்னுமா என்னை புரிந்து கொள்ளவில்லை. "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கின்ரேன். "
 

http://vaalnilam.blogspot.com/2018/09/blog-post.html?m=1

 

Edited by colomban
  • Haha 1
Posted

பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை

ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர
வேறெதையும் செய்வில்லை 
ஒட்டிய வயிறுடன்
நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும்
முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை

இனியொரு பாலகரின் கண்களை எப்படிப் பார்ப்பது?

ஏதுமறியாப் பாலகர்கள்
இம்மண்ணில் பிறந்திருந்தைதவிர
வேறெதையும் செய்திருக்கவில்லை

தனித்துப் பிடிபட்ட சிறுவனிடம்
ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள்மட்டுமே இருந்தன

குற்றங்களால் நிரம்பியிருந்த வானத்தில் 
ஒரு பறவையும் இல்லை
பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில் 
எஞ்சியது ஒன்றுமில்லை

இப்பூமியில் மீண்டும் புற்கள் முளைக்குமா?

நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள்
அப் பாலகன் இறுதிக் குரலெடுக்கையில்
உடைந்த நிலவைத்தவிர 
எந்தச் சாட்சியுமில்லை

20.02.2013

தீபச்செல்வன்

(எனது குழந்தை பயங்கரவாதி தொகுப்பு)

Image may contain: 3 people, people smiling, people standing
 
 
  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்கள் இன்னும் ஓயவில்லை

முனியாண்டி ராஜ்.

 

போர் ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதின்

கடற்கரையில்

கிழிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்தபோது

அப்பாவைக் கேட்டேன்..

கிழிஞ்சல்கள் மட்டும்தான் கரை ஒதுங்குமா

ஆம்.... இல்லை...

என்ற சொல் ஏதுமின்றி

வெகுதூரம் நடந்து கொண்டிருந்தார் அப்பா

சொற்களைச் சிக்கனப்படுத்தத் துவங்கி

வெகுநாள்களாகி விட்டது அவருக்கு

உடலின் சில உறுப்புகள் போல

 

அப்பாவை எளிதில் பிடித்துவிடலாம்

ஒரு கால் ஊன்றி எம்பி நடக்கும் அவரை

ஈரெட்டில் பிடித்து விட முடியும்

 

ஒருநாள்

சில பிணங்களுடன் கரை ஒதுங்கிய

உடைந்த படகொன்றை ஏந்திய துண்டிதழை

வெகுநேரமாக வெறித்துக் கொண்டிருந்தார்

அப்பா......

துண்டேதுமின்றி தன்னைக் கரையில் வீசிய

படகானது அவரை மீண்டும் சுமந்திருக்கலாம்

 

http://neerkoodu.net/Site/news1/70

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி தர்சினி உதயராஜா......!

  • Thanks 1
Posted

மாற்றம் ஒன்றே மாறாதது

 

நுனி நாக்கு ஆங்கிலம்,
விரல் நுனி தட்டச்சு,
அழுக்கு படாத Cuff அன்ட் Collar,
அறிந்த மொழி கனிணி மொழி.
அறிந்தும் அறியாத மொழி தமிழ்.
தகவல் ஒன்றே தலை காக்கும் என்று
அதன் தொழில் நுட்பம் அறிந்த நாங்கள்
தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள்.
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது
மாற்றத்தின் படிமங்கள் பாரீர்.
வாய்பாடு கால்குலேட்டர் ஆனது
கால்குலேட்டர் கம்பியூட்டர் ஆனது.
ட்ரங்கால் எஸ்டியானது
ஐஸ்டி Skype ஆனது.
கிட்டிபுல் PSP ஆனது
பிஸ்பி XBOXஆனது.
புத்தகம் இபுக் ஆனது
இபுக் அமேசான் Kindle ஆனது.
ரேடியோ வாக்மேன் ஆனது
வாக்மேன் IPOD ஆனது.
பிஸி லேப்டாப் ஆனது
லேப்டாப் பாம் டாப் ஆனது.
ஸ்டேன்அலோன் லேன் ஆனது
லேன் இன்டர்நெட் ஆனது.
இன்ட்ர்நெட் WiFi ஆனது
வொய் பய் WiFiMax ஆனது.
அப்ளிகேஷன் Cloud ஆனது
க்லொட் SAAS ஆனது.
வெப் WAPஆனது
வேப் அப்ளிகேஷன் ஆனது.
ஓபரா மினி ஆனது
மினி ஸ்கைஃபயர் ஆனது.
தகவல் Encyclopedia ஆனது
Encyclopedia Wiki ஆனது.
Static Web CMS ஆனது
CMS OpenSource ஆனது.
அசம்பெளி இன்டர்பரேட்டர் ஆனது
இன்டர்பேரட்டர் 4ஜில் ஆனது.
க்லையன்ட் செர்வரானது
க்லேயன்ட் செர்வர் RIA ஆனது.
Web 1.0 Web 2.0 ஆனது
Web 2.0 Semantic Web ஆனது
Semantic Web என்பது தகவலை
கொண்டு இயங்கும் தளம்
அதனால்தான் சொன்னேன்
தகவல் தலைகாக்கும் என்று.

http://kattumannarkoil.blogspot.com/2009/09/blog-post_26.html

Posted

குரல் ம.வேணுதன்(cmr.fm)

வரிகள் வட்டக்கச்சி வினோத்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மந்திரம் கவிதைகள்

மந்திரம்

 

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி

நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.

8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.

ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.

வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.

எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.

எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.

சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.

oOo

 

கீழ்மையின் ஒளி

அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.

முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது

கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.

தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.

அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது

 
 
Posted

அழகு

 

கவிதை பேசும் கண்கள்
வெள்ளையுள்ளம் கொண்ட கருப்பழகன் 
முதுகில்சேர்த்து அணைத்திட்ட 
தனது தம்பிப் பாப்பாவின் மீதான 
பாசம் தேங்கிய அழகு 
...
...
உள்ளம் கொள்ளை போகுதே !

43067678_2136433243343166_88238996755694
Posted

தாய்மை

 

தாய்மை என்பது உடல் சார்ந்து மட்டுமல்ல.
உளம் சார்ந்ததும் கூட.
அது ஒரு உணர்வு .
பால்வேற்றுமை காணாது.
எத்தனையோ ஆண்கள் தாயுமானவனாக 
இருக்கிறார்கள்.
எத்தனையோ பெண்கள் தாய்மை உணர்வு தொலைத்து அசுரகுணம்
கொண்டிருக்கிறார்கள்.
இவரை நான் திருநங்கையாகப் பார்க்கவில்லை .
தாய்மையின் உச்ச உணர்வு கொண்ட மனிதராகப் பார்க்கிறேன்.
வாழ்த்துகள் தாய்மையே..!
வளர்க மனிதம்...!

 

43828395_2140262146293609_51489238022388
  • 2 weeks later...
Posted

 

46652184_10212468083208733_6079357419568

 

புதிய முன்னோடி' இதழில் (எண் 2/2015)கீழ்வரும் கவிதையை எழுதியுள்ள Fahmida Riaz என்ற பாகிஸ்தான் நாட்டுக் கவிஞர் சென்ற நவ. 22, 2018 அன்று அந்நாட்டின் நகரமான இலாகூரில் நோய் வாய்ப்பட்ட நிலையில் (அகவை 73)இறந்தார். 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் அங்கமான அவர் சாராம்சத்தில் அரசியல் கவிஞர் ஆவார். 

பாலியல் ஒழுக்கவாதத்தை எதிர்த்த அவர் வகை மாதிரியான பெண்ணியவாதியும் அல்ல. ஆணைப் போன்றவளே பெண்ணும் என்பதே அவருடைய அணுகுமுறையாக இருந்தது. 

சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது இவரது வாழ்க்கைத் துணைவரும் அந்நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளருமான ஜாபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவரும் கைதாகும் நிலையில் இவரது தீவிர வாசகரின் சமயோசித முயற்சியினால் இந்தியாவுக்கு தப்பி வந்து ஏழாண்டுகள் இருந்து(1981-88)மேற்காண் ஜனாதிபதி இறந்த பின்னரே அந்நாட்டிற்கு திரும்பிச் சென்றார். 

கீழ்க்காணும் கவிதையை அவர் எழுதி வாசித்தபோது மோடி பிரதமராவதற்கு இரு மாதங்களே இருந்தன. அடுத்த இரு மாதங்கள் கழித்தும் அதன் பின்னரும் இந்தியாவில் நடக்கப் போவதை முன்னூகித்து எழுதியதாகவே இக்கவிதை இருக்கிறது.

அவர் இந்தியாவில் இருந்த ஏழாண்டுகளின்போது புது டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் Resident Poetஆக செயற்பட்டார். 

உருது, சிந்தி, பாரசீகம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்த அவர் போர்க்குணமிக்க கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் என பரந்த களங்களில் செயற்பட்டார்.

அரசு அடக்குமுறைக்கு ஆட்பட்ட அவரைப் போன்ற பெண் கவிஞர்கள் பாகிஸ்தானில் இல்லை; இந்தியாவிலும் இல்லை. நம் தமிழ்ப் பெண் கவிஞர்களும் இவரிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளம். 

'புதிய முன்னோடி' இதழானது இத்தகைய கவிஞருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேடிக்கை
- லீனா மணிமேகலை


நீ உன் சொற்களை
என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்
மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்
என்னிடமும் சொற்கள் இருந்தன
அவர்களிடமும் சொற்கள் இருந்தன
அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன

 

https://www.jeyamohan.in/115850#.XArepy-nxR4

Posted
 

தாயகத்தில் மலர்ந்த பூ
விடுதலைக்கு எரிந்த நெருப்பு
உன் கையிலோ விலங்கு 
சுற்றி மனித விலங்கு
தமிழன் நிலை இதற்கு
ஒரு நாள் பதில் சொல்லும் உலகு
ஐயோ உன்னை அங்கு
தவிக்க விட்டு வந்ததற்கு
வெட்க்கப்படுகிறது
ஆண்மை இன்று

வட்டக்கச்சி
வினோத்

Image may contain: one or more people
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிமையை வரைபவன்

ஏ.நஸ்புள்ளாஹ் 

 

நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது
தனிமையை ஓர் இரவாக வரைந்தேன்
இரவிற்குள்
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது

தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது

இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாடலாம்.

 

https://padhaakai.com/2018/12/02/nasbullah-poetry/

Posted

ஊடகம்....

உண்மையை கண்டறிந்து ஊருக்கு சொல்லுவதா
ஒருவருக்கு வால்பிடித்து அவர் புகழ் உளறுவதா 
தேசத்தின் நலன்காண செய்திகள் போடுவதா
வஞ்சகர் பதவிபிடிக்க பக்கவாத்தியம் வாசிப்பதா

மக்களின் நலம் காண அச்சுக்களை கோருங்கள்
துன்பத்தை துரத்த சொற்களை சேருங்கள்
நடிப்பவன் தலைவன் என்னும் கூச்சலை நிறுத்துங்கள்
சிந்தனை சிறப்பென்றால் தலைவனாய் போற்றுங்கள்

மெய்பொருள் கண்டு பொய்களை நீக்குங்கள்
பாமரன் விளங்க சொற்களை ஆக்குங்கள்
உரிமையின் குரலாய் எப்போதும் இருங்கள்
கடலின் நீராய் உலகெல்லாம் சொல்லுங்கள்
காற்றைப்போல உண்மையை தேடுங்கள்
எப்போதும் நேர்மையாய் பேசுங்கள்
எது வந்த போதும் நிலைத்தே நில்லுங்கள்

உங்களின் செய்தியே மக்களின் அறிவு
அதைக் கண்டுதானே நாளைய உயர்வு
எதிர் காலம் என்பது உங்களின் பதிவு
நன்மையை உரைப்பதே மனதின் நிறைவு

வட்டக்கச்சி
வினோத்

Image may contain: 1 person, sky, outdoor, closeup and nature
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

உண்மையை கண்டறிந்து ஊருக்கு சொல்லுவதா
ஒருவருக்கு வால்பிடித்து அவர் புகழ் உளறுவதா 
தேசத்தின் நலன்காண செய்திகள் போடுவதா
வஞ்சகர் பதவிபிடிக்க பக்கவாத்தியம் வாசிப்பதா

மக்களின் நலம் காண அச்சுக்களை கோருங்கள்
துன்பத்தை துரத்த சொற்களை சேருங்கள்
நடிப்பவன் தலைவன் என்னும் கூச்சலை நிறுத்துங்கள்
சிந்தனை சிறப்பென்றால் தலைவனாய் போற்றுங்கள்

அருமையான கவிதை.
கவிதையை எழுதியவருக்கும் இணைத்த நுணாவுக்கும் பாராட்டுக்கள்.

 

  • Thanks 1
Posted

கடவுளின் மறதி

 
kav159.jpg
காய்ந்த பூமியில் கயிற்று கட்டிலிட்டு !!!!!

தனக்கு இருக்கும் பெருங்கவலைகளுக்கு மத்தியில்
கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற அருங்க்குழப்பதில்
சற்றே கண்ணயர்ந்து கனா கண்டான் ..........

வானம் பார்த்து வறண்ட பூமியில்
விவசாயம் நம்பி வறுமையில் வாடும்
வீணாய் போன விவசாயி !!!!!

படுத்த பத்தே நிமிடத்தில்
கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி...
கசங்கி போன அவன் முகத்தில்
சிலேன்று சாரலாய் பட்டது நீர்த்துளி!!!!!

கனவில் கூட காண முடியாத கடவுள் தான்
கடைசியில் மனமிறங்கி
மாரிதனை பொழிந்து விட்டதென எண்ணி
வராத நித்திரையை விருட்டென்று
கலைத்து விட்டு....
வேகமாய் எழுந்தவனுக்கு தெரியுமா.........

தன முகத்தில் பட்டு பரவசமாக்கியது
மழைத்துளி அல்ல........
கொடுத்த கடனை வட்டியோடு கேட்டு
சேட்டு துப்பிய
உமிழ்துளி என்று!!!!!!

மழைநீரை காணாத மரங்கள் எத்தனையோ
மண்ணில் வேர் விட்டு வாழ வழி இருக்க
ஏன் இந்த பாவப்பட்ட
விவசாயிக்கும்
அந்த வழியை காட்ட
மறந்து போனான்
கல்லாய் போன கடவுளடா...... 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.